இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, August 18, 2018

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வு தொடர்பான கற்பித்தல் பயிற்சி, சென்னையில், நாளை துவங்குகிறது. இலவச பயிற்சி : பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, தனியார் பள்ளி மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் சிறப்பு பயிற்சி பெற்று விடுகின்றனர்.

ஆனால், அரசு பள்ளி மாணவர்களால், லட்சக்கணக்கில் பணம் செலுத்தி, தனியாரிடம் பயிற்சி பெற முடியாது.எனவே, அரசு பள்ளி மாணவர்களும், பிளஸ் 2 முடித்த பின், மருத்துவ கல்வியில் சேர்வதற்கு, இலவச பயிற்சி அளிக்கும் திட்டம், 2017ல் துவக்கப்பட்டது.இந்த ஆண்டு, அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், முன்னதாகவே, நீட் பயிற்சியை துவங்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. மண்டல வாரியாக மையம் ;

முதற்கட்டமாக, ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் உள்ள, சைதன்யா உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்கள் வழியாக, தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, நீட் தேர்வு கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த பயிற்சியை, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், சென்னை, சத்யபாமா பல்கலையில், நாளை துவங்கி வைக்கிறார்.முதற்கட்டமாக, 20 மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி தரப்பட உள்ளது.பயிற்சி பெறும் ஆசிரியர்கள், தங்கள் மாவட்டங்களுக்கு சென்று, மண்டல வாரியாக அமைக்கப்படும், நீட் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்

Thursday, August 16, 2018

ப்ளஸ் டூ மாணவர்களுக்கு 12 புதிய பாடத்திட்டங்கள்! - செங்கோட்டையன் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு 12 வகையான புதிய பாடத்திட்டங்கள் தொடங்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசுப் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளியைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

அப்போது விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், `தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராகக் கொண்டுவரும் அனைத்து முயற்சிகளையும் அரசு செய்து வருகிறது. அடுத்த ஆண்டு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால், ப்ளஸ் டூ மாணவர்களுக்கு லேப்டாப் வழக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஒருமாத காலத்துக்குள் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ மாணவர்களுக்கு லேப்டாப் வழக்கப்படும். அதே போல விலையில்லா மிதிவண்டிகளும் விரைவில் வழங்கப்படும்' என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், `தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு பொறியியல் படிப்புக்கான மோகம் குறைந்து வருகிறது. இதன்காரணமாக ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 12 வகையான புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன. அந்தப் பயிற்சியால் படித்து முடித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்த வாரம் முதல் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்' என்று அவர் தெரிவித்தார்.

தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு

சொல்வனத்தில் எனது கவிதை

*இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாவட்ட போராட்ட ஆயத்த மாநாடு-அழைப்பிதழ் மாதிரி*



பக்ரீத்:தமிழகத்தில் 22-8-18

Tuesday, August 14, 2018

மாதிரி பள்ளி திட்டம் அரசு இன்று துவக்கம்


தமிழகம் முழுவதும், 32 மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தும் திட்டம், இன்று துவக்கி வைக்கப்படுகிறது.தமிழக பள்ளி கல்வித் துறையில், பாடத்திட்ட மாற்றம், பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு, 'ரேங்கிங்' முறை ஒழிப்பு, பல்வேறு வகை பள்ளிகள் இணைப்பு என, பல புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.இந்த வரிசையில், மத்திய அரசு நிதியுதவியுடன், மாவட்டம் தோறும் குறைந்தபட்சம், ஒரு மாதிரி பள்ளி உருவாக்க, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதை அமல்படுத்தும் வகையில், 32 மாவட்டங்களிலும், தலா, ஒரு மாதிரிபள்ளி அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை, பள்ளி கல்வி துறைஅமைச்சர், செங்கோட்டையன், இன்று துவங்கி வைக்கிறார்.சென்னையில், எழும்பூரில் உள்ள, மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியை, மாதிரி பள்ளியாக மாற்ற, அனுமதிக்கப்பட்டுள்ளது

