இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, May 23, 2015

வங்கிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை

வங்கிகளுக்கு மாதத்தில், இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி சீனிவாசன் கூறியதாவது: இந்திய வங்கிகள் சங்கத்துக்கும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்புக்கும், ஊதிய உயர்வு ஒப்பந்தம், இரு மாதங்களுக்கு முன் ஏற்பட்டது. இதையடுத்து, தொடர் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. இந்நிலையில், இரு தரப்புக்குமான விரிவான ஒப்பந்தம், மும்பையில் திங்கட்கிழமை கையெழுத்தாகிறது. புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம், 2017 அக்டோபர், 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். வங்கிகளுக்கு, மாதத்தில், இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை அளிக்க, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு, இதற்கான ஆணையை விரைவில் வெளியிடும். அதைத் தொடர்ந்து, வங்கிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை நடைமுறைக்கு வரும். இவ்வாறு, அவர் கூறினார்.

காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்க தனி இணையதளம்

காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க உதவும் இணையதளம், ஜூன் மாதம் முதல் செயல்பட துவங்கும்,'' என, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா தெரிவித்து உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

காணாமல் போகும் குழந்தைகள் குறித்த தகவல்களை அளிப்பதற்காக, www.koyapaya.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில், காணாமல் போன குழந்தைகளின் படங்கள் மற்றும் தகவல்களை பதிவேற்றலாம்; இதை, போலீசார் மற்றும் இதற்கென அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மட்டுமே செய்ய முடியும்.

காணாமல் போனவர்களை, உலகம் முழுவதும் உள்ளோர், இந்த தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்; அவர்கள் கொடுக்கும் தகவலின் படி, காணாமல் போனவர்களை மீட்க, போலீசார் நடவடிக்கை எடுப்பர். இந்த இணையதளம், முதற்கட்டமாக ஆங்கிலத் தில் வெளியாகிறது. அடுத்து, இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில், மொழிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும். மேலும், 'டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களுடன் இணைப்பு வசதி யும் ஏற்படுத்தப்படும். காணாமல் போகும் குழந்தைகள் குறித்து, பத்திரிகை, 'டிவி', 'கேபிள் டிவி' போன்றவற்றில் அறிவிப்பு வெளியிடுவது குறித்தும் பரிசீலிக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

* நாட்டில், ஆண்டுக்கு, ஒரு லட்சம் குழந்தை கள் காணாமல் போகின்றனர்.

* குக்கிராமங்கள், கிராமப்புறங்களில் காணாமல் போகும் குழந்தைகள் குறித்து, பெரும்பாலானோர் போலீசில் புகார் அளிப்பதில்லை.

Friday, May 22, 2015

மே இறுதிக்குள் பிளஸ் 2 விடைத்தாள் நகல்

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் மே 30-ஆம் தேதிக்குள் விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஆண்டு அனைத்துப் பாடங்களிலும் விடைத்தாள் நகல் கோரி ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

இந்த ஆண்டு இயற்பியல் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை சரிந்துவிட்டது. வெறும் 124 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றனர். உயிரியல் பாடத்திலும் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந் துவிட்டது. பிளஸ் 2 விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஞாயிறு அல்லது திங்கள்கிழமை இந்த விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சோதிக்கப்படும். அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால் அடுத்த வாரத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொரு பாடமாக விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பணிகள் அனைத்தையும் மே இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்களே விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் மறு மதிப்பீடு, மறு கூட்டல் ஆகிய முடிவுகள் ஒரே சமயத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறு கூட்டல், மறு மதிப்பெண்ணுக்குப் பிறகு மதிப்பெண்ணில் மாறுதல் இருந்தால் அவை மேற்கொள்ளப்படும். அதன் பிறகே, பிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிகிறது. உயர் கல்வியில் சேருவதற்கு வசதியாக பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்முறையாக இந்த ஆண்டு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத் தக்கதாக இருக்கும் என்பதால், அசல் மதிப்பெண் சான்றிதழ் சற்றுத் தாமதமாக வழங்கப்படுகிறது.

