இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 21, 2015

முன்பதிவு இல்லாத ரயில்வே டிக்கெட் அலைபேசி மூலம் பதிவு வசதி இன்று முதல் அமல்

முன்பதிவு செய்யாமல், சாதாரண டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க, பேப்பர் இல்லாத டிக்கெட் முறை, இன்று முதல் அறிமுகமாகிறது.

சாதாரணமாக, ரயிலில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டில் பயணம் செய்ய, ரயில் நிலையங்களின் டிக்கெட் கவுன்டர்களில் வரிசையில் நின்று, டிக்கெட் பெற வேண்டும். இன்று முதல், டிக்கெட் கவுன்டர்களில் காத்திருக்க தேவையில்லை. 'ஆண்ட்ராய்டு' தொழில்நுட்பம் கொண்ட, ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்யப்படும், அப்ளிகேஷன்கள் எனப்படும் செயலிகள் மூலம், டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். ரயிலில் பயணிக்கும் போது, அலைபேசியில் உள்ள டிக்கெட்டின், 'சாப்ட் காப்பி'யை காண்பித்து பயணம் செய்யலாம். இதனால், பேப்பர் பயன்பாடு குறைவதுடன், ரயில் நிலையங்களில் காத்திருக்கத் தேவையும் இல்லை.

இப்போது முதற்கட்டமாக, ஆண்ட்ராய்டு போன்களில், டிக்கெட் பெறலாம். பிளாக்பெர்ரி போன்ற தொழில்நுட்பங்களில் இயங்கும் போன்கள் மூலம், இப்போதைக்கு இந்த டிக்கெட் எடுக்க முடியாது. என்ன செய்ய வேண்டும்:

* ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் போனில், 'கூகுள் பிளே ஸ்டோர்' செல்ல வேண்டும்.

* ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே துறையின் துணை நிறுவன அப்ளிகேஷனை, 'டவுண்லோடு' செய்ய வேண்டும்.

* அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி, எந்த ஊருக்கு வேண்டுமானாலும், முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்கலாம்.

* டிக்கெட் கட்டணத்தை, 'ரயில்வே இ - வாலட்' எனப்படும், பணம் செலுத்தும் முறைக்காக, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அல்லது, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தின் மூலம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.

* பயணத்தின் போது, அலைபேசியில் உள்ள டிக்கெட் நகலை காண்பித்தால் போதும்; பேப்பர் டிக்கெட் கிடையாது.

உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு வெய்ட்டேஜ் வழக்குகள் இறுதிவிசாரணை வரும் ஜூலை 14 தேதிக்கு

Monday, April 20, 2015

9ம் வகுப்பில் இனி ஆல் பாஸ் கிடையாது


ஒன்பதாம் வகுப்பு வரை நூறு சதவீத தேர்ச்சி என்ற நடைமுறையை ரத்து செய்து விட்டு, தேர்ச்சி விகிதத்தை குறைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரையும் 9ம் வகுப்பு வரை ‘பெயில்’ ஆக்க கூடாது என அரசு உத்தரவு உள்ளது. இந்த நடைமுறையால் மாணவர்கள் கல்வித்தரம் கேள்விக்குறியாகி வருகிறது.

இந்த நடைமுறையால் 50 முதல் 60 சதவீத மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளை எழுத, படிக்க கூடத் தெரியாமல் 10ம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்று வருகின்றனர். பொதுத் தேர்வில்பலர் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கல்வித்துறை நடப்பு ஆண்டு 9ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி என்ற நடைமுறையை நிறுத்தி, தகுதி குறைவாக உள்ள மாணவர்களை வடிகட்ட உத்தரவிட்டுள்ளது.

தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக குறைக்கவும் வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், “9ம் வகுப்பு வரை `ஆல் பாஸ்’ நடைமுறையால் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் தேர்விற்கு மட்டும் வந்து செல்லுகின்றனர். சில ஆசிரியர்களும் பாடங்களை முறையாக நடத்துவதில்லை. 5, 8ம் வகுப்பில் `ஸ்கிரின் டெஸ்ட்’ வைத்து மாணவர்களின் திறனைக் கண்டறிந்து மேல் வகுப்பிற்கு அனுப்ப வேண்டும்” என்றனர்.

ஆசிரியர்கள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு.ஜாக்டோ அமைப்பினருடன் பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது இணையதள முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர்களின் கூட்டமைப்பான “ஜாக்டோ” 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராடிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைப்படி தமிழக ஆசிரியர்களுக்கு சம்பளம், ஒப்பந்த அடிப்படையில் உள்ள ஆசிரியர்களின் பணிவரன்முறை செய்து அவர்களுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட 15 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மார்ச் 8-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 3 லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பேரணி நடத்தினார்கள். பிறகு ஏப்ரல் 19-ந் தேதி 32 மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இந்த நாட்டின் எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு தீர்த்து வைக்கவேண்டியது நம் கடமையாகும்.

போராடிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், அ.தி.மு.க. அரசு கும்பகர்ணன் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. பல்வேறு கோரிக்கைகளுக்காக ஆசிரியர்கள் நடத்தும் இந்த போராட்டத்தை தி.மு.க.வின் சார்பில் ஆதரிக்கிறேன். ஆசிரியர்களை எந்த வித தாமதமும் இன்றி உடனே அழைத்துப்பேசி அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வுகாணுமாறு நான் அ.தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வரும் கல்வியாண்டில் பி.எட்,எம்.எட் இரண்டு ஆண்டாகிறது

பி.எட்., எம்.எட். படிப்புக் காலங்களை வரும் கல்வி ஆண்டில் (2015-16) இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவது நிச்சயம் என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மத்திய அரசின் அனுமதியுடனும் இந்தப் புதிய வழிகாட்டுதல் கொண்டு வரப்பட்டுள்ளது; எனவே, எவ்விதமான தடைகள் வந்தாலும் புதிய வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் - கல்வி-ஆராய்ச்சிக்கும் அதனால் சமூகத்தில் ஏற்படக் கூடிய தாக்கத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைப் போக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இடையே அறிவு பறிமாற்ற கூட்டுறவை ஏற்படுத்துதல் - என்ற தலைப்பிலான மூன்று நாள் சர்வேதச மாநாடு தொடக்க விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சந்தோஷ் பாண்டா பேசியது:

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை (என்.சி.டி.இ. வழிகாட்டுதல் 2014) என்.சி.டி.இ. கொண்டுவந்துள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. வருகிற ஜூலை மாதம் முதல் இந்த புதிய வழிகாட்டுதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த வழிகாட்டுதலின் படி பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படும். இதற்கு தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வருகிற ஜூலை முதல் புதிய வழிகாட்டுதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். பி.எட்., எம்.எட். படிப்புக் காலங்களும் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படும். ஒருவேளை இதற்கு எதிராக தீர்ப்புகள் வருமானால், அதை எதிர்த்து என்.சி.டி.இ. போராடும் என்றார். யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ்: நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆசிரியரின் பங்கு மிகப் பெரியது. இதை உணர்ந்துதான் ஆசிரியர் கல்வியை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. திறன் மிக்க 1000 ஆசிரியர்களை உருவாக்கி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வழங்குவதற்காக ரூ.600 கோடியில் இரண்டு ஆசிரியர் கல்வி மையங்கள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. காக்கிநாடாவிலும், வாராணசியிலும் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 220 ஆசிரியர்களுக்கு பயிற்சிளிக்கப்பட்டு, பல்வேறு பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைக் காலமாக தொழில்நுட்பம் அபார வளர்ச்சி பெற்று வருகிறது. யுஜிசி அண்மையில் இரண்டு இணைய பாடத் தொகுப்புத் திட்டங்களை அறிமுகம் செய்தது. அதாவது அனைத்து 77 இளநிலை படிப்புகள், அனைத்து முதுநிலை பட்டப் படிப்புகளின் பாடங்களும் யுஜிசி இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இதை இலவசமாக மாணவர்கள் பயன்படுத்த முடியும். இதுபோல, பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இதனால் ஆசிரியரே தேவையில்லை என்ற நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இருந்தபோதும், நேரடியாக கற்பித்தலை வழங்குவதும், குறிப்பிட்ட பாடத்துக்கு தொடர்புடைய பிற கருத்துகளை தெளிவுபடுத்தியும், சந்தேகங்களுக்கு நேரடி பதிலளிக்கவும் ஓர் ஆசிரியரால் மட்டுமே முடியும். எனவே, ஆசிரியர்கள் கணினி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதோடு, ஒரு பாடத் துறையோடு நின்று விடாமல் பல்வேறு துறை அறிவையும் பெற்றிருப்பது அவசியம் என்றார்.

1175 வகுப்பறைகள் ஜூனில் திறப்பு

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 1175 கூடுதல் வகுப்பறைகளை ஜூனில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என அத்திட்ட இணை இயக்குனர் நாகராஜமுருகன் தெரிவித்தார். மதுரை, தேனி உட்பட எட்டு மாவட்டங்களின் எஸ்.எஸ்.ஏ., திட்ட பொறியாளர், ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது.

மாநிலத் திட்ட பொறியாளர் சுதாகரன், ஒருங்கிணைப்பாளர் காயத்ரி பங்கேற்றனர். இதில் இணை இயக்குனர் பேசியதாவது: மாநிலத்தில் இந்தாண்டு 128 புதிய தொடக்கப் பள்ளிகள், 42 தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. இவை உட்பட கூடுதல் வகுப்பறைகள் தேவை என்ற அடிப்படையில், 2014-15ல் ரூ.64.62 கோடியில் 1175 புதிய கூடுதல் வகுப்பறைகள் கட்ட எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 50 சதவீத பணிகள் முடிவுற்றன. மீதமுள்ள பணிகளை ஜூனிற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகளில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுசென்று முடிக்க வேண்டும்.

