பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில், மத்திய அரசு சார்பில் நடத்தப்படும், தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டுக்கான திறனறித் தேர்வில், மாநில அளவிலான முதல் கட்ட தேர்வு, நவம்பரில் நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியாயின.தேர்வு முடிவுகளை, www.tndge.in என்ற இணையதளத்தில், பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். இரண்டாம் கட்ட தேசிய தேர்வு, மே, 8ம் தேதி நடக்கிறது. '
Sunday, February 28, 2016
தேசிய திறனறி தேர்வு ரிசல்ட் வெளியீடு
Friday, February 26, 2016
வி.ஏ.ஓ., தேர்வு: வினாத்தாளில் மாற்றம்
முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 வி.ஏ.ஓ., பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு நாளை நடக்கிறது. முறைகேடுகளை தடுக்க இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான வினாத்தாள் 'ஏ,''பி,' 'சி,' 'டி' என, 4 விதமாக அச்சடிக்கப்பட்டு வழக்கப்பட்டன.ஒரு தேர்வு அறையில் 20 பேர் அமரும் போது ஒரே விதமான வினாத்தாள் 5 பேருக்கு செல்ல வாய்ப்பு இருந்தது. இதனால் வினாத்தாள்களில் விடைகளை குறித்து, மற்றவர்களுக்கு வழங்குவதாகவும், சைகை மூலம் விடைகளை தெரிவிப்பதாகவும் புகார் எழுந்தது. இதை தடுக்க வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாள் 'ஏ,''பி,' 'சி,' 'டி' என, பழைய முறையில் தயாரிக்கப்படவில்லை.
உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வு போன்று சீரியல் எண் மட்டும் உள்ள வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. இதில் ஒரு அறையில் உள்ள அனைவருக்கும் வெவ்வேறான விதமான வினாத்தாள் வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் கேள்வி எண் மாறுபடுவதால் முறைகேடு செய்ய முடியாது.மேலும் தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு மையத்திலும் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
10 ஆண்டு சம்பளம் குடுத்தாச்சு: சான்றிதழை பற்றி தெரியாதாம்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகளாக சம்பளம் அளித்த பிறகும், அவர்களின் சான்றிதழ் உண்மையானதா என, கண்டுபிடிக்க முடியாமல் பள்ளிக்கல்வி துறை திணறுகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில், 2006க்கு பின், 10 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, 10 ஆண்டுகளாக ஊதியம் வழங்கிய பிறகும், அவர்களின் சான்றிதழ் உண்மையானதா என, பள்ளிக் கல்வி துறை மற்றும் தேர்வுத்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டில், உயர்நிலை தலைமை ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, பட்டியலை தயாரிக்க, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அதற்கு தகுதியான ஆசிரியர்கள், தங்கள் பெயர் விவரங்களுடன், சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்த சான்று, இரண்டு ஆண்டு பயிற்சி முடித்தது தொடர்பான, தகுதி காண் பருவ சான்றிதழ் போன்றவற்றை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏனென்றால், பெரும்பாலான ஆசிரியர்களுக்கு, இன்னும் சான்றிதழின் உண்மை தன்மை கண்டறியப்படவில்லை. அத்துடன், ஆசிரியர்கள் தகுதி காண் பருவம் முடிந்து, எட்டு ஆண்டு ஆன பிறகும், பயிற்சி முடித்த சான்றிதழும் கிடைக்கவில்லை.
16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: அரசு நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 'டி.இ.டி.,' ஆசிரியர் தகுதி தேர்வின்றி 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளி மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணி புரிகின்றனர்.
மத்திய அரசின் கல்வி உரிமை சட்டம் 2009ல் அமலானது. அப்போது அனைவருக்கும் கல்வி இயக்கம், இடைநிலை கல்வித்திட்டம் போன்றவற்றில் மத்திய அரசின் 75 சதவீத நிதி, மாநில அரசின் 25 சதவீத நிதியுடன் ஆசிரியர்களுக்கான சலுகைகள், 700 தலைமை ஆசிரியர்கள் நியமனம், பள்ளிக் கட்டடங்களை அமைப்பது போன்ற பணிகளுக்கு நிதி வழங்கப்பட்டது.இந்நிலையில் மாநில அரசு கடந்த 2011 ஜன., 15ல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் குறித்து அரசாணை வெளியிட்டது. அதில் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் தேர்வாகியிருக்க வேண்டும். அல்லது அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 'டி.இ.டி.,' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் 2016 நவ., 15ல் இந்த அரசாணை வெளியிடப்பட்டு ஐந்தாண்டு நிறைவடைகிறது. இதனால், தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் கூறியதாவது: இன்னும் 9 மாதங்களில் அரசு அறிவித்த 5 ஆண்டு காலம் முடிவடையும் நிலையில் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் பணி கேள்விக்குறியாக உள்ளது. அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் நலன் காக்க வேண்டும், என்றார்.
