இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, September 28, 2017

கறி

@மணி

கி.பி 15ம் நூற்றாண்டில் தான் சிலி நாட்டில் இருந்து வந்த மிளகாய் தமிழ்நாட்டிற்குள் புகுந்தது.அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காக கறுப்பு மிளகினை (கருங்கறி) மட்டும் பயன்படுத்தி வந்தனர். இறைச்சி உணவிற்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே கறி எனப் பின்னர் வழங்கப்பட்டது.

-தொ.பரமசிவன்

DSE PROCEEDINGS- அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள்- 02.10.2017 முதல் 08.10.2017 வரை -JOY OF GIVING WEEK கொண்டாடுதல் சார்பு


பஸ் பயணத்தின் போது வாந்தி வருவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?


பலருக்கும் புது புது இடங்களுக்குப் பயணம் செய்வது, அங்குள்ள இயற்கை சூழலை ரசிப்பது போன்ற ஆசைகள் இருக்கும், ஆனால் பேருந்தில் பயணித்தாலே மயக்கம், வாந்தி வருவது போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு அது என்றுமே கனவாகவே இருந்துவிடுகிறது. அதிலும், மலை பிரதேசத்திற்கு பஸ்ஸில் பயணிப்பது என்பது கெட்ட கனவு.

எமிட்டோஃபோபியா என்பது வாந்தி எடுப்பதன் மீதுள்ள அதீதமான பயத்திற்கு பெயர். ஃபோபியா இல்லாவிட்டாலும், இப்படி பேருந்தில் பயணிக்கும்போது வரும் வாந்தியில் இருந்து தப்பிக்க ஒரு எளியத் தீர்வை இங்கு நான் சொல்ல போகிறேன். இதை வெறும் வயிற்றில் செய்யக்கூடாது, பயணிப்பதற்கு முன்பும், பின்பும் எதையாவது நிச்சயம் சாப்பிட வேண்டும்.

ஒரு எலுமிச்சை பழச்சாற்றில் சிறிது உப்பும், கொஞ்சம் அதிகமாகவே மிளகு தூளும் சேர்த்துக் குடிக்கவும். பின்னர் பயணத்தின் போது புதினா இலைகளைச் சாப்பிடுவது வாந்தி வருவது போல் இருக்கும் பிரமையில் இருந்து விடுதலை அளிக்கும். இதைப் பின்பற்றினால் எந்தப் பயமும் இல்லாமல் நீங்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பேருந்தில் பயணிக்கலாம்.

Wednesday, September 27, 2017

ஏன் ஊதியக்குழு?

ஏன் ஊதியக் குழு?

➖➖➖➖➖➖➖➖➖➖➖

ஆண்டுதோறும் நம்மிடையே வந்து, நம்மை அமைதிப்படுத்தி, அலங்கரித்து, அழகு பார்க்கும் கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜான் பண்டிகைகளைப் போல், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து அரசு ஊழியர்களை அடுத்த தளத்துக்கு இட்டுச்செல்ல அமைக்கப்படும் வைபவம் தான் ஊதியக்குழு!

'ஆறு மாதத்துக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வும், ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வும் வழங்கப்பட்டு வரும்போது, ஊதியக்குழு அமைத்து வேறு ஊதியத்தை உயர்த்த வேண்டியது அவசியமா?' என்றொரு கேள்வி எழக்கூடும்! அதற்கான பதில்:

மாதம் முழுதும் செய்யும் பணிக்கு ஊதியம், விலைவாசி உயர்வை எதிர்கொள்ள அகவிலைப்படி. ஊழியர்களின் பணிக்கால நீளத்தை (Length of service) கௌரவிக்க ஆண்டு தோறும் ஊதிய உயர்வு!
இவை போல, கால மாற்றத்தை சமன் செய்ய ஊதியக்குழு!

