இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, December 09, 2017

3 லட்சம் ஆசிரியர்களுக்கு சிக்கல் 'டெட்' தகுதி தேர்வை முடிக்க கெடு


தனியார் பள்ளிகளில் பணியாற்றும், மூன்று லட்சம் ஆசிரியர்கள், பணியில் நீடிக்க, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வை, 2019 மார்ச்சுக்குள் முடிக்க வேண்டும்' என, கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதனால், தனியார் பள்ளி ஆசிரியர்களை உஷார்படுத்தும்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த, 2010 முதல், மத்திய அரசின் தேசிய கல்வியியல் கவுன்சில் உத்தரவுப்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது.

இதையொட்டி, தமிழகத்திலும் ஆசிரியர் பணிக்கு, 'டெட்' தேர்வு அறிமுகமானது. கட்டாயம் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், 'அரசு பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களும், 'டெட்' தேர்வை முடிக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.இதன்படி, தனியார் பள்ளிகளில் பணியாற்றும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 2019 மார்ச்சுக்குள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, 1 - 5ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், 'டிப்ளமா' கல்வியியல் படிப்பு முடிக்காவிட்டால், அவர்கள், மத்திய அரசின் தேசிய திறந்தநிலை பள்ளியின், 'டிப்ளமா' கல்வியியல் படிப்பை, 'ஆன்லைனில்' முடிக்க, புதிய படிப்பு துவங்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டுக்கான, டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. வரும் வாரங்களில், ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட உள்ளன. 'இந்த படிப்பை முடித்த பின், தனியார் பள்ளி ஆசிரியர்கள், 2019 மார்ச்சுக்குள், 'டெட்' தேர்வையும் முடிக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அறிவுறுத்தல் அதே போல், எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பி.எட்., படிப்பை முடித்திருந்தாலும், அவர்களும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அறிவுறுத்தப்படு உள்ளது.

இது குறித்து, தனியார் பள்ளிகளுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மாவட்ட மெட்ரிக் ஆய்வாளர் ஆகியோர், 'டெட்' தேர்வு விதிமுறைகள் குறித்து, தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு தெரிவிக்க வேண்டும் என, தொடக்கக் கல்வி இயக்குனரகமும், மெட்ரிக் இயக்குனரகமும் அறிவுறுத்தி உள்ளது.

Friday, December 08, 2017

உதவி பெறும் பள்ளிகள்-பணியாளர் நியமனம் சார்ந்த அறிவுரைகள்


பிளஸ் 2 பொதுத்தேர்வு: டிச.11 முதல் தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் திங்கள்கிழமை (டிச.11)முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:-

கடந்த 2016 மார்ச் மற்றும் ஜூன், ஜூலை மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில் இடைநிலைக் கல்வியில் முழுமையாக தேர்ச்சி பெற்று இரண்டாண்டு கால இடைவெளியை பூர்த்தி செய்த தேர்வர்கள் மட்டுமே பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை நேரடித் தனித்தேர்வர்களாக மார்ச் 2018-இல் நடைபெறும் தேர்வை எழுத முடியும். மேலும் இதுவே கடைசி வாய்ப்பாகும். தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்குச் சென்று 11-ம் தேதி முதல் 16-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தகுதியுள்ளோர் தங்களது விண்ணப்பத்தை அபராதக் கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம்.

