இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, September 04, 2018

ஆசிரியர் தினம்

கண்டு வியந்திருக்கிறேன். கேமராவுக்குள் சிக்காத அபூர்வமான ஆசிரியர்கள் பலர் எங்கெங்கோ மூலைமுடுக்குகளில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளுமைப்பண்பு களத்தில் உருவாவதைப் போல பயிற்சியில் உருவாவதில்லை. மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு நிகரானவர் யார்? ஒருவரும் இல்லை.

#ச.தமிழ்ச்செல்வன்

சுந்தர ராமசாமி தன்னுடைய குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலில் "சரஸ்வதி கடாட்சம் பெறாத குழந்தை என்று உலகில் எந்த குழந்தையும் இல்லை. நமக்கு படிப்பு வராது என்று சில குழந்தைகள் அவநம்பிக்கை கொள்ளச் செய்வதை வேறருப்பவர் ஆசிரியர். கல்வி முறையில் கோளாறு இருக்கும் போது ஆசிரியரை மட்டும் குற்றவாளியாக்கி பேசுவதில் நியாயம் இல்லை.மேலும் சோவியத் கதை ஒன்றை குறிப்பிடுகிறார்.

" தினமும் கதறி அழுதபடி அம்மாவைப் பிரிந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தை., மௌனத்தில் அமிழ்கிறது. நாட்கள் செல்லச் செல்ல வகுப்பில் ஆசிரியை மெல்லமெல்ல உரையாடி வீட்டில் அம்மாவிடம் பேசுவதைப் போலவே தன்னிடம் பேச வைக்கிறார். அக்குழந்தை தனக்கு இரண்டு அம்மாக்கள் கிடைத்துவிட்டார்கள் எனச் சொல்லி முடிகிறது கதை.

தான் பத்தாம் வகுப்பு படித்தபோது தன் அறிவியல் ஆசிரியர் சபரிமலைக்கு மாலை இட்டுச் செல்வதும் மகரஜோதியை நம்புவதும் முரண் அல்லவா? என்று அறிவியல் ஆசிரியர்களை சாடுகிறார்

#ஆயிஷா இரா.நடராசன்

வகுப்பறைச் சூழலை சிலாகித்து பதிவு செய்துள்ளார். ஒரு அறிவியல் ஆசிரியரின் பணி பாடங்களை வெறுமனே நடத்துவது அல்ல., மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விடை தேடும் மனம் ஒன்றை மாணவர்க்கு விதைத்தலே  என அவர் தன் ஆசிரியரை நினைவு கூறுகிறார். மேலும் "கற்றலுக்கான சூழலை வகுப்பில் உருவாக்கு.. ஒருபோதும் கற்பிக்காதே.. குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க முடியாது. அவர்களை தானே கற்க அனுமதிக்க வேண்டும். அதுவே ஒரு ஆசிரியரின் பணி என்கிறார்

#எஸ்.ராமகிருஷ்ணன்

ஒரு ஆசிரியரை ஏன் நமக்குப் பிடிக்கிறது? ஏன் வெறுக்கிறோம்? வெறும் பாடம் சொல்லித் தரும் விஷயத்தால் ஏற்படுவதில்லை.
மாணவர்களின் அறிவுத்திறனை தனித்துவத்தை மேம்படுத்துவார்கள். இனியவர்களாக இருந்தார்கள். "பொறுமைதான்" ஆசிரியர்களுக்கான அடிப்படை பண்பு. மாணவன் எவ்வளவு முறை கேட்டாலும், புரிந்துகொள்ளாமல் போனாலும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலும் ஆசிரியர் பொறுமையாய் அணுக வேண்டும்.