காலம் என்ன செய்கிறது?
➖➖➖➖➖➖➖➖➖
50 ஆண்டுகளுக்கு முன் நாம் தொலைக்காட்சி பார்த்ததுண்டா? 40 வருடங்களுக்கு முன் செல்போன் தொடர்பு உண்டா? 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை 'சொந்த வீடு' நம்மில் எத்தனை பேரிடம் இருந்தது? 20 வருடங்களுக்கு முன்பு இருந்தனவா இத்தனை இருசக்கர வாகனங்கள்? 10 ஆண்டுகளுக்கு முன் 'கார் வாங்க வேண்டும்' என்ற சிந்தனை கடுகளவேனும் இருந்ததா சராசரி மனிதரிடம்? -இதுதான் காலமாற்றம்! இதற்காகத்தான் ஊதியக்குழு!

ஊதியக்குழுவின் பணப்பயன் அரசு ஊழியர்களோடு முடிந்துபோய்விடுவது கிடையாது. சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் இதனடிப்படையில்தான் ஊதிய மாற்றம், ஏற்றம், எல்லாம்! நிதி நிர்வாகத்தின் அடிப்படை அளவுகோல் ஊதியமே!

ப்ளஸ் 1...எதிர்பார்க்கப்படுவதும், 01.01.2016 தொடங்கி அமலாக்கம் செய்யப்பட இருப்பதும் ஏழாவது ஊதியக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு. இதே தேதி முதல், இதே அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு தரப்பட இருப்பது எட்டாவது ஊதியக்குழு. காரணம், தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு கூடுதலாக ஓர் ஊதியக்குழு அமைத்து கௌரவித்திருப்பதுதான்.

கால அலகு (Periodicity)
➖➖➖➖➖➖➖➖
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியக்குழுக்களின் அமலாக்க தேதி பின் கண்டபடி இருந்தது.

ஊதியக்குழு                         அமலாக்க தேதி

முதலாவது ஊதியக்குழு     - 01.06.1960 முதல்
இரண்டாவது ஊதியக்குழு - 02.10.1970 முதல்
மூன்றாவது ஊதியக்குழு    - 01.04.1978 முதல்
நான்காவது ஊதியக்குழு    - 01.10.1984 முதல்
ஐந்தாவது ஊதியக்குழு    - 01.06.1988 முதல்
ஆறாவது ஊதியக்குழு    - 01.01.1996 முதல்
ஏழாவது ஊதியக்குழு             - 01.01.2006 முதல்
எட்டாவது ஊதியக்குழு.            -01.01.2016. 
எதிர்பார்ப்பது

மேற்கண்ட அட்டவணையை கவனித்தால், ஓர் ஊதியக்குழுவுக்கும் அதற்கடுத்த ஊதியக்குழுவுக்குமான கால இடைவெளி ஒரே சீராக இல்லாமல் முன்னும், பின்னுமாய் அமைந்திருக்கும். 01.01.1996 முதல் இது சீரமைக்கப்பட்டு இரண்டு ஊதியக்குழுக்களுக்கு இடைப்பட்ட காலம் 10 ஆண்டுகள் என நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அரசுப்பணியில் சேரும் ஓர் ஊழஇயர் அதிகபட்சமாக ஐந்து ஊதியக் குழுக்களின் பரிந்துரைகளால் பயன் பெற்று ஓய்வு பெற முடியும்.

குறைந்த பட்சம்: அதிக பட்சம்
➖➖➖➖➖➖➖➖➖

01.06.1960 அன்று அமலாக்கம் செய்யப்பட்ட முதலாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி -
*தரப்பட்ட குறைந்த பட்ச ஊதியம் (ஊதியம் + அகவிலைப்படி) = 50+10 = 60

*பெறத்தக்க அதிகபட்ச ஊதியம் = 1800/-
முதலாவது ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்பட்ட நாளிலிருந்து சுமார் 56 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது அமுலில் உள்ள 7வது ஊதியக் குழுவின் கடைசி நாளான 31.12.2015 அன்று நிலவரப்படி -

* தரப்பட்ட குறைந்த பட்ச ஊதியம் (அடிப்படை ஊதியம் + தர ஊதியம் + அகவிலைப்படி 119%) = 4800+1300+7259 = 13,359

* பெறத்தக்க அதிகபட்ச ஊதியம் = 67000+10000+91630 = ரூ.168630/-
அதாவது, குறைந்தபட்ச ஊதியம் 222 மடங்குக்கு சற்று அதிகமாகவும், அதிக பட்ச ஊதியம் 93 மடங்குக்கு சிறிது அதிகமாகவும் உயர்ந்து விட்டிருக்கிறது.

