இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, March 03, 2016

தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் தயாரிக்க உத்தரவு


மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த விருதை பெற, 20 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், ஒரு மாநிலத்தில், 22 பேருக்கு, இந்த விருது வழங்கப்படுகிறது.

தமிழகத்தில், மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்களே, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.இந்த ஆண்டுக்கான விருதுக்கு, தமிழகத்தில் தகுதியான ஆசிரியர்களின் பட்டியலை அனுப்புமாறு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இணை இயக்குனர் நரேஷ் ஆகியோர், மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். மார்ச், 15க்குள் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.

Wednesday, March 02, 2016

தேர்வு கட்டுப்பாட்டு அறை திறப்பு

அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 15-ந்தேதி முதலும் நடைபெற உள்ளன. தேர்வுகள் குறித்து மாணவர்கள், தேர்வு எழுதுபவர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேர தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும். எனவே 8012594114, 8012594124, 8012594125, 8012594126 ஆகிய தேர்வு கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூடுதல் மதிப்பெண்ணுக்காக மாணவர்கள் எழுதிய விடைகளை அடித்தால் ஓராண்டு தடை


கூடுதல் மதிப்பெண்ணுக்காக உடனடி தேர்வு எழுதும் வகையில் பிளஸ் 2 தேர்வில் எழுதிய விடைகளை அடிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டுக்கு தடை விதிக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள் நாளை மறுநாள் தொடங்குகின்றன.

இம்முறை மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க கூடுதல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தொழிற்கல்விகளில் சேர மாணவர்கள் சிலர் விடைகளை எழுதிவிட்டு அடிக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டிருப்பதை தேர்வுத்துறை கவனத்தில் கொண்டுள்ளது. இதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு விடைகளை எழுதிவிட்டு அதை அடிக்கும் மாணவர்கள் 2 பருவ தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடைகளை அடிப்பதன் மூலம் பெயிலாகி உடனடி தேர்வு எழுத முடியும் என்பதால் மாணவர்கள் சிலர் அந்த முறையை கடைபிடித்து வருகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நடைமுறையில் இருந்த கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கான மதிப்பெண் மேம்பாட்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tuesday, March 01, 2016

'பணி நிரந்தரத்திற்கு வாய்ப்பு இல்லை'


அரசு பள்ளிகளில், கணினி, கைவினை, கலை, ஓவியம், இசை என, பல்வேறு வகை சிறப்பு பாடப்பிரிவுகளில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, கடந்த வாரம் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, சங்க பிரதிநிதிகளை அழைத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் பேச்சு நடத்தினார்

.அப்போது, 'தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும்; அதற்கு முன், 7,000 ரூபாய் சம்பளத்தை, 12 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; பள்ளி வேலை நாட்களை உயர்த்த வேண்டும்' என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் பதில் அளித்தபோது, 'நீங்கள் மத்திய அரசின் சிறப்பு திட்டத்தில் பணியாற்றுவதால், உங்களை நிரந்தரம் செய்யும் திட்டம், தற்போதைக்கு இல்லை; ஊதிய உயர்வு குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, டில்லி சென்று, மத்திய அரசு அதிகாரிகளிடம் பேசிய பின் முடிவு செய்யப்படும்' என, கூறியுள்ளார்

அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி உயர்வு


பணியின்போது இறக்கும் அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டது.அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தை 1974 ஜன., 1 ல், அரசு செயல்படுத்தியது. இதற்காக ஊழியர்களிடம் மாதந்தோறும் ரூ.10 வசூலிக்கப்பட்டது. பணியின்போது இறந்தால், ஊழியர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. அதன்பின் 2006 பிப்ரவரியில் ரூ.1.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டது.

