இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 17, 2018

விஜயதசமி: அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா?


ஆண்டுதோறும் நடைபெறும் விஜயதசமி மாணவச் சேர்க்கைகள் அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் அதிகரிக்கும் நிலையில், இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் விஜயதசமி மாணவச் சேர்க்கை நடைபெறுமா? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் தினமான விஜயதசமி நாளன்று பெற்றோர் தங்களது குழந்தைகளை முதல்முதலில் பள்ளிகளுக்கு அனுப்புவது நம்பிக்கை. அன்றைய தினத்தில் இருந்து பள்ளிக்குச் சென்றால் எதிர்காலத்தில் மாணவர் கல்வியில் சிறந்தவராக விளங்குவார் என அனைவரது எண்ணம்.

இந்த ஆண்டு விஜயதசமி அக்டோபர் 18-ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும். இதற்காக பல தனியார் பள்ளிகள் புதிய புதிய அறிவிப்புகளை விளம்பரங்களாய் வெளியிட்டு பெற்றோர்களைக் கவர்ந்து தங்களது பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்கின்றன. ஆனால் அரசுப் பள்ளிகளில் விஜயதசமி சேர்க்கை தனியார் பள்ளிகளைவிட குறைவாக இருப்பது ஏன்? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு காரணம் தற்போது பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர வயதை நிர்ணயிக்கும் தேதி 31.07. ஆகும். 31.7. அன்று 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகள் மட்டுமே 1-ஆம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு, இதைக் கண்டிப்பாக அமல்படுத்த கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) இணையதளத்தில் மாணவர்கள் விவரங்களைப் பதிவிடும்போது பிறந்த தேதி, சேர்க்கை தேதி ஆகியவற்றை கணக்கிட்டு 5 வயது பூர்த்தியாகி இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்கிறது. இல்லையெனில் இணையதளத்தில் ஏற்புகை மறுக்கப்படுகிறது. இந்நிலையில் 18.10.2018 அன்று விஜயதசமி தினத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்க்கைக்கு வருவோருக்கு 31.7-இல் 5 வயது பூர்த்தியாகி இருந்தால் மட்டுமே சேர்க்கைக்கு அனுமதி உண்டு. இதனால், 31.7-இல் 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகள் ஜூலை மாதத்திலேயே அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுவிடுவர். விஜயதசமி சேர்க்கைக்கு வரை பெற்றோர்கள் காத்திருப்பதில்லை. இதனாலேயே விஜயதசமி சேர்க்கைக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் விஜயதசமி சேர்க்கை அதிக அளவில் உள்ளது. தனியார் பள்ளிகளில் 31.7-இல் 3 வயது பூர்த்தியாகியிருந்தால், அக்குழந்தைகள் எல்.கே.ஜி. எனும் மழலையர் வகுப்புகளில் சேர்த்துக் கொள்கின்றனர். ஆனால் 31.7-க்குப் பிறகு 3 வயது நிறைவாகியிருக்கும் குழந்தைகள் எதிர்கால சேர்க்கையை உறுதி செய்யும் விதத்தில் பிரி-கே.ஜி. வகுப்புகளில் சேர்க்கப்படுகின்றனர். ஆக தனியார் பள்ளிகளில் சேர்க்கைகள் 3 வயதிலேயே நிறைவடைகிறது.

எனவே, அங்கு விஜயதசமி சேர்க்கைக்கு ஆர்வம் காட்டப்படுகிறது. அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர். தற்போது 31.7. என தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பதை 31.12. என மாற்றி நிர்ணயிக்கலாம். அதாவது 31.12-இல் 5 வயதை பூர்த்தியடைந்த மாணவர்களை விஜயதசமி சேர்க்கைகளில் அனுமதிக்கலாம். அக்டோபர் முதல் ஏப்ரல் வரை 6 மாதங்களில் இரு பருவப் பாடங்களைப் பயிலும் முதல் வகுப்பு மாணவர் தனது இரண்டாம் வகுப்பில் தொடர் படிப்பில் புரிந்துக் கொள்வது இயல்பானதுதான் என ஆசிரியர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். 31.12-இல் 5 வயது பூர்த்தியடையும் மாணவர்கள் 10 வகுப்பு செல்லும்போது, பதினான்கரை வயதை ஜூன் மாதத்தில் நெருங்குவர். 14.5 என்பது 15 என நிர்ணயிக்கப்படுகையில், அவர்களை 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதிக்கலாம் எனவும் ஆலோசனை கூறுகின்றனர்.

