இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, June 09, 2015

மழலையர் முன்பருவ கல்வி.வரைவு வழிகாட்டுதல்.வெளியீடு

மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான (பிளே ஸ்கூல்) வரைவு வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒன்றரை வயது நிறைவு செய்த குழந்தைகளை மட்டுமே பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இதில் வகுக்கப்பட்டுள்ளன. இந்த வரைவு வழிகாட்டுதல்- 2015, www.tn.gov.inschooleducation என்ற இணையதளத்தில் பொது மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வழிகாட்டுதல் இறுதி செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், மூன்று மாதங்களுக்குள் அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அங்கீகாரம் பெறாமல் செயல்படும் மழலையர் முன்பருவப் பள்ளிகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை- வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் பொதுநல வழக்கு ஒன்றை அண்மையில் தொடுத்திருந்தார். இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த நீதிமன்றம், மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்காக ஏற்கனவே 6 வார அவகாசம் அளித்திருந்தது. "நீதிமன்றம் பல தடவை உத்தரவிட்ட பிறகும், அந்த விதிமுறைகளை வகுத்து அவற்றை இறுதி செய்வதில் அரசுத் தரப்பில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அடுத்த விசாரணைக்குள் (6 வாரத்துக்குள்) இந்த விதிமுறைகளை இறுதி செய்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என்று கூறி, வழக்கு விசாரணையை ஜூன் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான வரைவு வழிகாட்டுதலை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: வரைவு வழிகாட்டுதல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள், தமிழகம் முழுவதும் உள்ள மழலையர் முன்பருவப் பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாக வேண்டும். இந்தப் பள்ளிகளுக்கு அங்கீகாரம், அங்கீகாரம் புதுப்பிப்பு வழங்கும் அதிகாரம் மாவட்ட தொடக்கப் பள்ளி கல்வி அலுவலருக்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும். அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்னதாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளிக் கட்டடம்: பள்ளிக் கட்டடமானது சொந்தக் கட்டடமாகவோ அல்லது குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்ட கட்டடமாகவோ இருக்க வேண்டும். மேலும், கான்கிரீட் கட்டடமாகவும், இரும்பு முள்வேலியால் சூழப்படாததாகவும் இருக்க வேண்டும்.

அத்துடன் ஒரு குழந்தைக்கு 10 சதுர அடி என்ற அளவில் வகுப்பறை இடப் பரப்பு அமைந்திருக்க வேண்டும். வகுப்பறைகள் இரண்டு நுழைவு வாயில்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். வயது வரம்பு: மழலையர் முன்பருவப் பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைக்கு ஜூலை 31-இல் ஒன்றரை வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். இந்த வயது உச்ச வரம்பில் சலுகை அளிக்கப்படக் கூடாது. மேலும் ஒரு வகுப்பறைக்கு 15 குழந்தைகள் என்ற அளவில் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் இந்தப் பள்ளிகளில் இடம் பெற்றிருக்க வேண்டும். பள்ளியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்களின் குழந்தைகள் மட்டுமே பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும்.

ஆசிரியர் தகுதி: இந்தப் பள்ளிகளில் ஆசிரியராகச் சேர்க்கப்படுபவர்கள், பிளஸ் 2 முடித்து தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும். அல்லது மனை அறிவியலில் பட்டப் படிப்பு அல்லது பி.எட். அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டயப் படிப்பு முடித்தவர்களாக இருத்தல் அவசியம். இந்தப் பள்ளிகளில் குழந்தைகள் கண்டிக்கப்படக் கூடாது, தினமும் 3 மணி நேரத்துக்கு மேல் பள்ளிகள் இயங்கக் கூடாது. காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு பள்ளி மூடப்பட்டு விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இந்த வரைவு வழிகாட்டுதலில் விதிக்கப்பட்டுள்ளன.

