இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, November 10, 2013

வருவாய்த் துறையில் காலியாகவுள்ள , 1,400 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக, காலியிடங்களின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி.க்கு அனுப்பப்பட்டுள்ளத

ு. கிராம நிர்வாக அதிகாரி அரசு நிர்வாகத்தின் அடிமட்ட அளவில் மிக முக்கியப் பங்கு வகிப்பவர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.). சாதிச் சான்று, இருப்பிடச்சான்று, வருமானச் சான்று எனப் பல்வேறு விதமான சான்றிதழ்களைப் பெறுவதற்கும், பட்டா பட்டா பெயர் மாற்றத்துக்கும், அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் வி.ஏ.ஓ.வின் அத்தாட்சி சான்று அவசியம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக 1,870 வி.ஏ.ஓ. பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வி.ஏ.ஓ. பணியிடங்கள் காலியாகக் கிடப்பதாகவும், ஒரே வி.ஏ.ஓ. கூடுதலாக இரண்டு மூன்று கிராமங்களின் பணிகளையும் சேர்த்துக் கவனிக்க வேண்டியுள்ளது என்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். 1,400 காலியிடங்கள் இதுதவிர, ஏற்கெனவே பணியில் உள்ளவர்கள் குருப்-2 உள்ளிட்ட இதர தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மற்றப் பணிகளுக்குச் சென்றுவிடுவதாலும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.

எனவே,தற்போது , காலியாக உள்ள 1,400 காலியிடங்களை நிரப்ப அரசு முடிவுசெய்துள்ளது. மாவட்ட வாரியாகக் காலியிடங்களின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி.க்கு வருவாய்த் துறை அனுப்பியிருக்கிறது. 1,400 வி.ஏ.ஓ. காலியிடங்கள் பட்டியல், பணியாளர் குழுவுக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும். அதன்பிறகு அனுமதிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்குத் தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பினை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும். 10-ம் வகுப்பு போதும் வி.ஏ.ஓ. தேர்வு எழுதுவதற்கான குறைந்தபட்சக் கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். பொதுப்பிரிவினர் நீங்கலாக, மற்ற அனைத்து வகுப்பினருக்கும், அதேபோல் பொதுப்பிரிவு உள்பட அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது

. இதற்காக நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டாலே வேலை உறுதி. காரணம் இதில் நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது. மேலும், குறைந்தபட்சக் கல்வித் தகுதியான 10-ம் வகுப்பைத் தமிழ்வழியில் படித்திருந்தால் அவர்களுக்குத் தனியாக 20 சதவீத இடஒதுக்கீடும் உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.

10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு அரசு அறிவித்துள்ள மாற்றங்கள

் தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் பெறும் மதிப்பெண்களே அடுத்தடுத்த உயர்கல்விகளுக்கு வழிகாட்டுகிறது. வரும் மார்ச் முதல் நடக்க இருக்கும் பொதுத்தேர்வுகளில் தற்போது பல்வேறு மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு தேர்வெழுதும் மாணவரிடம் மெயின் சீட் வழங்கப்பட்டு, கூடுதலாக எழுதுவதற்கு அடிசனல் சீட்கள் அடுத்தடுத்து வழங்கப்படும்.

ஆனால் தற்போது 12ம் வகுப்பிற்கு 40 பக்கங்களும், 10ம் வகுப்பிற்கு 30 பக்கங்களும் கொண்ட மொத்தமாக பைன்ட் செய்த கோடிங் ஷீட் பண்டல் வழங்கப்படும். இதனால் கூடுதல் பேப்பருக்கு மாணவர் எழுந்து நிற்பதும், ஆசிரியர் கையெழுத்துப் பெற்று ஒவ்வொரு முறையும் பேப்பர் வழங்குவதும் இருக்காது. இதனால் மாணவர், ஆசிரியர் நேர விரயம் தடுக்கப்படுவதுடன், ஒரு மாணவரது அடிசனல் ஷீட்டை வாங்கி மறைத்து வைத்து மற்றொரு மாணவர் காப்பியடிப்பதும் தடுக்கப்படும். இதேபோல் ஒரு தேர்வு மையத்திற்கு அதிகபட்சம் 400 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத முடியும்.

