Sunday, December 18, 2016
3ம் பருவப் பாடப்புத்தகம் மாணவர்களுக்கு 28ம் தேதிக்குள் வினியோகிக்க உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு பாடப்புத்தக சுமையை குறைப்பதற்காக முப்பருவ முறை நடைமுறையில் உள்ளது. இதையடுத்து பாடப்புத்தகங்கள் 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு தனித்தனியே அச்சிட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான இரண்டு பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு தற்ேபாது இரண்டாம் பருவத் தேர்வுகள் நடக்கின்றன. இந்நிலையில், வரும் 24ம் தேதி முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது. ஜனவரி மாதம் தான் பள்ளிகள் இயங்கும் என்பதால் 3ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். முன்னதாக 52 தலைப்புகளில் சுமார் 6 கோடி இலவச பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் பாடப்புத்தகங்களை பெற்று 22க்கும் மேற்பட்ட கிடங்குகளில் வைத்துள்ளனர். இன்னும் சில மாவட்டங்களுக்கு புத்தகங்கள் சென்று சேரவேண்டிய நிலை உள்ளது. இரண்டு நாட்களில் முழுமையாக புத்தகங்கள் சென்று சேர்ந்துவிடும். ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கும் போது அனைத்து மாணவர்களுக்கும் இலவச புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், 28ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்களை அனுப்ப மாவட்ட கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Saturday, December 17, 2016
பிளஸ் 2 தனித்தேர்வு 19ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ்-2 தனித்தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்புவோரிடம் இருந்து ‘ஆன்-லைனில்’ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு உள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு சென்று வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை ‘ஆன்-லைனில்’ பதிவு செய்திட கல்வி மாவட்ட வாரியாக தனித்தனியே சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு உள்ள சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ‘ஆன்லைனில்’ விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான அறிவுரை ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.
ஒப்புகை சீட்டு
‘ஆன்-லைனில்’ விண்ணப்பத்தை பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசு தேர்வு துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்ய முடியும். எனவே ஒப்புகைச் சீட்டை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வு எழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்த பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காலவரையற்ற போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான, அரசு உத்தரவை வெளியிடாவிட்டால், ஜனவரியில் நடைபெறும் மாநில மாநாட்டில், காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்,'' என அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி தெரிவித்தார்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் சங்கம் சார்பில் திருமங்கலத்தில் நடந்த ஓய்வூதியர் தின விழாவில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 2003ம் ஆண்டிற்கு பின்னர், அரசு ஊழியர் சங்க அமைப்புகளின் சார்பில் வலுவான போராட்டம் நடத்தப்படவில்லை. அரசு ஊழியர்களையும், பெண் ஊழியர்களையும், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களையும் ஒன்று திரட்டுவதில் பிரச்னையும், பலகீனமும் உள்ளது. அரசு நிர்வாக பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்களின் உண்மை நிலை மற்றும் கோரிக்கை குறித்து முறையாக ஆட்சியாளர்களிடம் கொண்டு செல்வதில்லை. அவர்கள் ஆட்சியாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடைவெளி ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையை மாற்ற நாம் முன்பு போல் ஒன்று திரள வேண்டும். நமக்குள் கூட்டு சக்தியை உருவாக்க வேண்டும். பெண் ஊழியர்கள் உட்பட அத்தனை அரசு ஊழியர்களும் சென்னையில் ஒன்று திரண்டால், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்து விடலாம். 3.5 லட்சம் தொகுப்பூதிய பணியாளர்களும் ஒன்று திரண்டால் தொகுப்பூதிய முறையை மாற்றி விடலாம். புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் 20 சதவீதம் உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்குவது, தொகுப்பூதிய திட்டத்தை ஒழிப்பது, மீண்டும் நிர்வாக தீர்ப்பாய சிறப்பு குழு அமைப்பது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
இவை நிறைவேறாவிட்டால், திருவண்ணாமலையில் ஜனவரி 6, 7, 8, தேதிகளில் நடக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில், காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
அரசு பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி : பின்னலாடை துறையினர் முடிவு
அரசு பள்ளிகளுக்கு, கழிப்பறை வசதி செய்து கொடுக்க, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:
ஆயத்த ஆடை நிறுவனங்கள், பெறும் லாபத்தில், 2 சதவீதத்தை, தனித்தனியே சிறிய அளவிலான பயன்பாடுகளுக்கு செலவிடுகின்றன. அனைத்து நிறுவனங்களில் இருந்தும் இந்த தொகையை பெற்று, சமூக பயன்பாட்டு நிதியாக சேமிக்கப்படும். வளர்ச்சி திட்டங்களுக்கான செலவினங்கள் அடிப்படையில், 'பையர்'கள், பையிங் ஏஜன்சிகளிடம் இருந்தும், நிதியுதவி பெறப்படும். திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கு தொழிலாளர்கள் முதுகெலும்பாக உள்ளனர்.
