இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, August 29, 2014

'குறை தீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் பதில் அளிப்பதில்லை' : தொடக்க கல்வி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

'தொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூட்டம், வெறும் சடங்காக நடக்கிறது. மனுக்களை வாங்கும் அதிகாரிகள், பதில் அளிப்பது இல்லை' என, தொடக்க கல்வி ஆசிரியர்கள், குற்றம் சாட்டுகின்றனர். தொடக்க கல்வித் துறையில், 1.5 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு, விடுமுறை நாட்களுக்கு பணம் பெறுதல் உள்ளிட்ட, பல கோரிக்கைகள் தொடர்பாக, அவ்வப்போது, சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்தபடி உள்ளனர்.

இதனால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதித்து வருகிறது. கோரிக்கையை, அதிகாரிகள் கண்டு கொள்ளாதபோது, துறைக்கு எதிராக, ஆசிரியர், வழக்கு தொடரும் போக்கும் அதிகரித்து வருகிறது. மாதத்தின் முதல் சனிக்கிழமை ஆசிரியர் பிரச்னையை, உடனுக்குடன் தீர்க்கும் வகையில், குறை தீர்ப்பு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, மாதத்தின் முதல் சனிக்கிழமை, பள்ளி முடிந்தபின், மாலை வேளையில், உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடம், ஆசிரியர், கோரிக்கை மனு அளிக்க வேண்டும்.

இதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரி, உடனடியாக பதில் அளிக்க வேண்டும். தீர்க்க முடியாத பிரச்னை எனில், மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியை சந்தித்து, மனு அளிக்க வேண்டும். இதிலும், பிரச்னை தீரவில்லை எனில், மூன்றாவது சனிக்கிழமை, சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்குனரை, நேரில் சந்தித்து பிரச்னையை கூறலாம். ஒரு ஆண்டு முன் வரை, உருப்படியாக நடந்து வந்த இந்த குறை தீர்ப்பு கூட்டம், தற்போது, வெறும் சடங்குக்கு நடந்து வருவதாக, தொடக்க கல்வி ஆசிரியர் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற கழகத் தலைவர், சிங்காரவேல் கூறியதாவது:

மற்ற அரசு துறைகளை விட, கல்வித் துறையில் தான், வழக்குகள் அதிகளவில் உள்ளன. இது, அதிகாரிகளுக்கும் தெரியும். கோரிக்கைகள் : ஆசிரியர்களின், சிறிய கோரிக்கை, பிரச்னைகளை கூட, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் தீர்ப்பதில்லை. இதனால், நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. குறை தீர்ப்பு கூட்டங்களில், மனு அளித்தால், என்ன பதில் என்பதை, எழுத்து பூர்வமாக அதிகாரிகள் தர வேண்டும். ஆனால், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், எழுத்துப் பூர்வமாக பதில் அளிப்பது இல்லை. கண்துடைப்புக்காக, குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. 'துறையின் பதிலை அறியாமல், வழக்கு போடக் கூடாது' என, தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட வேண்டும். இதன்மூலம், ஆசிரியர், துறை அதிகாரிகளின் பதில் பெறுவதை, உறுதி செய்ய முடியும். இவ்வாறு, சிங்காரவேல் கூறினார்.

மாணவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக்கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் சுற்றறிக்கை

. மாணவர்களுக்கு தண்டனை பள்ளிக்கூடங்களுக்கு காலதாமதமாக வரும் மாணவர்கள், வீட்டுப்பாடத்தை எழுதிவராத மாணவர்கள், நன்றாக படிக்காத மாணவர்கள், வகுப்பில் பேசிக்கொண்டிருக்கும் மாணவர்கள் இப்படி ஏதாவது தவறு இழைக்கும் மாணவர்களை வெயிலில் மணிக்கணக்கில் நிற்கவைத்தல், பிரம்பால் அடித்தல், ஸ்கேல் கொண்டு தாக்குதல், குனிய வைத்து முதுகு மீது செங்கற்களை வைத்தல் இப்படி பல வகையான தண்டனைகளை ஆசிரியர்கள் கொடுத்து வந்தனர்.