*_G.O. Ms. No. 271 dated 13-08-18. CPS scheme - Rate of Interest for the fi anxial year 2018-2019 with effect from 01-07-18 to 30-09-1 regarding Orders issued._*


பக்ரீத் பண்டிகை 22 புதன்கிழமைக்கு பதிலாக 23 வியாழக்கிழமை மத்திய அரசு அறிவிப்பு

Monday, August 13, 2018

தொலைநிலை படிப்புகளை நடத்த 2 பல்கலைக்கு மட்டும் அங்கீகாரம்


தமிழகத்தில், சென்னை மற்றும் அண்ணா பல்கலைகள் மட்டும், தொலைநிலை கல்வியில், படிப்புகளை நடத்த, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரத்தில், சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புக்கு அனுமதி தரப்படவில்லை.

தொலைநிலை கல்வியில் பல்வேறு மாற்றங்களை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அமல்படுத்தி வருகிறது. பரிசீலனைஇதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் தொலை நிலை கல்விக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட பல்கலைகளின் பட்டியலை, யு.ஜி.சி., வெளியிட்டு உள்ளது. இதன்படி, சென்னை பல்கலை மற்றும் அண்ணா பல்கலைக்கு மட்டும், அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் அங்கீகார விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. அனைத்து பல்கலைகளுக்கும், சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு அனுமதி வழங்கப் படவில்லை.அதேபோல, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,- பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு, தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்றால் மட்டுமே, அனுமதி தரப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலையை பொறுத்த வரை, பி.ஏ., - எம்.ஏ., பொது நிர்வாகம், எம்.ஏ., அரசியல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும், அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு மட்டும், அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.அதிர்ச்சிஅண்ணாமலை பல்கலை, அழகப்பா, பாரதியார், மதுரை காமராஜர், பெரியார், திருவள்ளுவர், பாரதிதாசன், மனோன்மணியம் சுந்தரனார் உட்பட, 10 பல்கலைகளின் பெயர்கள், அங்கீகார பட்டியலில் இல்லை. இதனால், பல்கலை நிர்வாகங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

Sunday, August 12, 2018

அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர் -ஆசிரியர் கூட்டம், ஆகஸ்ட் 15 -ஆம் தேதி முதல்முறையாக நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்ககம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

நிகழ் கல்வியாண்டிலிருந்து ஆண்டுதோறும் அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர் -ஆசிரியர் கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆகஸ்ட் 15, நவம்பர் 14, ஜனவரி 26 ஆகிய தேதிகளில் அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

மாணவர்களின் வருகை, கற்றல் -கற்பித்தல் பணிகள், அடைவுத்திறன் ஆகியவை குறித்தும், பள்ளியின் வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்கள் -பெற்றோரின் தேவைகளை கேட்டறிதல் சார்ந்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் நலச் சங்கத்தின் தலைவர் அருமைநாதன் கூறியதாவது:

அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் பெற்றோர் -ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என விதிமுறை இருந்தாலும்கூட, 95 சதவீத பள்ளிகளில் பெயரளவுக்காகவும், அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவும் மட்டுமே கூட்டங்கள் நடைபெற்றன. அதுபோன்ற தவறுகள் இந்தமுறை நடைபெறக் கூடாது. இந்தக் கூட்டத்தில் அனைத்துக் குழந்தைகளின் பெற்றோரும் கலந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பள்ளி வேலைநாள்களில் இக்கூட்டத்தை நடத்தினால் வேலைக்குச் செல்லும் பெற்றோர் வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதால், விடுமுறை நாள்களில் நடத்தப்பட வேண்டும். மேலும் பெற்றோர் - ஆசிரியர் கழகத்தில் தங்களுக்கு வேண்டிய அல்லது அதிக நன்கொடை கொடுக்கும் நபர்களை இணைப்பதைக் கைவிடுத்து உரிய முறையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்றார் அவர்.

சுதந்திரதின கொண்டாட்டம் குறித்த இயக்குநரின் செயல்முறைகள்

https://drive.google.com/file/d/1OURsxQyV5lyuM-cRDMfkwiv00WKjLC1y/view?usp=drivesdk

Morning prayer 13-8-18

13-8-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

உரை:

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

பழமொழி :

All roads lead to Rome

எல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன

பொன்மொழி:

கஷ்டங்கள், நஷ்டங்கள் அடைந்த பின் மனிதர் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர்.