இதற்காக மாதந்தோறும் ரூ.30 வசூலிக்கப்பட்டது.அரசு ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் 10 ஆண்டுகளுக்கு பின் பாதுகாப்பு நிதியை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அரசு உயர்த்தி உள்ளது. இதற்காக ஊதியத்தில் ரூ.60 பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு பிப்., 1 முதல் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் பணியாளர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியும் ரூ.3 லட்சமாக உயர்ந்துள்ளது.இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.61.50 குறைவு


வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, 61.50 ரூபாய் குறைந்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடு - 14.20 கிலோ; வணிகம் - 19 கிலோ என, இரண்டு வகையான சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. இந்த நிறுவனங்கள், சர்வதேச சந்தையின், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும், சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.

சென்னையில், தற்போது, வீடுகளுக்கான காஸ் சிலிண்டர் விலை, 61.50 ரூபாய் குறைந்து, 525.50 ரூபாயாக உள்ளது. இது, கடந்த மாதம், 587 ரூபாயாக இருந்தது. சென்னையில், பிப்ரவரியில், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை, 1,205.50 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, இதன் விலை, 108 ரூபாய் குறைந்து, 1,097.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உணவு பொருட்கள் விலை குறையுமா? உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சமையல் காஸ் சிலிண்டர் விலை உயரும் போது, ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.

தற்போது, சிலிண்டர் விலை குறைந்து வருவதால் உணவு பொருட்களின் விலையை குறைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

பி.எப்., தொகைக்கு புதிதாக வரி கிடையாது சர்ச்சைகளுக்கு மத்திய அரசு விளக்கம்


இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இ.பி.எப்., தொகைக்கானவட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பார்லிமென்டில் நேற்று முன்தினம், பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். 'தொழிலாளர்கள் ஓய்வு அடையும்போது பெறும், இ.பி.எப்., மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.பி.எப்., தொகையில், 60 சதவீதத்தின் மீது ஓய்வுக்கால வரி விதிக்கப்படும்' என, பட்ஜெட்டில் கூறப்பட்டது.இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, மத்திய வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் அதியா, டில்லியில், நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:

முழு வரி விலக்கு: நடப்பாண்டு, ஏப்ரல், 1க்கு பின், இ.பி.எப்., கணக்கில் சேரும் தொகையில், 60 சதவீதத்திற்கு கிடைக்கும் வட்டி மீது மட்டுமே வரி விதிக்கப்படும். இந்த தொகையை, மீண்டும், ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்தால், முழுவதும் வரி விலக்கு அளிக்கப்படும்; அதேநேரத்தில், பி.பி.எப்., தொகைக்கு, முழு வரி விலக்கு தொடர்கிறது. இவ்விஷயத்தில் அரசின் நோக்கம், வருவாய் அதிகரிப்பு அல்ல. தொழிலாளர்கள் அனைவரும், ஓய்வூதிய திட்டத்தில் சேர வேண்டும் என, அரசு விரும்புகிறது. ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்த நபர் மரணம் அடையும் பட்சத்தில், அவரது வாரிசுதாரருக்கு அத்தொகை மாற்றம் செய்யப்படும்போதும், வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

தொழிலாளர்களின், இ.பி.எப்., கணக்கில் சேரும் 100 சதவீத பணத்தையும் அவர்கள் எடுத்துக் கொள்ளும்போது, எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. அப்பணத்தை, ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யாவிட்டால், அவர்களின் உடல்நலன் தொடர்பான பிரச்னைகளுக்கு அரசு பொறுப்பேற்கும் நிலை உருவாகிறது.எனவே, ஓய்வு பெறும் தொழிலாளர்கள், இ.பி.எப்., தொகையில் இருந்து, 40 சதவீத பணத்தை பயன்படுத்திக் கொள்வதையும், மீதமுள்ள 60 சதவீத தொகையை,ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வதையும், அரசு ஊக்குவிக்கிறது.இ.பி.எப்., தொகைக்கான, மீதமுள்ள 40 சதவீத தொகைக்கான வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. 2016, ஏப்ரல் 1ம் தேதிக்கு முன், இ.பி.எப்., கணக்கில் சேர்ந்த தொகைக்கான வட்டி மீது வரி செலுத்தத் தேவையில்லை. இ.பி.எப்., கணக்கில், தொழிலாளி மற்றும் முதலாளி தரப்பில் செலுத்தப்படும் அசல் தொகை முழுவதற்கும் வரி விலக்கு தொடர்கிறது.