பணப்பலன் (Monetary Benefit)!
➖➖➖➖➖➖➖➖➖➖➖
ஊதியக்குழு ஒவ்வொன்றும் தனது பரிந்துரையில் குறைந்தபட்ச பலனை அறிவிப்பது வழக்கம். இந்த பணப்பலன் 5 ரூபாய், 10ரூபாய் என இருந்தது மாறி மூன்றாவது ஊதியக்குழு வில் பணப்பலன் சதவீத கணக்கில் குறைந்தபட்சம் 5% ஆக தரப்பட்டது. இப்பணப்பலன் 4-வது ஊதியக்குழுவில் 7% ஆகவும், 5-வது ஊதியக்குழுவில் 10% ஆகவும் உயர்ந்து கொண்டே வந்து - ஆனந்த அதிச்சியாக 40% பணப்பலனை அறிவித்தது 6வது ஊதியக்குழு பரிந்துரை. அதாவது, அடிப்படை ஊதியத்தில் 40% ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டது.

நடைமுறையில் உள்ள 7வது ஊதியக்குழு!
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
01.01.2006 முதல் அமலாக்கம் செய்யப்பட்ட அலுவல் குழு (ஊதியக்குழு) பரிந்துரைக்கான அரசாணை 01.06.2009 அன்றுதான் வெளியிடப்பட்டது. அதாவது அமலாக்க தேதியிலிருந்து 41 மாதங்கள் கழித்து, என்றாலும் -

'தாமதமாய் வந்தாலும் தரமாக வருவேன்' என்பது போல், இதுவரை அறியப்படாத 'தர ஊதியம்' எனும் ஒரு புதிய ஊதிய அலகை அறிமுகம் செய்தது இந்த ஊதியக்குழு.

முந்தைய ஊதியகுழு பரிந்துரைகள் 10% 40% என சதவீத கணக்கில் பணப்பலன் தந்தது போல் அல்லாமல், 'தர ஊதியம்' தான் இந்த ஊதியக்குழுவின் பணப்பலனாக அமைந்தது.

குறைந்தபட்ச தர ஊதியம் ரூ.1300/- அதிக பட்ச தர ஊதியம் ரூ.10,000/- அறிமுகம் செய்யப்பட்ட தர ஊதியங்களின் எண்ணிக்கை 29.

01.01.2006 அன்று ஓர் ஊழியர் பெற்றிருந்த அடிப்படை ஊதியம் + தனி ஊதியம் + அகவிலை ஊதியம் + அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத்தொகை 186%. அதாவது, ஊதியம் + தர ஊதியம் = 100% அகவிலை (Dearness Pay) ஊதியம் 50%. இவைகள் மீதான அகவிலைப்படி 24+12% = 36%. ஆக 186%. எனவே, அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 1.86 என்ற காரணியால் பெருக்கி அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது. இத்துடன் ஊதியக்குழுவின் பணப்பலனாக தர ஊதியம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இவ்வாறு சேர்க்கப்பட்ட தர ஊதியம் தந்த அதிக பட்ச பணப்பலன், அடிப்படை ஊதியத்தில் 86% ஆக இருந்தது. பணப்பலன் சதவீத ரீதியில் சொல்லப்படாததால் இது வியப்பாக இருக்கலாம். அதற்கான

கணக்கீடு பின் வருமாறு:
➖➖➖➖➖➖➖➖
ஓர் ஊழியர் 31.12.2005 அன்று பெற்றிருந்த ஊதியம் ரூ.5000/-
* இவரது ஊதிய ஏற்றமுறை (Pre Revised Scale of Pay) ரூ.5000 - 150 - 8000
* 01.01.2006 முதல் இவருக்கு தரப்பட்ட தர ஊதியம் ரூ.4300/-
* சதவீத ரீதியில் பணப்பலன் 4300/5000X௴100=86%

