இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, November 09, 2016

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 20 விளக்கம்

ரிசர்வ் வங்கி பொதுவாக எழுப்பப்படும் வினாக்களுக்கு அளித்துள்ள விளக்கம்:

1. பழைய நோட்டுகளை மாற்றினால் முழுத்தொகையும் கிடைக்குமா?

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள்/ தபால் அலுவலகங்கள் ஆகியவற்றில் கொடுத்து அதற்கான முழு மதிப்பிலான தொகையையும் பெறலாம்.

2 .ரொக்கமாக எவ்வளவு பெற முடியும்?

இப்போதைக்கு தனிநபருக்கு ரூ.4000 வரை வங்கிகளில் பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை பெறலாம். அதற்கு மேலான தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

3. நான் ஏன் எனது அனைத்து பழைய நோட்டுகளுக்கும் புதிய நோட்டுகளை பெற முடியாது?

இப்பொதைக்கு மத்திய அரசு அதனை அனுமதிக்கவில்லை. எனவே தற்போதைய இந்தத் திட்டம் ரூ.4000 வரை மாற்றி கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

4. எனக்கு ரூ.4,000 போதவில்லை நான் என்ன செய்வது?

ரூ.4000 ரொக்கத்தொகை போக மீதித் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம், அதனை காசோலை மற்றும் பிற எலக்ட்ரானிக் பணப்பரிவர்த்தனை மூலம் உங்கள் தேவைக்கு பயன்படுத்தலாம்.

5. என்னிடம் வங்கிக் கணக்கு இல்லை எனில்?

நீங்கள் வங்கிக் கணக்கு ஒன்றை அதற்கான அடையாள ஆவணங்களுடன் சமர்ப்பித்து தொடங்குவது அவசியம்.

6. என்னிடம் ஜன்தன் யோஜனா திட்டப்படி தொடங்கப்பட்ட கணக்குதான் உள்ளது என்றால்?

ஜன் தன் கணக்கு வைத்திருப்போர் அதற்கான விதிமுறைகளுடன் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

7. பரிமாற்றத்திற்கு நான் எங்கு செல்ல வேண்டும்?

அனைத்து வர்த்தக வங்கிகள், ஆர்ஆர்பி.க்கள், அரசு கூட்டுறவு வங்கிகள், அல்லது எந்த ஒரு தலைமை மற்றும் துணை தபால் அலுவலகங்களிலும் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

8. நான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குத்தான் செல்ல வேண்டுமா?

ரூ.4,000 வரை மாற்றி கொள்ள எந்த ஒரு வங்கிக்கும் முறையான அடையாள அட்டையுடன் சென்று மாற்றிக் கொள்ளலாம்.

ரூ.4,000த்துக்கும் கூடுதலான தொகைக்கு நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் கிளைகளுக்கும் சென்று கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் ஆனால் அதற்குரிய அடையாள அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும். மெலும் எலெக்ட்ரானிக் முறையின் பணத்தை வங்கிக் கணக்கில் மாற்றம் செய்வதற்கான வங்கிக் கணக்கு விவரங்களையும் கொண்டு செல்லவும்.

9. நான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் எந்த கிளைக்கும் செல்லலாமா?

ஆம். உங்கள் வங்கியின் எந்த ஒரு கிளைக்கும் செல்லலாம்.

10. எந்த ஒரு வங்கியின் எந்த ஒரு கிளைக்கும் செல்லலாமா?

ஆம். செல்லலாம், ஆனால் பணப்பரிமாற்றத்துக்கு தேவையான அடையாள அட்டை, ஆவணத்தை சமர்ப்பிப்பது அவசியம். ரூ.4,000த்துக்கும் அதிகமான தொகைக்கு எலெக்ட்ரானிக் நிதி பரிமாற்றத்துக்குத் தேவையான அடையாள அட்டை, வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிப்பது அவசியம்.

11. எனக்கு வங்கிக் கணக்கு இல்லை.. ஆனால் என் நண்பர் அல்லது உறவினர் வைத்திருக்கும் வங்கிக் கணக்கில் நான் பரிமாற்றி கொள்ளும் தொகையை வரவு வைத்துக் கொள்ளலாமா?

செய்யலாம், மற்றவர்களது விருப்பத்தின் பேரில், அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைக்கலாம். அப்போது உங்கள் அடையாள அட்டையை வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டும். வங்கி வாடிக்கையாளரின் ஒப்புதல் சான்றும் அவசியம்.