அடுத்த பண்பு அக்கறை. மாணவன் எப்படி படித்தால் எனக்கு என்ன? என இருக்காமல் அவனது கற்கும் திறனை மேம்படுத்த வேண்டும். வகுப்பறை என்பது ஒரு வழி சாலை அல்ல இரு வழிச்சாலை. மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். ஆசிரியர்களும் புதியன கற்றுக்கொள்கிறார்கள். ஆசிரியர்கள் தொடர்ந்து வாசித்து தனது அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
கலீல் ஜிப்ரான் சொல்லுவார் "உங்கள் பிள்ளைகளை படித்த ஆசிரியரிடம் அனுப்பாமல், படிக்கின்ற ஆசிரியரிடம் அனுப்புங்கள்" என்று.
மாணவரை ஒரு சமூக மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு. மாணவர்களின் கனவுகளை ஆசிரியர்களை உருவாக்குகிறார்கள். அதற்கு தூண்டுகோலாகவும் இருக்கிறார்கள்."கற்றுக்கொள், கற்றுக்கொடு,கற்றதைச் செயல்படுத்து.!

#இவர்கள் தவிர த.வி வெங்கடேஷ், இறையன்பு,பவா செல்லதுரை, கீரனூர் ஜாகிர்ராஜா,
துளசிதாசன் போன்றோரும் தம் பள்ளிப்பருவம் மற்றும் ஆசிரியர்களை பதிவுசெய்திருக்கிறார்கள்.

#உலகில் புனிதமான தொழில் இரண்டு1 மருத்துவர்,
2.ஆசிரியர்.ஒருவர் மனிதனை பிணமாகாமலும்,மற்றவர் நடைபிணமாகாமல் பார்த்துகொள்வார்
-வெ.இறையன்பு

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

அக்டோபரில் இனி தேர்வு கிடையாது


பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அக்டோபரில் தேர்வு நடத்தப்படாது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார். தலைமை செயலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, வழக்கமாக, செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்படும்.

அடுத்த ஆண்டு முதல், இந்த தேர்வுகள் ஜூலையில் நடத்தப்படும். தேர்ச்சி பெறாத மாணவர்கள், ஜூலையில் தேர்வு எழுதி, அதே ஆண்டில் கல்லுாரியில் சேரலாம். அரசு பள்ளிகளை தத்தெடுக்க அனுமதி கோரி, ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன. இதற்காக, வட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் தொடர்பு எண்கள், சில தினங்களில் வெளியிடப்படும். அதன் பின், பள்ளியை தத்தெடுக்க விரும்புவோர், நேரடியாக அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

பள்ளிகளை தத்தெடுக்கும் பணிக்கு, 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படும். பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருதி உருவாக்கப்பட்ட, 14417 என்ற எண்ணுக்கு, இதுவரை, 300 புகார்கள் வந்து உள்ளன. அவற்றின் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

MORNING PRAYER 5-9-18

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.09.18
செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம்

திருக்குறள்

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

விளக்கம்:

எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.

பழமொழி

Experience is the best teacher

அனுபவமே சிறந்த ஆசான்

இரண்டொழுக்க பண்பாடு

1. பாட்டிலில் அடைத்த மற்றும்  பாலித்தீன் பைகளில் உள்ள பொருட்களை முற்றிலும் தவிர்த்திடுவேன்.

2.இயற்கையில் கிடைக்கக் கூடிய ஆரோக்கியம் நிறைந்த உணவுகளைத் தேர்வு செய்து உண்பேன்.

பொன்மொழி

ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கைப் படிப்படியாக அடைதலே வெற்றி.

         - நைட்டிங்கேல்

பொது அறிவு

1.டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
எப்பொழுது பிறந்தார்?
 
05.09.1888

2. எந்த ஆண்டு முதல்  செப்டம்பர் 5
தினமாக  கொண்டாடப்படுகிறது?

1962

English words and. Meanings

Xyst.       உடற்பயிற்சி கூடம்
Xylophone மர-இசைக்கருவி
Xray.          எக்ஸ் கதிர்
Xebec.     3-பாய்மரக்கப்பல்

தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்

வல்லாரை

1. வல்லாரை கீரையானது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

2.சுறுசுறுப்பு மற்றும்  சிந்தனைத் திறனை தூண்டக் கூடியது.


நீதிக்கதை

அது ஒரு அழகிய கிராமம். அக்கிராமத்தில் ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த ஆலமரத்தில் இரு காகங்கள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன.