(இந்த ஊதிய வீதத்துக்கான தர ஊதியம் ரூ.4200/- என அறிவிக்கப்பட்டு, பின்னர் 4300/- ஆக உயர்த்தப்பட்டது)
எல்லாருக்கும் 86% பணப்பலன், தர ஊதியத்தின் மூலம், கிடைத்து விடவில்லை. ஆனால், சராசரியாக, பணப்பலன் 50 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருந்தது. முந்தைய ஊதியக் குழுவின் பணப்பலனை மிகைத்ததாகவே அமைந்தது.

ஊதிய உயர்வு (increment) ஊதிய உயர்வு தரப்படாத வேலை என்று எதுவும் இல்லை. அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை
இந்த ஊதிய உயர்வானது (Annual Increment) 01.06.1960 முதல் 31.12.2015 வரையான 56 ஆண்டுகளில் - அதாவது முதலாவது மற்றும் ஏழாவது ஊதியக்குழுக்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அடைந்துள்ள மாற்றத்தை பார்ப்போம்.

01.06.1960-ன்போது தரப்பட்ட குறைந்தபட்ச ஊதிய உயர்வு தொகை (ஊதியம் + அகவிலைப்படி 50-1-60 என்ற ஊதிய ஏற்ற முறையில்) 1+0=1
பெறத்தக்க அதிகபட்ச ஊதிய உயர்வு தொகை 37400-67000+GP10000 என்ற ஊதிய ஏற்ற முறையில் 2010+2392 = 4402

ஊதிய உயர்வு தொகை கணக்கிடுவதில் இந்த 7-வது ஊதியக்குழு ஒரு சமச்சீர் முறையையும் கொண்டு வந்தது. அதாவது, ஒன்றுமுதல் ஆறுவரையான ஊதியக்குழுவின்படி பரிந்துரைக்கப்பட்ட ஊதிய ஏற்ற (Scale of Pay) முறைப்படி ஆண்டு ஊதிய உயர்வு (Annual Increment) தொகையானது அனைவருக்கும் ஒரே சதவீத அளவாக இல்லாமல், பதவிக்கு பதவி, ஊதியக்குழுவுக்கு ஊதியக்குழு வேறுபட்ட சதவீத அளவில் இருந்தது. ஊதிய உயர்வு தொகை 1.6% ஆகவும் இருந்தது. 6.1% ஆகவும் தரப்பட்டது.

இந்த முரண்பாடுகளை களைந்து அரசுப்பணியில் உள்ள அனைவருக்கும் 3% ஊதிய உயர்வாக தந்து சமச்சீர் நிலையை எட்டியது, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை.

நிலுவை (Arrears)!
➖➖➖➖➖➖
ஊதியக்குழு பரிந்துரையின்படி புதிய ஊதிய வீதங்கள் அமலாக்கம் செய்யப்பட்ட தேதியிலிருந்து அதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் வரை உள்ள காலத்துக்கு நிலுவைத் தொகை கணக்கிட்டு வழங்கப்படுகிறது.
இந்த நிலுவையானது முதல் நான்கு ஊதியக்குழு வரை ரொக்கமாகவும், 5வது ஊதியக்குழு நிலுவையின் ஒரு பகுதி பொது வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்பட்டும் வழங்கப்பட்டது. ஆறாவது, ஏழாவது குழுக்களின் நிலுவை தவணை முறையில் ரொக்கமாக தரப்பட்டன.

முதன்முறையாக...!
➖➖➖➖➖➖
பொதுவாக, ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியமானது ஏறுமுகமாகத் (Upward) தான் இருக்கும். முதன் முறையாக அது இறங்குமுகத்தை (Downward) சந்தித்தது. அதாவது, ஊதியக்குழு பரிந்துரையின்படி முறையாக உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வுக்கு எந்த பங்கமுமில்லை; எவருக்கும் குறைக்கப்படவில்லை.