கால அவகாசத்தைத் தாண்டி, விண்ணப்பிக்க விரும்புவோர் டிச.18-ஆம் தேதி முதல் டிச.20 வரை உரிய அபராதக் கட்டணத்துடன் (ரூ.1,000), விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி விண்ணப்பிக்கலாம். தட்கலில் விண்ணப்பிக்க அவகாசம் இல்லை: இந்த முறை தட்கலில் விண்ணப்பிக்க தனியாக கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களிலும் விவரங்களைப் பெறலாம் . தேர்வுக் கட்டணம்: மறுமுறை தேர்வெழுதுவோர் (ஹெச் வகை) ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். நேரடித் தனித்தேர்வர்கள் (ஹெச்பி வகை) தேர்வுக் கட்டணமாக ரூ.150, இதர கட்டணம் ரூ.35, கேட்டல்- பேசுதல் திறன் தேர்வு ரூ.2 என மொத்தம் ரூ.187 மற்றும் ஆன்லைன் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணத்தை, சேவை மையத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பதை பதிவு செய்த பிறகு தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசுத் தேர்வுத்துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிற்ககம் செய்ய முடியும் என்பதால் ஒப்புகைச் சீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தனித்தேர்வர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத வேண்டும் என்றார் வசுந்தராதேவி.

பிளஸ் 2 நேரடி தேர்வுக்கு டிச.,11ல் பதிவு துவக்கம் : தத்கல் வாய்ப்பு கிடையாது


பிளஸ் 2 பொது தேர்வை நேரடியாக எழுதும் தனித்தேர்வர்கள், வரும், 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொது தேர்வில், மார்ச், 2018ல், பள்ளிகள் வழியே இல்லாமல், நேரடியாக எழுதும் தனித்தேர்வர்கள், அரசு தேர்வுத்துறைக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.
இதற்கான அறிவிப்பை, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.

நேரடி தனித்தேர்வர்கள், அபராதம் இன்றி கட்டணம் செலுத்த, வரும், 11 முதல், 16ம் தேதி வரையிலும், பின், அபராத கட்டணத்துடன் வரும், 18 முதல், 20ம் தேதிவரையிலும், விண்ணப்பிக்கலாம். மீண்டும் விண்ணப்பிக்க, தத்கல் வாய்ப்பு வழங்கப்படாது. ஆண், பெண் தேர்வர்கள், தேர்வுத்துறையால் அமைக்கப்பட்ட சேவை மையங்களுக்கு சென்று, விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். நேரடி பிளஸ் 2 இதுவே கடைசி : இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 2 பொது தேர்வை, தனித்தேர்வர்கள் நேரடியாக எழுத முடியாது. பிளஸ் 1 முடித்த பிறகே, பிளஸ் 2 தேர்வு எழுத முடியும். இந்த ஆண்டு, பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான விண்ணப்ப அறிவிப்பு, நேற்று வெளியானது. அதில், '2016 ஜூலை தேர்வுக்கு முன், 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டுகள் கடந்தவர்கள், பிளஸ் 2 தேர்வை நேரடியாக எழுத, வரும் மார்ச் தேர்வு தான் கடைசி வாய்ப்பு' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அவகாசம்

வருமான வரித்துறை வழங்கும், 'பான்' கார்டுடன், 'ஆதார்' எண்ணை இணைப்பதற்கான அவகாசம், 2018 மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

'பான் எனப்படும், நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. மேலும், ஜூலை, 1 முதல், புதிதாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டது.

அது தவிர, வருமான வரி கணக்கு தாக்கலின் போது, ஆதார் எண்ணை குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப்பட்டது. இதுவரை வழங்கப்பட்டுள்ள, 33 கோடி பான் கார்டுகளில், நவ., நிலவரப்படி, 13.28 கோடி பான் கார்டுடன், ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பான் கார்டுடன், ஆதாரை இணைப்பதற்கான அவகாசம், 2018 மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பான் கார்டுடன், ஆதாரை இணைப்பதற்கான அவகாசம், ஜூலை, 31 வரை வழங்கப்பட்டது. பின் அது, ஆக., 31 வரையிலும், அதன்பின், டிச., 31 வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

RMSA-SSA இணைக்க முடிவு

Thursday, December 07, 2017

ஊக்க ஊதியம் வணிகவியல்,பொருளியல்,கணினி அறிவியலுக்கு கிடையாது


பள்ளி மாணவர்களுக்கு ஓரிகாமி கலைப்பயிற்சி


பூலுவப்பட்டி நகராட்சி தொடக்கப்பள்ளியில், காகிதம் மடித்தல் கலை குறித்த பயிற்சி, மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தியாக சேகர் பங்கேற்று, காகிதத்தில் நட்சத்திர பெட்டி, பறவைகள், பேசும் காகம், விலங்கு, பணப்பை, லில்லி மலர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் செய்யும் முறை குறித்து, மாணவர்களுக்கு விளக்கினார்.