அதற்கும் மேல் மாணவர்கள் இருந்தால் அருகாமை பள்ளி தேர்வு மையத்திற்கு மாற்றப்படுவர். அல்லது அதே பள்ளியில் கூடுதல் மாணவர்களுக்கென மற்றொரு தேர்வு மையம் ஏற்படுத்தப்படும். இதுதவிர, முன்பு தேர்வு மையத்திற்கு வரும் ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும், குறைந்தது நூறு வினாத்தாள்கள் இருக்கும். தேர்வு மைய அதிகாரிகள் இதனைப் பிரித்து, ஒவ்வொரு அறையிலும் இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்குவர். ஆனால் இனிமேல், ஒரு அறைக்கு 20 மாணவர்களுக்கு மட்டுமே தேர்வெழுத இடம் ஒதுக்கப்படும். ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும் 20 வினாத்தாள்களே இருக்கும். இதனால் வெளியில் உடைக்கப்பட்டு, வினாத்தாள் அவுட் ஆகி விட்டது என்ற குற்றச்சாட்டுகள் வராது.

ஊதிய நிர்ணயம்: முதல்வரிடம் முறையிட ஆசிரியர்கள் முடிவு

  மத்திய அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க கோரி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு அளிக்க தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) நடைபெற்றது.

இதில், மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் 7 சங்கங்களின் பொதுச்செயலாளர்களும் நவம்பர் 13-ம் தேதி முதல்வரை நேரில் சந்தித்து மனு வழங்குவது, மேலும், நிதியமைச்சர், பள்ளிக் கல்வி அமைச்சர், தலைமைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் ஆகியோரிடமும் மனு வழங்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Instruction for TNTET Certificate Verification - Paper II


1. The candidate should bring the hall ticket of the examination

2. he r she should bring two bio data forms, which can be downloaded from TRB website and duly filled in own hand writing

3. The identification form should be attested by a gazetted officer.

4. All original certificates and two sets of photocopies of the same duly attested by the gazetted officer should be produced.

THE FOLLOWING ORIGINALS AND TWO ATTESTED PHOTOCOPIES SHOULD BE PRODUCED BEFORE THE CV BOARD

1. SSLC mark sheet

2. +2 mark sheet

3. UG degree certificate and mark sheets (if grade is awarded in the mark sheet, the conversion table should be printed on the reverse side. If not printed, the candidate should obtain a letter from the registrar of the issuing university about the conversion method)

4. B.Ed., certificate along with the mark sheets.

5. community certificate (issued in the name of candidate followed by son r daughter of so and so)

6. Employment exchange registration card.

7.Tamil medium certificates given by the competent authority ( for those who claim reservation under Tamil medium quota)

8. Certificate for disability of persons under special category of physically challenged or visually impaired (ortho/blind -100%)

9. conduct certificate.

Format :

CONDUCT CERTIFICATE

This is to certify that Mr/Mrs/Miss................, is known to me personally for the last five years. He is not related to me. To the best of my knowledge and belief, he bears a good moral character.

/ Signature

courtesy:tntam

Saturday, November 09, 2013

தமிழகத்தின் 11 கல்லூரிகளுக்கு ஒருமைவகை பல்கலை அந்தஸ்து

நாடெங்கிலும், 45 தன்னாட்சி கல்லூரிகள், ஒருமை வகை பல்கலைக் கழகங்களாக மாற்றப்படுகின்றன. இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த, 11 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மற்றும் பல்கலைக்கழக நிதிக் குழு (யு.ஜி.சி.,) இணைந்து, டில்லியில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தின. இதில், அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட, 45 தன்னாட்சி கல்லூரிகள், ஒருமை வகை பல்கலைக் கழகங்களாக தரம் உயர்த்தப் படுவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, ஒருமை வகை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற கல்லூரிகள், அவர்களே மாணவர்களுக்கு பட்டம் வழங்கிக் கொள்ளலாம். பிற பல்கலைக் கழகங்களை சார்ந்து இருக்க வேண்டாம். அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, 11 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. கல்லூரிகள் வருமாறு:

