இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, July 08, 2018

ஆசிரியர் பணி நிரவல்: ஒரு மாற்று யோசனை


தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணி நிரவல் காரணமாக பல்வேறு பள்ளிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதனால் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை சரிய அரசாங்கமும் மறைமுகமாக ஒரு காரணமாக அமைந்துள்ளது.

தனியார் பள்ளிகளில் சேரும் 25 சதவீத மாணவர்களுக்கு அரசாங்கமே கட்டணம் செலுத்துவது என்ற கொள்கை முடிவு காரணமாக பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். தனியார் பள்ளிகளில் கற்பிக்கப்படும் ஆங்கில வழிக் கல்வியின் மீது பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள மோகம் காரணமாக தனியார் பள்ளிகளை நோக்கி பொதுமக்களின் பார்வை திரும்பியதின் விளைவாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. அரசு பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, பெற்றோர்களுக்குப் புரிய வைப்பதில் கல்வியாளர்கள் மற்றும் சமூக அக்கறையுடன் கூடிய சிந்தனையாளர்களின் உதவி தேவைப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் பல குறைகள் உள்ளன. அவற்றைச் சுட்டிக்காட்டி, அத்தகைய தவறுகளை சீரமைத்து வழி நடத்திச் செல்ல வேண்டியது கல்வியாளர்கள், சமூக சிந்தனையாளர்கள் ஆகியோரின் கடமையாகும். இல்லையெனில், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இலவசக் கல்வி எட்டாக்கனியாகிவிடும். 150 மாணவர்கள் வரை பயிலும் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் 6 ஆசிரியர்கள், ஒரு தலைமையாசிரியர், ஓர் உடற்கல்வி ஆசிரியர், ஓர் இளநிலை உதவியாளர், ஓர் ஆய்வக உதவியாளர், ஓர் அலுவலக உதவியாளர், ஓர் இரவுக் காவலர் கட்டாயம் தேவை. ஆயினும் பல இடங்களில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் கிடையாது. அலுவலகப் பணி செய்ய இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் இல்லை.

