இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, December 07, 2015

டில்லி அரசுப் பள்ளிகளில் 9,623 கூடுதல் ஆசிரியர்கள்: ஆன்லைன் மூலம் பணியிடங்களை நிரப்ப முடிவு


அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 9,623 ஆசிரியர் பணியிடங்களை இணையவழி (ஆன்லைன்) தேர்வு மூலம் நிரப்ப தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

இதன்மூலம், பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், நூலகர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதால் ஆண்டுதோறும் அரசுக்கு ரூ.540 கோடி கூடுதல் செலவு ஆகும் என தில்லி அரசு கூறியுள்ளது. இது குறித்து தில்லி அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் பற்றி முன்மொழிவு ஒன்றை அண்மையில் கல்வித் துறை தாக்கல் செய்தது. அதில் அரசுப் பள்ளிகளில் முதல்வர்-25, துணை முதல்வர்-365, பட்ட மேற்படிப்பு முடித்த ஆசிரியர்கள்-4,940, தொழில்நுட்பக் கல்வி ஆசிரியர்கள்-2,933, உடற்கல்வி ஆசிரியர்கள்-860, ஓவிய ஆசிரியர்கள்-256, நூலகர்கள்-38, ஆய்வக உதவியாளர்கள்-208 என மொத்தம் 9,623 பணியிடங்களை உருவாக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த முன்மொழிவுக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்-மாணவர் விகிதாசாரப்படி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் இணைய வழியில் (ஆன்லைன்) நிரப்பப்படும். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் இந்திய கல்வி ஆலோசனை நிறுவனம் (இடிசிஐஎல்) மூலம் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இணைய வழித் தேர்வு நடத்த ஏதுவாக அதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகளை, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் உள்ள கல்வி மையங்களில் உருவாக்கும் பணியை இந்நிறுவனம் மேற்கொள்ளும். கூடுதல் ஆள்களை நியமித்துக்கொள்ளவும் அந்நிறுவனத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் தில்லி கல்வித் துறையின் கீழ் ஒப்பந்த ஆசிரியர்களாக இருப்பவர்கள் பங்கேற்றால், அவர்களின் பணி அனுபவம், வயது அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்வில் "அனைவருக்கும் கல்வி' திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒப்பந்த ஆசிரியர்களும் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் மூலம் ஆண்டுதோறும் அரசுக்கு ரூ.540 கோடி கூடுதல் செலவு ஏற்படும். எனினும், தேர்வு நடத்தி புதிய பணியிடங்களை நிரப்புவதற்கு, நிகழாண்டில் மட்டும் ரூ.666 கோடியை ஒதுக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CPS இல் ஓய்வு பெற்றவருக்கு ஓய்வூதிய தொகை வழங்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு. தகவல்

ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
                                                                                                                                                                              ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஆசிரியர்
திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான், கடந்த 8.10.2007 அன்று திருச்சி மாவட்டம் மால்வோய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 31.5.2013 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் எனது சம்பளத்தில் இருந்து மொத்தம் 3 லட்சத்து 60 ஆயிரத்து 684 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

எனக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியத் தொகையை அனுமதிக்கும்படி பள்ளி தலைமை ஆசிரியர், தலைமை கணக்காயருக்கு திட்ட அறிக்கை அளித்தார்.

அரசின் பரிசீலனையில் உள்ளது

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசின் தகவல் தொகுப்பு விவர மையத்தின் (‘டேட்டா சென்டர்’) ஆணையர் கவனித்து வருவதாக கூறி, திட்ட அறிக்கையை, தகவல் தொகுப்பு விவர மையத்துக்கு தலைமை கணக் காயர் அனுப்பி வைத்தார்.

அதன்பின்பும், ஓய்வூதியத் தொகை வழங்கப்படாததால் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினேன். இதைத்தொடர்ந்து, எனக்கு ஓய்வூதிய தொகை வழங்குவது தொடர்பான விவகாரம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக நிதித்துறை துணைச்செயலாளர் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஓய்வூதியத் தொகை வழங்கப்படாததால் ஓய்வு காலத்தில் அன்றாட வாழ்க்கையை நடத்துவதில் மிகவும் சிரமமாக உள்ளது.ednnet.in எனவே, எனக்கு கிடைக்க வேண்டிய பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை, வட்டியுடன் சேர்த்து உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

