இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 07, 2015

அரசு பொது இ-சேவை மையங்களில் ரூ.30 கட்டணத்தில் விரைவில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை

தமிழகத்தில் ஏற்கெனவே ஆதார் அட்டை கிடைக்கப் பெற்றவர்களுக்கு அரசு பொது இ-சேவை மையங்களில் ரூ.30 கட்டணத்தில் பிளாஸ்டிக் (பிவிசி) ஆதார் அட்டை வழங்கும் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையின் அடிப்பகுதியில் உள்ள விவரங்களை வெட்டி அதை அடையாள ஆவணமாக பயன்படுத்துமாறு ஆதார் அட்டை வழங்கும் யூஐடிஏஐ நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது.

நாடு முழுவதும் ஆதார் அட்டை வழங்கும் சேவையை யூஐடிஏஐ நிறுவனம் நேரடியாக செய்து வந்தாலும், தமிழகத்தில் மாநில அரசின் அறிவுறுத்தல்படி மக்கள்தொகை பதிவேடு திட்ட முறையில் தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் ஆதார் அட்டைக்கான விவரங்களை பதிவு செய்து வருகிறது. எனவே யூஐடிஏஐ நிறுவனத்துக்கு தமிழகத்தில் அலுவலகம் திறக்கப்படவில்லை.

அதனால் ஆதார் அட்டை தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ வேறு அட்டை பெறுவதில் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. அதற்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பொது இ-சேவை மையங்களில் ஆதார் அட்டைகளை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 254 தாலுகா அலுவலகங்களிலும் பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏற்கெனவே சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று வழங்குவது மற்றும் அரசின் சமூக நல திட்டங்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பதிவும் ஆன்லைனில் செய்யப்படுகின்றன. மேலும் பல்வேறு புதிய சேவைகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக ஏற்கெனவே ஆதார் அட்டை கிடைக்கப் பெற்றவர்களுக்கு ஏடிஎம் கார்டு வடிவில் பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளை வழங்கும் சேவை விரைவில் தொடங்க உள்ளது.

இது தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த அட்டையை வழங்குவதற்கான உரிமத்தை யூஐடிஏஐ நிறுவனத்திடமிருந்து அரசு கேபிள் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி ரூ.30 கட்டணத்தில் பிவிசி என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக்கில் வண்ண ஆதார் அட்டை வழங்கப்படும். இதை வங்கி ஏடிஎம் மற்றும் பான் அட்டைகளோடு சேர்த்து பாக்கெட்டில் வைத்துக்கொள்வது எளிது. இதற்காக யூஐடிஏஐ நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 196 பிரிண்டர்கள் சம்பந்தப்பட்ட பொது இ-சேவை மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இச்சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும். ஆதார் அட்டைக்கு உரியவர் தனது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆதார் அட்டை பதியும்போது வழங்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு என்று அழைக்கப்படும் ஓடிபி எண்ணை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே பிளாஸ்டிக் ஆதார் அட்டையை பிரின்ட் செய்ய முடியும். விரைவில் கருவிழி படலத்தை பதிவு செய்து அதன் மூலம் சம்பந்தப்பட்ட நபரை அங்கீகரிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். ஒரு நபர் எத்தனை அட்டைகளை வேண்டுமானாலும் தலா ரூ.30 கட்டணத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த அட்டையை வேறு நபர் பெற வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார். அரசு பொது இ-சேவை மையங்களில் வழங்கப்படவுள்ள ஏடிஎம் கார்டு வடிவிலான பிளாஸ்டிக் (பிவிசி) ஆதார் அட்டை.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு ஜனவரி 2015 முதல் வழங்க இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தனித் தேர்வர்கள் பொதுத்தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2015-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மே 1-ஆம் தேதியன்று பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்த தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையங்களில் தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை ஏப்ரல் 15 முதல் 21-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125, பதிவுக் கட்டணமாக கூடுதலாக ரூ.50 செலுத்த வேண்டும்.

இந்தக் கட்டணத்தை பணமாகச் செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பிற்குக் கீழ் படித்து இடையில் நின்றவர்களும் தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். ஆனால், பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இணையதள விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் ஏதேனும் ஒரு நகலை இணைக்க வேண்டும். இதற்கு தத்தகல் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வழங்கப்படாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அனைத்து வகை கடன்களுக்கான அடிப்படை வட்டி வகிதம் 0.15 சதவீதம் குறைக்கப்பட்டு, 9.85 சதவீதமாக நிர்ணயித்து ஸ்டேட் பாங்க் அறிவித்துள்ளது. இந்த வட்டி குறைப்பு வரும் 10ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, April 06, 2015

வீடு வீடாகச்சென்று ஆதார் அட்டை சேர்க்க ஏற்பாடு

வீடுவீடாகச் சென்று வாக்காளரின் ஆதார் மற்றும் கூடுதல் விவரத்தை சேகரிப்பதற்கான பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.

