இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, May 30, 2018

அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு


அரசுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் உடனடியாக வரும் ஜூன் மாதத்திலே மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெறலாம். அதிலும் தவறும் மாணவர்களுக்காக அவர்கள் பயின்ற பள்ளியிலேயே மீண்டும் பயில்வதற்கு அரசு பரிசீலனை செய்து வருகிறது.

தற்போது தரப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள், எளிதில் தீப்பிடிக்காத, கிழியாத வகையில் உள்ளன. ரூபாய் நோட்டுகளில் இருப்பதுபோல 11 ரகசிய குறியீடுகள் கொண்ட பாதுகாப்பு அம்சங்கள்கூடிய மதிப்பெண் சான்றிதழில் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் மாணவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.

1, 6, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு 2018–2019–ம் ஆண்டுக்கான புதிய பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது கல்வியாளர்கள் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. மூன்று ஆண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் என்ற இலக்கை, இந்த ஆண்டிலேயே அடையத் தீர்மானித்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

மேல்நிலை வகுப்புகளில் மொழிப்பாடங்களில் உள்ள தாள் 1 மற்றும் 2 ஆகியவற்றை ஒரே தாளாக மாற்றியமைக்க அரசு பரிசீலித்து வருகிறது.

நீட் தேர்வுக்கு 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டன. உணவு மற்றும் தங்கும் வசதிகளுடன் 9 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, 26 நாட்களுக்கு, ஸ்பீடு, சைதன்யா, ஆலன் போன்ற சிறந்த நிறுவனங்களுடன் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதன்மூலம், மருத்துவ நுழைவுத் தேர்வை மாணவர்கள் எளிதாக எதிர்கொண்டனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 150 நடுநிலைப் பள்ளிகளும், 100 உயர்நிலைப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டன. இந்த ஆண்டு 100 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கள் தொகை அதிகமுள்ள பள்ளிகள் இல்லாத குடியிருப்புப் பகுதிகளில் 20 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்களில் 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும் 2,373 முதுகலை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

128 பள்ளிகளுக்கு ரூ.1 கோடியே 92 லட்சம் செலவில் புதுமைப்பள்ளி விருது வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 1 லட்சம் ரூபாயும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.

அதுபோல 192 ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.19.2 லட்சம் செலவில் பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய கனவு ஆசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விப் பயிலும் 10 மற்றும் 12–ம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது. மாவட்டத்திற்கு 30 மாணவர்கள் என மொத்தம் 960 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட உள்ளது.

8 முதல் 12–ம் வரை பயிலும் மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகிய ஒவ்வொரு துறையிலிருந்தும் தலா 25 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் மற்றும் ஒரு பணியாளர் வீதம் மொத்தம் 112 பேர் ரூ.3 கோடி செலவில் வெளிநாட்டு கல்விச்சுற்றுலா அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தற்போது முதல்கட்டமாக, பின்லாந்து அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 50 மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பின்லாந்து, சுவீடன் அழைத்துச் செல்ல ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளை எளிமைப்படுத்துவதற்காக அதன் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு 68 மாவட்ட கல்வி அலுவலகங்கள் நிர்வாக வசதிக்காக 120 மாவட்ட கல்வி அலுவலகங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.

ரூ.200 கோடி செலவில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், தளவாடங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், கழிப்பறைகள், குடிநீர்வசதி மற்றும் சுற்றுச்சுவர் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளிகளில் தூய்மைப் பணிகளை 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டப் பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பள்ளிக் கல்வி இயக்கக டி.பி.ஐ. வளாகத்தில் எம்.ஜி.ஆரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் பெயரில், ஒரு லட்சம் சதுரஅடி பரப்பளவில் ரூ.39.90 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த கல்வித் துறைக்கான கட்டிடம் கட்டும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

3 ஆயிரத்து 90 உயர்நிலைப் பள்ளிகளில் 10 கணினிகளுடனும், 2 ஆயிரத்து 939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு 20 கணினிகளுடனும் கூடிய ஹைடெக் ஆய்வகம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3 ஆயிரம் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.60 கோடி செலவில் ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசுப் பள்ளிகளில் உலகத்தர தொழில்நுட்பத்தோடு ரோபாடிக் பயிற்சி வகுப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடங்க பரிசீலித்து

வருகிறது.

