இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, July 19, 2014

டூவீலரில் வரும் மாணவர்கள் விபத்தில் சிக்கினால் தலைமை ஆசிரியரே பொறுப்பு

ஓட்டுனர் உரிமம் இல்லாமல், பள்ளிகளுக்கு மாணவர்கள், டூவீலர்களில் வரக்கூடாது.மீறி வந்து அவர்கள் விபத்தில் சிக்கினால்,சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரே பொறுப்பாவார் என,என பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில்,'அனைத்து பள்ளிகளிலும்,பள்ளி மாணவ, மாணவிகள், முறையாக ஓட்டுனர் உரிமம் பெறாமல், பள்ளிக்கு டூவீலரில் வருவதால்,பல்வேறு விபத்துக்களும், உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருவதாக,புகார் எழுந்துள்ளது

. எனவே,முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, மாணவ, மாணவிகள் டூவீலரில் ஓட்டி வருதல் கூடாது, என தெரிவிக்க வேண்டும். அவ்வாறு மாணவர் யாரும் வந்தால், அவர்கள் வாகனத்தின் சாவியை, தலைமை ஆசிரியர் எடுத்து வைத்து, மாணவரின் பெற்றோர் வந்த பிறகு அவர்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். மேலும், அடுத்த முறை அவர் வராதவாறு பெற்றோருக்கு அறிவுரை கூற வேண்டும். இதை மீறி, லைசென்ஸ் இன்றி டூவீலரில் பள்ளிக்கு வரும் மாணவர்கள்,விபத்தில் சிக்க நேர்ந்தால்,அதற்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்”, இவ்வாறு கூறியுள்ளார்.

EXPECTED CUT OFF TNTET 2013 PAPER 2


The cut off marks  mentioned below are fixed based on the entries of tet candidates in several websites.. 

TAMIL 
GT
 72.5
BC
 71.1
MBC
 70.2
SC
 68.6
SCA
 68.1
ST
 65.1
BCM
 69.8
    
                                                                                                                                           






  MATHS
GT
 74.5
BC
 72.9 
MBC
 71.8 
SC
 68.5 
SCA
 67.7 
ST
 68 
BCM
 69.5 

ENGLISH                                                                                                             
GT
 68.8
BC
 66.6
MBC
 66.2
SC
 63.7
SCA
 63.1
ST
 ALL 
BCM
 65 

HISTORY
GT
 65.0
BC
 62.8
MBC
 62.5 
SC
 60.2
SCA
 59.2
ST
 56.3
BCM
 62.4
                                                                                               

EXPECTED CUT OFF TNTET 2013 PAPER 2


The cut off marks  mentioned below are fixed based on the entries of tet candidates in several websites.. 

TAMIL 
GT   -72.5
BC   -71.1
MBC  -70.2
Sc   -68.6
SCA  -68.1
ST   -65.1
BCM  -69.8
    
                                                                                                                                           

EXPECTED CUT OFF FOR TNTET 2013 PAPER 1- FOR 2380 SEC.GRADE POST.


The cut off marks  mentioned below are fixed based on the entries of TET candidates in several websites.. 

FOR 2380 SEC.GRADE  POST.......

GT  -74.9
BC  -72.7
MBC -71.8
SC-  70.6
SCA -69.7
ST  -67.1
BCM -72.8
    
                                                       

இளங்கலை பட்டம் முடித்தவர்கள் ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டங்களைப் படிக்க முடியாது- தொடக்கக்கல்வித் துறையின் RTI Letter.


RTI-யின் பதில் ஏற்படுத்திய நம்பிக்கையின்மை:

இளங்கலை பட்டம் பெற்றவர்கள்

ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டங்களை, வெவ்வேறு 
பல்கலைக்கழகங்களில் ,வெவ்வேறு தேர்வு கால அட்டவணையில் 

(நேரத்தில்) தேர்வு எழுதி முடித்திருந்தால் அதை பணிப்பதிவேட்டில் 
பதிவு செய்து, பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் 
பள்ளிக்கல்வித்துறை பலருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 
மூலம் பதில் அளித்துள்ளது..

ஆனால்,தொடக்கக்கல்வித் துறையோஒரே கல்வியாண்டில் இரண்டு
பட்டங்களை படிக்க முடியாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 
மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது..

