இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, February 09, 2015

B.ed படிப்பு புதிய முறை

பி.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. பொறியியல் மற்றும் பி.டெக் படித்த மாணவர்கள் ஆசிரியர் பட்டப் படிப்புகளை படிக்க முடியும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா கூறியுள்ளார்.

ஆசிரியர் கல்விக்கான புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கல்லூரி தலைவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் சார்பில் 2 நாள் கருத்தரங்கு சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் கலந்துகொண்ட சந்தோஷ் பாண்டா பேசியதாவது:

கடந்த 2009-ம் ஆண்டு வகுக் கப்பட்ட ஆசிரியர் கல்விக்கான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் நீதியரசர் வர்மா ஆணையத்தின் பரிந்துரைகள்படி கடந்த ஆண்டு மறுசீரமைக்கப்பட்டன. ஓராண்டு படிப்பாக இருந்த இளங்கலை மற்றும் முதுகலை ஆசிரியர் பட்டப் படிப்புகள், 2 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதற்கான திருத்தப் பட்ட கல்வித் திட்டமும், அரசா ணையும் கல்லூரிகளுக்கு அனுப்பப் பட்டுள்ளது. திருத்தப்பட்ட கல்வித் திட்ட அடிப்படையில் 2-ம் ஆண்டு பாடங்கள் குறித்து வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் கல்லூரிகள் முடிவு செய்ய வேண்டும்.

இளங்கலை ஆசிரியர் படிப்பை மட்டும் நடத்தும் கல்லூரிகள், படிப் படியாக பன்முகத்தன்மை கொண்ட, ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகள் நடத்தும் கல்லூரிகளாக மாற வேண்டும். இந்தியாவில் உள்ள 17 ஆயிரம் கல்லூரிகளில் இதை அமல்படுத்த வேண்டும் என்பதால், இதற்கு கால அவகாசம் நிர்ணயிக்கவில்லை.

பி.ஏ., பி.எஸ்சி., படிப்புகளுடன் ஆசிரியர் படிப்பையும் ஒருங்கிணைத்த படிப்புகள் 2016-ம் ஆண்டு முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால், இந்திய கல்வியின் எதிர்காலம் ஒருங்கிணைந்த படிப்புகள் தான். பொறியியல் மற்றும் பி.டெக் படித்த மாணவர்கள் ஆசிரியர் பட்டப் படிப்புகளை கற்க முடியும். யோகா, தகவல் தொழில்நுட்பம், பாலின பாடங்கள் கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆசிரியர் கல்லூரிகளின் தலைவர்கள், ‘கல்லூரிகளை பன்முகத் தன்மையாக மாற்றுவது எளிதல்ல’ என்று தெரி வித்தனர். ஆனால், எக்காரணம் கொண்டும் புதிய விதிமுறைகள் அமலாக்கத்தை தள்ளிப்போட முடியாது என்று சந்தோஷ் பாண்டா தெரிவித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.விஸ்வநாதன், பதிவாளர் எஸ்.கலைச்செல்வன், என்.கே.டி. தேசிய கல்வியியல் கல்லூரி முதல்வர் எஸ்.வசந்தி கலந்துகொண்டனர்.

Sunday, February 08, 2015

ஜாக்டோ போராட்டத்திற்கு 7சங்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களின் விவரம்


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
ஈரோடு, தேனி, நீலகிரி, காஞ்சிபுரம், திருநெல்வேலி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
புதுக்கோட்டை, சிவகங்கை, சென்னை, இராமநாதபுரம், தர்மபுரி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
நாகை, கிருட்டிணகிரி, கரூர், தஞ்சை, திருவாரூர்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
நாமக்கல், விருது நகர், திருப்பூர், மதுரை

தமிழக ஆசிரியர் கூட்டணி
திண்டுக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர், கோவை

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
திருவள்ளூர், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி

தமிழ்நாடு தொடக்க நடு நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்
வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர்

பி.எட் பாடத்திட்டத்தில் யோகா,தொழில்நுட்பம் கட்டாயம்

இரண்டாண்டு பி.எட். கல்வித் திட்டத்தில் தகவல் தொழில்நுட்பக் கல்வி, யோகா கல்வி, பாலினக் கல்வி, மாற்றுத்திறன்- ஒருங்கிணைந்த கல்வி ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற என்.சி.டி.இ. புதிய வழிகாட்டுதல் தொடர்பான பயிலரங்கு தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

என்.சி.டி.இ. புதிய வழிகாட்டுதலின்படி பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் 2015-16-ஆம் கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.

