Saturday, August 15, 2015
ஸ்காலர்ஷிப்'புக்கு புது 'வெப்சைட்'
அரசு பள்ளிகளில் தமிழில் 'மேப்' பிழைதிருத்தும் பணி நடக்கிறது
தேசியக்கொடி சில துளிகள் !
நமது தேசியக் கொடி உருவாக்கத்தில் பலரின் பங்களிப்பு இருக்கிறது. மேடம் காமா எனப்படும் பைக்காஜி காமா, வீர சாவர்க்கர், விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா போன்றோரும் ஆரம்ப கால தேசியக் கொடியை வடிவமைத்திருக்கிறார்கள்.
1907 ஆகஸ்ட் மாதம், ஜெர்மனியில் நடந்த ஒரு மாநாட்டில், இந்தியாவுக்கான தேசியக் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.
1917-ஆம் ஆண்டு, பாலகங்காதர திலகரும் அன்னிபெசன்ட் அம்மையாரும் சேர்ந்து, 'சுயாட்சிப் போராட்டம்’ தொடங்கினர். அப்போது, அவர்கள் வடிவமைத்த தேசியக் கொடியின், இடது ஓரத்தில், பிரிட்டிஷ் கொடியும் சிறிய அளவில் இருந்தது. இதை, இந்திய சுதந்திரப் போராளிகள் பலரும் எதிர்த்ததால், விரைவிலேயே திரும்பப் பெறப்பட்டது.
தற்போதுள்ள தேசியக் கொடிக்கு ஆரம்பமாக அமைந்தது, 1921-ல் பிங்காலி வெங்கையா என்பவர் உருவாக்கிய கொடி. இதில் பச்சை மற்றும் சிவப்பு நிறங்கள் மட்டுமே இருந்தன. இது, இந்தியாவில் உள்ள இந்து மற்றும் இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டது.
மதத்தைக் குறிப்பிடாமல், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நமது தேசியக் கொடியில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 1931-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சிவப்பு, பச்சை நிறங்களுக்கு இடையில் வெள்ளை நிறம் சேர்க்கப்பட்டது. நூல் நூற்கும் கை ராட்டையும் இணைந்தது. ராட்டையின் சக்கரங்கள், நமது தேசிய முன்னேற்றத்தைக் குறிப்பிட்டது.
இந்தியா சுதந்திரம் பெற்றதும், 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி, மூவர்ண தேசியக் கொடி வான் நோக்கி கம்பீரமாக உயர்ந்தது.
காங்கிரஸ் கட்சியின் கொடியும் தேசியக் கொடியும் ஒரே மாதிரியாக இல்லாமல், வேறுபடுத்திக் காட்டுவதற்காக, ஒரு குழு அமைக்கப்பட்டது. ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, சரோஜினி நாயுடு, அம்பேத்கர் போன்றோர் அடங்கிய அந்தக் குழு, 1947 ஜூலை மாதம், தேசியக் கொடியை இறுதி செய்தது. கை ராட்டைக்குப் பதிலாக அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது.
தற்போதைய தேசியக் கொடியின் பொருள்... காவி நிறம், தைரியம் மற்றும் தியாகத்தைக் குறிக்கும். வெள்ளை நிறம், உண்மை மற்றும் தூய்மையைக் குறிக்கும். பச்சை நிறம், வளத்தைக் குறிக்கும். அசோகச் சக்கரம், நேர்மையைக் குறிக்கிறது.
Friday, August 14, 2015
தமிழகம் முழுவதும் 431 பேர் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: ஆக.17-இல் மறுகூட்டல் முடிவுகள்
69Th independence day
TNPTF MANI
1947 ஆக.,15 நள்ளிரவில்சுதந்திரம் பெற்றது. ஏன் இந்த தேதி என்பதற்கு பின் சுவாரஸ்யமான
பின்னணி உள்ளது.