தொழிலாளர்கள் வைப்பு நிதியில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்
தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் 12 சதவீதம் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட்டது. இதே அளவு தொகையை ஊழியர்களின் கணக்கில் முதலாளிகளின் பங்காக நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.
இதில் 8.3 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எஞ்சிய தொகை தொழிலாளர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு ஆண்டுதோறும் வட்டி சேர்க்கப்பட்டு வருகிறது. தற்போது 8.8 சதவீதம் அளவுக்கு வட்டி தரப்படுகிறது. 58 வயது பூர்த்தியானவுடன் வைப்பு நிதியில் சேர்ந்த தொகை மொத்தமாக ஊழியர்களுக்கு தரப்படும்.
வேலை செய்த காலத்தை பொறுத்து பென்ஷன் தரப்படுகிறது. பணிக்காலத்தில் இந்த வைப்பு நிதியிலிருந்து குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவு, திருமண செலவுகளுக்கு பணம் திருப்பிக் கொள்ளலாம். 54 வயதை கடக்கும் போது வைப்பு நிதியில் இருந்து 90 சதவீத தொகையை எடுத்துக் கொள்ளலாம் என விதிமுறை இருந்தது. தற்போது இந்த விதிமுறை திருத்தப்பட்டுள்ளது.
இனிமேல் 57 வயது எட்டினால் மட்டுமே 90 சதவீத நிதியை திரும்ப பெற முடியும். 58 வயது பூர்த்தியானவுடன் எஞ்சிய தொகை ெசட்டில் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பல நிறுவனங்கள் தொழிலாளர்களை 55 வயதில் ஓய்வு கொடுத்து அனுப்பி வந்தன. தற்போது அனைத்து நிறுவனங்களும் 58 வயதை ஓய்வு வயதாக வைத்துள்ளன. இதனால் ஓய்வு ஆண்டுக்கு ஒரு ஆண்டு முன்னர் அதாவது 57 வயதில் பிஎப் பணத்தை திருப்பிக் கொள்ள புதிய விதிமுறை வகுக்கப்பட்டிருப்பதாக இபிஎப்ஒ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதே போல் தொழிலாளர்களின் வைப்பு நிதியை 57 வயது கடந்த பின்னரே எல்ஐசியில் முதலீடு செய்ய வேண்டும் என்ற புதிய விதிமுறையையும் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வகுத்துள்ளது.
தொழிலாளர்கள் வைப்பு நிதியில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்
தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் 12 சதவீதம் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட்டது. இதே அளவு தொகையை ஊழியர்களின் கணக்கில் முதலாளிகளின் பங்காக நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.
இதில் 8.3 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. எஞ்சிய தொகை தொழிலாளர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு ஆண்டுதோறும் வட்டி சேர்க்கப்பட்டு வருகிறது. தற்போது 8.8 சதவீதம் அளவுக்கு வட்டி தரப்படுகிறது. 58 வயது பூர்த்தியானவுடன் வைப்பு நிதியில் சேர்ந்த தொகை மொத்தமாக ஊழியர்களுக்கு தரப்படும்.
வேலை செய்த காலத்தை பொறுத்து பென்ஷன் தரப்படுகிறது. பணிக்காலத்தில் இந்த வைப்பு நிதியிலிருந்து குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவு, திருமண செலவுகளுக்கு பணம் திருப்பிக் கொள்ளலாம். 54 வயதை கடக்கும் போது வைப்பு நிதியில் இருந்து 90 சதவீத தொகையை எடுத்துக் கொள்ளலாம் என விதிமுறை இருந்தது. தற்போது இந்த விதிமுறை திருத்தப்பட்டுள்ளது.