இந்த இரண்டு ஆண்டு படிப்புகளுக்கான கல்வித் திட்டத்தையும் என்.சி.டி.இ. வெளியிட்டுள்ளது. இதை நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும். அதன்படி, இரண்டாண்டு பி.எட். படிப்பில் தகவல் தொழில்நுட்பக் கல்வி, யோகா கல்வி, பாலினக் கல்வி, மாற்றுத்திறன்- ஒருங்கிணைந்த கல்வி ஆகிய 4 தலைப்புகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுநர்களும் யோகா கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பி.எட். கல்வித் திட்டம் மூன்று முக்கியப் பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அதாவது, தியரி (பாடம்), செய்முறை பயிற்சி, தொழில் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், தொழில் பயிற்சிக்கு மொத்த படிப்பு காலத்தில் 25 சதவீத காலத்தை ஒதுக்க வேண்டியது கட்டாயமாகும். இந்தக் கல்வித் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, பாடத் திட்டங்களை அவரவர்கள் வசதிக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளலாம்.

தனி படிப்பை வழங்கும் முறை நீக்கம்: கல்வித் திறனை மேம்படுத்தும் வகையிலும், திறன் மிக்க மனித வளத்தை உருவாக்கும் வகையிலும் விருப்பப் பாடத் தேர்வு முறையை (சி.பி.சி.எஸ்.) அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் அறிமுகம் செய்வதை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கட்டாயமாக்கியுள்ளது. இதேபோல், தொழில் படிப்புகளிலும் படிப்பின் பாதியில் விருப்பப் பாடத்தை தேர்வு செய்யும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மேலும், ஆசிரியர் கல்வியியல் படிப்பிலும் புதியத் திட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஒரு பி.எட். படிப்பை மட்டும் வழங்கி வரும் "ஸ்டேன்ட் அலோன்' கல்வியியல் கல்வி நிறுவனங்கள் வருகிற மார்ச் மாதத்திலேயே மற்றொரு பி.எட். படிப்பைத் தொடங்குவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாக வேண்டும். இல்லையெனில் அந்தக் கல்வி நிறுவனங்களுக்கான அனுமதி 2016-17-ஆம் கல்வியாண்டு முதல் ரத்து செய்யப்படும்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தர அங்கீகாரம்: கல்வியியல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்.சி.டி.இ. சார்பில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஆய்வு அங்கீகார கவுன்சிலின் (நாக்) அங்கீகாரத்தைப் பெற வேண்டியது கட்டாயமாகும். மேலும், ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் இரு முறை நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆய்வை என்.சி.டி.இ. மேற்கொள்ளும். ஆய்வு முடிவுகள் அனைத்தும் அனைவருக்கும் தெரியும் வகையில், இணையதளத்தில் வெளியிடப்படும்.

தடையில்லாச் சான்று கட்டாயம்: தமிழகத்திலுள்ள கல்வி நிறுவனங்கள் அனுமதி நீட்டிப்பு அல்லது புதிய கல்வியியல் கல்வி நிறுவனம் தொடங்குவதற்கோ என்.சி.டி.இ.-யிடம் விண்ணப்பிக்கும்போது, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தடையில்லாச் சான்று பெற்றிறுக்க வேண்டியது அவசியமாகும். வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், முழுமையான மின் ஆளுமை முறையை என்.சி.டி.இ. அறிமுகம் செய்து வருகிறது. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், அனைத்து கல்வி நிறுவனங்களும் புதிய வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ளபடி, கல்வி நிறுவன இணையதளத்தை உருவாக்கியிருப்பதோடு, உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் முழு விவரங்களை அதில் பதிவேற்றமும் செய்திருக்க வேண்டும் என்றார் சந்தோஷ் பாண்டா.

