இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, May 10, 2017

பிளஸ் 2: விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு கட்டணம் எவ்வளவு?


பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் செலுத்த வேண்டிய கட்டண விவரத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: பகுதி-1 மொழி ரூ.550, பகுதி-2 மொழி (ஆங்கிலம்)- ரூ.550, ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்)- ரூ.275. மறுகூட்டல் கட்டணம்: பகுதி- 1 மொழி, பகுதி- 2 மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் ஒவ்வொன்றுக்கும் (இருதாள்களும் சேர்த்து)- ரூ.305, ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்)- ரூ.205.

பணம் செலுத்தும் முறை: விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்தலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்ட விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும். விடைத்தாள் மற்றும் மறுகூட்டலுக்கு மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மே 12-ஆம் தேதி முதல் மே 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அரசு கல்லூரி விண்ணப்பம் மே 22 வரை வினியோகம்


அரசு கல்லுாரிகளில், மே, 22 வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட உள்ளன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்காக, ஒரு வாரமாக, விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்லுாரிகளில், விண்ணப்பங்களை பெற்று, அதை, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான, 10 நாட்களில் சமர்ப்பிக்கலாம் என, கல்லுாரி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், நாளை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகிறது. எனவே, மே, 22 வரை, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம்.

பள்ளிகளில் தினமும் தமிழ்த்தாய் வாழ்த்து


அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தினமும் கூட்டு பிரார்த்தனை நடத்த, புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து பள்ளிகளிலும், தினமும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தினமும் காலையில் பள்ளி துவங்கும் முன், பிரார்த்தனை கூட்டம், மைதானத்தில் நடத்தப்படும். பல ஆண்டுகளாக, பின்பற்றப்பட்டு வந்த இந்த வழக்கம், ஐந்து ஆண்டுகளாக, நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்து அரசு பள்ளிகளிலும், திங்கள் முதல் வெள்ளி வரை, தினமும் கூட்டு பிரார்த்தனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்காக, புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, கூட்டு பிரார்த்தனையுடன், அனைத்து பள்ளிகளிலும், தினமும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும் கட்டாயமாக்கப்படுகிறது.

SSA-INSERVICE TRAINING





அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண்.724/அ1/பயிற்சி/ SSA/2017 நாள் : .05.2017

SSA - 2017 -18 ஆண்டிற்கு தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சிக்கு மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி

தலைப்பு :
தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் இணைப்பில் உள்ள பாடப்பொருள்களில் பயிற்சி

பயிற்சி நாள் பின்னர் அறிவிக்கப்படும்

ப்ளஸ் 2 தேர்வு முக்கிய தேர்வு தேதிகள்

12-ம் வகுப்பு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் 12 முதல் 15-ம் தேதி வரை தங்களது பள்ளிகளிலேயே மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

#தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 17ம் தேதி வழங்கப்படும் - தேர்வுத்துறை..

#மாணவர்கள் 15-ம் தேதி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை

ANNAMALAI UNIVERSITY exam MAY-2017-HALL ticket

Click below

https://www.coe.annamalaiuniversity.ac.in/dde_hallticket.php

Tuesday, May 09, 2017

நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை பாலிடெக்னிக்கில் படித்தவர்கள் 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் பிற்சேர்க்கை திட்டத்தின் கீழ் நேரடியாக இரண்டாம் ஆண்டு பிஇ, பிடெக் படிப்புகளில் 17ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் திரும்ப ஒப்படைத்த நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களான பிஇ, பிடெக் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்க்கும் திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நடக்க இருக்கிறது. பொறியியல், தொழில் நுட்பம் ஆகியவற்றில் டிப்ளமோ படித்தவர்கள், பிஎஸ்சி பட்டம் பெற்றவர்கள் பி.இ, பிடெக் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரத் தகுதி உடையவர்கள்.