-பிராங்க்ளின்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.ஜப்பானியர் வணங்கும் பறவை?கொக்கு

2.இசை சம்பந்தப்பட்ட காரின் பெயர்?ஆல்ட்டோ

நீதிக்கதை :

கரடியும் இரண்டு வழிப்போக்கர்களும்

(The Bear and the Two Travelers - Aesop Moral Story for Kids)


ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராமு, மற்றொருவன் சோமு. இருவரும் இணை பிரியாத நண்பர்கள்.

ஒரு நாள் இருவரும் தேன் எடுப்பதற்காக காட்டுக்குப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் ராமு சோமுவிடம், ''நீ எதைபற்றியும் பயப்டாமல் என்னுடன் வா. என்னைப் போன்ற நண்பனைக் காண முடியாது. என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன்'' என்று கூறினான்.

காட்டிலுள்ள பறவைகள், மரங்கள், காட்டு விலங்குகள் போன்றவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து சென்றார்கள்.

அப்போது கரடி ஒன்று உறுமும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் செல்லும் வழியிலேயே, அந்த கரடி திடீரென வந்து கொண்டிருந்தது.

கரடியைக் கண்டதும் இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்தியது. ஓடத் தொடங்கிய சில வினாடிகளில் மரம் ஒன்று இருப்பதை ராமு கண்டான். உடனடியாக அந்த மரத்தில் ராமு ஏறி விட்டான்.

சோமுவுக்கோ மரத்தில் ஏறத் தெரியாது என்று அறிந்திருந்தும் மரத்தில் ஏற முடியாதவனைக் கீழே விட்டு விட்டுத் தன்னை மட்டும் காத்துக்கொள்ள சுய நலத்துடன் ராமு நடந்து கொண்டான்.

சோமுவுக்கு மரம் ஏறத் தெரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். கவலையுடன் எப்படி கரடியிடமிருந்து தப்புவது என்று அவசரமாக யோசித்தான். இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக் கொல்லாது என்று ஒரு யோசனை தோன்ற, பின்னர் நிலத்தில் விழுந்து மூச்சை அடக்கிக் கொண்டு இறந்தவனைபோல் படுத்துக் கொண்டான்.

அப்பொழுது கரடியும் அங்கு வந்து சேர்ந்தது. படுத்திருந்தவனை உண்பதற்காக அருகில் வந்த கரடி கீழே விழுந்து கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து பார்த்தது.

கரடி சோமுவை முகர்ந்து பார்த்ததை, மேலேயிருந்து பார்த்த ராமு, கரடி சோமுவிடம் ஏதோ சொல்கிறது என்று தவறுதலாக புரிந்து கொண்டான். பிறகு அவன் இறந்தவன் என்று முடிவு செய்து அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது.

கரடி செல்வதை மரத்தின் மேலிருந்து பார்த்த ராமு, கீழே இறங்கி வந்து சோமுவை எழுப்பினான். ''கரடி சென்று விட்டது இனி எழும்பு நாம் தப்பி விட்டோம்'' என்று ராமு கூறினான்.

சோமுவும் எழுந்து தன் யோசனை வெற்றியடைந்ததை எண்ணி நிம்மதியடைந்தான்.

கீழே படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்.

ராமு சோமுவிடம், ''கரடி உன் காதில் என்ன இரகசியம் சொன்னது?'' என்ன என்று கேட்டான்.

அதற்குப் சோமு, ''ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது! என்று சொல்லிவிட்டுப் போனது'' என்றான்.

இப்பதிலால், ராமு தன் சுயநலப் புத்தியை எண்ணி நொந்து கொண்டான். சோமுவோ இனி மேல் எங்கள் நட்பு நீடிக்க வேண்டாம் என்று கூறிக்கொண்டு கொண்டு தனியே நடந்து சென்றான்.

நீதி: ஆபத்தில் உதவாதது நட்பல்ல.