அனைத்து தேவைகளுக்கும் அரசு உதவியை நாடுவதை விட, தொழில் துறையினர் இணைந்தால், சில வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில், சுகாதாரத்துக்கு முதல் முக்கியத்துவம் அளித்து, அரசு, மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரப்படும். கல்வித்துறை வாயிலாக, கழிப்பறை இல்லாத பள்ளிகள் விபரங்கள் சேகரிக்கப்படும். வரும் ஜன., முதல், இந்த பணியை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் 3.50 இலட்சமாக அதிகரிப்பு
தமிழக அரசு துறைகளில், தொடர்ந்து காலிப் பணியிடங்கள் அதிகரித்து வரும் சூழலில், வரும் நிதியாண்டில், மேலும் ஒரு லட்சம் பணியாளர்கள் ஓய்வு பெற உள்ளனர்.
இதன் மூலம், அரசு நிர்வாகத்தில், காலி பணியிடங்களின் எண்ணிக்கை, 3.50 லட்சமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, பணிச் சுமையால் அவதிப்படும்
அரசு ஊழியர்கள், ஓய்வு பெற உள்ள ஒரு லட்சம் பேரால், மேலும், பணிச் சுமைக்கு
ஆளாக நேரிடும் சூழலுக்கு தள்ளப்பட உள்ளனர்.
தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில், 14 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசு பணி கனவில், லட்சக்கணக்கான இளைஞர் கள், வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்து, பணிக்காக காத்திருக்கின்றனர்.
ஆனால், அரசு பணிக்கு ஆட்கள் எடுப்பது குறைவாகவே உள்ளது. காலிப் பணியிடங் களை நிரப்ப, அரசு தயக்கம் காட்டுவதால், காலியிடங்களின் எண்ணிக்கை, ஆண்டு
தோறும் அதிகரித்து வருகிறது. பணியாளர் பற்றாக்குறை காரணமாக, பணியில் உள்ள ஊழியர்களுக்கு, கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது.
எனவே, அனைத்து அரசு ஊழியர் சங்கங்க ளும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
என,அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றன. தற்போதைய நிலையில், வருவாய், ஊரக வளர்ச்சி, வணிக வரி, சமூக நலம் என, அனைத்து துறை களிலும் சேர்த்து, 2.50 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்நிலை யில், வரும் நிதி யாண்டில், ஒரு லட்சம் பணி யாளர்கள், ஓய்வு பெற உள்ளனர். இதனால், காலிப் பணியிடங் களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும். அரசு, உடனடி யாக பணியிடங்களை நிரப்பாவிட்டால், அரசுபணி கள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என, அரசு ஊழியர் சங்கங்கள், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலை வர், தமிழ்ச்செல்வி கூறியதாவது:கடந்த, 1977 முதல், 1983 வரை, தற்காலிகமாக பணியில் சேர்க் கப்பட்ட ஊழியர்கள் அனைவரும், 1986ல், நிரந்தரம் செய்யப்பட்டனர். அவர்களில் பெரும் பாலானோர், அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளனர். 1996ல், அரசு வெளியிட்ட அறிக்கை யின்படி, 1.86 லட்சம் பணி யிடங்கள் காலியாக இருந்தன. தற்போது, 2.50 லட்சம் பணியிடங்கள் காலி. அடுத்த ஆண்டு, ஒரு லட்சம் பணியிடங்கள் வரை, காலியாகும் நிலை உள்ளது.
அரசு, உடனடியாக காலியிடங்களை நிரப்பா விட் டால், நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படும். இவ்வளவு காலியிடங்கள் ஏற்படுவதற்கு, அரசு நிர்வாக குளறு படியே காரணம். உதாரணமாக, 100 இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது என் றால், அதில், 55 சதவீதம், நேரடி தேர்வு மூலம் நிரப்பப்படும்.
