இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, July 13, 2018

6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11¾ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு கையடக்க கணினி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11 லட்சத்து 70 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு கையடக்க கணினி (டேப்லட்) விரைவில் வழங்கப்பட உள்ளது.

அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இதற்காக லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வந்து இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளனர். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.

கல்வி வளர்ச்சி நாள் -15-7-18

Click below

https://drive.google.com/file/d/1KzGeq-uMNplzi-vFMH60eTb61tp_Ebyf/view?usp=drivesdk

Thursday, July 12, 2018

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2 மாதத்தில் இலவச 'வைபை'


தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இரண்டு மாதங்களில், இலவச இணையதள, 'வைபை' வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள, கல்வியில் பின்தங்கிய, 13 மாவட்டங்களில் உள்ள, 366 அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு, 9.06 கோடி ரூபாய் மதிப்பில், இலவச இணையதள, வைபை வசதி ஏற்படுத்த, அரசுஒப்புதல் அளித்தது.

இதில், முதல் கட்டமாக, 50 அரசு மேல் நிலைப்பள்ளிகளில், 1.23 கோடி ரூபாய் செலவில், வைபை சேவை வசதி வழங்க,நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.இதற்கான பணிகளில், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் ஈடுபட்டுள்ளது.இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: அரசு மேல்நிலை பள்ளிகளில், இலவச இணையதள, வைபை வசதி வழங்கும் திட்டத்தை, 2017ல், தமிழக அரசு, அறிவித்தது. தற்போது, இதற்கானநிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.முதல் கட்டமாக, 50 அரசு மேல்நிலைப் பள்ளி களில் சேவை வழங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.

விரைவில் ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டு, இரண்டு மாதங்களில், பள்ளிகளுக்கு, இலவச, வைபை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் துரிதமாக நடந்துவருகின்றன.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு


தமிழக பள்ளிகளில், 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட, உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த காமராஜரின் பிறந்த நாள், வரும், 15ம் தேதி, அரசின் சார்பில் கொண்டாப்படுகிறது. இந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்க, தமிழக அரசுஉத்தர விட்டுள்ளது.

இதன்படி, அனைத்து வகை பள்ளிகளிலும், அன்று, காமராஜரின் வரலாறு, அவரது திட்டங்கள், சாதனைகள், கல்விக்கு அவர் ஆற்றிய பணிகள் குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பள்ளிகளில், சிறப்பு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தி, காமராஜர் பெயரில் பரிசு வழங்கவும், உத்தரவிடப்பட்டு உள்ளது.

Wednesday, July 11, 2018

மாணவர்களுக்கு பல வண்ண சீருடை : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


அரசு பள்ளிகளில், பல வண்ண சீருடைகள் வழங்கப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை மாற்ற, அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, 9, 10ம் வகுப்புகளுக்கு, ஒரு வகை நிறத்திலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வேறு வகையான நிறத்திலும், சீருடைகளின் நிறம் மற்றும் உடை வடிவங்கள் மாற்றப்பட்டு உள்ளன.

அதேபோல், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், இந்த ஆண்டு, பச்சை நிறத்தில் சீருடைகள் மாற்றப்பட்டன.இந்நிலையில், மீண்டும் சீருடைகள் மாற்றப்படும் என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து, 'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:தற்போதுள்ள சீருடை, ஒரே வண்ணத்தில் உள்ளதால், அவற்றுக்கும், தனியார் பள்ளி சீருடைக்கும் இடையே, பெரும் வித்தியாசம் உள்ளது.