கருத்துகளை அனுப்பலாம்... மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான வரைவு வழிகாட்டுதல்- 2015, www.tn.gov.inschooleducation என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை வருகிற 22-ஆம் தேதிக்குள் "இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம், டி.பி.ஐ. வளாகம், கல்லூரிச் சாலை, சென்னை - 600 006' என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பழைய வாக்காளர்களுக்கும் வண்ண ஸ்மார்ட் கார்டு

பழைய வாக்காளர்களுக்கும் வண்ணமயமான 'ஸ்மார்ட் கார்டு' வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஜன.,5 முதல் வாக்காளர்களுக்கு'ஸ்மார்ட் கார்டு' வடிவிலான அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இவற்றில் உள்ள 'பார் கோடில்' வாக்காளரின் அனைத்து விபரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டை குஜராத் அகமதாபாத்தில் தயாரிக்கப்படுகிறது.

இதனால் 2014 அக்.,15 பின் சேர்ந்த புதிய வாக்காளர்களுக்கு மட்டுமே 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படுகின்றன. அதற்கு முன் சேர்ந்த பழைய வாக்காளர்களிடம் கருப்பு, வெள்ளை நிற காகிதத்தில் 'லேமினேசன்' செய்யப்பட்ட சாதாரண அடையாள அட்டைகளே உள்ளன. தற்போது அவற்றையும் 'ஸ்மார்ட் கார்டில்' வடிவில் வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கு்'ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வாக்காளர் பட்டியல், ஆதார் எண் ஒப்பிடும் பணி முடிந்தவுடன் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும். பழைய வாக்காளர்கள் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்,” என்றார்.

Monday, June 08, 2015

Aeeo panel list

Click below

https://app.box.com/s/iom1b3u3adcqj4jknvpd8khclh84gyd9

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்.பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் 12-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளதை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சிறப்பு ஆய்வு நடவடிக்கைகளை தொழிலாளர் துறை மேற்கொண்டு வருகிறது. கல்வி உரிமைச் சட்டம் (குழந்தைகளின் சுதந்திரமான கட்டாய கல்வி உரிமைச் சட்டம்) 2009-இன் படி, 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி, குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதைத் தடுத்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பும் பணியை தொழிலாளர் நலத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அரசின் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்.), 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து குழந்தைத் தொழிலாளர்கள் விவரங்களைச் சேகரித்து புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் 44 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாகவும், அந்தப் பட்டியலில் 2.75 லட்சம் குழந்தைத் தொழிலாளர்களுடன் தமிழகம் 10-ஆவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புள்ளி விவரம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தீவிர மறு ஆய்வு தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வருகிற 12-ஆம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான தினமாக அனுசரிக்கப்படுவதால், 8-ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, திங்கள்கிழமையன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 9-ஆம் தேதி கையெழுத்து இயக்கமும், 10,11 தேதிகளில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. 12-ஆம் தேதி நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

பள்ளி விடுதிகளில் நூடுல்சுக்கு தடை

பள்ளி விடுதிகள் மற்றும் கேன்டீன்களில் நுாடுல்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இது தொடர்பாக, அதிகாரிகள் கூறியதாவது: பெரும்பாலும் ஆங்கிலோ இந்தியன் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் பலவற்றில் கேன்டீன் உள்ளது. இவற்றில் மதிய நேர உடனடி உணவாக, மேகி நுாடுல்ஸ் விற்கப்படுவதாக தகவல் வந்துள்ளது.

இது தொடர்பாக விரிவான உத்தரவு பள்ளிக் கல்வித் துறை செயலகத்திலிருந்து பிறப்பிக்கப்படும். அதற்கு முன் தாங்களாகவே கேன்டீன்களில் தடை செய்யப்பட்ட பொருட்களை நிறுத்திக் கொள்ள பள்ளி நிர்வாகத்துக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர், என்றனர்.

ரயிலில் அபாயச் சங்கிலி இனி இருக்காது.3000கோடி இழப்பால் மாற்று நடவடிக்கை

ரயில் பயணத்தின் போது, அவசர தேவைக்காக, அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தும் வசதி இனி இருக்காது. இதற்கு மாற்றாக, டிரைவரை மொபைல் போனில் அழைத்து, ரயிலை நிறுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மொபைல் போன் எண்: சமீப காலமாக, அவசியம் இல்லாத சிறிய காரணங்களுக்காகக் கூட, சிலர் சங்கிலியை இழுத்து, ரயிலை நிறுத்துவது வாடிக்கையாக இருக்கிறது.இதன் காரணமாக, ரயில்கள் தாமதமாகச் செல்ல நேரிடுவதோடு, ரயில்வே துறைக்கு இழப்பையும் ஏற்படுத்துகின்றன. இந்த சம்பவங்கள் மூலமாக மட்டும், 3,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில், தெரிய வந்துள்ளது.

