இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, September 18, 2016

ஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி?'கெடு' விதிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி


பள்ளிகளில், ஆதார் முகாமே இன்னும் முடிவடையாத நிலையில், 'நாளைக்குள் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, கெடு விதித்துள்ளது, ஆசிரியர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச திட்டங்கள், ஆண்டு இறுதி தேர்வுகள், சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

பள்ளிகளுக்கு...இதற்கு வசதியாக, மாணவர்களின் ஆதார் எண்ணை கணினியில் பதிவு செய்யுமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மின்னணு கல்வி நிர்வாக மேலாண்மை திட்டமான, 'எமிஸ்' திட்டத்திற்கும், ஆதார் எண் பதியப்படுகிறது. 'அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களையும், நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர்.

20 லட்சத்துக்கும் மேலான மாணவர்களுக்கு, இன்னும் ஆதார் எண்ணே கிடைக்கவில்லை. இதற்காக, பள்ளிகளிலேயே ஆதார் முகாமிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆதார் எண் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் ஆள் பற்றாக்குறை உள்ளதால், பல பள்ளிகளில், உரிய நேரத்தில் முகாம்கள் நடத்தப்படவில்லை. பல இடங்களில், முகாம் நடத்துவோர் வராததால், பெற்றோரும், மாணவர்களும், பல மணிநேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

முரண்பாடு:இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'ஆதார் எண் வழங்கும் முகாமை முறையாக நடத்த சம்பந்தப்பட்ட துறைக்கு கெடு விதிக்க வேண்டும். ஆதார் எண் வழங்கிய பின் பதிவு செய்யும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கெடு விதிக்கலாம். ஆதார் முகாம் நடத்த தாமதமாகும் நிலையில், எண்களை பதிவு செய்ய கெடு விதிப்பது முரண்பாடாக உள்ளது'

English book for slow learners

Click below

https://app.box.com/s/uza57nk71we4zxuxk7kpcl4r3zhvaykt

Saturday, September 17, 2016

எலக்ட்ரானிக் சிப்' பொருத்தியஏ.டி.எம்., கார்டு: ரிசர்வ் வங்கி கெடு


பாதுகாப்பு அம்சம் உள்ள, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்திய, 'ஏ.டி.எம்., கார்டு' வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. வாடிக்கையாளர்களுக்கு, 'மேக்னடிக் ஸ்டிரைப்' என்ற, காந்தப் பட்டையுடன் கூடிய, ஏ.டி.எம்., கார்டுகளை, வங்கிகள் வினியோகித்துள்ளன.

வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு கருதியும், 'கிரெடிட்' மற்றும், 'டெபிட் கார்டு' மோசடிகளை தடுப்பதற்காகவும், அந்த கார்டுகளுக்கு பதிலாக, சிறிய, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்தப்பட்ட, பாதுகாப்பான கார்டுகளை, வங்கிகள் வழங்க வேண்டும் என, 2015 மே மாதத்தில், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. பல தனியார் வங்கிகள், இத்தகைய கார்டுகளை, வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளன. தேசிய வங்கிகள், சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக, காலக்கெடுவை நீட்டிக்க கோரின; ஓராண்டு நீட்டிக்கப்பட்டது.

வரும், 30ல் கெடு முடியும் நிலையில், அதை மேலும் நீட்டிக்க வங்கிகள் கோரின; அதை ஏற்க மறுத்து, ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள அறிக்கை: பாதுகாப்பு அம்சம் பொருந்திய, ஏ.டி.எம்., கார்டுகளை வழங்குவதற்கான காலக்கெடு இம்மாதம் வரை நீட்டிக்கப்பட்டது; இனியும் நீட்டிக்கப்பட மாட்டாது. அதனால், ஏற்கனவே கூறியபடி, 2018 துவக்கத்தில், 'சிப்' பொருந்திய ஏ.டி.எம்., கார்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