மேற்கண்ட தகுதி உடைய மாணவர்கள் ஆன்லைன் மூலம் 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஜூன் 14ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பிறகு அதன் நகலை எடுத்து அத்துடன் ரூ.300க்கான டிடியை இணைத்து அனுப்ப வேண்டும். டிடி எடுக்கும் போது ‘செயலாளர், இரண்டாம் ஆண்டு பிஇ, பிடெக் பட்டப் படிப்பு சேர்க்கை 2017-2018, ஏசிசிஇடி, காரைக்குடி’ என்ற முகவரி பெயருக்கு டிடி எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி எஸ்சிஏ, பிரிவினருக்கு பதிவுக் கட்டணம் இல்லை. இது தொடர்பான கூடுதல் விவரம் வேண்டுவோர் www.acceet.co.in, www.accet.edu.in, www.accetlea.com ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 14ம் தேதிக்குள் ‘செயலாளர், இரண்டாம் ஆண்டு பிஇ, பிடெக் சேர்க்கைகள் 2017-2018, அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி, காரைக்குடி-630004 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம்

பழைய பாடத்திட்டத்தை மாற்ற குழு அமைப்பு : கோட்டையில் நாளை முதல் கூட்டம்


தமிழகத்தில், 13 ஆண்டு பழைய பாடத்திட்டத்தை மாற்ற, சி.பி.எஸ்.இ., முன்னாள் அதிகாரிகள் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில், நாளை நடக்கிறது. தமிழகத்தில், தற்போது நடைமுறையில் உள்ள, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், ௨௦௦௪ல் தயாரிக்கப்பட்டு,

2006 முதல் அமலில் உள்ளது. 13 ஆண்டுகளை தாண்டிய இந்த பாடத்திட்டத்தால், தமிழக மாணவர்கள், மற்ற மாநில மாணவர்களுடன் போட்டியிட்டு, தேசிய தேர்வுகளில் பங்கேற்க முடியவில்லை. எதிர்காலத்தில் தேசிய, சர்வதேச அளவில், மற்ற மாணவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், தமிழக பாடத்திட்டத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, நமது நாளிதழில் பலமுறை செய்திகள் வெளியாகின. பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றதும், அவரிடம் பாடத்திட்டத்தை மாற்றும்படி, ஆசிரியர் சங்கத்தினரும், கல்வியாளர்களும் மனு அளித்தனர். எனவே, பாடத்திட்டத்தை மாற்ற, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், சிறப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் முன்னாள் இயக்குனர், ஜி.பாலசுப்ரமணியன், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் கல்வியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். பாடத்திட்டத்தை மாற்ற நியமிக்கப்பட்டுள்ள, இந்த குழுவின் முதல் கூட்டம், நாளை, தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது. இதில், அமைச்சர், செயலர் மற்றும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில், பாடத்திட்டத்தை எப்படி மாற்றுவது, எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பது, புதிய பாடத்திட்டத்தை கற்பிக்க, ஆசிரியர்களுக்கு எந்தவித பயிற்சிகள் தேவை என்பதுகுறித்தும், ஆலோசிக்கப்பட உள்ளது.

ஓய்வூதியத்திற்கு 7.9 சதவீதம் வட்டி


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, ஜூன், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அந்தத் தொகைக்கு, ஏப்., 1 முதல் ஜூன், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வட்டித் தொகை கணக்கிடப்பட்டு, ஊழியர்கள் கணக்கில் சேர்க்கப்படும்.

