இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, February 17, 2015

வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்

வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி வருகின்ற 25 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்தது.
ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு இந்தியா முழுவதும் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.

இந்த தகவலை இந்திய வங்கிகள் சங்கத்துக்கும் மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்பின்னரும் மார்ச் மாதம் 16 ஆம் தேதிக்குள் ஊதிய உயர்வு தொடர்பான உடன்பாடு ஏற்படவில்லை என்றால் மார்ச் 16 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய நேரிடும் என்று கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 நாட்கள் வேலைநிறுத்தம் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும் இதனால் வங்கியின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கும் என்றும் பொதுத்துறை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேசமயம் தடையில்லாத சேவைகளை முடிந்த அளவுக்கு தொடர நடவடிக்கை எடுப்பதாகவும் வங்கிகள் தெரிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்தம் நடைபெறுமானால் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் வங்கிகள் செயல்படாமல் இருக்கும் நிலை ஏற்படும்.
மார்ச் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலைநிறுத்தத்தையும் சேர்த்து மொத்தம் 5 நாட்களுக்கு வங்கிகள் முடங்கும் அபாயம் உள்ளது.

தினம் ஒரு அரசாணை

தினம் ஒரு அரசாணை26
------------------------------------------
அரசுப்பணியில் உள்ளவர்கள் தனது உயர் கல்வி தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாமா???
அரசாணை நிலை  எண்.1069,  பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை  நாள்.28.4.1980ன்படி அரசுப்பணியில் உள்ளவர்கள் தனது உயர் கல்வித் தகுதியை துறை அனுமதி பெற்று அதாவது தடையின்மைச் சான்று பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

கல்வி உரிமைச்சட்ட குறைபாடுகளை களைந்திடுக-சி.பி.எம்

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி!
தீர்மானம்: 8
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் குறைபாடுகளை களைந்து முழுமையாக நடைமுறைப்படுத்தவும் இச்சட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி;
கல்வி இன்று மிகப்பெரும் சமூகப்பிரச்சனையாக மாறியுள்ள சூழலில் அதை சரியான முறையில் எதிர்கொள்ளவும் அனைவருக்கும் சமமான, தரமான கல்வி என்பதை உறுதிப்படுத்தவும் கல்வி வணிகமயத்திற்கு எதிரான போராட்டத்தை கூர்மைப்படுத்தவும், பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்ற அரசுப் பள்ளிகளை பாதுக்காக்கவும், மேம்படுத்தவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) போராடி வருகிறது. இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு கட்டாய கல்வி உரிமைச் சட்ட விதிகள் -2011 மாநில அரசால் இறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கல்வி உரிமைச்சட்டம் உருப்படியாக அமுலாக்கப்பட வில்லை இச்சட்டம் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
கல்வி உரிமைச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்களும் தமிழ்நாட்டில் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி மேலாண்மைக்குழுவில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதித்துவம் முழுமையாக விடுபட்டுள்ளது. இது ஏற்புடையது அல்ல கட்டாய கல்வி உரிமைச் சட்டம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொறுப்புகளையும், அதிகாரங்களையும் வழங்கியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியமான சமூக பொறுப்புகள் உண்டு. ஆனால் பள்ளி மேலாண்மைக்குழு உருவாக்கப்படுவது குறித்தோ, அது கல்வி அதிகாரிகளின் கைகளிலிருந்து எடுக்கப்பட்டு சமூகத்தின் பொறுப்புகளுக்கு மாற்றப்படுவது குறித்தோ, மேலும் செயல்பாட்டிற்கான வழிகாட்டலை உருவாக்கிட வோ தமிழக அரசு தவறியுள்ளது. எனவே, தனியார் பள்ளிகள் உட்பட மேலாண்மக்குழுவை அமைத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளுக்கு தர நிர்ணயம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் விதிக்கப்பட்ட தரவரைவுகளை நிறைவேற்றாத பள்ளிகளின் அங்கீகாரம் மறுக்கப்படும் என கல்வி உரிமைச் சட்டம் வரையறுத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் 2000 த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் அரசின் அங்கீகாரம் இல்லாமலே செயல்படுகின்றன. இச்சட்ட அமலாக்கத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தாததால் தானாகவே காலவதியாகும் சட்டமாக இச்சட்டம் உள்ளது.
சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீதம் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்த பரிந்துரையை பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஏற்க மறுத்து விட்டன. அரசு கண்துடைப்பாக பல உத்தரவுகளை போட்டு தன் கடமையை முடித்துக் கொள்கிறது. ஆனால் இந்த பரிந்துரை பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் பொய்யான பெயர் பட்டியலை தயாரித்து 25 சதவீதம் இடஒதுக்கீடு முழுமையாக கொடுக்கப்பட்ட தாக அரசு சொல்கிறது. அதன்படி இக்கல்வியாண்டில் 89,941 மாணவர்களை சேர்த்துள்ளதாகவும் இதனடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கு 26.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் படி பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் நிகழாண்டில் 2959 மாணவர்கள் மட்டும்தான் மாநிலம் முழுவதும் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்மை தகவலும் வெளிவந்துள்ளது. அரசும் தனியார் பள்ளி முதலாளிகளும் திட்டமிட்டு செய்துள்ள மோசடி தெரியவந்துள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
கல்விக்காக அரசு ஒதுக்கும் சொற்ப நிதி ஒதுக்கீட்டையும் (அரசு-தனியார் கூட்டு) என்ற பெயரில் தனியார் கல்வி முதலாளிகளுக்கு மடைமாற்றம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. பலமட்ட பாகுபாட்டை உருவாக்கும் பள்ளிக் கல்வியை அனுமதிக்கிற இச்சட்டம் கல்வி வணிகமயத்தை கட்டுப்படுத்த தவறியதோடு தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்குகிறது. இது அரசியல் சாசனத்தின் பிரிவு 21 ஏ விற்கு முரணானது ஆகவே இக்குறைபாடுகளை களைந்து சட்டத்தை பலப்படுத்துவதற்கான முறையில் இச்சட்டம் திருத்தப்பட வேண்டும்.
0-18வயது வரை மழலையர் கல்வியை உள்ளடக்கிய முழுமையான பள்ளி கல்வி உரிமையை அரசின் செலவிலும் பொறுப்பிலும் உறுதிபடுத்திட வேண்டும்.
முழுமையான போதுமான நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.
சமூகத்திலும்,பொருளாதாரத்திலும் நலிந்தவர்களுக்கு சிறுபான்மை உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் மாணவர் சேர்க்கையை அரசு உறுதிபடுத்திட வேண்டும். அதற்கான கட்டணம் ஏதும் அப்பள்ளிகளுக்கு அரசு அளிக்கக் கூடாது தனியார் பள்ளிகளுக்கான சமூக பொறுப்பாக இதை உறுதிசெய்திட வேண்டும்.

