இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, July 09, 2017

ஆசிரியர்-மாணவர்கள் நிர்ணயம் : தொடக்க கல்வியில் வருமா மாற்றம்


தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர்கள் நிர்ணயம், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் உள்ளது போல் மாற்றியமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டம் 11.8.2010ன் படி அரசு மற்றும் உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் 1:30 என்ற விகிதத்திலும், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 1:35 விகித்திலும் ஆசிரியர் மாணவர்கள் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், 150 மாணவர்கள் வரையுள்ள பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். ஆனால் 150க்கு மேல் மாணவர் எண்ணிக்கை இருக்கும்பட்சத்தில் ஆசிரியர் மாணவர் நிர்ணயத்தில் குழப்பம் நீடிப்பதாக உள்ளது. அதாவது 150 - 200 மாணவருக்கு 6 ஆசிரியர், 201-240க்கு 7 ஆசிரியர், 241- 280க்கு 8 ஆசிரியர் என நிர்ணயம் விதி உள்ளது. இதன்படி தொடக்கப் பள்ளிகளில் 150க்கு மேல் மாணவர்கள் எண்ணிக்கை இருக்கும் பட்சத்தில் 1:35 என்ற அடிப்படையில் தான் ஆசிரியர் நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஆனால் அதேநேரம் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் இருந்தாலும் 1:35 என்ற அடிப்படையில் தான் ஆசிரியர் மாணவர் நிர்ணயம் உள்ளது. தொடக்க கல்வியில் உள்ள இந்த முரண்பாட்டால் அதிக எண்ணிக்கையில் மாணவர் உள்ள பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ள நிலை தமிழகம் முழுவதும் உள்ளது. இதுகுறித்து தொடக்க கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:

இப்பிரச்னைக்கு தீர்வுகாண ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தொடக்க கல்வியில் தான் செயல்வழி கற்றல் முறை உள்ளது. இதனால் ஒவ்வொரு மாணவருக்கும் ஆசிரியர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் 150 மாணவர்களுக்கு அதிகம் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது பணிச்சுமை ஏற்படுகிறது.

கற்பித்தல் பணியில் தொய்வு ஏற்பட்டு மாணவர் மீது தனிக்கவனமும் செலுத்த முடியவில்லை. எனவே நடுநிலை, உயர்நிலையில் உள்ளதுபோல் தொடக்க கல்வியிலும் எத்தனை மாணவர்கள் இருந்தாலும் 1:30 என்ற விகிதத்தில் ஆசிரியர் மாணவர் நிர்ணயம் இருக்கும்படி மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் 'உபரி' ஆசிரியர்கள் பிரச்னைக்கும் முடிவு ஏற்படும். கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை செய்துவரும் செயலாளர் உதயச்சந்திரன் இப்பிரச்னையிலும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Saturday, July 08, 2017

மேல்நிலைப் பள்ளிகளில் ஐ.டி., பிரிவு அறிமுகம் 765 கணினி ஆசிரியர்கள் நியமனம்


தமிழக கல்வித்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி, அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் கணினி கல்வி எட்டாக்கனியாக இருந்ததை மாற்றி, இந்த கல்வியாண்டில் அறிவியல் பாடத்தில் ஒரு பிரிவாக 'ஐ.டி.' கல்வி என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளது. ஐ.டி., கல்வி என்பதில் கணினி வரலாறு முதல் ஆன்ட்ராய்டு செயலி வரை அனைத்து பகுதிகளும் இடம் பெறும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படுகிறது.

இதையடுத்து கணினி பாடங்களுக்கு பயிற்றுனர்களை நியமிக்க அரசு செயலர் உதயச்சந்திரன் ெவளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பள்ளி கல்வித் துறையில் 2007-- 2016ம் கல்வியாண்டு வரை தரம் உயர்த்திய 525 மேல்நிலைப் பள்ளிகளில் தேவைக்கேற்ப கணினி ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர். தற்போது 240 பள்ளிகளில் கணினி பாடப்பிரிவுகள் இல்லை. பயிற்றுனர் பணியிடம் கணினி பாடப் பிரிவுகள் செயல்படும் பள்ளிகளில், பயிற்றுனர் பணியிடம் தேவையாக உள்ளது. கணினி பயிற்றுனர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிட ஊதிய விகிதங்கள் ஒன்றே. இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படாது.