பி.இ. முடித்தவர்களும் பி.எட். சேர புதிய திட்டம்

பொறியியல் பட்டப் படிப்புகளான பி.இ., பி.டெக். முடித்தவர்களும் பி.எட். (ஆசிரியர் கல்வியியல் கல்வி) மேற்கொள்ளும் வகையில், புதிய திட்டத்தை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) அறிமுகம் செய்ய உள்ளதாக சந்தோஷ் பாண்டா கூறினார். அறிவியல் ஆசிரியருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது மிகக் குறைந்த அளவிலேயே அறிவியல் ஆசிரியர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கத்தில் இந்த முடிவை என்.சி.டி.இ. எடுத்துள்ளது.

அதன்படி, பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளில் இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களை ஒரு பகுதியாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும்

வீட்டுக்கழிப்பறையை படம் பிடித்து அனுப்ப உத்தரவு.ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் அதிருப்தி

தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை வசதி உள்ளதை உறுதிசெய்ய போட்டோ ஆதாரத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'துாய்மையான இந்தியா- துாய்மையான தமிழகம்' திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வீடுகளில் கழிப்பறை பயன்பாடு உள்ளதா என்பதை உறுதி செய்து ஆதாரத்துடன் சான்றளிக்க அவர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆசிரியர் அல்லது அரசு ஊழியர்கள் போட்டோ, வீட்டு கழிப்பறை போட்டோ, முகவரி, குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகிய தகவல்களுடன், 'எனது வீட்டில் கழிப்பறை வசதி உள்ளது. அதை அனைவரும் பயன்படுத்துகிறோம்' என்ற கையெழுத்திட்ட உறுதிமொழி படிவத்துடன், கழிப்பறை போட்டோவையும் இணைத்து அந்தந்த துறை அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன், மதுரை செயலாளர் முருகன் கூறியதாவது:

சுத்தம், சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்த இந்த உத்தரவில் கழிப்பறையை போட்டோ ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்கு ஆசிரியைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிபந்தனையை வாபஸ் பெற வேண்டும்.'மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்' என்று கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இன்னும் பல அரசு பள்ளிகளில் அந்த வசதி இல்லை. கழிப்பறை இருந்தாலும் தண்ணீர் வசதி இல்லாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்த அரசு ஆர்வம் காட்ட வேண்டும் என்றனர்.

தமிழகம் முழுவதும் மாணவர் சேர்க்கை குறைவால் 2000 அரசு பள்ளிகள் மூடல்?

தமிழகம் முழுவதும், 2000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், இந்த பள்ளிகள் மூடுவிழாவை நோக்கிச் செல்வதாக, அதிருப்தி தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.தமிழகம் முழுவதும், 31 ஆயிரத்து 173 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; 28.4 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கை சரிந்துகொண்டே வருகிறது. பள்ளி மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்புகளின்படி, கடந்த 2008--09ல், அரசு ஆரம்பப் பள்ளிகளில், 43.67 லட்சம் மாணவர்கள் படித்தனர். இந்த எண்ணிக்கை, ஆண்டுதோறும் சரிந்து, 2012-13ம் ஆண்டில் 36.58 லட்சமானது. அதேபோன்று, நடுநிலைப்பள்ளிகளில், 50.46 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது, 45.3 லட்சமாக குறைந்துள்ளது.

கடந்த இரு கல்வியாண்டுகளில், மாணவர் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. கடந்த, 2008-09ல் 34.5 லட்சமாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, தற்போது 45.4 லட்சமாக அதிகரித்துள்ளது. மாணவர் எண்ணிக்கை குறை வால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ, 1500 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டன. நடப்பு கல்வியாண்டில், பள்ளிக் கல்வித் துறையால் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி, 2000 பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிப்பதாகவும், 11 ஆயிரம் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களே பணிபுரிந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால், படிப்படியாக 2000 பள்ளிகளை, அருகாமையிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பதற்கான ஆலோசனையில் கல்வி அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இதுகுறித்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க மாநில செயலர் ராபர்ட் கூறியதாவது: அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆக்கப்பூர்வமான மாற்றங்கள், கல்வித்துறையில் அவசியம். மறைமுகமாக, பல்வேறு அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.