பொது தேர்வில் கணினி விடைத்தாள்: தேர்வு துறை திட்டம்


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு, கணினி விடைத்தாள் வழங்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம், விடை திருத்தும் நாட்கள் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அரசு தேர்வுத்துறை சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும், மார்ச் மாதம் நடைபெறும் இந்தத் தேர்வுகளில், இரண்டு வகுப்புகளிலும் சேர்த்து, 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்; இவர்களின் விடைத்தாள்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களால் திருத்தப்படுகின்றன. இந்தத் தேர்வில், கணினி அறிவியல் பாடத்திற்கு மட்டும், 'பார் கோடு' உடைய விடைத்தாள்கள் வழங்கப்படுகின்றன; மாணவர்கள், சரியான விடையை தேர்வு செய்து குறியிட வேண்டும். இந்த விடைத்தாள்கள், கணினி முறையில் திருத்தம் செய்யப்படுகின்றன; அதனால், வினாத்தாளை சரியாக திருத்தம் செய்யவில்லை என்ற பிரச்னை எழாது. மேலும், விடைத்தாளை திருத்த ஆசிரியர்களும் தேவையில்லை; அதிக நேர விரயமும் இருக்காது.இந்த முறையை, அனைத்து பாடங்களுக்கும் அமல்படுத்துவது குறித்து, அரசு தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. அதன்படி, 2017 மார்ச்சில் நடைபெற உள்ள, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில், ஒரு மதிப்பெண் கொள்குறி வகை வினாக்களுக்கு, கணினி விடைத்தாள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது; அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததும், இந்த திட்டம் அறிவிக்கப்பட உள்ளது

Department exam-december

TNPSC DEPARTMENTAL EXAM NOTIFICATION DOWNLOAD

துறை தேர்வுகள் அறிவிப்பு : 2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது.

அறிவிக்கை நாள் :
01.09.2016

விண்ணபிக்க கடைசி தேதி :
30.09.2016 , 5.45 பி.ப.

தேர்வு தேதிகள் :
23.12.2016 முதல் 31.12.2016 வரை.

Friday, September 16, 2016

ஆதார் எண் பதிவுக்கு செப். 20 வரை 'கெடு'


அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வரும், 20ம் தேதிக்குள், மாணவர்களின், 'ஆதார்' எண் பட்டியலை வழங்குமாறு, பள்ளிக்கல்வித் துறை, 'கெடு' விதித்துள்ளது. தமிழகத்தில், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் பெயர் மற்றும் விபரங்கள், 'ஆன்லைன்' முறையில், 'எமிஸ்' என்ற மின்னணு ஆளுமை திட்டத்தில் இணைக்கப்படுகிறது; இதில் மாணவர்களுக்கு தனியாக, ஒரு அடையாள எண் வழங்கப்படும்.

இந்த பதிவுக்கு, ஒவ்வொரு மாணவருக்கும், ஆதார் எண் மிகவும் அவசியம்.ஆனால், தமிழகத்தில் படிக்கும், 1.25 கோடி மாணவர்களில், இன்னும், 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, ஆதார் எண் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், எமிஸ் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களையும், செப்., 20க்குள் பதிவு செய்து, அதன் பட்டியலை அனுப்புமாறு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் அடுத்த வாரம் அறிவிப்பு


உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு, அடுத்த வாரத்திற்கு தள்ளிப் போடப்பட்டு உள்ளது. தமிழக உள்ளாட்சி தேர்தலை, அடுத்த மாதம், 24ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தேர்தல் செலவிற்காக, 183 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது. தேர்தல் தேதி, நேற்று அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 'பந்த்' காரணமாக, தள்ளிப் போடப்பட்டுள்ளது. வரும், 20ம் தேதியில் இருந்து, 22ம் தேதிக்குள், தேர்தல் தேதி முறைப்படி அறிவிக்கப்பட உள்ளதாக, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Thursday, September 15, 2016

தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழு கூடியது; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் நேற்று பிற்பகல் சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது. குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சாந்தா ஷீலா நாயர் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம், சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

தலைமை செயலக ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், தமிழ்நாடு அரசு ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் தலா மூன்று நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு சங்க நிர்வாகிகளும் தனித்தனியாக அழைக்கப்பட்டு அவர்களின் கருத்துக்களை குழு தலைவர் சாந்தா ஷீலா நாயர் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கள் பற்றி தலைமை செயலக சங்க தலைவர் கணேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வி, ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஓய்வூதியம் முக்கியமானது. ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த பாதுகாப்பும் இல்லை.