2 மாதத்துக்குள் வழங்க வேண்டும்

இந்த மனு நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சேவியர்ரஜினி ஆஜராகி வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், மனுதாரருக்கு வழங்க வேண்டிய பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை தமிழக அரசின் நிதித்துறை செயலாளர், அரசின் தகவல் தொகுப்பு விவர மைய ஆணையர் ஆகியோர் 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், பங்களிப்பு ஓய்வூதியத் தொகை உரிய காலத்தில் வழங்கப்படாததால் அந்த காலதாமதத்துக்கு வட்டி வழங்குவது குறித்து வழக்கின் இறுதித் தீர்ப்பின் போது முடிவு செய்யப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

Saturday, December 05, 2015

கட்டணமின்றி சான்றிதழ்: பல்கலை அறிவிப்பு


வெள்ளத்தால் சான்றிதழ் தொலைந்து போனால், அதற்கு கட்டணமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்' என, சென்னைப் பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னைப் பல்கலை துணை வேந்தர் தாண்டவன் கூறியுள்ளதாவது:சான்றிதழ் தேவைப்படுவோர், சான்றிதழ் காணாமல் போனதற்கு அடையாளமாக, போலீசில் புகார் அளித்து, ஒப்புதல் சான்று பெற வேண்டும்.

மேலும், பகுதி கவுன்சிலரிடமும் சான்றிதழ் பெற வேண்டும். இந்த இரண்டையும் இணைத்து, 14ம் தேதிக்கு பின், சென்னைப் பல்கலை தேர்வுத் துறைக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.சென்னைப் பல்கலையின் தேர்வுகள், 12ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் காணாமல் போன மதிப்பெண் பட்டியல்களைப் பெறுவது எப்படி? ஆவணங்களைப் பெறுவது எப்படி?


மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எவ்வாறு மீண்டும் பெறலாம் என்பது குறித்து அரசுத் துறை அதிகாரிகள்
விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், உயிர் பிழைத்தால் போதும் என தப்பித்தவர்களின் உடைமைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. முக்கியமாக மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் இருந்த இடம்தெரியாமல் போயுள்ளன. இவற்றை மீண்டும் பெற முடியுமா என்பதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மதிப்பெண் பட்டியல்களைப் பெறுவது எப்படி? பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்களைப் பெற காவல் துறையினரிடம் புகார் அளித்து கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழை பெற வேண்டும். அதன்பிறகு முன்பு படித்த பள்ளி, கல்லூரி மூலம் விண்ணப்பம் பெற்று அதை பூர்த்தி செய்து, வட்டாட்சியரிடம் அளித்து, அசல் சான்றிதழ் மீண்டும் திருப்பப் பெற வாய்ப்பின்றி இழக்கப்பட்டது என்ற சான்றிதழை வாங்க வேண்டும்.

அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம், இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு, அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.

தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். பட்டப்படிப்பு, அதற்கு மேற்பட்ட உயர் கல்விச் சான்றிதழ்களுக்கு தொடர்புடைய பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

பதிவு எண் கட்டாயம்: சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பிக்கும்போது, தேர்வு எழுதிய பதிவு எண், ஆண்டு, மாதம் ஆகிய விவரங்களைக் கட்டாயம் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட வேண்டும். மாற்றுச் சான்றிதழ்களை புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்களை அணுகி கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

ஓட்டுநர் உரிமம்: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கிய பிறகு மாவட்ட போக்குவரத்து அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், பழைய ஓட்டுநர் உரிமத்தின் நகல் அல்லது எண்ணை அளிக்க வேண்டும்.

குடும்ப அட்டை: குடும்ப அட்டை தொலைந்துபோனால், கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கல் அலுவலர், நகரப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கல் துறை மண்டல உதவி ஆணையர் ஆகியோரை அணுக வேண்டும். பின்னர், சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் குடும்ப அட்டை காணாமல்போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் அளித்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அத்துடன், காணாமல்போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையின் நகலை இணைத்து அளிக்க வேண்டும்.

டெபிட் கார்டு: பற்று அட்டை (டெபிட் கார்டு) தொலைந்துபோனால், உடனே தொடர்புடைய வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் தெரிவித்து, பணப்பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும்.

பின்னர், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளரை அணுகி, கடிதம் மூலம் பற்று அட்டை தொலைந்ததை தெரியப்படுத்தி புதிய அட்டை வழங்குமாறு கோர வேண்டும். அப்போது, தங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும்.