இந்த வித்தியாசம் தெரியாத வகையில், பல வண்ணங்களில் இருக்குமாறு, சீருடைகள் மாற்றப்படும். வரும் கல்வி ஆண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சீருடைகள் மாற்றப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Tuesday, July 10, 2018

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்: ஜூலை 16 முதல் பெறலாம்


கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வரும் 16 -ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த மே 15 -ஆம் தேதி கல்வித் துறை இணையதளத்திலும், மே 17 -ஆம் தேதி அன்று அவரவர் பள்ளியிலும் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் ஜூலை 16 -ஆம் தேதி காலை 10 மணி முதல் அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்!: ஜூலை 15 முதல் தொடங்கும்.நூலகத்துறை அறிவிப்பு


மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஜூலை 15-ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன. இந்த வகுப்புகளில் அருகே உள்ள அரசு நூலகங்களிலிருந்து மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என பொது நூலகத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4,600-க்கும் மேற்பட்ட அரசு நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பொது நூலகத் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் அதிகளவில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டு வருகின்றனர். உறுப்பினராகச் சேரும் மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் ஓவியம், பேச்சு, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாதம் சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன.

ஜூலை 15 முதல் தொடங்கும்: இது குறித்து பொது நூலகத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஜூலை-15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை வாசிப்பு மாதமாகக் கொண்டாடப்படும். இந்த ஒரு மாதத்தில் பள்ளிகளில் ஒரு நாள் ஒரு வகுப்புக்கு ஒரு பாடவேளை ஒதுக்கப்படும். ஒரே வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீண்டும் வாசிக்க வாய்ப்பு வழங்கப்படும். ஒரு சுற்று வாசிப்பு முடிவடைந்ததும் மீண்டும் அடுத்த சுற்று தொடங்கும். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் இந்த வகுப்புகள் நடைபெறும்.

இந்த நேரத்தில் நன்னெறிக் கதைகள், படக் கதைகள், பொது அறிவு, தலைவர்கள் வரலாறு உள்பட பல்வேறு வகையான நூல்கள் பள்ளிகளுக்கு அருகில் அமைந்திருக்கும் அரசு நூலகங்களிலிருந்து நூலகர்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர தற்போது 14 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நடமாடும் நூலக வாகனங்களை 20 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

Monday, July 09, 2018

கவிதை

(கவிஞர் யுகபாரதியின் திருமண அழைப்பிதழில் இடம் பெற்றிருந்த கவிதை)

உனக்கு

தேவதை தேவையில்லை
தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்
படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்ட மாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு
இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக்கொள்க
வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்கு கைவசம் கவிதைகள்
வாய்க்கப் பெற்றேன்
காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்
சந்தேகம் துளியும் இல்லை
அந்தரங்கம் உனக்கும் உண்டு
சமயத்தில் நிலவு என்பேன்
சமையலில் உதவி செய்வேன்
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்
ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு
வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்.

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு: இனி பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்


தொடக்கக் கல்வி பட்டயப்படிப்புக்கு இனி பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் க.அறிவொளி திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (DIET), ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம்(BIET), ஆரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (GTTI)ஆகியவற்றில், தொடக்கக் கல்விப் பட்டயப்படிப்பு 2018-19 -ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு கடந்த ஜூன் 18 -ஆம் தேதி முதல் ஜூன் 30 -ஆம் தேதி வரை இணையதளத்தில் (www.tnscert.org)விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கு 821 பேர் விண்ணப்பித்தனர். பெறப்பட்ட விண்ணப்பங்களில் 713 தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டதில், 413 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதை அரசு ஆய்வு செய்ததில், கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்களை தொடக்கப் பள்ளிகளில் பணியமர்த்தினால், இப்பள்ளிகளில் கற்றல் விளைவுகள் மேம்பட வாய்ப்புள்ளது என முடிவெடுக்கப்பட்டது.

எனவே, இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு முடித்து, ஒன்றாம் வகுப்பு முதல் 5 -ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த விருப்பமுள்ளவர்கள் இரண்டாண்டு (D.EI.Ed- Diploma in Elementary Education) பட்டயப் படிப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (NCTE) வகுத்துள்ள விதிமுறைகளின்படி சேர்க்கை நடைபெறும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதள முகவரியில்(www.tnscert.org) ஜூலை 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் FA(A) சிறப்பாக செய்த மாணவ மாணவியர் புத்தகம் பரிசாக பெற்றபோது.. மாநகராட்சி துவக்கப்பள்ளி, பூலுவபட்டி திருப்பூர் வடக்கு

Sunday, July 08, 2018

ஜெனரிக் மருந்துகள் பரிந்துரை தொடரும் காத்திருப்பு...