கல்வித்துறை இணையச் செயல்பாடுகளைச் செய்யவோ, கல்விசார் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தவோ எவரும் இல்லை. மேலும் பள்ளி சார்ந்த பலவிதமான அலுவலகப் பணி, கருவூலப் பணி, கல்வி அலுவலங்களுக்கு நேரில் சென்று கடிதங்களை ஒப்படைத்தல் பணி என பல்வேறு பணிகளையும் ஆசிரியர்களே செய்ய வேண்டியுள்ளது. தற்போதுள்ள ஆசிரியர்கள் கல்வி கற்பித்தல் பணியோடு இத்தகைய செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அவர்களுடைய கற்பித்தல் பணி தொய்வடைகிறது. அவற்றைச் செய்யும் ஆசிரியர்கள் அமையாத பள்ளியும், தலைமையாசிரியரும் படும்பாடு சொல்லி மாளாது. இத்தகைய சூழ்நிலையில் குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள். கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பணி நிரவலை முறைப்படுத்தி மாணவர்களின் கல்வித் தரத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம். 150 மாணவர்கள் வரை பயிலும் உயர்நிலைப் பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் போதும் என்ற கணக்கிடப்பட்டு மற்ற ஆசிரியர் பணியிடங்கள் உபரியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் நகர்ப்புறங்களைவிட்டு வெகு தொலைவில் உள்ள பெரும்பாலான கிராமப்பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் இல்லை. பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட்டு வரப்படுகின்றனர். அவர்களுக்கான மாற்றுப் பள்ளி தேடுவதைவிட, தற்போது பணியாற்றும் பள்ளியிலேயே உரிய வகையில் பணியை பின்வருமாறு மாற்றியமைக்கலாம். புதிய உயர்தர பாடத் திட்டத்தில், சிறப்பான வகையில் பல தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. அவற்றை நன்முறையில் வெற்றிகரமாக பயிற்றுவிக்கும் தொழில்நுட்ப ஆசிரியராக அவர்களை மிளிரச் செய்யலாம். அவர்களுக்கு கூடுதலாக பயிற்சி அளித்து அதை செயல்படுத்தலாம். தங்கள் பாடம் சார்ந்த கற்பித்தல் பணியோடு, கணினியை நிர்வகித்தல், கணினியை பயன்படுத்துதல், கணினியைப் பயன்படுத்த மற்ற ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து அனைத்து ஆசிரியர்களையும் ஸ்மார்ட் டீச்சராக மாற்றுதல், கணினியை கல்வி கற்பிக்க சிறப்பாகப் பயன்படுத்துதல், மூவகைச் சான்றிதழ்களைப் பெற உதவுதல், பள்ளியின் கடிதப் போக்குவரத்துகளை இணையவழியில் செயல்படுத்துதல், பாடம் சார்ந்த ஒலிஒளி கோப்புகளை உருவாக்கி கற்றல் கற்பித்தல் நிகழ்வினை எளிமையாக்குதல், கல்விசார் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளை செயல்படுத்துதல், பள்ளி தொடர்பான அரசின் விலையில்லா திட்டங்களை திட்டமிட்டு குறையில்லாமல் பள்ளியில் செயல்படுத்துதல், பள்ளிக் கல்வி முடித்தபின் மாணவ, மாணவிகளுக்கு என்னென்ன மேல் படிப்புகள் உள்ளன, அவற்றை எங்கு கற்பது, தொழிற்கல்வி, என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன அவற்றிற்குரிய கல்வியை எங்கு பயில்வது என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளிக்கும் சமூகத்திற்கும் ஒரு தொடர்பாளராக செயலாற்றி, மாணவ, மாணவியர்களுக்கு நல் ஆலோசகராக விளங்க முடியும்.

இத்தகைய ஆசிரியர்களை உருவாக்கினால் அரசு பள்ளிகளும் பன்முக வளர்ச்சியை பெறும். உபரி ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் பணி நிரவல் தேவையிராது. இனிவரும் காலங்களில் பணி நிரவல் இல்லாமலாக்குவது அரசு, ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கையிலும்தான் உள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர்களின் பொறுப்பு மாற்றம் : தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு அதிகாரம் குவிப்பு


தமிழக அரசின் புதிய சட்டப்படி, இயக்குனர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன. மெட்ரிக் பள்ளி இயக்குனர், தனியார் பள்ளி இயக்குனர் என, பெயர் மாற்றப்பட்டு, கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க பள்ளி இயக்குனர் கவனித்து வந்தார்.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் நிர்வாகத்தை, பள்ளிக்கல்வி இயக்குனரும், மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகத்தை, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரும் கவனித்து வந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு இயற்றியுள்ள, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம், 2018ன் படி, இயக்குனர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டு உள்ளன.தனியார் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். மெட்ரிக் இயக்குனர் பதவி நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கான பொறுப்புகள், தனியார் பள்ளிகள் இயக்குனர் வசம் மாற்றப்பட்டுள்ளன.மாற்றம் என்ன? தமிழக அரசின் புதிய சட்டப்படி, ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் எட்டாம் வகுப்பு வரையுள்ள நடுநிலை பள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க கல்வி இயக்குனர் கவனிப்பார்

 10ம் வகுப்பு வரை செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள், பிளஸ் 2 வரை செயல்படும், மேல்நிலை பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளை, பள்ளிக்கல்வி இயக்குனர் கவனிப்பார் மெட்ரிக் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனர் கிடையாது. மாறாக, தனியார் பள்ளிகள் இயக்குனர் என்ற, புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இவரே, தனியார் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள்,சி.பி.எஸ்.இ., பள்ளிகள்,ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், ஐ.பி., என்ற சர்வதேச பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற, பிறவகை பாடத்திட்ட பள்ளிகளின் நிர்வாகத்தை கவனிப்பார் தனியார், 'பிளே ஸ்கூல்' என்ற மழலையர் பள்ளி, பிரைமரி பள்ளிகள், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றவற்றின் நிர்வாகங்களையும், தனியார் பள்ளிகள் இயக்குனரே கவனிப்பார் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

Saturday, July 07, 2018

கனவு ஆசிரியர் விருது கோவை, திருப்பூர், கரூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள்.