பள்ளி மாணவர்களுக்கு, 'ஹெல்ப்லைன்' தயார் : 14417 எண்ணில் உளவியல், தேர்வு ஆலோசனை


பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு வழிகாட்டுதல், உயர்கல்வி சந்தேகம், உளவியல் ஆலோசனைகள் வழங்க, 'ஹெல்ப்லைன்' திட்டம், சில வாரங்களில் அறிமுகம் ஆகிறது. 14417 என்ற எண்ணில், இந்த ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை, 2016 வரை, மிக மோசமான நிலையில், எந்த முன்னேற்றமும் இன்றி இயங்கி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, சமூக ஆர்வலர்களும், ஆசிரியர் சங்கத்தினரும் பாராட்டும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டம் தயாரிப்பு, போட்டி தேர்வுக்கு பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறைகள், 'ரேங்கிங்' முறை ரத்து திட்டங்களின் வரிசையில், மாணவர்களுக்கான, 'ஹெல்ப்லைன்' திட்டம் அறிமுகம் ஆகிறது. இன்னும் சில வாரங்களில், தமிழக முதல்வரின் வழியே இந்த திட்டம் துவங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில், 14417 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண், இயங்கும். பள்ளி மாணவர்களின் தேர்வுக்கான சந்தேகங்கள், தேர்வு குறித்த தகவல்கள், நுழைவு தேர்வு தொடர்பான விளக்கம், உயர்கல்விக்கு செல்வதற்கான வாய்ப்புகள், பள்ளிகளில் உள்கட்டமைப்பு பிரச்னை, ஆசிரியர், மாணவர்களுக்கு இடையிலான சர்ச்சைகள் என, அனைத்து பிரச்னை குறித்தும், புகார்களை தெரிவிக்கலாம்.

அதேபோல், கல்வி தொடர்பான ஆலோசனைகளையும் கேட்டு பெறலாம்.மதிப்பெண் பிரச்னை, தேர்வு பயம், பெற்றோரின் அழுத்தம், ஆசிரியர்களின் நெருக்கடிகளை சமாளிக்க, மாணவ, மாணவியருக்கு உளவியல் மற்றும் ஒழுக்க நெறி ஆலோசனைகளும் வழங்கப்படும்.இதற்காக உதவி மையத்தில், உளவியல் நிபுணர்கள், 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது.

ஸ்காலர்ஷிப்' தேர்வுகளுக்கு அரசு பள்ளிகளில் இலவச பயிற்சி


மத்திய, மாநில அரசு களின், கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான, திறனறி தேர்வுகளில் தேர்ச்சி பெற, தமிழக மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி திட்டம் அறிமுகம் ஆகிறது. நான்கு லட்சம் மாணவர்களுக்கு, 3,500 மையங்களில், பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்க, திறனறி தேர்வுகள் நடத்தப் படுகின்றன.