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

பத்து லட்சம் பேர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, குரூப் - 4 தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. நில அளவர், 702; வரைவாளர், 52; தட்டச்சர், 1,653; இளநிலை உதவியாளர், 2,872; குறுக்கெழுத்து தட்டச்சர், 331; வரித்தண்டலர், 22, உட்பட, பல பதவிகளுக்கான, 4,963 காலியிடங்களை நிரப்ப, குரூப் - 4 தேர்வு, கடந்த ஆண்டு டிச., 21ம் தேதி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்பட்டது.

இதில், நேர்முகத்தேர்வு கிடையாது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும், 'ரேங்க்' அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படுவர். இத்தேர்வுக்கு, 12.72 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; தேர்வில், 10.61 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகளை, நேற்று, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. தேர்வர்கள், http:/www.tnpsc.gov.in/ResultGetg42015rank.html , அல்லது http:/www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில், தங்கள் தரவரிசையை தெரிந்து கொள்ளலாம். இந்த முறை, 10 லட்சம் பேரும் தங்கள் நண்பர்கள், தெரிந்தவர்களின் பதிவு எண்ணை கொண்டு, அதன் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

''ஜூன் 15ம் தேதி முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது; சான்றிதழ் சரிபார்ப்பு தேதி, தேர்வர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்து உள்ளார். தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, ஷோபனா கூறும் போது, ''ஒவ்வொரு தேர்வரின் தரம் என்ன, அவரது குறிப்பிட்ட பிரிவுக்குள் தரம் என்ன என்று, தனித்தனியாக தெளிவாகத் தரப்பட்டு உள்ளது. இதை வைத்து, தேர்வு முடிவுகளை எளிதில் தெரிந்து கொள்ளலாம்,'' என்றார்.

சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு

மத்திய அரசின் உயர் பதவியான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 பதவிகளில், 1,119 காலியிடங்களை நிரப்புவதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு, ஆக., 23ம் தேதி நடக்கிறது; இதற்கு, இன்று முதல் ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் உயர் பதவிகளான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., புதுச்சேரி போலீஸ் சர்வீஸ், இந்தியக் கணக்குகள் துறை அதிகாரி உள்ளிட்ட, 24 வகை பதவிகளுக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வை, மத்திய அரசு நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வின் அறிவிக்கை, இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.

இந்த ஆண்டு, ஆக., 23ல் முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் வேலூர் ஆகிய ஊர்கள், தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இத்தேர்வுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளத்தில், ஆன் - லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, ஜூன் 19ம் தேதி, இரவு 11:59க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று, மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தேர்வின் முழு விவரங்களும், மே 23ம் தேதி எம்ப்ளாய்மென்ட் நியூஸ் பத்திரிகை, www.employmentnews.gov.in, மற்றும் http://www.upsc.gov.in/ இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

முதல்நிலைத் தேர்வுக்குப் பின், முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வின் மூலம், மத்திய அரசு, 1,119 காலியிடங்களை நிரப்பவுள்ளது.

TNPSC Group IV results released


Click below

http://www.tnpsc.gov.in/ResultGet-g42015rank.html

தமிழக அமைச்சரவை இலாகா விபரம்

ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் பெயர் பட்டியல்:வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை பட்டியல்..

1. ஜெயலலிதா (முதல்வர்) - இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, பொது நிர்வாகத்துறை

2. ஓ.பன்னீர்செல்வம் - நிதி, பொதுப்பணித்துறை

3. நத்தம் விஸ்வநாதன் - மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை

4. வைத்திலிங்கம் - வேளாண், நகர்ப்புற மேம்பாடு, ஊரக வீட்டு வசதித் துறை

5. எடப்பாடி பழனிச்சாமி - நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகம், வனம்

6. மோகன் - தொழிலாளர் நலன், ஊரகத் தொழில் துறை

7. வளர்மதி - சமூக நலத்துறை, சத்துணவுத்துறை

8. பழனியப்பன் - உயர்கல்வித்துறை,

9. செல்லூர் கே.ராஜு - கூட்டுறவுத்துறை

10. ஆர்.காமராஜ் - உணவு, இந்து சமய அறநிலையத்துறை

11. தங்கமணி - தொழில் துறை

12. செந்தில் பாலாஜி - போக்குவரத்துத் துறை

13. எம்.சி.சம்பத் - வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை

14. டி.கே.எம்.சின்னையா - கால்நடை பராமரிப்புத் துறை

15. கோகுல இந்திரா - கைத்தறி மற்றும் தணிநூல் துறை

16. எஸ்.பி.வேலுமணி - நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டத்துறை

