Wednesday, September 25, 2013
தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக்கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு அரசு அறிவிப்ப
3½ லட்சம் மாணவர்கள் தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக்கழகம், திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகம்,கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முது கலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் உள்பட மொத்தம் 3 லட்சத்து 50ஆயிரம் பேர் படிக்கிறார்கள்.
மேலும் தொலை தூரக்கல்வி மூலம் 4 லட்சம் பேர் படிக்கிறார்கள். இந்த மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாக கூறி அதை திரும்ப பெறக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் முன்பாக போராட்டம் நடந்தது. இது குறித்து மாநில உயர் கல்வி மன்ற உறுப்பினர் செயலாளர் பேராசிரியர் கரு.நாகராஜன் கூறியதாவது:–
கட்டண உயர்வு நிறுத்தம் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள மாநில உயர்கல்வி மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள். மேலும் கேள்வித்தாள் உள்ளிட்டவைக்கும் செலவு அதிகமாகிறது. எனவே தேர்வுக்காக மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்று கூறினார்கள். அதைத்தொடர்ந்து தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட சில கட்டணங்கள் உயர்த்த அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக மாநில உயர்கல்வி மன்ற கூட்டம் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் ஏற்கனவே நடந்த கூட்டத்தில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் சில பல்கலைக்கழகங்கள் உயர்த்தப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக தெரியவந்துள்ளது. இறுதி முடிவு உடனடியாக விரைவில் மாநில உயர்கல்வி மன்ற கூட்டத்தில் தேர்வு கட்டண ம் உள்ளிட்ட பல்வேறு கட்டணம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். மாணவர்களுக்கு கட்டணஉயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
10–வது, பிளஸ்–2 தேர்வுகளில் வினாத்தாள், மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தகவல்
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வின்போது தேர்வு அறைகளில் மாணவர்கள் முன்னிலையில்தான் வினாத்தாள் பிரிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார். இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:– அரசு பொதுத்தேர்வுகள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வை சரியான முறையில் நடத்தி நேர்த்தியான முறையில் முடிவுகளை வெளியிட வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளோம். விடைத்தாளின் முதல் பக்கத்தில் ரகசிய கோடு, மாணவர்களின் புகைப்படம் ஆகியவை புதிதாக இந்த வருடம் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முறை தற்போது நடைபெறும் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரகசியமான இடங்களில் தேர்வுக்கான வினாத்தாள் அச்சடிக்கப்படும். அச்சடிக்கும் முன்பு பல முறை எழுத்துப்பிழை பார்க்கப்படும். அச்சடித்தபின்பு அவை வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்படும். அங்கு ஷீல் சரியாக இருக்கிறதா? என்று அந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் அவ்வப்போது சென்று பார்ப்பார்கள். முன்பு ஒரு பள்ளிக்கு 500 வினாத்தாள் தேவை என்றால் கூடுதலாக வினாத்தாள் அனுப்பப்படும். இப்போது கூடுதலாக ஒரு கட்டு மட்டுமே அனுப்பப்படும். மாணவர்கள் முன்னிலையில் வினாத்தாள் பிரிக்கப்படும் முன்பு 50 வினாத்தாள் கொண்ட பார்சல், 100 வினாத்தாள் என்று இருக்கும்.
ஆனால் இப்போது அப்படி அல்லாமல் அனைத்து கட்டுகளும் தலா 20 வினாத்தாள் கொண்டே இருக்கும். அச்சடிக்கப்படும் இடங்களில் இருந்தே 20 வினாத்தாள் கொண்டு பார்சல் செய்யப்பட்டுதான் வினாத்தாள் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப்படும். அதுபோல வினாத்தாள் பார்சல் தேர்வு அறையில் பிரிக்கும்போது மாணவர்கள் முன்னிலையில்தான் பிரிக்கப்படும். அப்போது ஒவ்வொரு அறையிலும் தலா 2 மாணவர்கள் கையெழுத்திடுவார்கள். இந்த முறையின் காரணமாக வினாத்தாள் எந்த காரணம் கொண்டும் வெளியாகாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. அதுபோல விடைத்தாள்களும் 20 தாள்கள் கொண்ட பார்சலாக மாற்றி உள்ளோம். இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்தார்.