இந்த நிலையில் காலியாக உள்ள 765 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கணினி பயிற்றுனர்களாக மாற்றி ஒப்படைக்க, பள்ளி கல்வி இயக்குனர் அரசை கோரினார். இதனை அரசு பரிசீலித்தது. கணினி பிரிவு செயல்படும் பள்ளிகளில் கணினி பயிற்றுனர் பணியிடம் ஏற்படுத்தவும், பள்ளி கல்வி இயக்குனர் தொகுப்பில் உள்ள, காலியாக உள்ள 765 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, அதே ஊதியத்தில் கணினி பயிற்றுனர் பணியிடங்களாக மாற்றவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர், மாணவர் எண்ணிக்கையில் குளறுபடி 'பயோ மெட்ரிக்' திட்டம் விரைவில் அமல்


தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகை பதிவேடு முறை அமலாக உள்ளது. இதற்காக, மாணவர்கள், ஆசிரியர்கள் விபரங்கள் சேகரிப்பு துவங்கி உள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப் பதிவானது, தனியாக பதிவேட்டில் குறித்து வைக்கப்படுகிறது.

இதில், பல முறைகேடுகள் நடப்பதாக, தொடர்ந்து புகார்கள் உள்ளன. அரசு உதவிகள் பெறும் வகையிலும், ஆசிரியர்கள் எண்ணிக்கையை தக்க வைக்கவும், அரசின் இலவச திட்டப் பொருட்களை பெறவும், கூடுதல் மாணவர்கள் உள்ளதாக, கணக்கு காட்டப்படுவதாக கூறப்படுகிறது.'ஓபி'அதே போல, பல பள்ளிகளில், ஆசிரியர்கள் பணிக்கே வராமல், வந்ததாக கணக்கு காட்டுவதாகவும், சில ஆசிரியர்கள் சங்கங்களின் பொறுப்புகளில் உள்ளோர், பணிக்கு வராமல், 'ஓபி' அடிப்பதாகவும், அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவில் முறைகேட்டை தடுக்க, 'பயோ மெட்ரிக்' முறை கொண்டு வர,பள்ளிக்கல்வித் துறைதிட்டமிட்டது. ஆனாலும், இத்திட்டம் பல காரணங்களால், அமலுக்கு வராமல் இழுபறியாகி உள்ளது.இந்நிலையில், ஆசிரியர்கள் அதிகமாக, 'ஓபி' அடிக்கும் அரசு தொடக்கப் பள்ளிகளில், முதற்கட்டமாக, 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறையை அமல்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. கணினியில் பதிவுஇதற்காக, பள்ளிகள் வாரியாக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முழு விபரங்களை, தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப, இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த விபரங்களை கணினியில் பதிவு செய்யவும், ஆக., மாதத்திற்குப் பின், 'பயோ மெட்ரிக்' முறையை, முழு வீச்சில் அமல்படுத்தவும், அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜூலை 15ல் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை


கல்வி வளர்ச்சி நாள் வரும், 15ல் கொண்டாடப்பட உள்ளது. இதை, பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடவும், அன்று ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான, ஜூலை 15ஐ, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

நடப்பு ஆண்டு, சனிக்கிழமையன்று வந்தாலும், அனைத்து பள்ளிகளிலும், சிறப்பாக கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒருவர் கூறியிருப்பதாவது:அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், காமராஜர் வாழ்க்கை வரலாறு, அவரது எளிய வாழ்க்கை, ஆட்சியில் புரிந்த சாதனை, கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.இது குறித்த கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தியும் பரிசு வழங்கப்பட வேண்டும். அன்றைய தினம் ஆசிரியர்கள் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 'நோ கேம்!'


அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10 ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், விளையாட்டு பயிற்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், பள்ளிக்கல்வியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த வரிசையில், பள்ளி அளவிலான மாநில விளையாட்டு போட்டிகளை, ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதனால், பள்ளிகள் திறந்ததும், ஜூன் இரண்டாவது வாரம் முதல், பள்ளி, வட்ட அளவில், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அரசு ஒதுக்கிய, 10 கோடி ரூபாயில், இன்னும் உபகரணங்கள் வாங்கவில்லை; பயிற்சியும் அளிக்கவில்லை.விதிமுறைப்படி, ஒரு குழுவில், 11 பேர் இருக்க வேண்டும்; மாணவர் சேர்க்கை முடியும் முன், ஏழு பேர் குழு அமைக்கப்பட்டு, போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், மாநில மற்றும் தேசிய போட்டிகளில் தகுதி பெற முடியாது; உயர்கல்வியில் விளையாட்டுஒதுக்கீட்டில், மாணவர்கள் சேர்வதும் சிக்கலாகும். இந்நிலையில், பொதுத் தேர்வு நடத்தப்படும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவும், பயிற்சி பெறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மூலம், வாய்மொழியாக உத்தரவிடப்பட்டு, பொதுத் தேர்வு மாணவர்கள் விளையாட செல்வது தடுக்கப்பட்டு உள்ளது.போட்டியை நடத்த திட்டமிட்டுள்ள, பள்ளிக்கல்வித் துறை மீது, மாணவர்களும், உடற்கல்வி ஆசிரியர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Friday, July 07, 2017

