இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, May 22, 2019

பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம்?


தமிழகத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் வரும் ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இதைத் தொடர்ந்து கடும் வெயில் காரணமாக குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்றும் அவர்களது நலன் கருதி பள்ளித் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்றும் பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள், பொதுமக்கள் வலியுறுத்தினர். இதேபோன்று சமூக வலைதளங்களிலும் இதே கோரிக்கையை அரசிடம் வலியுறுத்தினர். இந்தநிலையில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே இறுதி வாரத்தில் வரவிருக்கும் பருவநிலையைப் பொருத்து பள்ளிகள் திறக்கப்படும் தேதியை முடிவு செய்யலாம் என அதிகாரிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளது.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., ஜூன், 3 முதல், 'அட்மிஷன்'


தமிழகத்தில், அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில், ஜூன், 3 முதல், எல்.கே.ஜி., எனும் மழலையர் வகுப்புக்கான சேர்க்கை, துவங்க உள்ளது.அரசு பள்ளிகளில், ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி., எனும் மழலையர் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. ஆனால், அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில், இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அரசாணை அரசு பள்ளிகளில் கே.ஜி., வகுப்புகள் இல்லாததால், பெற்றோர், தனியார் பள்ளிகளில், அதிக கட்டணம் செலுத்தி, குழந்தைகளை சேர்க்க வேண்டியுள்ளது.இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு, அரசு பள்ளிகளிலும், கே.ஜி., வகுப்புகளை துவங்க, பள்ளி கல்வி துறை சார்பில், 2018, டிசம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.அதன்படி, அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும், கே.ஜி., வகுப்புகள் துவங்கவும், குறிப்பாக, அங்கன்வாடிகளை ஒட்டியுள்ள பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்புகள் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டது.இதற்காக, 2,381 பள்ளிகளும், அங்கன்வாடிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அவற்றில், 2018ல், புதிய மாணவர்களை சேர்க்க முடியவில்லை.

இந்த ஆண்டு முதல், மாணவர்களை சேர்த்து, எல்.கே.ஜி., வகுப்புகளை துவங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அறிவுறுத்தல் கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 3ல்,பள்ளிகள் திறக்கப்பட்டதும், எல்.கே.ஜி., சேர்க்கையை தீவிரப்படுத்த, தொடக்க கல்வி இயக்குனரகம், மாவட்ட கல்வி அதிகாரிகளை அறிவுறுத்திஉள்ளது.அதேபோல், மாவட்ட வாரியாக துவங்கப்பட்ட, 32 மாதிரி மேல்நிலை பள்ளிகளிலும், எல்.கே.ஜி., வகுப்புகளில், மாணவர்களை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ள

Tuesday, May 21, 2019

ஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு விடுமுறை நீட்டிப்பு இல்லை


'கோடை விடுமுறை முடிந்து, திட்டமிட்டபடி, ஜூன், 3ல் பள்ளிகள் திறக்கப்படும்' என, பள்ளி கல்வி இயக்குனரகம்அறிவித்துள்ளது.இது குறித்து, பள்ளி கல்வி துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:வரும் கல்விஆண்டில், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, எட்டு, பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, புதிய பாட திட்டம் அமலுக்கு வருகிறது.

இது தொடர்பான, இலவச பாடப்புத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் இதர இலவச பொருட்களை, வரும், 24ம் தேதி முதல், 30ம் தேதிக்குள், பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று விட வேண்டும்.அவற்றை, பள்ளிகள் திறக்கப்படும், ஜூன், 3ம் தேதி அன்றே, மாணவ - மாணவியருக்கு வழங்கி விட வேண்டும். இதில், எந்த சுணக்கமும், இருக்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.கோடை வெயில் கொளுத்துவதால், பள்ளி விடுமுறையை, நீட்டிக்குமாறு, அரசுக்கு சில ஆசிரியர் அமைப்புகள், கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால், திட்டமிட்ட தேதியில் பள்ளிகளைத் திறக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.மேலும், 'புதியபாட திட்டம் அமலுக்கு வருவதால், நாட்களை வீணடிக்காமல், பாடம் நடத்தும் பணிகளைத் துவக்க வேண்டும்'என்றும், பள்ளி கல்வித் துறை அறிவுறுத்திஉள்ளது.