இந்திய சுதந்திர போராட்டம் 1940க்கு பின் தீவிரமானது. இதே நேரத்தில் இரண்டாம் உலகப்போரும் ஏற்பட்டது. போரின் காரணமாக ஆங்கிலேய அரசின் கஜானா வெகுவாக கரைந்திருந்தது. சொந்த நாட்டையே(இங்கிலாந்து) நிர்வகிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. 1945 பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சிஆட்சியைப் பிடித்ததது. இதற்கு முக்கிய காரணம், தனது தேர்தல் வாக்குறுதியில் இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இத்தகைய காரணங்களால் 1948 ஜூன் மாதத்துக்குள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு முடிவெடுத்தது.
இந்நிலையில் 1947 பிப்., 10ல் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக மவுண்ட் பேட்டன் பொறுப்பேற்றார். உடனடியாக இவர் நேரு, ஜின்னா உள்ளிட்ட தலைவர்களிடம் தொடர் பேச்சுகள் நடத்தினார். இது சுமூகமாக முடியவில்லை. காரணம், ஜின்னா தனிநாடு கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தார். நாட்டில் மக்களிடையே பதட்டமான சூழல் உருவானது. இதை மவுண்ட்பேட்டன் எதிர்பார்க்கவில்லை. இதனால் முன்னதாகவே சுதந்திரம் வழங்க வேண்டிய கட்டாயத்தை அவருக்கு ஏற்படுத்தியது.
இது தொடர்பாக 1947 ஜூன் 3ல் நடந்த கூட்டத்தில் முன்கூட்டியே சுதந்திரம் மற்றும் நாட்டைப் பிரிப்பது பற்றி முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக இது 'ஜூன் 3 மவுண்ட்பேட்டன் திட்டம்' என அழைக்கப்பட்டது. ஆகஸ்ட் 15: மவுண்ட்பேட்டனுக்கு, ஆகஸ்ட் 15 தனிப்பட்ட முறையில் விருப்பமான தேதி. ஏனெனில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் 1945 ஆக.,15ல் தான் ஜப்பானிய வீரர்கள், இவரிடம் (அப்போது ஆங்கிலேயர்களின் கிழக்கு ஆசிய கமாண்டராக இருந்தார்) சரணடைந்தனர். இதனால் இந்த தேதியில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கவிரும்பினார்.
நள்ளிரவு:
இந்தியாவுக்கு ஆக., 15ல் சுதந்திரம் என அறிவிக்கப்பட்டவுடன் ஜோதிடர்கள் அன்றைய நாள் சரியில்லை, இரண்டு நாட்கள் கழித்து கொடுக்கலாம் என இந்திய தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஆக., 15 என்பதில் மவுண்ட் பேட்டன் உறுதியாக இருந்தார். இந்த சூழ்நிலையில் தான் ஆங்கிலேயர் கணக்குப்படி நள்ளிரவு 12 மணி என்பது புதிய நாள். இந்தியர்களுக்கு அதிகாலை 5 மணி தான் புதிய நாள். இதனால் ஆகஸ்ட் 15 நள்ளிரவே இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.
எப்படி இருக்கும்:
வளர்ந்த இந்தியாவில் நகர்ப்புற - கிராமப்புற வித்தியாசம் குறைவாக இருக்கும். மின்சாரம், குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும். விவசாயம் - தொழில்துறை - சேவைத்துறை இணைந்து செயல்படும். கல்விக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆய்வாளர்கள், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகளுக்கு ஏற்ற நாடாக இருக்கும். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் ஒழிந்திருக்கும். சமுதாயத்தில் அனைவருக்கும், அனைத்து வசதிகளும் கிடைக்கும். அனைவரும் வாழ விரும்பும் அழகிய தேசமாக இருக்கும். இப்படிப்பட்ட ஒரு வளர்ந்த வல்லரசு நாடாக நிச்சயம் மாறும் என அப்துல் கலாம் கனவு கண்டார்.