SSA - SPD PROCEEDINGS- PAT Test- குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும் அடைவு ஆய்வு -சார்பு

ஆசிரியர் தகுதி தேர்வு கேள்வி விவகாரம்: ‘வந்தே மாதரம்’ எழுதப்பட்டது வங்க மொழியிலா, சமஸ்கிருதத்திலா? ஐகோர்ட் உத்தரவு


வந்தே மாதரம் வங்க மொழியில் முதலில் எழுதப்பட்டதா அல்லது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டதா என்று அட்வகேட் ஜெனரல் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியரான கே.வீரமணி தாக்கல் ெசய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டேன். அதில் வந்தே மாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்வி இருந்தது. கேள்விக்கு வங்க மொழி, உருது, மராத்தி, சமஸ்கிருதம் என்ற 4 பதில்கள் இருந்தன. கேள்விக்கு சரியான பதிலாக வங்கமொழி என்று எழுதினேன். ஆனால், எனது பதில் தவறு என்று கூறி எனக்கு ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்துவிட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வில் நான் 89 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். தேர்வில் வெற்றி பெற 90 மதிப்பெண்கள் பெறவேண்டும். வந்தே மாதரம் எந்த மொழி என்ற கேள்விக்கு நான் சரியான பதில் எழுதியுள்ளதால் அதற்கு ஒரு மதிப்பெண் தந்தால் நான் தகுதித் தேர்வில் தேர்ச்சி ெபற்றிருப்பேன்.

பிஎட் படிப்பில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் வங்கமொழியில்தான் வந்தே மாதரம் எழுதப்பட்டது என்று உள்ளது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீ ஆன்சரில் மட்டும் சமஸ்கிருதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வந்தே மாதரம் வங்கமொழியில் எழுதப்பட்டுள்ளது என்ற எனது பதிலுக்கு ஒரு மதிப்பெண் தருமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பக்கிம் சந்திர சட்டர்ஜி வந்தே மாதரத்தை வங்க மொழியில்தான் முதலில் எழுதினார் என்று வாதிட்டார். கூடுதல் அரசு பிளீடர், சமஸ்கிருதத்தில்தான் முதலில் வந்தே மாதரம் எழுதப்பட்டது என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வந்தே மாதரம் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது, வங்க மொழியிலா அல்லது சமஸ்கிருதத்திலா என்று அட்வகேட் ஜெனரல் தெரிவிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

தவறைச் சுட்டிக்காட்டினால் போராட்டம் நடத்த திட்டமிடுவதா?: ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு நீதிபதி எச்சரிக்கை


மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்காத ஆசிரியர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் போராட்டம் நடத்தத் திட்டமிடுவதா என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், அப்படி போராட்டம் நடத்துவதாக அறிவித்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் என்று நீதிபதி எச்சரித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி மறுத்து, அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அப்பள்ளி நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், சங்கங்கள் தொடங்குவதற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 20 கேள்விகளை எழுப்பி, ஜூலை 14- ஆம் தேதிக்குள் அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் படித்த 9- ஆம் வகுப்பு மாணவர்கள் 42 பேர் தோல்வியடைந்ததால், பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில், மாணவர்களின் பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறியதாவது: 'அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பள்ளிக்கே ஒழுங்காக செல்வதில்லை. இதுகுறித்து எனக்கு 1500- க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்துள்ளன. பள்ளி நாட்களான 165 நாட்களில் 65 நாட்கள் மட்டுமே ஒரு ஆசிரியர் பள்ளிக்குச் சென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இப்படிப் பள்ளிக்குச் சென்றால் அவர்களால் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியுமா?, சம்பளம் மட்டும் அதிகம் வாங்குகிறார்கள். கடமையைச் செய்யாமல் அவர்கள் சாப்பிடுவது எப்படி ஜீரணிக்கும். இவர்களால் எப்படி கல்வித் தரத்தை உயர்த்த முடியும். மாணவர்கள் நலன் கருதி நீதிமன்றம் கேள்விகளை எழுப்பினால் அதற்கு எதிராகப் போராட்டத்தை அறிவிப்பதா? , தவறுகளை நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், அதற்கு எதிராகப் போராட்டத்தை அறிவிப்பதா? போராட்டம் அறிவித்த ஆசிரியர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டி வரும் என்றார் நீதிபதி.

அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் உயர் கல்வி படிக்க தடையில்லை'


அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள், உயர் கல்வி படிக்க தடையில்லை' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 2012 முதல், 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள், மாதம், 7,000 ரூபாய் சம்பளத்தில், பகுதி நேரமாக பணியாற்று கின்றனர்.

கணினி அறிவியல், ஓவியம், இசை, தோட்டக்கலை, தையல் என, பல சிறப்பு பாடங்களுக்கு, இந்த ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இவர்கள் பணி நிரந்தரம் கோரி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், நிரந்தரம் செய்ய வாய்ப்பே இல்லை என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள் சிலர், 'பணியில் இருந்து கொண்டே, உயர் கல்வி படிக்கலாமா; அதற்கு அனுமதி உண்டா' என, பள்ளிக் கல்வித்துறைக்கு மனு அனுப்பி பதில் கேட்டனர்.

அதற்கு, 'உயர் கல்வி படிக்க, பகுதி நேர ஆசிரியர்களுக்கு எந்த தடையும் இல்லை' என, அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.சேலம் மாவட்ட ஆசிரியர் ஒருவர் கேட்ட தகவலுக்கு, மாநில திட்ட இயக்குனரகம் அளித்த பதிலில், 'உயர் கல்வி படிக்க, நிரந்தர பணியில் உள்ள ஆசிரியர்கள் மட்டுமே அனுமதி பெற வேண்டும். பகுதிநேர ஆசிரியர் பணி என்பது முற்றிலும் தற்காலிகமானது. எனவே, அவர்கள் விருப்பம் போல, உயர் கல்வி படிக்கலாம். அதற்கு தனியாக அனுமதி வாங்க வேண்டியதில்லை' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் ரத்து.. தமிழகத்துக்கு செல்லாது

"8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் ரத்து... தமிழகத்துக்கு செல்லாது!" - கல்வியாளர் விளக்கம்
# வரவனை செந்தில்

நாளொரு அறிவிப்பு பொழுதொரு அரசாணைகளாக நடக்கிறது மத்திய, மாநில ஆட்சிகள். நேற்றுதான் ரயில்வே பயணச்சீட்டு எடுக்கும் போது 'மானியம் வேண்டுமா, வேண்டாமா ?' எனப் பயணிகளிடம் கேட்கப்படும் என்றும், அப்படி பயணிகள் விரும்பினால் தங்கள் மானியத்தை 50 முதல் 100 சதவிகிதம் வரை விட்டுக்கொடுக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இன்று வெளியான மற்றொரு செய்தியில் வரவிருக்கும் புதிய கல்விக்கொள்கையில் தற்போதிருக்கும் 8-ம் வகுப்பு வரையிலான முழுத்தேர்வு முறையினை ரத்து செய்யப்போவதாக மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அறிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்தப் பேச்சு இருந்தாலும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவ மாணவிகளுக்குக்கூட எழுதப்படிக்கத் தெரியவில்லை என்று புகார் கிளம்பியதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து 'ஆல் பாஸ்' முடிவை நீக்கும் கோரிக்கை வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களிடம் இந்த முடிவு குறித்து கேட்டோம்.

"ஜெயலலிதா தமிழகத்தின் முதல் அமைச்சராக இருக்கும் போதே 'மத்திய அரசின் இந்த முடிவை ஏற்கமுடியாது' என்று அறிவித்துவிட்டார். இந்த அறிவிப்பைத் தமிழக அமைச்சரவையைக் கூட்டியே எடுத்தார். அது மட்டுமல்லாது 64-வது மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கேட் மீட்டிங்கில் அன்றைய தமிழக கல்வி அமைச்சர் மாஃபா பான்டியராஜன் தமிழகத்தின் கல்வியின் தரமும் மாணவர்களின் தரமும் சிறப்பாக உள்ளது. இப்படி ஒரு முடிவை அமுல்படுத்தினால் எங்கள் மாநில மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, மாணவியர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்படும்’ என்று இந்த முடிவுக்கு மறுப்பு தெரிவித்தார். அதன் பின்னர் நடந்த கூட்டத்தின் இறுதியில் இந்தப் பிரச்னையில் 8-ம் வகுப்பு ஆல் பாஸ் என்பதை மாநிலங்களின் முடிவுக்கு விட்டுவிடுவதாக முடிவு செய்யப்பட்டது. இதை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பிரகாஷ் ஜாவேடேக்கர் தெரிவித்தார். 