ஏன் இந்த முரண்பாடு..?
இது RTI-ல் கொடுக்கப்பட்ட தவறான தகவலினால் ஏற்பட்ட முரண்பாடா...?

இல்லை,இரு துறையிலும் உள்ள வேறுபட்ட விதிமுறையினால் ஏற்பட்ட
முரண்பாடா..?

எது உண்மை...தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த இந்த 
முரண்பாடான தகவலினால் RTI-ல் வழங்கப்படும் தகவல்களின் மீதும் 
ஆசிரியர்களின் மத்தியில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது..

இதில் நமக்கு ஒரு தெளிவு பிறக்க நாம் நீதிமன்றத்தை நாடவேண்டிய
கட்டாயத்திற்க்குத் தள்ளப்பட்டுள்ளோம் தோழர்களே..

தோழமையுடன்,தேவராஐன், தஞ்சாவூர் .

https://app.box.com/s/wuhs2i48q943albvp6fz

Friday, July 18, 2014

பள்ளிக்கல்வி - முறையான ஓட்டுநர் உரிமம் பெறாத மாணவ / மானவியர் பள்ளிக்கு இரண்டு சக்கர வாகனம் ஓட்டி வர அனுமதிக்க கூடாது என இயக்குநர் உத்தரவ -tnkalviு

பள்ளிக்கூடங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனம் இருக்க வேண்டும்; தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை

பள்ளிக்கூடங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் சரியாக இருக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை

தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுபடி பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

* மழைக்காலங்களில் இடி, மின்னல் ஆகியவற்றின் போது மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ மரத்தின் அடியில் நிற்கக்கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும்.

* பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள மதில் சுவர்கள் போதிய அளவுக்கு உயரமாக உள்ளதா என்பதை பார்த்து உயரம் இல்லாவிட்டால் உயரமான அளவுக்கு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பள்ளிக்கூடங்களில் கட்டிடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இடிந்து விழும் நிலையில் இருந்தால் தகவல் தெரிவித்துவிட்டு அதை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.

முதலுதவி பெட்டி

* பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் ஏதாவது கீழே விழுந்தாலோ அல்லது ஏதாவது காயம் ஏற்பட்டாலோ அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே அனைத்து பள்ளிகளிலும் முதலுதவி செய்யும் வகையில் மருத்துவ பொருட்கள் அடங்கிய முதலுதவி பெட்டி இருக்க வேண்டும்.

* அதுபோல ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு படையினர் வருமுன்னதாக உடனடியாக தீயை அணைக்க தீயணைப்பு சாதனங்கள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.

* விளையாட்டு நேரத்தின்போது ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பொருட்களை கவனமாக பாதுகாப்பாக கையாள வேண்டும்.

* பள்ளிக்கூடங்களின் அருகில் வேகத்தடை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேகத்தடை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

புதர்களை அகற்ற வேண்டும்

* பள்ளிக்கூடங்கள் அல்லது பள்ளிக்கூடங்களின் அருகில் புதர்கள் ஏதாவது இருந்தால் அவற்றை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

* பள்ளிக்கூட வளாகத்தை சுத்தமாகவும். பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பி.எட்., மாணவர் சேர்க்கை

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வம் தெரிவித்துள்ளதாவது: இப்பல்கலையில் பி.எட்., (2 ஆண்டுகள்) பட்டப் படிப்பில் காலி இடங்களுக்கு, தற்போது மாணவர் சேர்க்கை நடக்கிறது. தகுதியுள்ளோர், www.msuniv.ac.in மூலம் தகவல் அறிக்கை மற்றும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கட்டணமாக ரூ.650க்கு கேட்பு வரைவோலை இணைத்து 31.7.2014க்குள் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

Announcements of Higher Education Department 2014-15 - Tamil Version

Announcements of School Education Department 2014-15 - Tamil Version

அகஇ - ஆங்கில வழி பள்ளிகளின் விபரம் மாவட்டங்களிலிருந்து பெற உத்தரவு

Thursday, July 17, 2014

தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறைஆகியவற்றின் மானியக் கோரிக்கை - அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட்ட அறிவிப்புகள் - 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும

 தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறைஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள்
விவாதித்தனர்.அவர்களுக்கு பதிலளித்துப் பேசும்போது அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களிலுள்ள பள்ளிச் செல்லாப் பெண் குழந்தைகள் மற்றும் இடைநின்ற பெண் குழந்தைகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய தரமான கல்வி கற்க வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், 61 கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. விளையாட்டு சாதனம் இந்தப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயின்று, கல்வியைத் தொடராமல் இடைநின்ற 152 பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரூ.38 லட்சம் செலவில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களின் வயதிற்கேற்ற வகுப்புகளில் அருகில் உள்ள பள்ளிகளில் இடைநிலைக் கல்வியில் சேர்க்கப்படுவார்கள்.

2014-15-ம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.20 லட்சம் செலவில் விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்படும். இந்தக் கல்வியாண்டில், கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் நலிவுற்ற வகுப்பைச் சார்ந்த 32 ஆயிரத்து563 மாணவ மாணவியர்களுக்கு அவர்களின் செயல் திறன்களை மேம்படுத்துவதற்காக ரூ.1.63 கோடி செலவில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.2014-15-ம் கல்வியாண்டில் 32 மாவட்டங்களிலும் அறிவியல் கண்காட்சி ரூ.32 லட்சம் செலவில் நடத்தப்படும்.

சிறப்பு ஆசிரியர் பணியிடம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ், தரமான கல்வி வழங்குவதற்காக, ரூ.5.35 கோடி செலவில்202 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இந்த ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும்.நடப்புக் கல்வியாண்டில் தலைமை ஆசிரியர்களின் கல்வி மற்றும் நிர்வாகத்திறனை மேம்படுத்தும் பொருட்டு ஆயிரத்து 140 உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, ரூ.55 லட்சம் செலவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடம்:

சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளையில் தொடரப்படும் பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு சட்ட அலுவலர் பணியிடமும், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு சட்ட அலுவலர் பணியிடமும், ஆக மொத்தம் புதிதாக இரண்டு சட்ட அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.கடந்த மூன்று ஆண்டுகளில் 71 ஆயிரத்து 708 ஆசிரியர் பணியிடங்களை முதல்- அமைச்சர் ஜெயலலிதா அனுமதித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக 2014-15-ம் கல்வியாண்டில்,3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்களும், (முதுகலை ஆசிரியர் 952, பட்டதாரி ஆசிரியர் 2,489, உயற்கல்வி இயக்குனர் 18), 75 ஆசிரியர் சார்ந்த பணியிடங்களும், 340 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் (உதவியாளர் 152, இளநிலை உதவியாளர் 188) நிரப்பப்படும்.

நடமாடும் நூலகம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களுக்கு விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஈட்டிய விடுப்பு ஓராண்டுக்கு வழங்கப்படும். 17 நாட்கள் ஈட்டிய விடுப்பை 30 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.

தர்மபுரி, திருவள்ளூர், வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ரூ.70 லட்சம் செலவில் நடமாடும் நூலகங்கள் அறிமுகம் செய்யப்படும். இலவச விளையாட்டு பொருள் தமிழக அரசால் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக்கணினிகளில், கன்னிமாரா பொது நூலகத்தில் மின்மயமாக்கப்பட்டுள்ள, காப்புரிமை கோர இயலாத, நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், அரசு பதிப்பு நூல்கள் மற்றும் அரிய நூல்கள்ரூ.6 லட்சம் செலவில் பதிவேற்றம் செய்யப்படும்.மாநிலத்தில் முதற்கட்டமாக திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், நூல்கள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். அரிய நூல்கள் பாதுகாப்பு இந்தியாவில் உள்ள பழமையான நூலகங்களில் ஒன்றான தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்திலுள்ள தொன்மை வாய்ந்த, விலைமதிப்பற்ற, அரிய நூல்கள் மற்றும் ஓலைச் சுவடிகளை, சாதாரண மக்கள் முதல் நூல் ஆராய்ச்சியாளர்கள் வரை பயன்படுத்தும் வகையில் ரூ.7.50 லட்சம் செலவில் உருப்படம் செய்யப்பட்டு, டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பி.எட்., படிப்பு ஓராண்டு தான் உயர்கல்வி அமைச்சர் தகவல்.  தமிழகத்தில், பி.எட்., படிப்பு காலம் ஓராண்டுதான்; மாற்றமில்லை,''

