இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, August 09, 2018

MORNING PRAYER -10-8-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

உரை:
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

பழமொழி :

After death, the doctor

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்

பொன்மொழி:

எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.

- ஆபிரஹாம் லிங்கன்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள்?
யுரேனியம்

2.இந்திய-பாகிஸ்தான் எல்லை?
வாகா

நீதிக்கதை :

ஆயிரம் நாணயங்கள் - முல்லா நீதி கதைகள்
(1000 Coins - Mulla Stories for Kids)

முல்லாவிற்கு கடவுளிடம் சத்தமாக வேண்டிக்கொள்ளும் பழக்கம் இருந்தது. தினமும் ஒரே வேண்டுதலை, ஒரே விதமாக வேண்டிக்கொள்வார். ஒரு நாள், "கடவுளே எனக்கு ஆயிரம் நாணயங்கள் வேண்டும். அதில் ஒரு நாணயம் குறைந்தாலும் வாங்க மாட்டேன்." என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு இருந்தார்.

முல்லாவின் வேண்டுதலை தினமும் கேட்டுக்கொண்டு இருந்த பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவை ஏமாற்ற நினைத்தார்.

பக்கத்து வீட்டுக்காரர் தன் வீட்டிற்கு சென்று தன்னுடைய சேமிப்பு பணத்தில் இருந்து 999 நாணயங்களை ஒன்றாக ஒரு சிறிய பையில் கட்டிக்கொண்டு முல்லாவின் வீட்டை நோக்கி ஓடினார்.

முல்லாவின் வீட்டை அடைந்ததும் அந்த பக்கத்துக்கு வீட்டுக்காரர் தான் கொண்டு வந்த பண பையை முல்லாவின் ஜன்னல் வழியாக முல்லாவை நோக்கி வீசினார்.


முல்லா வேண்டுதலை முடித்த பிறகு அருகில் ஒரு பை இருப்பதை பார்த்தார். அதை திறந்து பார்த்த போது உள்ளே நாணயங்கள் இருப்பதை கண்டார். உடனே கடவுள் தான் வேண்டுதலை நிறைவேற்றி விட்டார் என கூறிக்கொண்டு கடவுளுக்கு நன்றி தெரிவித்து நாணயங்களை என்ன தொடங்கினார்.

முல்லா காசை என்ன தொடங்கிய பொழுது அதை ஜன்னல் வழியாக அந்த பக்கத்து வீட்டுக்காரர் வேடிக்கை பார்த்தார். முல்லாவோ நாணயங்களை எண்ணி முடித்த பிறகு அதில் நாணயங்கள் மட்டுமே இருந்தது.

பின்னர் முல்லா, "நன்றி கடவுளே, ஆனால் மீதம் உள்ள 1 நாணயத்தை சீக்ரம் குடுத்து விடு" என கடவுளிடம் வேண்டினார். இதை சற்றும் எதிர்பாராத பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் சென்று இந்த பணப்பை என்னுடையது, நான் தான் உன் வீட்டிற்குள் தூக்கி எறிந்தேன் என்னிடம் குடுத்து விடு என முல்லாவிடம் கெஞ்சினார். ஆனால் முல்லாவோ கடவுள், "உன் மூலமாக எனக்கு உதவி செய்துள்ளார் என கூறி, உனக்கு குடுக்க இயலாது" என்று கூறிவிட்டார்.

வேறு வழி இல்லாமல் அந்த பக்கத்து வீட்டுக்காரர் பஞ்சாயத்துக்கு போகலாம் என்று முல்லா விடம் கூறிவிட்டார். ஆனால் முல்லாவோ, "எனக்கு உடல் நிலை சரி இல்லை, மேலும் என்னால் நடக்கவும் இயலாது", என்று கூறினார். அதற்கு அந்த பக்கத்து வீட்டுக்காரர், "என்னுடைய கழுதையை தருகிறேன் வா", என்று முல்லாவிடம் கூறினார்.  அதற்கு முல்லாவோ, என்னுடைய உடையை பார் அழுக்காக உள்ளது என்று கூறினார்.

அதற்கு முல்லாவோ, என்னுடைய உடையை பார் அழுக்காக உள்ளது என்று கூறி, அவருடைய உடையையும் வாங்கிக்கொண்டு பஞ்சாயத்துக்கு  சென்றார்.

இருவரும் நீதிபதியிடம் வந்து சேர்க்கின்றனர். நீதிபதி முழு கதையையும் கேட்டு அறிந்து கொண்டார். பின்னர் முல்லாவோ, நீதிபதி அவர்களே அவனை நம்பாதீர்கள். அவன் இப்பொழுது எல்லாம் மற்றவர்களின் பொருட்களை எல்லாம் தன்னுடையது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றல் என்னுடைய துணியையும், எனக்கு பின்னல் நிற்கின்ற கழுதை இரண்டையும் என்னுடையது என்றே சொல்லுவான்.

அடுத்த நொடியே அந்த பக்கத்து வீட்டுக்காரர், முல்லா அணிந்துள்ள துணி மற்றும் அந்த கழுதை இரண்டு என்னுடையது என்று நீதிபதியிடம் கூறினான்.

நீதிபதி, பார்த்தீர்களா, எனக்கு இப்பொது புரிந்து விட்டது. முல்லா நீ உனது பண பையை எடுத்து செல்லலாம். இதை கேட்டு அந்த பக்கத்து வீட்டுக்காரர் தான் ஏமாற்ற பட்டத்தை அறிந்து கண்ணீர் விட்டார்.

இறுதியில் முல்லாவோ அந்த பண பையையும் , அந்த கழுதையையும் எடுத்துக்கொண்டு இல்லம் நோக்கி நடந்தான்.

நீதி: முட்டாள் தனம்  இழப்பையே தரும்.

இன்றைய செய்தி துளிகள் :

1.தமிழகம் முழுவதும் 200 பள்ளிகளின் தரம் உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

2.எஸ்.சி, எஸ்.டி சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

3.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகில் ரமணி ஆகஸ்ட் 12-ம் தேதி பதவியேற்பு

4.இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு ஆகஸ்ட் 11-ம் தேதி தொடங்குகிறது.

5.தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியி

Middle to high school upgrade list


https://drive.google.com/file/d/1ijEN7iTpif7fDje0Y98KKEa6z1Cv6zJl/view?usp=drivesdk

உயர்நிலைப் பள்ளியிலிருந்து மேனிலைப்பள்ளியாக தரம் உயர்த்தலுக்கான அரசாணை

https://drive.google.com/file/d/161QBOq1ItQjBucK2ht7-NVesnQONLio8/view?usp=drivesdk

Wednesday, August 08, 2018

பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்


கருணாநிதியின் உடலுக்கு இறுதி சடங்கு முடிந்த நிலையில், இன்று வழக்கம் போல பள்ளி, கல்லுாரிகள் இயங்குகின்றன.கருணாநிதி மறைவுக்காக, தமிழக அரசின் சார்பில், நேற்று ஒரு நாள், அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனால், நேற்று பள்ளி, கல்லுாரிகள் இயங்கவில்லை.

இன்று முதல், பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழக அரசின் சார்பில், ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்படுவதால், வரும், 14ம் தேதி வரை, அரசின் சார்பில் பொது நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் எதுவும் நடத்தப்படாது.தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கும். ஆனால், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கும். சுதந்திர தினமான, வரும், 15ம் தேதி முதல், இயல்பு நிலை திரும்பும். சுதந்திர தின கொண்டாட்டமும் நடத்தப்படும்.

Sunday, August 05, 2018

தொடக்க கல்வி அதிகாரி பதவியில் மாற்றம்


கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பதவியை, வட்டார கல்வி அதிகாரியாக மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையில், பல அதிகாரிகள் பணியிடங்களை மாற்றியமைத்து, சமீபத்தில், தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளின் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டது.

தொடக்க கல்வி, ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் பள்ளிகளுக்கான, மாவட்ட அதிகாரிகள் பதவிகலைக்கப்பட்டது. உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள், வட்டார கல்வி அதிகாரிகளாக மாற்றப்பட்டன. ஆனால், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள் கலைக்கப்படாமல் இருந்தன.

அரசாணையில், அவர்களின் பதவி இல்லாததால், கருவூலத்துறையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைஏற்பட்டது. இதையடுத்து, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பதவியும், வட்டார கல்வி அதிகாரிகள் பதவிக்கு நிகரானது என, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

Saturday, August 04, 2018

சி.இ.ஓ., - டி.இ.ஓ.,க்களுக்கு அவசர ஆலோசனை கூட்டம்

 
தொடக்கப் பள்ளிகளில் நிலுவையில் உள்ள பிரச்னைகளை முடிப்பது குறித்து ஆலோசிக்க, முதன்மைக் கல்வி மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் கூட்டம், சென்னையில் நடைபெற உள்ளது. தமிழக அரசின், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், உள் கட்டமைப்பு மேம்பாடு, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, 'எமிஸ்' என்ற, மாணவர் விபரங்களை டிஜிட்டல் தொகுப்பில் சேர்ப்பது என, பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோல, ஆசிரியர்களின் நியமனம், பதவி உயர்வு குறித்த பிரச்னைகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான நிர்வாக பணிகள் போன்றவற்றிலும், பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன.இந்தப் பணிகளின் நிலைமை என்ன; அவற்றின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, சி.இ.ஓ.,க்கள் மற்றும் டி.இ.ஓ.,க்களுக்கு, சென்னையில் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

இதற்கான கூட்டம், வரும், 8, 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னையில், தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் நடக்கும் என, தொடக்கக் கல்வி இயக்குனர் கருப்பசாமி, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.இந்தக் கூட்டத்திற்கு வரும் முன், தங்கள் மாவட்ட, பள்ளிகளின் வழக்குகள் நிலை, பள்ளி வாரியாக ஆசிரியர் காலியிட விபரம், உள்பட, 29 வகை பட்டியல்களை, வரும், 6ம் தேதிக்குள், deemeetingagendagmail.com என்ற முகவரிக்கு அனுப்ப, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Thursday, August 02, 2018

பள்ளிக் கல்வித் துறையில் ஒரே இடத்தில் மூன்றாண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: விருப்ப கலந்தாய்வுக்கு உத்தரவு


ஆசிரியர் அல்லாத பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலகங்களில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிவோருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பள்ளிக் கல்வித்துறையில் அனைத்து வகைப் பணியாளர்களும் புதிய உத்வேகத்துடன் செயல்படத் தக்க வகையிலும், அனைத்து அலுவலகங்களும் எந்தவிதப் புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையிலும் 1.8.2018 அன்று மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோருக்கு (இளநிலை உதவியாளர் முதல் கண்காணிப்பாளர் வரை) ஆக.4-ஆம் தேதி மாவட்ட அளவில் விருப்ப கலந்தாய்வு நடத்தி இட மாறுதல் வழங்க முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

நடைமுறைகளைப் பின்பற்றி...: இந்த மாறுதல் கலந்தாய்வு எந்தவிதப் புகாருக்கும் இடமளிக்காத வகையில் பணியாளர்களைப் பெரிதும் பாதிக்காத வகையில் நடத்தப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்டு காலியாக உள்ள பணியிடங்களுக்கு மட்டுமே மாறுதல் வழங்க வேண்டும். இடமாறுதலுக்கு சில நடைமுறைகளைப் பின்பற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஒரே அலுவலகத்தில் பணிபுரிவோரை...: தற்போதுள்ள பதவியில் 3 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரிவோரை வேறு அலுவலகத்துக்கு கண்டிப்பாக மாற்றம் செய்ய வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், உதவியாளர்களுக்கு இது பொருந்தாது. அரசாணையின்படி மாவட்டக் கல்வி அலுவலகம் புதிதாக வேறு இடத்துக்கு பணியாளர்களுடன் மாற்றப்பட்டிருப்பின் அந்த அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு மாறுதல் வழங்கத் தேவையில்லை. எனினும், நிர்வாகக் காரணங்களால் பணியிடத்துடன் மாற்றம் பெற்ற பணியாளர்கள் மாறுதல் கோரினால் அவர்களையும் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

தற்போதுள்ள பதவியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் எவருக்கும் மாறுதல் அளிக்காமல் இருக்கக் கூடாது என அதில் கூறியுள்ளார். இடமாறுதலுக்கு வரவேற்பு: இது குறித்து தமிழ்நாடு கல்வித்துறை அரசு அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அதிகமான் முத்து வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை தலைமைச் செயலகத்திலும் பிற துறைகளிலும் நடைமுறையில் உள்ளது போல் 3 ஆண்டுகள் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்களை பள்ளிக் கல்வித் துறை நிர்வாக நலன் கருதி மாறுதல்கள் வழங்க வேண்டும் என அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது; தற்போது அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறோம்' எனக் கூறியுள்ளார்.

டாக்டர். இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதிற்கு தேர்வு செய்வதற்கான நெறிமுறைகள் குறித்து அரசாணை வெளியீடு._*

https://drive.google.com/file/d/1PEXaswLlcS8V2nKn8TONghtPBxqdZGM3/view?usp=drivesdk

Wednesday, August 01, 2018

நல்லாசிரியர் விருதுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்


தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு முதல் முறையாக பார்வையற்ற மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு 3 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

புதிய நெறிமுறைகள்:

மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், ஆசிரியர் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த ஆண்டு விருதுகள் வழங்கப்படும். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மொத்தம் 330 விருதுகள், சுயநிதி, மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 32 பேர், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத்துறை பள்ளி ஆசிரியர்களுக்குத் தலா 2 விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு முதல் முறையாக பார்வையற்ற 3 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக 369 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். ஆய்வு அலுவலர்கள் பள்ளிப் பார்வையின்போது கண்டறிந்த சிறந்த ஆசிரியர்களை மாவட்ட தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு விண்ணப்பித்தவர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்குச் சென்று அவர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைமையாசிரியர்கள் 20 ஆண்டுகள், ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு உட்படாதவராக... பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எந்தவிதக் குற்றச்சாட்டுக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராக இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர்களின் பெயர்கள் கண்டிப்பாக பரிந்துரைக்கப்படக் கூடாது.

கல்வியை வணிக ரீதியாகக் கருதி செயல்படும் ஆசிரியர்களையும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களையும் விருதுக்குத் தகுதியற்றவர்களாகக் கருத வேண்டும். மாவட்டத் தேர்வுக் குழுவினர் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை கருத்துருக்களை மாநிலத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு வரும் 14-ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்யப்பட வேண்டும். மாநிலத் தேர்வுக்குழு மாவட்டக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இறுதிப் பட்டியலை தயார் செய்ய வேண்டும்.

ஒரு நபர் கமிட்டியின் கால அவகாசம் நீட்டிப்பு


ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்காக அமைக்கப்பட்ட, ஒரு நபர் கமிட்டி, அறிக்கை தாக்கல் செய்ய, மேலும், மூன்று மாதங்கள் கால அவகாசம் கேட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைய, நிதி செலவினம் துறை செயலர் சித்திக் தலைமையில், பிப்ரவரி மாதம், ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது.

இக்கமிட்டி, தன் பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது.ஆனால், இன்னமும் விசாரணை முடிவடையாததால், அறிக்கை தாக்கல் செய்ய, மேலும் மூன்று மாதங்கள், கால அவகாசம் கேட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் நேற்று, பல்வேறு ஆசிரியர் அமைப்புகளின் நிர்வாகிகள், ஒரு நபர் கமிட்டி தலைவர், சித்திக்கை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.

மாவட்டங்களில் கல்வித்துறை இணை இயக்குனர்கள் அலுவலகம்


கல்வித்துறையில் மாவட்டங்களை ஒருங்கிணைத்து இணை இயக்குனர், மண்டல இணை இயக்குனர் அலுவலங்கள் அமைக்கப்பட உள்ளது.பள்ளி கல்வித் துறை சார்பில், புதிய கல்வி மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, 20 இணை இயக்குனர்கள், 'நோடல் ஆபீசர்ஸ்' ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இணை இயக்குனர்களுக்கு, ஒன்று அல்லது இரண்டு மாவட்டங்களை சேர்த்து பொறுப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.மூன்று மாவட்டங்களை ஒருங்கிணைத்து கல்வித் துறை இணை இயக்குனர் அலுவலகம், இணை இயக்குனர்களை ஒருங்கிணைத்து மண்டல இணை இயக்குனர் அலுவலகம், மாவட்டங்களில்அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று இணை இயக்குனர்களை ஒருங்கிணைத்து மண்டல இணை இயக்குனர் அலுவலகம் மதுரையில் அமைக்கப்படுகிறது.

இணை இயக்குனர்களுக்கான அலுவலகம் தேடும் பணியில், கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.இதுவரை இணை இயக்குனர்கள் சென்னையில் இருந்து, பணிகளை கவனித்தனர். அரசின் சீர்திருத்த நடவடிக்கையால்,இனி மாவட்டங்களில் அலுவலகம் அமைத்து கவனிப்பார்கள், என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Monday, July 30, 2018

ஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவதற்கு ஒருநபர் குழுவை அரசு அமைத்துள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக எம்.ஏ. சித்திக் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளையும், ஊழியர்களையும் நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டு அரசுக்கு அறிக்கை வழங்க உள்ளது. இந்தக் குழுவின் சார்பில் ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம், சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி விலிங்டன் கல்லுôரி வளாகத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்பட கருத்துத் தெரிவிக்க விண்ணப்பித்த பல்வேறு ஆசிரியர் கூட்டமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு கூட்டமைப்பின் சார்பில் இருவர் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு


பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட, ஒன்றிய அளவில் கண்காணிப்பு குழு அமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், சத்துணவு, அங்கன்வாடி மையங்களில், தினமும் ஏதாவது ஒரு கலவை சாதம், முட்டை, குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இவற்றின் தரம் குறித்து, அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

அரசு முடிவு : இந்நிலையில், பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்தை செம்மைப்படுத்தி, ஆய்வு செய்ய, மாவட்ட, ஒன்றிய அளவில், கண்காணிப்பு குழுக்களை அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாவட்ட குழுவுக்கு, கலெக்டர் தலைவராக இருப்பார்.முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மருத்துவத் துறை இணை இயக்குனர், பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர், சமூகநல அலுவலர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் உட்பட, 12 பேர், உறுப்பினர் செயலர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

ஒன்றிய அளவில், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், குழந்தை நல வளர்ச்சி அலுவலர், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் உட்பட, ஏழு பேர் குழுவில் இடம் பெறுவர்.

ஊதிய முரண்பாடு அறிக்கை இன்று வருமா?


ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட, ஒரு நபர் கமிட்டி, இன்று அறிக்கை தாக்கல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு, அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது.தமிழக சட்டசபையில், ஜனவரி மாதம், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றியபோது, 'கடுமையான நிதி நிலை நிலவி வரும் போதும், அரசு பணியாளர் ஊதிய திருத்தங்கள் தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

'அவற்றை பரிசீலிக்க, அரசு, ஒரு குழுவை அமைக்கும்' என, அறிவித்தார். அதன்படி, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினம் துறை செயலர், சித்திக் தலைமையில், பிப்ரவரி மாதம், ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. 'இக்கமிட்டி, தங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டிருந்தது.

எனவே, இன்று கமிட்டி சார்பில், அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு, அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது.

TNPSC GROUP IV result


http://results.tnpsc.gov.in/

Sunday, July 29, 2018

கணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு


அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய விதிமுறைப்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, விரைவில் கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், 6,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2,000 கணினி ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர். இருப்பினும், பல மாவட்டங்களில், கணினி அறிவியல் பாடம் நடத்த, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.

இந்நிலையில், 748 அரசு பள்ளிகளில், தலா ஒரு கணினி அறிவியல் ஆசிரியரை நியமிக்க, ஓராண்டுக்கு முன், பள்ளிக்கல்வி இயக்குனரகம் முடிவு செய்தது. ஆனால், புதிய பாடத்திட்டப்படி, கலை பாடப்பிரிவுக்கு, 'கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்' என்ற பாடமும், தொழிற்கல்விக்கு, கணினி தொழில்நுட்பம் என்ற பாடமும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்த பாடங்கள் முக்கியமானதாக உள்ளதால், அனைத்து பள்ளிகளிலும், கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக, கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கான, கல்வித் தகுதி மாற்றி அமைக்கப்பட உள்ளது. இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, புதிய கல்வித் தகுதிக்கான கோப்பை தயாரித்து, அரசின் அனுமதிக்காக அனுப்பியுள்ளனர்.தற்போதைய நிலையில், கணினி அறிவியல் பாடம் நடத்த, இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், கணினி பயிற்றுனர்கள் என்ற பதவியில் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, பாடம் எடுக்க வேண்டியுள்ளது.பள்ளிக்கல்வி விதிகளின்படி, பிளஸ் 1, பிளஸ் 2விற்கு, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.

எனவே, இந்த விதிகளின்படி, கணினி அறிவியல் பாட ஆசிரியர் பதவிக்கு, முதுநிலை படிப்புடன், பி.எட்., முடித்தவர்களை நியமனம் செய்ய, விதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.