இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, August 23, 2016

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு திடீர் தடை


தமிழக அரசின் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆக., 3ம் தேதி கவுன்சிலிங் துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. இதில் பங்கேற்று இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், புதிய இடங்களில் சேர, தொடக்கக் கல்வி இயக்குனரகம் திடீர் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளில், இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், இடமாறுதல் பெற்றிருந்தாலும், உடனடியாக அங்கிருந்து மாறி செல்லக்கூடாது. அந்த இடத்திற்கு மாற்றப்பட்ட ஆசிரியர் பணியில் சேர்ந்தால் மட்டுமே, ஆசிரியர்கள் விடுவிக்கப்பட வேண்டும்கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், ஆசிரியர் பணியிடம், அதிகளவில் காலியாக உள்ளதால், இந்த மாவட்டங்களில் இருந்து மாறுதல் பெற்ற ஆசிரியர்களும், தங்கள் இடத்திற்கு, வேறு ஆசிரியர் வரும் வரை காத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

வாக்குச்சாவடிகள் எப்படி இருக்க வேண்டும்; மாநில தேர்தல் கமிஷன் புது உத்தரவு


உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து, அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில், வரும் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில், வாக்கா ளர்கள் வசதிக்காக அமைக்க வேண்டிய, வாக்கு சாவடிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

* மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டடங்கள், அரசு பள்ளி கட்டடங்கள், அரசு உதவிபெறும் மற்றும் பிற பள்ளி கட்ட டங்கள், அரசு கட்டடங்களில், வாக்குச் சாவடி களை அமைக்க வேண்டும். சட்டசபை தேர்த லில், வாக்குச்சாவடியாக பயன்படுத்திய கட்டடங் களுக்கு முன்னுரிமை தர வேண்டும்

* மிக பழமையான கட்டடங்களாக அல்லாமல், இயற்கை சேதங்களை தாங்க கூடியதாகவும், பாதுகாப்பாக தேர்தலை நடத்த ஏதுவானதாக வும் இருக்க வேண்டும்
* காவல் நிலையம், ஊராட்சி அலுவலகம், விருந்தி னர் விடுதி, வழிபாட்டு தலங்கள், சத்துணவுக்கூடம், மருந்தகம் மற்றும் சத்திரங்கள் போன்ற இடங் களில் வாக்குச்சாவடிகள் அமைக்கக்கூடாது
* கிராமப்புறங்களில், 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி; நகர்ப்புறங்களில், 1,200 வாக்காளர் களுக்கு ஒரு வாக்குச்சாவடி; மாநகராட்சிகளில், 1,400 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும் அமைக்க வேண்டும்
* அக்., மாதம் மழைக்காலம் என்பதால், வாக்குப் பதிவு மையத்தின் கூரைகள், ஒழுகாமல் பழுது நீக்க வேண்டும். மின்கசிவு ஏற்படாத வகையிலும், மழைநீர் தேங்கி அடைப்பு ஏற்படாத வகையிலும் பராமரிக்க வேண்டும்
* மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வாக்களிக்க ஏதுவாக, வாக்குப்பதிவு மையங்களில் சரிவுப்பாதைகள் அமைத்து, வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பல உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டு உள்ளன.

பெண்களுக்கான வார்டு ஒரு வாரம் 'கெடு':

-தமிழகத்தில், 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், மேயர்,

துணை மேயர், தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட, 1.50 லட்சம் பதவிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி பதவிகளில், பெண்களுக்கு, 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்கி, அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, பெண்களுக்கான வார்டுகள் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு மாதமாக நடக்கும் இப்பணிகள், இன்னும் நிறைவு பெறவில்லை.

தேர்தல் அறிவிப்புக்கு கால அவகாசம் குறை வாக உள்ள நிலையில், இதனால், மாநில தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடிஏற்பட்டுள்ளது.

எனவே, பெண்களுக்கான வார்டுகள் பிரிக்கும் பணியை, ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என, தேர்தல் அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித் துள்ளது.

பள்ளிக்கல்வித் துறைக்கு 230 கோடி

பள்ளிக் கல்வித் துறைக்கென ரூ.230 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதன்படி, மாணவர்களுக்கு வரைபட பயிற்சித் தாள், கணித-அறிவியல் உபகரணப் பெட்டிகள், பொது அறிவுப் புத்தகங்கள் ஆகியன அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக, பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை:-

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில் எளிமையாகப் பாடங்கள் பயிற்றுவிக்க வசதியாக செயல்வழிக் கற்றல் அட்டைகள் அளிக்கப்படும்.

அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 5-ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்துக்கான வரைபட பயிற்சித் தாள் அளிக்கப்படும். இதன்மூலம், வாழும் இடம், திசைகள், சுற்றுப்புறம், ஆறுகள், மலைகள் அட்ச ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை அறிய முடியும்.

கணித-அறிவியல் பெட்டிகள்: அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1, 2, 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கணித உபகரணப் பெட்டிகளும், 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் உபகரணப் பெட்டிகளும், 3, 4, 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாசிப்புத் திறனை மேம்படுத்த புத்தகங்களும் அளிக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3 கணினிகள் கொண்ட கற்றல் மையங்கள் உருவாக்கப்படும். அறிவியல்-கணித பாடங்களில் உள்ள கடின பகுதிகளை எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில், புதிய தொழில்நுட்பங்களான தொடு திரை, காணொலிக் காட்சி, பல்லூடகம் (மல்டி மீடியா) போன்றவைகளால் கற்றல்-கற்பித்தல் முறைகள் மேம்படுத்தப்படும். பின்னணி குரலுடன் கூடிய அசைவூட்டும் காணொலி தொகுப்புகளும் அளிக்கப்படும். அவை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கொடுக்கப்படும்.

வருகைப் பதிவு: மாணவர்-ஆசிரியர்கள் வருகைப் பதிவேடு முறை இனி பயோ-மெட்ரிக் அடிப்படையில் செயல்படுத்தப்படும். மாணவர்கள் புதிய முறையில் கல்வி கற்பதற்கு வசதியாக, வகுப்பறைகளில் உள்ள சுவர்களில் பாடம் தொடர்புடைய வண்ணச் சுவர் சித்திரங்கள் வரையப்படும்.

தமிழக மாணவர்களுக்கு ஒரே வகையான தரமான கற்றல்-கற்பித்தலைக் கொண்டு சேர்க்க மெய்நிகர் வகுப்பறைகள் (VI​R​T​U​AL​ CL​A​SS​ RO​O​MS)​  ஏற்படுத்தப்படும். முதல்கட்டமாக 770 அரசுப் பள்ளிகளிலும், 11 மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும் உருவாக்கப்படும்.

மேலும் 11 மைய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் இருந்து நடத்தப்படும் வகுப்பறை செயல்பாடுகள், கிராமப்புறப் பகுதிகளிலுள்ள அனைத்து மாணவர்களும் காண வழி செய்யப்படும். இந்த திட்டத்தைச் செயல்படுத்த கோவை, பெரம்பலூர், தருமபுரி மாவட்ட பயிற்சி நிறுவனங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் 11 அறிவிப்புகளின் மூலம் ரூ.230.74 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.

நல்லாசிரியர் விருதுக்கு ரூ.10 ஆயிரம் நல்லாசிரியர் விருதுக்கான ரொக்கப் பரிசு ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களை பாராட்டும் வகையில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசுடன், பதக்கம், சான்றிதழ் அளிக்கப்படுகிறது. ஆசிரியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், இனி ரொக்கப் பரிசு ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.

மாணவர்களுக்கு மழைக்கோட்டு, பூட்ஸ்...: மலைப் பிரதேசங்களில் வாழும் மாணவர்கள் மழைக் காலங்களில் பாதிப்பின்றி பள்ளிக்குச் சென்று வர வசதியாக மழைக்கோட்டு, பூட்ஸ், காலுறைகள் வழங்கப்படும். ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அரசு-அரசு உதவி பெறும் மாணவ-மாணவியருக்கு அவை அளிக்கப்படும் என்றார்.

பள்ளிகளில் அமலாகிறது 'பயோ மெட்ரிக்' வருகை பதிவு


அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி செய்யாமல், 'ஓபி' அடிப்பதை தடுக்கவும், வகுப்புகளுக்கு மட்டம் போடும் மாணவர்களை திருத்தவும், பள்ளிகளில், 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது; இதற்கான அறிவிப்பை, சட்டசபை யில் நேற்று, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், அரசு பள்ளி மாணவர்கள், மாநில, 'ரேங்க்' பெற வில்லை. ஆசிரியர்களின் கவனக்குறைவு; முறையாக பாடம் நடத்தாமை; 'டியூஷன்' நடத்துதல்; அதிகாரிகள் பெயரைச் சொல்லி பள்ளிக்கு வராமல், 'ஓபி' அடித்தல்; வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, .
சொந்த வேலையைப் பார்க்கச் செல்வது காலை, மாலை சிறப்பு வகுப்புகளை நடத்தா மல் இருப்பது போன்றவையே, தேர்ச்சி சதவீதம் குறைய காரணம் என தெரிய வந்தது.

