Click below
Friday, September 02, 2016
Thursday, September 01, 2016
எட்டாம் வகுப்பு 'ரிசல்ட்
Wednesday, August 31, 2016
செப்டம்பர் 2 அகில இந்திய வேலைநிறுத்தம்
அகில இந்திய தொழிற்சங்கங்கள், நாளை நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில், தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்பதால், மாநிலம் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து தொழிற்சங்கள் பங்கேற்ப தால், பஸ்கள் இயக்கத்திலும் பாதிப்பு ஏற்படும்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மய மாக்கக் கூடாது; புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐ.என்.டி.யூ.சி., - எச்.எம்.எஸ்., - சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட, பல தொழிற்சங்கங்கள் இணைந்து, நாளை, நாடு தழுவிய வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.
தொழிற்சங்கங்களை சமாதானப்படுத்தும் வகையில், 'அரசு ஊழியர்களுக்கான போனஸ் தொகையை, இரண்டு மடங்காக உயர்த்தப் படும்; புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ், 2004 முதல் பணக்கொடை தரப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது; இதை, தொழிற் சங்கங்கள் ஏற்க மறுத்து விட்டன.
தமிழகத்திலும் சிக்கல்:
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், தமிழக
அரசு ஊழியர்களும் பங்கேற்கின்றனர். இது குறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி கூறியதாவது:
புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட வேண்டும்; ஊதிய மாற்றக் குழு அமைக்க வேண்டும்; அரசில், காலியாக உள்ள, மூன்று லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, தமிழகத்தில் போராடி வருகிறோம்.அரசு அலட்சியமாக உள்ளதால், வேறு வழியின்றி, ஐந்து லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்கிறோம்.
அரசுவருவாய் துறை அலுவலர் சங்கத்தினரும், வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள னர்; இதனால் தாலுகா, கலெக்டர் அலுவலகங் கள் உட்பட, அனைத்து அரசு அலுவலங்களி லும், நாளை பணிகள் ஸ்தம்பிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
பஸ்கள் ஓடுமா?:
தமிழகத்தில் உள்ள, பல போக்குவரத்து தொழிற் சங்கங்களும், போராட்டத்தில் பங்கேற்கின்றன; இதனால், ஆட்டோ, லாரி, வேன் போக்குவரத்து பாதிக்கப்படும். மேலும், ஆளும் கட்சி அல்லாத, அனைத்து அரசு போக்குவரத்து தொழிற்சங்கங் களும், போராட்டத்தில் பங்கேற்பதால், அரசு பஸ்களின் இயக்கம் பாதிக்கப்படும்.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர், ஆறுமுக நயினார் கூறியதாவது:அரசு போக்குவரத்து கழங்கள், ஆண்டுக்கு, 1,200 கோடி ரூபாய் நஷ்டத்தில் தள்ளாடுகின்றன. மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் கட்டணம் உள்ளிட்ட, இழப்பீட்டுத் தொகையை, அரசு தர வேண்டும். ஊதிய
உயர்வு ஒப்பந்த பேச்சுநடத்துவதோடு, ஓய்வு பெற்றோருக்கான பணப் பலன்களை வழங்க வேண்டும் எனக் கோரி, போராட்டத்தில் பங்கேற்கிறோம்; பஸ்களை இயக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
துறைமுகங்களில் வர்த்தகம் முடங்கும்!
சாலை போக்குவரத்து பாதுகாப்புக் குழு தலைவர், சுகுமார் கூறுகையில், ''சாலை பாதுகாப்பு மசோதாவில், மத்திய அரசு திருத்தம் செய்வதைக் கண்டித்து, நாளை, சென்னைத் துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம்; கனரக வாகனங்கள் இயக்கப் படாது,'' என்றார். இதனால், சென்னை மட்டு மின்றி, தமிழகம் முழுவதும், துறைமுகங் களின் செயல்பாடுகளும் தடைபடும்; வர்த்தகம் முடங்கும்.
நாளை பள்ளிகள் இயங்குமா?
நாளை நடக்கும் நாடு தழுவிய, போராட்டத்தில், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி ஆசிரி யர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
இவர்கள் விடுப்பு எடுத்து பங்கேற்பதால், ஆயிரக்கணக்கான பள்ளிகளில், நாளை வகுப்புகள் நடத்துவதில் பாதிப்பு ஏற்படும். பல இடங்களில், தொடக்க பள்ளிகளை மூடி, சனிக்கிழமை இயக்கப்படும் என தெரிகிறது.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று(செப்., 1) வெளியிடப்படுகிறது
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று(செப்., 1) வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, இன்று துவங்கி, செப்., 30 வரை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, இன்று(செப்., 1) துவங்குகிறது; வரைவு வாக்காளர் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. 18 வயது நிரம்பியவர்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, செப்., 30 வரை, விண்ணப்பம் அளிக்கலாம். செப்., 11 மற்றும், 25ல், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், மனுக்கள் பெற, சிறப்பு முகாம் நடத்தப்படும்.