ஆனால் - 'ஊதியக்குழு பரிந்துரைப்படி உயர்த்தப்பட்ட சம்பள வீதம் போதுமானதாக இல்லை' என்ற முறையீட்டின் பேரில் 'ஒரு நபர் குழு' அமைத்து அறிக்கை பெறப்பட்டது. அந்த ஒரு நபர் குழு அறிக்கைக்குப் பின் பெரும்பான்மை பதவிகளுக்கு 'மீண்டும்' ஒரு உயர்வு வழங்கப்பட்டது. ஊதிய வீதம் / தர ஊதியத்தில்.
அவ்வாறு மீண்டும் தரப்பட்ட உயர்வு சீராய்வு (Review) செய்யப்பட்டது. சீராய்வின்படி, மீண்டும் உயர்த்தப்பட்டு 'சில பதவிகளுக்கு' வழங்கப்பட்ட ஊதியமானது இதே பதவிக்கு மத்திய அரசு போன்றவற்றில் தரப்படும் ஊதியத்தை விட அதிகம் எனவும், இதே சம்பளம் தரப்படும் தமிழக அரசின் பிற பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகம் என்றும் அறிவித்து 'ஒரு சில பதவிகளுக்கு' மட்டும் 'மீண்டும்' உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியம் குறைப்பு செய்யப்பட்டது.

எதிர்பார்ப்பு!
➖➖➖➖➖➖
எந்த ஒரு மாநில அரசும் தராத எத்தனையோ சலுகைகளை வழங்கியுள்ளது, தமிழக அரசு. இன்னும் சொல்லப் போனால், அகவிலைப்படி உயர்வு, மத்திய அரசின் ஊதியக் குழு அறிக்கை போன்றவற்றை மற்ற மாநிலங்கள் பரிசீலித்துக் கொண்டிருக்கையில், பட்டுவாடா செய்து முடித்திருக்கிறது, தமிழக அரசு எனினும், நினைவு கூறத்தக்க சில விடுபாடுகளும் உண்டு; அவை சரி செய்யப்படும் என்ற நம்பிக்கையும் உண்டு. அவற்றுள் சில:
* உயர்த்தப்படாத ஓய்வு பெறும் வயது
* மத்திய அரசுக்கு இணையாக வீட்டு வாடகைப்படி...

2010ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு அரியர் எழுத மீண்டும் வாய்ப்பு: அமைச்சர் அன்பழகன்

2010-ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு படிப்பை முடிக்க மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். பி.இ பட்டத்தை 7 ஆண்டுகளுக்கு முடிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தேர்வு எழுத பிப்ரவரி 2018 மற்றும் ஆகஸ்ட் 2018 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 2010 ல் பி.இ படித்தவர்களில் 40,000 பேர் அரியர் வைத்துள்ளதால் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தேர்வெழுதும் கால அட்டவணை, பாடங்களை தேர்வு செய்யும் முறை மற்றும் கட்டண தொகை செலுத்தும் தேதி உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தில் மட்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவகாசம் அளிக்கப்பட்டும் பிஇ பட்டப்படிப்பை முடிக்காகதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

நவ. 1 முதல் புதிய ரயில்வே கால அட்டவணை


ரயில்வேயின் புதிய கால அட்டவணை நவ. 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே, இப்போதுள்ள கால அட்டவணை அக். 31-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரயில்வே கால அட்டவணை ஜூலை 1-ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்படுவது வழக்கமாக இருந்தது.

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த நடைமுறை மாற்றியமைக்கப்பட்டது. இதன்படி ஒவ்வோர் ஆண்டும் அக். மாதம் புதிய அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது. இவ்வாண்டுக்கான புதிய கால அட்டவணை வரும் அக்.1ஆம் தேதிக்குப் பதிலாக அக்.15 ஆம் தேதி வெளியாகும் என ரயில்வே துறை ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இப்போது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு நவ.1-ஆம் தேதி புதிய அட்டவணை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை (அக்டோபர் 31) இப்போது உள்ள கால அட்டவணையே செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்


பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன் நேற்று வெளியிட்ட உத்தரவு:

* பள்ளிகளில் வகுப்பறை மற்றும் கழிப்பறைகளை சுற்றித் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். தண்ணீர் ்தேங்கி இருந்தால் அதை அகற்ற வேண்டும்.

