இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, June 06, 2017

டெட்' தேர்வு விடைத்தாள் அடுத்த வாரம் திருத்தம்


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்குகிறது. தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏப்., 29, 30ல், 'டெட்' தேர்வு நடந்தது. இதில், முதல் தாளில், இரண்டு லட்சத்து, 37 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளில், ஐந்து லட்சத்து, மூன்றாயிரம் பேரும் பங்கேற்றனர். கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகை, வினாத் தாள் அடிப்படையில் தேர்வு நடந்தது.

தேர்வுக்கான விடைக்குறிப்புகள், இரு வாரங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டு, தோராய விடைக்குறிப்பு வெளியானது. இதில், விடைகள் குறித்து சந்தேகம் அடைந்தவர்கள், சரியான விடைக்குறிப்புகளை கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, கடிதம் எழுதினர். இந்த கடிதங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆய்வு செய்ததில், வாரியம் அளித்த பல விடைக்குறிப்புகள் தவறாகவும், சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கும் பணி முடிந்துள்ளது.

ஒரு வாரத்தில், விடைத்தாள் திருத்தம் துவங்கு கிறது. ஜூலை முதல் வாரத்தில், முடிவுகள் வெளியாகும் என, கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தொடக்கக் கல்வி -அரசு நலத்திட்டங்கள் 2012-2013 கல்வியாண்டு முதல் 2017-2019 கல்வியாண்டு முடிய ஒவ்வொரு நலத்திட்டங்களின் தலைப்பின் கீழ் பதிவேடுகள் உருவாக்கி தேவைப்பட்டியலின் படி பதிவுகள் மேற்கொண்டு பராமரித்தல் சார்பு



2018 பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!


2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

பள்ளிக்கல்வித் துறையின் அமைச்சர் மாறியதற்கு பின்னர் பல அதிரடி அறிவிப்புகள் வெளிவந்த வண்னம் இருக்கின்றன. ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வில் ரேங்க் முறை ரத்து, 11-ம் வகுப்பிலேயே பொதுத் தேர்வு எனப் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.

மேலும் தேர்வு நேரமும் 3 மணி நேரத்திலிருந்து 2.30 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. இதனிடையே 2018-ம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 16ல் தொடங்கி ஏப்ரல் 20ல் நிறைவடைகிறது. இதன் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியிடப்படும். 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 7ல் தொடங்கி ஏப்ரல் 16ல் முடிவடைகிறது. இதன் முடிவுகள் மே 30-ம் தேதி வெளியாகிறது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 1ல் தொடங்கி ஏப்ரல் 6ல் நிறைவடைகிறது. இதன் முடிவுகள் மே 16-ம் தேதி வெளியாகிறது.

2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு


2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன்கூட்டியே தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

12ம் வகுப்பு

அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 1-இல் தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

11ம் வகுப்பு

11ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்படட்டுள்ளது. அதன்படி பொதுத்தேர்வு 2018 மார்ச் 7ல் தொடங்கி ஏப்ரல் 16ல் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 30ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு

இதேபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 2018ம் மார்ச் 16ல் தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுத்தேர்வுக்கான காலநேரம் 2.30 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2018 மே 23ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு

#BreakingNews : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறும்.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 23 ஆம் தேதி வெளியிடப்படும்..
#SSLC #SSLCResults

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - மார்ச் 7-இல் தொடங்கி ஏப்ரல் 16 வரை நடைபெறும்..
#DPI #Plus1

Monday, June 05, 2017

பத்தாம் வகுப்பில் தேர்வு முடிவில் மாற்றம் : கிரேடு முறை குறித்து பேரவையில் முறைப்படி அறிவிப்பு


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கிரேடு முறையில் மதிப்பீடு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பள்ளி மானியக் கோரிக்கையில் வெளியிடப்படும். தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் தற்போது பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.

முதற்கட்டமாக தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் வழக்கமாக இருந்து வந்த நடைமுறை மாற்றப்பட்டு சிபிஎஸ்இ கல்வி முறையில் உள்ளது போல தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து பாடத்திட்டமும் சிபிஎஸ்இ போல கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தை வடிவமைக்க வல்லுநர் குழுவை இன்று அல்லது நாளை பள்ளிக் கல்வித்துறை அறிவிக்க உள்ளது. இதன்படி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடங்கள் அனைத்தும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வழங்கப்பட உள்ளன. இது போல பல மாற்றங்கள் சட்டப் பேரவையில் கல்வி மானியக் கோரிக்கையின் போது அறிவிப்பாக வெளியாக உள்ளன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 9 பிரிவுகளில் கிரேடுகள் வழங்கப்படுகின்றன.