சட்டசபையில், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானிய கோரிக்கை விவாதம்:

ம.ம.க., ஜவாஹிருல்லா: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில், தேர்வு செய்யப்படுபவர்கள் பட்டியல் வெளிப்படையாக, இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

அமைச்சர் பழனியப்பன்: துணைவேந்தர் நியமனம் என்பது, உரிய குழுக்கள் அமைத்து தான் தேர்வு செய்யப்படுகிறது. பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) விதிமுறைப்படி தான், நியமிக்கப்படுகின்றனர். இதில் ஒளிவு மறைவு என்பது இல்லை.

பார்வர்டு பிளாக், கதிரவன்: தமிழகத்தில், பி.எட்., படிப்பு, இரண்டாண்டாக மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, டி.இ.டி., தேர்வு எழுத வேண்டுமா?

பழனியப்பன்: மத்திய ஆசிரியர் கல்வி வாரியம், பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றுவது தொடர்பான ஆலோசனையை தெரிவித்துள்ளது. மத்திய அரசோ, மாநில அரசோ, இதை அமல்படுத்தவில்லை.தமிழகத்தில், பி.எட்., படிப்பு ஓராண்டு மட்டும் தான்.இவ்வாறு விவாதம் நடந்தது.

TNPTFன் பள்ளி மானியம் தொடர்பான இடைநிலை ஆசிரியர் தர ஊதியம், CPS, உட்பட பல கோரிக்கைகள

பட்ஜெட் கல்வி செய்திகள்

நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார். 75 ஆசிரியர் சார்ந்த பணியிடங்கள், 340 ஆசிரியர் சாராத பணியிடமும் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். பழங்குடியினர் அதிகம் உள்ள 5 மாவட்டத்தில் மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 482 அரசுப் பள்ளிகளில் 4,782 மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்டும் என்றும் வீரமணி தெரிவித்துள்ளார். 32 மாவட்டங்களிலும் நடப்பாண்டு அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படும் என்றும் வீரமணி தெரிவித்துள்ளார்.

7 மாவட்டங்களில் நடப்பாண்டில் நடமாடும் நூலகங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். விருது பெற்ற தமிழாசிரியர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயண அட்டை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பன்னாட்டு திருக்குறள் மாநாடு இந்த ஆண்டில் நடத்தப்படும் என்று அமைச்சர் கி.வீரமணி அறிவித்துள்ளார். 

Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices for June 2014

Wednesday, July 16, 2014

பாரதியார் தின, குடியரசு தின சதுரங்கப் போட்டிகள்- செயல்திட்டம் சார்ந்து-தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறைp

தரம் உயர்த்தப்படும் 200 பள்ளிகள்காலியிடம் நிரப்ப மீண்டும் 'கவுன்சிலிங்' சட்டசபையை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள

் தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் அரசு உயர், மேல்நிலைப்பள்ளி காலியிடங்களை நிரப்புவதற்கு மீண்டும் கவுன்சிலிங் அறிவிப்பு, சட்டசபையில் வெளியாகுமா என, ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழகத்தில் 32 மாவட்டத்திலும் தரம் உயர்வுக்கு தகுதியான அரசு பள்ளிகள் குறித்த பட்டியலை சேகரித்த கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது

. உயர், மேல்நிலை கல்வியை பொறுத்தவரை இரு பிரிவிலும் தலா 100 பள்ளிகள் என, தரம் உயர்த்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு இன்று (ஜூலை17) சட்டசபை கல்வித்துறை குறித்த மானியக் கோரிக்கையின்போது வெளியாகலாம் என, எதிர்பார்ப்பதாக கல்வித்துறை யினர், ஆசிரியர் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர். இதன்படி, உயர்,மேல்நிலை கல்வியில் 200 பள்ளிகளை தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டால், உயர் நிலை வகுப்பில் 500 புதிய இடங்களும், மேல்நிலையில் 900 காலி பணியிடமும் உருவாகும். இவ்விடங்களை நிரப்ப மீண்டும் கவுன்சிலிங் நடத்தினால் உள், வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் கோரிய பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என, ஆசிரியர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், " ஏற்கனவே முடிந்த மாறுதல் கவுன்சிலிங்கில் சாதகமான சில இடங்களை மறைத்து, சிபாரிசுகளுக்கு மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. சட்ட சபை கல்வித்துறை மானியக் கோரிக்கையில் தரம் உயர்த்தி அறிவிக்கப்படும் பள்ளிகளுக்குமான காலியிடங்களை நிரப்ப மீண்டும் கவுன்சிலிங் நடத்தினால் அரசியல், பணம் பலமற்று, ஒரே பள்ளியில் பத்தாண்டுக்கு மேல் பணிபுரியும் வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்,” என்றார்.