வரைவு வாக்காளர் பட்டியலை, www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். நகராட்சி கமிஷனர், தாசில்தார் அலுவலகங்களிலும், ஓட்டுச்சாவடிகளிலும், பார்வைக்கு வைக்கப்படும். electoral servicessearch.azurewebsites.net என்ற இணையதள முகவரியிலும், பெயர்களை தேடி கண்டுபிடிக்க, வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் இணைய தளத்தில், 'ஆன்லைன்' மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
Tamil dictionary issue to all students
சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு புதன்கிழமை பதிலளித்து அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்: மாணவர்களின் மனதில் நல்ல தமிழ்ச் சொற்களைப் பதிய வைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக வழக்கிழந்து வரும் தூய தமிழ்ச் சொற்களைப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதற்கு உதவிட நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, பட விளக்கத்துடன் கூடிய அகராதியைத் தொகுத்து வகுப்பு வாரியாக கல்வித துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (செப்.2) முதல் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (செப்.2) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: நிகழாண்டு செப்டம்பர் -அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அவர்கள், தங்களது விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசுத் தேர்வு மையங்கள் மூலம் வெள்ளிக்கிழமை (செப்.2) முதல் செப்.9-ஆம் தேதி வரை (செப்.4,5 தேதிகள் நீங்கலாக) விண்ணப்பிக்கலாம்.
ஏற்கெனவே இந்தத் தேர்வை எழுதி தோல்வியுற்றவர்கள், முதல் முறையாக தேர்வு எழுதுவோர் ஆகியோர் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், தேர்வுக் கட்டணம், தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் தனித்தேர்வர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஆன்-லைன் பதிவுக்கு ஏற்றுக் கொள்ளப்படும். இணைப்புகளுடன் பெறப்படாத விண்ணப்பங்கள், தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
மேலே குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் செப்டம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
Tuesday, August 30, 2016
தேசிய திறனாய்வு தேர்வு தேதி திடீர் மாற்றம்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வு தேதி, தமிழகத்தில், திடீரென மாற்றப்பட்டு உள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களில், திறன்மிக்கவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மத்திய அரசு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மாதந்தோறும், கல்வி உதவி வழங்கி வருகிறது.
இந்த தேர்வு, மாநில மற்றும் தேசிய அளவில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. மாநில அளவிலான தேர்வு, நவ., 6ம் தேதி நடக்கும் என, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., அறிவித்தது. தமிழக அரசு தேர்வுத் துறை, இதற்கான அறிவிப்பை, சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது. தற்போது, தமிழகத்தில் தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளது. 'நவ., 6ம் தேதி, தமிழகத்தில், அரசு பணியாளர் தேர்வாணையத்தின், குரூப் - 4 தேர்வு நடப்பதால், தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 5ம் தேதி நடத்தப்படும்; இதற்கு, என்.சி.இ.ஆர்.டி., அனுமதி பெறப்பட்டு உள்ளது' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு.பெயர் சேர்க்க ஒரு மாத அவகாசம்
வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், புதிதாக பெயர் சேர்க்கவும் வரும் 1 ஆம் தேதி விண்ணப்பங்களை அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, முகவரி மாறி இருக்கிறதா போன்றவற்றை அறிந்து கொள்ள வசதியாக இப்போது புழக்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்கு வரும் வியாழக்கிழமை (செப். 1) முதல் வைக்கப்படுகிறது.
இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியன்று 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பதால் மட்டும் தேர்தலில் வாக்களிக்க இயலாது. வாக்காளர் பட்டியலிலும் பெயர் இருப்பது அவசியம்.
எனவே, பட்டியலில் பெயர் சேர்க்கவும், அதில் திருத்தங்களை மேற்கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்கென இப்போது நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியல் வரைவு வாக்காளர் பட்டியலாக வெளியிடப்படும்.
அதன்படி, செப்டம்பர் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். சிறப்பு முகாம்கள்: வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் (www.elections.tn.gov.in) காணலாம். மேலும், செப்டம்பர் 10, 24 ஆகிய தேதிகளில் கிராம சபை, உள்ளாட்சி மன்றம், குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களிலும், பிரிவு வாரியாக படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும்.
