இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, January 03, 2016

பிப்.5-இல் கோவில்பட்டியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநாடு.திரிபுரா மாநில முதல்வர் பங்கேற்கிறார்


தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 6-ஆவது மாநில மாநாடு கோவில்பட்டியில் பிப்ரவரி 5-இல் தொடங்குகிறது. இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் மோசஸ், பொது செயலாளர் பாலச்சந்தர் ஆகியோர் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஆசிரியர், மாணவர்களின் நலன், கல்வி நலன், சமுதாய நலன், தேசிய நலன்களுக்காக பாடுபட்டு வரும் இந்த அமைப்பின் மாநில மாநாடு பிப்ரவரி 5, 6, 7 ஆகிய 3 நாள்கள் கோவில்பட்டி நடைபெறுகிறது. முதல் 2 நாள்கள் பிரதிநிதிகள் மாநாடும், மூன்றாம் நாள் முற்பகல் பெண் ஆசிரியர்கள் மாநாடும், பிற்பகலில் ஆசிரியர்களின் பேரணியும் நடைபெறும். தமிழகத்தின் புகழ் பெற்ற கல்வியாளர்கள், தொழிற்சங்கங்களின் தலைவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் இயக்கங்களின் நிர்வாகிகள், தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் பேசுகின்றனர்.

தமிழகம் முழுவதிலும் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சர்க்கார் கலந்துகொண்டு பேசுகிறார் என்றனர்.

ESI recruitement.notification

Click below

https://app.box.com/s/g9gpdmmxziooom27kizq7w15nvedxaig

Saturday, January 02, 2016

PONGAL bonus anounced

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் : முதல்வர் அறிவிப்பு
சென்னை : பொங்கல் பண்டிகையையொட்டி, சி மற்றும் டி பிரிவு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, போனஸ் அறிவி்ததுள்ளார்.
A&B -1000/-
C&D-3000/-

CBSE exam dates

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச் 1-ம் தேதி இரு பாடப் பிரிவினருக்கும் தேர்வுகள் தொடங்குகின்றன.

10-ம் வகுப்பினருக்கு மார்ச் 28-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பினருக்கு ஏப்ரல் 22-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.தேர்வு அட்டவணை http://cbse.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்அனுமதி பெறாத ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க முடிவு


முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கு தகுந்தாற்போல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர்கள், இளநிலை (பி.ஏ.,- பி.எஸ்சி.,) பட்டத்துடன் பி.எட்., முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும். முதுநிலை பட்டம் (எம்.ஏ.,- எம்.எஸ்.சி.,) முடித்தால் 2 வது ஊக்க உயர்வு வழங்கப்படும்.

அதேபோல் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டம் (எம்.ஏ.,- எம்.எஸ்சி.,) முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்.எட்., முடித்தால் 2 வது ஊக்க உயர்வும் வழங்கப்படும். உயர்க்கல்வி பயில ஆசிரியர்கள் கல்வித்துறையில் முன் அனுமதி பெறவேண்டும். ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாமலேயே உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு கேட்டு விண்ணப்பித்தனர். முன்அனுமதி இல்லாத தால் ஊக்க ஊதிய உயர்வு வழங்க மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மறுத்தனர்.

ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முன்அனுமதி பெறாமல் உயர்க்கல்வி முடித்த ஆசிரியர்களின் பட்டியலை தொடக்கக் கல்வித்துறை கோரியுள்ளது. இந்த பட்டியலை பெயர் விடுதலின்றி ஜன., 12 க்குள் அனுப்பி வைக்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் வசம் செல்கிறது பள்ளி கழிப்பறை சுத்தம்


உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் உள்ள, 35 ஆயிரம் அரசு பள்ளிகளின், கழிப்பறை பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு, 57 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பின் பராமரிப்பில், 27 ஆயிரத்து, 700 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள்; கல்வித் துறையின் கீழ், 7,247 பள்ளிகள் என மொத்தம், 34 ஆயிரத்து, 947 பள்ளிகள் உள்ளன.