3.7 கோடி பேர்: நாடு முழுவதும், 3.7 கோடி தொழிலாளர்கள், இ.பி.எப்., திட்டத்தில் இணைந்துள்ளனர். இவர்களில், கார்ப்பரேட் துறையை சேர்ந்த, அதிக சம்பளம் பெறும் 70 லட்சம் பேர் மட்டுமே,இ.பி.எப்., தொகை வட்டி மீதான வரி விதிப்பால் பாதிப்பர். இ.பி.எப்., திட்டத்தில் இணைந்துள்ளோரில் மூன்று கோடி பேர், 15,000 ரூபாய்க்கும் குறைவான சம்பளமே பெறுகின்றனர். இவர்களுக்கு வரி விதிப்பில் எவ்வித மாற்றமும் கிடையாது; இ.பி.எப்.,பில் சேர்ந்துள்ள 100 சதவீத அசல் தொகையையும், பணி ஓய்வின்போது, வரியின்றி பெற்றுக் கொள்ளலாம். இ.பி.எப்., வரிவிதிப்பில் உள்ள வேறுபாடுகள் தொடர்பாக, விரைவில் அறிவிப்பாணை வெளியிடப்படும். இவ்வாறு ஹஸ்முக் அதியா கூறினார்.

வேலையில் சேர்ந்த நாள் முதல், ஊதியத்தில் இருந்து சிறுக சிறுக சேமிக்கும்,பி.எப்., தொகைக்கு கொடுக்கப்படும் வட்டி என்பது, பணவீக்கத்தை ஒப்பிடுகையில் மிகக் குறைவு. இத்தொகையை, ஓய்வு பெறும் நிலையில், மகள் திருமணம், வீடு கட்டுவதற்கு ஆகும் செலவில் பற்றாக்குறை வரும்போது, தொழிலாளி கேட்கிறார். அதற்கு அரசு வரி போடுவது என்ன நியாயம்? வெங்கடாசலம், பொதுசெயலர்அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்

Monday, February 29, 2016

இ-சேவை மையங்களில் பாடப்புத்தகம் வினியோகம்


பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் அனைத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலம் பணம் செலுத்தி பெற தமிழ்நாடு பாடநூல் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் இணையதளம் மூலம் விற்பனை செய்து வருகிறது. பணம் செலுத்த முடியாத பகுதியை சேர்ந்தவர்கள் எளிதாக பாடநூல் வாங்கிக் கொள்ள வசதியாக, வட்ட அளவில் செயல்படும் அரசு பொது இ-சேவை மையங்கள் மூலம் பணம் செலுத்தி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடநூல்களின் விவரம் மற்றும் விலை ஆகியவை அரசு இ-சேவை மையங்களில் உள்ள இணைய தளத்தில் தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பாடநூல்கள் வாங்க விரும்பும் மாணவ, மாணவியர் இ-சேவை மையங்களில் பணம் செலுத்தி புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. இ-சேவை மையங்களில் பணம் செலுத்தி பதிவு செய்தவர்களுக்கு வீட்டு முகவரிக்கே புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

