இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, August 23, 2017

பிளஸ் 1க்கு வினா வங்கி தயாரிப்பு பணிகள் தீவிரம்


பிளஸ் 1 பொதுத் தேர்வின் புதிய விதிகளின் படி, 32க்கும் மேற்பட்ட, வினாத் தொகுப்பு அடங்கிய வினா வங்கி வெளியிடப்படுகிறது. தமிழக தனியார் பள்ளிகளில், பிளஸ் 1ல், பிளஸ் 2வுக்கான வகுப்புகளை நடத்தியதால், மாணவர்கள் போட்டி தேர்வுகள், நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை.

புதிய திட்டம் : வரும் ஆண்டுகளில், 'நீட்' மற்றும் ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் வெற்றி பெற, பள்ளிக் கல்வித் துறை புதிய திட்டங் களை வகுத்துள்ளது. இதன்படி, பிளஸ் 1க்கும் இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ் 1 மதிப்பெண், பிளஸ் 2 தேர்ச்சிக்கு சேர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த ஆண்டு பிளஸ் 1க்கும், அடுத்த ஆண்டு பிளஸ் 2வுக்கும், பாடவாரியாக தலா, 100 மதிப்பெண்ணாக குறைக்கப் பட்டுள்ளது.

வினாக்கள் அமையும் முறை, அகமதிப்பீட்டு மதிப்பெண் முறை, வினாத்தாள் தயாரிப்பு விதிகள் போன்றவை மாற்றப்பட்டு உள்ளன. இந்த விதிகளின்படி, பிளஸ் 1 பொது தேர்வு எப்படி இருக்கும் என, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதற்கு தீர்வு காண, பிளஸ் 1 வகுப்புக்கு, வினா வங்கி புத்தகம் வெளியிடப்படுகிறது. உத்தரவு : இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி கூறியதாவது: மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், 32 மாவட்டங்களிலும், பிளஸ் 1 பாடத்திற்கு, பாட வாரியாக மாதிரி வினாக்கள் தயாரிக்க, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலர் உதயசந்திரன் உத்தரவிட்டுள்ளனர். இந்த பணி முடிந்ததும், இரண்டு மாதங்களுக்குள், வினா வங்கி புத்தகம் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் -2011முதல்2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல்


Tuesday, August 22, 2017

இன்றைய தி இந்து-மாயாபஜார் பகுதியில் எம் பள்ளி மாணவியின் ஓவியம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்: வெறிச்சோடிய அலுவலகங்கள்; கற்றல்-கற்பித்தல் பாதிப்பு


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பள்ளிகளில் கற்பித்தல்- கற்றல் பாதிக்கப்பட்டது. புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும். மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 5-ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.22) ஈடுபட்டனர். சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அலுவலக பணிகள் பாதிப்பு: போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள வருவாய்த்துறை, கிராமநிர்வாகம், கல்வித்துறை என அரசுத்துறை சார்ந்த பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. சென்னை தலைமைச் செயலகம், எழிலகம், மாவட்ட ஆட்சியர்அலுவலகங்களில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. இதனால் பல்வேறு விஷயங்களுக்காக அரசு அலுவலகங்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கற்றல்-கற்பித்தல் நடைபெறவில்லை: அரசுப் பள்ளிகளில் 90 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வராததால் வகுப்புகள் நடைபெறவில்லை. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஒருநாள் மட்டும் அரசுப் பள்ளிகளில் பணியில் ஈடுபட்டனர். எனினும் கற்றல், கற்பித்தல் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

மாவட்டங்களில்... பல மாவட்டங்களில் உள்ள ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் மாணவர்கள் வீடு திரும்பினர். வேலைநிறுத்தத்தையொட்டி சேலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்துணவுப் பணியாளர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் பல பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.