பற்றாக்குறைஉள்ளாட்சி அமைப்புக்களில் உள்ள துப்புரவு பணியாளர்களே இப்பள்ளிகளின், கழிப்பறைகளை சுத்தம் செய்கின்றனர்.'உள்ளாட்சி அமைப்பில் உள்ள, 24 ஆயிரத்து, 928 முழுநேர துப்புரவு பணியாளர்கள், பிற துப்புரவு பணிகளுக்கு மத்தியில், பள்ளிக் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள முடியாமல்உள்ளனர். எனவே, பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய, தனியாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்' என, திடக்கழிவு மேலாண்மை மற்றும் துாய்மை இந்தியா திட்ட விதிகள் வலியுறுத்துகின்றன. இதை தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புக்களின் பராமரிப்பில் உள்ள பள்ளிகளுக்கு, துப்புரவு பணியாளர்களை நியமிப்பது குறித்து, தமிழக அரசின், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை வெளியிட்டுள்ள உத்தரவு:

பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியை, தனியார் முகமைகளிடம் ஒப்படைக்கலாம். அல்லது, முழுநேரம் மற்றும் பகுதி நேர துப்புரவு பணியாளர்களை உள்ளாட்சி அமைப்புகள் நியமிக்கலாம். பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய தேவைப்படும் துப்புரவுப் பணியாளர் எண்ணிக்கையை, உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்யலாம். துப்புரவு பணியாளர் வருகை பதிவேட்டை, பள்ளி தலைமை ஆசிரியர் பராமரிக்க வேண்டும். கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்களை, உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டும்.சுகாதார உத்தரவாதம்இதற்கான செலவை, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள், திடக் கழிவு மேலாண்மை திட்ட நிதியில் இருந்தும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கல்வி வரி மூலமும் ஈடுகட்டலாம்.

2015 - 16ல், கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கான பொருட்கள் வாங்க, 17 கோடி ரூபாயும், துப்புரவுப் பணியாளர் ஊதியத்துக்காக, 40 கோடி ரூபாயும் என ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.இதுகுறித்து, உள்ளாட்சி துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளி கழிப்பறைகளை துாய்மையாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். பல நேரங்களில், பள்ளி கழிப்பறைகளிலிருந்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. உள்ளாட்சி அமைப்பில் போதிய, துப்புரவுப் பணியாளர் இல்லாத நிலையில், துாய்மைப் பணியை தனியாரிடம் அளிக்க அரசு முன் வந்துள்ளது. இத்திட்டம் மூலம், குழந்தைகளின் சுகாதாரம் பாதுகாக்கப்படும். உள்ளூர் துப்புரவுப் பணியாளர்களுக்கும் வேலை கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

SLAS study material ,model question paper and answer

Click below

http://doozystudy.blogspot.in/p/slas.html?m=1

இளம் மழலையர் பள்ளி விதிகள்

இளம் மழலையர் பள்ளி விதிகள்

தமிழகத்தில் குழந்தைகளுக்கான பிளே ஸ்கூல் துவங்குவதற்கான புதிய விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அரசு அறிவிப்பில், “இளம் மழலையர் பள்ளிகள் எனப்படும் பிளேஸ்கூல் விதி தொகுப்பு-2015 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து 6 மாதத்துக்குள் இந்த பள்ளிகளுக்கான அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். விதிகளில் கூறப்பட்டுள்ள தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றால், அந்த பள்ளிகளை மூட உத்தரவிடப்படும்.

3 ஆண்டுகளுக்கு மட்டுமே:
******************************************
அங்கீகாரம் அளிப்பது மற்றும் புதுப்பித்தலுக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி தான் பொறுப்பு அதிகாரி. இந்த அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன் பின்னர் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். விதிகளுக்கு முரணாக நடந்து கொள்ளும் பள்ளிகளின் அங்கீகாரத்தை திரும்பப்பெற அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.

தரைத்தளத்தில் வகுப்புகள்:
*****************************************
இந்த பள்ளி கட்டிடங்கள் சொந்த கட்டிடமாகவோ, 5 ஆண்டுகளுக்கு குறையாமல் குத்தகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடமாகவோ இருக்க வேண்டும். அவை கான்கிரீட் கட்டிடங்களாகவும், சுற்றுச்சுவருடன் இருக்க வேண்டும். வகுப்பறை குழந்தைகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு தரைதளத்தில் மட்டும் இருக்க வேண்டும்.