இதுகுறித்து நிருபர்களுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி வருமாறு:–

ஆதார் சேர்ப்புத் திட்டம்
வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் பிழையில்லாமல் இருப்பதற்காக மார்ச் 3–ந்தேதியில் இருந்து தேசிய அளவில் என்.இ.ஆர்.பி.ஏ.பி. என்ற திட்டத்தை இந்திய தேர்தல் கமிஷன் செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின்படி, வாக்காளர்களின் ஆதார் எண், தொலைபேசி, செல்போன் எண்கள், இ–மெயில் முகவரி போன்ற கூடுதல் விவரங்கள் பெறப்பட்டு, வாக்காளர்களின் அடையாள விவரங்களுடன் சேர்க்கப்படும்.

இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு வீட்டுக்கும் வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்கள் (பி.எல்.ஓ.) வருகைதர உள்ளனர். மார்ச் 25–ந்தேதியில் இருந்து வரும் வீடுகளுக்கு வந்து விவரங்களை பி.எல்.ஓ. சேகரிப்பார்கள். இந்தப் பணியில் 64ஆயிரத்து 99 பேர் ஈடுபடுகின்றனர். தகவல்கள் பெறுதல், தகவல்களை பதிவு செய்தல், தகவல்களை இணைத்தல் என்ற மூன்று முறைகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறோம்.

வீட்டுக்கு வருவார்
ஒரு வாக்குச்சாவடிக்கு கிராமங்களில் ஆயிரத்து 200 வாக்காளர்களும், நகர்ப்புறங்களில் 1,500 வாக்காளர்களும் உள்ளனர். அதாவது, ஒரு வாக்குச்சாவடிக்கு சுமார் 300 முதல் 400 குடும்பங்கள் அடங்கும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் பி.எல்.ஓ. வருகை தருவார்.

அவரிடம் அந்த குடும்பத்தினரின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் விவரங்கள் அடங்கிய தாள் இருக்கும். அதில் கூடுதலாக சேர்க்கப்பட வேண்டிய விவரங்களுக்கான பட்டியல் இடம் பெற்றிருக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் அவர் விசாரித்து, தேவையான தகவலை அங்கிருந்தே அவர் எழுதுவார்.

திருத்தங்கள் செய்யலாம்
மேலும், இறந்து போன உறவினர்களின் பெயர் நீக்கம்; வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேலான இடத்தில் பெயர் இருந்தால் அதன் நீக்கம்; பெயர் திருத்தம்; இடம் மாறியவர்கள் விவரம்; புகைப்படம் மாற்றம் போன்ற திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் அந்த அலுவலரிடம் இருக்கும்.

என்னென்ன திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை கூறினால் அந்த விண்ணப்பத்தை அங்கேயே வைத்து நிரப்பிக் கொடுத்துவிடலாம். அனைத்துத் தகவல்களும் உண்மையானவை என்று குடும்பத்தாரிடம் உறுதி செய்துவிட்டு, அவற்றை தனது கம்ப்யூட்டரில் அலுவலர் சேகரித்துக் கொள்வார்.

தனி மென்பொருள்
ஆதார் அட்டை இருந்தால் அதன் நகலை அலுவலரிடம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அவரே அதை படம் பிடித்துக் கொள்வார். ஆதார் எண் இல்லாதவர்கள், அதற்காக விண்ணப்பித்து இருந்தால் அதற்கான இ.ஐ.டி. நம்பரை கொடுக்கலாம். அதுவும் இல்லாவிட்டால், ஆதார் எண் தரப்படவில்லை என்று குறித்துக் கொள்வார்.

இப்படி அவர் ஒவ்வொரு வீடாகச் சேர்த்த விவரங்கள் அனைத்தையும் தேர்தல் நடத்தும் அதிகாரி (இ.ஆர்.ஓ.) அல்லது உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் (ஏ.இ.ஆர்.ஓ.) கொடுப்பார். அவர்களிடம் தனி மென்பொருள் உள்ளது.

பணிகள் தீவிரம்
அதன்படி, வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள தகவல்கள், கூடுதலாக பெறப்பட்ட தகவல்கள், ஆதார் விவரங்கள் போன்றவை தனித்தனியாக கம்ப்யூட்டர் திரையில் தெரியும். அவற்றை அவர்கள் சரிபார்ப்பார்கள். பின்னர் ஆதார் விவரங்கள் உட்பட வாக்காளரிடம் பெற்ற அனைத்து தகவல்களும் ஒன்றாக சேர்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுவிடும்.

அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை 13 லட்சம் வாக்காளர்களின் புதிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து வாக்காளர்களிடம் தகவல்களை சேகரித்து வருகின்றனர். இந்தப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இனி ஒரே அட்டைதான்
பதிவு செய்யப்பட்ட விவரங்களை இணைத்ததும், இந்தியாவின் எந்த இடத்திலும் வேறு வாக்காளர் அடையாள அட்டை பெறத் தேவை எழாது. அதை பெறவும் முடியாது. ஏனென்றால், இந்தியா முழுவதும் ஒருவருக்கு ஒரே ஆதார் எண் இருப்பதால், அதனுடன் இணைக்கப்பட்டுவிட்ட பிறகு, ஒருவருக்கு ஒரு வாக்காளர் அடையாள அட்டை என்றாகிவிடும்.

எனவே ஓரிடத்தில் இருந்து இடம் மாறிச் சென்றவர் அடுத்த இடத்தில் மற்றொரு வாக்காளர் அடையாள அட்டையை பெறும் நிலை இனி எழாது. அதுபோல் போலி வாக்காளர் பெயர்ப் பதிவுகள் போன்றவை தவிர்க்கப்படும்.

ஒரே ‘‘டேட்டா பேஸ்’’
தற்போது தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் உள்ள வாக்காளர்களின் தகவல்களை ஒரே மையத்தில் (டேட்டா பேஸ்) இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் இணைக்கப்படும்போது, ஆதார் பதிவிலுள்ள முகவரிக்கும், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள முகவரிக்கும் வித்தியாசம் இருந்தால், அதுபற்றி வாக்காளர்களுக்கு இ–மெயில் மற்றும் செல்போன் ஆகியவற்றுக்கு தகவல் அனுப்பி, முகவரியை உறுதி செய்ய கோரப்படும்.

TNPSC குரூப் 2&4 தேர்வு இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு

தமிழக அரசுத் துறையில், 1,000 குரூப் - 2 பணியிடங்கள் மற்றும் 60 குரூப் - 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று, டி.என்.பி.எஸ்.சி., (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவர் பாலசுப்பிரமணியன் கூறினார்.
உயர் நீதிமன்றத்தில்:

தட்டச்சர் பணி, தோட்டக்கலை அலுவலர் பணி மற்றும் குரூப் - 2 பணிகள் ஆகியவற்றுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடந்து வருகிறது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுப் பணிகள் முன்பை விட விரைவுபடுத்தப்பட்டு, மிகவும் வெளிப்படையான முறையில் நடக்கிறது; தேர்வு முடிவுகள் தாமதமின்றி வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு நடந்த மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், இவ்வார இறுதியிலும், குரூப் - 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியிலும் வெளியிடப்படும். ஏற்கனவே தகுதித் தேர்வு நடத்தப்பட்ட, குரூப் - 1 பதவிகளுக்கு, மே 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு அரசுத் துறைகளில், 50 ஆயிரம் காலியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது. புதிய பணி நியமனத்துக்கான பட்டியல், அலுவலர் தேர்வுக் குழு பட்டியலின் படி நடக்கும். குரூப் - 2 பதவிகளுக்கு, 1,000 இடங்கள் காலியாக உள்ளன. இதேபோல், சப் - கலெக்டர், போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் வணிகவரி அதிகாரி போன்ற, குரூப் - 1 பதவிகளுக்கு, 60 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கான தேர்வு தேதி, இம்மாத இறுதிக்குள் வெளியிட வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

ப்ளஸ் 2 தேர்வில் பொருளியல் பாடத்தில் 2கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்

பிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

பிளஸ் 2 பொருளாதார பாட விடைத்தாள் திருத்துவதற்குத் தடைவிதிக்கக் கோரி தமிழ்நாடு முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் எம்.சந்திரன் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், பிளஸ் 2 பொருளாதார பாடத்தேர்வு கடந்த மார்ச் 27 ஆம் தேதி நடைபெற்றது. இதில் "ஏ' பிரிவில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் 18, 20 ஆம் கேள்விகள் தவறானதாகவும் விடையளிக்க முடியாததாகவும் உள்ளன. மேலும் "டி' பிரிவில் 78 ஆவது கேள்வி கடினமானதாக உள்ளது. 20 மதிப்பெண்கள் அளிக்கக்கூடிய இந்தக் கேள்வி, தலா 10 மதிப்பெண் அளிக்கக்கூடிய இரு கேள்விகளை ஒருங்கிணைத்து கேட்கப்பட்டுள்ளது. பாடப் புத்தகத்தில் உள்ள 10 பக்கங்களில் இருந்து விடையளிக்கக் கூடியதாக இந்தக் கேள்வி உள்ளது.