பத்து மாணவர்களுக்கு குறைவான தொடக்க பள்ளிகள் : இழுத்து மூட அரசு யோசனை

  அரசு பள்ளிகளில், பத்து மாணவர்களுக்கு குறைவாக உள்ள ஆயிரத்து 268 பள்ளிகள், இழுத்து மூடப்படும் என்ற நிலை அரசின் பரிசீலனையில் உள்ளது. தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச உணவு, புத்தகம், நோட்டு, சீருடை, சைக்கிள், 'லேப்-டாப்,' 'பஸ்பாஸ்' என 14 வகையான இலவச நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. கல்வித்துறைக்காக ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது. இருந்தும், அரசு துவக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது, மிக சொற்பமாகவே உள்ளது.பெரும்பாலான பள்ளிகளில், ஒரு சில மாணவர்களே சேர்ந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் நாகுல்பட்டி துவக்க பள்ளியில், முதல் வகுப்பில் மாணவர்களே இல்லை. இரண்டாம் வகுப்பில் ஒருவரும், நான்காம் வகுப்பில் ஒருவரும், ஐந்தாம் வகுப்பில் இருவர் என மொத்தம் நான்கு மாணவர்கள் மட்டுமே உள்ளனர். இதற்கு, இரண்டு ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள் என அரசு பணம், ஆண்டுக்கு சில லட்சம் சம்பளமாக விரயமாகிறது. இதேபோல்தான், ஆர்.வெள்ளோடு ஊராட்சி அய்யம்பட்டி துவக்கப்பள்ளியில் மூன்று மாணவர்களும், உ.தாதனூரில் ஆறு பேரும், ஆர்.கே.தாதனூர் ஆறு பேரும் மட்டுமே மாணவர்கள் உள்ளனர். இதே போல்தான், மாவட்ட, மாநில அளவிலும் நீடிக்கிறது.இதற்கு காரணம், முறையான கல்வி முறை இல்லாததே காரணம் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் எழுந்துள்ளது. இது மட்டுமின்றி, பெற்றோர்களின் ஆங்கில வழி கல்வி மோகமும் காரணமாகிறது. வரைமுறை இல்லாமல், போதிய உள் கட்டமைப்பு வசதி இல்லாத நிலையில், ஆங்கில நர்சரி பள்ளிகள் துவங்க அரசு அனுமதி அளிக்கிறது.

அரசு பள்ளிகள் குறைய இதுவும் ஒரு காரணமாககும்.இதனால், நடப்பு கல்வி ஆண்டில், தமிழக அளவில், இதே எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள, ஆயிரத்து 268 பள்ளிகள் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பள்ளிகளில் உள்ள மாணவர்களை, அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். வரும் காலங்களிலாவது, முறையான பாட வகுப்புகளை நடைமுறைபடுத்தி, மாணவர் சேர்க்கையை கூடுதலாக்க அரசு நிர்வாகம் முன்வர வேண்டும். இல்லையேல். அடுத்தடுத்து இதேபோல் பள்ளிகள் மூடப்படும் நிலை தான் தமிழகத்தில் ஏற்படும்.