ஸ்கெட்ச் மற்றும் வண்ண பென்சில்களை பயன்படுத்த கூடாது

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களில் "ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களால் எழுதக் கூடாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கம் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. அதன் விவரம்: விடைத்தாள் முகப்புச் சீட்டில் உரிய இடத்தில் மாணவர்கள் கையொப்பமிட வேண்டும். விடைத்தாளில் ஒரு பக்கத்துக்கு 20 முதல் 25 வரிகள் வரை எழுத வேண்டும். விடைத்தாளின் இருபுறத்திலும் எழுத வேண்டும். விடைகள் தொடர்பான அனைத்துக் கணக்கீடுகளும் விடைத்தாள் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் இடம்பெற வேண்டும். வினா எண்ணை தவறாமல் எழுத வேண்டும்.

விடைத்தாளில் நீலம், கருப்புமை கொண்ட பேனாவால் விடைகளைத் தெளிவாக எழுத வேண்டும். விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் குறுக்குக்கோடு இட வேண்டும். மாணவர்கள் செய்யக் கூடாதவை: வினாத்தாளில் எந்தவிதக் குறியீடும் இடக்கூடாது. விடைத்தாளை சேதப்படுத்தக் கூடாது. விடைத்தாளில் எந்த ஒரு பக்கத்திலும் தேர்வு எண், பெயரை எழுதக் கூடாது. "ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களைப் பயன்படுத்தி எழுதக் கூடாது. விடைத்தாள் புத்தகத்தின் எந்தத் தாளையும் கிழிக்கவோ, நீக்கவோ கூடாது ஆகிய அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஸ்கெட்ச் மற்றும் வண்ண பென்சில்களை பயன்படுத்த கூடாது

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களில் "ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களால் எழுதக் கூடாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கம் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. அதன் விவரம்: விடைத்தாள் முகப்புச் சீட்டில் உரிய இடத்தில் மாணவர்கள் கையொப்பமிட வேண்டும். விடைத்தாளில் ஒரு பக்கத்துக்கு 20 முதல் 25 வரிகள் வரை எழுத வேண்டும். விடைத்தாளின் இருபுறத்திலும் எழுத வேண்டும். விடைகள் தொடர்பான அனைத்துக் கணக்கீடுகளும் விடைத்தாள் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் இடம்பெற வேண்டும். வினா எண்ணை தவறாமல் எழுத வேண்டும்.

