இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, November 24, 2017

மாணவர்களுக்கு உதவ, 'ஹெல்ப் லைன்' : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


சிவில் சர்வீஸ் தேர்வுகளில், தமிழக மாணவர்கள் வெற்றி பெறும் வகையில், மாவட்ட நுாலகங்களில், ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் துவங்கப்படும். டிச., இறுதிக்குள், 100 மையங்கள் துவக்க திட்டமிட்டுள்ளோம். போட்டி தேர்வு பயிற்சி மையங்களில் சேர, 'ஆன்லைனில்' விண்ணப்பித்த, 73 ஆயிரம் பேருக்கு, 'லேப்டாப்' வழங்கப்படும். 3,000 பள்ளிகளில், தலா இரண்டு லட்சம் ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் கிளாஸ்'அமைக்கப்படவுள்ளது.

தமிழ் வழிக் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், 10ம் வகுப்பு மாணவர்கள், 15 பேருக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய்; 12ம் வகுப்பு மாணவர்கள், 15 பேருக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், காமராஜர் பிறந்த நாளில் அறிவிக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கான, 'ஹெல்ப் லைன்' என்ற புதிய திட்டம் விரைவில் துவக்கப்பட உள்ளது. அறிவியல் துறையில் பயனடையும் வகையில், 100 மாணவர்களை தேர்வு செய்து, 15 நாள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.இவ்வாறு, அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்

அஞ்சலக கணக்கு ஆதார் கட்டாயம்


அஞ்சலக சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள், டிச., 31க்குள் தங்களின் ஆதார், மொபைல் போன் எண் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்த அஞ்சல்துறை அறிவிப்பு: மத்திய அரசு உத்தரவுப்படி, டிச., 31க்குள், அஞ்சலக கணக்குகளுடன் ஆதார், மொபைல் எண்களை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்திய அஞ்சல்துறை, இதற்கான பணியை தீவிரப்படுத்தி உள்ளது. எனவே, இந்திய அஞ்சலக சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் ஆதார் அட்டை நகலுடன், மொபைல் போன் எண், அஞ்சல கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அஞ்சலகத்திலோ, தபால்காரர்களிடமோ சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி வேலைநிறுத்தம்

டிசம்பர் 27ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தை திருத்தம் செய்யக் கோரி அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், அனைந்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் ஆகிய இரண்டு அமைப்புகள் சார்பில் இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்துள்ளது.

இரு சங்கங்களின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், ஐடிபிஐ வங்கி ஊழியர்களின் ஊதிய திருத்தம் குறித்து, கடந்த 1.11.2012 இல் இருந்து ஐடிபிஐ நிர்வாகம் மற்றும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் வங்கியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக வங்கி நஷ்டத்தை சந்தித்துள்ளது. வங்கியின் மொத்த வருமானமும் சரிந்திருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் இரு மடங்கு அதிகரித்து 25 சதவீதமாக இருக்கிறது. அதேபோல வாராக்கடன் மற்றும் இதர தேவைகளுக்கான ஒதுக்கீடு செய்த தொகையும் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது.

திருப்பூர் ஜாக்டோ ஜியோ


Wednesday, November 22, 2017

தனித் தேர்வர்களுக்கு அகமதிப்பீடு இல்லை: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு


தமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும், தனித் தேர்வர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் கிடையாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

2017-2018ஆம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு‌ மாணவர்களுக்கும் மாநில அளவில் ‌அரசுப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒவ்வொரு பாடத்திலும் 10 விழுக்காடு மதிப்பெண் அகமதிப்பீடாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அகமதிப்பீட்டிற்கான 10 மதிப்பெண்களை வழங்கும் முறை பள்ளியில் பயின்று தேர்வெழுதும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், மேல்நிலைத் தேர்வெழுதும் நேரடி தனித் தேர்வர்களுக்கு அகமதிப்பீட்டு முறையினை நடைமுறைப்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக தனித் தேர்வர்கள், 90 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை 100 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டு வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி அடைய தனித் தேர்வர்கள் அனைத்துப் பாடங்களிலும் எழுத்துத் தேர்வில் 100‌ மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவியர் பாதுகாப்பு கருதி இரவில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை


அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவியர் பாதுகாப்பு கருதி, இரவில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பள்ளி நேரம் போக, காலை மற்றும் மாலை வேளைகளில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

சிறப்பு வகுப்புகளின் போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு, சுண்டல், பிஸ்கட் போன்றவை வழங்கப்படுகின்றன. சில பள்ளிகளில் காலையில் சிற்றுண்டி, மாலையில் தேனீர் வழங்கப்படுகிறது. மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், மாணவர்களே மாலை நேர சிற்றுண்டி எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், கிராமங்களை உள்ளடக்கிய நகர பள்ளிகளில், மாலை நேர சிறப்பு வகுப்பு, இரவு, 7:00 மணி வரை நடத்தப்படுகிறது. அதே போல், அதிகாலையில், 6:00 மணிக்கு சிறப்பு வகுப்புகள் துவங்குகின்றன. இதனால், மாணவர்களின் பாதுகாப்புக்கு பிரச்னை ஏற்படுகிறது.