Monday, May 20, 2019

பள்ளிகள் திறக்கும் நாளில் புத்தக பைகள் வினியோகம்


அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும், 40.66 லட்சம் மாணவ - மாணவியருக்கு, பள்ளி திறக்கும் நாளிலேயே, இலவச புத்தக பைகள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும், மாணவ - மாணவியருக்கு புத்தக பைகளை வினியோகம் செய்யும் உரிமத்தை, டில்லியை சேர்ந்த தனியார் நிறுவனம் பெற்றுள்ளது.

அந்நிறுவனம், மாவட்டம் தோறும் வினியோகம் செய்யும் வகையில், இரண்டு பேருக்கு, தயாரிப்பு பணியை வழங்கியுள்ளது.சென்னை, சேலம், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, ஈரோடு, நாமக்கல், கரூர், தர்மபுரி உட்பட, 100க்கும் மேற்பட்ட இடங்களில், புத்தக பைகள் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.ஜெ., முதல்வராக இருந்தபோது, பச்சை மற்றும் பிங்க் நிறங்களில், பைகள் வழங்கப்பட்டன.

நடப்பாண்டு, ஊதா நிறத்தில் வழங்கப்படும் பைகளில், ஜெ., மற்றும், முதல்வர், இ.பி.எஸ்., படங்களுடன், அரசு முத்திரையும் பிரின்ட் செய்யப்பட்டுள்ளன.பள்ளி திறக்க, 12 நாட்களே உள்ள நிலையில், சத்துணவு சாப்பிடும், 40.66 லட்சம் மாணவ - மாணவியருக்கு,புத்தக பைகள், இலவசமாக வழங்கப்பட உள்ளன.இதில், 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளதால், 26ம் தேதி முதல், பள்ளிகளுக்கு வினியோகம் செய்ய உள்ளதாக, தயாரிப்பாளர்கள் கூறினர்.பள்ளி திறக்கப்படும், ஜூன், 3ல், மாணவ - மாணவியருக்கு புத்தக பைகள் கிடைத்துவிடும்.

தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய சீருடை அறிமுகம்


தனியார் பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள புதிய சீருடை வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு புதிய சீருடை வண்ணங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தன.

அதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கரும்பச்சை நிறத்தில் அரைக்கால் சட்டையும், இளம்பச்சை நிறத்தில் கோடிட்ட மேல் சட்டையும் அணிய வேண்டும் என்றும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பழுப்பு நிறத்தாலான முழுக்கால் சட்டையும், அதே நிறத்தாலான கோடிட்ட மேல்சட்டையும் அணிய வேண்டும் என்றும், மாணவிகள் கூடுதலாக பழுப்பு நிறத்தாலான கோடிட்ட மேல் சட்டையும் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், புதிய சீருடைகளை மாணவ, மாணவிகள் வாங்கிக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தற்போது அறிவுறுத்தியுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் இலவச சீருடையில் எந்த மாற்றமும் இல்லை. இந்தப் புதிய சீருடைகள் குறித்த சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை அனுப்பியுள்ளது. சத்துணவு சாப்பிடும் 40 லட்சத்து 66 ஆயிரத்து 217 மாணவ, மாணவியருக்கு இந்த ஆண்டு இலவச சீருடைகள் வழங்கப்பட உள்ளன. 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு ஏற்கெனவே சீருடைகள் மாற்றப்பட்டுள்ளன.

Sunday, May 19, 2019

புதிய பாடத் திட்டம்: 1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு ஜூனில் பயிற்சி


தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத் திட்டம் குறித்து வரும் ஜூன் மாதம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 2018-2019-ஆம் கல்வியாண்டில் 1, 6, 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. சிந்திக்க வைக்கும் கேள்விகள், கியூ.ஆர். குறியீடு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தப் பாடத் திட்டத்துக்கு பெற்றோர்- ஆசிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து பாடங்களை மாணவர்களுக்கு எப்படி நடத்த வேண்டும், புதிய பாடத் திட்டத்தில் கையாளப்பட்டுள்ள நவீன உத்திகள் குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோன்று இந்த ஆண்டு எஞ்சியுள்ள வகுப்புகளுக்கும் அதாவது 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு வரும் ஜூன் மாதம் புதிய பாடப் புத்தகங்கள் அமலுக்கு வர உள்ளன.