17. சுந்தரராஜ் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை

18. எஸ்.பி.சண்முகநாதன் - சுற்றுலாத்துறை

19. என்.சுப்பிரமணியன் - ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,

20. ஜெயபால்-மீன்வளத்துறை

21. முக்கூர் என்.சுப்பிரமணியன் - தகவல் தொல்நுட்பத் துறை

22. ஆர்.பி.உதயகுமார் - வருவாய்த் துறை

23. ராஜேந்திரபாலாஜி - செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கத் துறை

24. பி.வி.ரமணா- பால்வளத் துறை

25. கே.சி.வீரமணி - பள்ளிக் கல்வித்துறை,

26. தோப்பு வெங்கடாசலம்- சுற்றுச்சூழல் துறை

27. பூனாட்சி - காதி, கிராமத்தொழில் துறை

28. அப்துல் ரஹீம் - பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை

29. விஜயபாஸ்கர் - மக்கள் நல்வாழ்வுத்துறை

Thursday, May 21, 2015

How to get NHIS card?

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,

நமது மாத சம்பளத்தில் ரூ 150 பிடிக்கும் NHIS 2012 திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2012.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth.

மாவட்ட வாரியான தேர்ச்சி சதவிகிதம்

மாவட்ட வாரியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விகிதம்!

2015 பத்தாம் வகுப்பு தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 98.04 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் 83.78 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 94.04 சதவீதத்துடன் 17வது இடத்தைப் பிடித்துள்ளது.

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்

ஈரோடு - 98.04

விருதுநகர்- 97.98

திருச்சி - 97.62

கன்னியாகுமரி - 97.27

பெரம்பலூர் - 97.25

சிவகங்கை - 96.75

தூத்துக்குடி - 96.74

ராமநாதபுரம் - 96.37

நாமக்கல் - 95.83

கரூர் - 95.76

கோவை - 95.65

திருப்பூர் - 95.23

திருநெல்வேலி - 94.23

மதுரை - 94.21

தஞ்சாவூர் - 94.18

ஊட்டி - 94.09

சென்னை - 94.04

தருமபுரி - 94

கிருஷ்ணகிரி - 93.99

சேலம் - 93.2

திண்டுக்கல் - 92.97

புதுச்சேரி - 92.95

காஞ்சிபுரம் - 92.79

புதுக்கோட்டை - 91.76

தேனி - 90.87

அரியலூர் - 90.7

திருவள்ளூர் - 90.5

நாகப்பட்டினம் - 89.27

வேலூர் - 88.68

விழுப்புரம் - 87.52

கடலூர் - 86.65

திருவண்ணாமலை - 85.42

திருவாரூர் - 83.78

துபாய் - 100

துபாயில் ஒரே பள்ளியைச் சார்ந்த 26 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 26 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில், துபாய் பள்ளி 100 சதவீதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது.

மின் நுகர்வோர் கவனத்திற்கு

மின் நுகர்வோர் கவனத்திற்கு... இனி ரூ.5000 வரை மின் கட்டணத்தை ரொக்கமாக கட்டலாம்!

மின் கட்டணத்தை 5 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கமாக செலுத்தலாம் என்று விதிகளில் திருத்தம் செய்தது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
2 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக மின் கட்டணம் செலுத்தினால் அதனை காசோலையாக செலுத்த வேண்டும் என்ற விதி தற்போது இருந்து வருகிறது. இது சிரமத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து 5 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கமாக செலுத்தும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதே போல் நுகர்வோரிடம் பெறப்படும் காசோலை வங்கியில் பணம் இருந்தும் வேறு காரணங்களுக்காக திரும்பி நேரிட்டால், காசோலை மூலம் மீண்டும் மின் கட்டணம் செலுத்தும் வசதி மீண்டும் ஏற்படுத்தப்படுகிறது.

Wednesday, May 20, 2015

மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள்

எஸ்எஸ்எல்சி (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.

முதல்மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் 19 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள்.
இவர்களில் 4 பேர் மாணவர்கள்.