கோவையில், கொங்கு நாடு கல்லூரி, கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி; ஈரோட்டில், வெள்ளாளர் மகளிர் கல்லூரி; திருச்சியில், செயின்ட் ஜோசப், திருச்சி ஜமால் முகமது, திருச்சி தேசிய கல்லூரிகள்; மயிலாடு துறையில், ஏ.வி.சி., கல்லூரி; சிவகாசியில், ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரி; மதுரையில், பாத்திமா கல்லூரி; பாளையங்கோட்டையில், செயின்ட் சேவியர் கல்லூரி உட்பட, 11 கல்லூரிகள் இந்த அந்தஸ்தை பெற்றுள்ளன. இந்த கல்லூரிகளுக்கு, மூன்றாண்டு இடைவெளியில் அடிப்படை கட்டமைப்பு நிதியாக, 55 கோடி ரூபாய் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் மாற்றம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து என 2 கோரிக்கைகளை முன் வைத்து போராட டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவ

இன்று சென்னையில் நடைபெற்ற டிடோஜாக் கூட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையை சார்ந்த முக்கிய 7ஆசிரியர் இயக்ககங்கள் பங்கேற்றன. கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் மாற்றம் மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது

. இதன் முதற்கட்டமாக வருகிற நவம்பர் 13ஆம் தேதி அனைத்து ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்திப்பதென முடிவெடுக்கப்பட்டது. அதற்கடுத்தகட்ட கூட்டம் வருகிற நவம்பர் 20ஆம் தேதி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைமையகத்தில் கூடுவதென முடிவு செய்யப்பட்டது.

Friday, November 08, 2013

மத்திய அரசு,தனியார் முயற்சியில் 358 சிபிஎஸ்இ பள்ளி விரைவில் திறப்பு

தமிழகம் முழுவதும் மத்திய அரசு, தனியார் கூட்டு முயற்சியில் 358 சிபிஎஸ்இ பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மத்திய அரசு மாதிரி பள்ளிகள்(ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா) திட்டத்தை நாடு முழுவதும் செயல்டுத்தி வருகிறது. இதன் மூலம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், தனியார் இணைந்து இந்தியா முழுவதும் வட்டாரத்திற்கு ஒரு பள்ளி வீதம் 2,500 சிபிஎஸ்இ பள்ளிகளை திறக்க உள்ளன. ஏற்கனவே தனியார் நடத்தி வரும் பள்ளிகளையே மாதிரி பள்ளியாக மாற்றிக் கொள்ளலாம் அல்லது புதிய பள்ளிகள் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

40 சதவீதம் மாணவர்கள் அரசு சார்பிலும், 60 சதவீதம் பேர் பள்ளி நிர்வாகத்தாலும் சேர்க்கப்படுவர். இப்பள்ளிகளுக்கு மாணவர்கள் நுழைவுதேர்வு மூலமே சேர்க்கப்படுவர். இதுகுறித்து மாநில அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்தது. ஆனால் தமிழக அரசு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தமிழ் நாட்டில் 358 பள்ளிகள் திறக்கப்பட உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் வாரியாக திறக்கப்பட உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை வருமாறு: சென்னை 9, கோயம்புத்தூர் 21, கடலூர் 11, தர்மபுரி 5, திண்டுக்கல் 14, ஈரோடு 13, காஞ்சிபுரம் 13, கன்னியாகுமரி 9, கரூர் 7, கிருஷ்ணகிரி 6, மதுரை 15, நாகப்பட்டினம் 11, நாமக்கல் 13, பெரம்பலூர் 8, புதுக்கோட்டை 13, ராமநாதபுரம் 11, சேலம் 8, சிவகங்கை 11, தஞ்சாவூர் 14, நீலகிரி 4, தேனி 8, திருவள்ளுர் 14, திருவாரூர் 10, தூத்துக்குடி 13, திருச்சி 15, திருநெல்வேலி 19, திருவண்ணாமலை 17, வேலூர் 21, விழுப்புரம் 14, விருதுநகர் 11.