இதற்கு தீர்வாக, ரயில் இன்ஜின் டிரைவர் மற்றும் துணை டிரைவர் ஆகியோரின் மொபைல் போன் எண்கள் அச்சடிக்கப்பட்டு, பெட்டிகளில் ஒட்டப்பட்டு இருக்கும். அவசரத் தேவையின் போது, பயணிகள், டிரைவரை மொபைல் போனில் அழைத்து, ரயிலை நிறுத்திக் கொள்ளலாம். என்ன மொழி? பல மொழி பேசுவோர், ரயிலில் பயணிக்கும் போது, பயணி பேசும் மொழியை, டிரைவர் புரிந்து கொள்ள இயலாது. மொபைல் போனில் சிக்னல் கிடைக்காவிட்டாலும், புகார் தெரிவிக்க இயலாது. மொபைல் போனிலும், சிலர் தேவையில்லாமல் டிரைவரை அழைத்து, ரயிலை நிறுத்த வாய்ப்பு உள்ளது. இவற்றையும் ரயில்வே துறை அதிகாரிகள் யோசிக்க வேண்டியுள்ளது.

சுயநிதிப் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு கே.ஜி.முதல் ஒன்றாம் வகுப்பில் மட்டுமே மாணவர்களை சேர்க்கலாம்

தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கே.ஜி., முதல் ஒன்றாம் வகுப்புகளில் மட்டுமே மாணவர்களை சேர்க்கலாம் என, மெட்ரிக்., பள்ளிகள் இயக்குனரகம் தெளிவுப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமானம் பெறும் பெற்றோர் தங்களது குழந்தைகளை தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களில் சேர்க்க கட்டாய கல்வி சட்டம் 2009ன்படி 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப் பட்டுள்ளது.

இதற்கான கல்வி கட்டணத்தை அரசே தனியார் பள்ளிகளுக்கு செலுத்துகிறது. ஒவ்வொரு சுயநிதி பள்ளியிலும் நுழைவு வகுப்புகளில் சேர்க்கலாம் என்ற உத்தரவின்படி கடந்த காலங்களில் கே.ஜி.,முதல், 6 ,9,11ம் வகுப்புகளிலும் மாணவர்களை சேர்த்தனர். 'நுழைவு வகுப்பு' என்பதை தவறாக புரிந்து கொண்ட சில பள்ளிகள் 6, 9, 11ம் வகுப்புகளிலும் மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்கியது. இவர்களுக்கான கட்டண நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் நேர்ந்தது. இது குறித்து சமீபத்தில் வெளியான மற்றொரு உத்தரவில், “தனியார் சுய நிதி பள்ளிகளில் நுழைவு வகுப்பு என்பது கே.ஜி.,முதல் ஒன்றாம் வகுப்பு வரை என்பதை குறிக்கும்.

இதன்படி,அட்மிஷன் வழங்கும் பள்ளிகளுக்கு மட்டுமே கல்விக்கட்டணம் வழங்கப்படும்” என, அதில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, கே.ஜி., முதல் ஒன்றாம் வகுப்புக்கு மட்டுமே அட்மிஷன் வழங்க வேண்டும். அதிகாரி ஒருவர் கூறுகையில், “ 25 சதவீத ஒதுக்கீட்டில் நுழைவு வகுப்பு என, குறிப்பிட்டது கே.ஜி., முதல் வகுப்பை மட்டுமே. கடந்த சில ஆண்டில் தவறாக அட்மிஷன் வழங்கியதால் இதனை மாற்றியமைக்கும் விதமாக புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு முதல் 25 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை சரியான முறையில் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.