அந்த ஆலமரத்தின் கீழ் பகுதியில் பெரிய பொந்து ஒன்று இருந்தது. அந்தப் பொந்தை ஒரு கரும்பாம்பு உறைவிடமாகக் கொண்டிருந்தது.

பெண் காகம் தனது கூட்டில் முட்டைகள் இட்டுக் குஞ்சுகள் பொறிக்கும்.

ஆண் காகமும், பெண் காகமும் இரைதேடச் செல்லும் நேரம் பார்த்து பொந்தில் இருக்கும் அந்த பாம்பு மரத்தின் மீது ஏறி காக முட்டைகளை தின்றுவிட்டு இறங்கி விடும்.

திரும்பி வந்து பார்க்கும் போது முட்டைகள் காணாமல் போய் விட்டது கண்டு காகங்கள் மிகவும் மன வேதனை அடையும்.

ஒவ்வொரு தடவையும் பெண் காகம் குஞ்சு பொரிப்பதும், அவற்றை கருநாகம் உண்பதும் வழக்கமான நிகழ்ச்சியாகி விட்டன.

ஒரு நாள் அந்த பாம்பு முட்டைகளை சாப்பிட போகும் நேரத்தில் கூட்டிற்கு வந்த பெண்காகம் பார்த்துவிட்டது. காகத்தை பார்த்த பாம்பு முட்டைகளை சாபிடாமல் சென்று விட்டது.

குஞ்சுகள் காணாமல் போவதற்கு மரத்தடிப் பொந்தில் வாழும் கருநாகந்தான் காரணம் என்பதைக் காகங்கள் கண்டு கொண்டன.

ஆனால் காகங்களால் கருநாகத்தை என்ன செய்ய முடியும்? தலைவிதியே எனச் சில காலத்தை ஓட்டின.

திரும்பத் திரும்ப தன் குஞ்சுகளை இழக்கும் அவலத்தைப் பெண் காகத்தால் சகித்துக் கொள்ள இயலவில்லை.

ஒருநாள் பெண் காகம் ஆண் காகத்தை பார்த்து, "நமது குஞ்சுகளையெல்லாம் ஒவ்வொரு தடவையும் கருநாகம் தின்று விடுகின்றதே! இனியும் இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த மரத்தை விட்டு விட்டு வேறு ஒரு பாதுகாப்பு நிறைந்த மரத்திற்குக் குடி போய் நிம்மதியாக வாழ்க்கை நடத்துவோம்" என்று கண்ணீருடன் கதறியது.

பெண் காகம் கூறியதைக் கேட்டு மன வேதனையுற்ற ஆண் காகம் தன் மனைவியை நோக்கி "உன் மனக்குமறல் எனக்கு புறிகிறது! சில விஷயங்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கின்றது. நீண்ட காலமாக வசித்து வரும் இந்த இடத்தைவிட்டு வேறு இடத்திற்குச் செல்ல என் மனம் கேட்கவில்லை. ஆனால் அதற்காகக் கரும்பாம்பின் அட்டூழியத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் கூற மாட்டேன். ஏதாவது ஒரு உபாயம் செய்து இந்த பாம்பைக் கொன்றாக வேண்டும்" என்று ஆண் காகம் கூரியது.

"இந்தக்கொடிய விஷ கருநாகத்தை நம்மால் கொல்ல முடியுமா?" என்று சந்தேகத்தோடு பெண்காகம் கேட்டது.

"கருநாகத்தைக் கொல்லும் அளவுக்கு வலிமையோ வல்லமையோ எனக்கு இல்லை என்பது உண்மைதான். ஆனால் நல்ல அறிவாற்றல் மிக்க நல்ல நண்பர்கள் பலர் எனக்கு இருக்கிறார்கள். அவர்களிடம் யோசனை கலந்து இந்தக் கருநாகத்தை நிச்சயமாக என்னால் ஒழித்துக் கட்ட முடியும்" என்று ஆவேசத்துடன் கூறியது ஆண் காகம்.