குறிப்பிட்ட கேள்விக்கான விடை பொருளாதார பாடத்தில் தேவை, விநியோகம் என்ற பாடத்தில் உள்ளது. புத்தகக் குழு பரிந்துரைப்படி இந்தப் பாடத்தில் இருந்து புத்திக் கூர்மையை பரிசோதிக்கும் கேள்வி கேட்கப்பட வேண்டும். ஆனால் பயன்பாடு அடிப்படையில் கேள்வி இடம் பெற்றுள்ளது. இது தவறாகும். கடந்த 10 ஆண்டுகளாக இது போன்ற கடினமான கேள்வி கேட்கப்படவில்லை. எனவே வடிவமைப்பு விதிகளுக்கு மாறாக கேள்வி கேட்கப்பட்டு உள்ளதால் 18, 20, 78 ஆவது கேள்விகளுக்கு விடையளித்து இருந்தால் அவர்களுக்கு அதற்குரிய முழு மதிப்பெண்களை வழங்க உத்தரவிட வேண்டும். விடைகளில் தகுந்த மாற்றம் செய்யும் வரையில் விடைத்தாளை திருத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இம்மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஏ' பிரிவில் 18, 20 ஆவது கேள்விகளுக்கு விடையளித்துள்ள அனைவருக்கும் கருணை மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Sunday, April 05, 2015

கடந்த 1986-87 வரையிலான கல்வி பட்டய சான்று ப்ளஸ் 2 க்கு இணையானது

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, கடந்த 1987 ஆம் ஆண்டுக்குப் முன்பாகப் பெறப்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பட்டயச் சான்றானது, பிளஸ் 2 வகுப்புக்கு இணையானது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அண்மையில் வெளியிடப்பட்ட உத்தரவு:

கடந்த 1987-88 ஆம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி பிளஸ் 2 என நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு முன்பு, 1986-87 ஆண்டு வரையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர்ந்து பயில அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இறுதியாக, 1986-87 ஆம் ஆண்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் முதல் ஆண்டில் சேர்ந்தவர்கள், 1987-88-ல் பயிற்சியை முடித்து தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றனர். அதில், ஒரு சில பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள், 1988-ஆம் ஆண்டுக்குப் பிறகே தோல்வியுற்ற பாடங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர். அதுபோன்றே 1986-87 ஆம் ஆண்டுக்கு முந்தைய கல்வி ஆண்டுகளில் இடைநிலை

ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து பயின்று தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களும், பின்னர் வந்த ஆண்டுகளில், தோல்வியுற்ற பாடங்களில் தேர்வு எழுதித் தேர்ச்சி அடைந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, அத்தகையோர் பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர் பயிற்சிச் சான்றுகளையும், பிளஸ் 2 தேர்ச்சிக்கு இணையாகக் கருதப்பட வேண்டிய நிலை உள்ளது.

இந்தக் கருத்தை செயலாக்கத்துக்குக் கொண்டு வர ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் கொண்டு வரவேண்டும். அந்தத் திருத்தம் இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

திருத்தம் என்ன? பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் 1986-87 வரை (கடைசி பிரிவினர்) ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அந்தப் பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்களும், அந்தப் பயிற்சியில் சில பாடங்களில் தோல்வியுற்று

பிறகு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சலுகை அளிக்கப்படுகிறது. அதன்படி, அவர்கள் பெற்ற இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை பிளஸ் 2 வகுப்புக்கு இணையாகக் கருதி உத்தரவு வெளியிடப்படுகிறது என அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

135 ஆண்டு மணி ஆர்டர் சேவைக்கு முடிவு?

135 ஆண்டு கால வரலாறு முடிவுக்கு வருகிறது: தந்தியை தொடர்ந்து மணி ஆர்டருக்கும் மூடுவிழா