போராட்டங்கள் தொடரும்... வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன், ஜெ. கணேசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது: போராட்டங்களுக்கு இதுவரை தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் அடுத்தடுத்த போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால்...தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதற்குப் பின்னரும் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் 50 சதவீத அரசுப் பணியாளர்கள் பணிக்கு வரவில்லை என்று அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு பள்ளிகள் கல்வி தரம் உயர மாநிலங்களுக்கு உதவ புது திட்டம்


மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்துவதை தடுக்கும் வகையில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவது குறித்து, மாநிலங்களுடன் இணைந்து செயல்பட, மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்து வருகிறது. புதிய திட்டம் குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர், நமது நாளிதழுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டி:

ஐ.நா.,வின் 'யுனெஸ்கோ' எனப்படும், ஐ.நா., கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் புள்ளி விபரங்களின்படி, நாட்டில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி படிக்க வேண்டிய வயதில் உள்ள, 4.7 கோடி பேர், படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். 'நிடி ஆயோக்' நடத்திய ஆய்வில், அருணாச்சல பிரதேசம், பீஹார், ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, ராஜஸ்தான் மற்றும் உ.பி.,யில், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மதிய உணவுக்காக மட்டுமே, பள்ளிக்கு வருவோரும் உள்ளனர். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும்.

அந்தந்த மாநிலத்தின் தன்மைக்கு ஏற்ப, இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த உள்ளோம். தற்போது, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும், உ.பி., அரசுடன், இதற்கான ஆலோசனைகள் நடக்கின்றன. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை விட, வட மாநிலங்களில், கல்வித் தரம் மோசமாக உள்ளது. அதனால், வட மாநிலங்களில், முதலில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். மாநில அரசு களுடன் ஆலோசனை நடத்தி, அந்தந்த மாநிலத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு தேவையான நிபுணர்களின் ஆலோசனைகள் வழங்கப்படும்; தேவைப்பட்டால், நிதியும் ஒதுக்கப்படும்.

அரசு பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்தால், மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்துவதை தடுக்க முடியும். அது தான், நாட்டு மக்களுக்கு நாம் செய்யும் நியாயம். இத்திட்டத்தின் கீழ், கற்பிக்கும் திறனை வளர்க்க, ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு தரப்படும். மாணவர்களின் கற்கும் திறனை வளர்ப்பதற்கான வழிமுறைகள் அடங்கிய கையேடுகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். இதுதவிர, துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான, 'டிப்ளமா' படிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது; இதற்கு பதிவு செய்வதற்கு, செப்., 15 வரை அவகாசம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் கே.வி., பள்ளிகள் : மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், நாடு முழுவதும், 1,094 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், வெளிநாடுகளில், மூன்று பள்ளிகளும் இயங்குகின்றன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, அதிகளவில் துவக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.

அதனால், கூடுதல் பள்ளிகள் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ''அதிக முதலீடுகள் இல்லாமல், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்,'' என்றார், பிரகாஷ் ஜாவடேகர்.

ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் கலைத்திட்ட குழு தலைவர் தகவல்


வரும், ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி கலைத்திட்ட குழு தலைவர், அனந்த கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். புதிய பாடத்திட்டம் குறித்து, எட்டு மாவட்டங் களுக்கான கருத்தறியும் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற கலைத்திட்ட குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான, அனந்த கிருஷ்ணன் கூறியதாவது:

தமிழக பள்ளிகளில், இதுவரை மதிப்பெண் பெறுவதற்காக மட்டும், பாடங்களை நடத்தி வந்துள்ளனர். தேசிய நுழைவு தேர்வு அதனால், படிப்பின் மீது, மாணவர்களுக்கு ஈர்ப்புஇல்லாமல் போய்விட்டது. மேலும், தேசிய நுழைவுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள முடியவில்லை.இதை, மாற்றும் வகையில், தமிழக பள்ளிகளில் கல்வித்திட்டம் மாற்றி அமைக்கப்படும்; அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும். இந்த வகுப்புகளுக்கு, ஜனவரிக்குள், பாடத்திட்ட தயாரிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

மதிப்பீட்டு முறை தேர்வு முறையிலும், மதிப்பீட்டு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்படும். பள்ளிகளின் உள் கட்டமைப்பு மேம்பாடு, பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு தேவையான நிதி மற்றும் செலவு திட்டங்கள், தேர்வு நடத்தும் முறை ஆகியவற்றுக்கும், அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும். கருத்தறியும் கூட்டங்களில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறிய கருத்துக்கள் ஆராயப்பட்டு, அவற்றையும் இந்த பாடத்திட்டத்தில் கொண்டு வர முயற்சிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Monday, August 21, 2017

நன்றி தினமணி&தீக்கதிர்


SSLC&PLUS 2 time table

தேர்வு கால அட்டவணை விவரங்கள் பின்வருமாறு:–

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
செப்டம்பர் 11–ந் தேதி – தமிழ்முதல் தாள்.