தற்போது சுமார், 2000 பள்ளிகள் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால், மூடுவிழாவை எதிர்நோக்கியுள்ளன. பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிவதற்கான காரணத்தை ஆராய்ந்து அதனை சரிசெய்யாமல், பள்ளிகளை மூடும் செயல்பாடுகளால், எதிர்காலத்தில், கல்வி முற்றிலும் தனியார் வசம் போகும் நிலை ஏற்படும். இவ்வாறு, ராபர்ட் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சலா?.. ஆசிரியர்களுக்கு அறிவுரை

மாணவ, மாணவியருக்கு, டெங்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பதுடன், பெற்றோருக்கும் அறிவிக்க வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

* பள்ளிக் குழந்தைகள் சுகாதாரமான பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இதன்படி, அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்; உணவு உண்பதற்கு முன், கைகளை கழுவ வேண்டும்.

* வகுப்பறைகளை சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்திருக்க வேண்டும். வகுப்பறை, கழிவறையை சுற்றி தண்ணீர் தேங்கினால், உடனடியாக தலைமை ஆசிரியருக்கு, மாணவ, மாணவியர் தெரிவிக்க வேண்டும். விழிப்புணர்வு

* கொசு பெருக்கத்தை தடுக்க, குடிநீர் பானைகள், தண்ணீர் தொட்டிகளை மூட வேண்டும்.

* டெங்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வை, மாணவ, மாணவியரிடம் ஏற்படுத்த வேண்டும். * மாணவ, மாணவியருக்கு, கடுமையான காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், ஆரம்ப சுகாதார மையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்; பெற்றோருக்கும் அறிவுறுத்த வேண்டும்; சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும்.

* வரும் 10ம் தேதி, குடற்புழு நீக்க நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில், குடற்புழு நீக்க மருந்து பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும்; விடுபட்ட குழந்தைகளுக்கு, 13ம் தேதி சிறப்பு முகாம் நடக்கும்.

* இதை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Saturday, February 07, 2015

ஒவ்வொரு ஆண்டும் தகுதித்தேர்வு நடக்குமா?

கடந்த, 2014ம் ஆண்டில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாத நிலையில், நடப்பாண்டிலாவது தகுதித்தேர்வை நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில், 2010ம் ஆண்டு, கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தில், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே, இனி பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டே நியமிக்க முடியும்.

நியமனம்: இதன் அடிப்படையில், தமிழக அரசு, கடந்த, 2012ம் ஆண்டில், முதல் தகுதித்தேர்வை நடத்தியது. இதில், பல லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில், 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால், ஒரு சில மாதங்களில் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இரண்டிலும், தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கும், உடனடியாக அரசு பள்ளிகளில் நியமனம் வழங்கப்பட்டது. கடந்த, 2013ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு, ஆசிரியர்களிடையே ஆர்வம் அதிகரித்தது. தேர்ச்சி பெற்றால் அரசு வேலை என்ற குறிக்கோளில், ஏராளமானோர் தீவிரமாக பயிற்சியெடுக்க துவங்கினர். இதனால், அந்த ஆண்டில் நடந்த தகுதித்தேர்வில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். 10 ஆயிரத்திற்கும் குறைந்த காலிப்பணியிடங்களே இருந்த நிலையில், அனைவருக்கும் அரசு வேலை தர முடியாத சூழல் உருவானது.