பிறகு பெண் காகத்தை பார்த்து, "பாம்பைக் கொல்ல உடனடியாக நடவடிக்கை மேற் கொண்டாக வேண்டும். நீ பத்திரமாக இரு. நான் நண்பன் ஒருவனைச் சென்று பார்த்துவிட்டு விரைவில் திரும்பி வருகிறேன்" என்று கூறிவிட்டு புறப்பட்டது.

சிறிது தொலைவில் வசித்து வந்த ஒரு நரி காகத்தின் நெருக்கமான நண்பன். நல்ல அறிவாற்றலும் தந்திர சுபாவமும் படைத்த அந்த நரியைத் தேடிக்கொண்டு காகம் அங்கு போய்ச் சேர்ந்தது.

நரி தன் நண்பன் காகத்தை மகிழ்சியுடன் வரவேற்றது.

"நண்பனே, நான் வாழும் மரத்தடியில் வசிக்கும் கருநாகம் செய்யும் அட்டூழியத்தை எல்லாம் மன வேதனையுடன் நரியிடம் எடுத்துக் கூறி, அதை கொல்வதற்கு நீதான் எனக்கு ஏதாவது ஒரு உதவி கூற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது.

நரியும் நல்ல உபாயம் ஒன்றைக் காகத்திற்குக் கூறி, "நண்பனே, இந்த யோசனையைச் செயற்படுத்து, கருநாகத்தின் ஆயுள் முடிந்துவிடும்" என்று சொல்லியது.

காகம் நண்பன் நரியிடம் விடைபெற்றுக் கொண்டு உடனே அதன் யோசனையைச் செயற்படுத்தும் முயற்சியினைத் தொடங்கியது.

அந்த நாட்டின் அரசி வழக்கமாக நீராடும் குளக்கரைக்குச் சென்று காகம் ஒரு மரத்தில் மறைவாக அமர்ந்து அரசியின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

சற்று நேரத்திற்கெல்லாம் அரசி தனது தோழிகளுடன் குளத்திற்கு வந்து சேர்ந்தாள்.

தன்னுடைய விலை உயர்ந்த ஆபரணங்களையெல்லாம் கழற்றிக் கூரைமீது வைத்துவிட்டு அரசி நீராடுவதற்காக குளத்தில் இறங்கினாள்.

காகம் உடனே பறந்து வந்து மிகவும் மதிப்புமிக்க முத்துமாலை ஒன்றைத் தனது அலகால் கொத்தி எடுத்துக் கொண்டு பறந்தோடியது. அந்த எதிர்பாராத நிகழ்ச்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அரசியும் தோழிகளும் கூக்குரலிட்டனர்.

உடனே சில தோழிகள் சென்று காவலர்களிடம் நடந்த நிகழ்ச்சியைக் கூறினார்கள்.

காவலர்கள் பறந்து செல்லும் காகத்தைத் துரத்திக் கொண்டு கூச்சலிட்டவாறு பின் தொடர்ந்து சென்றார்கள்.

காகம் பறந்தவாறு நேராகத் தான் குடியிருக்கும் ஆலமரத்திற்குச் சென்றது.

அதற்குள் காவலர்கள் அந்த மரத்தருகே வந்து சேர்ந்தார்கள்.

காகம் தனது அலகில் கொத்திப் பிடித்திருந்த அரசியின் அணிகலனை காவலர்கள் கண் பார்வையில் படும் விதமாக கருநாகத்தின் பொந்துக்குள் போட்டு விட்டது.

காவலர்கள் கரும் பாம்புப் புற்றை இடித்து நகையைத் தேடினார்கள்.

புற்றுக்குள் இருந்த கருநாகம் சீறிக்கொண்டு வெளியே வந்தது.

காவலர்கள் அந்தக் கருநாகத்தைக் தடியால் அடித்துக் கொன்றனர்.

பிறகு புற்றை நன்றாக இடித்துப் பெயர்த்து அரசியின் அணிகலனைத் தேடி எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.

அதன் பிறகு அந்தக் காகக் குடும்பம் நிம்மதியாகவும், மகிழ்ச்சியுடனும் வாழ்க்கை நடத்த தொடங்கியது.