12–ந் தேதி– தமிழ் 2–வது தாள்.

14–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்.

15–ந் தேதி – ஆங்கிலம் 2–வது தாள்.

18–ந் தேதி – கணிதம்.

20–ந் தேதி – அறிவியல்.

21–ந் தேதி – விருப்ப மொழிப்பாடம்.

23–ந் தேதி– சமூக அறிவியல்.

பிளஸ்–1
செப்டம்பர் 11–ந் தேதி – தமிழ் முதல் தாள்.

12–ந் தேதி – தமிழ் 2–வது தாள்.

13–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்.

14–ந் தேதி – ஆங்கிலம் 2–வது தாள்.

15–ந் தேதி– உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம்.

18–ந் தேதி– கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நீயூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.

19–ந் தேதி – கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், புள்ளியல்.

20–ந் தேதி – வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

21–ந் தேதி – இயற்பியல், பொருளாதாரம் மற்றும் தொழில் கல்வி தேர்வுகள்.

23–ந் தேதி – வேதியியல், அக்கவுண்டன்சி.

பிளஸ்–2 வகுப்பு
செப்டம்பர் 11–ந் தேதி –தமிழ் முதல் தாள்.

12–ந் தேதி – தமிழ் 2–வது தாள்.

13–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்.

14–ந் தேதி – ஆங்கிலம் 2–வது தாள்.

15–ந் தேதி– உயிரியல், தாவரவியல், வரலாறு.

18–ந் தேதி– கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நீயூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ், நர்சிங், அரசியல் அறிவியல்.

19–ந் தேதி – கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், புள்ளியல்.

20–ந் தேதி – வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

21–ந் தேதி – இயற்பியல், பொருளாதாரம் மற்றும் தொழில் கல்வி தேர்வுகள்.

23–ந் தேதி – வேதியியல், அக்கவுண்டன்சி.

இந்த அட்டவணையின்படி தேர்வுகள் நடைபெறும்.

பொறியியல் கல்வியில் மாற்றம் : அரியர்ஸ் இனி ‘ரீ அப்பியர்’ என அழைக்கப்படும்


பொறியியல் கல்வியில் இந்தாண்டு முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 2017-18ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை அண்ணா பல்கலை. நடத்தி முடித்துள்ளது. 560க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 75 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், இந்தாண்டு சுமார் 90 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் நேற்று தொடங்கியது.

இதையொட்டி மாணவர், பெற்றோர், ஆசிரியர் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் இந்திரா கெட்சி டேவிட் அறிமுகவுரையில் பேசியதாவது: இந்த கல்வியாண்டு முதல் பாடத்திட்டம் தெரிவு அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி 2ம் ஆண்டில் உங்களுக்கு விருப்பமான 2 பாடங்களை தேர்வு செய்து படிக்க முடியும். மேலும் கிரேடு முறையிலான மதிப்பெண் வழங்கப்படும். 50 சதவீதத்திற்கு கீழ் மதிப்பெண் எடுத்திருந்தால் அரியர்ஸ் என்று இனி குறிப்பிடப்பட மாட்டாது. ‘ரீ அப்பியர்’ என்று அழைக்கப்படும். அந்தப் பாடத்திற்கான தேர்வை ஜூனியர் மாணவர்களுடன் எழுத வேண்டியிருக்கும்.

முதல் 7 நாள் பிரிட்ஜ் கோர்ஸ் எனப்படும் ஓரியண்டேசன் புரோகிராம் நடத்தப்படும். கல்லூரி நாட்களில் ஆய்வுக்கூட வகுப்புகளுக்கு அதிக நேரம் ஒதுக்கப்படும். ஒவ்வொரு மாணவ - மாணவியும் என்சிசி, என்எஸ்எஸ், என்எஸ்ஓ, ஒய்ஆர்சி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் உறுப்பினராக சேர வேண்டும். இது மதிப்பெண் பட்டியலில் பதிவு செய்யப்படும். மேலும் ஆண்டுக்கு ஒருமுறை இன்டர்ஸ்ட்ரியல் விசிட்டும் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது!