அதே போல மாநிலப் பாடத்திட்டத்தில் தேர்வு எழுதும் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்களுக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்படும். கிரேடு முறையில் வழங்கப்படும் புள்ளிகள் பற்றி விவரம் வருமாறு: மேற்கண்ட 9 பிரிவுகள் அல்லது 7 பிரிவுகளில் கிரேடுக்கான புள்ளிகள் வழங்கப்பட உள்ளன. தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் உடனடியாக அந்த பாடங்களை எழுதுவதற்கு வசதியாக உடனடித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இது தவிர, பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கான செய்முறைத் தேர்வுகள் பிளஸ் 2 தேர்வின் போது மாணவர்கள் எழுத வேண்டும்.மேலும், தற்போது மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு உள்ளது போல அடுத்த கல்வி ஆண்டில் பொறியியல் சேர்க்கைக்கும் நீட் தேர்வு வர உள்ளது.

அதனால் பிளஸ்1, பிளஸ் 2 பாடத்திட்டத்தில் நீட் தேர்வுக்கான பாடப்பிரிவுகள் கண்டிப்பாக சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்புகள் சட்டப் பேரவையில் வெளியிட அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக பள்ளிகளில் மாணவர்களின் காலை வழிபாட்டு கூட்டம் 10 நிமிடமாக குறைப்பு


தமிழக பள்ளிகளில் மாணவர்கள் காலை வழிபாட்டு கூட்டம் தொடர்பாக அரசு கடந்த 2012ம் ஆண்டு ஆணை வெளியிட்டது. இதன்படி திங்கட்கிழமை பொதுவழிபாட்டு கூட்டம், பிற நாட்களில் வகுப்பறை வழிபாட்டு கூட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி பொது மற்றும் வழிபாட்டு கூட்டம் 20 நிமிடங்கள் வரை நடந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஒவ்வொரு மாணவனும் பிழையின்றி பாடவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அரசாணை 335ஐ புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் வகுப்பு வழிபாட்டு கூட்டத்தை மாற்றி, ெபாது வழிபாட்டு கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் எல்லா மாணவனும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட வேண்டியதில்லை. யாராவது ஒரு மாணவன் பாடினால் போதும். இதுதவிர 20 நிமிடமாக இருந்த திங்கட்கிழமை மட்டும் பொதுவழிப்பாட்டு கூட்டம் 3 நிமிடம் குறைத்து, 17 நிமிடமாகவும், பிற வேலை நாட்களில் 20 நிமிடங்கள் இருந்த வழிபாட்டு கூட்டம், 10 நிமிடமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதில் சுழற்சி முறையில் மாணவர்கள் முன்னின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்கள் பாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறள் விளக்கம், செய்தி வாசித்தல், பொது அறிவு, பிறந்த நாள் வாழ்த்து என அனைத்தையும் 10 நிமிடங்களில் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வகுப்பறையில் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் முன்னின்று வழிபாட்டு கூட்டம் நடத்தும் வகையில் வாய்ப்பு கிட்டுமா என்ற சந்தேகமும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆங்கிலவழி கல்விக்கு மாறும் அரசு பள்ளிகள் அதிகரிப்பு : இந்தாண்டு பிளஸ் 1ல் அமல்


ஆங்கிலவழி கல்வி துவங்க ஏராளமான அரசு பள்ளிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தாண்டு பிளஸ் 1 வகுப்புகளில் ஆங்கிலவழி கல்வி செயல்படுத்த அரசு அனுமதித்துள்ளது. அரசு பள்ளிகள் தமிழ்வழி கல்வியில் பாடம் நடத்தி வந்தன. ஆங்கில மோகத்தால் அப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் துவங்கின.

மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக போட்டிபோடும் வகையில், 2012--13 முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை துவங்க அனுமதிக்கப்பட்டது.மாநிலம் முழுவதும் 3,400 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இருந்த போதிலும் தமிழ்வழி கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களே, ஆங்கில வழியை போதித்ததால், எதிர்பார்த்த மாணவர்கள் சேரவில்லை.