Click below

https://drive.google.com/file/d/12STHTwUq0MW0-hyq06ZX6_415OtYYN11/view?usp=drivesdk

டியூஷன் சென்டர்'களுக்கு அங்கீகாரம் கட்டாயமாக்க வருகிறது புதிய சட்டம்

சிறப்பு பயிற்சி அளிக்கும், 'டியூஷன் சென்டர்'கள் மற்றும், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுக்கான பயிற்சி தரும் மையங்கள், பள்ளி கல்வித் துறையின் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகிறது. இதற்கான சட்டம், விரைவில் அறிமுகமாகிறது. மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' நுழைவு தேர்வு கட்டாயமானதால், பள்ளிகளில், தனியார் சிறப்பு பயிற்சி நிறுவனங்களை அனுமதித்து, நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சி தரப்படுகிறது.

இந்த பயிற்சிக்கு, மாணவர்களிடம் கட்டாயமாக, கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, பள்ளிகளில் சிறப்பு பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக பயிற்சி அளிக்க, தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இந்நிலையில், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் டியூஷன் சென்டர்கள் என்ற, தனியார் கல்வி மையங்களை முறைப்படுத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள, சி.பி.எஸ்.இ., - மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ., ஆகிய, அனைத்து பாடத்திட்ட தனியார் பள்ளிகளிலும், நீட், ஜே.இ.இ., - சி.ஏ., போன்ற, நுழைவு தேர்வுகளின் பெயரில், சிறப்பு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சி மையங்கள் புற்றீசலாக, ஆங்காங்கே பல்வேறு பெயர்களில் நிறுவப்படுகின்றன.

மேலும், மாநிலம் முழுவதும், டியூஷன் சென்டர்களும் பெருகி வருகின்றன. இந்த மையங்களின் பின்னணியில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியில் உள்ளவர்கள் பலர், டியூஷன் சென்டர்களின் உரிமையாளர்களாக உள்ளனர். இதற்கான பட்டியல் எடுக்கும் பணி நடந்து வருகிறது.ஆசிரியர்கள் டியூஷன் சென்டர்கள் வைத்துள்ளதால்,தங்கள் பள்ளிக்கு வரும்,மாணவர்களை டியூஷனுக்கு வரவைத்து, கட்டணம் பெற்று, சிறப்பு பயிற்சி அளிக்கின்றனர். அதனால், பள்ளிகளில் பாடங்களை ஒழுங்காக நடத்துவதில்லை.

இதை ஊக்குவித்தால், பொருளாதார வசதியுள்ள மாணவர்கள் மட்டுமே, டியூஷனில் சேர்ந்து, சிறப்பு பயிற்சி பெற்று, அதிக மதிப்பெண் வாங்கும் நிலை வரும். டியூஷன் சென்டர்கள் எவ்வித சட்ட அங்கீகாரமும் இல்லாமல் செயல்படுவதோடு, பாதுகாப்பில்லாத வகையில், சிறிய கட்டடங்களில், சிறிய அறைகளில், மாணவர்களை நெருக்கடியாக அமர வைத்து பாடங்களை நடத்துகின்றன.இதனால், மாணவர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. டியூஷன் சென்டர்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு, முறையான கணக்குகள் இல்லை. எனவே, இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சிறப்பு பயிற்சி மையங்கள் மற்றும் டியூஷன் சென்டர்களை, அரசின் கண்காணிப்பில் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.