மக்களின் வசதிக்காகவும், அவர்கள் தெரிந்து கொள்ளும் வண்ணமும் மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை (அடிப்படை மூலக்கூறு மருந்துகள்) மருந்துச் சீட்டில் (பரிந்துரை சீட்டு) எழுத வேண்டும் என்கின்ற மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கழகத்தின் நிலைப்பாடு, நடுத்தர மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், மருத்துவர்கள், பிராண்டட் மருந்துகளை விற்கும் வர்த்தக நிறுவனங்கள், மருந்தக உரிமையாளர்களிடையே அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் குறைந்த விலையில் மருந்துகளை பெறும் வகையில் நாடு முழுவதும் "ஜன் ஒளஷதி' என்ற பெயரில் ஜெனரிக் மருந்துகள் விற்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பிராண்ட் பெயர் மருந்துகளைத் தவிர்த்து, அனைத்து மருத்துவர்களும் அடிப்படை மூலக்கூறு மருந்துகளை பரிந்துரை செய்யும் பட்சத்தில், குறைந்த விலையில் தரமான மருந்துகள், தகுதியான மருத்துவம் மக்களுக்கு கிடைக்கும் என மத்திய அரசு நம்புகிறது. அடிப்படை மூலக்கூறு பெயரில் விற்பனையாகும் மருந்தின் விலை குறைவாக இருக்கும். மருத்துவர்களிடையே இதற்கான பிரசாரம் இருக்காது. இதற்கென விற்பனை பிரதிநிதி இருக்க மாட்டார்.

மருத்துவர்கள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு இலவச சலுகைத் திட்டங்கள் இருக்காது. இம்மருந்துகளை சந்தைப்படுத்த அதிக செலவு ஆகாததால், இத்தகைய மருந்துகளை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிகிறது. மருந்துகள் மட்டுமல்லாமல், சில வகை மருத்துவ உபகரணங்களின் விலையும் குறைவாக இருக்க வாய்ப்பிருக்கிறது. எடுத்துக்காட்டாக, உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொள்ளும் டிஜிட்டல் மீட்டர், பெருநிறுவனங்களால் விளம்பரப்படுத்தப்பட்டு பிரபல பிராண்ட் பெயரில் ரூ.1,500 வரை விற்கப்படுகிறது. அதே நேரம் ஜன் ஒளஷதி மருந்தகத்தில் சர்க்கரை நோய் அளவறியும் டிஜிட்டல் மீட்டர் விலை சுமார் ரூ.480தான். இதே போல உடல் வலி முதல் புற்றுநோய் வரையிலான உபாதைகளுக்கான மருந்துகள், பிராண்டட் ரகங்களில் 2 முதல் 15 மடங்குவரை அதிக விலையில் விற்பனையாகின்றன.

விழிப்புணர்வு இல்லாமை ஜெனரிக் மருந்துகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. படிக்காதவர்கள் மட்டுமன்றி படித்தவர்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. மருத்துவர்கள் பெரும்பாலும் பரிந்துரைப்பது பிராண்டட் (வர்த்தக பெயர் கொண்டவை) மருந்துகளையே. பிரத்யேகமான விற்பனைப் பெயரில்லாத, மூலக்கூறின் பெயரை மட்டுமே கொண்ட ஜெனரிக் மருந்துகளின் விலை மிகக் குறைவாக இருந்தபோதும், விலை அதிகம் கொண்ட, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பிராண்டட் மருந்துகளையே மக்கள் கடைகளில் கேட்டு வாங்கிச் செல்கின்றனர். மருத்துவர் பரிந்துரைத்த பிராண்டட் மருந்தும், மருந்துக்கடைக்காரர் கூறிய ஜெனரிக் வகை மருந்தும் ஒரே மூலக்கூறுகளை கொண்டதுதான் என்கின்ற தெளிவும், விழிப்புணர்வும் மக்களிடம் இல்லாதது, பிராண்டட் மருந்து நிறுவனங்களுக்கு கொண்டாட்டமாகிறது. அனைத்து மருந்துகளும் ஜெனரிக் மருந்துகளாகுமா?