அப்படிப்பட்ட நேரங்களில் சில மாணவர்கள் உயிரிழக்கக்கூடும். சில நேரங்களில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவது உண்டு. பள்ளிக்கல்வித்துறை அக்கறை இப்படி எந்த துன்பமும் மாணவ-மாணவிகளுக்கு நேரக்கூடாது என்பதில் பள்ளிக்கல்வித்துறை அதிக அக்கறை கொண்டுள்ளது. இதற்காக மாணவர்களை கம்பு கொண்டு தண்டிக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன் காரணமாக மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கும் பிரச்சினை பெரும்பாலும் ஓய்ந்துவிட்டது. இருப்பினும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது நீடிக்கிறது. மாணவர்களை ஸ்கேல் கொண்டு

தாக்கக்கூடாது சமீபத்தில் ஸ்கேல் கொண்டு ஆசிரியர் தாக்கியதில் ஒரு மாணவர் கண்பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் மாணவ-மாணவிகளை எந்த காரணம் கொண்டும் மன ரீதியாகவோ, உடல்ரீதியாகவோ பாதிக்கும்படி ஆசிரியர்கள் நடந்து கொள்ளக்கூடாது. அதாவது மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்தைக்கொண்டும் திட்டக்கூடாது. ஸ்கேல், கம்பு, கை உள்ளிட்ட எதைக்கொண்டும் அடிக்கக்கூடாது. அவ்வாறு மாணவர்களை ஆசிரியர்கள் அடித்ததாக உறுதி செய்யப்பட்டால் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 அன்று நடைபெறவுள்ளது.


அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள்.  .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல்
- வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியானது காலை 9.30மணி முதல் மாலை 4.30மணி வரை நடைபெறவுள்ளது.

Thursday, August 28, 2014

TET & PGTRB ஆன்லைன் கலந்தாய்வு எவ்வாறு நடைபெறும்?


ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிட்டபடி உரிய நாட்களில் நடைபெறும். கலந்தாய்வு நடைபெறும் இடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தால் நாளை அறிவிக்கப்படும். காலை 9 மணிக்கு கலந்தாய்வு துவங்க இருப்பதால், கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் அனைவரும் காலை 7.30 மணிக்கே உரிய இடத்திற்கு செல்லவும்.

மாவட்டத்திற்குள் கலந்தாய்வு -
மாவட்டத்திற்குள் கலந்தாய்வு எனும் போது பாடவாரியாக மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் பட்டியல் தேர்வர்கள் பார்வைக்காக ஒட்டப்படும்.(பெரும்பாலும் இதுதான் நடைமுறை).
மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பாடவாரியாக தேர்வு பெற்றுள்ள தேர்வர்கள், வரிசைகிரமமாக நிறுத்தப்படுவார்கள்.தேர்வு பெற்றவர்கள் அனைவரும் கலந்தாய்வு நடைபெறும் அறைக்குள் அனுமதிக்கப்பட்டு அமரவைக்கப்படுவார்கள். (குறிப்பு - எந்த காரணம் கொண்டும் தேர்வர்கள் உடன் செல்லும் மற்ற நபர்கள் கலந்தாய்வு நடைபெறும் அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே அலைபேசி தொடர்பை பயன்படுத்த தயாராக இருக்கவும்)
பாடவாரியாக அழைக்கப்பட்ட தேர்வர்கள் தர வரிசைப்படி அழைக்கப்பட்டு பட்டியலில் உள்ள இடத்தில் தங்களுக்கு தேவையான இடத்தை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்படுவார்கள். தேர்வர்கள் தேர்ந்தெடுக்க அதிகபட்சம் 30 நொடிகள் அல்லது 1 நிமிடம் மட்டுமே தரப்படும். மேலும் அக்குறிப்பிட்ட நேரத்தில் அலைபேசியை பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே முன்னதாகவே தேர்ந்தெடுக்கப்படவேண்டிய இடங்களை வரிசைகிரமமாக தர எண் இட்டு தயாராக எடுத்து சென்றால், முதலாவது இடம் இல்லாவிட்டால் இரண்டாவது இடம் என்றவாறு தேர்ந்தெடுக்க இயலும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆணை வழங்கும்முன் மீண்டும் ஒரு முறை தங்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்படலாம். எனவே நாம் முன்னதாக அறிவுறுத்தியபடி அனைத்து அசல் மற்றும் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்கள், புகைப்படம் என அனைத்தையும் தயாராக கொண்டு செல்லவும். குறிப்பாக வேறு மாநில பட்டம் பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்கள் மதிப்பீடு செய்யப்பட்டிருப்பின் அச்சான்றிதழ்களையும் கொண்டு செல்லவும். கலந்தாய்வு நடைபெற்று கொண்டிருக்கும்போதோ (அ) முழுமையாக முடிவுற்ற பின்போ தான் தாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளியில் தாங்கள் பணிபுரிய உரிய ஆணை வழங்கப்படும். எனவே தேவையான தண்ணீர், இதர சிறு உணவு பொருட்களையும் கொண்டு செல்லவும்.
வேறு மாவட்டத்திற்கு கலந்தாய்வு -
தங்கள் சொந்த மாவட்டத்தில் பணி செய்ய உரிய காலிப்பணியிடம் தாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை எனில் அடுத்த நாள் நடைபெறும் வேறு மாவட்டத்திற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் ( சொந்த மாவட்டத்திற்குள் பணி பெற கலந்தாய்வு எங்கு நடைபெற்றதோ அதே இடத்தில் தான் வேறு மாவட்டத்திற்குள் பணிபுரிய கலந்தாய்வும் நடைபெறும். மாற்றம் இருப்பின் முதன்மைகல்வி அலுவலகத்தால் முறைப்படி அறிவிக்கப்படும்).