அதனால், பயிற்சி மையங்கள் மற்றும் டியூசன் சென்டர்களுக்கு, இனி அரசின் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகும். இதற்கான சட்டமும், விதிமுறைகளும் விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீட் தேர்வு


நீட் தேர்வு 2 கட்டங்களாக நடத்தப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நீட் நுழைவுத் தேர்வு இனிமேல் சிபிஎஸ்இ-க்கு பதிலாக, தேசிய தேர்வு முகமை மூலம், வருடத்திற்கு 2 கட்டங்களாக நடத்தப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.டெல்லியில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, தேசிய தகுதி தேர்வான நெட் மற்றும் ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் இனிமேல் தேசிய தேர்வு முகமை மூலமே நடத்தப்படும் என்றார்.

அனைத்து நுழைவுத் தேர்வுகளும் கணினி மூலமே நடத்தப்படும் எனத் தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர், இதற்கான பயிற்சி மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என்றார்.அனைத்து நுழைவுத் தேர்வுகளும் வருடத்திற்கு 2 மாதங்களில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று கூறிய அவர்,  நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். 

மாணவர்கள் 2 கட்டத் தேர்வுகளிலும் பங்கேற்கலாம் என்றும், அதில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதுவே மாணவர்களின் மதிப்பெண்களாக கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.நீட் முதல் கட்டத்தேர்வு பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதிக்குள் 4 நாட்கள் நடைபெறும் என்றும், இரண்டாம் கட்ட நீட் தேர்வு மே மாதம் 12-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதிக்குள் ஏதேனும் 4 நாட்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.தேர்வு நடைபெறும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர், எந்த தேதியில் தேர்வு எழுதுவது என்பதை மாணவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், பாடத்திட்டம், தேர்வுக்கட்டணம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

Friday, July 06, 2018

பிளாஸ்டிக் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள்: அரசாணை வெளியீடு


தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்பட்ட நிலையில், சில வகைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டில் இருந்து தடை விதிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் அதற்கான அரசாணையை சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுதின் அண்மையில் வெளியிட்டார். அதில், சில பிரிவுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி சார்ந்த ஆலைகளில்... சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த ஆலைகளில் ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பைக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

உற்பத்தி அல்லது பதனிடுதலில் சிப்பம் கட்டவும் (பேக்கிங்), மூடி முத்திரை இடும் பணிக்காகவும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அரசுத் துறைகளின் கொள்முதல் உத்தரவைப் பெற்றுள்ள மலர் சாகுபடி மற்றும் தோட்டக்கலை மையங்கள் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தலாம். பால் மற்றும் பால் பொருள்கள், எண்ணெய், மருந்து மற்றும் மருந்து உபகரணங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தத் தடை இல்லை.

பிளாஸ்டிக் பைகளைத் தயாரிக்கும் போது அவற்றில், மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்குகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட வேண்டும். மேலும், அதில், இந்திய தரச் சான்று 17088: 2088 உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.

Thursday, July 05, 2018

*தமிழகத்தில் 7 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு.*


உதவித்தொகை குறித்த தகவல்


உதவித்தொகை

*மாணவிகளுக்கான யுகம் ஸ்காலர்ஷிப்*:

விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி!
மாணவிகளுக்கான யுகம் (UGAM) ஸ்காலர்ஷிப் அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இந்த கல்வி உதவித்தொகையினை பெற விரும்புவோர் வரும் 15-07-2018 க்குள் விண்ணப்பிக்கலாம்.

*யார் விண்ணப்பிக்கலாம்:*

12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் 75 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

*மேலும் விண்ணப்பிக்கும் மாணவியின் குடும்ப ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் அதிகமாக இருக்க கூடாது.*

கல்வி ஆண்டில் பிஇ, பிடெக், பிஆர்க் போன்ற படிப்புகள் பயில இந்தியாவில் ஏதாவது ஒரு கல்லூரியில் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

*ஸ்காலர்ஷிப்:*

ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் உதவித்தொகை அல்லது 60 சதவிகித படிப்பு செலவு ஏதாவது ஒரு முறையில் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்.