மீதமுள்ள, 45 சதவீத பணியிடம்,பதவி உயர்வின் மூலமாகவும், கருணை அடிப்படையிலும் நிரப்பப் படும். ஆனால், இந்த பணியிடங்கள் நிரப்பப்படு வதே இல்லை. இதனால், ஆண்டுதோறும் காலி யிடங்கள் அதிகரித்து வருகின்றன.வணிக வரித் துறை யில் மட்டுமே, பதவி உயர்வு மூலம், 3,000 பணியிடங்கள் நிரப்ப வேண்டி உள்ளன. அதை நிரப் பாமல், காலியாகவே வைத்துள்ளனர். நியாயமான
முறையில், காலியிடங்களை நிரப்பாததால், பலர் நீதிமன்றம் செல்கின்றனர்.
நீதிமன்றம் கூறுவதை கேட்காமல், மேல் முறையீடு செய்கின்றனர். நிர்வாக ரீதியான பணியிடங்களை கண்டறிந்து நிரப்புவதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுவது வழக் கம்; யாரும் நியமிக்கவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
5 ஆண்டுகள் பணிசெய்தால் நிரந்தரம்!
தமிழக அரசு பணியாளர் சங்க மாநில பொதுச் செயலர், ரவீந்தரன் கூறியதாவது:கடந்த, 1990 க்கு பின், பணி நியமனம் அதிகளவில் மேற் கொள்ளவில்லை. 1980களில் நியமிக்கப்பட்ட வர்கள், இன்று, 58 வயதை நெருங்கியுள்ளனர். 2017 - 18ல், ஓய்வு பெறுபவர் பட்டியலில் மட் டும், ஒரு லட்சம் பேர் இடம் பெற்றுள்ளனர்.
இப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுபவர் களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், தற் காலிக பணியாளர்களை, நிரந்தர பணியாளர் களாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Friday, December 16, 2016
நீட் தேர்வு பாடத்திட்டம் வெளியீடு
'நீட்' எனப்படும் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவப் படிப்பு சேர்க்கை நடைபெறும். தமிழகம் உட்பட சில மாநிலங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, கடந்த ஆண்டு மட்டும் ’நீட்’ தேர்விலிருந்து, மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. நீட் தேர்வை நடத்த சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், 2017ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ சபை சட்டம் மற்றும் 2016ஆம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்ட சட்டம் 10வது பிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச் சேர்க்கைக்கான தேசியதகுதி மற்றும் நுழைவு தேர்வினை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்த உள்ளது. இந்தத் தேர்வு 2017ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெறும்.
இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும். இந்தத் தேர்வில் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் இந்திய மருத்துவ சபையால் நிர்ணயிக்கப்பட்ட, மத்திய அரசின் சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற்ற எம்.டி / எம்.எஸ் பாடத்திட்டத்திலிருந்து 200 பல்விடைத் தேர்வு வினாக்கள் இடம்பெறும்.இந்தத் தேர்வு டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகளுக்கான ஒற்றைச் சாளர நுழைவுத் தேர்வு ஆகும். 2017ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை பருவத்திலிருந்து இந்தத் தேர்வு மட்டுமே இந்த வகுப்புகளுக்கு நடத்தப்படும். 1956 இந்திய மருத்துவ சபை சட்டத்தின்படி மாநில அளவிலும் அல்லது நிறுவனங்கள் அளவிலோ எந்த ஒரு பல்கலைக்கழகம் / மருத்துவக் கல்லூரி / நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வு செல்லுபடி ஆகாது.
அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனம் புதுடெல்லி, சண்டிகர் பட்ட மேற்படிப்பு மருத்து கல்வி ஆராய்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா, பெங்களுரு நிம்ஹான்ஸ், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய நிறுவனங்கள் NEET-SS –ன் கீழ் வராது.