கடைசியாக எடுத்த புள்ளி விவரத்தின்படி, இந்தியாவின் எழுத்தறிவு நிலை 74.04 சதவீதமாகும். தமிழகத்தின் எழுத்தறிவு சதவீதம் 80.3 ஆகும். தற்போதும்கூட, பள்ளிகளே இல்லாத பகுதிகளில் 20 புதிய தொடக்கப் பள்ளிகள் திறந்து அரசு சாதனை புரிந்துள்ளது. 2020–ம் ஆண்டிற்குள் நூலகங்களில் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். உலகத் தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் ரூ.6 கோடி மதிப்பில் மாபெரும் நூலகம் அமைக்க ஆவன செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பதிலளித்துப் பேசினார்.

அதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறைக்கான புதிய அறிவிப்புகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:–

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகைப் பதிவு, பயோமெட்ரிக் என்ற தொட்டுணர் கருவி மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.

அரசுப் பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்படும்.

பாடத் திட்டத்துடன் திறன் சார்ந்த கல்வியைப் பெறும் வகையில் 2018–19–ம் ஆண்டில் 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும்.

1896–ம் ஆண்டு கட்டப்பட்டு, 122 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த கன்னிமாரா பொதுநூலகம் புதுப்பிக்கப்படும். காஞ்சீபுரம், திருவள்ளூர், திருப்பூர் மாவட்ட நூலகங்கள் நவீன வசதியுடன் கூடிய மாதிரி நூலகமாக மேம்படுத்தப்படும்.

மாணவர்களை அரசுப் பள்ளிகளுக்கு ஈர்க்கும் திட்டம், வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். அனைத்து ஒன்றியத் தலைமையிடங்களிலும் மாணவர்களுக்கான ஆதார் சேர்க்கை மையங்கள் உருவாக்கப்படும்.

ஒரு மாவட்டத்துக்கு ஒன்று வீதம் 32 மாவட்டங்களில் விளையாட்டு மேம்பாட்டுப் பள்ளிகள் ஏற்படுத்தப்படும். மாவட்ட மைய நூலகங்களில் பார்வையற்ற வாசகர்களுக்கென்று தனிப்பிரிவு தொடங்கப்படும்.

அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு மாதமும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தப்படும்.

பேராசிரியர்களின் வழிகாட்டுதலைப் பெறும் வகையில் உயர் கல்வி நிறுவனங்களுடன் அரசுப் பள்ளிகள் இணைக்கப்படும்.

பிற மாநில அறிவியல், தொழில்நுட்பம், கல்வி சார்ந்த தேசிய நிறுவனங்களைப் பார்வையிட தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் கீழ், ரூ.160 கோடி திட்ட மதிப்பீட்டில், செயல்படுத்தப்படும் கற்கும் பாரதம் என்ற திட்டத்தின் நிதி விவரங்களை நிர்வகிக்க உதவிக் கணக்கு அலுவலர் என்ற பணியிடம் உருவாக்கப்படும்.

படித்த இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்களைப் பெறுவதற்காக மென்பொருள் உருவாக்கப்படும். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை மாவட்ட நூலகங்களில் வைபை வசதி ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு அரசு கேபிள் தொலைத்தொடர்பு மூலம், கல்வி சார்ந்த காணொலிக் காட்சிகள் ஒளிபரப்பப்படும்.

பிளஸ் 1 மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


பிளஸ் 1 தேர்வில், மறுகூட்டலுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். சிறப்பு துணை தேர்வு, ஜூலை, 5ல் துவங்க உள்ளது.பிளஸ் 1 பொது தேர்வு முடிவு, நேற்று வெளியானது. இதில், 8.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாதவர்கள், சிறப்பு துணை தேர்வு எழுதலாம். அவர்களுக்கு, ஜூலை, 5 முதல் சிறப்பு துணை தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் தேதி, பின், அறிவிக்கப்படும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.பட்டியல் எப்போது?தேர்வு எழுதியவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம், ஜூன், 4 முதல் மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம். மேலும், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். அரசு தேர்வுத்துறையால், அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே, இந்த மதிப்பெண் பட்டியல் செல்லும்.

மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியரும், தனித்தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியரும், சான்றொப்பம் அளித்தால் மட்டுமே, மதிப்பெண் பட்டியல் செல்லும். எனவே, மதிப்பெண் பட்டியலில் சான்றொப்பம் பெற வேண்டும்.மறுகூட்டல்பிளஸ் 1 தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும், ஜூன், 1, 2 மற்றும், 4ம் தேதிகளில், பள்ளிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.மொழி பாடம் ஒன்றுக்கு, தலா, 550 ரூபாயும், முக்கிய பாடங்களுக்கு, தலா, 275 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் மறுமதிப்பீடு தேவை என்றால், அவர்கள் முதலில் விடைத்தாள் நகலை பெற வேண்டும். அதை ஆய்வு செய்து, மறுமதிப்பீடு தேவை என்றால் விண்ணப்பிக்கலாம்.விடைத்தாள் நகல் கேட்பவர்கள், மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை. விடைத்தாள் நகல் பெற்று, மறுமதிப்பீடு தேவையா அல்லது மறுகூட்டல் தேவையா என்பதை முடிவு செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.மறுகூட்டல், மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் ஒப்புகை சீட்டை பாதுகாக்க வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