TRB-முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு.notification

Post Graduate Assistants for the year 2015-2016 and 2016-17

Click below

http://trb.tn.nic.in/PG2017/09052017/msg.htm

STFI-9.5.17 திருச்சி பொதுக்கூட்ட முடிவுகள்



Transfer-j.d&ceo



Monday, May 08, 2017

J.D&CEO மாற்றம்

14 இணை இயக்குநர்,25 முதன்மை கல்வி அலுவலர் மாற்றம்

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 14 இணை இயக்குநர்கள், 25 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அதே நிலையில் உள்ள அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 4 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இடைக்காலமாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்ட இணை இயக்குநர்கள் விவரம் (ஏற்கெனவே வகித்த பதவி அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது):
1. என்.லதா- இணை இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், சென்னை. (இணை இயக்குநர், மேல்நிலைக் கல்வி, பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை).
2. சி.உஷாராணி- இணை இயக்குநர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், மாநிலத் திட்ட இயக்ககம்).
3. வை.பாலமுருகன்- இணை இயக்குநர் 1, மாநிலத் திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், மாநிலக் கல்வி ஆராய்ச்சி-பயிற்சி நிறுவனம், சென்னை).
4. எஸ்.சேதுவர்மா- இணை இயக்குநர் (மேல்நிலை), அரசுத் தேர்வு இயக்ககம், சென்னை (இணை இயக்குநர், பணியாளர் தொகுதி, பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை)
5. எஸ்.உமா- இணை இயக்குநர், மேல்நிலைக்கல்வி, பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், மேல்நிலை, அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை)
6. கே.சசிகலா- இணை இயக்குநர், உதவி பெறுபவை, தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், நிர்வாகம், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை).
7. சி.செல்வராஜ்- இணை இயக்குநர், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், சென்னை. (கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை).
8. எஸ்.சுகன்யா- இணை இயக்குநர், தொழிற்கல்வி, பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், உதவி பெறுபவை, தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை).
9. எஸ்.நாகராஜமுருகன்- இணை இயக்குநர், நிர்வாகம், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை).
10. கே.ஸ்ரீதேவி- இணை இயக்குநர்- 2, மாநிலத் திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம், சென்னை).
11. ஆர்.பாஸ்கர சேதுபதி- இணை இயக்குநர், பணியாளர் தொகுதி, பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், தொழிற்கல்வி,பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை).
12. கே.செல்வகுமார்- இணை இயக்குநர், நாட்டு நலப்பணித் திட்டம், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், சென்னை).
13. பி.பொன்னையா- இணை இயக்குநர்- 3, மாநிலத் திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி இயக்ககம், சென்னை. (இணை இயக்குநர், நாட்டு நலப்பணித் திட்டம், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை).
14. நா.ஆனந்தி- இணை இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை. (இணை இயக்குநர், அனைவருக்கும் கல்வித் திட்டம், சென்னை).
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (பழைய பணியிடம் அடைப்புக்குறிக்குள் அளிக்கப்பட்டுள்ளது):
1. ஆர்.சுவாமிநாதன்- முதன்மைக் கல்வி அலுவலர், திருவாரூர் (திருநெல்வேலி).
2. எம்.இராமகிருஷ்ணன்- முதன்மைக் கல்வி அலுவலர், திருச்சி (தூத்துக்குடி).
3. ச.செந்தில்வேல்முருகன்- முதன்மைக் கல்வி அலுவலர், புதுக்கோட்டை (சிவகங்கை).
4. அ.புகழேந்தி- முதன்மைக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி, (விருதுநகர்).
5. எம்.வாசு- துணை இயக்குநர் (மாற்றுத்திறனாளிகள்), பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை (தேனி).
6. ஜே.ஆஞ்சலோ இருதயசாமி- முதன்மைக் கல்வி அலுவலர், விழுப்புரம் (மதுரை).
7. எம்.கே.சி.சுபாஷினி- முதன்மைக் கல்வி அலுவலர், தஞ்சாவூர் (திண்டுக்கல்).
8. து.கணேஷ்மூர்த்தி- முதன்மைக் கல்விஅலுவலர், கோவை (நீலகிரி).
9. நா.அருள்முருகன்- துணை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், சென்னை (கோவை).
10. ஆர்.முருகன்- முதன்மைக் கல்வி அலுவலர், கடலூர் (திருப்பூர்).
11. பெ.அய்யண்ணன்- முதன்மைக் கல்வி அலுவலர், கரூர் (ஈரோடு).
12. ச.கோபிதாஸ்- முதன்மைக் கல்வி அலுவலர், திண்டுக்கல் (நாமக்கல்).
13. கே.பி.மகேஸ்வரி- முதன்மைக் கல்வி அலுவலர், சிவகங்கை (தருமபுரி).
14. எஸ்.சாந்தி- முதன்மைக் கல்வி அலுவலர், திருப்பூர் (புதுக்கோட்டை).
15. தி.அருள்மொழிதேவி- முதன்மைக் கல்வி அலுவலர், பெரம்பலூர் (கரூர்).
16. என்.மாரிமுத்து- முதன்மைக் கல்வி அலுவலர், மதுரை (அரியலூர்).
17. க.முனுசாமி- துணை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை (பெரம்பலூர்).
18. மு.இராமசாமி- முதன்மைக் கல்வி அலுவலர், தருமபுரி (திருச்சி).
19. ஆர்.திருவளர்ச்செல்வி- முதன்மைக் கல்வி அலுவலர், காஞ்சிபுரம், (தஞ்சாவூர்).
20. ச. மார்ஸ்- முதன்மைக் கல்வி அலுவலர், சென்னை (விழுப்புரம்).
21. ர.பாலமுரளி- முதன்மைக் கல்வி அலுவலர், ஈரோடு (கடலூர்).
22. ப.உஷா-முதன்மைக் கல்வி அலுவலர், நாமக்கல் (காஞ்சிபுரம்).
23. ஆ.அனிதா- முதன்மைக் கல்வி அலுவலர், தூத்துக்குடி (சென்னை).
24. ஏ.வசந்தி- முதன்மைக் கல்வி அலுவலர், தேனி (துணை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம்).
25. கே.கணேசன்- துணை இயக்குநர், தொடக்க கல்வி இயக்ககம், சென்னை (பெற்றோர் ஆசிரியர் கழகச் செயலர், சென்னை).
இடைக்காலமாக பதவி உயர்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர்கள் (ஏற்கெனவே இருந்த பதவி அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது):
1. பா.பிரியதர்ஷினி- செயலாளர், பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை (மாவட்ட கல்வி அலுவலர், திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்).
2. கே.ஒளி- முதன்மைக் கல்வி அலுவலர், அரியலூர் (மாவட்ட வயது வந்தோர் கல்வி அலுவலர், விழுப்புரம்).
3. கே.பிச்சையப்பன்- முதன்மைக் கல்வி அலுவலர், நீலகிரி (மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர், கடலூர்).
4. டி.மனோகரன்- முதன்மைக் கல்வி அலுவலர், விருதுநகர் (மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்).