இனிமேல் 57 வயது எட்டினால் மட்டுமே 90 சதவீத நிதியை திரும்ப பெற முடியும். 58 வயது பூர்த்தியானவுடன் எஞ்சிய தொகை ெசட்டில் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பல நிறுவனங்கள் தொழிலாளர்களை 55 வயதில் ஓய்வு கொடுத்து அனுப்பி வந்தன. தற்போது அனைத்து நிறுவனங்களும் 58 வயதை ஓய்வு வயதாக வைத்துள்ளன. இதனால் ஓய்வு ஆண்டுக்கு ஒரு ஆண்டு முன்னர் அதாவது 57 வயதில் பிஎப் பணத்தை திருப்பிக் கொள்ள புதிய விதிமுறை வகுக்கப்பட்டிருப்பதாக இபிஎப்ஒ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதே போல் தொழிலாளர்களின் வைப்பு நிதியை 57 வயது கடந்த பின்னரே எல்ஐசியில் முதலீடு செய்ய வேண்டும் என்ற புதிய விதிமுறையையும் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வகுத்துள்ளது.
Thursday, February 25, 2016
புதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் அரசாணை வெளியீடு
புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க, அரசாணை வெளியிட்டுள்ளதால் நீண்டகால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழக அரசு அறிமுகப் படுத்தியது. அதற்காக ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது. திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆனபின்பும் இதில் சேர்ந்த யாராலும் ஓய்வூதியம் பெற முடியவில்லை.
ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆசிரியர், அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்.,19அன்று, தமிழக முதல்வர், சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து, ஓய்வு பெற்ற மற்றும்ராஜினாமா செய்த, மரணம் அடைந்த, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு தொகை உடனடியாக வழங்கப்படும் என அறிவித்தார். இதனை தொடர்ந்து, பிப்.,22ல் அன்று தமிழக அரசின் நிதித்துறை சார்பில், அரசாணை எண்-59 வெளியிடப்பட்டுள்ளது.
இத்தொகையை பெற, கணக்கு மற்றும் கருவூலத்துறை இயக்குநர் அலுவலகத்தில், விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் கிடைத்த ஒரு மாத காலத்திற்குள் தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான கணக்கு தலைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தொகை அனைத்தும் மின் பரிவர்த்தனை மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் கடந்த பல ஆண்டுகளாக நீடித்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த திண்டுக்கல் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது இந்த அரசாணையால், ஓய்வூதியம் குறித்த சர்ச்சைக்கு தற்காலிக தீர்வு மட்டுமே கிடைத்துள்ளது. நிரந்தர தீர்வு வேண்டுமெனில் தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்தவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், என்றார்.
பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு... 15 நிமிடம் தாமதமானால் தேர்வு எழுத முடியாது
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு, 15 நிமிடங்கள் தாமதமாக வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது' என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. இதற்கான விதிமுறைகளை, சுற்றறிக்கையாக ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது.
அதில், மாணவர்கள் குறித்த நேரத்திற்கு தேர்வு அறைக்கு வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.காலணிக்கு தடை
*பிளஸ் 2 தேர்வு அறைக்குள், மாணவர்கள் தங்கள் உடைமை களை கொண்டு செல்லக் கூடாது; தேர்வு அறை முன்பும் வைத்திருக்க கூடாது. தேர்வு மைய வளாகத்தில் ஒதுக்கப்பட்ட அறைகளில் உடைமைகளை வைக்கலாம்
* தேர்வு அறைக்கு அலைபேசி மற்றும் தடை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வரக் கூடாது*பிட் அடித்தல், காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்
*தேர்வு அறைக்குள் காலணிகள் அணிந்து வரக்கூடாது. காலணிகளை வெளியே கழற்றி வைத்த பிறகே, தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர்
*தேர்வு அறைக்கு, 15 நிமிடம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கிடையாது. இவ்வாறு தேர்வுத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Wednesday, February 24, 2016
முன் பதிவில்லா ரெயில் டிக்கெட்டுகளுக்கு புதிய விதிமுறை: மார்ச் 1-ந் தேதி முதல் அமல்
ரெயிலில் சாதாரண வகுப்பில் (முன் பதிவு இல்லாத டிக்கெட்டில்) பயணம் செய்கிறவர்களுக்கு இதுவரை எந்த விதிமுறையும் இல்லாமல் இருந்து வந்தது. இப்போது அதில் ரெயில்வே கடிவாளம் போடுகிறது. 199 கி.மீ. வரையிலான இடங்களுக்கு ரெயிலில் முன்பதிவில்லா டிக்கெட்டுகள் வாங்கி பயணம் செய்கிறவர்களுக்கு புதிய விதிமுறையை ரெயில்வே அறிமுகம் செய்கிறது. அதன்படி, எந்த இடத்தில் இருந்து பயணத்தை தொடங்க வேண்டுமோ அந்த இடத்தில் இருந்து டிக்கெட் வாங்கிய 3 மணி நேரத்தில் பயணத்தை தொடங்கி விட வேண்டும் அல்லது நீங்கள் போக வேண்டிய இடத்துக்கான முதல் ரெயிலில் பயணத்தை தொடங்கி விட வேண்டும்.