மாணவியர், அதிகாலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு வருவதும், மாலை இருள் சூழ்ந்த பின், பள்ளியிலிருந்து பஸ்களில் வீட்டுக்கு வருவதும், பாதுகாப்பு பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளை காலையில் சூரிய உதயத்திற்கு பின்னரும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் முடித்துக் கொள்ள, மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். சில மாவட்டங்களில் மட்டும் இந்த உத்தரவு உள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் இதை அமல்படுத்த, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஆசிரியர் காலியிடம் நிரப்ப அரசு திடீர் தடை


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 37 ஆயிரம் அரசு பள்ளிகள், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 63 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு பள்ளி களிலும், 37 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு உதவி பள்ளிகளிலும் பணியாற்றுகின்றனர்.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், மாணவர், ஆசிரியர்கள் விகிதத்தில், அதிக முரண்பாடுகள் உள்ளன. மாணவர்களை விட ஆசிரியர்களின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது. இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை ஆய்வு நடத்தியுள்ளது. அதன்படி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், போதிய மாணவர்கள் இன்றி, ஆசிரியர்களை மட்டும் நியமித்து, தில்லுமுல்லு நடப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதை கட்டுப்படுத்தும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,500 ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்குனரக அனுமதியின்றி, மாவட்ட கல்வி அதிகாரிகள், புதிய நியமனங்கள் செய்வதோ, இடமாறுதல் வழங்குவதோ கூடாது என, உத்தரவிடப்பட்டு உள்ளது

JACTTO-GEO Case report

மிலாடி நபி விடுமுறைக்கான அரசாணை

Tuesday, November 21, 2017

CM CELL REPLY : 2009க்கு பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் 6 மற்றும் 7வது ஊதிய முரண்பாடு மனுவுக்கு CM பதில்

தேசிய பசுமைப்படை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கான நிதி ரூ.5 ஆயிரமாக உயர்வு


தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தவும், இயற்கையை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேசிய பசுமைப்படை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் சார்பில் மாநில அரசின் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் பசுமைப்படை அமைக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மீது ஆர்வமுள்ள மாணவர்கள், இதன் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு வரை இத்திட்டத்துக்கு மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.2,500 வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது உயர்த்தப்பட்டு, இந்த ஆண்டு முதல் ரூ.5 ஆயிரமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளில் தேசிய பசுமைப்படை திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 8,500 நடுநிலைப்பள்ளிகளும் பெறுகின்றன.

இந்த தொகையில் பள்ளிகளில் மூலிகை மற்றும் காய்கறி தோட்டம் அமைப்பது, மாணவர்களுக்கு பருவநிலை மாறுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மரக்கன்றுகளை நடுவதன் அவசியம் குறித்த செயல்பாடுகள் நிகழ்த்த கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 100 பேருக்கு வெளிநாடுகளில் பயிற்சி


தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய திட்டங்கள் செயல் படுத்தபட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளி மாணவர்களில் சிறந்த கல்வியாளர்களை தேர்ந்தெடுத்து மேலை நாடுகளுக்கு பயிற்சி அளிக்க 100 மாணவ-மாணவிகளை தேர்வு செய்ய இருக்கிறோம்.

நார்வே, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்வதற்காக 25 மாணவ-மாணவிகள் கொண்ட 4 குழுக்களாக இவர்கள் பிரிக்கப்படுவார்கள். அந்த நாடுகளில் தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்வதற்காகவும் இந்த நாடுகளை பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் அவர்கள் அனுப்பப்பட இருக்கின்றனர். இதற்காக ரூ.3 கோடி ஒதுக்கப்படும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத இந்த திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது. அதேபோல் தமிழ் மொழிக் கல்வியில் படிக்கிற மாணவர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிளஸ்-1 மாணவர்கள் 15 பேரும், உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் 15 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதில் உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், பிளஸ்-1 மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் ஊக்கத் தொகை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. அந்த தொகையை ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ந்தேதி அன்று வழங்க இருக்கிறோம்.

பள்ளிக் கல்வியில் ஐக்கியமாகும் தேர்வுத்துறை: தமிழக அரசு புதிய திட்டம்


தமிழக அரசுத்தேர்வு துறையை படிப்படியாக பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழக கல்வித்துறையில், அரசு தேர்வுத்துறை ஒரு இயக்குனரின் தலைமையில் தனியாக செயல்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத் தேர்வு, செய்முறைத் தேர்வுகள் மட்டுமின்றி, எட்டாம் வகுப்பு, சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வுகள் உட்பட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது.