விடைத்தாளில் நீலம், கருப்புமை கொண்ட பேனாவால் விடைகளைத் தெளிவாக எழுத வேண்டும். விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் குறுக்குக்கோடு இட வேண்டும். மாணவர்கள் செய்யக் கூடாதவை: வினாத்தாளில் எந்தவிதக் குறியீடும் இடக்கூடாது. விடைத்தாளை சேதப்படுத்தக் கூடாது. விடைத்தாளில் எந்த ஒரு பக்கத்திலும் தேர்வு எண், பெயரை எழுதக் கூடாது. "ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களைப் பயன்படுத்தி எழுதக் கூடாது. விடைத்தாள் புத்தகத்தின் எந்தத் தாளையும் கிழிக்கவோ, நீக்கவோ கூடாது ஆகிய அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

12 ஆண்டுகளுக்குப் பின் ஆசிரியர் சங்கங்கள் கை கோர்ப்பு

கடந்த 2003ல், அரசு ஊழியர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட, 32 ஆசிரியர் சங்கத்தினர், 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒன்றிணைந்து, பல கோரிக்கைகளுக்காக, மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமாகி உள்ளனர்.

ஜாக்டோ கூட்டமைப்பு: முதற்கட்டமாக, அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை, நேற்று முன்தினம் துவக்கினர். இதுகுறித்து, தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர் சங்க, சேலம் மாவட்ட தலைவர் பாரி கூறியதாவது: பலவகை ஆசிரியர்களின் நலனுக்காக செயல்படும், 32 சங்கங்கள், 12 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் ஒருங்கிணைந்து, 'ஜாக்டோ கூட்டமைப்பு' துவக்கி உள்ளனர். சேலம் மாவட்டத்தில், கடந்த 15ம் தேதி நடந்த கூட்டத்தில், 70 நிர்வாகி கள் பங்கேற்றனர். வரும் 22ம் தேதி, சேலத்தில் போராட்டத்திற்கான ஆயத்த கூட்டம் நடக்கிறது. இதில், கூட்டமைப்புக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர்.

அரசு, ஆறாவது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய வேண்டும்; 2004 - 06ல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; அனைத்து ஆசிரியர்களுக்கும், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற, 'ஜாக்டோ' அமைப்பு போராட்டத்தில் ஈடுபடும். முதற்கட்டமாக, வரும் மார்ச் 8ம் தேதி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவோம். ஆர்ப்பாட்டங்களில், மாநிலம் முழுவதும், 32 சங்கங்களை சேர்ந்த ஆசிரியர் பங்கேற்பர். இவ்வாறு, அவர் கூறினார்.

கடும் நெருக்கடி: ஆசிரியர்களைத் தொடர்ந்து, அடுத்து அரசு ஊழியர்களும் களத்தில் குதிப்பர் என தெரிகிறது. 2003ல், அரசை கிடுகிடுக்க வைத்ததைப் போல், இப்போதும் கடும் நெருக்கடியை தருவர் என தெரிகிறது. அரசு ஊழியர், ஆசிரியர் கோரிக்கைகள் குறித்து, அரசு உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக தீர்வை எட்டினால், அரசு இயந்திரம் முடங்கு வதை தவிர்ப்பதுடன், மக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் தடுத்து நிறுத்த முடியும்.

1.5 லட்சம் பேர் கைது: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வின், முந்தைய ஆட்சி யின் போது, அரசு ஊழியர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் சேர்ந்து, 'ஜேக்டோ ஜியோ' என்ற கூட்டமைப்பை உருவாக்கி, அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களை ஒடுக்க வழிவகுத்த, 'எஸ்மா, டெஸ்மா' சட்டங்களுக்கு எதிராக, அரசு ஊழியர்களும், ஆசிரியர் களும் உரக்க குரல் கொடுத்தனர். அரசு ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக போராட்டத்தில் குதித்த தால், அரசு இயந்திரம் அடியோடு முடங்கியது. ஆவேசம் அடைந்த ஜெயலலிதா, 1.5 லட்சம் பேரை கைது செய்ய உத்தரவிட்டார். சங்க நிர்வாகிகளை, நள்ளிரவிலும் வீடு புகுந்து, போலீசார் கைது செய்தனர்; பெண் ஊழியர்களையும் விட்டுவைக்கவில்லை. சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர். அதன்பின் போராட்டம் முடிவு வந்த நிலையில், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணிக்கு திரும்பினர். அரசை கிடுகிடுக்க வைத்த இத்தகைய போராட்டத்தை, 12 ஆண்டு களுக்குப் பின் மீண்டும் நடத்த, அரசு ஊழியர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் ஆயத்தமாகி வருகின்றன.