12. பணத்தை எடுத்துக் கொண்டு கணக்கு வைத்திருப்பவர்தான் நேரில் செல்ல வேண்டுமா, அல்லது பிரதிநிதியை அனுப்பலாமா?

நேரடியாக செல்வது விரும்பத்தக்கது. உங்களால் நேரடியாக செல்ல முடியாதபட்சத்தில் உங்கள் பிரதிநிதியிடம் உங்கள் கைப்பட எழுதிய அனுமதி கடிதம் அவசியம். அவரது அடையாள அட்டையும் அவசியம்.

13. ஏடிஎம்.இலிருந்து நான் பணம் எடுக்க முடியுமா?

18 நவம்பர் 2016 வரை நீங்கள் ரூ.2,000 வரை நாளொன்றுக்கு எடுக்க முடியும், அதன் பிறகு 19-ம் தேதியிலிருந்து இதன் வரம்பு ரூ.4000 ஆக அதிகரிக்கப்படும்.

14. காசோலை மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாமா?

இம்மாதம் 24ம் தேதி வரை வித்ட்ராயல் ஸ்லிப் அல்லது காசோலை மூலம் ஒரு நாளைக்கு ரூ.10,000 வரை எடுக்கலாம். வாரம் ஒன்றிற்கு ரூ.20,000 வரையே எடுக்க முடியும் (இதில் ஏ.டி.எம். பண எடுப்புத் தொகையும் அடங்கும்), இதன் பிறகு இந்தத் தொகையை உயர்த்த மறுபரிசீலனை செய்யப்படும்.

15. ஏ.டி.எம். மூலம் பணத்தை டெபாசிட் செய்யலாமா?

ஆம். ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஏ.டி.எம் மூலம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம்.

16.நெட்பேங்கிங்கில் பணபரிமாற்றம் செய்யலாமா?

என்இஎப்டி / ஆர்டிஜிஎஸ் / ஐஎம்பிஎஸ் / இன்டர்நெட் பேங்கிங் / மொபைல் பேங்கிங் மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம். எந்த தடையும் இல்லை.

17. நான் தற்போது இந்தியாவில் இல்லை, நான் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் பிரதிநிதியிடம் உங்கள் கையெழுத்துடன் ஒப்புதல் கடிதம் அளித்து அவரது அடையாள அட்டையுடன் வங்கிக்கு அவர் சென்று நோட்டுகளை
மாற்றிக்கொள்ளலாம்.

18. நான் ஒரு என்.ஆர்.ஐ. என்னிடம் என்.ஆர்.ஓ. கணக்கு உள்ளது பரிமாற்றத் தொகையை என் கணக்கில் வரவு வைக்க முடியுமா?

ஆம், செய்யலாம்.

19. சுற்றுலாப் பயணிகள் தங்கள் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை என்ன செய்வது?

விமான நிலையங்களில் இருக்கும் பணப்பரிவர்த்தனை மையங்களில் 72 மணி நேரத்திற்குள் கொடுத்து ரூ.5,000 வரை மாற்றிக் கொள்ளலாம். ஓ.எச்.டி நோட்டுகளை பெற்றதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும்.

20. செல்லுபடியாகும் அடையாள அட்டைகள் யாவை?

ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், என்.ஆர்.இ.ஜி.ஏ கார்டு, பான் கார்டு, அரசுத்துறை அதன் ஊழியர்களுக்கு அளித்துள்ள அடையாள அட்டை ஆகியவை.

TNPSC group IV tentative answer key

Click below

http://www.tnpsc.gov.in/answerkeys_06_11_2016.html

தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆசிரியர் தேர்வுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை உறுதி செய்தது. இரு நீதிமன்றங்களும் இருவேறு தீர்ப்பை அளித்ததால், ஆசிரியர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 % மதிப்பெண் தளர்வு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு காரணமாக கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC GROUP I க்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் காலியாகவுள்ள 85 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர்கள் என 85 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இன்று அறிவித்துள்ளது.

இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்கவுள்ள தகுதியான நபர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளம் மூலம் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் , டிசம்பர் 8-ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய முறைகளில் தேர்வு நடைபெறவுள்ளது.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. துணை ஆட்சியர் - 29
2. துணை காவல் கண்காணிப்பாளர் - 34
3. உதவி ஆணையர் - 08
4. மாவட்ட பதிவாளர் - 01
5. மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி - 05
6. மாவட்ட அதிகாரி (தீயணைப்புத்துறை)
தேர்வுக் கட்டணம் விவரம்:
பதிவுக் கட்டணம் ரூ.50
முதல்நிலை எழுத்துத் தேர்வு கட்டணம் ரூ.75
முதன்மை எழுத்துத் தேர்வு கட்டணம் ரூ.125. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 19.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_19_not_eng_ccs1(grp1)_services.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Tuesday, November 08, 2016

புதிய நோட்டுக்களின் விபரம்

ஏடிஎம் இயந்திரங்களில் நாளை மறுநாள் (நவம்பர் 11) முதல் புதிய அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ரூ.500, ரூ.2000 நோட்டுகள் கிடைக்கும் என நிதித் துறை செயலர் அசோக் லவாசா.

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், நிதித் துறைச் செயலர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாளை மறுநாள் (நவம்பர் 11) முதல் ஏடிஎம் இயந்திரங்களில் புதிய அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ரூ.500, ரூ.2000 நோட்டுகள் கிடைக்கும்.

புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகத்தை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும். ரூபாய் நோட்டுகள் மீதான இந்த தடையால் இதுவரை புழக்கத்துக்கு வராமல் இருந்த பெருந்தொகை வெளியில் வரும்.

ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதில் நிலவும் சிக்கல்கள் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளின் வழங்கல் சீரானவுடன் எளிதாகும்" என்றார்.

அவர் மேலும் கூறும்போது, "இது மக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் மக்கள் இன்னல்களை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏடிஎம் மையங்களில் எளிதாக பணத்தை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் ஏடிஎம் மையங்களில் பண வழங்கல் சீராகும்.

சில இடங்களில் நாளையே ஏடிஎம் மையம் இயங்கும். அரசின் நடவடிக்கைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு நல்குவார்கள் என நம்புகிறேன். நாளடைவில் நிலைமை சீரடையும். பங்குச்சந்தை சரிவுக்கு முழுக்க முழுக்க இந்த நடவடிக்கையை மட்டும் காரணமாகக் கூற முடியாது. பொறுத்திருந்தே நிலைமையை கண்காணிக்க வேண்டும்" என்றார்.

தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன் கூறும்போது, "இது ஒரு முக்கியமான நடவடிக்கை. அரசு ஊழல், கள்ளநோட்டு, கருப்புப் பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

TET case

தமிழக அரசின் ஆசிரியர் தகுதி தேர்வு முறை செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  இது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.  2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வெயிட்டேஜ் முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பட்டது. இதன் காரணமாக 2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வு தமிழகத்தில் நடைபெறவில்லை.

தமிழக அரசின் அரசாணை விபரம்:-

தமிழக அரசு வெளியிட்ட அரசாணைகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்படுவதுடன், வெயிட்டேஜ் முறையும் பணி நியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதிப்பெண் விலக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியில்லை என்றும் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு இருக்கும்.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் முடிவு சரி என்றும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமானது என்றும் கூறப்பட்டது. ஒரே வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

TET case

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த 2 அரசாணைகள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரிகள் உத்தரவு : ஆசிரியர்களுக்கு நாற்காலி கிடையாது


பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளனர். இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர்களுக்கு என்று தனியாக சில விதிகளும், மாணவ மாணவியருக்கு என்று தனியாக சில விதிகளும் கூறப்பட்டுள்ளன.

ஆசிரியர்களுக்கான விதிகள்:

பள்ளி ஆசிரியர்கள் யாரும் வகுப்பறையில் செல்போன் உபயோகிக்கக் கூடாது. எக்காரணம் கொண்டும் வகுப்பறையில் செல்போனில் பேசக் கூடாது.