இதற்காக தரம் பிரிக்கும் முயற்சியில், 'வெயிட்டேஜ்' முறை அமல்படுத்தப்பட்டது. இதில் உள்ள குறைபாடுகள் குறித்து, நீதிமன்றத்தில் தொடர்ந்த பல்வேறு வழக்குகளின் காரணமாக, அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிநியமனம் தாமதமாகிக்கொண்டே இருந்தது. வெயிட்டேஜ் முறை மாற்றியமைக்கப்பட்டு, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு, ஒரு வழியாக, கடந்த சில மாதங்களுக்கு முன், 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

ஆர்வம்: கடந்த இரண்டு ஆண்டில் நடந்த, மூன்று ஆசிரியர் தேர்விலும், அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டதால், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தினால், அரசு பணி நியமனம் வழங்கப்படும் என்ற எண்ணம் பொதுமக்களிடையே உருவாகியுள்ளது. ஆண்டுதோறும், அரசு பள்ளிகளில் சரிந்து வரும் மாணவர் எண்ணிக்கையால், தற்போதுள்ள ஆசிரியர் எண்ணிக்கையே உபரியாக இருந்து வருகிறது. அரசு பள்ளிகளில் பணிநியமனம் என்பது, இப்போதைக்கு தேவைப்படாது என்பதால், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவது குறித்தும், எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பணிநியமனம் இல்லாமல், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டால், மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால், ஆசிரியர் தேர்வு வாரியம் தயக்கம் காட்டி வருகிறது. கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில், ஆண்டுக்கு இரு முறை தகுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும், ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருப்பது, ஆசிரியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வலியுறுத்தல்: இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: அரசும் சரி, பொதுமக்களும் சரி, ஆசிரியர் தகுதித்தேர்வை, அரசு பள்ளிகளில் பணி நியமனத்துக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வாகவே கருதுகின்றனர். உண்மையில், தனியார் பள்ளிகள், உதவிப் பெறும் பள்ளிகள் என, அனைத்திலும், தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்பதை சட்டம் வலியுறுத்துகிறது. இப்படியிருக்கும் போது, அரசு பணியை மட்டும் கருத்தில் கொண்டு, ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தாமல், தள்ளி வைத்துக்கொண்டே வருவது, பலரின் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் செயலாக உள்ளது. அதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளில், பி.எட்., மற்றும் இடைநிலை ஆசிரியர் கல்வி முடித்தவர்கள், உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர, நிர்வாகம் அனுமதித்தாலும், சேர முடியாத சூழல் உருவாகியுள்ளது. தகுதியான ஆசிரியர் என்பதற்கான அளவுகோலாக, ஆசிரியர் தகுதித்தேர்வை கருதி, உடனடியாக அதை நடத்திட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

94 தலைமை அஞ்சலகங்களில் ஏ.டி.எம் வசதி

''தமிழகத்தில் உள்ள அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும், மார்ச் இறுதிக்குள், ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்தப்படும்,'' என, சென்னை வட்ட, தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், மெர்வின் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள, 1.55 லட்சம் தபால் நிலையங்களில், தகவல் தொடர் தொழில் நுட்பத்தை புகுத்த, 4,909 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 'கோர் பேங்கிங் - சி.பி.எஸ்., ' வசதியை ஏற்படுத்த, 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதன் முறையாக, சென்னை, தி.நகர் அஞ்சலகத்தில், 'கோர் பேங்கிங் - ' வசதி, 2013 டிசம்பர், 23ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையின் கீழ், அஞ்சலகங்களில், சேமிப்பு கணக்கு மற்றும் அஞ்சலக தொடர் வைப்பு திட்டமான - ரெக்கரிங் டிபாசிட் ஆகியவை சி.பி.எஸ்., திட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டன. அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், 'கோர் பேங்கிங்' வசதி உள்ள, எந்த ஒரு அஞ்சலகத்தில் இருந்தும், தங்களது பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இதுகுறித்து தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்சாண்டர் கூறுகையில்,''தமிழகத்தில், 1,500 அஞ்சலகங்களில்,'கோர் பாங்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள அஞ்சலகங்களில், இந்த வசதியை ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. மார்ச், 31ம் தேதிக்குள், தமிழகம் முழுவதும் உள்ள, 94 தலைமை அஞ்சலகங்களில், ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்தப்படும்,'' என்றார்.