இந்த ஆண்டு பள்ளி கல்வித்துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் மாநிலம் முழுவதும் ஏராளமான பள்ளிகள் ஆங்கிலவழி கல்வியை துவங்க விண்ணப்பித்து வருகின்றன. மேலும் 2012--13ல் ஆங்கில வழியை துவங்கிய மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு பிளஸ் 1 துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 2012- -13 ல் ஆங்கில வழி கல்வியில் 6 ம் வகுப்பு சேர்ந்தோர், தற்போது 10 ம் வகுப்பு முடித்தனர். அவர்கள் வசதிக்காக மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளில் ஆங்கிலவழி துவங்கப்படுகிறது. இதில் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழியில் 10 ம் வகுப்பு முடித்தோரும் சேரலாம். மேலும் இந்த ஆண்டு ஏராளமான பள்ளிகளுக்கு ஆங்கிலவழி கல்விக்கு அனுமதி அளிக்கப்படுகிறது, என்றார்.

மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்


அரசு சட்டக் கல்லுாரி களில், மூன்றாண்டு பட்டப்படிப்புக்கான, விண்ணப்பம் விற்பனை நாளை துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள, ஒன்பது சட்ட கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐந்தாண்டு பட்டப்படிப்புக்கு, ஜூன், 2ல் விண்ணப்பம் வினியோகம் துவங்கியது. மூன்றாண்டு பட்டப்படிப்புக்கு, நாளை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.

மூன்றாண்டு படிப்புக்கு, பி.ஏ., - பி.எஸ்சி., - பி.இ., - எம்.பி.பி.எஸ்., என, ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை, அந்தந்த அரசு சட்டக் கல்லுாரிகளிலும், சென்னை அடையாறில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை பதிவாளர் அலுவலகத்திலும் பெறலாம். ஜூலை, 17 வரை விண்ணப்பங்களை பெறலாம்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் அன்றே கடைசி நாள் என, சட்ட பல்கலை தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் தினமும் இறை வணக்க கூட்டம்


பள்ளிகளில், வார வேலை நாட்களான, ஐந்து நாட்களிலும், இனி இறை வணக்க கூட்டம் நடத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி நாட்களில், தினமும் இறை வணக்க கூட்டம், பள்ளி மைதானத்தில் நடந்து வந்தது. 2011ல், இந்த முறை ரத்து செய்யப்பட்டு, திங்கட்கிழமை மட்டும், கூட்டு பிரார்த்தனை நடத்தப்படும்;

மற்ற நாட்களில், வகுப்பறைகளில், பிரார்த்தனை கூட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவர்களிடம் தேசப்பற்று, தேசியக் கொடி மீதான மரியாதை, பொது அறிவு வளர்த்தல் போன்றவற்றை ஏற்படுத்த, தினமும் கூட்டு பிரார்த்தனை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கப்பட்டதும், இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

2016-17- GPF/TPF Account Statement -Now Avail.

Click below

http://www.agae.tn.nic.in/onlinegpf/

Sunday, June 04, 2017

பி.இ. மாணவர் சேர்க்கை: ஜூன் 22-இல் தரவரிசைப் பட்டியல்


நிகழ் கல்வியாண்டுக்கான பி.இ. மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை, வரும் 22 -ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடுகிறது. பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. பி.இ. படிப்புகளில் சேர இந்த முறை 1 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

தபால் மூலம் வரும் விண்ணப்பங்களைச் சேர்க்கும்போது, இந்த எண்ணிக்கை 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கூட வாய்ப்புள்ளது. இருப்பினும், இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகும். கடந்த 2016 -17 கல்வியாண்டில், 2 லட்சம் பேர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தனர். இவர்களில் 89,769 பேர் பி.இ. படிப்புகளில் சேர்க்கை பெற்றனர். ஆனால், இம்முறை இந்த எண்ணிக்கையும் வெகுவாகக் குறையும் என்கின்றனர் பேராசிரியர்கள். கலந்தாய்வு:

இந்த நிலையில், 2017-18 கல்வியாண்டில் பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் 27 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஜூன் 22-இல்...: முன்னதாக, பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) ஜூன் 20 -இல் வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து ஜூன் 22 இல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூன் 27 இல் தொடங்கி, ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1 -ஆம் தேதி தொடங்கப்படும்.