மத்திய அரசின் வற்புறுத்தலின் பேரில் 1-4-2003 முதல் பழைய ஓய்வூதியம் கைவிடப்பட்டு, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 2004ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேரும் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதேபோன்று, மாநில அரசும் 10 சதவீதம் தனது பங்காக ஓய்வூதிய நிதிக்கு அளிக்கும். இந்த நிதி பங்கு சந்தையில் முதலீடு செய்து, அந்த முதலீடுகளில் கிடைக்கும் வருவாயில் பணியாளர்கள் ஓய்வுபெறும்போது, அவர்களுக்கு பங்குகளின் நிதி நிலைமைக்கேற்ப ஓய்வூதியம் வழங்குதுதான் புதிய ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டம் முற்றிலும் அரசு ஊழியர்களுக்கு எதிரானது ஆகும். மாநில அரசுகள் விரும்பினால் மட்டுமே இந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் இது அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது. பிடிக்கும் பணம் பங்கு மார்க்கெட்டில் போடப்படுவதால் பணத்துக்கு பாதுகாப்பு கிடையாது. தேவையானபோது பணத்தை எடுக்க முடியாது. கடந்த 12 ஆண்டுகளில், பணியில் இருந்தபோது இறந்தவர்கள் ஒருவருக்கு கூட போட்ட பணம் திரும்ப கிடைக்கவில்லை. அதனால், புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பழைய ஓய்வூதியம் சாத்தியமில்லை வல்லுநர் குழுவினர் கைவிரிப்பு?

2004ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், இதனால் எந்த பலனும் இல்லை, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று 12 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதையடுத்து, தற்போது வல்லுநர் குழு அமைத்து, அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளிடம் தமிழக அரசு நேற்று ஆலோசனை கேட்டது. 10க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தனித்தனியாக வல்லுநர் குழுவினரை சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவித்தனர்.

வல்லுநர் குழுவினர் தெரிவித்த கருத்து குறித்து சில அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “நாங்கள் சொன்ன கருத்தை வல்லுநர் குழுவினர் கேட்டுக் கொண்டனர். அரசு தரப்பில் கூறும்போது, அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் தமிழக அரசுக்கு வரி உள்பட கிடைக்கும் அனைத்து வருவாயையும் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மக்களுக்கு எந்த திட்டத்தையும் செய்ய முடியாது. அதனால் அதிகபட்சமாக தமிழக அரசால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் அரசு ஊழியர்களுக்கு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியதாக தெரிவித்தனர்.

பிளஸ் 2 பாடங்கள் டிசம்பருக்குள் முடிக்க 'கெடு'

பிளஸ் 2 பாடங்களை டிசம்பருக்குள் முடிக்க, அரசு பள்ளிகளுக்கு, கல்வித் துறை அதிகாரிகள், 'கெடு' விதித்துள்ளனர். பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. வரும், 24ம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தற்போதைய நிலையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, முக்கிய பாடப்பிரிவின், முதலாம் பாக பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளன. காலாண்டு தேர்வு முடிந்ததும், அரசு பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இரண்டாம் பாக பாடங்களையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்திற்குள், இந்த இலக்கை அடைந்து விட்டால், அரையாண்டு தேர்வுக்கு பின், பொதுத் தேர்வு வரும் வரை, தினசரி திருப்புதல் தேர்வுகள் வைத்து, மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் செய்ய முடியும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பிலேயே, பிளஸ் 2 பாடங்களை நடத்துவதால், அனைத்து பாடங்களும் முடியும் நிலையில் உள்ளன. காலாண்டு தேர்வு முடிந்ததும், பிளஸ் 2 பாடங்களை மீண்டும் ஒரு முறை நடத்த, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான, அறிவியல் செய்முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'அக்டோபரில் நடக்கவுள்ள, 10ம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், செப்., 23, 24 மற்றும், 26 ஆகிய நாட்களில் நடக்கும் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்' என, தெரிவித்து உள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் மதிப்பூதியம்