தேசிய தேர்வுகள் வாரியம் மத்திய அரசால் 1982ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுய ஆட்சி அமைப்பு ஆகும். அகில இந்திய அடிப்படையில் பட்ட மேற்படிப்பு தேர்வுகளை நடத்துவது அதன் முக்கிய நோக்கமாகும்.தேசிய தேர்வுகள் வாரியம் 2013, 2017 ஆண்டுகளில் எம்.டி/எம்.எஸ்/ பட்ட மேற்படிப்பு பட்டயம் ஆகியவற்றுக்கு NEET-PG தேர்வுகளையும் 2017-ம் ஆண்டு NEET-MDS தேர்வுகளையும், 2014 முதல் 2016 வரையான காலத்தில் அகில இந்திய பட்ட மேற்படிப்பு மருத்துவ நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுநேர முனைவர் பட்டத்துக்கு ஊக்கத்தொகை: எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
முழுநேர முனைவர் பட்டம் பயிலும் தாழ்த்தப்பட்ட -பழங்குடியின மாணவர்கள் ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
முனைவர் பட்டம் பெறும் மாணவர்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவருக்கு அனுமதிக்கப்பட்ட படிப்புக் பிரிவுக் கால அளவுக்கு மட்டும் ஊக்கத்தொகை அளிக்கப்படும். முதல் ஆண்டு சேர்க்கையின் அடிப்படையில், இந்தத் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை மாணவர் பயிலக்கூடிய படிப்புப் பிரிவின் துறை தலைமை அலுவலர், ஆராய்ச்சி வழிகாட்டி அலுவலரால் முந்தைய ஆண்டுகளால் மாணவரால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் திருப்திகரமான முன்னேற்றம் குறித்து அளிக்கப்படும் சான்றிதழின் அடிப்படையில் ஊக்கத்தொகை கொடுக்கப்படும். முழுநேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் 700 மாணவர்களில் கலைப்பிரிவு, அறிவியல் பிரிவு, பொறியியல் பிரிவு மற்றும் பிற பிரிவுகள் போன்றவற்றுக்கு அந்தந்த ஆண்டுகளில் விண்ணப்பிக்கும் மாணவ -மாணவியர்களின் எண்ணிக்கைக்கேற்ப தேவையான விகிதாச்சார எண்ணிக்கையில் பிரித்து வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவத்தை தட்டச்சு செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர், ஆதிதிராவிடர் நலத் துறை, எழிலகம் இணைப்புக் கட்டடம், சேப்பாக்கம், சென்னை-5. விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையதள முகவரி: http:cms.tn.gov.insitesdefaultfilesformsPhdFTincer
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு : கூடுதல் விடுமுறை
பிளஸ் 2வுக்கு, மார்ச் 2 முதல், 31 வரையும்; 10ம் வகுப்புக்கு, மார்ச் 8 முதல், 30 வரையும், பொதுத் தேர்வுகள் நடக்கும்' என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிளஸ் 2 தேர்வு, மார்ச் மாதத்திலும்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் இரண்டாவது வாரம் வரையும் நடப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, இரண்டு வகுப்புகளுக்கும், மார்ச்சிலேயே பொதுத்தேர்வு முடிகிறது. அதனால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்து, முடிவுகள் வெளிவரும் வரை, 50 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
ஓய்வூதியர் உரிமை நாள்
நாளை 17.12.2016 ஓய்வூதியர் உரிமை நாள்.
17.12.1982 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திராசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஓய்வூதியம் உரிமை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியநாள்.
ஓய்வூதியர்களால் கொண்டாடப்படும் நாள்.
ஓய்வூதியம் என்பது கருணை அல்ல.
அரசு ஊழியர்களின் நீண்டகால பணிக்கு வழங்கப்படும் கொடுபடா ஊதியம்.
ஊழியர்களின் சமூக பொருளாதார பாதுகாப்பு.
ஆகவே, நண்பர்களே
பெற்ற உரிமையை பாதுகாப்போம்.
வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத்தை மீட்போம்.
போராட்ட வாழ்த்துகளுடன்
திண்டுக்கல் எங்கெல்ஸ்.
NEET exam
*+2 மாணவர்களே*
*NEET - National Eligibility Cum Entrance Test* ( இதற்கு முன்னால் *AIPMT - All India Pre Medical Test* என்று சொல்லுவார்கள்.
*AIIMS, JIPMER & NEET* போன்ற மூன்று நுழைவுத் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் *தேர்ச்சியடைந்தவர்கள்* மட்டுமே *MBBS* படிப்பில் சேர முடியும்.