2 நுழைவுவாயில்கள்:
*********************************
வகுப்பறை கதவுகள், ஜன்னல்கள் எளிதில் தீப்பிடிக்காத பொருட்களாலும், வெளிப்பக்கம் திறப்பதாகவும் இருக்க வேண்டும். வகுப்பறைகளுக்கு 2 நுழைவுவாயில்கள் இருக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமரா அவசியம்:
***********************************************
கழிவறை, குடிநீர், விளையாட்டு மைதானம் ஆகியவை சரியான முறையில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். குப்பைத்தொட்டி, அதிக ஒலி எழுப்பும் போக்குவரத்து சாலைகள், தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றின் அருகே பள்ளிகள் இருக்கக்கூடாது. பள்ளி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் இருக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி:
***************************************************
ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் அதிலும் பெண் ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட வேண்டும். ஆசிரியை பிளஸ் 2 படித்து, டி.டி.எட், டி.எட், ஹோன் சயின்ஸ் ஆகியவற்றுக்கான பட்டயப்படிப்பு படித்து இருக்க வேண்டும் அல்லது ஹோம் சயின்சில் பட்டம், பி.எட், குழந்தைகள் படிப்புக்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

வகுப்பு 15 குழந்தைகள் மட்டுமே:
************************************************
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 ஆம் தேதியுடன் 1 வயது 6 மாதத்தினை பூர்த்தி செய்த குழந்தைகளை மட்டுமே சேர்க்க வேண்டும். பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் வயது 1 வயது 6 மாதம் முதல் 5 வயது 6 மாதம் வரை இருக்கலாம். ஒரு வகுப்புக்கு 15 குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். குழந்தைகள் அனுமதிக்கான நுழைவுத்தேர்வு எழுத்து வடிவிலோ, வாய்வழியாகவோ இருக்கக்கூடாது

சரியான நேர பராமரிப்பு:
************************************
பள்ளி நடக்கும் ஒவ்வொரு பகுதி நேரமும் 3 மணி நேரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு பகுதி நேரத்தில் படிக்கும் குழந்தைகள் அடுத்த பகுதி நேரத்தில் சேர்க்கக்கூடாது. காலை 9.30 மணிக்கு முன்பாக பள்ளிகளை திறக்கக்கூடாது. மாலை 4.30 மணியுடன் நிறைவு செய்துவிட வேண்டும்.

பாதுகாப்பு கருவிகள் அவசியம்:
***********************************************
பெற்றோரின் ஒப்புதலின்படி, பள்ளியில் குழந்தைகளுக்கு உணவு, சிற்றுண்டி வழங்கப்பட வேண்டும். முதலுதவி பெட்டி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். குழந்தைகள் தண்டிக்கப்பட்டால், அந்த பள்ளி மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி பஸ், வேன் மற்றும் ஆட்டோக்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்க வேண்டும். வாகனங்களின் பராமரிப்புகளை அடிக்கடி பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். டிரைவருடன் ஒரு உதவியாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, January 01, 2016

கூடுதல் ஊதியம் பெற்ற ஆசிரியர்கள் வசூலிக்க கல்வித்துறை உத்தரவு

கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் பெற்ற ஆசிரியர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 2011 ஜன.,1 க்குப்பின், தனிஊதியமாக 750 ரூபாய் வழங்கப்படுகிறது. அவர்கள் பதவி உயர்வு பெறும்போது அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியமான 750 ரூபாயை சேர்த்து கணக்கிட வேண்டும்.

ஆனால் பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களான சிலருக்கு அடிப்படை ஊதியத்துடன் 750 ரூபாய் சேர்த்தது போக, மீண்டும் தனிஊதியமாக 750 ரூபாய் வழங்கப்படுகிறது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனருக்கு புகார் சென்றது.இதையடுத்து அவர் பிறப்பித்த உத்தரவு:இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதிக்கப்படும் தனி ஊதியம் 750 ரூபாயை ஆண்டு ஊதிய உயர்வு, அகவிலைப்படி, ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ளலாம். மேலும் பதவி உயர்வு பெறும்போது அடிப்படை ஊதியத்துடன் 750 ரூபாயை சேர்த்து கணக்கிட வேண்டும். அதன்பின் தனி ஊதியமாக 750 ரூபாய் வழங்க கூடாது. ஏற்கனவே வழங்கியவர்களுக்கு அவற்றை ஊதியத்தில் பிடிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு


மிலாதுன் நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்றே, மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்களை வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.ஆண்டுதோறும், பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து, மிலாதுன் நபி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை விடப்படும்.