அக்., 3ல் அனைத்து பள்ளிகளுக்கும் 2ம் பருவ புத்தகங்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அக்.,3 ல், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், இரண்டாம் பருவத்திற்கான, பாடப்புத்தகங்களை வழங்க, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். புத்தகச்சுமையை குறைத்து, கல்வியறிவை மேம்படுத்தும் நோக்கில், சமச்சீர் கல்வி திட்டத்தில், 6 முதல் 9 வகுப்புவரை உள்ள மாணவ, மாணவியருக்கு, முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, முதல்பருவ தேர்வு முடிந்து, தற்போது காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அக்.,3 ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. அன்றே, இந்த வகுப்பு மாணவ, மாணவியருக்கு, இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களை வழங்க, பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இருந்து வந்துள்ள அப்புத்தகங்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், அந்ததந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அங்கு, மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலை கொடுத்து, தங்களது பள்ளிகளுக்கான புத்தகங்களை, தலைமையாசிரியர்கள் பெற்றுச் செல்கின்றனர். இந்தவார இறுதிக்குள், இப்பணிகளை, முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு வினா – விடை புத்தகங்கள்: அடுத்த வாரம் விற்பனைக்கு வரும்
பத்தாம் வகுப்பு, வினா – விடை புத்தகங்கள், அடுத்த வாரத்தில் இருந்து, விற்பனைக்கு வருகின்றன. பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும், மாநில பெற்றோர் – ஆசிரியர் கழகம், பொதுத் தேர்வு எழுதும், மாணவ, மாணவியருக்காக, பல ஆண்டுகளாக, வினா – விடை புத்தகங்களை தயாரித்து, குறைந்த விலைக்கு, விற்பனை செய்து வருகிறது. பாட புத்தகங்களை தயாரித்த ஆசிரியர் குழுவே, வினா – விடை புத்தகங்களையும் தயாரிப்பதால், இது, மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, மாநில, பெற்றோர் – ஆசிரியர் கழக அலுவலகத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான, வினா – விடை புத்தகம், விற்பனை செய்யப்படுகிறது.
பத்தாம் வகுப்பிற்கான புத்தகங்கள், அடுத்த வாரத்தில் இருந்து, விற்பனைக்கு வந்துவிடும் எனவும், மாணவ, மாணவியரின் தேவைக்கு ஏற்ப, போதுமான அளவில், புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ் வழி புத்தகங்கள், ஒரு, "செட்' – 185 ரூபாய்க்கும்; ஆங்கில வழி புத்தகங்கள், 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. "மாவட்ட தலைநகர்களில் விற்பனை வேண்டும்': இந்த புத்தகங்கள், சென்னையில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால், மாநிலம் முழுவதிலும் இருந்து, பெற்றோர், சென்னைக்கு படை எடுக்கும் நிலை, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. "மாவட்ட தலைநகரங்களில், வினா – விடை புத்தகங்களை விற்பனை செய்ய, கல்வித் துறை ஏற்பாடு செய்ய வேண்டும்' என, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், என்ன காரணத்தினாலோ, இதுவரை, கல்வித் துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது.