Wednesday, September 14, 2016

1வது 2வது வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ நிர்வாகம் சுற்றறிக்கை


சி.பி.எஸ்.இ. 1-வது மற்றும் 2-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்றும், புத்தகப்பை கொண்டுவரக்கூடாது என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்இ. கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-சுமையினால் வளர்ச்சி பாதிக்கும்

சி.பி.எஸ்.இ. படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை அதிக சுமையாக உள்ளது. இதனால் முதுகு வலி, தசை வலி, தோள்பட்டை வலி ஆகியவை அந்த மாணவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் அந்த மாணவர்களின் வளர்ச்சி பாதிக்கிறது. ஆரோக்கியம் கெட்டுப்போகிறது.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் விஷயத்தில் பள்ளிகள் முக்கிய பங்குவகிக்கின்றன.

மாணவர்கள் தினசரி வகுப்புக்கு தேவையான பாடப்புத்தகங்களை மட்டும் கொண்டுவருகிறார்களா? என்று ஆசிரியர்கள் திடீர் என்று மாணவர்களின் பைகளை சோதனை செய்யவேண்டும். தேவை இல்லாத வீட்டுப்பாட நோட்டுகள், தேவை இல்லாத பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்களை மாணவர்கள் கொண்டுவரலாம். அவ்வாறு மாணவர்களிடம் கொண்டுவரக்கூடாது என்று ஆசிரியர்கள் கூறவேண்டும்.

எடை குறைவான பைகள்

அதிக எடை இன்றி புத்தகப்பைகள் கொண்டு வருகிறார்களா? என்று தினமும் ஆசிரியர்கள் பரிசோதனை செய்யவேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எடை குறைவான புத்தகப்பைகளை வாங்கிக்கொடுக்கவேண்டும். பள்ளிக்கூட மாணவர்களின் புத்தகங்களின் எடையை குறைக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் உறு துணையாக இருக்கவேண்டும்.

பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தினமும் எந்த எந்த புத்தகங்கள், நோட்டுகள் கொண்டு வரவேண்டும் என்ற கால அட்டவணையை முன்கூட்டியே மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும்.

மாணவர்களுக்கு பள்ளிக்கூட நேரங்களில் மட்டும் புராஜெக்ட் கொடுக்கவேண்டும். அதை குழுவாக மாணவர்கள் செய்யவேண்டும். அந்த புராஜெக்டை பள்ளிக்கூட நேரம் தவிர வீட்டுக்கு கொண்டுசெல்லக்கூடாது.

பெற்றோருக்கு வேண்டுகோள்

மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு படிப்பு தொடர்பாக கொண்டு வரும் எந்த ஒரு பொருளும் எடை குறைவாக இருக்கவேண்டும்.

தொடக்கப்பள்ளி வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர், புத்தகப்பையை தினமும் கண்காணிக்கவேண்டும். தங்கள் குழந்தைகள் கால அட்டவணை படி கொண்டுசெல்கிறார்களா? என்பதை உறுதி செய்யவேண்டும்.புத்தகப்பை, வீட்டுப்பாடம்

குறிப்பாக 1-வது மற்றும் 2-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் கட்டாயம் கொடுக்கக்கூடாது. அவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது.

மாணவர்கள் அதிக எடையுடன் குடிநீர் பாட்டில் கொண்டுவருகிறார்கள். இதை தவிர்க்கவேண்டும். எனவே பள்ளிகள் குடிநீரை வைத்திருக்கவேண்டும். அந்த தண்ணீரை பள்ளிக்கூட முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் குடிக்கவேண்டும். மாணவர்கள் கூடுதலாக விளையாட்டு காலணிகளை கொண்டு வரக்கூடாது.