இந்த ஆண்டு ஒரு முறை மட்டுமே தேர்வு நடைபெறும் *(2017 மே மாதம் முதல் வாரம்)*
*விண்ணப்பிக்க வேண்டிய தேதி : 2016 டிசம்பர் முதல் வாரம் முதல், இறுதி வரை*
*தேர்வுக் கட்டணம :*
*GENERAL & OBC : Rs.1400/-*
*SC/ST & PH : Rs.750/-*
*இப்போதே* *விண்ணப்பிக்கலாம்*
*மறந்துவிடாதீர்கள்*
*Online ல் விண்ணப்பிக்க வேண்டிய Website*
*www.aipmt.nic.in*
*www.cbseneet.nic.in*
12ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு
மார்ச் 2 -ம் தேதி மொழி முதல் தாள் தேர்வு தொடங்குகிறது. மார்ச் 3 -ல் மொழி இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும். மார்ச் 6-ல் ஆங்கிலம் முதல் தாளுக்கும், மார்ச் 7ஆம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கும் தேர்வுகள் நடைபெறும். மார்ச் 10ஆம் தேதி வணிகவியல், மனையியல், புவியியல் ஆகிய தேர்வுகள் நடைபெறவுள்ளன.
மார்ச் 13-ம் தேதி, வேதியியல், கணக்குப் பதிவியல் தேர்வுகள் நடைபெறுகின்றன. மார்ச் 17ஆம் தேதி தொடர்பு ஆங்கிலம், இந்தியக் கலாச்சாரம், கணிணி அறிவியல், உயிர் வேதியியல், மேன்மைத் தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், மார்ச் 21ல் இயற்பியல், பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் தேர்வுகளும் நடைபெறுகிறது. மார்ச் 24ஆம் தேதி தொழில் பாடப் பிரிவுகள், அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், ஆகிய தேர்வுகள் நடைபெறுகிறது.
மார்ச்27ல் கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்துவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் நடைபெறும்.மார்ச் 31ஆம் தேதி உயிரியியல், வரலாறு, தாவரவியல், வணிக கணக்கியல் ஆகிய தேர்வுகளோடு 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நிறைவுபெறுகிறது.
Thursday, December 15, 2016
சலுகைகளுக்கான காலக்கெடு நிறைவு : ரூ.500, 1000 வங்கிகளில் மட்டுமே இனி டெபாசிட் செய்ய முடியும்
ரூ.500, 1000 பழைய ரூபாய் நோட்டுகளுக்கான சலுகை காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இனி வங்கிகளில் மட்டுமே அவற்றை டெபாசிட் செய்ய முடியும். செல்லாத ரூ.500, 1000 நோட்டுகளை சுங்கக்கட்டணம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், பெட்ரோல் பங்க், குடிநீர் மற்றும் மின்கட்டணங்கள், பஸ் டிக்கெட்டுகள் வாங்க, ரயில் முன்பதிவு நிலையங்களில் டிசம்பர் 10ம்தேதி வரை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், பெட்ரோல் பங்க்குகளில் டிசம்பர் 2ம்தேதியுடனும், ரயில் முன்பதிவு மற்றும் பஸ் டிக்கெட் முன்பதிவு மையங்களில் பயன்படுத்துவது கடந்த 9ம்தேதியுடன் முடிவுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு திடீரென அடுத்தடுத்து அறிவித்தது. இதற்கிடையே, 1000 ரூபாய் நோட்டுகள் எங்கும் பயன்படுத்த முடியாது என்று டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் பழைய 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், குடிநீர் கட்டணம், மின் கட்டணம், மருந்தகங்கள், மற்றும் மொபைல் ரீசார்ஜ் போன்ற இடங்களிலும், அரசு கட்டணங்களை செலுத்துவதற்கு பழைய 500 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 15ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்ற காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.
எனவே, இனி பழைய ரூபாய் நோட்டுகளை எங்கும் பயன்படுத்த முடியாது. வங்கிகளில் டெபாசிட் மட்டுமே செய்யலாம். இதனால் பொதுமக்கள் மீண்டும் வங்கிகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். ஏற்கனவே வங்கிகளில் பணம் இல்லாததால் டெபாசிட் செய்த பணத்தையும் எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். எனவே, காலக்கெடுவை டிசம்பர் 30ம்தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.
ங ப்போல் வளை
"ஙப் போல் வளை"
ங என்ற ஒரே எழுத்து,
ஙு, ஙூ, ஙி என்று தன் கிளையைத் தாங்குவது போல்,
பயன் கருதாது, நட்பைத் தாங்கு! எ. தமிழ் மொழி எழுத்தறம்!
@manipmp ஙப்போல் வளை எ. ஆத்திசூடியின் பொருள்:
ஙகரம் போல், அது சார்ந்த உயிர்மெய்களை (ஙா, ஙி, ஙு) புழக்கத்தில் இல்லையாயினும் தாங்குதலே!