தமிழக ஆளுநர் உரையின் சிறப்பம்சம்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் ரோசய்யா உரையின் சிறப்பம்சம் வருமாறு:

* வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் வரையிலான மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் தர மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

* கோயம்பேடு- ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்.

* சூரிய மின்சக்தியுடன் கூடிய 2.4 லட்சம் பசுமை வீடுகள் ரூ.4,680 கோடியில் கட்டப்பட்டுள்ளன.

* தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டு திட்டத்துக்காக ரூ.2,930 கோடி ஒதுக்கீடு.

* உணவு தானிய உற்பத்தியில் 110.02 லட்சம் மெட்ரிக் டன் என்ற அதிகபட்ச அளவு எட்டப்பட்டுள்ளது.

* 47,735  கறவை மாடுகள், 21.91 லட்சம் வெள்ளாடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

* மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ரூ.18,302 கோடிக்கு கடன் வசதி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* கடந்த 4 ஆண்டுகளில் 3,315 மெகாவாட் மின்னணு உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

* மக்களுக்கு மின்னணு சேவைகளை வழங்கும் முதல் 3 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

* திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.330 கோடி செலவில் நீர் சேமிப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

* குடிநீர்த் தேவையை சமாளிக்க பூண்டி ஏரி மேம்படுத்தப்பட்டுள்ளது.

* மீஞ்சூர், நெமிலிச்சேரியில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

* இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப இது உகந்த தருணம் இல்லை.

* தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் பெற தீவிர முயற்சி.

* மாநிலம் முழுவதும் 200 பொதுச்சேவை மையம் அரசு கேபிள் டிவி மூலம் அமைக்கப்படும்.

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 12 மாநகராட்சிகளை சேர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

* மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைக்கு தேசிய நதிநீர் இணைப்பு திட்டமே நிரந்தர தீர்வு.

* தமிழ் வளர்ச்சிக்காக ரூ.42.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* அரசு கேபிள் டிவி சேவை மூலம் ஏழை மக்களுக்கு நியாயமான கட்டணத்தில் சேவை.

* சரக்கு, சேவை வரிவிதிப்புக்கு ஒத்தகருத்து ஏற்படுத்த தமிழகம் வலியுறுத்துகிறது.

* மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழகத்தில் சிறப்பாக  செயல்படுகின்றன.

* விலைவாசியை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.

* 4,680 கோடி ரூபாயில் 2.4 லட்சம் பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

* தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கம் பேணப்பட்டு வருகிறது.

* தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

* இலங்கை அகதிகள் அமைதியான வாழ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

* ரூ.43.98 கோடியில் தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை தமிழ்ச்சங்க கட்டடம் கட்டப்படும்.

* மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைக்கு பாராட்டு.

Monday, February 16, 2015

தினம் ஒரு அரசாணை

தினம் ஒரு அரசாணை25
------------------------------------------
நூறு வயதிற்கு மேல் வாழும் ஓய்வூதியர்களுக்கு double pension உண்டா???
அரசாணை எண்.42  நிதித்துறை நாள்.07.02.2011ன்படி
80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியதார்களுக்கு கீழ்க்காணும்படி கூடுதல் ஓய்வூதியம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
80-84-வயது-20%
85-89-வயது-30%
90-94-வயது-40%
95-99-வயது-50%
100வயதுக்குமேல்100%
ஆகவே நூறு வயதுக்கு மேல் வாழும் ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக மற்றொரு  ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