இவ்வாறு சி.பி.எஸ்.இ. வாரியம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்


அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது, அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதியதாக குழு: தமிழக அரசு அமைத்துள்ள குழுவின் தலைவராக, முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சென்னை பொருளாதார பள்ளியின் பேராசிரியர்கள் கே.வி.பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோரும், குழுவின் உறுப்பினர் செயலாளராக திட்டம்-வளர்ச்சி-சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணனும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், பேராசிரியர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோர் குழுவில் தாங்கள் தொடர முடியாது என அரசுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை பொருளாதார பள்ளியின் மற்றொரு பேராசிரியரான டாக்டர் பிரிஜேஷ் சி.புரோகித் நியமிக்கப்பட்டார்.

முதல் கூட்டம்: தமிழக அரசின் வல்லுநர் குழு புதிதாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அந்தக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (செப். 15) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இதுதொடர்பாக, வல்லுநர் குழுவின் உறுப்பினர் செயலாளரும், முதன்மைச் செயலாளருமான எஸ்.கிருஷ்ணன் சார்பில் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வல்லுநர் குழுவின் கூட்டம் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தங்களது கருத்துகளை அரசு ஊழியர்கள் சங்கங்கள் தெரிவிக்கலாம். இதற்காக, சங்கத்தின் 3 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மேலும், கருத்துக் கேட்பு கூட்டத்தின் போது நேரத்தை சிறப்பான முறையிலும், உரிய வகையிலும் பயன்படுத்த ஏதுவாக எழுத்துப்பூர்வமாகவும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தனது கடிதத்தில் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tuesday, September 13, 2016

கணினி மயமாகிறது விடைத்தாள் திருத்தும் பணி


தமிழகத்தில், 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது. ஆண்டுதோறும், 10 லட்சம் மாணவர்கள், பத்தாம் வகுப்பு; எட்டு லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வை எழுதுகின்றனர்.

பாடங்கள் வாரியாக கணக்கிடும்போது, விடைத்தாள்கள் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கின்றன. இவற்றை திருத்தி மதிப்பிட, பத்தாம் வகுப்பிற்கு, 50 ஆயிரம்; பிளஸ் 2 விற்கு, 20 ஆயிரம் ஆசிரியர்கள் தேவை. மறுகூட்டலில், பெரிய அளவில் மதிப்பெண் வித்தியாசம், விடைத்தாளின், ஒரு பக்கத்தையே திருத்தாமல் விடுவது போன்ற பிரச்னைகள் ஆண்டுதோறும் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. இதை தவிர்க்க, விடைத்தாள் திருத்தும் பணியை, கணினி மயமாக்குவது குறித்து தேர்வுத் துறை பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து, தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதற்கட்டமாக, பத்தாம் வகுப்பு விடைத்தாளை மட்டும் புதிய நடைமுறையில் திருத்த ஆலோசிக்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் விடைத்தாள் இம்முறையில் தான் திருத்தப்படுகிறது. இதன்படி, வினாத்தாள் பக்கம் வாரியாக, 'ஸ்கேன்' செய்யப்பட்டு, தனி, 'போல்டர்' ஏற்படுத்தப்படும். திருத்தும் ஆசிரியர்களுக்கு பிரத்யேக, 'யூசர்நேம், பாஸ்வேர்டு' வழங்கப்பட்டு, கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் பார்த்தபடியே மதிப்பீடு செய்யலாம். அதற்கான, 'ஆன்சர் கீ' யும், 'அப்லோடு' செய்யப்படும்.

இப்பணிக்கு, குறைந்த எண்ணிக்கையில் தான் ஆசிரியர் தேவை இருக்கும். வீட்டில் இருந்தே, கணினி மூலம் மதிப்பீடு செய்யலாம். இதற்கு ஏற்ப, வினாத்தாள் மற்றும் வினாக்களில் சில மாற்றம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், மதிப்பீடு துல்லியமாக இருக்கும். மறுகூட்டலில் மதிப்பெண் வித்தியாசம் போன்ற பிரச்னை ஏற்பாடாது. விடைத்தாள் தேவைப்படும் மாணவர் களுக்கு, 'ஆன்லைன்' மூலமே விடைத்தாள் பக்கங்களை அனுப்பி வைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.