ஐ.ஏ.எஸ் படிப்பதற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் எங்கு நடைபெறுகின்றன?' என்பது, நம்மில் பலரிடம் எழும் கேள்வி. பட்டப்படிப்பை முடித்துவிட்டு, எந்தப் பயிற்சி மையமாவது தன்னை வழிநடத்தாதா என எங்குவோர் பலர். இவர்களுக்கு, தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் துணை புரிகிறது. இங்கு எந்தவிதமான செலவும் இல்லாமல் ஆறு மாதம் இலவசப் பயிற்சி பெறலாம்.

அடுத்த ஆண்டு (2018-ம் ஆண்டில்) நடக்கவிருக்கும் குடிமைப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வுகான (Preliminary Examination - 2018) இலவசப் பயிற்சி வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. சென்னையில் தங்கி படிக்கும் வகையில், 225 பேரையும், பகுதி நேரமாக தினமும் மாலை நேர வகுப்பில் கலந்துக்கொள்ளும் வகையில் 100 பேரையும் தேர்ந்தெடுக்க உள்ளார்கள்.

பயிற்சிபெற விரும்புபவர்கள், இணையதளம் வழியாகவோ (www. civilservicecoaching.com) அல்லது நேரிலோ விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் சமர்பிக்கப்படுவதற்குக் கடைசி நாள், 20.09.2017.

DEE - ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம் பணியாளர்களின் வருகை சதவீதம் கோருதம் - இயக்குநர் செயல்முறைகள்

Sunday, August 20, 2017

ஜீவானந்தம் பிறந்ததினம்


ஆகஸ்ட் 21: கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன் ஜீவா பிறந்த நாள் இன்று..

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன். பாட்டாளிகளின் தோழன். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வீரன். கலைகள் பேசிய புலவன். நேர்மையான அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவன். எளிய மனிதன்... புனிதன்!

* ஐந்தாம் ஃபாரம் படிக்கும்போதே பாடல்கள் இயற்றும் திறமை பெற்றிருந்தார். 'காலுக்குச் செருப்புமில்லை... கால் வயித்துக் கூழுமில்லை... பாழுக்கு உழைத்தோமடா... பசையற்றுப்போனோமடா!' என்ற இவரது பாட்டுதான் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் அனைவரையும் செங்கொடியின் கீழ் திரளவைத்த பாட்டாளி கீதம்!

* எவ்வளவு காலம்தான் பேசிக்கொண்டே இருப்பீர்கள்? பொறுப்புகளுக்கு வர வேண்டாமா?' என்று முதலமைச்சர் பி.எஸ்.குமாரசாமி ராஜா கேட்டார். 'ஏழைகளுக்காகப் பேச வேண்டியதுதான். சாக வேண்டியதுதான்' என்று தயக்கம் இல்லாமல் பதவிகளைத் தட்டிக் கழித்தார்!

* பத்மாவதி மீதான ஜீவாவின் காதலுக்குத் தூதுவனாக இருந்தவர் எம்.ஆர்.ராதா. 'காதல் கடிதம் கொண்டுபோய் கொடுத்திருக்கிறேன். காதல் கடிதமா அது? சுத்த வரட்டு மனுஷன்... ஜனசக்திக்குக் கட்டுரை எழுதுறது மாதிரியில்ல எழுதியிருந்தார்' என்று கிண்டல்அடித்தார் ராதா!

* புத்தகப் பிரியர். ஜீவா வருகிறார் என்றால் பலரும் தங்களது புத்தகங்களைப் பதுக்க ஆரம்பிப்பார்களாம். ஆனால், இவர் படித்து முடித்த புத்தகத்தை யார் கேட்டாலும் கொடுத்துவிடுவார். அடுக்கிவைக்கவே மாட்டார்!

* ஜீவாவுக்கு இடது காது கொஞ்சம் மந்தம். அதனால் காது கேட்கும் கருவியை மாட்டியிருப்பார். அடுத்தவரைப்பற்றி யாராவது குறை சொல்ல ஆரம்பித்தால், கருவியைக் கழற்றிவிட்டு, 'இனி எனக்குக் கேட்காது. பேசலாம்' என்று அறிவிப்பார்!