இன்றைய செய்தி துளிகள் :

1.ரயிலில் இலவச இன்சூரன்ஸ் ரத்து: ரயில்வே நிர்வாகம் முடிவு

2.அரசுப் பள்ளிகளில் ரூ.48 கோடியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி: அரசாணை வெளியீடு!

3.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தாகில் ரமணி

4.புதுமையான தொழில்களைத் தொடங்குவதற்கான மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது: பிரதமர் மோடி உரை

5.ஆசிய விளையாட்டு போட்டி அணிவகுப்பு தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிக்கிறார் சோப்ரா: இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

Saturday, August 11, 2018

6ம் வகுப்பு முதல் யோகா என்.சி.இ.ஆர்.டி., பரிந்துரை


பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், யோகா பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும்' என, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கூறியுள்ளது. டில்லியில், என்.சி.இ.ஆர்.டி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளி பாடத்திட்டத்தில், உடற்கல்வி, விளையாட்டு, யோகா ஆகியவை கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என, என்.சி.இ. ஆர்.டி., தெரிவித்துள்ளது.

ஆறாம் வகுப்பிலிருந்து மாணவ - மாணவியருக்கு, யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது; யோகா பயிற்சியுடன், அதன் பயன்களையும், மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., மாநில, யூனியன் பிரதேசங்களின், பள்ளி கல்வித்துறைகளுக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் என, மாநில அரசின் பள்ளி கல்வித்துறையை கட்டாயப்படுத்த முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் சிக்கல் இரு சான்றிதழ்களால் திடீர் குழப்பம்


தமிழக அரசு பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், தையல் மற்றும் இசை போன்ற பாடப்பிரிவுகளுக்கு, 1,325 சிறப்பாசிரியர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வாயிலாக, 2017 செப்., 23ல், போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 36 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு, 10 மாதங்களுக்கு பின், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, நாளை சான்றிதழ் சரிபார்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் பலர், இரண்டு வகையான தொழிலாசிரியர் பயிற்சி சான்றிதழ் வைத்திருப்பதால், திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தேர்வு எழுதியவர்கள், தமிழ்நாடு கலை ஆசிரியர் நல சங்க தலைவர் ராஜ்குமார் தலைமையில், பள்ளிக் கல்வி செயலர், பிரதீப் யாதவ் மற்றும் டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதுகுறித்து, கலை ஆசிரியர் நல சங்க தலைவர், ராஜ்குமார் கூறியதாவது:

தொழில்நுட்ப தேர்வு என்பது, பள்ளி கல்வியின் தேர்வு துறையால் நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 'தொழிலாசிரியர் சான்றிதழ்' என்ற பெயரில் சான்றிதழ் தரப்படுகிறது. இவர்களையே, சிறப்பாசிரியர்களாக பள்ளி கல்வித்துறை நியமித்து வருகிறது.இந்நிலையில், தொழிலாசிரியர் தேர்வு முடித்தவர்களுக்கு, வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், 1994 முதல் தேர்வு நிறுத்தப்பட்டு, 2002க்கு பின், மீண்டும் நடத்தப்படுகிறது. தேர்வை அரசு நிறுத்தியிருந்த காலத்தில், தமிழக வேலைவாய்ப்பு துறை சார்பில், தனியார் நிறுவனங்கள் வாயிலாக, தொழிலாசிரியர் பயிற்சி தரப்பட்டுள்ளது.

அவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை பெயரிலேயே சான்றிதழ் அளித்துள்ளனர்.அதனால், தற்போது இரண்டு தரப்பினரும் சான்றிதழ் வைத்திருப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை நடத்தும் தொழிலாசிரியர் தேர்வுக்கு மட்டுமே, விதிகள் ஏற்படுத்தி, நேரடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு துறையின் படிப்பை, தனியார் நிறுவனங்கள் நடத்தியுள்ளன. எனவே, பள்ளி கல்வித்துறை தேர்வுக்கு மட்டுமே, இந்த நியமனத்தை மேற்கொள்ள வேண்டும். அரசாணையே இல்லாத படிப்புகளுக்கு, வேலைவாய்ப்பு அளிப்பதால், முறைப்படி படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைக்காத அபாயம் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Friday, August 10, 2018