அவர்கள் விவரம் வருமாறு:

மாநிலத்தில் முதல் இடம்: (499/500)

1.ஜெயநந்தனா, சேலம் - வாழப்பாடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
2.பாரதிராஜா, பாரனம் அரசு உயர்நிலைப் பள்ளி
3.வைஷ்ணவி.ஆர், தஞ்சாவூர் மாவட்டம் - பட்டுக்கோட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

மாநிலத்தில் இரண்டாவது இடம்: (498/500)

1.மானசா.டி, மதுரை மாவட்டம்- - மேலூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
2.சுவாதி.எஸ், திருப்பூர் மாவட்டம் - பிச்சம்பாளையம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி
3.அஸ்விதா காமாட்சி, கோவை மாவட்டம் - சேரிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி
4.நறுமுகை, சேலம் மாவட்டம் - பெத்தநாயக்கன்பாளையம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
5.ஹேமப்பிரியா, சேலம் மாவட்டம் - வாழப்பாடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
6.சஃபா, தஞ்சாவூர் மாவட்டம் - மதுக்கூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

மாநிலத்தில் மூன்றாம் இடம்: (497/500)

1.பிரீத்தி லாவன்யா.ஜி - நீலகிரி மாவட்டம் - மஞ்சூர் அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளி
2.அஞ்சனா பாரதி, கோவை மாவட்டம் - சேரிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி
3.வான்மதி.கே, சேலம் மாவட்டம் - ஆத்தூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
4.வர்ஷினிதேவி, சேலம் மாவட்டம் - ஆத்தூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
5.தமிழரசு.எஸ், நாமக்கல் மாவட்டம் - பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளி
6.தினேஷ்ராஜா.ஆர், நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
7.பாலாஜி.எல், தருமபுரி மாவட்டம் - கிருஷ்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி
8.மகேஸ்வரி.எம், தஞ்சாவூர் மாவட்டம் - தாமரைக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி
9.பிரியதர்ஷினி.எஸ், வேலூர் மாவட்டம் - சோழிங்கர் டி.இ.எம். அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
10.ஜீவிதா.பி, காஞ்சிபுரம் மாவட்டம் - அனகாபுத்தூர் - அரசு மேல்நிலைப்பள்ளி

பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

பள்ளிக் கல்வித்துறை உத்தரவு10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை அரசு பள்ளிகளில் உடனடியாக சேர்க்க வேண்டும்

அரசுப் பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியரை உடனடியாக அதே பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ- மாணவியரை உடனடியாக அவர்கள் படித்த பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அனைத்து மேனிலைப் பள்ளிகளிலும் ஜூன் 15ம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்புகளை தொடங்க வேண்டும். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு அந்த பள்ளியில் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக அளவில் மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் பாடப் பிரிவை அந்த பள்ளியில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டில் ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் படித்த பாடப்பிரிவுக்கு  உடனடியாக இந்த கல்வி ஆண்டில் அதற்கான ஆசிரியர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடப் பிரிவு மாற்றம் செய்ய வேண்டிய நிலை அல்லது புதிய பாடப்பிரிவு ஏற்படுத்த வேண்டி நிலையே உள்ள பள்ளிகளில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தாலுகா அளவில் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்கை குறித்த முன்னேற்ற அறிக்கையை ஒவ்வொரு வாரமும்  பள்ளிக் கல்வி இயக்குரின் மின் அஞ்சல் முகவரியில் அனுப்ப வேண்டும். இவ்வாறு இயக்குநர் கண்ணப்பன் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வு மே23ல்.அறிவிப்பு

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலைத்தேர்வு அறிவிப்பு, கடந்த 16ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 23ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என, அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பணிகளுக்கு நேரடி நியமனம்.இல்லை

பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில், அனைத்து தற்காலிக பணியிடங்களும், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும், என, உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வித் துறையில் ஆசிரியர் தொடர்பான பணி நியமனங்கள், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், அலுவலர் தொடர்பான நியமனங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மூலமும் நடக்கின்றன. இந்த, இரண்டு அமைப்புகளிலும் வராத பல பணிகளுக்கு, துறை ரீதியாக, அரசுத் தேர்வுகள் துறை மூலமும், நேரடியாகவும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில், வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம் மற்றும் தலைமைச் செயலர் அலுவலகத்தில் இருந்து, கல்வித் துறைக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 'அனைத்து நிரந்தர மற்றும் தற்காலிக பணி நியமனங்களும், சம்பந்தப்பட்ட பணி நியமன அமைப்பு அல்லது துறைகள் மூலம், வேலைவாய்ப்பு பதிவு மூப்புப் பட்டியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து பள்ளி, கல்லூரி துறை அதிகாரிகளும் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்திலுள்ள அனைத்து துறைகளிலும், நிரந்தர மற்றும் தற்காலிக நியமனங்கள், வேலைவாய்ப்பு பதிவு மூப்புப் பட்டியல் அடிப்படையில் மட்டுமே நியமிக்க வேண்டுமென்று, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இனி தற்காலிக பணிகளுக்கும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புப் பட்டியல் பெற்று, அழைப்புகள் விடுக்கப்படும்.

சம்பந்தப்பட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுகள் இல்லை என, வேலைவாய்ப்பு அலுவலகம் ஆணை அளித்தால் மட்டும், நேரடி நியமனம் நடக்கும்.

ஜூன் 15 முதல் ப்ளஸ் 1 வகுப்பு தொடங்க உத்தரவு

பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தேர்வு முடிவின் மதிப்பெண் மூலம், பிளஸ் 1 வகுப்புக்கு உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தவும், ஜூன், 15ல் வகுப்புகளை துவங்கவும், பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தற்காலிக சான்றிதழ்: தமிழகத்தில், ஆண்டுதோறும் 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி, ஓரிரு வாரங்கள் கழித்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். பின், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடக்கும். மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவு பட்டியலிடப்படும். ஜூலை முதல் அல்லது இரண்டாம் வாரம் வகுப்புகள் துவங்கும். இதனால், மாணவ, மாணவியர் ஒன்றரை மாதங்கள் தாமதமாக வகுப்புகளுக்கு வந்து, வேகமாக, 'போர்ஷன்' முடிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு, முதன்முறையாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

எனவே, மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, 10ம் வகுப்பு முடிவுகள் வந்ததும், மாணவர்களின் மதிப்பெண் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில், பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர் சேர்க்கையை, தாமதமின்றி விரைந்து முடிக்க அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. சுற்றறிக்கை: இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மாணவர் சேர்க்கையை விரைந்து முடித்து விட்டு, ஜூன் 15ம் தேதி, பிளஸ் 1 வகுப்புகளில் பாடங்களைத் துவக்க வேண்டும் என, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

10th results web adress

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) மாணவமாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். 
www.tnresults.nic.in, 
www.dge1.tn.nic.in, 
www.dge2.tn.nic.in, 
www.dge3.tn.nic.in

இனி எஸ்.டி.டி அழைப்புகளுக்கு 0அல்லது +91 போடத்தேவையில்லை

இனி எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போட தேவையில்லை என செல்போன் முக்கிய நிறுவனங்கள் அறிவித்துள்ளது. தற்போது மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி எனப்படும், செல்போன் எண்ணை மாற்றாமல் மொபையில் ஆபரேட்டரை மட்டும் மாற்றிக்கொள்ள வகை செய்யும் வசதியை குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக சென்னையில் இருந்து மும்பை சென்று அங்கு மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி வசதியை பயன்படுத்த முடியாது. இதற்கு எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போடவேண்டியிருந்தது கட்டாயமாக இருந்தது.
எனவே இடையூறாக இருக்கும் இந்த தடையை நீக்கும்படி தொலைத்தொடர்பு துறை, மொபையில் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டதுடன் வரும் ஜூலை மாதத்துக்குள் அதை செய்து முடிக்க வேண்டும் எனவும் காலகெடு விதிக்கப்பட்டது. அந்த காலகெடு முடிவடைய இருக்கும் நிலையில் ஏர்டெல், வோடபோன், போன்ற முக்கிய நிறுவனங்கள் எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது. மற்ற நிறுவனங்களும் ஜூலை மாத முடிவிற்குள் இதை செய்து முடித்துவிடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.