இதையடுத்து வரும் ஜூன் மாதம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத் திட்டம் குறித்து பல்வேறு கட்டங்களாகப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

50 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி


புதிய பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்துவது குறித்து, 50 ஆயிரம்ஆசிரியர்களுக்கு, முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டம், 14 ஆண்டு களுக்கு பின் மாற்றப்பட்டுள்ளது. 2018ல், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம்அமலுக்கு வந்தது.

வரும், 2019 - 20ம் கல்வி ஆண்டில், மற்ற வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. அதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளும் அடங்கும்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, பொது தேர்வு நடத்தப்படுவதால், இந்த வகுப்புகளுக்கு மட்டும், புதிய பாடத்திட்ட பாடங்களை, விரைந்து முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதற்காக, 10ம் வகுப்புக்கான பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பிளஸ் 2 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், ஜூனில், பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகம் தயாரித்த கல்வியாளர்கள், பேராசிரியர்கள் வாயிலாக, மாவட்ட வாரியாக, பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.இதைத் தொடர்ந்து, மற்ற வகுப்புகளின் ஆசிரி யர்களுக்கும், பயிற்சி அளிக்கப்படும். முதல் கட்ட பயிற்சியில், அரசு பள்ளி ஆசிரியர்களும், அடுத்த கட்டங்களில், தனியார் மெட்ரிக் பள்ளிஆசிரியர்களும் பயிற்சி பெற உள்ளனர்

ஜூன் முதல் வாரத்தில் இலவச பாடப்புத்தகம்


கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்ததும், ஜூன் முதல் வாரத்திலேயே, இலவச பாடப் புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும், ஆண்டு இறுதிதேர்வுகள் முடிந்து, பள்ளிகளுக்கு, ஏப்., 13 முதல், விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மட்டும், மார்ச்சில் விடுமுறை விடப்பட்டது. 51 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 3ல், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, ஜூன், 3 துவங்கி, ஒரு வாரத்திற்குள், இலவச நோட்டு மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்க, பாடநுால் நிறுவனத்துக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சுயநிதி பாடப்பிரிவு தவிர, மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், இலவச நோட்டு மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.அதேபோல், 2019ல், பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, 'லேப்டாப்'களும் வழங்கப்பட உள்ளதாக, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Friday, May 17, 2019

பள்ளிகளில் துாய்மை பணி


கோடை விடுமுறை முடிய, இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்த வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், மார்ச்சில் பொது தேர்வுகள் முடிந்தன; ஏப்ரலில் பள்ளி இறுதி தேர்வுகள் நடந்தன. ஏப்., 12 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

இன்னும் இரண்டு வாரங்களில், பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:கோடை விடுமுறை முடிந்து, புதிய கல்வி ஆண்டில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன், பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை, சீர் செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், பராமரிப்பு பணிகளுடன், சுத்தப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகள் திறக்கப்படும் போது, மாணவர்களுக்கு உகந்த சூழலை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் திறக்கும் நாளில், மாணவர்களின் வகுப்புகள் துவங்கும் அளவுக்கு, அனைத்து முன் ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, May 15, 2019

50-க்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகள் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல!: அரசாணை வெளியீடு


பல்வேறு எம்.பி.ஏ. படிப்புகள், இரட்டை பட்டப் படிப்புகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட  பட்டப் படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதிகளாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக உயர் கல்வித் துறை அண்மையில் பிறப்பித்திருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில்நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப  கலை, அறிவியல், மேலாண்மை, பொறியியல்-தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அறிமுகம் செய்யப்படும் புதிய படிப்புகள், ஏற்கெனவே அந்தந்தத் துறை சார்ந்த மூலப் படிப்புகளின் பாடத் திட்டத்தில் குறைந்தபட்சம் 70 சதவீத பாடங்களைக் கொண்டவையாக இருந்தால் மட்டுமே, அந்தப் புதிய படிப்புகள் அரசுப் பணிக்கான கல்வித் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும். 70 சதவீதத்துக்கும் குறைவான மூலப் பாடத் திட்டத்தின், பாடங்களைக் கொண்டிருந்தால், அந்தப் புதிய படிப்பு குறிப்பிட்ட அரசுப் பணிக்கான கல்வித் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இதற்காக, உயர்கல்வித் துறை செயலர், பேராசிரியர்கள், நிபுணர்கள் அடங்கிய பட்டப்படிப்பு  இணைக் குழு ஒன்றை அமைத்து, கவனமுடன் ஆய்வு செய்து எந்தெந்தப் படிப்புகள் அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு இணையானவை அல்லது இணையற்றவை என்ற பட்டியலை அரசாணையாக அவ்வப்போது வெளியிட்டு வரும்.
இந்த அரசாணையின் அடிப்படையிலேயே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசுப் பணிகளுக்கானத் தேர்வை நடத்தும். அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற இந்த பட்டப் படிப்பு இணைக் குழுவின் 60-ஆவது கூட்டத்தில், பல்வேறு பல்கலைக்கழகங்கள் சார்பில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதிக்கு இணையற்றவையாக (அரசாணை எண்.66) அறிவிக்கப்பட்டுள்ளன.