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் இடம் அறிவிப்பு


பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், பின்வரும் இடங்களில் நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 1 சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.

2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்

3 கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்

4 தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.

5 திண்டுக்கல் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி, மதுரை ரோடு,
திண்டுக்கல்

6 ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு

7 காஞ்சிபுரம் டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்

8 கன்னியாகுமரி எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்

9 கரூர் பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரூர்.

10 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

11 மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜி மருத்துவமனை அருகில் செனாய்நகர், மதுரை-3.

12 நாகப்பட்டினம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.

13 நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.

14 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.

15 புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.

16 இராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.

17 சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்.

18 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை. (மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்).

19 தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தஞ்சாவூர்

20 நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.

21 தேனி முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.

22 திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், 
திருவண்ணாமலை.

23 திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவாருர்.

24 திருவள்ளூர் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

25 திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, (இரயில் நிலையம் அருகில்), திருப்பூர்

26 திருச்சி அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.

27 திருநெல்வேலி சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி

28 தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், தூத்துக்குடி.
29 வேலூர் nஉறாலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர்.

30 விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.

31 விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.

32 அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

FLASH news

Flash News: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு.

முதுகலை ஆசிரியர்கள்மாவட்டத்திற்குள்-30.08.2014
வேறு மாவட்டம் -31.08.2014

இடைநிலை ஆசிரியர்கள்மாவட்டத்திற்குள்-1.09.2014
வேறு மாவட்டம் -2.09.2014

பட்டதாரி ஆசிரியர்கள்மாவட்டத்திற்குள்-3.09.2014
வேறு மாவட்டம் -4.09.2014
வேறு மாவட்டம் -5.09.2014

டிட்டோஜாக் உள்ளிட்ட கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்

Wednesday, August 27, 2014

திருப்பூர் வடக்கு வட்டார புதிய பொறுப்பாளர்கள்

திருப்பூர் வடக்கு வட்டார புதிய
பொறுப்பாளர்கள்

தலைவர்-பாலசுப்ரமணி
செயலாளர்-பா.ஜெயலட்சுமி
பொருளாளர்-மணிகண்டபிரபு

து.தலைவர்-ஆ தர்மராஜ்,
மெர்சி வித்யா

து.செயலாளர்கள்
டிசோ பிரவின்ராஜ்,
மு.தங்கமணி

மா.பொ.உறுப்பினர்
திருநாவுக்கரசு
செல்வின்

செயற்குழு உறுப்பினர்கள்
1.அசோக்பாண்டி
2.கோ.ராமசாமி
3.ரொசாரியோ அந்தோனி ஜோசப்
4.பாரத்குமார்
5.தா.நந்தகுமார்
6.ப.லதா
7.பொற்கொடி
8.மரியசெல்வராஜ்
9.கார்த்திகேயன்
10.காளிதாஸ்
11.சுப்புலட்சுமி
12.திவ்யா

பொறுப்பாளர்கள் அனைவருக்கும்
வீரஞ் செறிந்த வாழ்த்துக்கள்.!!



புதிய ஆசிரியர் பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார

பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார். பட்டதாரி ஆசிரியரில் சிலருக்கும், முதுகலை ஆசிரியரில் சிலருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பின் பள்ளிக்கல்வித் துறை, கலந்தாய்வு மூலம், 12 ஆயிரம் பேருக்கும், பணி நியமன உத்தரவை வழங்க உள்ளது. இதுகுறித்த கலந்தாய்வு அட்டவணையும், இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடை நிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு


தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் காலியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வை நடத்தியது.

இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்கள் ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெற்ற மதிப்பெண், ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றை கொண்டுவெயிட்டேஜ் மதிப்பெண் தயாரிக்கபப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு அவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அந்த பட்டியல் நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

மொத்தம் 1,649 பேர் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று ஏராளமான ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி எழுதியவர்கள் காத்திருந்தனர். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தகுதி தேர்வு வேண்டாம் இது குறித்து ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படாதவர்கள் கூறுகையில் இனிமேல் ஆசிரியர் தகுதி தேர்வை 2 வருடத்திற்கு நடத்தாமல் இப்போது காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களை கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தனர்.

மாதத்துக்கு ஒரு சிலிண்டர்தான் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டது.