11 ஆயிரம் புதிய ஆசிரியர்கள்ஆகஸ்ட்டில் பணி நியமனம்

புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள, 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், ஆகஸ்ட் மாதத்தில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.இதுவரை நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகள் மூலம், மதிப்பெண் அடிப்படையில், 10,700 பட்டதாரி ஆசிரியர்களை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), தேர்வு செய்ய உள்ளது. இந்த தேர்வு பட்டியல், வரும், 30ம் தேதி வெளியாகிறது.பட்டியல் வெளியான, அடுத்த ஓரிரு நாட்களுக்குள், அதன் முழு விவரத்தையும், பள்ளிக்கல்வித் துறைக்கு, டி.ஆர்.பி., அனுப்பும். அதன்பின், 'ஆன் - லைன்' கலந்தாய்வு மூலம், ஆகஸ்ட் இறுதிக்குள், புதிய ஆசிரியர்கள் அனைவரும் பணி நியமனம் செய்யப்படுவர்.

அடுத்த நியமனம்: நியமிக்கப்பட உள்ள ஆசிரியர் பணியிடம், 2012ல் ஏற்பட்ட காலி பணியிடங்களுக்கானது. எனவே, 2013ல் ஏற்பட்ட காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை, சட்டசபையில், இன்று, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், வீரமணி வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

CTET 2014

NMMS form

NMMS exam results 2013 student list

தொடக்கக் கல்வி-TPF கணக்குகளை தணிக்கை செய்தல் தொடர்பாக 18.7.2014 அலுவலர்களுக்கு ஆய்வு கூட்டம் நடத்த உத்தரவு

நிரப்பப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எவ்வளவு? TRB அறிவிப்பின் சுருக்கம

 நிரப்பப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்     ELEMENTARY EDUCATION  & SCHOOL EDUCATION 
                                 SCHOOL EDUCATION 
                                  
Subject / Vacancies TAMIL ENGLISH MATHS PHYSICS CHEMISTRY BOTANY ZOOLOGY HISTORY GEOGRAPHY
Backlog Vacancies 261 253 381 133 185 22 25 141 9
Current Vacancies 511 2569 530 454 402 229 226 3451 890
Total / By Subjects 772 2822 911 587 587 251 251 3592 899








Total Paper 2 Vacancies = 10672 

                                      
                                               ELEMENTARY EDUCATION

Subject / Vacancies PHYSICS CHEMISTRY BOTANY ZOOLOGY
Backlog Vacancies 7 2 1 0
Current Vacancies 11 16 8 9
Total / By Subjects 18 18 9 9



Total  – 54

Tuesday, July 15, 2014

13 சி.இ.ஓ., 40 டி.இ.ஓ. பணியிடங்கள் காலி

  தமிழகம் முழுவதும் 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், 40-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் 66 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 145-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்களும் உள்ளன. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (டி.இ.இ.ஓ.), மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் ஆகிய பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் தகுதிக்கு இணையான பணியிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட கல்வி அலுவலர் அளவிலான புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், மத்திய சென்னை உள்ளிட்ட 17 டி.இ.ஓ. பணியிடங்களும், திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்ளிட்ட 17 டி.இ.இ.ஓ. பணியிடங்களும் காலியாக உள்ளன. அதேபோல், 5-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்களும் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர். இந்தப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். அதோடு, நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சிறந்த பள்ளிகளுக்கு ரூ.80 லட்சம் பரிசு: அரசு நிதி ஒதுக்கீடு

: கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, சிறந்த பள்ளிகளுக்கு பரிசாக, ரூ.80 லட்சம் வழங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவதை யொட்டி, சிறந்த அரசு பள்ளிகளை ஊக்குவிப்பதற்கான பரிசளிப்பு திட்டம் ஆண்டுதோறும், செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கலெக்டர் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உள்ளிட்ட குழுவினர், ஒரு மாவட்டத்துக்கு 4 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்கின்றனர்.

இவ்வாறு தேர்வு செய்யப்படும், மேல்நிலை பள்ளிக்கு ரூ.1 லட்சமும், உயர்நிலை பள்ளிக்கு ரூ.75 ஆயிரமும், நடுநிலை பள்ளிக்கு ரூ.50 ஆயிரம், தொடக்க பள்ளிக்கு ரூ.25 ஆயிரமும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. 201415 ம் கல்வியாண்டில், பரிசு வழங்குவதற்காக, பள்ளி கல்வித்துறைக்கு ரூ.56 லட்சமும், தொடக்க கல்வித் துறைக்கு ரூ.24 லட்சமும் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதி மூலம், அந்த பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கொள்ள உத்தரவிடப்பட்டுள்