இதன் கீழ் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உட்பட 7 மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். பள்ளிக் கல்விக்கு மாற்றம் : சமீபகாலங்களில் இத்துறையின் செயல்பாடுகள் அனைத்தும் படிப்படியாக கல்வித்துறைக்கு மாற்றப்பட்டு வந்துள்ளது. உதாரணமாக தேர்வுத்துறை செய்து வந்த, பொதுத் தேர்வு மாணவர் பெயர் பட்டியல் தயாரிப்பு பணியை தற்போது பள்ளிக் கல்வித்துறையே செய்து வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மற்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிளஸ்1 பொதுத் தேர்வையும், அவற்றின் செய்முறை தேர்வுகள் நடத்துவதையும், பின்னர் நடத்தும் தனித்தேர்வர்களுக்கான தேர்வையும் பள்ளிக் கல்வித்துறைதான் கவனித்து வருகிறது. ஏற்கனவே விடைத்தாள் திருத்தும் பணியை நடத்தி முடிப்பதும் பள்ளிக்கல்வித் துறைதான்.

சான்றிதழ் சரிபார்ப்பு : தேர்வுத்துறையின் வசம் சான்றிதழ் சரிபார்க்கும் பணி மட்டுமே முக்கிய பணியாக இருந்துவந்தது. சமீபத்தில் இந்தப் பணியும் மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகள் வசம் சென்றுவிட்டது . தமிழகத்தில் அரசு பணிகளுக்கு நியமனம் செய்யப்படுவோரின் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத் தேர்வு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணியை தேர்வுத்துறையினரே இதுவரை செய்து வந்தனர். இனி இதனை முதன்மை கல்வி அதிகாரிகளே மேற்கொள்ள வேண்டும். அதற்கு வசதியாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு பயன்படுத்தும் 'சாப்ட்வேரின்' முக்கியமான ரகசிய 'பாஸ்வேர்ட்' அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுத்துறையின் 90 சதவீதப் பணிகளும் தற்போது பள்ளிக் கல்வித்துறை வசம் சென்றுவிட்டன. தேர்வுத்துறை ரத்தாகும் : இதைத் தொடர்ந்து இன்னும் ஓராண்டுக்குள் தேர்வுத்துறையை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைத்து, தேர்வுத்துறையை ரத்து செய்ய அரசு தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக அரசு 2 முறை ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது.

தேர்வுத்துறையின் முன்னாள் துணை இயக்குனர் அந்தஸ்தில் இருந்த ஒரு அதிகாரியின் தலைமையில் குழு அமைத்து, ஆலோசனை நடத்தி, அரசுக்கும் கருத்துரு (புரபோசல்) அனுப்பப்பட்டுள்ளது. படிப்படியாக ஓராண்டுக்குள் தேர்வுத்துறை அலுவலர்கள் கல்வித்துறையுடன் இணைய உள்ளனர்.அரசின் எட்டாவது ஊதியக்குழு பரிந்துரையில் அரசு நிறுவனங்களில் சிக்கனம் கடைபிடிக்க வேண்டும். அதிக வேலைப்பளுவில்லாத துறைகள், ஊழியர்களை அதோடு இணைந்த துறைகளுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம்அலுவலகங்களின் வாடகை, ஊழியர் சம்பளம் உட்பட பலவகைகளில் சிக்கனப்படுத்த முடியும் என்ற ஆலோசனையின் பேரில் இந்த ஏற்பாடுகளை அரசு செயல்படுத்த உள்ளது.

புதிய பாட திட்டம்: கருத்துக்கூற கூடுதல் அவகாசம்?


பள்ளிக்கல்வியின் புதிய பாடத்திட்ட வரைவு குறித்து, கருத்து தெரிவிக்க, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒன்று முதல் பிளஸ் ௨ வரையிலான, புதிய பாடத்திட்டத்துக்கான வரைவு அறிக்கை, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அறிக்கையின் முழு விபரமும், www.tnscert.org என்ற, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து, 28க்குள் கருத்து தெரிவிக்கும்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வரைவு அறிக்கையை, பொது பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். அதே நேரம், பாடத்திட்ட வரைவு குறித்து கருத்து தெரிவிக்க, கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:

தாய் மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆங்கிலம் சிறப்பாக கற்றுத்தரப்படும் என்பது நல்ல அம்சம். பாலின சமத்துவம், மதிப்பீட்டு முறை மாற்றம், வெளிநாடு வாழ் தமிழர்களின் படைப்புகளை பாடத்திட்டத்தில் சேர்த்தல் போன்றவை நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பள்ளி மதிப்பீட்டு முறைகளில், மாற்று வழி வருவது பாராட்டத்தக்கது; இது, நல்ல துவக்கம். இதன் பயனை முழுமையாக பெற, கருத்து தெரிவிப்பதற்கான அவகாசத்தை, ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதேநேரத்தில், புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து, புத்தகம் எழுதும் பணிகள் துவங்கி உள்ளன.