மொபைல் நம்பரை மாற்றாமல், சேவை அளிக்கும் நிறுவனங்களை மாற்றும் வசதியை, ஆறு மாதத்திற்குள் நாடு முழுவதும் அமல்படுத்த, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது
புதிய முறை : எம்.என்.பி., என்ற மொபைல் நம்பரை மாற்றாமல், சேவை அளிக்கும் நிறுவனங்களை மாற்றும் வசதி, குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே உள்ளது. உதாரணமாக, தமிழக வட்டத்திற்குள் சேவை வழங்கும் நிறுவனத்தின் கீழ், மொபைல் சந்தாதாரராக இருக்கும் ஒருவர், தன் மொபைல் நம்பரை மாற்றாமல், மற்றொரு சேவை நிறுவனத்திற்கு மாறி கொள்ள முடியும். வேறு மாநிலங்களுக்கு மாறுதலாகி செல்லும் போது, மொபைல் நம்பரும் மாறியது. நம்பரை மாற்றாமல், சேவை நிறுவனங்களை மாற்றும் வசதி, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
6 மாதங்களில் : இது குறித்து, டிராய் என்ற தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், தொலைதொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களிடம் கருத்துக்களை கேட்டு இருந்தது. தற்போதுள்ள விதிமுறைகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசித்தது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின், டிராய் நேற்று, ‘மொபைல் நம்பரை மாற்றாமல், சேவை நிறுவனங்களை மாற்றி கொள்ளும் வசதியை, நாடு முழுவதும் அமல்படுத்தலாம்’ என, பரிந்துரை செய்தது.
இதன்படி, தொலைதொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், இத் திட்டத்தை ஆறு மாதத்திற்குள் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவர் பிற மாநிலங்களுக்கு மாறி சென்றால், தமிழகத்தில் பயன்படுத்திய மொபைல் நம்பரை மாற்றாமல், அங்குள்ள சேவை நிறுவனத்திற்கு மாறி கொள்ளலாம்.
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 50 நடுநிலைப் பள்ளிகள் சமீபத்தில், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அப்பள்ளிகளில் 50 தலைமைஆசிரியர்கள், 250 பட்டதாரி ஆசிரியர்கள் புதிதாக, நியமிக்கப்பட உள்ளனர். அதுவரை, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, 9ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் சமரசம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை-தமிழக அரசு
ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு முறையில், மதிப்பெண்கள குறைக்க முடியாது என்றும், கல்வித் தரத்தில் சமரசம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு முறையில் மதிப்பெண்களில் சலுகை வழங்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கலாகி இருந்தது.
அந்த மனுவுக்கு இன்று பதில் அளித்துள்ள தமிழக அரசு, மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தகுதித் தேர்வு முறையை தமிழக அரசு நடத்தி வருகிறது. எனவே, தரமான கல்வியை வழங்க வேண்டும் என்கிற கொள்கையை தளர்த்தி சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று, தமிழக அரசு சார்பில் மனுதாரரின் மனுவுக்கு பதில் அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
ஏழவது சம்பள கமிஷன் அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிரதமர் மன்மோகன்சிங் பிறப்பித்துள்ளார். இந்த சம்பள கமிஷனின் பரிந்துரைகள் 2016-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது குறித்து மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய சம்பள கமிஷன் தலைவர், உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
Tuesday, September 24, 2013
சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு மையமாக, கோவை விரைவில் அறிவிக்கப்படும்,'' என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) மண்டல இயக்குனர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், கோவையில் நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய பணியாளர் நலன் சீர்திருத்தத்துறை அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது: மத்திய அரசின் பல துறையிலுள்ள "பி',"சி',"டி', பிரிவு பணியாளர்களை, எழுத்துத் தேர்வு மூலம் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வு செய்கிறது. 2009 ம் ஆண்டு வரை 10 லட்சம் விண்ணப்பங்கள் தேர்வாணையத்துக்கு வந்தன. 2012-2013 ம் ஆண்டில் ஒரு கோடியே 60 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இதிலிருந்து பிரசார்பாரதி, மத்திய உணவுக்கழகம் உள்ளிட்ட துறைகளுக்கு 85,000 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகமாகியுள்ளது. 