ஆனால், இந்த ஆண்டு மழை, வெள்ள பாதிப்பால் அரையாண்டு தேர்வு, ஜனவரி மாதத்துக்கு தள்ளி போடப்பட்டது. ஆனால், வழக்கம் போல் பண்டிகை கால விடுமுறை டிச., 24 முதல் அறிவிக்கப்பட்டது. நேற்றுடன் விடுமுறை முடிந்து, இன்று அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.இன்று பள்ளிகள் திறந்ததும், 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும், மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அத்துடன், மூன்றாம் பருவ பாடங்களையும் நடத்த, ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Thursday, December 31, 2015

SLAS FLASH NEWS: PRIMARY SLAS BLOCK/ DISTRICT WISE SHOOL LIST AND INVIGILATORS NAME LIST FOR TAMIL NADU STATE

Click below

https://sites.google.com/site/goteachertn/primary%20slas.pdf?attredirects=0&d=1

SLAS FLASH NEWS: PRIMARY/ UPPER PRIMARY SLAS BLOCK/ DISTRICT WISE SHOOL LIST AND INVIGILATORS NAME LIST FOR TAMIL NADU STATE

Click below

https://sites.google.com/site/goteachertn/upper%20primary%20slas1.pdf?attredirects=0&d=1

‘பான்’ எண் கட்டாயம் இன்று முதல் அமல் ‘பான்’ எண் இல்லாதவர்கள் தவறான தகவல் அளித்தால் 7 ஆண்டு ஜெயில் மத்திய அரசு எச்சரிக்கை


குறிப்பிட்ட தொகைக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ‘பான்’ எண் கட்டாயம் என்ற நடைமுறை இன்று அமலுக்கு வருகிறது. ‘பான்’ எண் இல்லாதவர்கள், தவறான தகவலை அளித்தால், 7 ஆண்டுவரை கடுங்காவல் தண்டனை அளிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.பான் எண் கட்டாயம் வருமான வரித்துறை சார்பில் பொதுமக்களுக்கு நிரந்தர கணக்கு எண் (பான்) அளிக்கப்படுகிறது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மட்டுமின்றி, சொத்து பரிவர்த்தனைகளுக்கும் இந்த எண் கேட்கப்படுகிறது.உள்நாட்டில் கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்தவும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இதில் மேலும் பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. ஓட்டல் பில்தொகை, வெளிநாட்டு விமான பயண டிக்கெட் ஆகியவற்றுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்தினால், ‘பான்’ எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

இன்று அமல் ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினாலோ, ரூ.10 லட்சத்துக்கு மேல் அசையா சொத்துகள் வாங்கினாலோ, கேஷ் கார்டுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்தினாலோ, பட்டியலிடப்படாத கம்பெனிகளின் பங்குகளை ரூ.1 லட்சத்துக்கு மேல் வாங்கினாலோ ‘பான்’ எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் என்று அறிவித்தது. இவை உள்பட மொத்தம் 20 பரிவர்த்தனைகளுக்கு ‘பான்’ எண் கட்டாயம் ஆக்கப்பட்டது.இந்த நடைமுறை, இன்று அமலுக்கு வருகிறது.படிவம் இந்நிலையில், ‘பான்’ எண் இல்லாதவர்கள், தவறான தகவலை அளித்தால், 7 ஆண்டுவரை ஜெயில் தண்டனை அளிக்க வருமான வரி சட்டத்தில் வழிமுறை இருப்பது தெரியவந்துள்ளது.‘பான்’ எண் இல்லாதவர்கள், ‘பான்’ எண் கட்டாய வரம்புக்குள் பரிவர்த்தனை செய்தால், அவர்கள் ‘படிவம் எண்–60’–ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது.

ஒரே பக்கம் கொண்ட அந்த படிவத்தில், அந்த நபரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, செல்போன் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களையும், ரொக்கம், காசோலை, கார்டு, வரைவோலை, ஆன்லைன் பரிமாற்றம் போன்றவற்றில் எந்த வழிமுறையில் அவர் பரிவர்த்தனை செய்தார் என்ற விவரத்தையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.அவரது மொத்த வருமான விவரமும், படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும். விவசாய வருமானமும், விவசாயம் அல்லாத வருமானமும் பூர்த்தி செய்யும்வகையில், தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். ‘ஆதார்’ எண் நிரப்ப தனிஇடம் இருக்கும்.அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரத்தையும் (ஆதார், வாக்காளர் அட்டை போன்றவை) இணைக்க வேண்டும்.7 ஆண்டுவரை ஜெயில் இப்படி ‘பான்’ எண் இல்லாதவர்கள் பூர்த்தி செய்த படிவம் எண் 60–ல் ஏதேனும் தவறான, பொய்யான விவரங்கள் இடம்பெற்று இருந்தால், அவர்கள் மீது வருமான வரி சட்டம் 277–வது பிரிவின்கீழ் வழக்கு தொடர வருமான வரித்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பொய் தகவல்கள் இடம்பெற்றது நிரூபணமானால், அவர்கள் வரி ஏய்ப்பு செய்ய இருந்த தொகை ரூ.25 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்களுக்கு அபராதத்துடன் 6 மாதம் முதல் 7 ஆண்டுவரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.அவர்கள் வரி ஏய்ப்பு செய்ய நினைத்த தொகை, ரூ.25 லட்சத்துக்கு உட்பட்டு இருந்தால், அவர்களுக்கு அபராதத்துடன் 3 மாதம் முதல் 2 ஆண்டுவரை கடுங்கால் தண்டனை விதிக்கப்படும்.இத்தகவல்களை வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அரசுப் பள்ளிகளில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடம்!