பள்ளி மாணவர் செஸ் போட்டி: பரிசுக்கு 24 பேர் தேர்வு

பள்ளி மாணவ, மாணவியர், 360 பேர் பங்கேற்ற இறுதி செஸ் போட்டியில், 24 பேர், பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, விரைவில், கேடயமும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளன. பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவரிடையே, செஸ் விளையாட்டு குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த, பல்வேறு நிலைகளில், போட்டிகள் நடத்தப்பட்டன. 3,4,5 வகுப்பு மாணவர், ஒரு பிரிவு; 6,7,8 வகுப்பு மாணவர் ஒரு பிரிவு; 9,10 வகுப்பு மாணவர் ஒரு பிரிவு;

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் ஒரு பிரிவு என, நான்கு பிரிவிலும், மாணவர், மாணவியர் என, தனித்தனியே, போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி போட்டிக்கு, 360 மாணவர் தேர்வு பெற்றனர். இந்த போட்டி, சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. போட்டியை, பள்ளிக்கல்வி அமைச்சர், வீரமணி, துறை செயலர், சபிதா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இறுதியில், முதல், மூன்று இடங்களுக்கு, முறையே, தலா, எட்டு மாணவர் வீதம், 24 பேர், தேர்வு செய்யப்பட்டனர். முதல் இடம் பெற்றவர்களுக்கு, 1,200 ரூபாய்; இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு, 800 ரூபாய்; மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு, 400 ரூபாய் வீதம், ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது.

மேலும், அனைவருக்கும், கேடயமும் வழங்கப்பட உள்ளது. விரைவில் நடக்கும் விழாவில், மாணவர்களுக்கு, கேடயமும், ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்றைய போட்டியில் பங்கேற்ற, 360 மாணவர்களுக்கும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பள்ளிகள்

லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை விரைந்து செய்ய, தொடக்க கல்வித்துறையினர் தயாராகி வருகின்றனர். லோக்சபா தேர்தல், அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. ஓட்டுச் சாவடியாக செயல்படும் பள்ளியின் தலைமைஆசிரியர்கள், தங்களது பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள், தேவைகள் குறித்து, ஒவ்வொரு வட்டார தொடக்க கல்வி அலுவலகத்திலும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதி உள்ளாதா?

எந்த மாதிரியான கட்டடம், மராமத்து பணி தேவையா என்பது குறித்து விளக்கமும் பள்ளி தலைமையாசிரியர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் கேள்விக்கு ஆசிரியர்கள் எழுத்து பூர்வமாக பதில் கொடுத்துள்ளனர். ஓட்டுச்சாவடியில் வாக்களிக்க வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் தேர்தல் கமிஷன் கேள்விகள் கேட்டு உள்ளது. ஜனவரிக்குள், பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை செய்து முடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, லோக்சபா தேர்தலுக்கு பள்ளிகளை தொடக்க கல்வித்துறையினர் தயார்படுத்திவருகின்றனர்.

பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இறந்தால், அவர்களது வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம

எம்.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விரம்: திருவண்ணாமலை மாவட்டம் அகரம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சத்துணவு சமையலராக எனது தாய் பணிபுரிந்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி பணியிலிருக்கும் போது அவர் இறந்தார். அரசு பணியின் போது எனது தாய் இறந்ததால், கருணை அடிப்படையில் அந்த வேலையை எனக்கு வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன்.