முதல் அமைச்சரவை:
1947ல் சுதந்திரம் பெற்றவுடன் 14 பேர் கொண்ட முதல் அமைச்சரவை பதவியேற்றது. நேரு பிரதமராகவும், வல்லபாய் படேல் உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். இதைத்தொடர்ந்து ராஜேந்திர பிரசாத் (உணவு, விவசாயம்), மவுலானா அபுல் கலாம் ஆசாத் (கல்வி), ஜான் மாதாய் (ரயில்வே), சர்தார் பால்தேவ் சிங் (பாதுகாப்பு), ஜெகஜீவன் ராம் (தொழிலாளர் நலன்), சி.எச்.பாபா (வணிகம்), ரபி அகமது கித்வாய் (தொலைத்தொடர்பு), ராஜ்குமாரி அமித் கவுர் (சுகாதாரம்), அம்பேத்கர் (சட்டம்), சண்முகம் ஷெட்டி (நிதி), ஷியம்பிரகாஷ் முகர்ஜி (தொழில்துறை), காட்கில் (எரிசக்தி, சுரங்கம்) ஆகியோர் பதவியேற்றனர்.
சுதந்திர சுவாரஸ்யங்கள்:
* இந்தியா சுதந்திரம் பெற்ற 1947, ஆக.15ல் நாட்டுக்கான தேசிய கீதம் இல்லை. 1911ல் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட 'ஜன கண மன' பாடல் 1950ல் தான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
* இந்தியா சுதந்திரம் அடைந்த தினத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தி கோல்கட்டாவில் இருந்தார்.மத மோதல்களை எதிர்த்துஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.
* சுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸ் இயக்கத்தையே கலைக்க நினைத்தார் காந்திஜி. சுதந்திரம் பெற்று தந்ததை சொல்லிக்காட்டி மக்களிடம் அதிகாரம் செலுத்துவர் என அவர் நினைத்தார்.
* கதர் துணியில் மட்டுமே தேசியக்கொடி தயாரிக்கப்பட வேண்டும். மற்ற வகை துணிகளில் கொடியை தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றம்.
* அரபிந்தோ கோஸ், நெப்போலியன் போனபார்ட், ஆகியோர் ஆகஸ்ட் 15ல் பிறந்தவர்கள்.
* மகாதேவ் தேசாய், அமர்சிங் சவுத்ரி, ஆகியோர் ஆகஸ்ட் 15ல் இறந்தவர்கள்.
1/2
Guidelines for NMMS registeration
GUIDELINES FOR NMMS REGISTERATION
Goto www.scholarships.gov.in
The click WHO AM I
SELECT Officials
Then type USERNAME & PASSWORD AND click Login..
Then click Register prematric application
Select Academic year & Scheme (NATIONAL MEANS CUM SCHOLARSHIP -TN)
Then enter number of applications to be registered and click submit button
Then enter NAME, GENDER ETC….. FILLING ALL THE DETAILS AND CLICK SUBMIT BUTTON
Then GOTO UPLOAD EXCEL DATA And click download excel format button
Then opened the sample excel sheet fillup all the details save to .xls format.
Click Submit button.
If all the details are verified successfully and finally update successfully message will come.
Thursday, August 13, 2015
பிளஸ் 2 தனித்தேர்வுகள்செப்., 28ல் துவக்கம்
:பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாமல் மீண்டும் தேர்வு எழுதுவோர், பத்தாம் வகுப்பு தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியில் தேர்வு எழுதும் நேரடி தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 28 முதல் தேர்வுகள் துவங்க உள்ளன.தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 10 வரை தேர்வு நடைபெற உள்ளது. தனித்தேர்வர்கள் கல்வி மாவட்டம் வாரியாக அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆண் தனித்தேர்வர்களுக்கும், பெண் தனித்தேர்வர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள தனித்தனி சேவை மையங்களில் விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம். தனித்தேர்வர்கள் ஆகஸ்ட்13 முதல் 19 வரை மாலை 5.45 மணிக்குள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம். மறுமுறை தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50 வீதம் தேர்வு கட்டணமும், இதர கட்டணமாக ரூ.35 செலுத்த வேண்டும்.
நேரடி தனித்தேர்வர்கள் தேர்வு கட்டணம் ரூ.150, இதர கட்டணம் ரூ.35, கேட்டல், பேசுதல் திறன் தேர்வுக்கு ரூ.2 வீதம் மொத்தம் ரூ.187. இதனுடன் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். தபாலில் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
அனைவருக்கும் கல்வியில் நிதி குறைப்பு : காலியாகிறது கூடுதல் சி.இ.ஓ., பதவி?
அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (ஏ.சி.இ.ஓ.,) பதவியை ரத்து செய்ய, கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.பள்ளி செல்லா குழந்தைகளை கண்காணித்து பள்ளிகளில் சேர்த்தல், இடை நின்றலை தடுத்தல், அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதி மற்றும் கல்வித்தரம் மேம்பாடு போன்றவற்றிக்காக 'அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம்' 2002ல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுகின்றன. இதற்காக தமிழகத்தில் மாவட்ட வாரியாக கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 2012ல் இத்திட்டம் நிறைவடைந்த நிலையில், 2018 வரை நீடிக்கப்பட்டது.நிதி நெருக்கடியால், இத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சி உட்பட செயல்பாடுகள் குறைந்தன;
ஒன்றியம் வாரியாக மேற்பார்வையாளர் பணியிடங்கள் நீக்கப்பட்டன; இப்பணியை மூத்த ஆசிரியர் பயிற்றுனர்கள் கூடுதலாக கவனிக்கின்றனர்.இந்நிலையில், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் பதவியையும் ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலித்து வருகிறது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நிதி குறைப்பால் இப்பதவி காலியாக உள்ளது. இதற்கான பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கும் போது பணிச்சுமை, நிர்வாக குளறுபடி அதிகரிக்கும். பதவி உயர்வுக்கு காத்திருக்கும் தலைமை ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பாதிக்கப்படுவர். வரும் 2018 வரை இப்பதவியை நீடிக்கலாம், என்றார்.
ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு புகைப்படம்: தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
Wednesday, August 12, 2015
700 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் நீலகிரி மாவட்டத்தில் குழப்பம்
அரசு ஊழியருக்கு 'ஆதார்' ஏற்பாடு
சுதந்திர தின விழாவில் மரக்கன்று நட உத்தரவு
தமிழக ஆசிரியர் 22 பேருக்குதேசிய விருது அறிவிப்பு
Tuesday, August 11, 2015
பி.எட். மாணவர் சேர்க்கை எப்போது? படிப்பு காலத்தை அதிகரிப்பதிலும் குழப்பம்
இந்த கல்வியாண்டு (2015-16) பி.எட். சேர்க்கை எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசாரணை நவம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், கலந்தாய்வு மேலும் தள்ளிப்போகும் அபாயம் எழுந்துள்ளதாகவும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர். பி.எட். மாணவர் சேர்க்கை ஜூலை மாதம் தொடங்கப்பட்டு வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கப்பட வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) அறிவுறுத்தியுள்ளபோதும், தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் கலந்தாய்வு நடத்தப்பட்டு, செப்டம்பரில் வகுப்புகள் தொடங்குவது வழக்கமாக இருந்து வந்தது.
இந்த நிலையில், என்.சி.டி.இ.-யின் புதிய வழிகாட்டுதலின்படி (2014 வழிகாட்டுதல்) பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. புதிய வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்த கால அவகாசமும் கோரப்பட்டது. ஆனால், என்.சி.டி.இ. இதற்கு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதே நேரம் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் புதிய வழிகாட்டுதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், பி.எட். இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இப்போது நிலுவையில் உள்ளது.
இதனிடையே தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதில் வரும் 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டு பி.எட். படிப்புக்கான பாடத் திட்டத்தை அமல்படுத்த அனுமதி அளித்தது. மேலும் ஜூலை முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவையும் பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், 2015-16 கல்வியாண்டுக்கான பி.எட். கலந்தாய்வு நடத்த திட்டப் பணிகள் அனைத்தையும் முடித்து நடத்த தயாராக உள்ளது. இந்த நிலையில், சுயநிதி கல்லூரி நிர்வாகிகள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இதன் காரணமாக பி.எட். சேர்க்கை மேலும் தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் கூறியதாவது: படிப்புக் காலம் முதன் முறையாக 2 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறபோது, அதற்கான பாடத் திட்டம் சேர்க்கை நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே அனைத்து கல்லூரிகளுக்கும் குறிப்பாக தன்னாட்சி கல்லூரிகளுக்கு அளிக்கப்படவேண்டும் என்பதோடு, உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நவம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரம், ஓரிரு நாள்களில் கலந்தாய்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு, வருகிற வெள்ளிக்கிழமை (ஆக.14) முதல் விண்ணப்ப விநியோகத்தை தொடங்குமாறு வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், உயர் கல்வித் துறையை அறிவுறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற காரணங்களால், 2015-16 கல்வியாண்டில் தமிழகத்தில் பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே, நிகழாண்டில் பி.எட். ஓராண்டாகவே இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்றனர்.