மருத்துவ உலகில் 6 மாத வளர்ச்சி ஒரு வருட வளர்ச்சிக்கு சமமாகத்தான் கருதப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதை தமிழக அரசின் கல்வித் துறையினர் பரிசீலனை செய்யலாம் என கல்வியாளர்கள் கருதுகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவச் சேர்க்கை மிகவும் குறைந்து வரும் நிலையில் அதை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு அரசும் விதிகளை தளர்த்தி சேர்க்கைக்கு உதவ வேண்டும். செப்டம்பர் இறுதியில் சேர்க்கைகள் முடிவு எனும் நிலையில் விஜயதசமி சேர்க்கைக்கு பிரத்யேகமாக அனுமதியை தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி அலுவலர்கள் வழங்கலாம். எனவே இந்த ஆண்டு விஜயதசமி சேர்க்கைக்கு வயது வரம்பை 31.12. என தளர்த்தி உத்தரவிட்டு தலைமை ஆசிரியர்களுக்கு பிரத்யேக அனுமதி உத்தரவை வழங்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tuesday, October 16, 2018

17-10-18 MORNING PRAYER

17-10-18
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:67

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

உரை:
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

பழமொழி :

Coming events cast their shadow before

ஆணை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே

பொன்மொழி:

வாழ்க்கை என்பது ஊஞ்சலில் உட்கார்ந்து ஊசலாடுவது அல்ல; புயலுக்கு நடுவே படகைச் செலுத்துவது போன்றது.

- காண்டேகர்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.சீனாவின் அன்றைய பெயர் என்ன?
கத்தே

2.முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்?
பெனாசீர் புட்டோ

நீதிக்கதை

நண்டு, கொக்கைக் கொன்ற கதை
ஒரு குளக்கரை.

கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.

துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்” என்று. “நமக்கேன்” என்று இராமல் அதன்முன் வந்தது. “என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்?” என்றது.

“நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை” என்றது கொக்கு.

“மனசு சரி இல்லையா… ஏன்?’ என்றது மீன்.

“அதைஏன் கேட்கிறாய்…” என்று பிகு பண்ணியது கொக்கு.
“பரவாயில்லை சொல்லுங்களேன்”
“சொன்னால் உனக்குத் திக் என்றாகும்.”
மீனுக்குப் பரபரத்தது.
“சொன்னால்தானே தெரியும்”
“வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்…” என்று இழுத்தது கொக்கு.
“வரட்டுமே”

“என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்.”
“அய்யய்யோ!”

உடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது.
சில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின.
அதுமட்டுமா! ஒட்டுமொத்தமாக “நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்” என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன.

“நான் என்ன செய்வேன்? என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்” என்றது கொக்கு மிகவும் இறக்கம் கசிய.
மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.

“அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்” என்றன ஒருமித்தக் குரலில்.
கொக்குக்கும் கசக்குமா காரியம்?
நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது.
குளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.

“ஓ சீவகாகுண்யனே! என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்” என்று கெஞ்சியது.

வருங்காலத்தில் எதுவும் வழிய வரும் – என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.

பறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு.
அதற்க்கு “பக்”கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் “சட்”டென்று புரிந்துவிட்டது. தன் நிலையம் அப்படித்தானா?
உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது.

“கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்” என்றது நண்டு.

“அப்படியா? இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”
“எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன.”

“ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்” என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது.
குளத்துக்கு நேராக வரும்போது
அதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.
அபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன.

வஞ்சமனத்தானின் உபாய மும் அபயாமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.

இன்றைய செய்தி துளிகள்:

1.அரசு வேலையில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3%ஆக உயர்வு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

2.சென்னை உள்ளிட்ட 3
மாவட்டங்களில் நேற்று மாலை முதல் குடிநீர் கேன் உற்பத்தி நிறுத்தம்

3.ஆன்லைனில் பட்டாசு விற்க தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

4.நான்காவது காலாண்டில் அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8 சதவீதம் ஆக உயர்வு

5.டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் 'கிங்'கோஹ்லி

Monday, October 15, 2018

ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் நடத்தப்படும்


இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ("டெட்') எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "டெட்' தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு அடுத்த 15 நாள்களில் அனுமதிக்கப்பட்டு, அதன் பிறகு ஒரு வாரத்தில் தேர்வு நடத்தப்பட்டு விடும் என்றார் அவர்.

ஒன்பது வகை தகவல்களுடன், 'ஸ்மார்ட்' அட்டை


அரசு பள்ளி மாணவர்களுக்கு, ரத்தப்பிரிவு உட்பட, ஒன்பது வகையான தகவல்களுடன், 12 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட்' அடையாள அட்டைகள் வழங்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாணவர்களின் தகவல்களை, கியூ.ஆர்., கோடு வழியாக அறிந்து கொள்ளலாம்.

பள்ளி கல்வி துறையில், டிஜிட்டல் முறையில், நிர்வாக பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், புதிய திட்டமாக, மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' அடையாள அட்டைகள் வழங்குவது நிறைவேற்றப்பட உள்ளன. துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், ஸ்மார்ட் கார்டுக்கான செயல்முறை அறிக்கையை, பள்ளி கல்வி செயலகத்தில் தாக்கல் செய்தார்.

இதற்கான செலவை, நிதித்துறையின் ஒப்புதல் பெற்று, பள்ளி கல்வி செயலர் பிரதீப் யாதவ், நேற்று அரசாணையாக பிறப்பித்தார். இதன்படி, 12.70 கோடி ரூபாய் செலவில், மாணவர்களுக்கு, ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட உள்ளன. அட்டை தயாரிப்பு பணிகளை, தமிழ்நாடு பாடநுால் கழகம் மற்றும் கல்வி சேவைகள் கழகம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அட்டைகளில், மாணவ - மாணவியரின் பெயர், அடையாள தகவல், பிறந்த தேதி,
தந்தை பெயர், முழு முகவரி, படிக்கும் பள்ளியின் பெயர், ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும் ஆண்டு, மாணவரின் புகைப்படம், மாணவரின் ரத்த வகை பிரிவு என, ஒன்பது தகவல்கள் இடம் பெறுகின்றன. இந்த தகவல்களை, பார் கோடு மற்றும், கியூ.ஆர்.,கோடு வழியாக, கல்வி அதிகாரிகள் தெரிந்து கொள்ளலாம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் தகவல்கள் அனைத்தும், பள்ளிகள் வழியாக சேகரிக்கப்பட்டுள்ளன. இவை, கல்வி தகவல் மேலாண்மை அமைப்பின் வழியாக, டிஜிட்டல் வழியில் தொகுக்கப்பட்டு, அட்டைகள் வழங்க தயார் நிலை உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிர் காக்க உதவும் : மாணவர்களின் தகவல்களை, ஸ்மார்ட் அட்டையில் உள்ள, க்யூ.ஆர்.,கோடு அல்லது, பார் கோடு வாயிலாக, கல்வி தகவல் மேலாண்மை அமைப்பின் வழியாக பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் இருந்து விலகும் மாணவர், மீண்டும் எந்த பள்ளியில் படிக்கிறார் என்ற, தகவலை இதன் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். பள்ளி படிப்பை மாணவர்கள் இடையில் விட்டு விட்டால், அந்த விபரங்களையும் எளிதில் அறியலாம். ரத்தப்பிரிவு சார்ந்த விவரம், 'ஸ்மார்ட்' அட்டையில் இருப்பதால், மாணவர்களுக்கு எதிர்பாராத விபத்து ஏற்படும் போது, மருத்துவ சிகிச்சைக்கு, ஸ்மார்ட் அட்டையின் தகவல்கள் உதவியாக இருக்கும்.

16-10-18 Morning prayer

16-10-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:66

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

உரை:
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

பழமொழி :

Civility costs nothing

குற்றங்குறைகளால் எதையும் சாதிக்க முடியாது

பொன்மொழி:

நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாகப் பெற்றிருக்க வேண்டும்.

- வில்லியம் பிளேக்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.இந்தியாவின் முதல் பேசும் படம் என்ன?
ஆலம் ஆரா (1931)

2.இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை யார்?
குழந்தை: ஹர்ஷா, வளர்த்தவர்: இந்திரா

நீதிக்கதை

மூன்று மீன்களின் கதை!

அதிக மேடோ, பள்ளமோ இல்லாத இடத்தில் நீர் நிறைந்த ஒரு குட்டை இருந்தது, அந்தக் குட்டையில் அதிகமான மீன்கள் இருந்தன.
அவற்றுள் மூன்று மீன்கள் நட்புடன் இருந்தன.

அந்த மூன்று மீன்களுள் ஒன்று முன்னெச்சரிக்கையுள்ள மீன், இன்னொன்று சமயத்திற்கேற்றபடி நடந்து கொள்ளக் கூடியது. மூன்றாவது புத்தி குறைவானது.

ஒருநாள் மீன்பிடிப்பவர்கள் அந்தக் குளத்திற்கு வந்து பார்த்தனர். அந்தக் குட்டையிலிருந்த மீன்களையெல்லாம் பிடித்து விட வேண்டும் என திட்டமிட்டனர்.
அவர்கள் அந்தக் குட்டையின் நான்கு பகுதிகளிலும் வடிகாலை வெட்டி விட்டனர்.

இதனால் அந்தக் குட்டையிலிருந்த தண்ணீர் வடிந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

குட்டையிலிருந்த நீர் குறைந்து கொண்டே செல்வதைப் பார்த்த முன்னெச்சரிக்கையுள்ள மீன், “குட்டையில் நீர் குறைகின்றது. இது ஆபத்து வரப்போவதைக் காட்டுகிறது. அதற்குள் நாம் எப்படியாவது வேறு ஒரு நீர்நிலைக்குப் போய் விடலாம். முன்கூட்டியே வரவிருக்கும் ஆபத்திலிருந்து தப்பிக்கும் வழியைக் கண்டவன் பின்னர் மகிழ்ச்சியுடன் வாழ்வான்” என்றது.

அந்த மீனின் பேச்சைக் கேட்ட புத்தி மந்தமான மீன், “ஆபத்து வரும் என்று நான் நினைக்கவில்லை. அவசரப்பட்டு, நெடுநாட்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் குட்டையை விட்டு வெளியேற எனக்கு மனமில்லை.” என்றது.

இந்த இரு மீன்களின் பேச்சையும் கேட்ட சமயோசித புத்தியுள்ள மீன், “ஆபத்து வரும் போது அதற்கேற்றபடி ஏதாவது செய்து தப்பித்துக் கொள்ளலாம்” என்றது.

முன்னெச்சரிக்கையுள்ள மீன் வடிகால் மூலம் வெளியேறிக் கொண்டிருந்த நீருடன் போய் வேறொரு நீர் நிலையில் வாழத் தொடங்கியது.

மறுநாள், மீன்பிடிப்பவர்கள் வந்தனர்.
நீர் ஓரளவு வடிந்திருப்பதைப் பார்த்துவிட்டு, குட்டையிலிருந்த மீன்களைப் பிடிக்கத் தொடங்கினர்.
மந்தப் புத்தியுள்ள மீன் மாட்டிக் கொண்டது. பிடிபட்ட மீன்கள் அனைத்தையும் கயிற்றினுள் கோர்த்து அருகே இருந்த சிறு பாறையின் மேல் வைத்தனர்.

இதைப் பார்த்த சமயோசித மீன் தானாகவே பிடிக்கப்பட்ட மீன்கள் கோர்க்கப்பட்டிருந்த கயிற்றைக் கவ்விப் பிடித்துக் கொண்டது.
குட்டையிலிருந்த மீன்களைப் பிடித்த மகிழ்ச்சியில் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

அவர்கள் அடுத்திருந்த நீர்நிலையில் தாங்கள் கயிற்றுள் கோர்த்து வைத்திருந்த மீன்களைக் கழுவுவதற்காக நீரில் முக்கி எடுத்தனர்.
அப்போது கயிற்றைக் கவ்விக் கொண்டு தொங்கிய சமயோசித புத்தியுள்ள மீன் அவர்களுக்குத் தெரியாமலேயே தண்ணீருக்குள் போய் தப்பியது.
மந்தப் புத்தியுடைய மீனின் நிலைமை அவ்வளவுதான். முன்னெச்சரிக்கையும், சமயோசிதமாக நடக்கும் புத்தியுள்ள மீன்கள் தப்பின.

வாழ்க்கையில் முன்னெச்சரிக்கையும், சமயோசித புத்தியுமுடையவர்கள் சுக வாழ்வடைவார்கள்.

இன்றைய செய்தி துளிகள்:

1.6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன்

2.அரசு பள்ளி மாணவர்களுக்கு நவீன அடையாள அட்டை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு!

3.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி விரைவில் அடிக்கல்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

4.தாம்பரம் - நெல்லை இடையே 'சுவிதா'சிறப்பு ரயில் வரும் 17ம் தேதி இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

5.இளையோர் ஒலிம்பிக் போட்டி பெண்கள் ஹாக்கியில் இந்தியா வெள்ளி பதக்கம்

Sunday, October 14, 2018

15-10-18 morning prayer

15-10-18
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:65

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

உரை:
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

பழமொழி :

Charity begins at home

தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்

பொன்மொழி:

உலகில் எப்படி வாழ்வது என்பதையாவது தெரிந்து கொள்ளும் அளவுக்கு உன்னை நீயே அறிந்து கொள்; அதுவே வாழ்க்கையில் நீ அடையத்தக்க பெரும் பேறு.

- ஜேம்ஸ் டக்ஸில்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?
தென் ஆப்பிரிக்கா

2.தென் ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
சென்னை

நீதிக்கதை

அதிசயக்குதிரை

கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.

அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது.

ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது.
குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு
கொழுத்தான். ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர்.

அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.

அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து “உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை” என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ “என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை.” என்றான்.

“குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்” என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.
குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.
அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.

அதற்குத் தெனாலிராமன் “இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப்
படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் ” என்றான்.

இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.

இன்றைய செய்தி துளிகள்:

1.் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகம் 672 பள்ளிகளில் அமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

2.கற்றல் குறைபாடுடைய மாணவர்களைக் கட்டாயப்படுத்தி பள்ளியில் இருந்து வெளியேற்றக் கூடாது எனத் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது

3.கர்நாடகாவில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: இதுவரை 456 பேர் பாதிப்பு

4.நதிநீர் பிரச்சனையை தீர்க்க புதிய சட்டம்.. முதலமைச்சர்கள் அடங்கிய குழுக்களை அமைக்க மத்திய அரசு திட்டம்

5.மேற்கிந்திய தீவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி

Saturday, October 13, 2018

ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் மாற்றம்: புதிய பாடத்திட்ட அடிப்படையில் நடத்த முடிவு


ஆசிரியர் தகுதித் தேர்வின் ("டெட்') பாடத்திட்டம் மாற்றப்பட்டு, நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வை நடத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு "டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு அமலாகி உள்ளது.

தேசிய கல்வியியல் ஆராய்ச்சிக் கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில் இந்தத் தேர்வு கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. பள்ளி கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நிகழ் கல்வியாண்டில், அக்டோபர், 6, 7-ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தேர்வு பணிகள் முடங்கின. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

இந்தத் தேர்வை, தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த பழைய பாடத்திட்டப்படி நடத்தாமல், தற்போது அறிமுகமாகியுள்ள புதிய பாடத்திட்டப்படி நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், மாறிவரும் சூழலுக்கேற்ப தேர்வு முறையிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. தற்போதைய சூழலில் பழைய பாடத்திட்டப்படி ஆசிரியர்களைத் தேர்வு செய்தால் பெற்றோர் கல்வி மீது கொண்டுள்ள எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது கடினம். புதிய பாடத்திட்டத்தின்படி ஆசிரியர்களைத் தேர்வு செய்தால்தான் பணிக்கு வருவோர் சிறப்பாக பாடம் நடத்த முடியும் என்றனர்.

இதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, தமிழக அரசின் புதிய பாடத்திட்டப்படி, கேள்விகளைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித் துறை இயக்குநர் தலைமையிலான குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.