வீட்டுப்பாடம் குறித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களும் ஆஜராக நேரிடும்


சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எம்.புருஷோத்தமன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடத்திட்ட விதிகளை மீறி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் 1 முதல் 3-ம் வகுப்பு வரை 8 பாடங்களை போதிக்கின்றன. 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற விதிகளை மீறி, வீட்டுப்பாடங்களை கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மட்டுமல்லாமல் அனைத்து பள்ளிகளிலும் 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட வேண்டும். அதேபோல, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட்டு உத்தரவுப்படி 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என அனைத்து மாநில அரசுகளுக்கும் 2 முறை சுற்றறிக்கை அனுப்பி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் கூறினார்.

ஆனால் இதனை அமல்படுத்த காலஅவகாசம் வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சார்பில் கோரப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘இந்த உத்தரவை செயல்படுத்த ஏற்கனவே போதுமான காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே வருகிற 17-ந்தேதிக்குள் இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அனைத்து மாநில பள்ளிகல்வி துறை செயலாளர்களையும் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்’ என்று எச்சரிக்கை விடுத்தார். வழக்கு விசாரணையையும் 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

1,199 பணி இடங்களுக்கு 'குரூப் - 2' தேர்வு அறிவிப்பு


நகராட்சி கமிஷனர், சார் - பதிவாளர் உட்பட, 23 பதவிகளில், 1,199 காலியிடங்களுக்கு, 'குரூப் - 2' தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதற்கு, செப்., 9 வரை, 'ஆன்லைனில்' பதிவு செய்யலாம். தமிழக அரசு துறைகளில், 'குரூப் - 2' பிரிவில், 23 வகையான பதவிகளில் காலியாக உள்ள, 1,199 இடங்களை நிரப்ப, நவ., 11ல், முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. இந்த தேர்வுக்கு, நேற்று முதல் ஆன்லைன் பதிவு துவங்கியுள்ளது. அடுத்த மாதம், 9ம் தேதி வரை பதிவு செய்யலாம். தேர்வு கட்டணத்தை, அடுத்த மாதம், 11ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.இந்த தேர்வில், சார் - பதிவாளர் பதவிக்கு குறைந்தபட்சம், 20; சிறைத்துறை நன்னடத்தை அதிகாரிக்கு, 22 மற்றும் சமூக பாதுகாப்பு துறை பயிற்சி அதிகாரி பதவிக்கு, 26 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு, 18 வயது நிரம்பினால் போதும்.

சார் - --பதிவாளருக்கு, சட்டம் படித்திருந்தால், முன்னுரிமை தரப்படும். பெரும்பாலான பதவிகளுக்கு, குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். முதல் நிலை தேர்வு, தலா, 150 மதிப்பெண்களுக்கு, பொது படிப்பு மற்றும் பொது தமிழ் அல்லது ஆங்கிலம் என, இரண்டு தாள்களுக்கு நடக்கும்.குறைந்தபட்சம், 90 மதிப்பெண்கள் பெற்றால், அடுத்து நடக்கும் பிரதான தேர்வை எழுதலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள

ஒரு நபர் கமிட்டி பதவி காலம் நீட்டிப்பு


ஊதிய திருத்தங்களில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய நியமிக்கப்பட்ட, ஒரு நபர் கமிட்டியின் பதவிக்காலம், மேலும், மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினத் துறை செயலர், சித்திக் தலைமையில், பிப்ரவரியில், ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது.

இக்கமிட்டி, தங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது. கமிட்டி சார்பில், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் இருந்தும், தனிப்பட்ட நபர்களிடம் இருந்தும், மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை பரிசீலித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, அவகாசம் தேவைப்படுவதால், மூன்று மாதங்களுக்கு குறையாமல், குழுவின் பதவி காலத்தை நீட்டிக்கும்படி, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று, ஒரு நபர் கமிட்டியின் பதவி காலத்தை, அக்டோபர், 31 வரை நீட்டித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர தின விழா கொண்டாடுதல் சார்பு