2016 பட்ஜெட் விலை உயரும்/குறையும் பொருட்கள்

மத்திய பட்ஜெட்

விலை அதிகரிக்கும் பொருட்கள்:
* கார்கள்
* சிகரெட்கள், புகையிலை, பேப்பர் சுற்றிய பீடி, குட்கா, சுருட்டு
* அனைத்து வகை பணம் கட்டுதல், ஓட்டல்களில் சாப்பிடுதல், விமான பயணம்
* ரெடிமேட் ஆடைகள், ரூ.1000க்கு மேற்பட்ட நிறுவனங்களின் ஆடைகள்
* தங்கம் மற்றும் வெள்ளி. வெள்ளி அல்லாத நகைகள்
* மினரல் வாட்டர்,
* ரூ. 2 லட்சத்துக்கு மேற்பட்ட பொருட்கள் வாங்கும் போது
* அலுமினிய சுருள்/தகடு
* பிளாஸ்டிக் பைகள்
* ரோப் வே, கேபிள் கார் பயணம்
* இறக்குமதி செய்யப்படும் கவரிங் நகைகள்
* தொழில் முறை சோலார் வாட்டர் ஹூட்டர்
* சட்டம் தொடர்பான சேவைகள்
* லாட்டரி டிக்கெட்கள்
* வாடகையில் செல்லும் அடுக்குமாடி சொகுசு பஸ்கள்
* மின்னணு வாசிக்கும் சாதனங்கள்
* விஓடுபி(வாயிஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால்) சாதனங்கள்
* இறக்குமதி செய்யப்படும் கோல்ப் கார்கள்
* தங்கக்கட்டிகள்
*வீட்டு பொருட்களை ஒரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு எடுத்துச்செல்லும் பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ் சேவை

விலை குறையும் பொருட்கள்
* காலணிகள்
* சோலார் விளக்குகள்
* ரவுட்டர்கள், பிராட்பேண்ட் மோடம்கள், செட்டாப் பாக்ஸ்கள், டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் மற்றும் ரகசிய கண்காணிப்பு கேமரா
*மின்சாரத்தில் இயங்கும் கார்கள்
*ஸ்டெர்லைஸ்ட் டையாலிசர்
* 60 சதுர மீட்டர் குறைவாக, குறைந்த விலையில் வாங்கப்படும் வீடுகள்
* மேடை நிகழ்ச்சிகளுக்கு கிராமப்புற கலைஞர்களின் சேவை
* குளிர்ப்பதன பெட்டிகளின் பயன்படுத்தப்படும் பொருட்கள்
* மைக்ரோவேவ் ஓவன்ஸ்
*சானிடரி பேட்ஸ்
* பார்வையற்றோர் நடத்தும் பிரைலி பேப்பர்

2016 பட்ஜெட் துளிகள்

மத்திய பட்ஜெட் : முக்கிய அம்சங்கள்

வரும் 2016-17-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தா‌க்கல் செய்தார்.

முக்கிய அம்சங்கள்

* 5 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5000 ரூபாய் வரை சலுகை

* வீட்டு வாடகைக்கான சலுகை ஆண்டுக்கு 24,000த்திலிருந்து 60,000த்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.

* இந்த நிதி ஆன்டில் திட்டமிடப்படாத செலவுகள் 14.3 லட்சம் கோடியாக கணிக்கப்பட்டிருக்கிறது.

* வருவாய் பற்றாகுறை 2015 - 16ல் 2.8 லிருந்து 2.5 சதவிகிதமாக குறைந்தது.

* சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ஆதார் எண் இணைக்கப்படும்.

* பருப்பு விலையை கட்டுப்படுத்த 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* வங்கியின் செயல்பாடுகளில் அரசு தலையிடாது.

* ஐடிபிஐ வங்கியில் அரசின் பங்கை குறைத்துக்கொள்ளும் அறிவிப்பால் அந்த பங்கு 8%
விலை உயர்ந்தது.

* இந்தியாவின் நிதி பற்றாக்குறை 3.9 சதவிகிதமாக இருந்தது. அதை 2016 - 17ல் 3.5 சதவிகிதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

* 2016 - 17ல் இந்தியாவின் மொத்த செலவு 17.78 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்ககிடப்பட்டிருக்கிறது.

* ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க ஒரு நாளில் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட இருக்கிறது.