பட்டா: வீட்டுமனைப் பட்டா தொலைந்துபோனால், முதலில் வட்டாட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அவரது பரிந்துரையின்பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா அளிக்கப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுமா?
சான்றிதழ்கள், ஆவணங்களைப் பெற சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த முகேஷ் கூறியதாவது:

மழை வெள்ளத்தால் பலரது வீடுகள் முழுவதும் மூழ்கிப் போயின. குடும்ப அட்டை, வங்கிப் பற்று அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அடித்துச் செல்லப்பட்டதால் அவசர தேவைக்கு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கக் கூட முடியவில்லை. அடித்துச் செல்லப்பட்ட அனைத்து ஆவணங்களையும் மீண்டும் திரும்பப் பெற எத்தனை நாள்கள் ஆகும் எனத் தெரியவில்லை. எனவே, அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

Friday, December 04, 2015

அலைபேசி 'சார்ஜ்' குறைவதை தவிர்ப்பது எப்படி


வெள்ளம் பாதித்த பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டுள்ளதால், அலைபேசிகளில் குறைந்த அளவே சார்ஜ் இருப்பதால், அதை பக்குவமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 'நெட்வொர்க் பிசி'யாக இருப்பதால், நினைத்தவுடன் யாருக்கும் போன் இணைப்பு கிடைப்பதில்லை. அதனால் பலர், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்புகின்றனர். அதிலும் சிக்கல் ஏற்பட்ட போது, பலருக்கு இணையதளம் செயல்பட்டு, 'வாட்ஸ் ஆப்' இயங்கியது.

அதனால், 'வாட்ஸ் ஆப், டுவிட்டர், பேஸ்புக்' மூலம் தகவல் பரிமாறினர்.பெரும்பாலானோர், 'ஸ்மார்ட் போன்' பயன்படுத்துவதால், அவர்களுக்கு அடிக்கடி வாட்ஸ் ஆப் மெசேஜ் வந்து அதிகளவில் சார்ஜ் இறங்கும்.அதை தவிர்க்க என்ன செய்யலாம்?

* ஸ்மார்ட் போனை, 'ப்ளைட் மோடு' எனப்படும் விதத்தில் மாற்றி வைத்தால், 'ஸ்விட்ச்' ஆப் செய்தது போல, பேட்டரியில் உள்ள மின் சக்தி சேமிக்கப்படும்

* 'செட்டிங்' சென்று, இன்டர்நெட் இணைப்பை, 'ஆப்' செய்து வைக்கலாம்* மொபைல் போனின் ஒரிஜினல் நெட்வொர்க்கை மாற்றி வைத்தாலும், 'சைலன்ட் மோட்' போல் பேட்டரி சேமிப்பாகும்; தேவைப்படும் போது மட்டும் தங்கள் நெட்வொர்க்கை மாற்றி வைத்து பயன்படுத்தலாம்

மாதிரி தேர்வான அரையாண்டு தேர்வுகள் கல்வி அதிகாரிகள் முடிவு


மழை பாதிப்பால் தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில், 'மாதிரி சிறப்பு தேர்வு' என்ற பெயரில் தேர்வு நடத்த கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.சென்னை உட்பட வட மாவட்டங்களில் மழை பாதிப்பால் பல நாட்களாக பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. டிச., 9ல் துவங்க இருந்த அரையாண்டு தேர்வுகளை தள்ளிவைத்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

ஆனால், மழை பாதிப்பில்லாத மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட தென் மாவட்டங்களில் 'மாதிரி தேர்வுகள்' என்ற பெயரில் டிச.,7 முதல் 23க்குள் தேர்வுகள் நடத்த முதன்மை கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, பத்து, பிளஸ் 1, பிளஸ் 2விற்கு மாதிரி வினாத்தாள் தயாரிக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வட மாவட்டங்களின் மழை பாதிப்பு அதிகம். பல நாட்கள் விடுமுறை விடப்பட்டன. பிற மாவட்டங்களில், பள்ளி வேலைநாட்களில் பாதிப்பில்லை. அனைத்து பாடமும் முடிக்கப்பட்டுள்ளன. மாதிரி அரையாண்டு தேர்வு என்ற பெயரில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது," என்றார்.