ஓராண்டுக்குரிய 12 சிலிண்டர்களை எந்த நேரத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு புதிய சலுகை அளித்துள்ளது. கட்டுப்பாடு நாடு முழுவதும், சமையல் கியாஸ் சிலிண்டர்கள் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 9 வீதம் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், முந்தைய மன்மோகன்சிங் அரசு, கடந்த பிப்ரவரி 28-ந் தேதி இந்த எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தியது. அதே சமயத்தில், ஒரு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும் என்று கட்டுப்பாடு விதித்தது. இந்த கட்டுப்பாட்டால், சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க நேரிட்டது.

புதிய சலுகை இந்நிலையில், இந்த கட்டுப்பாட்டை மத்திய அரசு நேற்று நீக்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இனிமேல், ஓராண்டுக்குரிய 12 சிலிண்டர்களை எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் அவரவர் வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். பேட்டி மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவு பற்றி மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

ஆண்டுக்கு 9 சிலிண்டர்களாக இருந்ததை முந்தைய அரசு 12 சிலிண்டர்களாக உயர்த்தியது. இருப்பினும், ஒரு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் மட்டுமே பெற முடியும் என்று கட்டுப்பாடு விதித்தது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. ஒரு சில மாதங்களில், வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிலிண்டர் கூட தேவைப்படாது. ஆனால், பண்டிகை காலங்களில் ஒரே மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சிலிண்டர்கள் தேவைப்படும். ஆனால், அவர்களால் அதை பெற முடியாத நிலை இருந்தது. மேலும், ஒரு குறிப்பிட்ட மாதத்துக்குரிய சிலிண்டரை பெற தவறியவர்கள், அடுத்து வரும் மாதங்களில் அந்த சிலிண்டரை பெற முடியாத நிலை இருந்தது. இஷ்டம் போல.. எனவே, வாடிக்கையாளர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, இந்த கட்டுப்பாட்டை நீக்குவது என்று மத்திய மந்திரிசபை முடிவு செய்துள்ளது. இனிமேல், அவர்கள் ஓராண்டுக்குரிய 12 சிலிண்டர்களை தங்கள் தேவைக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் சிரமங்களை போக்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

. 12 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படுபவர்கள், வழக்கம் போல, அதை சந்தை விலைக்கு வாங்க வேண்டும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Provisional Selection List of Candidates SGT - DEE

Tuesday, August 26, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யக் கோரி செப்.1-இல் பரணி


ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்புப் பேரணி நடைபெற உள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ஆர்.செல்லதுரை சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த 10.8.2014 அன்று வெளியிடப்பட்ட பட்டியலில் சுமார் 11,000 பேர் தாற்காலிகமாகத் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களில் 9 ஆயிரம் பேரின் பெயர்கள் இடம்பெறாதது கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

அதையடுத்து தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். அடுத்த கட்டமாக, இதே கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி செப்டம்பர் 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் அரங்கிலிருந்து புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் வரை கவன ஈர்ப்புப் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். பேரணியின் முடிவில் கோரிக்கைகளை பரிசீலிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு அளிக்கவுள்ளோம் .

3,000 இடங்களுக்கான 'குரூப் 4' தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்

பல துறைகளில் காலியாக உள்ள, 3,000 இடங்களை நிரப்ப, விரைவில், குரூப் 4 போட்டித் தேர்வு அறிவிக்கப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவர், பாலசுப்ரமணியன் (கூடுதல் பொறுப்பு) தெரிவித்தார். அவர், கூறியதாவது: குரூப் 2: கடந்த ஆண்டு, டிசம்பர், 1ம் தேதி, 1,064 காலி பணியிடங்களை நிரப்ப, குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு, 20 நாட்களில் வெளியிடப்படும்.

கால்நடை பராமரிப்பு துறையில், 686 டாக்டர்கள், தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் பணியை, நிரந்தரப்படுத்தும் வகையில், விரைவில், சிறப்பு தேர்வு நடத்தப்படும். மேலும், 385 பணியிடங்கள், நேரடியாக நிரப்பப்படும். பல துறைகளில், குரூப் 4 நிலையில் (தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகள்), காலியாக உள்ள, 3,000 இடங்களை நிரப்ப, போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பு, 40 நாட்களில் வெளியிடப்படும். உரிமையியல் நீதிபதி பதவியில், 162 பணியிடங்களை நிரப்ப, இன்று (நேற்று), அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது. இன்று முதல், வரும் செப்டம்பர், 21ம் தேதி வரை, www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளம் வழியாக, தேர்வுக்கு பதிவு செய்யலாம்.

வரும் அக்டோபர், 18 மற்றும் 19ம் தேதிகளில், ஒரு நாளைக்கு, இரு தாள் வீதம், இரு நாளும் சேர்த்து, நான்கு தாள்களுக்கு, தேர்வு நடக்கும். தலா, 100 மதிப்பெண் வீதம், 400 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கும். பின், 60 மதிப்பெண்ணுக்கு, நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.பி.எல்., முடித்தவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.