இன்றைய செய்திகள்

05.09.18

* வெள்ள நிவாரணப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அதிகாரிகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

* ஒரு மாணவன் - ஒரு மரம் என்ற புதிய திட்டத்தின் மூலம் பசுமைப் புரட்சியை கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆரம்பித்துள்ளது.

*   கார்பன் டை ஆக்சைடு மூலம் ஏற்படும் விளைவுகளை பயனுள்ள வகையில் மாற்றுவதற்கான உத்திகளை வகுக்க ஒரு போட்டியை நாசா நடத்தவுள்ளது.

* உலக துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் அஞ்சும் மெளட்கில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

Monday, September 03, 2018

கற்றல் குறைபாடு மாணவர்களுக்காக 32 மாவட்டங்களில் வழிகாட்டு மையம்


கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்காக, மாநிலம் முழுவதும், 32 மாவட்டங்களில், வழிகாட்டு மையங்கள் அமைக்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 'டிஸ்லெக்சியா' என்ற, கற்றல் குறைபாடு உடைய மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சி தருவதற்கு, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களில், 30 பேர், சிறப்பு குழந்தைகள் மற்றும் கற்றல் குறைபாடு மாணவர்களுக்கான, பயிற்சி அளிக்க உள்ளனர்.இதற்கான வழிகாட்டு மையங்கள், 32 மாவட்டங்களில் அமைக்கப்படுகின்றன. முதல் கட்டமாக, சென்னையில், மாநில மகளிர் மேல்நிலை பள்ளியில், வழிகாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.அங்கு, ஆசிரியர்களுக்கான, டிஸ்லெக்சியா சிறப்பு பயிற்சி கருத்தரங்கம், பள்ளி கல்வித்துறை சார்பில், நேற்று துவங்கியது.பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ், பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி ஆகியோர் பங்கேற்றனர்.

ஆசிரியர்களுக்கான இப்பயிற்சியை, 'மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷன்' என்ற, தனியார் தொண்டு நிறுவனம் அளிக்க உள்ளது. அதன் தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:டிஸ்லெக்சியா மாணவர்களை, முன்கூட்டியே கண்டறிந்தால், அவர்களை எளிதாக, பயிற்சியின் வாயிலாக, இயல்பு நிலைக்கு மாற்ற முடியும். இதற்கான சிறப்பு வகுப்புகள் மற்றும் கற்றல் முறைகளை, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அளிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Morning prayer 4-9-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
4-9-18

*திருக்குறள்:43*

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

உரை:
தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

பழமொழி :*

Be friendly but not familiar

அனைவருக்கும் நண்பனாக இரு. ஆனால் நெருங்கி பழகாதே

பொன்மொழி:*

மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.
- சாணக்கியர்.

இரண்டொழுக்க பண்பாடு :*

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

*பொது அறிவு :*

1.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?

கன்னியாகுமரி

2.காந்திகிராமிய பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் யார்?

டாக்டர்.ராமச்சந்திரன்

*நீதிக்கதை :*

எறும்பும் வெட்டுக்கிளியும்

(Ant and Grasshopper - Aesop Moral Story)

மதிய வெயில் நேரத்தில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து பாட்டுப்பாடி ஆடிக்கொண்டிருந்தது.

அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு அதே பாதையில் தன் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் “இப்போது என்ன அவசரம். சிறிது நேரம் என்னைப்போல நீயும் என்னுடன் விளையாடலாமே” என்றது.

அதற்கு எறும்பு “இன்னும் சில நாட்களில் வெயில் காலம் முடிந்து, மழைகாலம் தொடங்கபோகிறது. மழைக்காலத்தில் எவரும் வெளியே செல்லமுடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்கிறேன்” என்றது.

வெட்டுக்கிளி எறும்பிடம் “மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது, நான் விளையாட செல்கிறேன்” என்று சிரித்துகொண்டே நடனமாடி சென்றது.

நாட்கள் கடந்தன. மழைக்காலமும் வந்தது.

தான் சேகரித்த உணவை உண்டு தன் வீட்டிலே எறும்பு இருந்தது. ஆனால் அந்த வெட்டுக்கிளிக்கோ உணவு ஏதும் கிடைக்காமல் உணவு தேடி மழையில் சுற்றித்திரிந்தது.