* பொதுத்துறை வங்கிகளில் 25000 கோடி ரூபாய் கூடுதல் முதலீடு செய்யப்படும்

* சிறு தொழில்களுக்கு கடன் வழங்கும் முத்ரா திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ. 1,80,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

* 3000 புதிய ஜெனிரிக் மருத்தகம் அமைக்கப்படும்.

* விவசாயிகளுக்கு உர மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

* திட்டமிட்ட செலவுகள் 15% கடந்த ஆண்டைவிட உயர்வு.

* பொதுத்துறை வங்கிகளுக்கு மறு முதலீடு 25,000 கோடி ஒதுக்கீடு

* மாநில அரசுகளுடன் இணைந்து 160 விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.

* புட் புராக்கெட், பார்மா துறைகளிலில் எஃப்டிஐ முதலீட்டு அளவு 100% அதிகரிக்கப்படும். மேலும் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்.

* அணு சக்தி துறைக்கு 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* இன்ஃப்ரா துறையை மேம்பாடுத்த புதிய கிரெடிட் ரேட்டிங் உருவாக்கப்படும்.

* அனைத்து மாவட்டங்களுக்கு டயாலிசிஸ் மையங்கள் அமைக்க திட்டம்.

* அடுத்த 3 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு ஸ்கில் இந்தியா திட்டம் முலம் பயிற்சி

* நாடு முழுவதும் 1500 பன்முக திறன் வளர்ப்புப் பயிற்சி மையங்கள்

* 2016 - 17 நிதி ஆன்டில் 10,000 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டம்.

* இந்தியாவின் உள்கட்டுமானத்திற்கு 2,21,246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* சாலை போக்குவரத்துகளை அதிகரிக்கும் விதத்தில் மோட்டார் வாகன சட்டங்களில் சில திருத்தங்கலை கொண்டு வரத் திட்டம்.

* பேங்க்ரப்ட்ஸி மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்!

* புதிதாக இபிஎஃப் திட்டத்தில் இணையும் தொழிலாளர்களுக்கு 8.3 சதவிகித வட்டி வழங்கப்படும்

* ஆழ்கடலில் எரிவாயு எடுக்க திட்டங்கள் சலுகை அளிக்கப்படும்!

* மூத்த குடிமக்களுக்கு ஒரு லட்சம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

* 75 லட்சம் நடுத்தர குடும்பத்தினர் தங்கள் எரிவாயு இணைப்பு மானியத்தை விட்டுக் கொடுத்திறுகின்றனர்.

* 10 பொதுத்துறை மற்றும் 10 தனியார் துறை கல்வி நிறுவனங்கள் தேர்தெடுக்கப்பட்டு அதில் பயிலும் மாணவர்களுக்கு உலக தரம் வாய்ந்த கல்வி பயிற்றுவிக்கப்படும்

* மோட்டார் வண்டிகள் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்!

* தலித் மக்கள் தொழில்முனைவோராக தங்கள் வாழ்கையை மேம்படுத்திக் கொள்ள திட்டம்

* 500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தலித் மக்களுக்கு எம்.எஸ்.எம்.இ யில் தனி ஹப் அமைக்கப்பட இருக்கிறது

* ஒட்டு மொத்த கிராம புறங்கள் வளர்ச்சிக்கு 87,765 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்கள்

* எல்பிஜி கேஸ் இணைப்பை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு வழங்க 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* நெடுஞ்சாலைகளை அமைக்க ரூ.55,000 கோடி ஒதுக்கீடு!

* உயர் படிக்காக நிதி உதவி செய்ய ரூ.1000 கோடி செலவில் தனி அமைப்பு அமைக்கப்படும்!

* அடுத்த 3 ஆண்டுகளில் 6 கோடி நபர்களுக்கு டிஜிட்டல் கல்வி அறிவை பயிற்றுவிக்க திட்டம்.

* டயாலிசிஸ் செய்யும் கருவிக்கு கலால் வரி கிடையாது!