இவ்விரண்டில் எது தாமதமாக நேருகிறதோ அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 199 கி.மீ., தொலைவிலான இடத்துக்கு சென்று விட்டு, அங்கிருந்து திரும்பி வருவதற்கு முன்கூட்டியே டிக்கெட் பெறும் முறை வாபஸ் ஆகிறது. இந்த விதிமுறைகள் மார்ச் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் மாணவர்கள் கல்வி கட்டணம் எவ்வளவு? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் நர்சரி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 1–வது வகுப்பு முதல் 8–வது வகுப்பு வரை ஏழை மாணவர்கள் உள்ளிட்டவர்கள் 25 சதவீதம் பேர் கட்டணம் இன்றி சேர்க்கப்படுகிறார்கள். அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அந்த பள்ளிகளுக்கு அரசு செலுத்துகிறது.
அந்த வகையில் 2015–2016 கல்வி ஆண்டுக்கு மலைப்பகுதிகளில் 1–வது வகுப்புக்கு ஒரு மாணவருக்கு ரூ.23 ஆயிரத்து 805 என்றும் 8–வது வகுப்பு படிக்கும் மாணவருக்கு ரூ.31 ஆயிரத்து 49 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதி இல்லாத மற்ற பகுதிகளில் 1–வது வகுப்பு மாணவருக்கு ரூ.23 ஆயிரத்து 575 என்றும், 8–வது வகுப்புக்கு ரூ.30 ஆயிரத்து 764 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்படி பிற வகுப்புகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டார். அவர் அறிவித்துள்ள இந்த கட்டணம், அரசு தனியார் பள்ளிகள் நிர்ணயித்த கட்டணம் ஆகிய இரண்டில் எது குறைவாக உள்ளதோ அந்த கட்டணம், பள்ளிக்கு கொடுக்கப்படும்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் மாணவர்கள் கல்வி கட்டணம் எவ்வளவு? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் நர்சரி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 1–வது வகுப்பு முதல் 8–வது வகுப்பு வரை ஏழை மாணவர்கள் உள்ளிட்டவர்கள் 25 சதவீதம் பேர் கட்டணம் இன்றி சேர்க்கப்படுகிறார்கள். அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அந்த பள்ளிகளுக்கு அரசு செலுத்துகிறது.
அந்த வகையில் 2015–2016 கல்வி ஆண்டுக்கு மலைப்பகுதிகளில் 1–வது வகுப்புக்கு ஒரு மாணவருக்கு ரூ.23 ஆயிரத்து 805 என்றும் 8–வது வகுப்பு படிக்கும் மாணவருக்கு ரூ.31 ஆயிரத்து 49 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதி இல்லாத மற்ற பகுதிகளில் 1–வது வகுப்பு மாணவருக்கு ரூ.23 ஆயிரத்து 575 என்றும், 8–வது வகுப்புக்கு ரூ.30 ஆயிரத்து 764 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்படி பிற வகுப்புகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டார். அவர் அறிவித்துள்ள இந்த கட்டணம், அரசு தனியார் பள்ளிகள் நிர்ணயித்த கட்டணம் ஆகிய இரண்டில் எது குறைவாக உள்ளதோ அந்த கட்டணம், பள்ளிக்கு கொடுக்கப்படும்.
மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க புதிய திட்டம்: தமிழகத்தில் துவக்கம்
பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க மத்திய அரசின் புதிய திட்டமான 'ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்' திட்டம் தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு மத்திய மனித வளத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது. அதற்காக பல்கலைகள், பள்ளி நிர்வாகத்துடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது.இதனால் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் அனைவருக்கும் தேசிய கண்டுபிடிப்பு இயக்கத்தை (ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்) அறிமுகம் செய்தது. டில்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த திட்டம் ஏற்கனவே ஐந்து மாதங்களுக்கு முன் அறிமுகமாகியது. தமிழகத்தில் நேற்று 18 கல்வி மாவட்டங்களில் துவங்கப்பட்டது. இதன்மூலம் இளம் விஞ்ஞானிகளாக மாணவர்கள் உருவாக்கப்பட உள்ளனர். இதுதவிர அறிவியல், கணித பாடங்களில் மாணவர்களுக்கு ஈடுபாட்டை அதிகரிப்பது, கண்டுபிடிப்பு திறன்களை வெளிக்கொணர்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் உள்ளன.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் துவங்கப்பட்டது. நேற்று திண்டுக்கல் சின்னாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் துவக்க விழா நடந்தது. இதில் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் மேரி தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் வேளாங்கன்னி ஒருங்கிணைப்பாளர்கள் சேசுராஜா பயாஸ், ராஜா முன்னிலை வகித்தனர்.சேசுராஜாபயாஸ் கூறியதாவது:
கணிதம், அறிவியல் கற்பித்தலில் எளிமையும், மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும் இந்த திட்டம் பயனளிக்கும். இதன்மூலம் புதிய கண்டுபிடிப்பாளர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம், என்றார்.
Monday, February 22, 2016
பொது தேர்வெழுதும் மாணவர்களுக்கு 'செக்': தேர்வு துறை நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு
அரசு பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவதற்காக, மாணவர்கள் சில குறுக்கு வழிகளை கடைபிடிக்கின்றனர். இதை தடுக்கும் வகையில், தேர்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள், 'சென்டம்' எனப்படும், 100 சதவீத மதிப்பெண் பெறுவதற்காக, கடும் முயற்சி எடுக்கின்றனர். தேர்வெழுதும் போது, அதில் சில வினாக்களுக்கு விடை தெரியாவிட்டால், அவர்கள் எழுதிய விடைத்தாள் முழுவதிலும், குறுக்கு கோடிட்டு அடித்து விடுகின்றனர்.இதன் மூலம், அவர்கள் அந்த குறிப்பிட்ட பாடத்தில், 'பெயில்' ஆவதால், உடனடி தேர்வெழுதி, அதில் சென்டம் பெற முயற்சிக்கின்றனர்.
மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்ப்பதற்காக, பிளஸ் 2 மாணவர்களை சென்டம் எடுக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும், 'டுடோரியல்' நிறுவன ஆசிரியர்கள், இது போன்ற, 'ஐடியா'க்களை தருகின்றனர்.மாணவர்களின் இந்த குறுக்கு வழியை தடுக்கும் வகையில், தேர்வுத் துறை, அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 'மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதிவிட்டு, அந்த விடைத்தாளை குறுக்கு கோடிட்டு, முழுவதுமாக அடித்து விட்டால், அது ஒழுங்கீனமாகக் கருதப்படும். இந்த ஒழுங்கீனத்தில் ஈடுபடும் மாணவர்கள், அடுத்து வரும், இரண்டு பருவத்துக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.இதற்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, பெற்றோர் கூறியதாவது: தேர்வுத் துறை விதிகள் என்ன என்பதை, எந்த பெற்றோருக்கும் தெரிவிப்பதில்லை. எந்த அடிப்படை தகவல்களையும் இணையதளத்தில் வைக்கவில்லை. தேர்வு கால அட்டவணையை கூட பதிவேற்றம் செய்யவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அடிப்படை தகவல்களை, பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த நிலையில், எந்த விதியையும் பின்பற்றாமல், யாரிடமும் கருத்து கேட்காமல், புதிய தண்டனை விவரங்களை தன்னிச்சையாக அறிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை, உடனே வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு பெற்றோர் கூறினர்.'கிரிமினல்கள் போல் பார்ப்பதா?'தமிழ்நாடு பெற்றோர், மாணவர் நல சங்க தலைவர் எஸ்.அருமை நாதன் கூறியதாவது: தேர்வுத் துறை தன் விதிகளை, அனைவருக்கும் தெரியும்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம்.
அதே போல், மாணவர்களுக்கு முன்கூட்டியே விதிகளை அறிவிக்க வேண்டும். ஆனால், எந்த பள்ளியிலும் மாணவர்களுக்கு, விதிகளை விளக்கமாக எழுத்து மூலம் காட்டியது இல்லை. 'விடைத்தாளை அடித்தால், இரண்டு பருவங்களுக்கு தேர்வு எழுத தடை' என்ற அறிவிப்பு, மாணவர்களை விபரீத உணர்வுகளுக்கு கொண்டு செல்லும். மாணவர்களை கிரிமினல்களை போல் பார்க்கும் மனப்போக்கை தேர்வுத் துறை மாற்ற வேண்டும்.