குழப்பம்

பத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2விற்கு, பொது வினாத்தாள் என்பதால் அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு அறிவிப்பு அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும். அந்தந்த மாவட்டம் சார்பில் நடக்கும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வுகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்துமா என அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இயக்குனர் அலுவலகத்தில் இருந்தும் தெளிவான அறிவுறுத்தல் இல்லை என தெரிவித்தனர்.

Tuesday, December 01, 2015

பிப்., 21ம் தேதிஆசிரியர் தகுதி தேர்வு


மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'சிடெட்' என்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். மாநில பள்ளிகளில் பணியாற்ற, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்தும், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இதில், மத்திய அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்களால், மாநில அரசு பள்ளிகளில் பணியில் சேர முடியும். வரும், 2016க்கான, 'சிடெட்' தேர்வுக்கு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் தேர்வு, பிப்., 21ம் தேதியும், இரண்டாவது தேர்வு, செப்., 18ம் தேதியும் நடக்கிறது. தமிழக அரசின், 'டெட்' தேர்வு, இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. எனவே, மத்திய அரசின் தேர்வில், தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகள், அதிக அளவில் பங்கேற்கலாம் என, தெரியவந்துள்ளது

அறிவியல் விருது தேதி நீட்டிப்பு


அறிவியல் நகரம் சார்பில், 2014ம் ஆண்டுக்கான, 'தமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருது' மற்றும், 'தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது' பெற, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், டிச., 4ம் தேதி வரை, அறிவியல் நகரத்தில் பெறப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கனமழை காரணமாக, காலக்கெடு, 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவம், விதி மற்றும் விவரம், அறிவியல் நகரம் இணையதளத்தில் www.sciencecitychennai.in \வெளியிடப்பட்டுள்ளது.

CTET exam

Central Teacher’s Eligibility Test- Feb 2016
IMPORTANT INFORMATION AT A GLANCE FOR CTET - FEB 2016
1.
a. Online Submission of application through 04.12.2015 to 28.12.2015 CTET website www.ctet.nic.in
b. Last date for payment of fee through E-challan 29.12.2015 (till 03:30 PM) or Debit/Credit Card by the candidate.
2. Period for Online Corrections in Particulars (No correction will be allowed in any particulars 30.12.2015 to 04.01.2016 after this date)
3. Final status of application Check the status of application and/or 30.12.2015 Particulars of candidate whose fee received
4. Download Admit Card from Board’s website 25.01.2016
5. Date of Examination 21.02.2016 Paper-II 09:30 to 12:00 PM** Paper-I 02:00 to 04:30 PM**
6. Centre of Examination As indicated on the Admit Card
7. Declaration of Results on or before. 06.04.2016
8. Dispatch of CTET Marks Statement/Certificate 05.05.2016 onwards
9. Material to be brought on the day of examination Downloaded Admit Card and One Photo ID proof (PAN Card, AADHAAR Card, Passport, Driving Licence, Voter ID card)
10. Rough Work All rough work should be done in the Test Booklet only.
www.ctet.nic.in

NMMS exam application&instruction -2015

Click below

https://app.box.com/s/3hp6cs7l8ylgrxs54e6j7tgm595ma6wi

Monday, November 30, 2015

பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள்: விவரங்களில் பிழை திருத்தும் பணி தீவிரம்


வரும் மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவு எண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களை பிழைகளின்றி நவம்பர் 23-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டது. அதன் பிறகு, 26 வரை நீட்டிக்கப்பட்டது. இந்தப் பணி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இப்போது நடைபெற்று வருகிறது.

அதன்பிறகு, டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் திருத்தப்பட்ட தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. அடுத்த 2 வாரங்களில் மாணவர்களுக்கு பதிவெண் வழங்கப்பட உள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு....: இதேபோல், மார்ச்சில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணிகள் டிசம்பர் 10-ஆம் தேதிக்கு பிறகு நடைபெற உள்ளன. இவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களும் இப்போது கோரப்பட்டுள்ளன.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் விடுமுறையிலும் பள்ளிகளுக்கு வந்து தங்களது விவரங்களை சரிபார்த்துச் செல்வதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த விவரங்களை பதிவேற்றம் செய்வதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு பதிவு எண் உள்ளிட்டவை இந்த மாதத்துக்குள் வழங்கப்பட்டு விடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரையாண்டு தேர்வு மாற்றம்? அதேபோல், மழை விடுமுறை காரணமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தள்ளிவைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே தேர்வுகள் நடைபெறும் என்றும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர்களை பயிற்சிக்கு அழைக்கும் நேரமா இது?