*விண்ணப்பிக்க கடைசி தேதி:* ஜூலை 15, 2018.

*விண்ணப்பிக்கும் முறை:* இந்த 👉🏽http://www.legrandscholarship.co.in/லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்

நன்றி

📗📗📗📗📗📗📗📗📗📗

              🇲‌🇮‌🇳‌🇳‌🇦‌🇱‌ 

   🇰‌🇦‌🇱‌🇻‌🇮‌🇸‌🇪‌🇮‌🇹‌🇭‌🇮‌

       📚 🔟  🇬‌🇷‌🇴‌🇺‌🇵‌🇸‌📚

*🎯🎯விரிவான செய்தி*

*Ⓜ💫💫200 + அட்மிஷன், 5 ஸ்மார்ட் கிளாஸ்... அசத்தும் திருப்பூர் அரசுப் பள்ளி*

அ ரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் விரும்புவதில்லை என்று ஒருபக்கம் குறையாகச் சொல்லிக்கொண்டிருந்தாலும், ஓர் அரசுப் பள்ளியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 250 யைத் தொடவிருக்கிறது. அதுவும் ஒரு தொடக்கப்பள்ளியில்.

இந்த முரண்பாடு ஆச்சர்யத்தை அளிக்கிறது அல்லவா! அசாத்தியமான மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அந்தப் பள்ளியின் ஆசிரியர் மணிகண்ட பிரபுவிடம் பேசினேன்.

``திருப்பூரின் புறநகர்ப் பகுதியான பூலுவபட்டியில் எங்கள் பள்ளி உள்ளது.

நீங்கள் சொல்வதைப் போலதான் இந்தப் பகுதி மக்களும் தனியார் பள்ளியில் தம் பிள்ளைகளைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டிவந்தனர். இதை மாற்ற என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.

தனியார் பள்ளியில் எவையெல்லாம் எதிர்பார்த்து செல்கின்றனரோ அவற்றை நம் பள்ளியில் கொண்டுவந்துவிடலாம் என முடிவெடுத்தோம்.

பள்ளியின் தரைப்பரப்புக்குக் கிரானைட் போடுவதற்கு, ஆசிரியர்கள் குறிப்பிட்ட தொகையை அளித்தனர்.

மீதத் தொகையை நன்கொடை மூலம் திரட்டினோம். ஏழரை லட்சம் ரூபாய் செலவழித்து அழகான தரைகொண்ட வகுப்பறைகளை உருவாக்கினோம்.


பிறகு, ஒரு தன்னார்வ நிறுவனம் எங்கள் பள்ளியோடு கைகோக்க விரும்பியது.

அதன்மூலம் 17 கம்ப்யூட்டர்களும் 5 ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களும் உருவாக்கினோம்.

கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ஆசிரியர் ஒருவரை அந்நிறுவனமே நியமித்து உதவியது. இதையெல்லாம் மக்கள் உணர வேண்டுமே.

உடனே தலைமையாசிரியை ஆரோக்ய ஜாஸ்மின் மாலாவின் அனுமதியோடு பள்ளியின் புது மாற்றங்களைப் பட்டியலிட்டு ஃப்ளெக்ஸ் போர்டு வைத்தோம்.

அதைப் பார்த்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து பார்த்துச்சென்றனர்.

நாங்கள் அழைக்காமலேயே பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க முன்வந்தார்கள் பெற்றோர்கள்.

சென்ற ஆண்டில் 245 மாணவர்கள் எங்கள் பள்ளியில் சேர்ந்தார்கள்.

இந்த எண்ணிக்கை நாங்கள் நினைத்ததை விடவும் அதிகம்.