* பள்ளி வளாகம் மற்றும் வீடுகளில் கொசுக்கள் முட்டையிட வசதியாக உள்ள தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள், தட்டுகள், தண்ணீர் தொட்டிகள், பழைய கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பள்ளி கட்டுமானப் பணிகள் நடக்கும் இடத்தில் உள்ள பொருட்கள் உட்பட தண்ணீர் தேங்கும் இடங்களை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்.

* பள்ளி மாணவர்கள் சுகாதாரமான பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும்.

சி.பி.எஸ்.இ.,க்கு மாற தமிழக அரசு பச்சைக்கொடி


தமிழக மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற தடையில்லா சான்றிதழ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் என 58 ஆயிரம் பள்ளிகள் தமிழக பாடத்திட்டத்தில் செயல்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 600 பள்ளிகள் மட்டுமே இயங்கின.

இந்நிலையில் 'நீட்' தேர்வு, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு போன்றவற்றை சி.பி.எஸ்.இ., நடத்துவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற விரும்புகின்றன. அதற்கு தமிழக அரசிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.அதை வழங்குவதில் தமிழக அரசு தயக்கம் காட்டியது. அரசியல்வாதிகள் தலையீட்டில் பணம் கொடுத்து, இந்த சான்றிதழை பல பள்ளிகள் பெற்றன. தற்போது, 'நீட்' தேர்வுக்கு பின் நிலைமை மாறி விட்டது. சி.பி.எஸ்.இ.,க்கு மாறுதல் கேட்கும் பள்ளி நிர்வாகிகளை அழைத்து பேசி மிக வேகமாக சான்றிதழ் கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஐந்து மாதங்களில் 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற சான்றிதழ் பெற்றுள்ளன. அவற்றுக்கு வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ., அந்தஸ்து கிடைக்கும். இன்னும், ஆயிரக்கணக்கான பள்ளிகள் தடையில்லா சான்றுக்கு விண்ணப்பித்து உள்ளன. கடந்த கல்வியாண்டில், 600ஆக இருந்த சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இந்த கல்வியாண்டில் 800ஐ தாண்டி உள்ளன.

ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு செயல்முறைகள்


2010ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு அரியர் எழுத மீண்டும் வாய்ப்பு: அமைச்சர் அன்பழகன்


2010-ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு படிப்பை முடிக்க மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். பி.இ பட்டத்தை 7 ஆண்டுகளுக்கு முடிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தேர்வு எழுத பிப்ரவரி 2018 மற்றும் ஆகஸ்ட் 2018 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 2010 ல் பி.இ படித்தவர்களில் 40,000 பேர் அரியர் வைத்துள்ளதால் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தேர்வெழுதும் கால அட்டவணை, பாடங்களை தேர்வு செய்யும் முறை மற்றும் கட்டண தொகை செலுத்தும் தேதி உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தில் மட்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவகாசம் அளிக்கப்பட்டும் பிஇ பட்டப்படிப்பை முடிக்காகதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

7ஆவது ஊதியக் குழு இறுதி அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பிப்பு


7ஆவது ஊதியக் குழு தொடர்பான இறுதி அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று வழங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமையில் அலுவலர் குழு அமைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.

இந்நிலையில் 7ஆவது ஊதியக் குழு தொடர்பான இறுதி அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், அலுவலர் குழு இன்று வழங்கியது. இதனை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் சமர்ப்பித்தார்.

Tuesday, September 26, 2017

இன்றைய தி இந்து மாயாபாஜார் பகுதியில் என் பள்ளி மாணவியின் ஓவியம்

ரயில்வே பி.என்.ஆர். நிலையை அறிய பயணிகளை சிரமப்படுத்தும் புதிய நடைமுறை!