ஆசிரியர் பணி நிரவல்: ஒரு மாற்று யோசனை


தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணி நிரவல் காரணமாக பல்வேறு பள்ளிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதனால் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை சரிய அரசாங்கமும் மறைமுகமாக ஒரு காரணமாக அமைந்துள்ளது.

தனியார் பள்ளிகளில் சேரும் 25 சதவீத மாணவர்களுக்கு அரசாங்கமே கட்டணம் செலுத்துவது என்ற கொள்கை முடிவு காரணமாக பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். தனியார் பள்ளிகளில் கற்பிக்கப்படும் ஆங்கில வழிக் கல்வியின் மீது பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள மோகம் காரணமாக தனியார் பள்ளிகளை நோக்கி பொதுமக்களின் பார்வை திரும்பியதின் விளைவாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. அரசு பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, பெற்றோர்களுக்குப் புரிய வைப்பதில் கல்வியாளர்கள் மற்றும் சமூக அக்கறையுடன் கூடிய சிந்தனையாளர்களின் உதவி தேவைப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் பல குறைகள் உள்ளன. அவற்றைச் சுட்டிக்காட்டி, அத்தகைய தவறுகளை சீரமைத்து வழி நடத்திச் செல்ல வேண்டியது கல்வியாளர்கள், சமூக சிந்தனையாளர்கள் ஆகியோரின் கடமையாகும். இல்லையெனில், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இலவசக் கல்வி எட்டாக்கனியாகிவிடும். 150 மாணவர்கள் வரை பயிலும் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் 6 ஆசிரியர்கள், ஒரு தலைமையாசிரியர், ஓர் உடற்கல்வி ஆசிரியர், ஓர் இளநிலை உதவியாளர், ஓர் ஆய்வக உதவியாளர், ஓர் அலுவலக உதவியாளர், ஓர் இரவுக் காவலர் கட்டாயம் தேவை. ஆயினும் பல இடங்களில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் கிடையாது. அலுவலகப் பணி செய்ய இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் இல்லை.

கல்வித்துறை இணையச் செயல்பாடுகளைச் செய்யவோ, கல்விசார் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தவோ எவரும் இல்லை. மேலும் பள்ளி சார்ந்த பலவிதமான அலுவலகப் பணி, கருவூலப் பணி, கல்வி அலுவலங்களுக்கு நேரில் சென்று கடிதங்களை ஒப்படைத்தல் பணி என பல்வேறு பணிகளையும் ஆசிரியர்களே செய்ய வேண்டியுள்ளது. தற்போதுள்ள ஆசிரியர்கள் கல்வி கற்பித்தல் பணியோடு இத்தகைய செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அவர்களுடைய கற்பித்தல் பணி தொய்வடைகிறது. அவற்றைச் செய்யும் ஆசிரியர்கள் அமையாத பள்ளியும், தலைமையாசிரியரும் படும்பாடு சொல்லி மாளாது. இத்தகைய சூழ்நிலையில் குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள். கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பணி நிரவலை முறைப்படுத்தி மாணவர்களின் கல்வித் தரத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம். 150 மாணவர்கள் வரை பயிலும் உயர்நிலைப் பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் போதும் என்ற கணக்கிடப்பட்டு மற்ற ஆசிரியர் பணியிடங்கள் உபரியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் நகர்ப்புறங்களைவிட்டு வெகு தொலைவில் உள்ள பெரும்பாலான கிராமப்பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் இல்லை. பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட்டு வரப்படுகின்றனர். அவர்களுக்கான மாற்றுப் பள்ளி தேடுவதைவிட, தற்போது பணியாற்றும் பள்ளியிலேயே உரிய வகையில் பணியை பின்வருமாறு மாற்றியமைக்கலாம். புதிய உயர்தர பாடத் திட்டத்தில், சிறப்பான வகையில் பல தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. அவற்றை நன்முறையில் வெற்றிகரமாக பயிற்றுவிக்கும் தொழில்நுட்ப ஆசிரியராக அவர்களை மிளிரச் செய்யலாம். அவர்களுக்கு கூடுதலாக பயிற்சி அளித்து அதை செயல்படுத்தலாம். தங்கள் பாடம் சார்ந்த கற்பித்தல் பணியோடு, கணினியை நிர்வகித்தல், கணினியை பயன்படுத்துதல், கணினியைப் பயன்படுத்த மற்ற ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து அனைத்து ஆசிரியர்களையும் ஸ்மார்ட் டீச்சராக மாற்றுதல், கணினியை கல்வி கற்பிக்க சிறப்பாகப் பயன்படுத்துதல், மூவகைச் சான்றிதழ்களைப் பெற உதவுதல், பள்ளியின் கடிதப் போக்குவரத்துகளை இணையவழியில் செயல்படுத்துதல், பாடம் சார்ந்த ஒலிஒளி கோப்புகளை உருவாக்கி கற்றல் கற்பித்தல் நிகழ்வினை எளிமையாக்குதல், கல்விசார் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளை செயல்படுத்துதல், பள்ளி தொடர்பான அரசின் விலையில்லா திட்டங்களை திட்டமிட்டு குறையில்லாமல் பள்ளியில் செயல்படுத்துதல், பள்ளிக் கல்வி முடித்தபின் மாணவ, மாணவிகளுக்கு என்னென்ன மேல் படிப்புகள் உள்ளன, அவற்றை எங்கு கற்பது, தொழிற்கல்வி, என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன அவற்றிற்குரிய கல்வியை எங்கு பயில்வது என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளிக்கும் சமூகத்திற்கும் ஒரு தொடர்பாளராக செயலாற்றி, மாணவ, மாணவியர்களுக்கு நல் ஆலோசகராக விளங்க முடியும்.