ஊக்க ஊதியத்துக்கு பதிலாக ரூ.700 சிறப்பு ஊதியம் கல்வி அமைச்சரின் அறிவிப்புக்கு பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்ப்பு


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011ம் ஆண்டு 110 விதியின் கீழ் பகுதிநேர சிறப்பாசிரியர் பணியிடங்களை அறிவித்தார். 2012 மார்ச் 5ம் தேதி அரசு பள்ளிகளில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, நெசவு, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டிடகலை, வாழ்க்கை கல்வி ஆகிய பணியிடங்களில் 16,549 பேர் பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு 3 அரை நாள் வேலைக்கு, ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வந்தது.

2013ல் ஊதிய உயர்வு வழங்கவில்லை. ஊதியம் போதாது என ஆசிரியர்கள் தமிழக அரசிடம் மன்றாடினர். அரசு செவிசாய்க்காததால் 1,380 ஆசிரியர்கள் ராஜினாமா செய்தனர். நவம்பர் 18 2014ல் வெளியிட்ட அரசாணைப்படி பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ரூ.2ஆயிரம் ஊக்க ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆசிரியர்களுக்கு ரூ.7 ஆயிரமாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 2015-16, 2016-17 ல் ஊக்க ஊதியத்தை தமிழக அரசு உயர்த்தவில்லை. பலமுைற பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம் ரூ.700 வழங்கப்படும் என நேற்று முன்தினம் அறிவித்தது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஊக்க ஊதியம் என அறிவித்தால் ஆசிரியர்களுக்கு நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பதற்காக, அமைச்சர் சிறப்பு ஊதியம் என அறிவித்துள்ளர் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்க மாநில செயலாளர் ராஜாதேவகாந்த் கூறியதாவது: ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டம் செய்தோம். 7 ஆயிரம் ரூபாய் ஊதியம் என்பது வாழ்வாதாரத்திற்கு எட்டாதது.

கடந்த 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு நிதி ரூ.31 கோடி ஒதுக்கியும், மாநில அரசு எங்களுக்கு வழங்கவில்லை. தற்போது ரூ.700 சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என அமைச்சரின் பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது. ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.9,200 மற்றும் நிலுவை தொகை ரூ.22,700 தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழக அரசு நிதியில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 11 மாதம் மட்டுமே ஊதியம் பகுதிநேர ஆசிரியர்கள் ஒரு கல்வியாண்டில் 11 மாதங்கள் மட்டுமே வேலை செய்வார்கள். மே மாதம் பணிக்கு வரக்கூடாது என்ற உத்தரவு உள்ளது.

அதன்படி இவர்களுக்கு 11 மாதம் ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதனால் கடன் வாங்கி குடும்பம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாகவும் ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

41 அறிவிப்புகள் விரைவில் வெளியிடுது கல்வித்துறை


தமிழகத்தில், கோடை விடுமுறை நாளையு டன் முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளி கல்வியில் வரும் மாற்றங்கள் தொடர்பாக, ௪௧ வகையான அறிவிப்புகளை, விரைவில் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட உள்ளார்.