* 'அன்பும் அரசியலும் வேறு வேறல்ல; உலகம் முழுமைக்கும் அன்பும் சகோதரத்துவமும் நிலவ வேண்டும் என்பதே உண்மையான அரசியல் தத்துவமாகும். ஆகவே, அன்பினை அழிக்கக்கூடிய எதுவும் அரசியலாக இருக்க முடியாது. கூடாது!' - இதுதான் ஜீவாவின் அரசியல் தத்துவம்!

- ப.திருமாவேலன்

22ம்தேதி வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு: அரசு ஊழியர், ஆசிரியர்களுடன் பேச்சில் சுமூகமான தீர்வு ஏற்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


அரசு ஊழியர்கள் வரும் 22ம்தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்கள். இதுதொடர்பாக தலைமை செயலாளர் தலைமையில் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகிகளுடன் பேசி வருகின்றனர். இதில் சுமூகமான தீர்வு ஏற்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை (இன்று) பிளஸ் 1 மாணவர்களுக்கு பொது தேர்வு மாதிரி வினாத்தாள் வழங்கப்படும். இதுதொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பின்னர் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு திடீர் தடை


கல்வி வளர்ச்சி நாள், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் அப்துல் கலாம் பிறந்த நாள் போன்றவற்றின் போது, பள்ளிகளில், மாணவ - மாணவியர் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அப்போது, சில தனியார் பள்ளிகளில், சினிமா நடிகர், நடிகையர் போன்று பேசுவது, நடிப்பது, திரைப்பட பாடல்களை இசைக்கச் செய்து ஆடுவது உட்பட, பல விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தனியார், 'டிவி'க்களை காப்பியடித்தும், சில நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. இவையெல்லாம், பள்ளி மாணவர்களின் ஒழுக்கத்தை கெடுப்பதாக, உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

அதனால், பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மீறி நடத்தினால், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம், மாணவர்கள் புகார் அளிக்கலாம் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, August 19, 2017

30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள் இணைப்பு: மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு


நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள இரண்டரை லட்சம் பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க மாநில அரசுகளின் ஆலோசனையை மத்திய அரசு கேட்டுள்ளது. மத்திய அரசு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இவை தவிர இடைநின்ற மாணவர்களை கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது.

இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவ மாணவியர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. பல்வேறு பள்ளிகள் இதன் காரணமாக மூடப்பட்டுள்ளன. மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை, தரமான கல்வி கிடைப்பது இல்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன. மத்திய, மாநில அரசுகள் கல்விக்காக பெருமளவு தொகை செலவிடும் போது அவை அரசு பள்ளி மாணவ மாணவியரை முழுமையாக சென்றடையவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் தேசிய அளவில் மாணவர்களிடையே அடைவு திறன் தேர்வுகள் நடத்தப்படும் வேளையில் மாணவர்களின் கல்வி தரம் மெச்சப்படும் நிலையில் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தொடக்க நிலையில் கல்வி தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்து மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் முடிவுக்கு வந்துள்ளது. ஒரு வருவாய் கிராமத்தில் உள்ள எல்லா அரசு பள்ளிகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தயார் செய்த மசோதாவிற்கு மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புதியதாக குழந்தைகளை சேர்க்க முடியாத நிலை உள்ள பள்ளிகள், 30 குழந்தைகளுக்கு கீழ் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பள்ளிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கையில் குறைபாடுகள் உள்ள பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் இடம் பிடிக்கிறது. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பள்ளிகள் இந்த வகையில் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தொடக்க, நடுநிலை பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் அதிகம் இடம் பெற்றுள்ளது. இணைப்பு அடிப்படையில் மாற்றம் பெறுகின்ற பள்ளிகள் பின்னர் மாதிரி பள்ளிகளாக செயல்படும். பள்ளிக்கு தேவையான இட வசதிகளை ஏற்படுத்துதல், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல், அதற்கு ேதவையான அளவு ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்துதல், கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாணவர்கள் இடைநிற்றலை தடுத்தல் போன்றவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னர் மசோதாவிற்கு இறுதிவடிவம் கொடுக்கப்படும்.