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் தொடர வேண்டும். இதற்கான ஆசிரியர்களையும் நியமித்து தனியார் பள்ளிகளுக்கு ஈடாக மாணவர்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் சமச்சீர் கல்வி செயல்படுத்தப்பட்டு வருகிறது. முப்பருவ கல்வி முறையில் பாடப் புத்தகங்களைப் பிரித்து வழங்கி, மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்தும் நடவடிக்கையை கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், கணினித் தொழில்நுட்பங்கள் தொடர்பான பாடத் திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி, சிபிஎஸ்இ பாடத் திட்டங்களில் ஆரம்பக் கல்வி முதல் கணினி அறிவியல் கற்பிக்கப்படுகிறது. பிற மாநிலங்களில் கணினி அறிவியல் கட்டாயப் பாடமாக உள்ளது. கேரளத்தில் பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல் போன்று கணினி அறிவியலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. கைவிடப்பட்ட கணினி பாடம்: தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்ட போது, 6ஆம் வகுப்பு தொடங்கி 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்காக புத்தகங்கள் அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

ஆனால், ஓராண்டிலேயே திடீரென கணினி அறிவியல் பாடம் கைவிடப்பட்டது. கணினி அறிவியல் பாடம், கடந்த 2004 முதல் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 1,200 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், அங்கு கணினி அறிவியல் பாடம் கொண்டு வரப்படவில்லை. கணினி அறிவியல் ஆய்வகங்கள் இருந்தும் பாடத் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. கணினி அறிவியல் பாடத்துக்கும் நீண்ட காலமாகப் போதிய ஆசிரியர்கள் நியமிக்காமல் பகுதி நேர ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் வேதனை: இதுகுறித்து கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலச் செயலர் வெ.குமரேசன் கூறியதாவது:

மேல்நிலைப் படிப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை ஏராளமான மாணவர்கள் விரும்பித் தேர்வு செய்து படிக்கின்றனர். ஆனால், தமிழக அரசுப் பள்ளிகளில் உயர்நிலை வரை கணினி அறிவியல் பாடம் இல்லாமல் உள்ளது. சமச்சீர் கல்வித் திட்டத்தில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தைக் கொண்டு வந்து பல கோடி ரூபாய் செலவிட்டு புத்தகங்களை அச்சிட்டு வழங்கினர். ஆனால், அவை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பயன்பாடின்றிக் கிடக்கின்றன. தமிழகத்தில் 5,000-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் உள்ள நிலையில், 2,000 பள்ளிகளில் மட்டுமே கணினி அறிவியல் பாடத் திட்டம் உள்ளது. இதற்காக, கடந்த 2004ஆம் ஆண்டில் 1,800 கணினி ஆசிரியர்களையும், அதன் பின்னர் 2010-இல் 190 ஆசிரியர்களை மட்டுமே தேர்வு செய்தனர். அதன்பின்னர், மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட 2,000 பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தைக் கொண்டு வரவில்லை.

அண்மையில், மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட 400 பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடம் இல்லை. 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட கணினிகளும், ஆசிரியர்கள் இல்லாமல் முடங்கிய நிலையில்தான் உள்ளன. மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்துக்கு பகுதி நேர ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தும் நிலை உள்ளது. அதிமுக அரசு பொறுப்பேற்றதும் படிப்படியாக கணினிப் பாடம் கொண்டு வரப்படும்; ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல முறை அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் பயனில்லை. புதிய கல்விக் கொள்கை, மின்யுக இந்தியா (டிஜிட்டல் இந்தியா) திட்டத்தில் கணினி அறிவியல் பாடத் திட்டத்தை ஆரம்பப் பள்ளி முதலே கட்டாயமாகக் கொண்டு வர வேண்டும். பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும். பி.எட்., கணினி அறிவியல் முடித்துள்ள 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார் அவர். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தற்போதைய சூழலில் கணினிப் பாடம் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பிரிவு உள்ளது. தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் அரசு நிர்ணயித்து அனுப்பும் பாடப் பிரிவுகளையே நடத்தி வருகிறோம். இதுகுறித்து அரசு தரப்பில்தான் முடிவெடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.