அப்போது வெட்டுக்கிளிக்கு “எறும்பு உணவு சேகரித்து வைத்து இருக்கும் அதனிடம் கேட்டுபார்க்கலாம்” என்ற எண்ணம் வந்தது.

வெட்டுக்கிளி எறும்பின் வீட்டிற்க்கு வந்து எறும்பிடம் “எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா?” என்று கேட்டது.

தன்னிடமிருந்த சேகரித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளையிடம் கொடுத்த எறும்பு. “அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நாம் இருவருக்கும் உதவியது. இனி நீ எப்போதும் சோம்பலில்லாமல். வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்துக்கொள்” என்றது.

கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு பிரகாசிக்கும் என்று வெட்டுக்கிளி உணர்ந்தது.

நீதி: கடின உழைப்பு உடனடியாகப் பலன் தராவிட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பலன் தரும்.

# செய்தி

1.தமிழக விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகும் வகையில் ஒருங்கிணைத்த பண்ணையத்தை மேம்படுத்த தமிழக அரசு திட்டம்

2.தமிழகத்தில் 77% முதுநிலை பொறியியல் படிப்பு இடங்கள் காலி: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

3.கல்வி கடன் மானியம் பெற விண்ணப்பிற்க கடைசி நாள் - 28.09.2018 : மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை

4.கேரளாவில் கடும் மழைப் பொழிவு குறித்து ஆகஸ்ட் மாதமே எச்சரிக்கை விடப்பட்டது: மத்திய புவி அறிவியல் துறை அதிகாரி

5.உலக சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி : மானாமதுரையை சேர்ந்த மாணவர்கள் தேர்வு

Sunday, September 02, 2018

வாசிக்க திணறும் மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்க திணறும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசின், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய கற்றல் அடைவு தேர்வு, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

இதில், அரசு பள்ளிகளில் படிக்கும், மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாணவர்களுக்கு, கொள்குறி வகை என்ற, 'அப்ஜெக்டிவ்' முறையில், வினாத்தாள் வழங்கப்படுகிறது. இதில், மாணவர்களின் எழுத்து திறன், வாசித்தல், கவனித்தல் உள்ளிட்ட திறன்கள் சோதிக்கப்படு கின்றன. 2017 - 18ம் கல்வி ஆண்டில், கற்றல் அடைவு திறன் தேர்வில், பெரும்பாலான மாணவர்களுக்கு, வாசித்தல் பழக்கம் குறைவாக இருப்பது தெரியவந்தது.

எனவே, இந்த மாதம் முதல், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு வாசிப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், போட்டிகள் நடத்தி, மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுறுத்தல்களின்படி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிப்போரை, நன்றாக வாசிப்பவர்கள், நிறுத்தி வாசிப்பவர்கள், வாசிக்க திணறுபவர்கள் என, தரம் பிரித்து, இந்த மாதம் முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

MORNING PRAYER 3-9-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:42

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

உரை:
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

பழமொழி :

Be first at a feast and the last to slander

பந்திக்கு முந்து, படைக்கு பிந்து

பொன்மொழி:

இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம்.
ஏனெனில் உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது.

- ஸ்ரீசாரதாதேவி.

இரண்டொழுக்க பண்பாடு :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

பொது அறிவு :

1.அக்டோபர் முதல் வாரத்தை அரசு ______________ வாரமாக கொண்டாடி வருகிறது?
வனவிலங்கு

2.சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார்?
ஆர்.கே. சண்முகம் செட்டியார்

நீதிக்கதை :

கருநாக பாம்பும், காகமும்
(The Crow and the Snake - Short Story)

#செய்திகள்

1)10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

2)வெப்பச்சலனம்: தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

3)மேட்டூர் அணையில் நீர் திறப்பு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

4)தமிழகம் முழுவதும் சனிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 5 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

5)2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்தியா 69 பதக்கங்களை குவித்துள்ளது