Transfer incharge J.D s



Sunday, May 07, 2017

பிளஸ் 2 தேர்வு முடிவு 'ரேங்கிங்' முறை மாற்றம்


பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், மாநில, மாவட்ட, 'ரேங்கிங்' முறையில், மாற்றம் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெறும், முதல் மூன்று மாணவர்கள், மாநில மற்றும் மாவட்ட வாரியாக, தர வரிசை பட்டியலில் இடம் பெறுவர். அவர்களுக்கு, அரசு சார்பில், பரிசு, சான்றிதழ், ஊக்கத் தொகை வழங்கப்படும்; தனியார் அமைப்புகளும், பாராட்டி பரிசு வழங்கும்.

தற்போது, தனியார் பள்ளி, அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் சேர்த்து, ஒரே பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில், பெரும்பாலும், தனியார் பள்ளி மாணவர்களே முன்னிலை பெறுகின்றனர். அரசு மற்றும் தமிழ் வழி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், பொதுத் தேர்வு, 'ரே ங்கிங்' முறையை மாற்ற, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இந்த ஆண்டு, பொதுத் தேர்வு முடிவை வெளியிடும் போது, 'ரேங்கிங்' முறையில், மாற்றம் கொண்டு வர, அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதாவது, ஆங்கில வழியில் படிக்கும், தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களை, தனியாக தர வரிசைப்படுத்தவும், தமிழ் வழியிலும், அரசு பள்ளியிலும் படித்த மாணவர்களை, மாநில, 'ரேங்கிங்'கில் கொண்டு வரவும் திட்டமிட்டு உள்ளனர். தேர்வு முடிவு, மே, 12ல் வெளியாகும் போது, இது குறித்த அறிவிப்பு வெளியாகும். 'ரேங்கிங்' முறை மாற்றத்தால், அரசு பள்ளியில் படித்து, அதிக மதிப்பெண் எடுக்கும், பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் பரிசு, பதக்கங்களை பெற முடியும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயிற்சிக்கு வர மறுக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்'


பள்ளிகளில் ஒழுங்காக பாடம் நடத்தாத, பயிற்சிக்கும் வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டங்கள் மூலம், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. ஆண்டுதோறும், வார விடுமுறை நாட்களில், இந்த பயிற்சி அளிக்கப்படும்.