பாடம் நடத்தும் போது உட்கார்ந்து கொண்டு பாடம் நடத்தாமல் நின்று கொண்டு பாடம் நடத்த வேண்டும். அதனால் வகுப்பறையில் உள்ள நாற்காலிகள் அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான விதிகள்:

* மாணவர்கள் காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும்.
* லோ ஹிப், டைட்பிட் பேண்ட், சட்டைகள் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும்.
* தலைமுடியை ஒட்ட வெட்டியபடி இருக்க வேண்டும். கை, கால்களில் நீண்ட நகங்கள் இல்லாமல் வெட்டியபடி இருக்க வேண்டும்.
* மீசை வைக்கும் போது மேல் உதட்தை தாண்டி மீசை வெளியில் வராதபடி ஒட்ட வெட்டிய நிலையில் இருப்பதுடன், முறுக்கு மீசை வைக்க கூடாது என்பது உள்பட பல விதிகள் கூறப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் : தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவு


தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் ஆதார் எண் இருந்தால்தான் பொதுத்தேர்வை எழுத முடியும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2016-2017 பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் நடக்க உள்ளது. இந்த பொதுத்தேர்வில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வருவதாக தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் அரசு தேர்வுத்துறை இயக்ககம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை அரசு தேர்வுத்துறை இயக்ககம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும்போது, மாணவர்களின் ஆதார் எண்ணையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இதை வைத்துதான் இந்த ஆண்டு பொதுத்தேர்வில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும். ஆதார் எண் இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும். எனவே இந்த மாதத்திற்குள் மாணவர்களிடம் ஆதார் எண்ணை வாங்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் தனியார் மற்றும் அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில் பொதுத்தேர்வு மாணவர்கள் எத்தனை பேர்? இன்னும் எத்தனை பேர் ஆதார் எண் எடுக்கவில்லை என்று கணக்கெடுத்து, அந்த பள்ளிகளுக்கு ஆதார் எடுக்கும் சிறப்பு முகாம் அமைத்து, ஆதார் அட்டை வழங்க கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பணியை இந்த மாதத்திற்குள் முடிக்கவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர்களுக்கு பணி : சி.பி.எஸ்.இ., தடை


ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், நிர்வாக பணிகளில் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து உள்ளது. இது தொடர்பான புகார்கள் குறித்து, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, 'ஆசிரியர்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல் ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், பள்ளி வாகனங்களில், ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என்ற விதியையும், சி.பி.எஸ்.இ., நிர்வாகம் திருத்தியுள்ளது. அதன்படி, பள்ளி வாகனங்களில், உதவியாளர் ஒருவருடன், ஆசிரியருக்கு பதில், பெண் ஊழியர் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

18 ஆயிரம் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., உத்தரவு


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், நவ., 30க்குள், உட்கட்டமைப்பு வசதி குறித்த பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட இணைப்பில், கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் வித்யாலயா மற்றும் ராணுவ பள்ளிகள் செயல்படுகின்றன.

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., வாரியம் நேரடியாக நடத்துகிறது. மேலும், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு, உயர்கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கான ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு உள்ளிட்ட, பல தேர்வுகளையும் நடத்துகிறது. இந்த தேர்வுகளுக்கு, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தான், தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. சில தேர்வு மையங்களில், குடிநீர், பெஞ்ச், மின் விசிறி, கழிப்பறை போன்ற வசதிகள் இல்லை என, புகார் எழுந்தது. சில பள்ளிகளில், நர்சரி குழந்தைகள் அமரும் பெஞ்சுகள் தான், தேர்வர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகின.

எனவே, பள்ளிகளின் உட்கட்டமைப்பை, 100 சதவீதம் உறுதி செய்ய, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. தேர்வர்களுக்கு, அவர்களின் வசதிப்படியும், மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் பள்ளியில் இருந்து, 8 கி.மீ.,க்குள் தேர்வு மையம் அமைக்கவும் முடிவு செய்துள்ளது. அதனால், 18 ஆயிரம் பள்ளிகளும், தங்கள் உட்கட்டமைப்பு விபரங்களை, புகைப்பட ஆதாரத்துடன், 'ஆன்லைனில்' பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, நவ., 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது

20,558 அங்கன்வாடி மையங்களுக்கு 'மிக்சி'


தமிழக அரசு, 1.75 கோடி குடும்பங்களுக்கு, இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி அல்லது, மின் அடுப்பு வழங்கியுள்ளது. இவற்றை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, கொள்முதல் செய்தது; தமிழகத்தில், 54 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் உள்ளன.

இந்த மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, சத்து மாவு, மதிய உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்களில், உணவு சமைக்க, 9,000 மையங்களுக்கு, மிக்சி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 20 ஆயிரத்து, 558 மையங்களுக்கு, மிக்சிகள் வழங்கப்பட உள்ளன. நுகர்பொருள் வாணிப கழகமே, இதற்கான மிக்சிகளையும் கொள்முதல் செய்ய உள்ளது. ஏற்கனவே, வீடுகளுக்கு வழங்கிய இலவச பொருட்கள், பழுதடைந்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பல வீடுகளில், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தற்போது, தரமான மிக்சிகள் வாங்க, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது' என்றார்.