* மே 1, 2018க்கு முன் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.

* 2.87 லட்சம் கோடி கிராம பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

* 19000 கோடி ரூபாய் கிராமபுற சாலை மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

* 15000 கோடி ரூபாய் வட்டி சுமை குறைக்கப்பட திட்டம் திட்டப்பட்டுள்ளது.

* ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்படும்!

* சுவாச் பாரத் திட்டத்துக்கு 9,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

Sunday, February 28, 2016

தேசிய திறனறி தேர்வு ரிசல்ட் வெளியீடு


பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில், மத்திய அரசு சார்பில் நடத்தப்படும், தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டுக்கான திறனறித் தேர்வில், மாநில அளவிலான முதல் கட்ட தேர்வு, நவம்பரில் நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியாயின.தேர்வு முடிவுகளை, www.tndge.in என்ற இணையதளத்தில், பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். இரண்டாம் கட்ட தேசிய தேர்வு, மே, 8ம் தேதி நடக்கிறது. '

Friday, February 26, 2016

வி.ஏ.ஓ., தேர்வு: வினாத்தாளில் மாற்றம்


முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 வி.ஏ.ஓ., பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு நாளை நடக்கிறது. முறைகேடுகளை தடுக்க இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான வினாத்தாள் 'ஏ,''பி,' 'சி,' 'டி' என, 4 விதமாக அச்சடிக்கப்பட்டு வழக்கப்பட்டன.ஒரு தேர்வு அறையில் 20 பேர் அமரும் போது ஒரே விதமான வினாத்தாள் 5 பேருக்கு செல்ல வாய்ப்பு இருந்தது. இதனால் வினாத்தாள்களில் விடைகளை குறித்து, மற்றவர்களுக்கு வழங்குவதாகவும், சைகை மூலம் விடைகளை தெரிவிப்பதாகவும் புகார் எழுந்தது. இதை தடுக்க வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாள் 'ஏ,''பி,' 'சி,' 'டி' என, பழைய முறையில் தயாரிக்கப்படவில்லை.

உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வு போன்று சீரியல் எண் மட்டும் உள்ள வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. இதில் ஒரு அறையில் உள்ள அனைவருக்கும் வெவ்வேறான விதமான வினாத்தாள் வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் கேள்வி எண் மாறுபடுவதால் முறைகேடு செய்ய முடியாது.மேலும் தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு மையத்திலும் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

10 ஆண்டு சம்பளம் குடுத்தாச்சு: சான்றிதழை பற்றி தெரியாதாம்


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகளாக சம்பளம் அளித்த பிறகும், அவர்களின் சான்றிதழ் உண்மையானதா என, கண்டுபிடிக்க முடியாமல் பள்ளிக்கல்வி துறை திணறுகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில், 2006க்கு பின், 10 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, 10 ஆண்டுகளாக ஊதியம் வழங்கிய பிறகும், அவர்களின் சான்றிதழ் உண்மையானதா என, பள்ளிக் கல்வி துறை மற்றும் தேர்வுத்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டில், உயர்நிலை தலைமை ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, பட்டியலை தயாரிக்க, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அதற்கு தகுதியான ஆசிரியர்கள், தங்கள் பெயர் விவரங்களுடன், சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்த சான்று, இரண்டு ஆண்டு பயிற்சி முடித்தது தொடர்பான, தகுதி காண் பருவ சான்றிதழ் போன்றவற்றை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏனென்றால், பெரும்பாலான ஆசிரியர்களுக்கு, இன்னும் சான்றிதழின் உண்மை தன்மை கண்டறியப்படவில்லை. அத்துடன், ஆசிரியர்கள் தகுதி காண் பருவம் முடிந்து, எட்டு ஆண்டு ஆன பிறகும், பயிற்சி முடித்த சான்றிதழும் கிடைக்கவில்லை.