அதனால், இன்னும் புதிய விஷயங்களைச் சேர்க்க முடிவெடுத்தோம்.

சிலம்பம், அபாகஸ், பரதம், செஸ், கராத்தே, பறை இசை எனச் சிறப்பு வகுப்புகள் மூலம் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்திவருகிறோம்.

பெற்றோர்களின் மொபைல் எண்ணுக்கு மாணவர்கள் பற்றிய தகவல்களை எஸ்.எம்.எஸ் மூலம் தெரியப்படுத்துகிறோம்.
மாதந்தோறும் கதை சொல்லும் நிகழ்ச்சியைத் தவறாமல் நடத்துகிறோம்.

கோவை சதாசிவம் எனும் கதை சொல்லி, பறவைகள், விலங்குகள் என இயற்கையில் நாம் பார்க்கத் தவறிய விஷயங்களைப் பற்றிக் கதையாக, பாட்டாகச் சொல்லிகொடுக்கிறார்.

அறிவியல் விழிப்பு உணர்வு சார்ந்த நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நடத்துகிறோம்.

திருப்பூர் புத்தகக் கண்காட்சி அறிவிப்பைப் பார்த்தவுடனே எங்கள் பள்ளி மாணவர்கள் `எப்போ சார், போவோம்?' எனக் கேட்டு நச்சரிப்பார்கள். எந்த வருடமும் புத்தகக் கண்காட்சிக்கு எங்கள் மாணவர்களோடு செல்ல தவறியதே இல்லை.

மாணவர்களுக்கு ஐ.டி கார்டு, பெல்ட் உள்ளிட்டவற்றை வழங்குவதோடு, விளையாட்டுக்கு எனத் தனி சீருடையை வடிவமைத்திருக்கிறோம்.

ஒவ்வொரு புதன் கிழமையும் அந்தச் சீருடைதான். பள்ளியைத் தூய்மையாக வைத்திருக்க, தனியார் நிறுவனத்தின் உதவியோடு ஆள்களை நியமித்திருக்கிறோம். இப்படிச் சொல்லிக்கொண்டே செல்லலாம்.

ஒன்றை மறந்துவிட்டேனே! ஒவ்வோர் ஆண்டும் அனைத்து மாணவர்களுக்கும் மல்டி கலரில் காலண்டர், டைரி தருகிறோம். இதற்கான செலவுகள் அனைத்தும் ஆசிரியர்களே ஏற்றுக்கொள்கிறார்கள்.

அந்தளவுக்கு ஒவ்வொரு முயற்சிக்கும் பள்ளி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பணியாற்றுகிறார்கள்.
இந்த ஆண்டில் இப்போது வரை 230 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

சேர்க்கை அதிகரிக்கும் என்று நம்புகிறோம். இவர்களில் பலர் சென்ற ஆண்டு தனியார் பள்ளிகளில் படித்தவர்கள்.

மாணவர்களின் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர்களையும் அதிகரித்திருக்கிறோம்.
கிராமப் புற மாணவர்களை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

இதைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு தங்கள் பிள்ளைகளை இத்தகைய பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்று நம்பிக்கையோடு பேசினார் ஆசிரியர் மணிகண்ட பிரபு.

மற்ற அரசுப் பள்ளிக்கு
பெரும்உதாரணமாகத் திகழ்ந்துவருகிறது பூலுவபட்டி பள்ளி.

*மின்னல் கல்வி செய்தி குழுவில் இணைவதற்கு  ADD MKS என type செய்து   6380815982 என்ற WHATSAPP எண்ணிற்கு அனுப்பவும்.*

➖➖➖➖➖➖➖➖➖➖
  *⚡மின்னல் கல்விச்செய்தி⚡*
*Ⓜ1⃣➡2⃣➡3⃣➡4⃣➡5⃣➡6⃣➡7⃣➡8⃣➡9⃣➡🔟Ⓜ*
     
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