எனவே, ஆசிரியர்களின் பள்ளி வருகையை யும், பள்ளியில் இருப்பதையும் உறுதிப்படுத் தவும், 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவேடு முறைக்கு, கடந்த ஆண்டே கல்வித் துறை திட்டமிட்டது. இதுகுறித்து, நமது நாளிதழில், 2015 மார்ச், 11ல்,செய்தி வெளியானது.

தேர்தலால் இந்த அறிவிப்பு தள்ளி போடப்பட்டு, சட்டசபையில் நேற்று அறிவிக்கப்பட்டது.இந்த திட்டத்தால், ஆசிரியர்கள், 'ஓபி' அடிக்கும் முறை தடுக்கப்படும். உயர் அதிகாரிகளின் வேலையை பார்க்கச் செல்வதாகவும், முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம் செல்வதாகவும் கூறி ஆசிரியர்கள் வெளியே சுற்றுவது இனி குறையும். அதிகாரிகளும், தங்கள் சொந்த வேலைகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துவது தடுக்கப்படும்.

மேலும் பயோ மெட்ரிக் பதிவு பயன்படுத்தப்பட உள்ளதால், பள்ளிக்கு வருவதாகக் கூறி வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டு, சினிமா
தியேட்டருக்கும், ஊர் சுற்றவும் செல்லும் மாணவர்கள் இனி மாட்டிக் கொள்வர். மாணவர்களின் வருகை குறித்த ஆதாரத் துடன், அதிகாரிகள் ஆய்வுக் கூட்டமும் நடத்த முடியும் என்பதால் இதற்கு, கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

அதே நேரம், பயோ மெட்ரிக் கருவியில், வருகையை பதிவு செய்து விட்டு, ஆசிரியரோ, மாணவரோ,பள்ளியிலிருந்து வெளியே சென்று விட்டு, மாலையில் வந்து மீண்டும் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.இதுபோன்ற விதி மீறலுக்கும், முற்றுப்புள்ளி வைக்கும் வகை யில், இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வரவேற்புக்குரியது!

பள்ளிக்கல்வியை முழுவதுமாக தனியார்மயமாக்க முயற்சி: ஜி.ஆர் குற்றச்சாட்டு

பள்ளிக்கல்வியை முழுவதுமாக தனியார்மயமாக்க முயற்சி: தமிழக அரசு மீது ஜி.ரா. குற்றச்சாட்டு
90 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்கல்வி தனியார்மயமாகிவிட்ட சூழலில், பள்ளிக் கல்வியையும் முழுவதுமாக தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் இறங்கிவிட்டனர் எனக் குற்றம்சாட்டினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்
செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் ‘அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமையன்று புதுக்கோட்டையில் கருத்துரங்கம் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய அவர்,


அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்கும் பிரதான கடமை அரசுக்கே உண்டு. ஆனால், அரசு தன்னுடைய பணியைச் செய்யாததால் ஆண்டுதோறும் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 9-ம் தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறைக்கான மானியக் கோரிக்கையில் ஒரு அரசுப்பள்ளிகூட மூடப்படவில்லை என்கிறார் அமைச்சர். தர்மபுரி மாவட்டம் பாப்பம்பாடி கிராமத்தில் உள்ள அரசுத்தொடக்கப்பள்ளி கடந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பில் மட்டும் 4 பேர் படித்தனர். இந்த ஆண்டு அந்த 4 பேரும் உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றுவிட்டதால் அந்தப் பள்ளிக்கூடம் பூட்டுப்போட்டு மூடப்பட்டுக் கிடக்கிறது. இதற்கு அமைச்சரின் பதில் என்ன? மூடப்பட்டது என்பதற்குப் பதிலாக இன்னொரு பள்ளியோரு இணைக்கப்பட்டுள்ளது என்ற வார்த்தை ஜாலத்தால் ஆட்சியாளர்கள் உண்மையை மறைக்கின்றனர்.