அதில், சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தேன். மாவட்ட ஆட்சியரும் அந்த மனுவை ஏற்றுக் கொண்டு 2009-ஆம் ஆண்டு அரசுக்கு  பரிந்துரைத்தார். ஆனால், சமையலர் அல்லது சமையல் உதவியாளர் பணியில் தான் நியமிக்க முடியும், சத்துணவு அமைப்பாளராக நியமிக்க முடியாது எனக் கூறி சமூக நலத்துறை எனது கோரிக்கையை மறுத்து விட்டது. அதனால், கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நடந்து வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இறந்த அரசு ஊழியர்களின் பதவியைப் பொறுத்து அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்கக் கூடாது. வாரிசுகளின் தகுதி அடிப்படையில் அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அதனால், மனுதாரின் தகுதி அடிப்பைடையில் 8 வாரங்களுக்குள் அவருக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Thursday, November 07, 2013

நவ.15க்குள் தகவல் சேகரிக்க உத்தரவு ஸ்மாட்கார்டு மூலம் மாணவர் வருகை பதிய திட்டம

் கல்வி தகவல் மேலாண்மை முறையில் மாணவர் தகவல் தொகுப்பு சேகரிப்பு பணிகளை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவ, மாணவியரின் விவரங்கள் பள்ளி கல்வி இயக்கத்தின் சார்பில் ஆன்லைனில் சேகரிக்கப்பட்டு வருகிறது. கல்வி தகவல் மேலாண்மை முறையின் கீழ் மாணவர் தகவல் தொகுப்பு மூலம் மாணவ மாணவியரின் விபரத்தை அதிகாரிகள் எந்த ஒரு கல்வி அலுவலகத்தில் இருந்தும் ஆன்லைனில் கண்காணிக்க முடியும். அரசின் திட்டங்கள் முறையாக மாணவ மாணவியரிடம் சென்றடைந்துள்ளதா என்பது இதன் மூலம் சரிபார்க்க முடியும்.

மேலும் மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து செல்கின்றனரா அல்லது இடையில் பள்ளி செல்லாமல் இடை நின்றுள்ளனரா என்பதும் தெரியவரும். அவர்களின் கல்வி முன்னேற்றம்,உடல்நிலை, அவர்களின் சிறப்பு திறன்கள் போன்றவையும் இதன் மூலம் கண்காணிக்க இயலும். மாணவர்களின் 100 சதவீதம் சரியான விபரங்கள் இதில் இருக்கும். இந்த திட்டத்தில் தொடர்ந்து அனைத்து விபரங்களுடன் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ஸ்மார்ட்கார்டு மூலமே மாணவர்களின் வருகை பதிவு செய்யப்படும்.தகவல் விபர சேகரிப்பு பணிகள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் வருகிறது மாற்றம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர். இதில் உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை மட்டுமே மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இதில் இரண்டு தாள்களையும் சேர்த்து மொத்தம் 4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளில் 14,496 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாளில் 12,596 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களும், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 2 ஆயிரம் காலிப்பணியிடங்களும் உள்ளன. கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் காலிப்பணியிடங்களை விட குறைவான ஆசிரியர்களே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்ததால் நியமன முறை அதிக முக்கியத்துவம் பெறவில்லை.

என்ன வழக்கு? இடைநிலை ஆசிரியர்களை மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை இடைநிலை ஆசிரியர்களை மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வு இரண்டிலும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் சில மாதங்களுக்கு முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால், இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. மனுவை ஏற்று இந்த வழக்கை முடித்துவைத்து உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு காலாவதியாகியுள்ளது. எனவே, இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களை பட்டதாரி ஆசிரியர்களைப் போல வெயிட்டேஜ் மதிப்பெண் முறை (அரசாணை எண் 252) மூலம் நியமனம் செய்யலாமா அல்லது மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யலாமா என தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .

5.63 லட்சம் ஆசிரியர் விவரங்கள் விரைவில் இணையத்தில் சேர்ப்பு

கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின் கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம், இம்மாத இறுதிக்குள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: முதல்வர் உத்தரவுப்படி, பள்ளி கல்வித் துறையில், ஆசிரியர்களின் வருகை பதிவை, அதிகாரிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டம், கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தில் (இ.எம்.ஐ.எஸ்.,) ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை, முதலில், திருச்சி மாவட்டத்தில், செப்., 5ல், முதல்வர் துவக்கி வைத்தார். இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும், 56,573 பள்ளிகள், 5.63 லட்சம் ஆசிரியர், 1.35 கோடி மாணவர்களின் விவரம், இணையதளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இப்பணியை, இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து விவரமும் ஒருங்கிணைக்கப்பட்ட பின், எஸ்.எம்.எஸ்., திட்டம், மாநில அளவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