இப்பணியில், மாநிலம் முழுவதும், பல்வேறு பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட, 350 ஆசிரியர்களும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர். ஜனவரிக்குள் புத்தகங்களை இறுதி செய்தால் மட்டுமே, ஏப்ரலில் அச்சடித்து, ஜூன், 1ல், மாணவர்களுக்கு வழங்க முடியும். எனவே, இந்த பணியில், இன்னும் அதிக அளவு தனியார், அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியிர்கள், கற்பித்தல் சாராத பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. கூடுதல் ஆட்கள் நியமிக்கப்பட்டால், பணிகளை விரைந்து முடித்து, இறுதி நேர தவறுகளை சரிசெய்ய முடியும் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மதிப்பெண் தேர்வு: பள்ளிகளில் அறிமுகம்


மத்திய அரசின், 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெறும் வகையில், 'ஒரு மதிப்பெண் தேர்வு' என்ற, புதிய பயிற்று முறை, அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில், மருத்துவம் படிக்க விரும்புவோர், 'நீட்' தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டு முதல், இது கட்டாயம் என்பதால், தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களை, நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்த, பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கேற்ப, பள்ளிகளில் கற்பித்தல் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெறவும், நுழைவுத் தேர்வில் வெற்றி பெறவும், புதிய பயிற்று முறைகளை, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார். இதில், ஓர் அம்சமாக, ஒரு மதிப்பெண் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாடவாரியாக, ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும், கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகையில் சேர்க்கப்பட்டு, தினமும் மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது.

'பாடத்தின் அனைத்து பகுதிகளையும், மாணவர்கள் படித்தால் தான், இந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெற முடியும். 'எனவே, இந்த தேர்வை அதிக அளவில் எழுதும் போது, 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வுகளில், 'அப்ஜெக்டிவ்' வகை கேள்விகளுக்கு, மாணவர்களால் எளிதில் பதில் அளிக்க முடியும்' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மாணவியருக்கு கராத்தே பயிற்சி : அரசு பள்ளிகளில் ஏற்பாடு


பெண் கல்வி மற்றும் பாதுகாப்பு திட்டத்தில், அரசு பள்ளி மாணவியருக்கு, கராத்தே பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்கள், இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியருக்கு, பல்வேறு நலத் திட்டங்கள் அமலில் உள்ளன. மாணவ - மாணவியர் நீண்ட நேரம், 'ஆன்லைன்' விளையாட்டுகளில் ஈடுபடாமல் தடுக்க, உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளில் ஊக்குவிக்கப்படுகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு, யோகா பயிற்சியும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

தினமும் மாலை நேரங்களில், யோகா வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி திட்டமான, எஸ்.எஸ்.ஏ.,வில், மாணவியருக்கு, கராத்தே பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும், ஒன்றரை மணி நேரம் கராத்தே வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் மட்டும், 2,000க்கும் மேற்பட்ட மாணவியருக்கு, இலவச கராத்தே வகுப்புகள் துவங்கிஉள்ளன. மாவட்டங்களில், வாரத்திற்கு இரண்டு நாட்கள், மாலையில் கராத்தே பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'சில்மிஷத்தில் ஈடுபட முயற்சிக்கும் மாணவர்கள் மற்றும் சமூக விரோதிகளிடமிருந்து, தற்காத்து கொள்ள, மாணவியருக்கு கராத்தே பயிற்சி பலன் அளிக்கும்' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்

SSA-SPD PROCEEDINGS- மாற்றுதிறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி- சிறப்பாசிரியர்கள் , இயன்முறை பயிற்சியாளர்கள் ,தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சு பயிற்சியாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு ஏப்ரல் 2017 முதல் நிலுவை தொகையுடன் வழங்க அனுமதி வழங்குதல் சார்பு!!!

மிலாடிநபி விடுமுறை

டிச. 2ம் தேதி மிலாதுநபி விடுமுறையாக அறிவிப்பு - தமிழக அரசு.

* ஏற்கெனவே டிச. 1ம் தேதி மிலாதுநபி விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தலைமை ஹாஜியின் வேண்டுகோளை ஏற்று அரசு உத்தரவு..

TEAM VISIT கிருஷ்ணகிரி அலுவலர் செயல்முறைகள்