85 சதவீத விண்ணப்பங்கள் இம்முறையிலேயே வந்து சேருகிறது. 15 சதவீத விண்ணப்பங்கள் மட்டுமே தபாலில் வந்து சேருகிறது. 2013-2014, 2014-2015 ம் ஆண்டுகளில் 2 கோடி விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலிருந்து 2 லட்சம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கான விடைகள், ஸ்டாப் செலக்ஷன் கமிஷனின் வெப்சைட்டில் மறுநாள் வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதும் போதே, விடைத்தாளின் நகல், தேர்வு எழுதுவோருக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசுத் தேர்வாணையம் வெளிப்படையான நடைமுறையை மேற்கொள்கிறது. விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு, சில தேசிய வங்கிகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
. இதில் சில சமயங்களில் ஏற்படும் சைபர் கிரைம் புகார்களை சரிசெய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முதல் நிலை தேர்வு மையம், தற்போது சென்னை மற்றும் மதுரையில் மட்டுமே உள்ளது. கல்வி நகரம் என்ற பெயர் பெற்ற கோவையும் விரைவில் தேர்வு மையமாக அறிவிக்கப்படும். இவ்வாறு, அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
வங்கி ஸ்டிரைக் வாபஸ்
"இப்போதைக்கு, வங்கிகளை இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு உறுதி அளித்துள்ளதை அடுத்து, பொதுத் துறை வங்கி ஊழியர்கள், இன்று நடத்தவிருந்த ஸ்டிரைக்கை, வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளை இணைக்க திட்டமிட்டுள்ளதாக வௌ?யான தகவலை அடுத்து, இந்திய வங்கிகள் சங்கம் உள்ளிட்ட வங்கிகள் சங்கத்தினர், இன்று, ஸ்டிரைக் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், மத்திய தொழிலாளர் நலத் துறை தலைமை கமிஷனர் தலைமையில், வங்கிகள் சங்க பிரதிநிதிகளுக்கும், நிதி அமைச்சக அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதன்பின், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் வெங்கடாச்சலம் கூறுகையில், ""பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் திட்டமில்லை என, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஸ்டிரைக் மேற்கொள்ளும் திட்டம், ஒத்திவைக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
கொசுக்களால் பரவும் நோய்கள்: மாணவர்களுக்கு அறிவுறுத்த உத்தரவு
பள்ளிகளில், "டெங்கு' காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மதுரை "விசாகா' பள்ளி மாணவி ஒருவர், "டெங்கு' பாதித்து பலியானதாக எழுந்த புகாரை தொடர்ந்து, பள்ளிகளில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம்: பள்ளி வளாகத்தில், நீர்தேங்கும் பள்ளங்கள் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர், குடிநீர் தொட்டிகள் மூடியிருக்க வேண்டும். கழிவறைகளை சுத்தமாக வைக்க வேண்டும். பயனற்ற கிணறு, குழிகளை மூட வேண்டும்.
திறந்த நிலையில், கழிவுநீர் கால்வாய்கள் இருப்பின், கொசு மருந்து தெளிக்க வேண்டும். கொசுக்கள் மூலம் "டெங்கு', சிக் குன்- குனியா, மலேரியா, நோய்கள் பரவுவது குறித்து, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், டயர்களை அப்புறப்படுத்த வேண்டும். கட்டட மேற்கூரையில் மழை நீர் தேங்காமல் அகற்ற வேண்டும். பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள சிறு பள்ளங்கள், பயன்படுத்தாத கிணறுகள் குறித்த விபரங்களை, சுகாதாரத்துறையினருக்கு, தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் மூலம் பெற்றோருக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Monday, September 23, 2013
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனி தேர்வு துவங்கியது
பிளஸ் 2 தனித் தேர்வுகள், மாநிலம் முழுவதும், 114 மையங்களில் துவங்கின. நேற்று, மொழி முதல்தாள் தேர்வு நடந்தது. தொடர்ந்து, வரும், 2ம் தேதி வரை நடக்கும் தேர்வை, 42 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, மாநிலம் முழுவதும், 124 மையங்களில் துவங்கின. 47 ஆயிரம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர்; வரும், 5ம் தேதி வரை, தேர்வுகள் நடக்கின்றன. வரும், 2014, மார்ச், ஏப்ரலில் நடக்கும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், முறைகேடு எதுவும் நடக்காத அளவிற்கு, பல்வேறு கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை, தேர்வுத் துறை அமல்படுத்த உள்ளது.