மாணவர்களுக்கு மொபைல் வேன் கவுன்சிலிங் : ஒழுக்கத்தை மேம்படுத்த கல்வித் துறை ஏற்பாடு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், "டீன் ஏஜ்' மாணவர்களுக்கு, ஒழுக்கத்தை மேம்படுத்தி, உளவியல் ரீதியாக மாற்றம் கொண்டு வர, மொபைல் வேன் மூலம், கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. இதற்காக, 10 வேன்களை, கல்வித்துறை வழங்கி உள்ளது. பள்ளி மாணவர்களிடையே, வன்முறை மற்றும் ஒழுக்கமின்மை அதிகம் ஏற்பட்டுள்ளது. இவர்களை, நல்வழிபடுத்தி, அதிக மதிப்பெண்கள் எடுக்க, பள்ளி கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், ஒன்பது, பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, கவுன்சிலிங் கொடுக்க உள்ளனர்.

இதற்காக,சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர் என, 10 மண்டலங்களாக பிரித்து, தலா ஒரு வேன் கொடுத்துள்ளனர். இதில் பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர், ஒரு உதவியாளர் இருப்பார்கள். இவர்கள், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தலின் படி, குறிப்பிட்ட பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களுக்கு "கவுன்சிலிங்' வழங்குவர். இதில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது, மனநலம் பற்றி விழிப்புணர்வு, ஞாபக மறதி, மாணவர்களின் தனிப்பட்ட பிரச்னை, ஒழுக்கம், போதை பொருள் பற்றிய விழிப்புணர்வுகளுக்கு, "டிவி' மூலமும், தனியாகவும் "கவுன்சிலிங்' கொடுக்கின்றனர்.

இதேபோல், பள்ளிகளில் தலா இரு ஆசிரியர்களுக்கும், கவுன்சிலிங் தருகின்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில்,"" இந்தியாவில் முதன் முறையாக, தமிழ்நாடு பள்ளி கல்வி துறை சார்பில், மாணவர் களுக்கு வேன் மூலம் "மொபைல் கவுன்சிலிங்' நடத்தப்படுகிறது. இது, மாணவர்களிடையே உளவியல் ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தி, நல்வழிபடுத்தும். கற்றலில் பின் தங்கிய மாணவர்கள் கூட, அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

குரூப்–1 மெயின் தேர்வு : 3 மாதத்தில் முடிவு வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி தலைவர் நவநீதகிருஷ்ணன் பேட்டி -

தமிழ்நாட்டில் காலியாக உள்ள துணை கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 25 இடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களைநிரப்ப அரசு முடிவு செய்து, 25 பேர்களை தேர்வு செய்வதற்கான பணியை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்து உள்ளது. இதையொட்டி 25 பேர்களை தேர்வு செய்ய குரூப்–1 முதல் நிலை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 16–ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 75 ஆயிரத்து 627 பேர் எழுதினார்கள். அவர்களில் 1372 பேர்களை அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்ந்து எடுத்தது

. அந்த தேர்வு கடந்த மாதம் 25–ந்தேதி நடைபெற்றது. 84 சதவீதம் பேர் தேர்வு எழுதினார்கள். 16 சதவீதத்தினர் வரவில்லை. விடைத்தாள்களை சம்பந்தபட்ட பாடங்களில் நிபுணத்துவம் கொண்ட பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர்கள் கொண்டு மதிப்பீடு செய்ய உள்ளனர். விடைத்தாள்கள் இரு முறை மதிப்பீடு செய்யப்படும்.  குரூப்–1 மெயின்தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு ‘எவ்வளவு விரைவாக குரூப்–1 மெயின்தேர்வு முடிவை வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவில் வெளியிடுவோம். எப்படியும் 3 மாதத்திற்குள் வெளியிடுவோம்‘ என்றார்.