B.ed, m.ed புதிய பாடத்திட்டம்

பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வகுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடக்கிறது. ஆசிரியர் கல்வியை மேம்படுத்தும் விதமாக, பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கான கால அளவை, ஓராண்டில் இருந்து இரண்டாண்டாக உயர்த்தி, ஆசிரியர் கல்வி கவுன்சிலான, என்.சி.டி.இ., உத்தரவிட்டு உள்ளது. இதனை எதிர்த்து தனியார் கல்வியியல் கல்லுாரி நிர்வாகங்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், புதிய பாடத்திட்டம் வகுத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னையில், நாளை முதல் இரு நாட்கள் நடக்கிறது. இதில், என்.சி.டி.இ., சார்பில், சந்தோஷ் பாண்டா பங்கேற்பதாகக் கூறப்படுகிறது.

Friday, February 06, 2015

பிளஸ் 2வுக்கு 32, 10ம் வகுப்புக்கு 24 பக்கம் பொது தேர்வு விடைத்தாள் பயன்பாட்டில் சிக்கன நடவடிக்கை


பிளஸ்2 மற்றும் எஸ்எஸ்எல்சி பொது தேர்வுகளில் விடைத்தாள் பயன்படுத்துவதில் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இனி பிளஸ் 2வுக்கு 32, 10ம் வகுப்புக்கு 24 பக்கம் கொண்ட விடைத்தாள் மட்டுமே வழங்கப்படும். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்குகிறது.

இந்தாண்டு முதல் முறையாக மொழிப்பாடங்களுக்கு கோடிட்ட தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட பக்கங்களும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டில் புதிய நடைமுறையாக 40 பக்கம் கொண்டதாக விடைத்தாள் வழங்கப்பட்டது. அதற்கு முன்பு வரை 16 பக்கங்கள் கொண்ட பிரதான விடைத்தாள் மற்றும் 4 பக்கங்களுடன் கூடிய கூடுதல் தாள் வழங்கும் நடைமுறை இருந்தது. நடப்பு ஆண்டில் விடைத்தாள் வீணாவதைத் தடுக்க இந்தாண்டு பக்கங்களை குறைத்திருப்பதுடன் மொழிப்பாடங்களுக்கு கோடிட்ட தாள்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்தாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு 32 பக்கங்களாகவும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 24 பக்கங்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ் முதல் தாள், 2ம் தாள் மற்றும் ஆங்கிலம் முதல் தாள், 2ம் தாள் ஆகிய நான்கு தேர்வுகளுக்கும் கோடிட்ட தாள்கள் வழங்கப்பட உள்ளது. கணக்குப் பதிவியல் பாடத்துக்கு முதல் 16 பக்கங்களுக்கு வெள்ளைத் தாளும், மீதம் உள்ள 16 பக்கங்களுக்கு கணக்குப்பதிவியல் தாளும் வழங்கப்பட்டுள்ளது. வரலாறு பாடத்துக்கு இந்திய வரைபடம் மற்றும் உலக வரைபடம் ஆகியன விடைத்தாளிலேயே இணைக்கப்பட்டி ருக்கும். கடந்தாண்டு வரை தட்டச்சு பாடப்பிரிவு படித்த மாணவர்களுக்கு எழுத்து தேர்வு இருந்தது.

இந்தாண்டு செய்முறைத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஒரு தரப்பினரிடம் அதிக பக்கங்களில் தேர்வு எழுதினால் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இனிமேல் அது போன்ற நடவடிக்கை பலன் தராது. மேலும் விடைத்தாள் முறைகேட்டையும் தடுக்க முடியும் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். புதிய விடைத்தாள் முறை குறித்து மாணவர்களுக்கு விளக்கும் வகையில் வகுப்பறைகளில் அறிவுரை வழங்கவேண்டும். அதேபோல் அறிவிப்பு பலகைகளிலும் புதிய நடைமுறை குறித்த விளக்கங்களை எழுதி வைக்க பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.