இந்த வாக்காளர் பட்டியல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகங்கள், வருவாய்க் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர் ஆகியோரின் அலுவலகங்களிலும், வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் வைக்கப்படும். சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்படும்.electoralservicesearch.azurewebsites.net என்ற இணையதள முகவரியிலும் பெயர்கலைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள உரிய மனுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அளிக்கலாம். மேலும் மனுக்களைப் பெற சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் செப்டம்பர் 11, 25 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
Monday, August 29, 2016
பணப்பரிமாற்றம் இனி சிம்பிள்
பொதுவாக, யாருக்காவது பணம் அனுப்ப வேண்டியதிருந்தால் நெட்பேங்கிங் மூலமாக அனுப்பலாம். வங்கி கிளைக்கு நேரில் சென்று செல்லானை நிரப்பியும் அனுப்பலாம். ஆனால் தற்போது பணம் அனுப்புவது இன்னும் சிம்பிள். பணம் அனுப்ப வேண்டியவரின் அக்கவுன்ட் நம்பர் தெரிந்தால் மட்டும் போதும். உங்கள் கையில் உள்ள ஸ்மார்ட் போனில் பணம் அனுப்ப வேண்டியவரின் வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்து அவரின் கணக்கிலேயே பணத்தை சேர்த்து விடலாம். இப்படி ஒரு சுலபமான வசதியை வங்கிகளின் வாடிக்கையாளர்களின் பணப்பரிமாற்றத்திற்காக அறிமுகப்படுத்தியுள்ளது ‘’நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா’’ (என்.பி.சி.ஐ) நிறுவனம். ’’யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இண்டர்பேஸ்’’ யூ.பி.ஐ என்ற மொபைல் ஆப்-ஐ கடந்த ஏப்ரல் மாதம் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் திருப்தி அடைந்த ரிசர்வ் வங்கி, பொதுமக்களுக்கு இவ்வசதியை வழங்க ஐ.டி.பி.ஐ வங்கி, மகிளா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட 21 வங்கிகள் மூலம் இந்த ஆப்ஸை வழங்க பரிந்துரைத்துள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் தற்போது அந்தந்த வங்கிகளுக்கான, இந்த யூ.பி.ஐ ஆப்ஸை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்து அதில் பணம் செலுத்த வேண்டியவரின் வங்கிக் கணக்கு எண்ணை பதிவு செய்தால் போதும். உங்கள் வங்கி கணக்கில் இருந்து அவரது வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றிவிடலாம். நெட்பேங்கிக் முறையில் நிப்ட் போன்ற வகையில் காத்திருக்கும் நிலை, இதில் இல்லை. நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கிக்கான ஆப்ஸை மட்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
அந்தக் கணக்கில் இருந்து பணத்தை இன்னொரு வங்கி கணக்கிற்கு எளிதாக மாற்றிவிடலாம். நிப்ட் முறையில் பணம் செலுத்த வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி எண் ஆகியவை தெரிந்திக்க வேண்டும். ஆனால், யூ.பி.எஸ் ஆப் மூலம் பணம் செலுத்த ஐ.எப்.எஸ்.சி எண் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த அப்ளிகேசனை டவுன்லோடு செய்தாலே போதும், எந்த வங்கி கணக்கிற்கும் பணம் அனுப்பலாம். இதன் மூலம் எந்த பொருளையும் ஆன்லைனில் வாங்கலாம். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள், இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்து கொள்ள முடியும். பெயர் அல்லது மொபைல் எண் கொண்டதாக முகவரியை பதிவு செய்ய வேண்டும். பல வங்கிகளில் இருந்து பணம் அனுப்புவதும், பெறுவதுமாக இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட முகவரியை தரலாம். பணத்தை அனுப்பும் போது பணம் பெறுபவரின் முகவரி, தொகையை தந்ததும், மொபைலுக்கு ’பின்’ நம்பர் வந்தால் பணம் அனுப்பப்பட்டு விட்டதாக அர்த்தம். மொபைல், இண்டர்நெட், ஏ.டி.எம் போல இந்த ஆப் மூலம் 24 மணி நேரமும் பணம் செலுத்தவும் பெறவும் முடியும்.
இதில் இன்னும் SBI மற்றும் Bank of baroda இணையவில்லை. ஆனால் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பானது மட்டுமல்ல, ரூபாய் நோட்டுகளின் பணப்பரிமாற்றம் குறைவதால் கள்ள நோட்டு புழக்கமும் குறைய வாய்ப்புள்ளது. இதில் ஒரு லட்சம் வரையில் பணம் அனுப்பலாம். பணப்பரிவர்த்தனையில் இந்த Unified Payment Interface மிகச்சிறந்த முயற்சியாக கருதப்படுகிறது.
-இ.கார்த்திகேயன்.