500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது

புதிய வடிவில் வர இருக்கிறது 500,2000 ரூபாய் நோட்டுக்கள்

புதிய வடிவில் வர இருக்கிறது 500,2000 ரூபாய் நோட்டுக்கள். தற்போது 500,2000 ரூபாய் நோட்டுக்களின் மாதிரி வடிவம் வெளியாகி இருக்கிறது.



மோடி இதுபற்றி மேலும் கூறுகையில், " ஊழலுக்கு எதிராக நாம் எடுக்கும் முதல் போராட்டாம் இதுவாக இருக்கும். டிடி,செக்,டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு போன்ற பரிவர்த்தனைகளில் எந்த மாற்றமும் இருக்காது." இதுபற்றி மேலும் கருத்துக்களை ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் விரைவில் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார்.

அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள், இடுகாடுகள் ஆகிய இடங்களில் மட்டும் வரும் நவம்பர் 11ம் தேதி வரை ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும், 2005 க்கு முன்பு வரை அச்சிட்ட நோட்டுக்களை மட்டும் மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை வங்கிகளில் இயங்காது என்பதால், நவம்பர் 10-ம் தேதி  முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை வங்கிகளில் 500,1000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். தவிர்க்க முடியாத காரணங்களால் மாற்ற இயலாதவர்கள், மார்ச் 31-ம் தேதி வரை அடையாள அட்டைகளை காண்பித்து மாற்றிக் கொள்ளலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில் நாளை தீர்ப்பு: உச்சநீதிமன்றம் தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

G.O Ms. No. 105 Dt.maternity leave 9 month order published

Click below

https://www.mediafire.com/download/lddr3gry92ope86

Monday, November 07, 2016

சர்வதேச ஆண்டுகள்

*சர்வதேச_ஆண்டுகள் !!*

* 1968 - சர்வதேச மனித உரிமை ஆண்டு.
* 1970 - சர்வதேச கல்வி ஆண்டு.
* 1974 - சர்வதேச மக்கள்தொகை ஆண்டு.
* 1978 - சர்வதேச பெண்கள் ஆண்டு.
* 1979 - சர்வதேச குழந்தைகள் ஆண்டு.
* 1985 - சர்வதேச இளைஞர் ஆண்டு.
* 1986 - சர்வதேச அமைதி ஆண்டு.
* 1994 - சர்வதேச குடும்ப ஆண்டு.

* 1996 - சர்வதேச ஏழ்மை ஒழிப்பு ஆண்டு.
* 2003 - சர்வதேச நன்னீர் ஆண்டு.
* 2004 - சர்வதேச அரிசி ஆண்டு.
* 2005 - சர்வதேச இயற்பியல் ஆண்டு.
* 2006 - சர்வதேச பாலைவன ஆண்டு
* 2007 - சர்வதேச துருவ ஆண்டு.
* 2008 - சர்வதேச சுகாதாரம்/உருளைக்கிழங்கு/மொழிகள் ஆண்டு.
* 2009 - சர்வதேச வானியல் ஆண்டு.
* 2010 - சர்வதேச நுரையீரல்/ உயிரினம்ஆண்டு.
* 2010-2011 - அனைத்துலக இளைஞர் ஆண்டு
* 2013 - சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டு, சர்வதேச தினை ஆண்ட
* 2014 - சர்வதேச குடும்ப விவசாய ஆண்டு.
* 2015 - சர்வதேச ஒளிவருடம் (Year of Light) , சர்வதேச மண்வருடம் (Year of Soil)
* 2016 - சர்வதேச பருப்பு ஆண்டு.

IGNOU term end exam

IGNOU- DATE SHEET FOR TERM END EXAMINATION DECEMBER - 2016
FIRST & SECOND YEAR
.16-   FRI-   ES-332
10.12.16-   SAT-  ES-333
12.12.16-  MON- ES-341
14.12.16-  WED-  ES-342
15.12.16-   THU-  ES-343
16.12.16-    FRI-   ES-344
19.12.16-   MON- ES-345
2012.16-    TUE-   ES- 334
22.12.16-   THU-   ES-335
23.12.16-    FRI-    BESE-065