தந்தியைத் தொடர்ந்து மணி ஆர்டருக்கும் மூடுவிழா நடத்த அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 135 ஆண்டு கால மணி ஆர்டர்  வரலாறு முடிவுக்கு வருகிறது. நாடு முழுவதும் முன்பு மோர்ஸ் முறையில் இருந்த தந்தி முறை, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக படிப்படியாக  வழக்கொழிந்தது. தற்போது மக்கள் தகவல் தொடர்புக்காக  எஸ்எம்எஸ், இமெயில், செல்போன் என வளர்ச்சி அடைந்து விட்டதால் தந்தி முறையை  கைவிட்டனர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து தபால் நிலையங்களிலும்  பயன்பாட்டில் இருந்த தந்தி முறை முடிவுக்கு வந்தது.
தற்போது தபால் நிலையங்களை பணம் வினியோகிக்கும் மையங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் தற்போது நடைமுறையில் உள்ள எலெக்டரானிக் மணி ஆர்டர்  முறை கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது  தந்தியைத் தொடர்ந்து படிவத்தை நிரப்பி பணம் அனுப்பும் முறையான மணி ஆர்டர் முறையை  முடிவுக்கு கொண்டு வர அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.  இதுகுறித்து தபால்துறை துணை தலைவர் ஷிகா மாத்தூர் குமார் கூறுகையில், தற்போது உடனடியாக பணத்தை பெறும்  வகையிலான எலெக்ட்ரானிக்  மணியார்டர் முறை புழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே 135 ஆண்டு கால பழமையான படிவத்தை நிரப்பி தபால் மூலம் பணம் அனுப்பும்  மணியார்டர் முறைக்கு மூடுவிழா நடத்த அஞ்சல் துறை ஆலோசித்து  வருகிறது என்றார். நாடு முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் அதிகமான தபால் நிலையங்கள் மூலமாக நேரடி பணம் பட்டுவாடா செய்யும்  நடைமுறை செயல்பட்டு வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

Saturday, April 04, 2015

2016-17 ல் ப்ளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம்

பிளஸ் 1 பாடத்திட்டம் 2016-17ம் கல்வி ஆண்டிலும் பிளஸ் 2 பாடத்திட்டம் அதற்கு அடுத்த கல்வி ஆண்டிலும் மாற்றி அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் 10ம் வகுப்பிற்கு பின்னர் பியூசியும் அதைத் தொடர்ந்து பட்டப்படிப்பு என்ற முறையும் கடந்த 1979ம் ஆண்டு வரை அமலில் இருந்தது. இந்தக் கல்வி முறை 1980ல் மாற்றம் செய்யப்பட்டு பியூசி கல்வி அகற்றப்பட்டது.

அதற்குப் பதிலாக எஸ்எஸ்எல்சியை தொடர்ந்து பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டம் மேல்நிலைக்கல்வி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்தே உயர்கல்வி பயில முடியும். இந்த கல்வித்திட்டம் அறிமுகமான கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் 38 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து தற்போது தேர்ச்சி 90 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆயினும் பிளஸ் 2வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து மருத்துவம், இன்ஜினியரிங் போன்ற உயர் கல்வியை தேர்வு செய்யும் மாணவர்கள் திறமையற்றவர்களாக விளங்குகின்றனர்.

குறிப்பாக பொறியியல் கல்வி பயிலும் பல மாணவர்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் அரியர்ஸ் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2வில் நன்றாக பயின்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கூட உயர் கல்வியில் திணறும் நிலை நிலவுகிறது. இதுகுறித்த ஆய்வில் மாணவர்கள் உயர் கல்வி பயில ஏற்ற அளவில் அவர்களது மேல்நிலைக் கல்வி பாடத்திட்டங்கள் போதுமானதாக இல்லை என்பது தெரியவந்தது. நவீன உயர்கல்வி பாடங்களை சிரமமின்றி கற்பதற்கும் எதிர்கால வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவேண்டிய அவசியம் உணரப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படாமல் இருப்பதும் மாணவர்களின் உயர்கல்வியில் தடுமாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது. இதையடுத்து பேராசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வியாளர்கள் கொண்ட உயர்மட்ட குழு முழுமையாக ஆய்வு செய்து பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்த விபரங்களை தயார் செய்தனர்.

பின்னர் அதை கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பார்வைக்கும் வழங்கி பல்வேறு திருத்தங்களுக்குப் பின்னர் இறுதி வடிவம் கொடுத்து கடந்த ஆண்டே கல்வித்துறைக்கு சமர்ப்பித்தனர். இதை இறுதி ஆய்வு செய்த கல்வித்துறை அரசின் அனுமதி பெற்று பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது. அனேகமாக வரும் 2016-17ம் கல்வி ஆண்டில் பிளஸ் 1 கல்விக்கும், அதற்கு அடுத்த கல்வியாண்டான 201718ல் பிளஸ் 2 கல்விக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது. இதை முறைப்படி அரசு அறிவிக்கும் என ஆசிரியர்கள் கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு அறிவித்ததும் புதிய பாடத்திட்டங்களுடன் கூடிய பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணி நடப்பு கல்வி ஆண்டிலேயே தொடங்க வாய்ப்பு உள்ளது.