எம்.பி.ஏ. படிப்புகள்: அதன்படி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் எம்.பி.ஏ. சந்தை மேலாண்மை, எம்.பி.ஏ. சர்வதேச வணிகம், எம்.பி.ஏ. இணைய-வணிகம், எம்.பி.ஏ. மனிதவள மேம்பாடு, எம்.பி.ஏ. உலக மேலாண்மை, ஆன்-லைன் எம்.பி.ஏ., எம்.பி.ஏ. நிதி மேலாண்மை  ஆகிய படிப்புகள் அரசு பொதுத் துறை நிறுவன பணிகளுக்கான எம்.பி.ஏ. கல்வித் தகுதிக்கு இணையானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசுத் துறைகளில் எம்.பி.ஏ. கல்வித் தகுதிக்கான பணிகளுக்கு இவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
இரட்டைப் பட்டப் படிப்புகள்: அதேபோல, இந்தப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் பல்வேறு இரட்டை பட்டப் படிப்புகளும் அரசுப் பணிகளுக்கு தகுதியானவை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும்  பி.எஸ்சி. கணினி அறிவியல்  - பி.எஸ்சி. கணிதம் இரட்டைப் பட்டப் படிப்பு  அரசுப் பணிக்கான பி.எஸ்சி. கணினி அறிவியல் படிப்புக்கு இணையானது அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் பி.பி.ஏ. இரட்டைப் பட்டப் படிப்பு , பி.ஏ. சமூகவியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. அரசியல் அறிவியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. வரலாறு இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. ஆங்கிலம் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.ஏ. பொருளாதாரம் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.காம். இரட்டைப் பட்டப் படிப்பு, பி.எஸ்சி. காட்சி தகவல் தொடர்பியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.எஸ்சி. புள்ளியியல் இரட்டைப் பட்டப் படிப்பு, பி.எஸ்சி. கணினி அறிவியல் இரட்டைப் பட்டப் படிப்பு ஆகியவை அந்தந்த மூலப் படிப்புகளுக்கு இணையானவை அல்ல எனவும், அரசுப் பணிக்கான கல்வித் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற படிப்புகள்: பாரதியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் வழங்கப்படும் எம்.எஸ்சி. பயன்முறை (அப்ளைடு) நுண்உயிரியல் படிப்பு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் எம்.எஸ்சி. ஒருங்கிணைந்த உயிரியல், எம்.எஸ்சி. உயிரியல் படிப்புகள்,  காந்திகிராம் கிராம நிறுவனம் சார்பில் வழங்கப்படும் எம்.எஸ்சி. பயன்முறை உயிரியல்,  பாரதிதாசன் பல்கலை. சார்பில் வழங்கப்படும்  5 ஆண்டுகள்  ஒருங்கிணைந்த  எம்.எஸ்சி.  உயிர்  அறிவியல்,  அண்ணாமலைப்  பல்கலைக்கழகம்  சார்பில்  வழங்கப்படும்  5 ஆண்டுகள்  ஒருங்கிணைந்த  எம்.எஸ்சி.  விலங்கியல்,  எம்.எஸ்சி.  கடல்வாழ்  நுண் உயிரியல் ஆகிய படிப்புகள் அரசுப் பணிக்கான எம்.எஸ்சி. விலங்கியல் கல்வித் தகுதிக்கு இணையாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. மேலும் பல்வேறு படிப்புகள் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து மாணவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில், அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