தேசிய அளவில் நடக்கும் இந்த தேர்வுகளில், தமிழக மாணவர்கள் பின்தங்கி உள்ளனர். இந்த நிலைமையை மாற்ற, தமிழக அரசின் சார்பில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தலைமையில் நடந்த கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, 7,219 நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும், நான்கு லட்சம் மாணவர்களுக்கு, திறனறி தேர்வுக்கு பயிற்சி தரப்படுகிறது. இந்த திட்டத்திற்கு, 2.93 கோடி ரூபாய் ஒதுக்கி, முதன்மை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார். திட்டத்தை அமல்படுத்தும் பணிகளை துவங்குமாறு, தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம், பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாநிலம் முழுவதும், போட்டி தேர்வு பயிற்சிக்கு, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட, 500 மையங்களும், தொடக்கப் பள்ளிகளில் அமைக்கப்படும், 3,000, 'ஸ்மார்ட்' வகுப்புகளும், திறனறி தேர்வு பயிற்சி மையங்களாக செயல்பட உள்ளன. இதற்காக, தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. இந்த திட்டம், விரைவில் அமலுக்கு வர உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புது முயற்சி : திறனறி தேர்வுக்கான இலவச பயிற்சி, இணையதளத்தில், 'யூ டியூப் லிங்க்' வழியாகவும் வழங்கப்பட உள்ளது. இதற்காக, தொடக்க கல்வித்துறை சார்பில், புதிய இணையதளம் துவங்கப்பட உள்ளது. அதில், முந்தைய தேர்வுகளின் வினாத்தொகுப்புகள், விடைக்குறிப்புகள் இடம்பெறும். 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில், திறனறி தேர்வுக்கான கையேடுகள் வழங்கப்படும். திறன் தேர்வில் அனுபவம் உள்ள ஆசிரியர்களுக்கு, இலவச பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இந்த புதிய முயற்சியை, தொடக்க கல்வித்துறை மேற்கொண்டுள்ளது

ஆதார் இணைப்புக்கான காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்க அரசு தயார்


பல்வேறு சமூக நலத் திட்டங்கள், மானியங்களைப் பெறுவதற்காக, ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை, 2018, மார்ச், 31 வரை நீட்டிக்கத் தயாராக உள்ளோம்' என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது. 'மொபைல் போன் எண், வங்கிக் கணக்கு போன்றவற்றுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

'பல்வேறு சமூக நலத் திட்டங்கள், மானியங்கள் பெறுவதற்கும் ஆதார் குறிப்பிடுவது கட்டாயம்' என்பது போன்ற மத்திய அரசின் உத்தரவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆதார் தொடர்பான வழக்கில், 'தனிநபர் சுதந்திரம், ஒருவரது அடிப்படை உரிமை' என, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சமீபத்தில் தீர்ப்பு அளித்திருந்தது. 'ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரிக்கும்' என, உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறியதாவது: பல்வேறு சமூக நல திட்டங்களைப் பெறுவதற்காக ஆதார் எண்ணைக் குறிப்பிடுவதற்கான காலக்கெடுவை, 2018 மார்ச், 31 வரை நீட்டிக்க, மத்திய அரசு தயாராக உள்ளது. அதே நேரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, 2018 பிப்., 6ம் தேதி என்பதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. ஆதார் எண் இல்லாதவர்கள், அதை பெறுவதற்கு அவகாசம் அளிக்கும் வகையில், அவர்கள் மீது, 2018 மார்ச், 31 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, இந்த வழக்குகளை விசாரிக்கும், அரசியலமைப்பு சட்ட அமர்வு, அடுத்த வாரத்தில் அமைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பான் கார்டு, மொபைலுக்கான காலக்கெடுவில் மாற்றமில்லை ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: வங்கிக் கணக்கு, பான் கார்டு மற்றும் மொபைல் எண்களுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான உத்தரவுக்கு, நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. அந்த உத்தரவு சட்டப்பூர்வமானது; நடைமுறையில் உள்ளது. அதன்படி, வங்கிக் கணக்கு மற்றும் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, டிச., 31ல் முடிகிறது. மொபைல் எண்ணுடன், ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு, 2018, பிப்., 6ம் தேதியோடு முடிகிறது. இந்தக் காலக்கெடுவில் எந்த மாற்றமும் இல்லை.