நிகழாண்டு ப்ளஸ் 2 தேர்வை 8.43 இலட்சம் பேர் எழுதுகின்றனர்

பிளஸ் 2 பொதுத் தேர்வை 8.43 லட்சம் மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 10.72 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வுக்கு 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை, 10-ஆம் வகுப்புத் தேர்வுக்கு 5,200-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அந்த இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் 31-ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. பிளஸ் 2 தேர்வில் 6,256 பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வில் 11,827 பள்ளிகளைச் சேர்ந்த 10,72,691 மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வை 16,947 மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 33,816 மாணவர்களும் நிகழாண்டு கூடுதலாக எழுதுகின்றனர்.
60,000 மாணவிகள் அதிகம்: நிகழாண்டு பிளஸ் 2 தேர்வை 3,90,753 மாணவர்களும், 4,52,311 மாணவிகளும் எழுத உள்ளனர். மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை 60 ஆயிரம் அதிகமாக உள்ளது. 10-ஆம் வகுப்புத் தேர்வில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 5,40,505 மாணவர்களும், 5,32,186 மாணவிகளும் தேர்வு எழுத உள்ளனர். 10-ஆம் வகுப்பில் தனித்தேர்வர்களாக 50,429 பேரும், பிளஸ் 2 தேர்வில் 42,963 பேரும் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வுக்காக 2,377 தேர்வு மையங்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வுக்காக 3,298 தேர்வு மையங்களும் அமைக்கப்பட உள்ளன.
77 சிறைவாசிகள்: நிகழாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை புழல் சிறைவாசிகள் 77 பேர் எழுதுகின்றனர். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 241 சிறைவாசிகள் எழுதுகின்றனர்.
தமிழ் வழியில்... பிளஸ் 2 தேர்வை 5,50,000 பேரும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 7,30,000 பேரும் தமிழ் வழியில் எழுதுகின்றனர்.
கூடுதல் நேரம்: இந்தத் தேர்வுகளில் கற்றலில் குறைபாடுடையவர்கள், பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுதும் உதவியாளர், ஒரு மொழிப்பாடம் தவிர்ப்பு, கூடுதலாக ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு தனி அறைகளை ஒதுக்கீடு செய்வும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
விடைத்தாள்களைக் கொண்டுவர ஏற்பாடு: கடந்த ஆண்டைப் போலவே, தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு, அதே வாகனங்களில் விடைத்தாள் கட்டுகளை மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள விடைத்தாள் கட்டுகள் சேகரிக்கும் மையங்களுக்குக் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது.
வினாத்தாள் கட்டுகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரால் குழு ஏற்படுத்தப்பட்டு, கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு தேர்வு கண்காணிப்புப் பணிகளுக்காக மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அந்தந்த மாவட்டங்களிலிருந்தும், முக்கியப் பாடங்களுக்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அண்ணாப் பல்கலைக்கழக பேராசிரியர்களும் சிறப்புப் பார்வையாளர்களாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னையில்... சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 144 தேர்வு மையங்களில் 53 ஆயிரம் மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 209 தேர்வு மையங்களில் 57 ஆயிரம் மாணவர்களும் எழுத உள்ளனர்.
புதுச்சேரியில்... புதுச்சேரியில் 33 தேர்வு மையங்களில் 14 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.
10-ஆம் வகுப்புத் தேர்வை 48 தேர்வு மையங்களில் 19 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

தட்டிக்கழிக்கும் அதிகாரிகள்.780 ஆசிரியர்களுக்கு சிக்கல்

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 2011-12ல் 780 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். கல்வித்துறை வழக்கு ஒன்று கோர்ட்டில் நிலுவையில் இருந்ததால் அந்த ஆண்டில் மட்டும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நியமன உத்தரவில் 'தற்காலிக பணியிடம்' என குறிப்பிடப்பட்டது. பொதுவாக ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தது முதல் ஓராண்டில் அவர்களுக்கு 'பணிவரன் முறையும்' அடுத்த இரண்டு ஆண்டுகளில் 'தகுதிகாண் பருவமும்' வழங்கப்படும்.

ஆனால் 'தற்காலிக பணியிடம்' என்ற வார்த்தை உத்தரவில் குறிப்பிடப்பட்டதால் வழக்கமாக 'தகுதிகாண் பருவம்' வழங்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் 'இதுகுறித்து இணை இயக்குனர் தான் வழங்க முடியும்' எனவும்; இணை இயக்குனரை அணுகினால், 'டி.ஆர்.பி., மூலம் பணிநியமனம் செய்திருந்தால் முதல் ஓராண்டில் பணிவரன்முறையும், அடுத்து தகுதிகாண் பருவமும் வழங்கலாம். முதன்மை கல்வி அலுவலர்கள் தான் வழங்க வேண்டும்.

அவரையே அணுகுங்கள்' என்றும் கூறுவதால் மாநில அளவில் 780 ஆசிரியர்கள் 'தகுதிகாண் பருவம்' கிடைக்காமல் தவிக்கின்றனர்.இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சரவணமுருகன் கூறுகையில் ''மூன்று ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு கல்வித்துறை அதிகாரிகள் விரைவில் முடிவு எடுக்க வேண்டும்'' என்றார்.

CPS-விடுபட்டவர்கள் பதிவேற்றல் குறித்து செயல்முறைகள்