இதன்படி, கணிதம், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, இலவச உணவு, இருப்பிடத்துடன், குறிப்பிட்ட மாவட்டங்களில், ஐந்து நாள் பயிற்சி இன்று துவங்குகிறது. மாவட்ட வாரியாக, 55 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த பயிற்சியில், தானாக முன்வந்து பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோடை வெயில், தண்ணீர் தட்டுப்பாடு, பெண்களால் அலைய முடியாது என, பல காரணங்களை கூறி, 'பயிற்சிக்கு வர மாட்டோம்' என, பல ஆசிரியர்கள் அடம் பிடித்துள்ளனர். பயிற்சி திட்டத்தை கைவிடும்படி, ஆசிரியர்கள் சங்கங்கள் மூலம், அதிகாரிகளுக்கு நெருக்கடியும் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: அரசு பள்ளிகள் இருந்தால், ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கும். தரமான கல்வியை வழங்கினால் தான், அரசு பள்ளிகளும் இருக்கும். அதற்கு, ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி கள் அவசியம். அந்த பயிற்சியை, உணவு, இருப்பிடம், போக்குவரத்து செலவுடன், அரசே தருகிறது. தனியார் பள்ளிகளில், குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள், விடுப்பு நாட்களிலும், பள்ளிகளில் பணியாற்றுகின்றனர். தங்கள் சொந்த பணத்தில், வெளியே உள்ள மையங்களில் சிறப்பு பயிற்சி பெற்று, தரமான பாடம் நடத்துகின்றனர். ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்கள், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இடமாறுதல் போன்றவற்றில் மட்டுமே அக்கறையாக உள்ளனர்.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள், 'பயிற்சிக்கும் வரமாட்டேன்; பாடம் நடத்தவும் மாட்டேன்' என, அடம் பிடிக்கக்கூடாது. அரசுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பள்ளிகளில் நவீன கழிப்பறை

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நவீன கழிப்பறைகள்

அரசுப் பள்ளிகளில் நவீன கழிப்பறைகள் கட்டித்தர உத்தரவிட்டுள்ளேன் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
வரும் ஜூன் முதல்வாரத்தில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்படுகின்றன.

அதையொட்டி, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் மதுரையில் நடந்தது. இந்த பயிற்சி வகுப்ப்புக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசும்போது, தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசுப் பள்ளிகளையும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்துவேன் எனக் கூறினார்.

மேலும், கிராமப்புற பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நவீன கழிப்பறைகளைக் கட்டித் தர ஏற்பாடு செய்வேன் என செங்கோட்டையன் கூறினார்.
தமிழக அரசுப்பள்ளிகளில்நவீன அக்ழிப்பறைகளைக் கட்டினாலும் அவற்றுக்கு நீர் வசதி செய்து தரப்படாத கரணத்தால் பெரும்பாலான் அபள்ளிகளில் கழிப்பறைகள மூடியே கிடக்கின்றன.
மேலும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய சில பள்ளிகள் மாணவர்களையே பயன்படுத்துகின்றன என்பது துய்ரம் நிறைந்த நடைமுறை.முழுமையான சுகாதரத்தை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நாளை முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது - மருத்துவ கல்வி சேர்க்கை செயலாளர் அறிவிப்பு.

#நாளை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது - பொது பிரிவினருக்கான கலந்தாய்வு மே 9-11ம் தேதிகளில் நடைபெறுகிறது.

மே 11-ம் தேதி மாலை எம்டிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு

மொத்தம் 762 இடங்களை நிரப்புவதற்கு, 1000 பேருக்கு கலந்தாய்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.