இந்திய ரயில்வே இணையதளத்தில், பயணிகள் தாங்கள் முன்பதிவு செய்த பயணச்சீட்டின் பி.என்.ஆர். நிலையை அறிந்து கொள்வதற்கான புதிய நடைமுறையால் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ரயிலில் பயணச் சீட்டை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு பி.என்.ஆர். எண் வழங்கப்படும்.

இந்த எண்ணைக் கொண்டு பயணி ரயிலில் தன்னுடைய இருக்கை அல்லது படுக்கை வசதி உறுதி செய்யப்படுகிறதா என்பதனை அறிந்துக்கொள்ள முடியும். பெரும்பாலும், இந்த விவரங்களை இணையதள வாயிலாக பயணிகள் தெரிந்துக்கொள்வர். எரிச்சல் ஏற்படுத்தும் கணக்குகள்: பயணிகள் பி.என்.ஆர் எண்ணை தெரிந்துக் கொள்ளவதற்காக www.indianrail.gov.in/enquiry/pnrenquiry. htm என்ற ரயில்வே இணையதளத்தின் மென்பொருள் நவீன வகையில் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பயணிகள் பிஎன்ஆர் தொடர்பான எந்தத் தகவலை தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் அவர்களுக்கு அடிப்படை கணிதம் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்கு முன்னர் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களை டைப் செய்ய வேண்டும் என்பது போல் இருந்தது. தற்போது இரண்டு எண்களை கூட்டி அல்லது கழித்து விடை அளிக்கும் பட்சத்தில் நீங்கள் விரும்பும் தகவல் கிடைக்கப்பெறும்.

உதாரணமாக 544 - 68 = ? அல்லது 899+ 70 =? என்று கேள்விகள் கேட்கப்படுகிறது. சரியான பதில் அளித்தீர்கள் என்றால் தகவலைப் பெறலாம். கணக்கில் மிகவும் சுமாரானவர்கள் தற்போது பிஎன்ஆர் நிலையை அறிய கால்குலேட்டர்களையோ, மனக்கணக்கு போட்டோ சரியாகவோ, தவறாகவோ பதிலளித்து கொண்டிருக்கின்றனர். ஆனால், பொதுவாக இந்த நடைமுறையால் பயணிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவசரமாக ஊருக்கு செல்பவர்கள் தங்களது பயணச் சீட்டை உறுதி செய்வார்களா? அல்லது கூட்டல், கழித்தல் கணக்குகளை போட்டுக்கொண்டு இருப்பார்களா ? இதுகுறித்து புகார்கள் அனுப்பப்பட்டும் இந்த நடைமுறை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

இந்திய ரயில்வே இணையதளத்தில் சர்வரின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ரயில்கள் புறப்பாடு, நடப்பில் காலியாகவுள்ள இடங்கள், எஸ்எம்எஸ் மூலம் தகவல் பெறுவது, ரயில்கள் வந்தடையும் நேரம், கட்டண விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை விரைவாகப் பெற முடியும். இப்போதைய நிலவரப்படி, பயணிகளின் பிஎன்ஆர் எண் மூலம், ரயில் பெட்டி எண் மற்றும் படுக்கை வசதி அல்லது இருக்கை நிலவரங்களை மட்டுமே பார்க்க முடியும். இனி பிஎன்ஆர் எண் மூலம், அன்றைய தினம் ரயில் புறப்படும் நேரத்தைத் துல்லியமாக பார்க்கும் வசதியை கொண்டுவர உள்ளோம்.

இதற்கான மென்பொருள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிஎன்ஆர் நிலையை அறிய கொண்டு வரப்பட்டுள்ள புதிய நடைமுறை மேம்படுத்தப்பட்ட மென்பொருளால் வந்ததுதான். பெரும்பாலான பயணிகளுக்கு கூட்டல், கழித்தல் என்ற அடிப்படை கணக்குகள் தெரியும். அதிவிரைவான தகவல்களை பெற்று வரும் நாம், இந்தக் கூட்டல், கழித்தலில் 30 நொடிகள் செலவிடுவது தவறில்லை என்றனர் அவர்கள்.