எனவே தற்போது இணை அமைச்சர் மகேந்திர பாண்டே அறிவித்துள்ளது தமிழக அரசுக்குப் பொருந்தாது. எனவே ஜெயலலிதா எடுத்த நிலைப்பாட்டை தற்போதைய தமிழக அரசு மாற்றக்கூடாது. ஏற்கனவே எடுத்த முடிவில் கறாராக இருக்கவேண்டும். இந்திய அளவில் பிறமாநிலங்களில் இந்த முடிவு எடுப்பதுமே அந்த மாநிலக் குழந்தைகளின் கல்வியை வெகுவாக பாதிக்கும். மற்ற நாடுகளில் அரசு பள்ளிகளை நடத்துகிறது. இந்தியாவைப் பொருத்தவரை கல்வியைச் சந்தையிடம் ஒப்படைக்கிறார்கள். ஒரு குழந்தை ஒவ்வொரு பழக்கத்தையும் பெற்றோரிடத்தில் இருந்து கற்றுக்கொள்கிறது. பல் துலக்குவதிலிருந்து சாப்பிடுவது, உறங்குவது வரை ஒவ்வொன்றாகப் பெற்றோரிடம் கற்றுக்கொள்ளும் குழந்தை ஆசிரியரிடம் இருந்து எப்படிக் கற்றுக்கொள்ளாமல் போகும்? அந்தப் பொறுப்பை ஆசிரியர்களுக்கு உருவாக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்குக் கற்பிக்கும் பணியைத்தவிர வேறு எந்த வேலையையும் வழங்கக்கூடாது. ஆசிரியர்களுக்குக் கற்பித்தலைத் தாண்டி வேறு பணிகளைக் கொடுத்துவிட்டு பிள்ளைகளை பழிவாங்கினால் எப்படி? இதில் பிற மாநிலங்களில் இருந்து கேட்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் பிற மாநில அமைச்சர்கள் முடிவு செய்தார்களா அல்லது கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்தார்களா என்பதை முதலில் அவர்கள் தெளிவுபடுத்தவேண்டும். அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்து கொண்டு எடுத்த முடிவை அப்பாவி மாணவர்கள் மீது எப்படித் திணிக்க முடியும்? இது எப்படியானாலும் இந்த முடிவு தமிழகத்துக்கு பொருந்தாது என்கிற நிலை இருக்கிறது. இந்த நிலையைத் தமிழக அரசுதான் காப்பாற்ற வேண்டும்" என்றார்.

Thursday, July 06, 2017

B.ed கற்பித்தல் பயிற்சியை ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம் என்பதற்கான அண்ணாமலை பல்கலைக்கழக செய்தி.

*PLI, RPLI and Post Office Interest Rate for the period 01.07.2017 to 30.09.2017 after implementation of GST*

பள்ளிக்கூட பராமரிப்புக்கு எம்.எல்.ஏ. தொகுதி நிதி


பள்ளிக்கூடப் பராமரிப்புக்கு சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியைப்பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இந்தப் பிரச்னையை திமுக உறுப்பினர் பி.கே.சேகர்பாபு (திமுக) எழுப்பினார்.

அவர் பேசுகையில், அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்தாலும், சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இதற்குக் காரணம் பள்ளிக் கட்டடங்கள் சிதிலமடைந்த நிலையிலும், சீரமைக்க போதிய அக்கறை செலுத்தப்படாமலும் இருப்பதே ஆகும். மாநகராட்சியில் இருந்து இதுபோன்ற விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அரசின் கவனத்துக்கு வரத் தாமதம் ஆகிறது. இதுபோன்ற பள்ளிக் கூடங்களைப் பழுது பார்க்க எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:

அரசுப் பள்ளிகளில் வரும் ஆண்டுகளில் சேர்க்கை அளவு அதிகரிக்கும். அதில் இந்தியாவிலேயே சிறந்த நிலையை எட்டும். பள்ளி பழுதுபார்ப்புப் பணிகளுக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்துவது குறித்து முதல்வரின் ஆலோசனையைப் பெற்று முடிவு அறிவிக்கப்படும்.