அனைத்து தேர்வுகளுக்கும், 'பார்கோடிங்' முறையில், 'டம்மி எண்' பதிவதுடன், மாணவரின் புகைப்படத்தையும், விடைத்தாளின் முதல் பக்கத்தில் அச்சிட்டு வழங்க, தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டம், நேற்று துவங்கிய தனித்தேர்வில், சோதனை ரீதியில், அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம், வெற்றிகரமாக அமைந்துள்ளதாக, தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எந்த பிரச்னையும் இல்லாமல், தேர்வு நடந்ததாகவும், அவர்கள் தெரிவித்தனர். எனவே, சூஇத்திட்டம், வரும் பொதுத்தேர்வில், கண்டிப்பாக அமல்படுத்தப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதி தேர்வெழுத விலக்கு:மனுக்கள் தள்ளுபடி
அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணியிடத்திற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடித்தவர்களுக்கு ஆசரியர் தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் கோர்ட்டில் என கோரியிருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் இன்று சென்னை ஐகோர்ட் நீதிபதி ஹரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டார்.
Sunday, September 22, 2013
சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா?
கடந்த2010ம் ஆண்டு நேர்முக தேர்வில் கலந்துகொண்ட18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்று உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பில் தெரிந்துவிடும். தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று தேசிய கல்வி கவுன்சில் கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.அதன்படி தகுதி தேர்வு நடத்தப்பட்டு சுமார்12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணிவழங்கப்பட்டது. இந்த நிலையில் தகுதி தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு,அதாவது கடந்த2010ம் ஆண்டு32 ஆயிரம் ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்து விட்டது.
இதில்14 ஆயிரம் பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது. மீதம் உள்ள18 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து,சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் கலந்து கொண்டவர்கள் தகுதி தேர்வு எழுததேவையில்லை. அவர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.ஆனால் தமிழக அரசு இதை பின்பற்றவில்லை. இதை பின்பற்ற கோரி சுமார்100 ஆசிரியர்கள் சார்பாக வக்கீல்கள் காசிநாதபாரதி,சுதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில்,சான்றிதழ் சரி பார்ப்பு பணியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை என்று கூறி அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் சோமையாஜி,கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய்காந்தி ஆகியோர் ஆஜராகி,தற்போது காலி பணியிடங்கள் இல்லை. அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டது என்றனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுகிறது.18ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா என்று இன்று தெரியும்.
ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு எப்போது?
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) 3 வாரத்திற்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும், அக்டோபர் மாதம் தேர்வு முடிவை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பணிநிரவல் தமிழக அரசு உத்தரவு
ஒரு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது. புதியதாக உருவாக்கப்பட உள்ள அல்லது நிலை உயர்த்தப்படவுள்ள 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 50 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 50 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பணிநிரவல் மூலமாக நிரப்பிக் கொள்ளப்பட வேண்டும்.
தரம் உயர்த்த கருதப்படும் 50 பள்ளிகளுக்கு, புதியதாக உருவாக்க அல்லது நிலை உயர்த்திட 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான செலவினை ரெட்ரோ பன்டிங் அடிப்படையில் மத்திய அரசின் உதவியை பெற அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தரம் உயர்வு செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் (சில மாவட்டங்கள் ) அரசாணை எண் 185,,நாள் 17.09.2013
1)தூத்துக்குடி மாவட்டம் -2 SCHOOLS
PUMS -பொட்டல் காடு
PUMS -பன்னம் பாறை
2)நெல்லை மாவட்டம்-2-SCHOOLS
PUMS பலபுதிர ராமபுரம்
PUMS-வென்றிலிங்கபுரம்
3)கோவை மாவட்டம் -2 SCHOOLS
PUMS-மயிலேறி பாளையம்
PUMS-சுகுனாபுரம் -பேரூர் ஒன்றியம்
4)திருச்சி -மாவட்டம் -3 SCHOOLS
PUMS -போசம் பட்டி -அந்தநல்லூர் ஒன்றியம்
PUMS -கரும்புளிபட்டி -மணப்பாறை ஒன்றியம்
PUMS -கரிகாலி -முசிறி ஒன்றியம்
5)தேனி மாவட்டம்-3 SCHOOLS
PUMS-லக்ஷ்மிபுரம் -போடி
PUMS-மஞ்சலாறு அணை -பெரியகுளம்
PUMS-சருமத்துப்பட்டி -பெரியகுளம்
6)திண்டுக்கல்-மாவட்டம்- 2 SCHOOLS
நத்தம் -PUMS கோட்டைப்பட்டி
நத்தம் -PUMS உலுப்பகுடி
7)மதுரை-மாவட்டம்- 2 SCHOOLS
PUMS -ராஜகூர்- மதுரை -EAST
PUMS -தோப்பூர்
8)விருது நகர்-மாவட்டம்- 2 SCHOOLS
PUMS -M.புதுப்பட்டி சிவகாசி ஒன்றியம்
PUMS -O.மேட்டுப்பட்டி -சாத்தூர் ஒன்றியம்
9)புதுக்கோட்டை-மாவட்டம்-2 SCHOOLS
PUMS-புல்வயல்
PUMS-தூவார்
10)தஞ்சை மாவட்டம் -2 SCHOOLS
PUMS -சொர்ணாக்காடு -பேராவூரணி ஒன்றியம்
PUMS -காரியவிடுதி -திருவோனம் ஒன்றியம்
11)திருவாரூர் மாவட்டம்-1 SCHOOLS
PUMS -சித்தனவாழூர் -நன்னிலம் ஒன்றியம்
12)நாகப்பட்டினம் மாவட்டம்-1 SCHOOLS
PUMS -பெருமாள் பேட்டை -செம்மனார் கோவில் ஒன்றியம்
13)காஞ்சிபுரம் மாவட்டம் -2 SCHOOLS
PUMS -கொளப்பாக்கம் -குன்றத்தூர் ஒன்றியம்
PUMS - நீலமங்கம் -இளந்தூர் ஒன்றியம்
14)திருவள்ளுர் மாவட்டம்- 2 SCHOOLS
PUMS-கரலப்பாக்கம் -வில்லிவாக்கம் ஒன்றியம்
PUMS -பாரன்பாக்கம் -கடம்பத்தூர் ஒன்றியம்
15)இராமநாதபுரம்-மாவட்டம் -1 SCHOOLS
PUMS -கமுதக்குடி -பரமக்குடி ஒன்றியம்
16)கரூர் -மாவட்டம் -1 SCHOOLS
நகரமன்ற நடுநிலைப்பள்ளி -கோட்டைமேடு
17)வேலூர் மாவட்டம் -1 SCHOOL
PUMS -நெற்குத்தி ஜோலார் பேட்டை
18) விழுப்புரம் மாவட்டம்: 2 Schools
PUMS- அணைகரைகோட்டாலம், கள்ளக்குறிச்சி ஒன்றியம்.
PUMS- ஊராங்கனி, சங்கராபுரம் ஒன்றியம்
19)2)சிவகங்கை-மாவட்டம்-2 SCHOOLS
PUMS -பொய்யாவயல் -சாக்கோட்டை ஒன்றியம்
ராமநாதன் செட்டியார் பள்ளி -சாக்கோட்டை ஒன்றியம் -காரைக்குடி