Sunday, June 07, 2015

மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை

மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை : பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை

ஆசிரியர்கள் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் உகந்ததாக ஆடை அணிய வேண்டும். மாணவிகளை தொடுவதோ, கிள்ளுவதோ கூடாது. தொந்தரவு செய்வது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார். இது குறித்து பள்ளி கல்வி இயக்குனர் விடுத்துள்ள சுற்றறிக்கை: மாணவ, மாணவிகளுக்கு நல்லதோர் முன்னுதாரணமாகவும், வழிக்காட்டியாகவும் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரும்போது பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் உகந்த ஆடைகளை அணிய வேண்டும். இதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மாணவ, மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசையோ, அரசு சார்ந்த அதிகாரிகளையோ தேவையற்ற விமர்சனம் செய்வது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடத்தைவிதி 12ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்கும் போது 5 நாட்களுக்கு மேல்தான் விடுப்பு எடுக்க வேண்டும். அடிக்கடி மருத்துவ விடுப்பு எடுத்தால், மருத்துவ குழுவிற்கு அனுப்பப்படும். வருடத்திற்கு 3 மாதம் என கணக்கிட்டு விடுப்பு எடுக்க வேண்டும். தலைமையாசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போது உயர் அலுவலரின் அனுமதி இல்லாமல் எடுக்கக்கூடாது. அவ்வாறு விடுப்பில் செல்லும் போது உதவி ஆசிரியர்களிடம் பொறுப்பினை ஒப்படைத்து செல்ல வேண்டும். பள்ளிகளில் அளவைப் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு மற்றும் அனைத்து தபால்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.

பள்ளி வேலை நேரத்தில் வகுப்பை விட்டு வேறு வகுப்பிற்கோ, வேறு அலுவலகத்திற்கோ செல்லக்கூடாது. உதவி ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன் பள்ளி நேரத்தில் பயன்படுத்தக்கூடாது. மாணவர்களை அடிப்பதோ, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கக் கூடாது. மேலும் பெண் பிள்ளைகளை தொடுவதோ, கிள்ளுவதோ, பாலியல் தொந்தரவு செய்வதோ தெரியவந்தால் நடத்தை விதி 20ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூர்விடுப்பு (லோக்கல் ஹாலிடே) தேவைப்படுகிற தலைமையாசிரியர் இரண்டு நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்.  இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்விச்சட்டத்தில் ஒதுக்கீடு 25% பட்டியல் குறித்த தெளிவில்லை

கட்டாய கல்வி உரிமைச் சட்டப் படி தனியார் பள்ளிகள் வழங்க வேண்டிய 25 சதவீத ஒதுக்கீடு குறித்த பட்டியலை மெட்ரிக்குலேஷன்  பள்ளிகள் இயக்ககம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்கள் அதில் தெளிவாக  குறிப்பிடவில்லை.

மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு கொண்டு  வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு  ஆண்டும் மாணவர்கள் சேர்க்கையின் போது, சமூகத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீத இடம்  ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட வேண்டும். இந்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி குழந்தைகளுக்கு கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்று  தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்பட்டாலும் கடந்த 2 ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை  தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு செலுத்த வேண்டிய தொகை மட்டும் ரூ.150 கோடி. ஆனால் அதை அரசு இன்னும் வழங்கவில்லை. இதனால்  தனியார் பள்ளி நிர்வாகத்தினர்,  மேற்கண்ட 25 சதவீத ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு குழந்தைகளை சேர்க்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் கடந்தும் 25 இட ஒதுக்கீட்டில் சேர்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால், 3731  தனியார் பள்ளிகளில்  மாவட்ட வாரியாக  சேர்க்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த விவரங்களை மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் தனது  இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் எல்கேஜி, ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை, 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இடங்கள்  குறித்த  விவரங்களை வெளியிட்டுள்ளது.

இணையத்தில் வெளியிட்டுள்ள பட்டியலில் எல்கேஜி வகுப்புகள் குறித்தும், அதில் உள்ள பிரிவுகள் குறித்தும், மொத்த இடங்கள் குறித்தும் தெரிவிக்– ்கப்பட்டுள்ளது. அத்துடன் 25 சதவீத இடங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள்  கொடுத்த பட்டியல்களை அப்படியே வெளியிட்டுள்ளனர். எத்தனை குழந்தைகள் சேர்க்கப்பட்டனர் என்ற விவரம் இல்லை. மத்திய அரசின் சட்டப்படி  எல்கேஜி வகுப்பில் சேர்க்க அனுமதி உண்டா என்ற விவரங்கள் அதில் இடம் பெறவில்லை.

மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள இடங்களுக்கு ஏற்ப எத்தனை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன என்ற விவரங்களும் இல்லை. குறிப்பாக  சென்னையில் உள்ள 321 பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளில் மொத்த இடங்கள் 11130 உள்ளதாகவும், விண்ணப்பங்கள் 2903 தான் வழங்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு சோப்பு தர உத்தரவு

சத்துணவு சாப்பிடும் முன், மாணவர்கள் கை கழுவ வசதியாக, கட்டாயம் சோப்பு வாங்கி வைக்கவும், சாப்பிடுவதற்கு துருப்பிடிக்காத, ஸ்டீல் தட்டுகள் வாங்கி வைக்கவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின் மதிய உணவுத் திட்டம் மற்றும் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில், தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தை முறையாகச் செயல்படுத்தி, சுவை மற்றும் சுகாதாரம் நிறைந்த உணவு வழங்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பல்வேறு விதிகளை ஏற்படுத்தியுள்ளது. இவை, சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என, நாடு முழுவதும் கள ஆய்வுகளையும் நடத்தி உள்ளது. இதில், துருப்பிடிக்காத தட்டுகள் பல பள்ளிகளில் இல்லை என்றும், மாணவர்கள் விளையாடியதால் ஏற்பட்ட கறைகளையும், பேனா, பென்சில் மற்றும் சாக்பீஸ் கறை படிந்தும் உள்ள கைகளை, சாப்பிடும் முன் கழுவ, 'சோப்பு' மற்றும் தண்ணீர் வசதி இல்லை என்றும் கண்டறிந்துள்ளது. இதுகுறித்து, அனைத்து மாநிலப் பள்ளிகளுக்கும் மத்திய அமைச்சகம் பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளது. அதன் விவரம்: 

நாடு முழுவதும், 304 மாவட்டங்களில் உள்ள, 11,663 பள்ளிகளில், 38 நிறுவனங்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.  மாணவர்கள் சாப்பிடும்போது ஜாதி, மத ரீதியான பாகுபாடுகள் காணப்படவில்லை.  பல இடங்களில் பரிமாறப்பட்ட உணவு சூடாக இல்லாமல், குளிர்ந்த நிலையில் இருந்தன.  உணவு வைப்பதற்கு பள்ளிகளில் துருப்பிடிக்காத, சில்வர் தட்டுகள் இல்லாததால், மாணவர்கள் சாப்பாடு வாங்க சிரமப்பட்டனர்.  சாப்பிடும் முன் அவர்கள் கைகளை சுத்தமாகக் கழுவ, சோப்பு வசதி செய்யப்படவில்லை. 

பல பள்ளிகளில், உணவுப் பொருட்கள் கிடங்குடன் கூடிய சமையலறை கட்டடம் இல்லை.  மத்திய அரசின் நிதியில் பயன்படுத்தாத நிதி மூலம் சில்வர் தட்டுகள், சோப்பு வாங்கி வைத்து மாணவர்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும்; சூடான சாப்பாடு பரிமாற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

Saturday, June 06, 2015

விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு.ஜூன் 3வது வாரத்தில் தேர்வு முடிவு

தமிழகத்தில் பிஎட் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்ததால், ஜூன் 3வது வாரத்தில் பிஎட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 670 பிஎட் கல்லூரிகள் செயல்படுகின்றன. பிஎட் தேர்வுகள் கடந்த மே 8ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடந்தது. 65 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த மே 25ம் தேதி, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம் ஆகிய 6 இடங்களில் நடந்தது.

விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் தற்போது முடிந்துள்ளது. இதையடுத்து, மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் கணினியில் பதிவு செய்யும் பணி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் நடந்து வருகின்றன.

இந்தப் பணிகள் ஒரு வாரத்தில் முடிவடையும் என தெரிகிறது. எனவே பிஎட் தேர்வு முடிவுகள் ஜூன் 3வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.