நூலகங்களில், 'வைபை' ஆசிரியர்களுக்கு, 'பயோமெட்ரிக்'


அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவு, 'பயோமெட்ரிக்' முறைக்கு மாற்றப்படும். நுாலகங்களில், 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்தார்.சட்டசபையில், நேற்று பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக, செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்:

அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவுகள், மின்னணு வருகைப் பதிவு எனப்படும், 'பயோமெட்ரிக்' முறைக்கு மாற்றப்படும். அதற்கு, ஒன்பது கோடி ரூபாய் செலவிடப்படும்.அரசு பள்ளிகளில், 6.23 கோடி ரூபாய் மதிப்பில், நுாலகங்கள் அமைக்கப்படும்.மாணவர்கள், திறன் சார்ந்த கல்வியை பெறும் வகையில், 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 3.55 கோடி ரூபாய் செலவில், தொழிற்கல்வி திட்டம் செயல்படுத்தப்படும்.தொன்மை வாய்ந்த கட்டடம், அரிய வகை நுால்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாக்கும் வகையில், 1.50 கோடி ரூபாய் செலவில், குளிர்சாதன வசதியுடன், கன்னிமாரா நுாலகம் புதுப்பிக்கப்படும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள மூன்று நுாலகங்கள், 1.50 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் கூடிய, மாதிரி நுாலகங்களாகமாற்றப்படும். காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், பெரம்பலுார், திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி மாவட்டங்களில், பள்ளிகளுக்கு மாணவர்களை ஈர்க்கும் திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.இத்திட்டம், இந்த கல்வியாண்டில், 1.28 கோடி ரூபாய் செலவில், அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.அனைத்து ஒன்றிய தலைமை இடங்களிலும், மாணவர்களின் பயன்பாட்டிற்காக, ஒரு கோடி ரூபாய் செலவில், 'ஆதார்' சேர்க்கை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில், ஒரு மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம், 32 விளையாட்டு மேம்பாட்டு பள்ளிகள், 96 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்காக, 96 லட்சம் ரூபாய் செலவில், கணினி மூலமாக, நவீன தொழில்நுட்பத்துடன், பேசும் கருவி, பேசும் புத்தகம், மென்பொருள், கற்றல் உபகரணம், தொடுதிரை, தொடுகை வரைபடம், சிறப்பு விசைப்பலகை, ஒலிப்புத்தகம் ஆகிய வசதிகள், மாவட்ட மைய நுாலகங்களில் ஏற்படுத்தப்படும்.வரும் கல்வியாண்டில் இருந்து, ஒவ்வொரு மாதமும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்த, 90.97 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.மாணவர்கள் பயன்பெறும் வகையில், உயர் கல்வி நிறுவனங்களுடன், அரசு பள்ளிகளை இணைக்கும் திட்டம், 67 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.அரசு உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில், இடைநிலை கல்வி பயிலும் திறன்மிக்க மாணவர்கள், பிற மாநிலங்களில் உள்ள அறிவியல், தொழிற்நுட்பம், கல்வி சார்ந்த தேசிய நிறுவனங்களை பார்வையிட, வாய்ப்புகள் வழங்கப்படும்.இதற்காக, 40.20 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

அனைத்து மாவட்ட நுாலகங்களிலும், 32 லட்சம் ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் டிவி அல்லது எல்.இ.டி., புரஜெக்டர்' வசதி ஏற்படுத்தப்படும்.குடிமைப் பணி தேர்வுகள் உட்பட, அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தேவைப்படும் தகவல்கள், உரிய நேரத்தில் சென்றடையும் வகையில், பொது நுாலகங்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் செலவில், மென்பொருள் உருவாக்கப்படும்.மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் வகையில், 32 மாவட்டங்களிலும், தலா, 5,000 ரூபாய் வீதம், 'நுாலக ஆர்வலர் விருது' வழங்கப்படும்.

முதற்கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை மாவட்ட நுாலகங்களில், 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்.மாணவர்களுக்கு, பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, 'இளம் படைப்பாளர் விருது' வழங்கப்படும். மாணவர்களுக்கு பயன் தரும் வகையில், பல்வேறு பாடப்பிரிவுகளை சார்ந்த, 5,000 வீடியோக்கள் தொகுக்கப்பட்டு, தமிழக அரசு கேபிள் வழியாக, ஒரு மணி நேரம்ஒளிபரப்பப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு?


பகுதி நேர ஆசிரியர்களுக்கு, சம்பள உயர்வு வழங்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜக்கையன், அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்: அ.தி.மு.க., - ஜக்கையன்: பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அவர்கள், தற்போது, மாதம், 7,700 ரூபாய் மட்டுமே ஊதியம் பெறுகின்றனர்; அதை, 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.அமைச்சர்

செங்கோட்டையன்: மத்திய அரசின், சர்வ சிக் ஷ அபியான் திட்டத்தில், பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வாரத்தில், மூன்று நாட்கள், தலா, இரண்டு மணி நேரம் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும்படி வலியுறுத்தினோம்; மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. தமிழக அரசு, அவர்களின் இருப்பிடம் அருகே பணியமர்த்த, நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜக்கையன்: அவர்களுக்கு, மே மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை; அதை வழங்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: அதை வழங்கினால், அவர்கள் முழு நேர ஆசிரியர்களாகி விடுவர்.இவ்வாறு விவாதம் நடந்தது

General Transfer counseling Norms 2018-2019 👆


https://drive.google.com/file/d/1oZ5a_u4eqjS9Uxoasx6p2teXabjK8PpW/view?usp=drivesdk

Tuesday, May 29, 2018

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியீடு: தோல்வி அடைந்தாலும் பிளஸ் 2 படிக்கலாம்


தமிழகம், புதுச்சேரியில் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் புதன்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 7 -ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16 -ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் பள்ளி மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் தேர்வெழுதியுள்ளனர்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சில வினாடிகளில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களுக்கும் தேர்வுக்கு விண்ணப்பித்தபோது அவர்கள் அளித்திருந்த செல்லிடப்பேசி எண்ணுக்கு மதிப்பெண்களுடன்கூடிய தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாக அனுப்பப்படும்.

மேலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய அரசு தேர்வுத் துறையின் இணையதளங்களிலும் தேர்வு முடிவுகளை மதிப்பெண் விவரங்களுடன் அறிந்து கொள்ளலாம்.

தோல்வி அடைந்தாலும்: கடந்த 2017 -ஆம் ஆண்டு வரை பிளஸ் 1 தேர்வு, பள்ளி அளவிலான ஆண்டுத் தேர்வாகவே நடத்தப்பட்டது. இந்த ஆண்டிலிருந்துதான் முதல்முறையாக பொதுத் தேர்வாக நடத்தப்படுகிறது. தேர்வு முடிவு வெளியான பிறகு அனைவருக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களும் பிளஸ் 2 வகுப்புக்கு செல்லலாம். தேர்ச்சிபெறாத பாடங்களை சிறப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம்.

அடுத்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை முடிக்கும்போது, இரு பொதுத்தேர்வுகளின் (பிளஸ் 1, பிளஸ் 2) மதிப்பெண்கள் அடங்கிய தொகுப்பு மதிப்பெண் பட்டியல் அவர்களுக்கு வழங்கப்படும். ரேங்க் பட்டியல் இல்லை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 'ரேங்க்' பட்டியல் வெளியிடும் முறை கடந்த ஆண்டு கைவிடப்பட்டது.

அதன்படி, கடந்த 16 -ஆம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவின்போதும், 23 -ஆம் தேதி வெளியான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவின்போதும் 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்படவில்லை. அதேபோன்று புதன்கிழமை வெளியாக உள்ள பிளஸ் 1 தேர்வு முடிவிலும் ரேங்க் பட்டியல் வெளியிடப்படாது.

கோடை விடுமுறை முடிகிறது : ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு


கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், பள்ளிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், பள்ளி இறுதி தேர்வு மற்றும் பொது தேர்வுகள், ஏப்., 20ல் முடிந்தன. அடுத்த நாள் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. உத்தரவு : ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும்.

ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை போன்றே, ஏப்., மூன்றாவது வாரம் முதல், விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில், 41 நாட்கள் கோடை விடுமுறை, நாளை முடிவுக்கு வருகிறது. அனைத்து பள்ளிகளும், நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளன. அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும், ஜூன், 1 முதல் வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி திறப்பு நாளில், மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவு : இந்த ஆண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், பள்ளி திறக்கும் நாளிலேயே, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன.

பள்ளிக்கல்வித் துறையின் தொடர் நடவடிக்கைகள்

https://drive.google.com/file/d/1vY2yzKmgS9C9GfrLxllFsoxr9I1yREWv/view?usp=drivesdk

Monday, May 28, 2018

பிளஸ் 1 பாடப்பிரிவுகள் பள்ளிகளில் நிறுத்த தடை


மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1 பாடப்பிரிவுகளில், மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றும், எந்த பாடப்பிரிவையும் நிறுத்தக் கூடாது என்றும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றி, மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள், எந்த பிரிவாக இருந்தாலும், அவர்களை, பொது பிரிவினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். பொது பட்டியலில் வர தகுதியில்லாத, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களையே, இட ஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும். இதில், எந்த முறைகேடும் நடக்கக் கூடாது என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பிளஸ் 1ல், மாணவர்கள் எண்ணிக்கை குறைவு எனக்கூறி, எந்த பாடப்பிரிவையும் நிறுத்தக் கூடாது என்று, பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்துள்ள உத்தரவில், 'தற்போது, பிளஸ் 1 வகுப்பில், நடைமுறையில் உள்ள, எந்த பாடப்பிரிவையும், வகுப்பையும் நிறுத்தக் கூடாது. 'முழு அளவில் மாணவர்களை சேர்க்க வேண்டும். அதிக மாணவர்கள் இருந்தால், கூடுதலாக, ஒரு பிரிவு துவங்குவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களும் ஆலோசிக்க வேண்டும்' என, கூறியுள்ளார்

52 புதிய கல்வி மாவட்டங்கள் உதயமாகின்றன


மாநிலத்தில் 52 புதிய கல்வி மாவட்டங்கள் செயல்பட அரசாணை வெளியிட்டு முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.கல்வி துறையில் அரசு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலர் என்ற பெயரில் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், ஆங்கிலோ இந்திய பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், மாவட்ட வயது வந்தோர் கல்வி அலுவலர் அலுவலகம் ஆகியவற்றிற்கு அலுவலர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட கல்வி அலுவலங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது.மாநிலத்தில் உள்ள 32 மாவட்ட தொடக்க கல்வி அலுவலங்கள், 3 முறைசாரா மாவட்ட கல்வி அலுவலகங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலங்கள் என 52 அலுவலகங்கள் கலைக்கப்பட்டு, 52 புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் துவக்க அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

புதிய கல்வி மாவட்ட அரசாணை

Click below

https://drive.google.com/file/d/1gQuxWjb0dTjDUgjqNUrETOmNFq_XKqld/view?usp=drivesdk

Sunday, May 27, 2018

பத்தாம் வகுப்பு: இன்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு திங்கள்கிழமையன்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தத் தேர்வை பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் என மொத்தம் 10 லட்சத்து 1,140 மாணவர்கள் எழுதினர். இதையடுத்து பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டன. பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணில் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொண்டனர்.

மதிப்பெண் சான்றிதழ்: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் திங்கள்கிழமை பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஜூன் 28-இல் துணைத் தேர்வு: கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து தேர்ச்சி பெறாதவர்களுக்கும், தேர்வுக்கு வருகை புரியாதவர்களுக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் 28 முதல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு இரண்டு புதிய பாடங்கள் அறிமுகம்


பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல் கணினி தொடர்பான இரண்டு புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. தமிழக பள்ளி கல்வியில், முதல் கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், தொழிற்கல்வி குரூப் மாணவர்களுக்கும், "ஆர்ட்ஸ் குரூப்' மாணவர்களுக்கும், புதிதாக இரண்டு பாடங்கள் சேர்க்கப்பட உள்ளன. இந்த ஆண்டே, இந்தப் புதிய கணினி பாடங்கள், அமலுக்கு வர உள்ளன. அதாவது, "கம்யூட்டர் சயின்ஸ்' பிரிவுக்கு, "கணினி அறிவியல்' என்ற பாடம் தொடர்ந்து நடத்தப்படும். ஆனால், வரலாறு, பொருளியல், வணிகக் கணிதம் போன்ற, ஆர்ட்ஸ் பாடப்பிரிவினருக்கு, கணினி பயன்பாடுகள் பற்றிய, 'கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்' என்ற பாடம் புதிதாகச் சேர்க்கப்படுகிறது.

அதேபோன்று அனைத்து வகை தொழிற்கல்வி பிரிவுகளுக்கும் "கணினி தொழில்நுட்பம்' என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பாடங்கள் இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கும், அடுத்த ஆண்டு முதல் பிளஸ் 2 வகுப்புக்கும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்குநர், இளங்கோவன் பிறப்பித்துள்ளார்.