இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, September 23, 2015

சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

ரூ.1,263 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

  

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா.
தமிழகத்தில் 1,054 பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட 1,263 கோடியே 53 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப்பேர்வையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கையில், ''கடந்த நான்காண்டுகளில் 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்ததப்பட்டதோடு, 182 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 5 அரசு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். தொடக்கப் பள்ளிகள் இல்லை என கண்டறியப்பட்டுள்ள 39 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும்.

நடுநிலைப் பள்ளி ஒன்றுக்கு 3 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 15 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் புதிய தொடக்கப் பள்ளிகளுக்கு ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் என, 78 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இப்பள்ளிகளுக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படும். இதனால் அரசுக்கு கூடுதலாக 11 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

கடந்த 4 ஆண்டுகளில் 2,798 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில் பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 770 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் . மேலும், 287 பள்ளிகளின் வகுப்பறைகள் பழுது சரி பார்க்கப்படும். இதனால் அரசுக்கு 56 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவினம் ஏற்படும்.

புதிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்

ஆசிரியர் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சிகளை அளிக்கும் பொருட்டும், பெரம்பலூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தலா ஒரு புதிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும் .

புதிதாக உருவாக்கப்படவுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா 10 ஆசிரியர் சார்ந்த பணியிடங்களும் 5 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் என மொத்தம் 30 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்கள் தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி பெற உதவும் வகையில் இந்த 7 மாவட்டங்களில் புதிய ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள்தொடங்கப்படும்.

புதிதாக உருவாக்கப்படவுள்ள ஏழு ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 49 ஆசிரியர் சார்ந்த பணியிடங்கள் 56 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என மொத்தம் 105 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இதனால் அரசுக்கு 21 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவினம் ஏற்படும்.

மாற்றுத் திறனுடைய குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி அவர்களின் வாழ்க்கையை சிறப்புற அமைத்துக் கொள்ள வழிவகை செய்து கொடுக்கும் பொருட்டு இந்தியாவிலேயே முன்னோடியாக, தமிழகத்தில் மாநில ஆதார வள மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் முதன் முறையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு ப்ரெயில் பாடப் புத்தகங்களும் பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு உருப் பெருக்கப்பட்ட அச்சு பாடப் புத்தகங்களும் வழங்கப்படும்.

சமூக திரட்டு திட்டம்

சமூக விழிப்புணர்வினை குழந்தைகளிடம் கொண்டு செல்லும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளில் போட்டிகள், விழிப்புணர்வு பேரணி, கிராம கல்வித் திருவிழா, ஊடகம் மற்றும் தொடர் குழு நடவடிக்கைகள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்புக் கல்வி ஆண்டிலும் சமூக திரட்டு திட்டம் செயல்படுத்தப்படும். கல்வியில் பின் தங்கிய ஒன்றியங்கள் மற்றும் சிறப்பு குவிமைய மாவட்டங்களில் தனி விழிப்புணர்வும், பாலின கூர் உணர்வு விழிப்புணர்வும் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனால் அரசுக்கு 9 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும்.

ஆசிரியர் இல்லம்

ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் மாநிலத்தின் மையப் பகுதியான திருச்சியில் புதிதாக ஓர் ஆசிரியர் இல்லம் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும், ஆசிரியர் இல்லம் 3 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 2015-16ஆம் ஆண்டில் கோயம்பத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் புதியதாக இரண்டு ஆசிரியர் இல்லங்கள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம்.முதல்வர் அறிவிப்பு

அரசின் 107 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக, கடந்த 4 ஆண்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் முதல்வர் பேசியதாவது,
அரசின் 107 தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளாக, கடந்த 4 ஆண்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் 5 தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய தொடக்கப்பள்ளிகள் துவங்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி்களில் 770 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன. கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Tuesday, September 22, 2015

1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் : ‘கணித உபகரண பயிற்சி பெட்டி’ அரசு உதவி பள்ளிகளுக்கு நிராகரிப்பு


தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும், “கணித உபகரண பயிற்சி பெட்டி” அரசு பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு, உதவி பெறும் பள்ளிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால், பயிற்சி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகளும், 15 ஆயிரம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளும் உள்ளன. அதேபோல, 7,307 அரசு நடுநிலை பள்ளிகளும், 2,400 அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அடிப்படை கணித அறிவை பெருக்குவதற்காக தமிழக அரசு கணித உபகரண பெட்டி பயிற்சி (maths kids box training) என்ற பயிற்சியை வழங்கி வருகிறது. இந்த பயிற்சியின் மூலம், கணிதத்தின் அடிப்படையான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்றவற்றை எளிமையாக கற்றல், கற்பித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பணிபுரியும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டார வள மையங்களில் கடந்த 10, 11, 14ம் தேதிகளில் ஒரு பிரிவாகவும், 15, 16, 18ம் தேதிகளில் ஒரு பிரிவாகவும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இவ்வாறு பயிற்சி முடித்த ஆசிரியர்கள் மீண்டும் தங்கள் வகுப்புகளுக்கு திரும்பி மாணவர்களுக்கு கணித உபகரண பெட்டி பயிற்சியை வழங்கி வருகின்றனர். இந்த பயிற்சி குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்து கற்பிக்க கணித உபகரண பெட்டி தேவை. ஆனால், இந்த கணித உபகரண பெட்டிகள் அரசு பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கணித உபகரண பெட்டிகள் வழங்கப்படவில்லை. இதனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உரிய கணித பயிற்சி கிடைக்காமல் கணித பாடங்களை கற்பதில் திணறி வருகின்றனர். இதற்காக பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, கல்வியாளர் ஒருவர் கூறுகையில்,

“கணித உபகரண பெட்டி பயிற்சி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கணித உபகரண பெட்டி அரசு பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படாததால், அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி வீண்தான். அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கணித உபகரண பெட்டி இல்லாமல் வெறும் பயிற்சியை வைத்து அந்த ஆசிரியர்களால் என்ன செய்ய முடியும்.

இந்த பயிற்சியானது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெறும் காலக்கட்டத்தில் அவசர கதியில் நடத்தியிருக்கிறார்கள். இதற்கான காரணமும் தெரியவில்லை” என்றார்.

Monday, September 21, 2015

டிச.27-இல் "நெட்' தேர்வு


இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குமான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விரைவில் அறிவிக்க உள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கான தகுதியைப் பெறுவதற்கும் "தேசிய தகுதித் தேர்வு' (நெட்) நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். வரும் டிசம்பர் மாதத்துக்கான தேர்வை டிசம்பர் 27-ஆம் தேதி நடத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பையும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான தேதியும் விரைவில் வெளியிடப்பட உள்ளது என சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குஆதார் எண் கட்டாயமில்லை!


'பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஆதார் எண் கட்டாயம் இல்லை' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின், சுய விவரங்களை பள்ளிகள் சேகரித்து, தேர்வுத்துறைக்கு அனுப்புகின்றன. தமிழகத்தில், சமச்சீர் கல்வியை பின்பற்றும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியரிடம் ஆதார் எண் பெறப்படுகிறது.இதேபோல், சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து அனுப்ப, சி.பி.எஸ்.இ., தேர்வுப்பிரிவு உத்தரவிட்டுள்ளது.

பல மாணவர்களுக்கு ஆதார் எண் இல்லாத நிலையில், ஆதார் எண் கேட்டு கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, 'ஆதார் எண் கட்டாயமில்லை' என, சி.பி.எஸ்.இ., விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 'ஆதார் எண்ணை பெற்றோர் தெரிவிப்பது, அவரவர் விருப்பத்தை பொறுத்தது. அவர்களை பள்ளிகள் கட்டாயப்படுத்த கூடாது' என, தெரிவித்து உள்ளது

பி.எட்., 'கட் - ஆப்' அறியஇணையதளத்தில் புதுவசதி


பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, 'கட் - ஆப்' மற்றும் தனிப்பட்ட மதிப்பெண் விவரங்கள், முதல்முறையாக, ஆன் - லைனில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும், 21 கல்வியியல் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது. மொத்தமுள்ள, 1,750 இடங்களுக்கு, 7,440 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இவர்களில், 1,130 பேர் பி.இ., - பி.டெக்., பட்டதாரிகள். பி.எட்., படிக்க விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான, 'கட் - ஆப்' விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வரும், 28 முதல் அக்டோபர், 5ம் தேதி வரை நடக்கும், கலந்தாய்வு விவரங்களும், கல்லுாரி இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு முதன்முறையாக, http://www.ladywillingdoniase.com என்ற இணைய தளத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் தனிப்பட்ட, 'கட் - ஆப்' விவரங்களை பார்க்கும் வகையில், தனியாக இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. http://61.8.146.180/ladywillingdon/default.Aspx என்ற இணைப்பில், விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப எண்ணைப் பதிவு செய்தால், மதிப்பெண்ணை காணலாம்.

கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்' படிப்பா? கவலை வேண்டாம் இனி; வேலை உண்டு!


'திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வியில் வழங்கப்படும், அனைத்து பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள், அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்படிப்புகளுக்கு செல்லத்தக்கவை' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில், பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதியுடன், அண்ணாமலை பல்கலை உட்பட, சில பல்கலைகளில், 1979 முதல் திறந்த நிலை மற்றும் தொலைதுார கல்வியில், பட்டம் மற்றம் பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. துவக்கத்தில், இந்த முறையில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு, அரசு நிறுவனங்களில், வேலைவாய்ப்பு தரப்பட்டதோடு, உயர்கல்வி கற்கவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன், திறந்தநிலை பல்கலையால் வழங்கப்பட்ட, பிளஸ் 2 படிக்காமல், நேரடி பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது.

பின், பிளஸ் 2 முடித்து, திறந்தநிலை படிப்பில், இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டது. இதனால், பிளஸ் 2 படிக்காமல், நேரடி இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்விக்கு செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில், மத்திய அரசு, இரு தினங்களுக்கு முன், புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், 'திறந்த நிலை பல்கலையின் பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள், அரசின் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்விக்கு செல்லத்தக்கவை' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த அறிவிப்பால், திறந்தநிலை படிப் பில், பட்டம் பெற்ற லட்சக்கணக்கானோர் அரசு வேலைவாய்ப்பு பெறும் வகையில், புதிய நம்பிக்கை பெற்றுள்ளனர்.

அரசாணை சொல்வது என்ன? கடந்த, 1956ம் ஆண்டு யு.ஜி.சி., சட்டப்பிரிவு - 3ன் படி நடத்தப்படும் நிகர்நிலை பல்கலை, மத்திய, மாநில அரசின் சட்டப்படி துவங்கப்பட்ட பல்கலைகளில், யு.ஜி.சி., அனுமதி பெற்று வழங்கப்பட்ட அனைத்து பட்டங்கள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள், அனைத்து வகை அரசு வேலைவாய்ப்புக்கும் தானாகவே செல்லத்தக்கவை. குழப்பம்மத்திய அரசின் உத்தரவுப்படி, திறந்த நிலை கல்வியில் பெற்ற பட்டங்கள், வேலைவாய்ப்புக்கு செல்லத்தக்கவை என்றாலும், எப்போது முதல் வழங்கப்பட்ட பட்டங்கள் என்பது அரசாணையில் தெளிவாக இல்லை. அதனால், பிளஸ் 2 முடிக்காமல், நேரடியாக பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இந்த அரசாணை பொருந்துமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சட்ட அந்தஸ்துஇதுகுறித்து, அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் எஸ்.மணியன் கூறியதாவது:கடந்த, 1979 முதல் யு.ஜி.சி., அனுமதியுடன் தான், எங்கள் பல்கலையில் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் உரிய வயதில் உயர்கல்வியை முறையாக படிக்க முடியாத லட்சக்கணக்கானோருக்கு, திறந்தநிலை படிப்பு மூலம் வாய்ப்பளித்தோம். எங்கள் பல்கலை வழங்கிய அனைத்து பட்டங்களும் சட்ட அந்தஸ்து பெற்றவை தான்.இவ்வாறு அவர் கூறினார்.அதிகாரிகள் சிலர் கூறும்போது, 'பிளஸ் 2 முடிக்காமல் பெற்ற பட்டங்கள் குறித்து, மத்திய, மாநில அரசுகள், யு.ஜி.சி., தான் தெளிவாக அறிவிக்க வேண்டும்' என்றனர்.

Aadaar detail urgent

Click below

https://app.box.com/s/c1fu9lnetyba29ghqa0up0gi5vkktt1x

M.phil பயில உதவி தொடக்கக்கல்வி அலுவலர் முன் அனுமதி பெற அதிகாரம் உள்ளது தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள்

Click below

https://app.box.com/s/usupkzmoue0ouyg10de9iutngqk0vo9w

டெங்கு குறித்து தொ.க.இயக்குனர் அவர்களின் செயல்முறை கடிதம்.

Sunday, September 20, 2015

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு


மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: டெங்கு, பறவைக் காய்ச்சல் தடுப்பது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த ஆய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்குமாறு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும். அதன் விவரம்: மாணவர்களிடம் அவ்வப்போது கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்வது குறித்தும், குறிப்பாக உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வகுப்பறைகளைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருக்க வேண்டும். வகுப்பறை, கழிவறைகளைச் சுற்றித் தண்ணீர் தேங்கி இருந்தால், அதை அகற்றுவதற்கு தலைமையாசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடிநீர்ப் பானைகள், தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். இதன் மூலம் கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்க முடியும்.

பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பற்றிய அறிகுறிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதனை மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களுக்கும் தெரிவித்து, இது குறித்த விழிப்புணர்வை தங்கள் குடும்பத்தினருக்கும் ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களிடம் கடுமையான காய்ச்சல், சளி, இருமல் முதலிய அறிகுறிகள் காணப்பட்டால் அதனை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். மாணவர்களிடம் இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவனைக்குச் செல்ல அறிவுறுத்த வேண்டும். மாணவர்களுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தாமாக மருத்துவம் செய்துகொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். சென்னை, திருப்பூர், திருச்சி, சேலம், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளை மூடி போராட்டம்:பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு

பங்களிப்பு பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபர், 8ல், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை மூடி போராட்டம் நடத்தப்படும்,” என, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் ஏ.மாயவன் தெரிவித்தார்.

சிவகங்கையில், அவர் கூறியதாவது:முதல்வர் ஜெ., சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், 'ஆட்சிக்கு வந்தவுடன் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வேன்' என்றார்; இன்று வரை ரத்தாகவில்லை.மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் நியமித்த ஆசிரியரை பணிவரன் முறை செய்ய வேண்டும் என்பன உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அக்டோபர், 8ம் தேதி தமிழகம் முழுவதும், 3 லட்சம் ஆசிரியர்கள், பள்ளிகளை மூடி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதற்கு பின்னரும் அரசு செவி சாய்க்காவிடில், தொடர் போராட்டம் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, September 19, 2015

அரசு ஊழியர்களின் கேள்விகளுக்கு அரசு துறைகள்... மவுனம்: பிடிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி ரூ.2,300 கோடி எங்கே?


பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி விவரம், நிதித்துறை மற்றும் தகவல் தொகுப்பு மையத்தில் இல்லாததால், இந்த திட்டத்தின் நிலை குறித்து, அரசு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில், கடந்த ஆண்டு வரை, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம், 2,300 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் எங்கே என்பது தான், இப்போதைய கேள்வி. தமிழகத்தில், 2003 ஏப்ரல் முதல், அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகமானது.

இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுஉள்ளனர். இத்திட்டத்தில், அடிப்படை ஊதியம், தர ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில், மாதம், 10 சதவீதம் பிடிக்கப்படும். அதே அளவு தொகையை, அரசும் தன் பங்காக செலுத்தும். 40 சதவீத முதலீடுபின், ஊழியர் ஓய்வுபெறும் போது, மொத்தத் தொகையில், 60 சதவீதம் வழங்கப்படும். மீதமுள்ள, 40 சதவீதம், பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கடந்த, 12 ஆண்டுகளில் ஓய்வு பெற்றுள்ளனர். பலர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர்; சிலர் மரணமடைந்துள்ளனர். இவர்களின் குடும்பங்களுக்கு, பிடிக்கப்பட்ட நிதி எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரும், ஆசிரியருமான பிரெட்ரிக் ஏங்கல்ஸ், தமிழக நிதித்துறை, தகவல் தொகுப்பு மையம் மற்றும் கணக்கு மற்றும் கருவூலத் துறைக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தகவல் கேட்டுள்ளார். இதில், 'தங்களிடம் எந்த விவரமும் இல்லை' என, நிதித்துறை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில், கடந்த ஆண்டு வரை, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம், 2,300 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக, மாநில தகவல் தொகுப்பு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஓய்வு பெற்றவர், இறந்தவர் போன்ற விவரங்களோ, அவர்களுக்கான நிதி விவரமோ, தங்களுக்கு தெரியாது என, நிதித்துறை, தகவல் தொகுப்பு மையம், கணக்கு மற்றும் கருவூலத்துறை ஆகியவை தெரிவித்துள்ளன.தெளிவான முடிவு இல்லை.இதற்கிடையில், 'தமிழக அரசின் நிதி, மத்திய அரசின் திட்டத்திலும் இந்த பணம் முதலீடு செய்யப்படவில்லை' என, மத்திய அரசின் ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து, பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட நிதியை பயன்படுத்துவது குறித்து, அரசு இன்னும் தெளிவான முடிவு எடுக்கவில்லை. அதனால், அந்த நிதியை வெளியில் முதலீடு செய்யவில்லை. இதுகுறித்து அரசு உரிய முடிவு எடுக்காததால், அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

NEW deo&DEEO list

NEW DEO LIST

Mr .Raja -- DEO ,Krishnagiri

Reeta milret Golti --Deo Thakkalai

M.Balasubramani –DEEO nagercovil

Mr. Ilango DEO villupuram

Mrs Vanaga DEO Melur

Mr.D.Subramani DEO south Madras

Tamilselvan DEEO pudukottai

Gilbert DEO ,Kulithurai

KumaragurpanIMS Tanjur

Sekar DD cheenai

Kalaiselvi DEO sangakiri

Ravikumar cordinator RMSA chennai

Keasvan DEO Tanjur

JayaraMan DEO Kanjipuram

Nirmala DEEO Nellai

Mohana chandranDEO Tiruvallur

Pandiyan DEEO vellore.