TNOU -m.phil selection list 2017

Click below

https://app.box.com/s/hsm7bjdokhvckaq34my61x958cf31jqg

Wednesday, December 06, 2017

ஆன்லைன்' முறையில் பள்ளிகள் அங்கீகாரம்


அடுத்த ஆண்டு முதல், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு, 'ஆன்லைன்' முறையில் அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது; விதிகளை மீறும் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் கிடைக்காது. தமிழகத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், நர்சரி பள்ளிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனரகமும், மெட்ரிக் பள்ளிகளுக்கு, மெட்ரிக் இயக்குனரகமும் அங்கீகாரம் வழங்குகின்றன.

இந்த அங்கீகாரத்துக்கு, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து, சான்றிதழ்கள் பெற வேண்டும். கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு பின் அமலுக்கு வந்த, சிட்டிபாபு கமிட்டியின் பரிந்துரைகளையும் பின்பற்ற வேண்டும். இந்நிலையில், அங்கீகார விதிகள் மற்றும் நடைமுறை குழப்பங்களை தீர்க்க, வரும் கல்வி ஆண்டு முதல், 'ஆன்லைன்' அங்கீகார முறை அமலுக்கு வருகிறது. சி.பி.எஸ்.இ.,யை போல், ஆன்லைனில் ஆவணங்களை பரிசீலித்து, அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது.

இந்த முறையில், தொழில்நுட்ப ரீதியாக, 'சாப்ட்வேர்' கேட்கும் ஆவணங்களை வழங்கிய பின், பள்ளிகள் பதிவு செய்ய முடியும். அதனால், விதிமீறிய பள்ளிகள், மீண்டும் அங்கீகாரம் பெற முடியாது என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

NMMS hall ticket

பாஸ்வேர்டு பாதுகாப்பு

பாஸ்வேர்டு வைக்கும்போது செய்யக்கூடாத 7 விஷயங்கள்!
-ஞா.சுதாகர்
*விகடன் செய்திகள்

பாஸ்வேர்டு.. மொபைல், கணினி, மின்னஞ்சல், ஷாப்பிங் என நமது ஆல் இன் ஆல் டிஜிட்டல் உலகத்தின் காவலன். நமது இணையதள கணக்குகளை பாதுகாப்பதில் முக்கியப்பங்கு வகிப்பவை இவைதான். ஆனாலும் நாம் பாஸ்வேர்டுகள் வைக்கும்போது, கவனக்குறைவாக சில தவறுகளை செய்து விடுகிறோம். சில விஷயங்களை மட்டும் கவனத்தில் வைத்திருந்தாலே போதும். பாஸ்வேர்டுகளை பாதுகாப்பாக உருவாக்கலாம்.

1. எளிதான பாஸ்வேர்டுகள் வேண்டவே வேண்டாம்!

மிகவும் சிறிய அல்லது எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக் கூடியது போன்ற கடவுச்சொற்கள் உங்களுக்கு எப்படி கையாள எளிதாக இருக்கிறதோ, அதைப் போலவே ஹேக்கர்களுக்கும் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும். எனவே 12345, Qwerty போன்ற எளிதில் யூகிக்கக்கூடிய பாஸ்வேர்டுகள் வேண்டவே வேண்டாம்.

உலகில் அதிகம் பேர் வைக்கும் மோசமான டாப் 10 பாஸ்வேர்டுகள் இவைதான்.

1.  123456   
2.  password   
3.  12345678   
4.  qwerty   
5.  12345   
6.  123456789   
7.  football   
8.  1234   
9.  1234567   
10. baseball

2. ஒரு பாஸ்வேர்டு.. ஒரு கணக்கு:

ஒரே ஒரு கடினமான பாஸ்வேர்டை மட்டும் வைத்துக் கொண்டு, அதையே அனைத்து கணக்குகளுக்கும் பயன்படுத்தக்கூடாது. உங்களின் பாதுகாப்பு குறைந்த ஏதாவது ஒரு கணக்கு ஹேக் செய்யப்பட்டால் கூட, மற்ற அனைத்துக்கும் ஆபத்து. முக்கியமான கணக்குகளுக்கு நீண்ட நாட்கள் ஒரே பாஸ்வேர்டு வைத்திருப்பதும் பாதுகாப்பானது கிடையாது.