2011-12-ம் ஆண்டுகளில் 25.55 லட்சமாக இருந்த தனியார் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 2015-16-ம் ஆண்டுகளில் 38.05 லட்சமாக அதிகரித்துள்ளதாக அரசு புள்ளி விபரம் சொல்கிறது. ஆனால், அரசுப்பள்ளி குறித்த விபரம் ஏதும் தரப்படவில்லை. தென் மாவட்டங்களில் இயங்கி வந்த 200-க்கும் மேற்பட்ட கள்ளர் பள்ளிகளில் பல தற்பொரு ஒரு இலக்கத்திலேயே மாணவர்கள் இருக்கின்றனர். 2007-ம் ஆண்டு 2.44 லட்சமாக இருந்த ஆதிதிராவிடர் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை 1.54 லட்சமாக சுருங்கிவிட்டது. தலைநகர் சென்னையில் 54 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

90 சதவிகிதம் உயர்கல்வி தனியார்மயமாகிவிட்ட சூழலில் பள்ளிக்கல்வியையும் முழுவதும் தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் இறங்கிவிட்டனர். முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கல்விநிறுவனங்களை நடத்துவதே இதற்குக் காரணம்.

இந்தச் சூழலில்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பல அரசுப்பள்ளிகள் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளை விஞ்சும் அளவிற்கு அனைத்து வசதிகளுடன் அழகான இயற்கை சூழலோடு மாங்குடி அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. அந்த ஊரிலிருந்து ஒரு குழந்தைகூட தனியார் பள்ளிகளுக்குச் செல்லவில்லை. வெறும் 11 மாணவர்கள் மட்டுமே இருந்த வல்லம்பக்காடு அரசுத் தொடக்கப்பள்ளியில் தற்பொழுது 89 மாணவர்கள் படிக்கின்றனர். 72 மாணவர்களாக இருந்த புதுக்கோட்டை காந்தி நகர் உயர்நிலைப்பள்ளில் தற்பொழுது 144 பேர் படிக்கின்றனர். இதில் 142 பேர் தலித் மாணவர்களாக உள்ள இப்பள்ளி கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்று வருகிறது. 3 மாணவர்கள் மட்டுமே இருந்த பெரியசெங்கீரை தொடக்கப்பள்ளியில் தற்பொழுது 54 பேர் படிக்கின்றனர். 7 மாணவர்கள் மட்டுமே இருந்த புதுக்கோட்டை தர்மாஜ்பிள்ளை தொடக்கப்பள்ளியில் வாலிபர் சங்கத்தினரின் தீவிர முயற்சியால் தற்பொழுது 59 பேர் படிக்கின்றனர். உடையாளிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வுக்கு கடந்த ஆண்டு மட்டும் 25 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் சிறப்பாகச் செயல்பட்ட 22 பள்ளிகளை தேர்வு செய்து இங்கு விருது வழங்கப்படுகிறது. இத்தகைய சாதனைக்கு பள்ளி ஆசிரியர்களின் தீவிரமான உழைப்பும், ஊர்பொதுமக்களின் ஒத்துழைப்புமே காரணம். சிறப்பாக செயல்பட்ட சில பள்ளிகள் விடுபட்டு இருக்கலாம். இத்தகைய சாதனைகள் அடுத்தடுத்த பள்ளிகளுக்கும் தொடர வேண்டும் என்றார்.

Directorate of Government Examinations - HSE September 2016 - Examination Time Table

Middle schools Upgraded as high schools name list

விதி 110ன் கீழ் முதல்வர் அறிவிப்பு: கல்வித்துறை

Click below

https://app.box.com/s/j4hlilibykouzgc5lp1r4sr827wgpuqy

Monday, August 22, 2016

பி.எட்., கவுன்சிலிங்கில் இன்ஜி., பட்டதாரிகளுக்கு சலுகை


பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இதில், இன்ஜி., மாணவர்களுக்கு, உயிரியல் பாடத்தில் பி.எட்., படிக்க அனுமதி வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பி.எட்., கல்லுாரி களில் உள்ள, 1,777 இடங்களுக்கு, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரியில் நேற்று, பி.எட்., கவுன்சிலிங் துவங்கியது.

முதல் நாளில், மாற்றுத்திறனாளிகளுக்கான சேர்க்கை நடந்தது. மற்ற பாடங்களுக்கு, இன்று துவங்கி, 30ம் தேதி முடிகிறது. இந்த ஆண்டு, பி.இ., - பி.டெக்., படித்த இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் பாடங்களில் ஏதாவது ஒன்றை இன்ஜினியரிங்கில் பிரதான பாடமாக படித்திருக்க வேண்டும்.