இதுதொடர்பாக, கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

* பகுதி நேர ஆசிரியர்களுக்கு, இதுவரை இல் லாத வகையில், அந்தந்த மாவட்டத்திலேயே, விரும்பிய இடங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்படும்
* ஒவ்வொரு அரசு பள்ளியிலும் உள்ள மாணவர்கள், விளையாட்டில் சிறந்து விளங்க, உடற்கல்வி ஆசிரியர் நியமனங்கள் அதிகரிக்கப்படும். உடற்கல்வி பாட நேரத்தில், கண்டிப்பாக விளையாட்டு பயிற்சிக்கு மாணவர் களை அனுமதிக்கும்படி உத்தரவிடப்படும்
* அரசு பள்ளிகளுக்கு, 2006 - 2007ல், வழங்கப்பட்ட கணினிகள் மாற்றப்பட்டு, நவீன கணினிகள் வழங்கி, 'ஸ்மார்ட் ஆய்வகம்' அமைக்கப்படும்
* அனைத்து மாணவர்களுக்கும், ரத்தப்பிரிவு, ஆதார் எண் அடங்கிய, ஸ்மார்ட் அட்டைகள்
வழங்கப்படும். இதில், மாணவர்களின் நலத் திட்ட உதவிகள் பதிவு செய்யப்படும். கல்வி உதவித் தொகையை, 'ஸ்மார்ட் அட்டை' மூலம், மாணவர் கள் பெறவும் வசதி செய்யப்படும்
* பள்ளி பாடத்திட்டங்களை மாற்ற, துணை வேந்தர் கள், இஸ்ரோ விஞ்ஞானிகள், ஐ.ஐ.டி., பேராசிரியர் கள் இடம் பெறும் குழு அமைக்கப்படும்.
* 'நீட்' தேர்வை எதிர்கொள்ள, 60 ஆயிரம் வினா - விடை தொகுப்பு அடங்கிய புத்தகம் வெளியிடப் படும்.அவற்றை, 'இ - லேர்னிங்' முறையில், மாணவர்கள் எப்போதும் படிக்கலாம். நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளுக்கு, பள்ளிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்
* திறந்து வைக்கப்படாத ஆசிரியர் இல்லங்கள் திறக்கப்படும்; கோவை மற்றும் மதுரையில் ஆசிரி யர்கள் வசதிக்கு, ஆசிரியர் இல்லங்கள் புதிதாக திறக்கப்படும்
* ஆசிரியர்கள் பதவி உயர்வு, பணி மாறுதல், பணப் பலன்கள் பெறுவதற்கு,ஆன்லைன் முறை கொண்டு வரப்படும். இதற்காக, ஐந்து பள்ளிகளுக்கு, ஒரு தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக நியமிக் கப்படுவார். அதனால், உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு, ஆசிரியர்கள் அலைய வேண்டிய அவசியம் இருக்காது
* விபத்து நேரத்தில், தரமான சிகிச்சை அளிக்க, மாணவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, விபத்து மற்றும் மருத்துவ காப்பீடு அமல்படுத்தப் படும்
* பள்ளியை துாய்மையாக வைத்திருக்க, வகுப்புக்கு இரண்டு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டபணியாளர்கள் நியமிக்கப்படுவர்
* அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு தினமும் யோகா பயிற்சி அளிக்க, கேரளாவின் ஆழியாறு மனவளக்கலை மன்றத்தில் பயிற்சி பெற்ற, 13 ஆயிரம் பேர், சம்பளமின்றி தன்னார்வலர் களாக நியமிக்கப்படுவர்
* அனைத்து பள்ளிகளிலும், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாய மாகும். இதற்கு தனியாக இணைப்பு புத்தகம் வழங்க படும்
* பி.எட்., மற்றும் 'டெட்' முடித்து காத்திருப் போரில், 7,500 பேர் அரசு பள்ளிகளில், பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், இவர்கள் பணியாற்றுவர்
* ஆசிரியர்கள் ஒரே இடத்தில், ஐந்து ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே, இட மாறுதல் கவுன்சிலிங்கிற்கு அனுமதிக்கப்படுவர்
* அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழி யர்கள், தங்கள் பிள்ளைகளை, அரசு பள்ளியில் பயில வைத்து முன்னோடியாக செயல்பட்டால் அவர்களுக்கு, சிறப்பு பரிசு வழங்கப்படும்
* பொதுத்தேர்வுகளில், தமிழ் வழியில் படித்து, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, அரசின் சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்
* மாணவர்களுக்கு இந்த ஆண்டே, மூன்று வண் ணங்களில், கவர்ச்சியான புத்தகப்பை வழங்கப்படும்
இவை உட்பட, 41 அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் கூறின

Saturday, June 03, 2017

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு


அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. புதிய மாற்று சான்றிதழில், 18 விதமான விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.

முதல்முறையாக, ஆண், பெண் இனத்துடன், மூன்றாம் பாலினம் சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், பெற்றோர், பாதுகாவலர் பெயர், படித்த பள்ளி, முந்தைய வகுப்பு போன்ற, பல விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. அதேபோல, ஏதாவது சலுகை கட்டணத்தில் சேர்ந்தவரா; கல்வி உதவித் தொகை பெற்றவரா என்ற, அம்சமும் சேர்க்கப்பட்டு உள்ளது. மேலும், மாணவரின் ஆதார் எண், அந்த மாணவன் கடைசியாக படித்த வகுப்பில், பள்ளிக்கு வருகை தந்த நாட்களின் சதவீதத்தை குறிப்பிடவும் உத்தர விடப்பட்டுள்ளது.

இதன்மூலம், குறைந்த நாட்கள் வந்திருந்தால், அந்த மாணவர்களுக்கு, மற்ற பள்ளியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்