3. பாஸ்வேர்டு மீட்டர் முக்கியம்:

ஒருசில சேவைகளில் நீங்கள் பாஸ்வேர்டு வைக்கும்போதே, அது எந்தளவுக்கு பாதுகாப்பானது என்பதைக் காட்ட அளவீடுகள் இருக்கும். உங்கள் பாஸ்வேர்டு எந்தளவுக்கு வலிமையாக இருக்கிறது என்பதனை அறிய அந்த அளவீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

4. பப்ளிக் வைஃபை வேண்டாம்:

உங்களது வங்கிக் கணக்குகள், ஷாப்பிங் கணக்குகள், மின்னஞ்சல் போன்ற முக்கியமான கணக்குகளின் பாஸ்வேர்டுகளை, பொது இடங்களில் இருக்கும் வைஃபைகளில் கொடுத்து லாக்-இன் செய்யாதீர்கள். எளிதாக திருடப்பட அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல அடுத்தவர்களின் மொபைல், கணினி போன்றவற்றில் லாக்-இன் செய்யும் போதும், பாஸ்வேர்டை சேமித்து வைக்க வேண்டாம்.

5. நீளம் மற்றும் தன்மை:

உங்களது பாஸ்வேர்டு பொதுவாக 10 கேரக்டர்களுக்கு மேல் செல்லும்போதுதான் வலிமையாக அமையும். எனவே சிறிய பாஸ்வேர்டுகளை தவிர்த்து விடுங்கள். அதேபோல மொபைல் எண்கள், பிறந்த தேதி போன்றவை உங்கள் பாஸ்வேர்டில் இல்லாமல் இருப்பது நலம். இவற்றை எளிதாக உங்களுக்கு தெரிந்தவர்கள் கண்டுபிடித்துவிட முடியும் என்பதால், இதனைத் தவிர்க்கலாம்.

6. எண் விளையாட்டு:

எண்கள், குறியீடுகள், எழுத்துகள் என அனைத்தையும் கலந்து உருவாக்கும் பாஸ்வேர்டுகளே, சிறந்ததாக இருக்க முடியும். இது இல்லாமல் எந்தவொரு பாஸ்வேர்டையும் அமைக்காதீர்கள். எனவே உங்கள் பாஸ்வேர்டின் இடையே குறியீடுகளை பயன்படுத்தலாம். ஏதேனும் ஒரு லாஜிக்குடன் (உங்கள் கல்லூரி எண், அலுவலக ரோல் நம்பர், திருமண நாள், பின்கோடு) என ஏதேனும் ஒரு லாஜிக்குடன் கூடிய, எண்களை இணைத்துக் கொள்ளலாம். குறியீடுகளை பயன்படுத்தும்போது, @, # போன்ற எளிதான குறியீடுகளை பயன்படுத்தாமல், மற்றவற்றை பயன்படுத்தலாம். எல்லா பாஸ்வேர்டுகளிலும் ஏதேனும் ஒரு குறியீட்டை, வேறுவேறு இடங்களில் ரிப்பீட் செய்வதன் மூலமாக, பாஸ்வேர்டு எளிதில் மறக்காது.

7. கடினமான லாஜிக்:

முதல் எழுத்து Capital letters, பாஸ்வேர்டு இறுதியில் பிறந்த தேதி, password என்பதை Pa$$w0rd, கீபோர்டில் அருகருகே இருக்கும் எழுத்துகள் என ஈஸியான லாஜிக்குகளும் உங்கள் பாஸ்வேர்டில் இருக்க வேண்டாம்.