இதுகுறித்து இந்த பட்டப் படிப்பு இணைக் குழுவின் உறுப்பினராக இடம்பெற்றிருக்கும் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி கூறியது:
அவ்வப்போது புதிதாக அறிமுகம் செய்யப்படும் பட்டப் படிப்புகள் அந்தந்த மூலப் படிப்புகளின் பாடத் திட்டத்தில் 70 சதவீத பாடங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். அப்போதுதான், அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு அந்தப் புதிய படிப்புகள் இணையானவையாக எடுத்துக்கொள்ளப்படும். அவைத்தான் இந்தப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்காக, இந்தப் படிப்புகளை மேற்கொள்வதால் எந்தவொரு வேலைவாய்ப்புமே கிடைக்காது எனத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது என்றார் அவர்.

Tuesday, May 14, 2019

ஒரு நொடி என்றாலும்...! ஆசிரியர்களுக்கு அரை நாள் 'ஆப்சென்ட்'


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவு வரும் ஜூன் 3ல் துவங்கவுள்ளதால், பள்ளிகள்தோறும் விரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதுநாள் வரையில் இவர்களுக்கான வருகை பதிவேடு நோட்டு புத்தகங்களிலே பராமரிக்கப்படுகிறது.

இதனால் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்கவும், பணியாளர்களை கண்காணிக்க ஏதுவாகவும் பயோமெட்ரிக் வருகை பதிவு தொழில்நுட்பத்தை அமலாக்க உள்ளதாக பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.இதன்கீழ், பெரும்பாலான அரசு பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' மெஷின் வினியோகித்து, சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.இந்நிலையில், வரும் ஜூன் 3 முதலே ஆசிரியர்களுக்கு, 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு கட்டாயம் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் முதற்கட்டமாக, கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு மட்டும் பயோமெட்ரிக் மெஷின் வழங்கப்பட்டுள்ளன.பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மட்டும் கைவிரல் ரேகைகளை பதிந்து வருகின்றனர். ஒரு சில பள்ளிகளில் சோதனை அடிப்படையில் கடந்த ஒரு மாதமாக பயோ மெட்ரிக் கருவி பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும், ஜூன் 3ல் முழுமையாக, அமல்படுத்த இருப்பதால், ஆசிரியர்கள், மற்றும் பணியாளர்களின் விவரங்களை ஆன்லைனில் விரைவாக பதிவேற்றம் செய்யுமாறு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா கூறியதாவது:மாதிரி பள்ளி என்பதால் ஜெய்வாபாய் பள்ளியில் கடந்த பிப்., மார்ச் மாதங்களிலே, 7 பயோ மெட்ரிக் கருவி வழங்கப்பட்டுள்ளன. இப்பள்ளியில் உள்ள, 146 ஆசிரியர்கள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்துள்ளனர்.இதன்கீழ், ஆசிரியர்கள் காலை 9:00 மணிக்குள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.

பள்ளி மாற்று சான்றிதழில் ஜாதி பெயர் கிடையாது'


பள்ளி மாற்று சான்றிதழில், ஜாதி பெயர் குறிப்பிடப்படாது' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கும் போது, அதில் மாணவர்களின் ஜாதி, இனம், மதம் போன்றவை இடம்பெறும். இதில், ஜாதியை குறிப்பிடும் பகுதியில், பல ஆசிரியர்கள், ஜாதியை தவறாக குறிப்பிடுவதால், எதிர்காலத்தில் மாணவர்களின் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு சிக்கல் ஏற்படுகிற இதை தவிர்க்கும் வகையில், பள்ளி மாற்று சான்றிதழில், ஜாதியை குறிப்பிட வேண்டாம் என, தமிழக அரசு, 2014ல், அரசாணை வெளியிட்டது.

இதை பின்பற்றி, மாற்று சான்றிதழில், ஜாதியை குறிப்பிடும் முறை, ஐந்து ஆண்டுகளாக ஒழிக்கப்பட்டு விட்டது. மாறாக, 'வருவாய் துறை சான்றிதழை ஆய்வு செய்யவும்' என, அதில் குறிப்பிடப்படும் இது குறித்து, ஆதிவாசி விகாஸ் பரிஷத் என்ற அமைப்பின் சார்பில், பள்ளி கல்வித்துறைக்கு மனு அனுப்பப்பட்டது. அதற்கு, 'தற்போதுள்ள நிலையே தொடரும்' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.