Saturday, June 30, 2018
Friday, June 29, 2018
பாடப் புத்தகத்தில் கி.மு., கி.பி. என்ற நிலையே நீடிக்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பாடப் புத்தகத்தில் கி.மு., கி.பி. என்ற நிலையே நீடிக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு அதிமுக உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை இந்தப் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது பேசிய அவர், பொதுவாக வரலாற்றில் நாம் ஆண்டுகளை கி.மு., கி.பி., என்று குறிப்பிடுவது வழக்கம். இப்போது நமது புதிய கல்வித் திட்டத்தில் பொது ஆண்டுக்குப் பின், பொது ஆண்டுக்கு முன் என்று குறிப்பிட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன.
அவ்வாறு குறிப்பிட்டால் அது வரலாற்றுப் பிழையாக அமைந்து விடும் என்றார். இதே பிரச்னையை காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் எழுப்பினார். இதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளிக்கையில், இந்த அரசைப் பொருத்தவரையில், கி.மு., கி.பி. என்ற நிலைதான் நீடிக்குமே தவிர, வேறு ஒன்றும் நீடிக்காது என்றார்.
Wednesday, June 27, 2018
Tuesday, June 26, 2018
பள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு வாரம் கெடு
அனைத்து பள்ளிகளின் கழிப்பறைகளையும், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், துாய்மைப்படுத்தி, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித் துறையில், அமைச்சர், செங்கோட்டையன், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். நிர்வாக சீர்திருத்தம், பள்ளிகளை தரம் உயர்த்துவது, ஆசிரியர்களின் பணி நிர்வாகத்தை சீரமைப்பது, கல்வி தரத்தை உயர்த்துவது என, பல்வேறு திட்டங்கள் அமலுக்கு வந்து உள்ளன.தற்போது, பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அவற்றில் சிறப்பு கவனம் செலுத்த, அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர், செங்கோட்டை யன், கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.கடித விபரம்:தமிழகத்தில் உள்ள, நர்சரி, பிரைமரி பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், வளாகத்தின் துாய்மையை மேம்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் குப்பை, கூளங்களை அகற்றி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு, குடிநீர் மற்றும் பயன்பாட்டுக்கான நீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.பள்ளி வளாகத்திலுள்ள, இரு பாலின கழிப்பறைகளையும் முழுமையாக துாய்மைப்படுத்தி, மாணவர்கள் தயக்கமின்றி பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை, ஒரு வாரத்தில் முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Monday, June 25, 2018
பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த திட்டம் : சி.இ.ஓ.,க்களை கண்காணிக்க இணை இயக்குனர்கள்
பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த கட்டமாக, மாவட்ட வாரியாக, இணை இயக்குனர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகளை கண்காணிக்கும் பணியில், இணை இயக்குனர்கள் ஈடுபடுவர்.தமிழக பள்ளிக்கல்வியில், 40 ஆண்டுகளுக்கு பின், மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்திருத்தம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக, தொடக்க கல்வி மற்றும் மெட்ரிக் இயக்குனரகத்தின் மாவட்ட அலுவலகங்கள் மூடப்பட்டன.அந்த நிர்வாகத்தில் இருந்த பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்குனரத்தின் மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வந்தன. அதிகாரம்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.க்கள், கூடுதல் அதிகாரம் மிக்கவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். பணி நியமனம், பணி மாறுதலுக்கான அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.அடுத்த சீர்திருத்தமாக, சென்னையில், தலைமையகத்தில் பணியாற்றும் இணை இயக்குனர் பதவிகள், மண்டல இணை இயக்குனர் பதவியாக மாற்றப்பட உள்ளது.
இதன் படி, பள்ளிக்கல்வி தலைமையகத்தில், சில இயக்குனர்கள் மட்டும் பணியில் இருப்பர்; மற்ற இணை இயக்குனர்கள், மண்டல வாரியாக, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், வேலுார், தஞ்சாவூர், நாமக்கல் என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட உள்ளன. இவற்றில், ஒவ்வொரு மண்டல தலைமையகத்திலும், அருகில் உள்ள மாவட்டங்கள் இணைக்கப்படும்.அந்த மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள், நேரடியாக, இணை இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும்.
அரசாணைஇணை இயக்குனர்களுக்கு உதவியாக, துணை இயக்குனர்களும், மண்டல அலுவலகத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்வர்.இதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சட்ட ஆய்வு நடத்தி, அமைச்சர் மற்றும் செயலரின் மேற்பார்வையில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவில், அரசாணை வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பாடம் நடத்தும் போதே 'நீட்' தேர்வுக்கு பயிற்சி: அரசு பள்ளிகளில் புதிய திட்டம்
பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே, 'நீட்' தேர்வுக்கான பயிற்சி வினாக்களுக்கு, மாணவர்களை தயார்படுத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வு கட்டாயமானதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சி முறையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வெறும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இதுவரை மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள், திடீரென, பிளஸ் 2 அல்லாத, நீட் நுழைவு தேர்வு வினாக்களை சந்திக்கவும், சிறப்பு பயிற்சி பெற வேண்டியுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 2017-18ல்,தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக, நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக அரசின் இலவச பயிற்சி பெற்ற, 1,300 மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 20 பேர் மட்டுமே, மருத்துவ படிப்புகளில் சேரும் நிலை உள்ளது.
இந்த ஆண்டு, மருத்துவ படிப்பில் சேரும், அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, நீட் சிறப்பு பயிற்சி மட்டுமின்றி, கல்வி ஆண்டு துவக்கம் முதலே, வகுப்புகளில் இருந்தே, மாணவர்களை தயார்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடம் நடத்தும் போதே, இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், நீட் தேர்வுக்கான பழைய வினாக்கள் இடம் பெற்று இருந்தால், அது பற்றி சிறப்பு கவனம் எடுத்து, மாணவர்களுக்கு விளக்கம் தர வேண்டும். நீட் தேர்வு வினா வங்கியை பயன்படுத்தியும், அதிலுள்ள, எம்.சி.க்யு., என்ற, பல்வகை விடைக்குறிப்பு அடங்கிய வினாக்களின் மாதிரியை பயன்படுத்தியும், பள்ளியின் மாதிரி தேர்வுகளில் வினாக்களை இடம் பெற செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நடைமுறையை, தனியார் பள்ளிகள் ஏற்கனவே பின்பற்றுகின்றன.
Sunday, June 24, 2018
ஆசிரியர்களின் பணியை கண்காணிக்க வந்துவிட்டது அலைபேசி செயலி
பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' முறையை கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க 'சி.இ.ஓ., போர்டல்' என்ற புதிய அலைபேசி செயலியை கல்வித்துறை கொண்டு வருகிறது. பள்ளி அமைவிடம் குறித்த அட்ச, தீர்க்க ரேகை விபரங்களும் இருக்கும். அந்த செயலியை ஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போனில்' பதிவிறக்கம் செய்து பள்ளிக்குள் செல்லும்போதும், வெளியேறும்போதும் விரல்ரேகையை பதிய வேண்டும்.
அட்ச, தீர்க்க ரேகையில் அதிகபட்சம் 100 மீ., வரை வேறுபாடு இருந்தால் மட்டும் ஏற்கும். ரேகை பதியாவிட்டால், விடுப்பு விபரங்களை பதிய வேண்டும்.அதேபோல் மாணவர் வருகைப் பதிவுக்கு 'டி.என்., அட்டனென்ஸ்' என்ற செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அவரவர் அலைபேசி மூலம் மாணவர்கள் வருகைப்பதிவையும் மேற்கொள்ள வேண்டும். விடுப்பு எடுக்கும் நாட்களில், அவரது வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவை பிற ஆசிரியர்கள் பதியலாம்.
ஆசிரியர்கள் தங்களது அலைபேசி மூலம் பதிந்தால் மட்டுமே, பணிக்கு வந்ததாக கருதப்படும்.மேலும் பாடப்புத்தகத்தில் 'கியூ.ஆர்., கோடை' 'ஸ்கேன்' செய்து பாடம் எடுக்க வேண்டும். இதன்மூலம் அவர் எந்தந்த பாடங்களை அன்றைய தினம் கற்பித்தார் என்பதை கண்காணிக்கலாம். அவர் 'கியூ.ஆர்., கோடை' 'ஸ்கேன்' செய்யவில்லை எனில் பாடம் எடுக்கவில்லை என, கருதப்படும்.
தரவுகள் அனைத்தும் அதிகாரிகள் பார்வைக்கு செல்வதால் ஆசிரியர்கள் வருகை பதிவு, பாடம் நடத்தியது போன்ற விபரங்களை உடனுக்குடன் அறியலாம்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'ஏற்கனேவே 'எமிஸ்,' 'டீச்சர் புரைபைலில்' சேகரிக்கப்பட்ட மாணவர், ஆசிரியர்கள் விபரங்கள் உள்ளன. மேலும் ஆசிரியர்களின் அலைபேசி எண் விபரம் சேகரிக்கப்பட உள்ளன. இதன்மூலம் முறையாக பணிக்கு செல்லாத ஆசிரியர்கள் சிக்குவர்,' என்றார்.
Saturday, June 23, 2018
Friday, June 22, 2018
ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் திடீர் சிக்கல்
கல்வித்துறையில் புதிய மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கான (டி.இ.ஓ.,) ஒன்றியங்கள் விவரம் குறித்த வரையறை உத்தரவு வெளியிடப்படாததால் ஆசிரியர், அலுவலருக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஜூன் 1 முதல் நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு அனைத்து வகை பள்ளிகளும் சி.இ.ஓ.,க்கள் கீழ் கொண்டு வரப்பட்டது
17 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (ஐ.எம்.எஸ்.,) அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு உட்பட்ட கல்வி ஒன்றியங்களை மாற்றியமைத்து புதிதாக 52 டி.இ.ஓ., அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.இப்புதிய டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு கண்காணிப்பாளர் உட்பட அனுமதிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களுக்கும் இதுவரை அனுமதி இல்லை. இந்நிலையில் டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றியங்கள், இடம் பெற்ற பள்ளிகள் விவரம் குறித்த எல்லை வரையறைக்கான அரசு உத்தரவும் வெளியாகவில்லை.கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புதிய டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி ஒன்றியங்கள் விவரம் குறித்த வரையறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதை மாவட்ட, உதவி கருவூலங்கள், சம்பள கணக்கு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் தான் ஆசிரியர், அலுவலருக்கான சம்பளம் வழங்கப்படும். வரையறை உத்தரவு பிறப்பிக்கப்படாததால் இம்மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும், என்றார்.
10 மாணவருக்கு குறைவான பள்ளிகள் பட்டியல் அனுப்ப இயக்குனர் உத்தரவு
பத்து மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளின் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட கல்வி அதிகாரி களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.தமிழக அரசு பள்ளிகள் பலவற்றில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. குறிப்பாக, தொடக்கப் பள்ளிகளில், ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர். 10 மாணவர்களுக்கு குறைவாக, 890 பள்ளிகளும், ஒரு மாணவர் கூட இல்லாமல், 29 பள்ளிகளும் செயல்படுகின்றன.
இந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதியமாக பல லட்சம் ரூaபாய் செலவிட்டும், மாணவர் சேர்க்கையில் முன்னேற்றம் இல்லை. எனவே, 'ஆசிரியர்கள், தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்த கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை உயராவிட்டால், அந்த பள்ளிகளை மூடுவது குறித்து, அரசு பரிசீலிக்கும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்டில் மாணவர் சேர்க்கை முடிய உள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கு முன்னும், பின்னும் அறிக்கை தர, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகள் மூடப் படுவதை தவிர்க்க, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம், ஆசிரி யர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மகப்பேறு விடுப்பு அரசு புது உத்தரவு
இரட்டைக் குழந்தை பெற்ற, அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, இரண்டாவது மகப்பேறுக்கும் விடுமுறை வழங்கலாம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, 270 நாட்கள், மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.
இதற்கான அரசாணை, 2016 நவம்பரில் வெளியானது. அதில், திருமணமான அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, இரண்டு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பாக, தலா, 270 நாட்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.ஆனால், முதல் பிரசவத்திலேயே இரட்டை குழந்தைகள் பெற்றால், அவர்களுக்கு, இரண்டாவது மகப்பேறுக்கு விடுப்பு அளிக்க அதிகாரிகள் மறுத்தனர்.
இந்நிலையில், முதலாவது மகப்பேறில் எத்தனை குழந்தைகள் பெற்றாலும், அவர்களுக்கு இரண்டாவது மகப்பேறுக்கும், 270 நாட்கள் விடுமுறை அனுமதிக்கலாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, பணியாளர் நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள அரசாணையை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது
Thursday, June 21, 2018
அனைத்து பள்ளிகளுக்கும் பொதுவான ஒரே சட்டம்: உருவாக்கியது தமிழக அரசு: சட்டத்துறை ஆய்வு
தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் சமமான விதிகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து பள்ளிகளுக்கான, விரிவான பொது சட்டத்தை, தமிழக அரசு உருவாக்கி உள்ளது.
இந்த சட்டத்தின் அம்சங்களை, தமிழக சட்டத் துறை ஆய்வு செய்து வருகிறது.சுதந்திரத்துக்கு முன், ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்காக, சென்னையில், டி.பி.ஐ., என்ற பெயரில், பள்ளிக்கல்வி இயக்குனர்கள் அடங்கிய, பொது உத்தரவு இயக்குனரகம் செயல்பட்டது.
சுதந்திரத்துக்கு பின், தமிழகத்துக்கான பள்ளிக் கல்வி இயக்குனரகமாக, டி.பி.ஐ., வளாகம் மாற்றப்பட்டது. தமிழக பள்ளிகள், 1892ல் இயற்றப்பட்ட, மெட்ராஸ் கல்வி விதிகளின் படி செயல்பட்டன. பின்,1920ல்,மெட்ராஸ் தொடக்க பள்ளிகள் சட்டம் அமலுக்கு வந்தது. இதை அடுத்து, 1973ல், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, தனியாக சட்டம் இயற்றப் பட்டது.
இந்த சட்டப்படி, 1976 முதல், மெட்ரிகுலேஷன் பாடத்திட்ட பள்ளிகளுக்கு, சென்னை மற்றும் மதுரை பல்கலைகள் அனுமதி வழங்க, அரசு ஒப்புதல் அளித்தது.பின், 1994ல், தமிழ்நாடு கட்டாய தொடக்க கல்வி சட்டம் இயற்றப் பட்டது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தை, 2009ல் மத்திய - மாநில அரசுகள் தனித்தனியாக இயற்றின.
இந்த சட்டங்களின் கீழ், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தனியாகவும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் பள்ளிகளுக்கு தனித்தனியாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிகளை பின்பற்றி, ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு விதமாக செயல்படுகின்றன.
இதனால், இந்த பள்ளி களின் பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் மற்றும் பணி யாளர்கள் நியமனம், அவர்களுக்கான பணி விதிகள், ஊதிய விகிதம் என, அனைத்தும் வெவ்வேறாக பின்பற்றப்படுகின்றன.
இந்த விதிகளில், பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால், நீதிமன்ற வழக்குகளின்போது, கல்விதொடர்பான வழக்குகளில் முடிவு எடுப்பதில், பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், சமமான நிர்வாக முறை இல்லாததால், ஆசிரியர்கள், பணி யாளர் நியமனங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டு உள்ளன.இந்த நிலையை மாற்ற, அனைத்து பள்ளி களுக்கும், ஒரே விதமான சட்டத்தை உருவாக்க, 40 ஆண்டுகளுக்கு முன்,உச்ச நீதிமன்றமும், பின், உயர் நீதிமன்றமும் பரிந்துரைத்தன.
இந்நிலையில், தற்போதைய நிர்வாக சீர் திருத்தத் தின் முக்கிய அம்சமாக, அனைத்து பள்ளிகளுக்கு மான பொது பள்ளிகள் சட்டத்தை, தமிழக அரசு தயாரித்துள்ளது.இதற்கான முதற்கட்ட பணிகள் முடிந்த நிலையில், சட்டத்தின் முக்கிய அம்சங் களை, சட்டத்துறை ஆய்வு செய்யத் துவங்கி உள்ளது. விரைவில் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.
முக்கிய அம்சங்கள் என்ன?