தீர்ந்தது ஆசிரியர் சம்பள பிரச்னை
தமிழக பள்ளிக் கல்வியில், மத்திய அரசு திட்டம் கீழ் பணியாற்றும், 50 ஆயிரம் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கான, சம்பள பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில் தரம் உயர்த்தப்பட்ட, 1,000 உயர்நிலை, 8,000 நடுநிலை பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட, 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் பள்ளிக்கல்வி பணியாளர்களுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டமான ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்ககமான எஸ்.எஸ்.ஏ., ஆகிய திட்டங்களின் கீழ், மாத சம்பளம் தரப்படுகிறது.
இந்த திட்டங்களுக்கு, மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் மாறுபடும். எனவே, ஒவ்வொரு ஆசிரியருக்கும், மாதந்தோறும் சம்பளம் வழங்க, தனித்தனி அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதனால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் மாதக்கணக்கில் தாமதம் ஏற்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, பள்ளிக்கல்வி பணியாளரில், 1,764 பேர்; இளநிலை உதவியாளரில், 4,393 பேர்; ஆய்வக உதவியாளர்களுக்கு, மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் கடந்த மாத சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை என, புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து, நமது நாளிதழில் கடந்த, 9ம் தேதி செய்தி வெளியானது. இந்நிலையில், பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசின் திட்டத்திலுள்ள பணி இடங்களை, ஓராண்டுக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை, நேற்று, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் வந்துள்ளது. இதனால், இனி, ஓர் ஆண்டுக்கு ஆசிரியர்களுக்கு சம்பள பிரச்னை இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்
செப்டம்பர் 15ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில், வரைவு வாக்காளர் பட்டியல், அடுத்த மாதம், 15ம் தேதி வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதும், அன்றைய தினம் முதல், அக்டோபர் 14ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்படும்.
அத்துடன், செப்டம்பர் 20 மற்றும் அக்டோபர் 4ம் தேதிகளில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படும். இந்த சிறப்பு முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, நவம்பர் 16ம் தேதிக்குள், நடவடிக்கை எடுக்கப்படும்.இதன்பின், துணை வாக்காளர் பட்டியல், டிசம்பர் 15லும், இறுதி வாக்காளர் பட்டியல், 2016 ஜனவரி 11ம் தேதியும் வெளியிடப்படும். 'வாக்காளர் பட்டியலில் இருந்து, வாக்காளர் பெயரை நீக்குவதற்கு முன், தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அதிகாரி, உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர், வாக்காளர் பட்டியலை சரி பார்க்க, வீடு வீடாக செல்லும்போது, அரசியல் கட்சிகளின் பூத் ஏஜன்டுகளை, உடன் அழைத்து செல்லலாம்' என்றும், தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.
14, 15ல் விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை
சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும், 14, 15ம் தேதிகளில், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.நாட்டின், 69வது சுதந்திர தினம், வரும், 15ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமைக்கு முதல் நாள், அரசு விடுமுறை தினமாக வரும் போது, ஆசிரியர்கள், மூன்று நாட்கள் சேர்த்து விடுமுறை எடுத்து விடுவர். அதை தவிர்க்க, இந்த ஆண்டு, அனைத்து கல்வி நிறுவனங்களிலும், சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறையிலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், அரசு பள்ளிகளில், வரும், 14, 15ம் தேதிகளில், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினமான, 15ம் தேதி, கட்டாயம் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது