இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, January 07, 2017

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு தீவிரம்


அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 100க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள், வரும் கல்வி ஆண்டில் காலியாக உள்ளன. இவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கு, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, நேரடி நியமனத்தில் வந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் என, இரண்டு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே, விதிகளின்படி பணிமூப்பு விபரங்களை, வரும், 30க்குள், பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

பட்டியல் தயாரிப்பு பணியில் விதிமீறல்கள், பிழைகள் ஏற்படக் கூடாது எனவும், சி.இ.ஓ.,க்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டங்களில் இருந்து வரும் பெயர் விபரங்களை, தலைமை அலுவலக ஆவணங்களுடன் ஒப்பிட்டு, பதவி உயர்வுக்கான தோராய பட்டியல், மூன்று மாதங்களில் இறுதி செய்யப்படும். மார்ச் இறுதியில், இறுதி பட்டியல் தயாராகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு


தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகள் உள்ளன. இவற்றில், தங்கி படிக்கும், மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 100 மதிப்பெண்கள் எடுத்தால், அவர்களுக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என, சட்டசபையில் அமைச்சர் அறிவித்தார்.அதன்படி, ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவ, மாணவியருக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க, அரசு உத்தரவிட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பை மாணவ, மாணவியர், பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வருமானவரி படிவம் தமிழில்





posted from Bloggeroid

அரசுக்கு எதிராகத் திரளும் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்

அரசுக்கு எதிராகத் திரளும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

தமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காகவே தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு இந்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் வரை திருவண்ணாமலையில் நடக்கிறது. மாநாட்டுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். மாநாட்டை முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் வாழ்த்துரை வழங்கினார்.

மாநாட்டில் இதுவரை 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வரும் 8-ம் தேதி ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் மோசஸ், வணிகவரித்துறை சங்கத்தின் தலைவர் ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாடு குறித்து தமிழ்செல்வி கூறுகையில், "அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்ப்பதில்லை. புதிய பென்சன் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதற்கிடையில் சட்டசபையில் 110 விதிகளின் கீழ் தொகுதிப்பூதியம், மதிப்பூதியம் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். பென்சன் திட்டத்துக்கு வல்லுநர்குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அதில் 8 அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டு விட்டது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியப் போக்குகாரணமாக சில அரசாணைகள் நிறைவேற்றப்படவில்லை.

தற்போது சங்கத்தின் 12-வது மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதிய ஊதியக்குழுவை அமைக்க வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்குரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (JACTO-GEO) என்ற அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
அரசு ஊழியர்கள் வட்டாரங்கள் கூறுகையில், "ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து அ.தி.மு.க அரசு இருந்து வருகிறது. அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், புதிய பென்சன் திட்டம் ரத்து செய்யப்படும், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் ஏற்படும் போது தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஊதிய மாற்றம் ஏற்படுத்தப்படும். சத்துணவு, அங்கன்வாடியில் கடந்த 25 ஆண்டுகளாக தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். கருணை அடிப்படையில் பணியில் சேருபவர்களுக்காக விதிகள் தளர்த்தப்படும். அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளிடம் அவ்வப்போது கலந்து ஆலோசிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால்தான் கடந்த பிப்ரவரியில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தோம். அப்போது நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சங்க நிர்வாகிகளிடம் 9.2.2016ல் 2 மணி நேரம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஜெயலலிதாவிடம் சொல்லி அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. தற்போது ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருக்கிறார். இப்போது அவர் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமில்லை. புதிய பென்சன் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு சங்க நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்தப் பிறகும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. முதல்வரையும், அமைச்சர்களையும் குறைச் சொல்வதைவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர். குறிப்பாக நிதித்துறை, நிர்வாகம், பணியாளர் சீர்திருத்தத்துறையில் உள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால் அறிவிக்கப்பட்ட அரசாணைகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன.

குறிப்பாக நிதித்துறையை சாராத பதவி உயர்வு, சீனியாரிட்டி, பணிவரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படவில்லை. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு போராட்ட காலங்களில் ஏற்படுத்தப்படும். அந்த அமைப்பு இப்போதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

எஸ்.மகேஷ்

உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆசிரியர் பணிபதிவேட்டினை உடனுக்குடன் முடிக்க செயல்முறைகள்



posted from Bloggeroid

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக பா.வளர்மதி நியமனம்


posted from Bloggeroid

ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதைத் தடுக்கும் 7 வழிகள்! #GadgetTips

போன் அடிக்கடி சூடாகும் பிரச்னை உங்களில் பலருக்கும் இருக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஒரு மணி நேரம் பயன்படுத்தி விட்டு, அதன் டிஸ்ப்ளேவைத் தொட்டாலே கொதிக்கும். சில சமயம், நீண்ட நேரம் சார்ஜ் போட்டுவிட்டு, மொபைலை கையில் எடுத்தாலும் அதிக வெப்பத்தை உணரலாம். நீண்ட நேரம் பேருந்துகளிலோ, ரயிலோ மொபைலை பயன்படுத்த விரும்பினால் கூட, அதில் இருந்து வெளிவரும் வெப்பம் நமக்கு அசவுகரியமாக இருக்கும். சில ஸ்மார்ட்போன்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் கூட, பெரும்பாலான போன்களில் இந்த போன் சூடாகும் பிரச்னை இருக்கின்றது.

நமது மொபைல் போனில் நடக்கும் மின்னணு பொருட்களின் செயல்பாடுகள் மூலமே வெப்பமானது உருவாகிறது. இந்த அதிகமான வெப்பத்தை தாங்கும் வகையில்தான் மொபைல் பாகங்களும் வடிவமைக்கப்படுகின்றன என்றாலும் கூட, மொபைலின் வேகமும், செயல்பாடும் இதனால் குறைவதை உணரலாம். உங்கள் போன் அதிகம் சூடாகிறது என்றால், நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவைதான்.

மல்ட்டி டாஸ்க்கிங்:

இசை கேட்டுக்கொண்டே கேம்ஸ் விளையாடுவது, ஒரே நேரத்தில் பல ஆப்ஸ்களை இயக்குவது போன்றவற்றால் போனின் செயல்பாடு அதிகமாக இருக்கும் போது, உங்கள் போன் புராசசர் வேகம் குறையும். போனின் வெப்பம் அதிகரிக்கும். அதுவும் உங்கள் போனில் இருப்பது குறைந்த திறனுள்ள ரேம் என்றால், இந்த பிரச்னையை தவிர்க்கவே முடியாது. எனவே 2 ஜி.பிக்கும் குறைவான ரேம் கொண்ட போன்களில் மல்ட்டிடாஸ்க்கிங்கை குறைப்பது நல்லது. பல நேரங்களில் ஆப்ஸ்களை ஒரே நேரத்தில் இயக்க வேண்டிய அவசியம் நிச்சயம் ஏற்படும். எனவே அதனைத் தவிர்க்க முடியாது என்றாலும், நேரத்தைக் குறைப்பதன் மூலம் போன் வெப்பமடைவதைத் தவிர்க்கலாம்.

சார்ஜிங்:

உங்கள் போனை எப்போதுமே 100% பேட்டரியுடன் தான் வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. எனவே 80 முதல் 90% அளவுக்கு பேட்டரி அளவு இருந்தாலே ஓகே. சார்ஜ் போடும் போது நாம் செய்யும் இன்னொரு தவறு, பேட்டரி ஃபுல் ஆன பிறகும் கூட, சார்ஜிங்கிலேயே விட்டுவிடுவது. இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்வதுதான் பலரது பழக்கம். இந்த ஓவர் சார்ஜிங்கும், போன் சூடாக ஒரு காரணம்தான். போன் பேட்டரி அளவை 30% முதல் 90% வரை எப்போதும் வைத்திருப்பதே, பேட்டரியின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

போன் கவர்:

புது போன் வாங்கியதுமே, ஒரு ஃப்ளிப் கவர் வாங்கி மாட்டுவதுதான் ஊர் வழக்கம். அது போனின் பாதுகாப்பிற்கு நல்லதே! அதே சமயம், போனின் வெப்பம் குறையாமல் இருக்கவும் இவை ஒரு காரணமாக அமைகின்றன. நீண்ட நேரம் கேம் விளையாடும் போதோ, அல்லது இணையம் பயன்படுத்தும் போதோ மொபைல் அதிகம் சூடாகி விடும். அதுபோன்ற சமயங்களில் உங்கள் போன் கவரை கழற்றி விடுங்கள்.

மொபைல் பேட்டரி மற்றும் சார்ஜர்:

ஏதாவது பழுது ஏற்பட்டு மொபைல் போனின் பேட்டரியை மாற்றும் போது, எக்காரணம் கொண்டு போலியான அல்லது மலிவான பேட்டரிகளை வாங்கி மாட்டாதீர்கள். அது உங்கள் போனிற்கே ஆபத்தாக அமையலாம். போலி பேட்டரிகள் எளிதில் சூடாகி விடும்.
மொபைல் சார்ஜர் விஷயத்திலும் இது பொருந்தும். உங்கள் மொபைல் போனோடு வந்த சார்ஜரை தவிர்த்து, வேறு ஏதேனும் தரமில்லாத சார்ஜர்களை பயன்படுத்துவதும் போனின் வெப்பத்திற்கு காரணம். USB கேபிளுக்கும் இது பொருந்தும்.

சுற்றுப்புற வெப்பநிலை:

உங்கள் மொபைல் ஏ.சி அறையில் இருக்கும் போது இருந்த வெப்பநிலைக்கும், வெளியே இருக்கும் போது இருக்கும் வெப்பநிலைக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கும். நமது சுற்றுப்புற வெப்பநிலையும் போனின் வெப்பத்திற்கு காரணம். எனவே வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றின் அருகே உங்கள் மொபைல் போன் பயன்பாட்டை தவிர்க்கலாம். நேரடியாக சூரிய ஒளி படும் இடங்களில் உங்கள் மொபைலை வைக்க வேண்டாம்.

வேண்டாத ஆப்ஸ்:

சில ஆப்ஸ்கள் உங்கள் போனின் ஜி.பி.எஸ், மெமரி, வைஃபை, டிஸ்ப்ளே, ஸ்பீக்கர் உள்ளிட்ட பல விஷயங்களை ஆக்டிவ்வாக வைத்திருக்கும். இதனால் அதிகம் மின்சக்தி வீணாவதோடு, போனின் வெப்பமும் அதிகமாகும். எனவே இதுபோன்ற ஆப்ஸ்களை தவிர்த்து விடுங்கள். ஆன்லைன் கேம்கள் பெரும்பாலும் இந்த ரகங்கள்தான். எனவே ரேம் குறைந்த போன்களில் கேம்களுக்கு தடை போட்டு விடுங்கள்.

வைஃபை, இணையம், ப்ளூடூத்:

அதிக நேரம் வைஃபை மூலம் அல்லது மொபைல் டேட்டா மூலம் டவுன்லோட் செய்வது போனை சூடாக்கும். எனவே சிறிய இடைவெளிகளுக்கு பிறகு டவுன்லோட் செய்யலாம். ப்ளூடூத் நீண்ட நேரம் ஆன்-ல் இருப்பதையும் தவிருங்கள்!

இது மட்டுமின்றி போன் சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும் போதே பயன்படுத்துவது, மொபைல் டிஸ்ப்ளே ஒளி அளவை அதிகம் வைப்பது, பேக்கிரவுண்ட் ஆப்ஸ் பயன்பாடுகள் போன்ற விஷயங்கள்
அனைத்தும் மின்சக்தியை வீணாக்குபவை. இவற்றை முடிந்தளவு குறைத்தாலே அடிக்கடி போனை சார்ஜ் செய்ய அவசியமிருக்காது. எனவே உங்கள் பேட்டரியின் ஆயுள் பாதிக்கப்படாமல் இருக்கும்.

- ஞா.சுதாகர்.

Friday, January 06, 2017

முதல்வர் கணினித் தமிழ் விருது: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு


முதல்வரின் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 2016 -ஆம் ஆண்டுக்கான முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க, டிசம்பர் 31-ஆம் தேதி கடைசி நாள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

தற்போது, இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் (www.tamilvalarchithurai.org) இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்ககத்துக்கு, ஜனவரி 31 -ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை, "தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை -600008' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை 044 -2819 0412, 044 -2819 0413 ஆகிய தொலைபேசி எண்களிலும், tamilvalarchithurai@gmail.com மின்னஞ்சல் முகவரியிலும் பெறலாம்.

கடந்த 2013 -ஆம் ஆண்டு முதல், முதல்வர் கணினித் தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு விருதுத் தொகையாக ரூ.1 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, January 05, 2017

பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில் விடைகளை எழுதி அடித்திருந்தால் அடுத்த தேர்வுகள் எழுத முடியாது : தேர்வுத் துறை எச்சரிக்கை


பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில் விடைகளை எழுதிய பிறகு அனைத்து விடைகளையும் அடித்துவிட்டு விடைத்தாள் கொடுக்கும் மாணவ, மாணவியர் அடுத்த 2 தேர்வுகளை எழுத முடியாது என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் ெதாடங்க உள்ளது. மார்ச் 2ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிகிறது.

பொதுத் தேர்வை குளறுபடிகள் இல்லாமல் நடத்துவது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளையும் தேர்வுத்துறை வழங்கியுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் கடைபிடிக்க வேண்டியவை குறித்தும், தேர்வு மையங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. சில தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை காட்ட வேண்டும் என்ற நோக்கில் சில முறைகேடுகளில் ஈடுபடுவதாக தேர்வுத்துறைக்கு பல புகார்கள் வந்துள்ளன. தனியார் பள்ளிகள் 100 சதவீதம் காட்டினால்தான் அடுத்த ஆண்டு அதிக அளவில் அந்த பள்ளியில் சேர வருவார்கள் என்ற வணிக நோக்கில் செயல்படுகின்றன. அதற்காக, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல ஆலோசனைகளை தனியார் பள்ளிகள் தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி படிப்புக்கு உரிய பாடத் தேர்வில் இடம்பெறும் கேள்விகள் குழப்பமாக இருந்தாலோ, மாணவர்களால் விடையளிக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ அந்த மாணவர்கள் குறிப்பிட்ட அந்த தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுவிடுவார்கள். அதனால், மதிப்பெண் குறையும் என்று தெரிந்தால், விடைகளை அடித்துவிட்டு விடைத்தாளை கொடுத்துவிட்டு வந்துவிட வேண்டும் என்றும், பின்னர் நடக்கும் உடனடித் தேர்வை எழுதலாம் என்றும் ஆலோசனை கூறி வருவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எந்த ஒரு மாணவரும் தேர்வு எழுதிய பிறகு விடைத்தாளின் அனைத்து பக்கங்களையும் பேனாவால் அடித்து விட்டு கொடுத்தால், அப்படிப்பட்ட மாணவர்கள் குறித்து விவரங்களை அறைக் கண்காணிப்பாளர், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் உடனடியாக தேர்வுத் துறை இயக்குநருக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் அடுத்தடுத்து நடக்கும் 2 தேர்வுகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

புதிய மென்பொருள் மூலம் வண்ண வாக்காளர் அட்டை


புதிய மென்பொருள் வழியாக வண்ண வாக்காளர் அட்டையை இலவசமாகப் பெறலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:- தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

மொத்தம் 11 லட்சத்து 19 ஆயிரத்து 864 பேர் புதிய வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு வாக்காளர் தினமான ஜனவரி 25 ஆம் தேதி அடையாள அட்டைகள் வழங்கப்படும். ஆனால் பெரும்பாலான வாக்காளர்களுக்கு உடனடியாக வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால், அதனைத் தவிர்க்க புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் செல்லிடப் பேசி குறுஞ்செய்தியில் எஸ்.எம்.எஸ். ரகசிய குறியீடு கொடுக்கப்பட்டு, வண்ண வாக்காளர் அட்டைகள் கட்டணமில்லாமல் வழங்கப்படும். இந்த முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். பழைய வாக்காளர்கள் வண்ண அடையாள அட்டையைக் கோரினால் ரூ.25 விலையில் வழங்கப்படும்.

பொங்கல் போனஸ் உண்டா? : அரசு ஊழியர்கள் கலக்கம்

பொங்கல் போனஸ் இன்னும் அறிவிக்கப்படாததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவலையில் உள்ளனர். தமிழக அரசு, ஆண்டு தோறும், பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரசின், 'ஏ, பி' பிரிவு ஊழியர்களுக்கு, 1,000 ரூபாய்; 'சி - டி' பிரிவு ஊழியர்களுக்கு, 3,000 ரூபாய்; ஓய்வூதியம் பெறுவோருக்கு, 500 ரூபாய் போனஸ் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு, பொங்கலுக்கான போனஸ் இதுவரை அறிவிக்கப்படாததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், அரசுக்கு, மனு ஒன்றை அளித்துள்ளன. அதில், 'பொங்கல் போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்; போனஸ் வழங்க காலதாமதம் கூடாது. பண தட்டுப்பாடு உள்ளதால், ரொக்கமாக வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாக்காளர் அடையாள அட்டை : தேர்தல் கமிஷன் புதிய ஏற்பாடு


புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு, அரசு இ - சேவை மையங்களில், இலவச அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாக, 15.04 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர் களுக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ஜன., 25க்கு பின் வழங்கப்படும். தற்போதே அடையாள அட்டை பெற விரும்புவோர், அரசு இ - சேவை மையங்களுக்கு சென்று, 25 ரூபாய் கட்டணம் செலுத்தி, பெற்றுக் கொள்ளலாம். புதிய வாக்காளர்களுக்கு, அடையாள அட்டை வழங்குவதற்காக, புதிய மென்பொருள் தயார் செய்துள்ளோம். இதன்மூலம், புதிய வாக்காளர்களுக்கு, ஜன., 25க்கு பின், அவர்களின் மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்படும்.

அந்த எண்ணை, அரசு இ - சேவை மையங்களில் காண்பித்து, இலவசமாக அடையாள அட்டையை பெறலாம். புதிய அடையாள அட்டை வந்து சேரவில்லை என்ற புகாரை தவிர்க்க, இந்த ஏற்பாட்டை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். சென்னை முதலிடம்! : வாக்காளர் எண்ணிக்கையில், சென்னை முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில், 20.07 லட்சம் ஆண்கள்; 20.51 லட்சம் பெண்கள் என, மொத்தம், 40.58 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெற்றுள்ளன. அரியலுார் மாவட்டத்தில், மிகக்குறைந்த வாக்காளர்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில், 2.49 லட்சம் ஆண்கள்; 2.51 லட்சம் பெண்கள் என, மொத்தம், ஐந்து லட்சம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்

டி.இ.ஓ., பதவி 19ல் நேர்காணல்


டி.இ.ஓ., பதவிக்கான நேர்காணல், வரும், 19ல் நடக்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்ட கல்வி அலுவலரான, டி.இ.ஓ., பதவிக்கான, 11 காலியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு, 2015 ஆகஸ்டில் நடந்தது; 2,432 பேர் பங்கேற்றனர். மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில், தேர்வான, 30 பேருக்கு நேர்காணல், வரும், 19ல், சென்னை, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கும்