* அரசு பள்ளிகள், அரசு உதவி பள்ளிகள், மெட்ரி குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் மற்றும் தமிழக பாடத்திட்டத்தை நடத்தும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் ஆகியவற்றுக்கு, தற்போது அமலில் இருக்கும், தனித்தனி விதிகள்ரத்தாகும். இனி, புதிய சட்டத்தில்இடம்பெற்றுள்ள விதிகளையே, அனைத்து வகையான பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்
* மாணவர்கள் சேர்க்கையில், அரசு பள்ளிகளைப் போன்றே, நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன்
மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளும், இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும்
* அனைத்து பள்ளிகளுக்கும், தனியார்சுயநிதி பள்ளிகள் கட்டண நிர்ணய கமிட்டியே, கட்டணத்தை நிர்ணயிக்கும்
* ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனத்தில், அரசு பள்ளிகளின் அனைத்து விதிகளையும், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் பின்பற்ற வேண்டும். சிறுபான்மை பள்ளிகளுக்கு, இந்திய அரசியல் அமைப்பு வழங்கியுள்ள சலுகைகளின் படி, இயங்க அனுமதிக்கப்படும். ஆனால் பள்ளிகள், பொது சட்டத்தையே பின்பற்ற வேண்டும்
* தனியார் பள்ளிகளின் ஆசிரியர், பணியாளர்களுக்கு, அரசு பள்ளிகளை போல ஊதியம் வழங்க வேண்டும். பணி நியமனங்களில், அரசு விதிக்கும் கல்வித்தகுதி மற்றும் விதிகளை பின்பற்ற வேண்டும். ஆனால், நியமன பணிகளை, தனியார் பள்ளி நிர்வாகமே மேற்கொள்ளலாம்.
* மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிஅமர்த்தப்பட வேண்டும். உள் கட்டமைப்பு விதிகளையும், அங்கீகார விதிப்படி மேற்கொள்ள வேண்டும். பொது பள்ளி சட்டத்தின் படியே, புதிதாக துவக்கப்படும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும்.இந்த அம்சங்கள் எல்லாம், புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Wednesday, June 20, 2018
மன உளைச்சலில் 4 ஆயிரம் ஆசிரியர் பயிற்றுனர்கள் : 4 ஆண்டுகளாக இல்லை கலந்தாய்வு
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) ஆசிரியர் பயிற்றுனருக்கான கலந்தாய்வு நான்கு ஆண்டுகளாக நடக்காததால் ஆசிரியர்கள் மனஉளைச்சலில் தவிக்கின்றனர்.ஆண்டுதோறும் பள்ளி கல்வி கலந்தாய்வுக்கு பின், ஆசிரியர் பயிற்றுனருக்கான மாறுதல் நடக்கும். இது 2013க்கு பின் நடக்கவில்லை. 'ஒவ்வொரு ஆண்டும் 500 பேர் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியராக மாற்றம் செய்யப்பட வேண்டும்,' என்ற உத்தரவும் பின்பற்றப்படவில்லை.
இந்நிலையில் 2014ல் பத்து பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியர் பயிற்றுனர் என நிர்ணயம் செய்யப் பட்டது. இதனால் மதுரை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 398 பேர் பணிநிரவல் அடிப்படையில் வட மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். பின் புதிய நியமனம் இல்லை. இதனால் 'காலிப் பணியிடம் இல்லை,' என கூறி 2014 - 17 வரை கலந்தாய்வு நடத்தாததால் 3944 ஆசிரியர் பயிற்றுனர்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. அதன் உத்தரவால் 23.2.2018 ல் 350 பேர் பள்ளிகளுக்கு ஆசிரியராக மாற்றப்பட்டனர். காலியிடமான அந்த 350 இடங்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:
பள்ளி கல்விக்கு மாற்றப்பட்ட 350 பேர் தவிர பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மூலம் புதிய காலி பணியிடங்கள் ஏற்பட்டு 600க்கும் மேற்பட்ட இடங்கள் தற்போது உள்ளன. ஜூன் 30க்குள் மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை என்றால், ஜூலை 1 முதல் குடும்பத்துடன் சென்னையில் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும், என்றார்.