இந்த ஆண்டு விலங்கியல் மற்றும் தாவரவியல் பிரிவுகளில், 100க்கும் குறைவானவர்களே விண்ணப்பித்துள்ளதால், இன்ஜி., பட்டதாரிகளுக்கும் உயிரியல் பி.எட்., படிப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

70 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக ஆகஸ்ட் 23 செவ்வாய்க்கிழமை அன்று அனைத்து பள்ளியிலும் காலை 11 மணிக்கு தேசியகீதம் பாட வேண்டும்

Sunday, August 21, 2016

பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெறுவது சிரமம் கல்வியாளர்கள் ஆதங்கம்


சென்னை, பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவது சிரமம். இதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் எந்தவித மாற்றமும் வராது என்று கல்வியாளர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.மருத்துவ நுழைவுத்தேர்வுசமீபத்தில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு, ‘நீட்’ எனப்படும் அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத்தேர்வு ஆகியவை நடத்தப்பட்டன.

இந்ததேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களில் சி.பி.எஸ்.இ. படித்தவர்கள் ஓரளவு பங்கேற்றனர். மாநில கல்வி திட்டத்தில் படித்தவர்களில் வெகுசிலர் மட்டுமே கலந்துகொண்டனர்.ஆனால் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அந்த மாநில அரசு பின்பற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டங்களில் படித்த மாணவ-மாணவிகள் அதிக எண்ணிக்கையில் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழக மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களும் ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்? என்று கேட்டதற்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:-பாடத்திட்டத்தை மாற்றவேண்டும்தமிழகத்தில் இப்போது நடைமுறையில் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தயாரித்தது.

இன்றைய சூழ்நிலை, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உடனடியாக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிளஸ்-1 பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இல்லை. ஆனால் ‘நீட்’ தேர்வில் பிளஸ்-1 வகுப்பில் இருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன.தமிழ்நாட்டில் பெயர் அளவில் தான் பிளஸ்-1 வகுப்புகள் நடத்தப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. எனவே பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டத்தை உடனே மாற்றவேண்டும். பாடத்திட்டத்தை மாற்றாதவரை ‘நீட்’ தேர்விலும், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்விலும் தமிழகத்தை சேர்ந்த மாநில கல்விமுறையில் படித்த மாணவ-மாணவிகள் வெற்றிபெறுவது சிரமம்.

சிறப்பு வகுப்புகள்பள்ளிக்கல்வி இயக்குனரகம் ‘நீட்’ தேர்வுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினாலும் வெற்றிபெறுவது சிரமம். சிறப்பு வகுப்புகளால் எந்த மாற்றமும் வராது.இவ்வாறு சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதே கருத்தை தமிழக கல்வியாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று கவுன்சலிங்

தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் இன்று நடக்கிறது. இந்நிலையில் பணி நிரவல் என்ற பெயரில் கடந்த மாதம் 27ம் தேதி வரை முக்கிய பணியிடங்களை அதிகாரிகள் நிரப்பிவிட்டதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்கும் கவுன்சலிங்கை தொடக்க கல்வித்துறை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது

பி.எட்., கவுன்சிலிங் இன்று துவக்கம்


பி.எட்., படிப்புக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பிலுள்ள, ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இந்த ஆண்டு, 3,736 பேர் பி.எட்., படிக்க விண்ணப்பித்துள்ளனர். சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்தும் இந்த கவுன்சிலிங், இன்று காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.நாளை, தமிழ் மற்றும் ஆங்கிலம்; நாளை மறுநாள், வரலாறு பாடம் மற்றும் பி.இ., - பி.டெக்., முடித்தவர்களுக்கான, 20 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் நடக்கிறது;

25ம் தேதி அரசு விடுமுறை. பின், 26ம் தேதி தாவரவியல் மற்றும் விலங்கியல்; 27ல், இயற்பியல், மனை அறிவியல், பொருளியல், வணிகவியல்; 28ல் வேதியியல், புவியியல், கணினி அறிவியல்; 30ல் கணித பாடங்களுக்கு கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது

தொடக்கக்கல்வி சுற்றறிக்கை எண் 20- பணிவிடுவிப்பு சார்பு--ஈராசிரியர் பள்ளிகளில் மாறுதல் பெற்றவர்களை பதிலி ஆசிரியர் வந்த பின்தான் விடுவிக்கவேண்டும் இயக்குநர் செயல்முறைகள்- நாள்:21/8/16

Saturday, August 20, 2016

கற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு தடை


'பாடம் நடத்துவதை தவிர வேறு பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கற்பித்தல் பணி தவிர, நிர்வாகம் சார்ந்த பல பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் வாக்காளர் கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துதல், மாணவர்களுக்கு அரசின் இலவசங்களைப் பெற்று வழங்குதல் போன்ற பணிகளையும் செய்கின்றனர்.

'தேர்தல் சார்ந்த பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகள் தவிர, கற்பித்தல் அல்லாத பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது' என, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 'இதை, பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.