பாடம் நடத்தவும், தேர்வு நடத்தவும், நாளில்லாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்; இந்நிலையில் ஆசிரியர்களை, ஒரு மாதம் பயிற்சிக்கு வருமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் தரப்படுகின்றன.

இதற்கு, மத்திய அரசிடமிருந்து, பல கோடி ரூபாய் நிதி கிடைக்கிறது.கற்றல், கற்பித்தலை தொழில்நுட்ப ரீதியாக வழங்க வேண்டும் என்பது தான், மத்திய அரசின் நோக்கம். ஆனால் இது, தமிழகத்தில், பலனில்லாத பயிற்சி திட்டங்களாக மாறிவிட்டன.தமிழகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம் ஆகியவற்றுடன், பயிற்சி அளிக்கும் மூன்று இயக்குனரகங்களின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படவில்லை.

எனவே, பாடம் நடத்துவதைப் பார்க்க ஒரு துறை; பயிற்சியை நடத்த, வேறொரு துறை என, முரண்பாடாக உள்ளது. தற்போது இரண்டாம் கல்விப் பருவத்தில், மழைக்கால விடுமுறை, பண்டிகை விடுமுறைகளுக்கு மத்தியில், அரையாண்டுத் தேர்வு நெருங்கியுள்ளது. பாடங்களை எப்படி முடிப்பது என, ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இந்த நேரத்தில், ஒரு மாதம் முழுவதும் ஆசிரியர் பயிற்சிக்கான அட்டவணையை கல்வித்துறை அறிவித்துள்ளது.

* பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்க, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம், டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சி

* நவ., 30, டிச., 1 மற்றும் 5ம் தேதிகளில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, வாசித்தல், எழுதுதலுக்கு பயற்சி

* நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, டிச., 12ல், குறுவள பயிற்சி, கணித பயிற்சி பெட்டகப் பயிற்சி, கணினி இயக்கம் மற்றும் கற்பித்தல் பயிற்சி. நவ., 30 முதல் டிச., 22ம் தேதி வரை நடக்கும் பயிற்சியில், ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது

Sunday, November 29, 2015

கல்வி உதவித் தொகை தேர்வு: விண்ணப்பங்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்


தேசிய வருவாய் வழி- திறன் கல்வி உதவித் தொகை (என்.எம்.எம்.எஸ்.) தேர்வுக்கான விண்ணப்பங்களை திங்கள்கிழமை (நவ. 30) முதல் பதிவிறக்கம் செய்யலாம். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக, ஜனவரி 23-இல் இந்தத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை விடுமுறை அனுபவித்த ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி


மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக் கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பல பகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாரத்துக்கு மூன்று வகுப்புகள் பாடம் எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் பள்ளிகளில், முழு நேர ஆசிரியர்களாகவே பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், பணிபுரியும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படும். மே மாத விடுமுறை காலத்தில் மாத சம்பளம் கிடையாது. தற்போது மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டது.

''இந்த நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும். அவ்வாறு பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்,'' என, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

10ம் வகுப்பு பொது தேர்வு செய்முறை தேர்வு உண்டு


'பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வில், அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, கண்டிப்பாக உண்டு' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நடத்தப்படுவது போல், அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதற்கு, 25 மதிப்பெண்கள் தனியாக வழங்கப்படுகின்றன. இத்தேர்வுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு தலா, நான்கு செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படும். பின், அவற்றில், தலா ஒரு பயிற்சி, செய்முறைத் தேர்வில் வினாவாக வரும். இதற்காக, செய்முறைத் தேர்வு பயிற்சி புத்தகம், கல்வித் துறையிலிருந்து வழங்கப்படும். இந்த ஆண்டு, பயிற்சிப் புத்தகம் வழங்கப்படாததால், செய்முறைத் தேர்வு உண்டா என, மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை கண்ணப்பன் கூறியதாவது:செய்முறைத் தேர்வுக்கான பயிற்சி வினாக்கள், அறிவியல் பாடப் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன; இந்த ஆண்டு தனியாக புத்தகம் வழங்கப்படாது. அதிலுள்ள, 15 செய்முறைப் பயிற்சிகள் குறித்து, ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும். பொதுத் தேர்வுக்கு கட்டாயம் செய்முறைத் தேர்வு உண்டு; எந்த மாற்றமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.