இதுதொடர்பாக திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி உத்தரவின்படி கோவை, விழுப்புரம் மண்டலங்களில் ஆய்வு நடந்தது. இன்று (ஏப்.,21) திருச்சி மண்டலத்தில் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது என்றார்.

திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் அறிவுரைகள்

Click below

https://app.box.com/s/yd2ve6nbrmdldve0sj50xwysp4vgh6do

Sunday, April 19, 2015

பி.எட் படிப்புக்கு தேர்வு தேதி அறிவிப்பு

பி.எட்., படிப்புக்கான தேர்வுகள், மே 8ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை நடக்கின்றன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்ட அறிவிப்பு:மே 8ம் தேதி - இந்திய சமூகத்தில் கல்வி; 9ம் தேதி - கற்றல் உளவியல் மற்றும் மனித வளர்ச்சி, 11ம் தேதி - கல்வி மற்றும் பாடத்திட்ட மேம்பாடு, 12ம் தேதி - விருப்ப பாடங்கள், 13, 14ம் தேதிகளில் மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கும்.

மே 15ம் தேதி - முதுநிலைப் பட்டதாரி மாணவர்களுக்கான கணிதம், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி அறிவியல், வரலாறு, உயிரி அறிவியல், புவியியல், சமூக அறிவியல், வணிகம் மற்றும் கணிதப் பதிவியல், பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியல் பாடத்தேர்வுகள் நடக்கும்.மே 16ம் தேதி - பட்டதாரிகளுக்கான கணிதம், உடற்கல்வி அறிவியல், உயிரி அறிவியல், வரலாறு, புவியியல் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கும்; மே 18ம் தேதி- முதுநிலைப் பட்டதாரிகளுக்கு, மேல்நிலைப் பள்ளிக்கல்வி தொடர்பான கணிதம், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி அறிவியல், வரலாறு, உயிரி அறிவியல், புவியியல், சமூக அறிவியல், வணிகம் மற்றும் கணிதப் பதிவியல், பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

விடைத்தாள் திருத்த வராவிட்டால் ஊதியம் கட்

'பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்துக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து செய்யப்படும்; அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை எச்சரித்துள்ளது.10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, இன்று துவங்குகிறது. சென்னையின் நான்கு மையங்கள் உட்பட, தமிழகத்தில், 75 மையங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

திருத்தம் தொடர்பாக, அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் விடை திருத்து மைய அதிகாரிகள், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். தேர்வுத் துறை இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவுப்படி, இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில், கூறப்பட்டு உள்ளதாவது: விடைத் திருத்தம் குறிப்பிட்ட நாளில் துவக்கப்பட்டு, குறிப்பிட்ட நாளில் முடிக்கப்பட வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற அனைத்துப் பாடங்களுக்கும், ஒரே நேரத்தில் திருத்தம் துவங்கப்பட உள்ளது.

ஒரு ஆண்டுக்கு மேலாக, 10ம் வகுப்பு பாடம் நடத்துவதில், அனுபவம் உள்ள அனைத்து ஆசிரியர்களின் பெயரும், திருத்தப் பணி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள ஆசிரியர்களை, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர், உடனடியாக பள்ளிப் பணியில் இருந்து விடுவித்து, விடைத்தாள் திருத்தப் பணிக்கு அனுப்ப வேண்டும்.திருத்தப் பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு, விடுமுறை தரக் கூடாது. திருத்தப் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு ஊதியம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்களின் விடுமுறை நாள், 'ஆப்சென்ட்' ஆக கணக்கிடப்படும்.அவர்களது விடுமுறை நாள், மொத்த விடுமுறையில் வரைமுறை செய்யப்படாது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7வெளியாகலான்?

'பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாகலாம்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.75 லட்சம் மாணவர்கள் எழுதினர். மார்ச், 5ல் துவங்கிய தேர்வு, 31ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தம், மார்ச், 16ல் துவங்கி, நாளையுடன் முடிகிறது. தற்போது மதிப்பெண் சரிபார்ப்பு, விடை திருத்து மையப் பட்டியல் படி, மதிப்பெண் சி.டி., தயாரிப்பு போன்ற பணிகள் நடக்கின்றன.

22ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி துவங்க உள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:விடைத்தாள் திருத்தும் பணியை, ஏப்ரல், 17ல் முடிக்க திட்டமிட்டோம். சில நாட்கள் நீட்டித்து விட்டது. வரும், 22ம் தேதி முதல், மதிப்பெண் பட்டியல் தயாரிப்புப் பணி துவங்கும். இந்த ஆண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகமாவதால், அதன் தயாரிப்புப் பணி அடிப்படையில், 'ரிசல்ட்' வெளியாகும் தேதி முடிவாகும்.எப்படியும், மே, 4ம் தேதி முதல் 7ம் தேதிக்குள், 'ரிசல்ட்' வெளியாகலாம். பெரும்பாலும், மே, 7ம் தேதியே, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

வருகிற 2015-16ல் 30 பி.எட் கல்லூரிகள் துவங்க வாய்ப்பு

வரும் 2015-16 கல்வியாண்டில் புதிய ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் தொடங்க 30 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறினார்.

"கல்வி ஆராய்ச்சிக்கும் அதனால் சமூகத்தில் ஏற்படக் கூடிய தாக்கத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைப் போக்கும் வகையில், பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இடையே அறிவுப் பரிமாற்றக் கூட்டுறவை ஏற்படுத்துதல்' என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் திங்கள்கிழமை நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறியதாவது:

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரி கலையரங்கில் திங்கள்கிழமை தொடங்க உள்ள இந்த 3 நாள் சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். மாநாடு புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு நிறைவடைய உள்ளது. இதில் தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலர் எம்.ராசாராம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.வணங்காமுடி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இப்போது 640-க்கும் அதிகமான ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

வருகிற 2015-16 கல்வியாண்டில் புதிய ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் தொடங்க 30 விண்ணப்பங்கள் வரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை பரிசீலிக்கப்பட்டு, என்.சி.டி.இ.-யிடம் அளிக்கப்படும். எனவே, வரும் கல்வியாண்டில் 20 முதல் 30 புதிய பி.எட். கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார்

Saturday, April 18, 2015

தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம் நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன் 2G, E , 3G , H ,H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.
1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol. இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.
இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.

➖➖➖➖➖
2). "E" இதுவும் 2G(2.5G)
EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும்.
2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.
இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும்.
இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
➖➖➖➖➖
3). "3G" இது 3G மொபைல் இன்டர்நெட்
UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
4. Symbol "H" இது 3G மொபைல் இன்டர்நெட்
HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்
இதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
5). "H+" இதுவும் 3G மொபைல் இன்டர்நெட்
(Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும்,
1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
6). "4G" இச்சேவை 3G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது.
இதன் வேகம் மிகவும் அதிகம்.
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம்.
அதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு முழுவமும் இச்சேவை வரும் என எதிர்பார்க்க படுகிறது.

Friday, April 17, 2015

அண்ணா பல்கலை பொது நுழைவுத்தேர்வு

அண்ணா பல்கலை அறிவிப்பு பொது நுழைவுத் தேர்வு : மே 16ம் தேதி நடக்கிறது

பொறியியல் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் வழங்கும் தேதியை அண்ணா பல்கலைக் கழகம் நீட்டித்துள்ளது. ெபாறியியல் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு மே 16, 17ம் தேதிகளில் நடக்கிறது. நேரடியாக விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பு மையங்கள் சென்னை, கோவை, சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோயில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மையங்களில் 25ம் தேதி வரை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஒருங்கிணைப்பு மையத்தில் 29ம் தேதி வரை பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரம் வேண்டுவோர் அண்ணா பல்கலைக் கழக இணைய தளத்தில் பார்த்துக் ெகாள்ளலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது

வங்கியில் பொதுவாக பணம் செலுத்த ரிசர்வ் வங்கி திட்டம்

பொதுவான பணம் செலுத்தும் இயந்திரம் அறிமுகம் : ரிசர்வ் வங்கி திட்டம்

எந்த வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்தும் வகையில் பொதுவான இயந்திரத்தை அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

வரிசையில் நின்று விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தும் நடைமுறை, தற்போது பெருமளவு குறைந்துவிட்டது.

இதற்கு பதிலாக இணைய வழி பரிவர்த்தனைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. இதைத் தவிர, தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போதுள்ள நடைமுறையில் ஒரு வங்கி கணக்கில் இருந்து அதே வங்கிக் கணக்குகளில் மட்டுமே உடனடியாக பணம் செலுத்த முடியும்.

ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதைப் போல பணம் செலுத்துவதை பொதுவாகப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.

இந்நிலையில் அனைத்து வங்கிக் கணக்குகளையும் கையாளும் வகையிலான பொதுவான பணம் செலுத்தும் இயந்திரத்தை நாடு முழுவதும் அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thursday, April 16, 2015

பி.இ விண்ணப்பம்

பி.இ பொறியியல் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி இ பொறியியல் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மே முதல் வாரத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜூன் முதல் வாரத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்