இத்தகைய ஆசிரியர்களை உருவாக்கினால் அரசு பள்ளிகளும் பன்முக வளர்ச்சியை பெறும். உபரி ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் பணி நிரவல் தேவையிராது. இனிவரும் காலங்களில் பணி நிரவல் இல்லாமலாக்குவது அரசு, ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கையிலும்தான் உள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர்களின் பொறுப்பு மாற்றம் : தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு அதிகாரம் குவிப்பு


தமிழக அரசின் புதிய சட்டப்படி, இயக்குனர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன. மெட்ரிக் பள்ளி இயக்குனர், தனியார் பள்ளி இயக்குனர் என, பெயர் மாற்றப்பட்டு, கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க பள்ளி இயக்குனர் கவனித்து வந்தார்.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் நிர்வாகத்தை, பள்ளிக்கல்வி இயக்குனரும், மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகத்தை, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரும் கவனித்து வந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு இயற்றியுள்ள, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம், 2018ன் படி, இயக்குனர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டு உள்ளன.தனியார் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். மெட்ரிக் இயக்குனர் பதவி நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கான பொறுப்புகள், தனியார் பள்ளிகள் இயக்குனர் வசம் மாற்றப்பட்டுள்ளன.மாற்றம் என்ன? தமிழக அரசின் புதிய சட்டப்படி, ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் எட்டாம் வகுப்பு வரையுள்ள நடுநிலை பள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க கல்வி இயக்குனர் கவனிப்பார்

 10ம் வகுப்பு வரை செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள், பிளஸ் 2 வரை செயல்படும், மேல்நிலை பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளை, பள்ளிக்கல்வி இயக்குனர் கவனிப்பார் மெட்ரிக் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனர் கிடையாது. மாறாக, தனியார் பள்ளிகள் இயக்குனர் என்ற, புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இவரே, தனியார் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள்,சி.பி.எஸ்.இ., பள்ளிகள்,ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், ஐ.பி., என்ற சர்வதேச பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற, பிறவகை பாடத்திட்ட பள்ளிகளின் நிர்வாகத்தை கவனிப்பார் தனியார், 'பிளே ஸ்கூல்' என்ற மழலையர் பள்ளி, பிரைமரி பள்ளிகள், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றவற்றின் நிர்வாகங்களையும், தனியார் பள்ளிகள் இயக்குனரே கவனிப்பார் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.