இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, January 06, 2015

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் அமலாகுமா? அரசு ஒப்புதல் அளிக்காததால் குழப்பம்

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்திற்கு அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததால், வரும் கல்வி ஆண்டில் எந்த பாடத்திட்டம் பின்பற்றப்படும் என்ற குழப்பம், மாணவர் களிடம் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, பள்ளி மாணவர் பாடத்திட்டம் மாற்றம் செய்யப் படும். புதிய தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டத்தை, கல்வித் துறை தயாரித்து வெளியிடுகிறது.

இதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2க்கான புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, இந்தாண்டு பிளஸ் 1க்கு புதிய பாடப் புத்தகங்கள் வெளியாக வேண்டும். அடுத்த கல்வியாண்டில், பிளஸ் 2க்கு புதிய பாடத் திட்டம் அமலாக வேண்டும். இதற்காக, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பாட வாரியாக வல்லுனர் குழுவை அமைத்தது. அக்குழு, 25 பாடத் தலைப்பு களில் வரைவு பாடத் திட்டத்தை தயாரித்தது. கல்வியாளர் கள், ஆசிரியர்கள் என, பல தரப்பினரிடமும் கருத்துக் களை கேட்டு, தேவை யான மாற்றங்கள் செய்யப் பட்டு, வரைவு பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டது. தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே, பாடப்புத்தகம் அச்சடிக்கப் பட்டு, வரும் கல்விஆண்டில் வழங்க முடியும். இதற்கான ஒப்புதல் கேட்டு, லோக்சபா தேர்தலுக்கு முன், அரசுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை புதிய பாடத்திட்டத்திற்கான ஒப்புதல் கிடைக்கவில்லை.

இதனால், புதிய பாடத்திட்டம் வருமா, பழைய பாடத்திட்டமே தொடருமா என்ற குழப்பம், மாணவர் கள், பெற்றோர், ஆசிரியர் களிடையே ஏற்பட்டுள்ளது. கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் குறித்து அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இதுவரை அறிவிப்பு ஏதும் இல்லாததால், பழைய பாடத்திட்டமே தொடரும் என தெரிகிறது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Monday, January 05, 2015

மாவட்ட வாரியாக வாக்காளர் விபரம்

தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

ஆண்களை விட 66 ஆயிரத்து 788 பெண்கள் அதிகமாக உள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அதிக வாக்காளர்களைக் கொண்ட முதல் மூன்று மாவட்டங்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் குறைந்த வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட வாரியாக தமிழக தேர்தல் துறை வெளியிட்ட மொத்த வாக்காளர்கள் விவரம்:

திருவள்ளுர் 29,86,383

சென்னை 38,34,388

காஞ்சிபுரம் 33,74,837

வேலூர் 29,44,562

கிருஷ்ணகிரி 14,05,866

தருமபுரி 11,32,351

திருவண்ணாமலை 18,75,557

விழுப்புரம் 26,02,971

சேலம் 27,29,548

நாமக்கல் 13,23,752

ஈரோடு 17,66,336

நீலகிரி 5,50,047

கோவை 26,87,303

திண்டுக்கல் 16,57,623

கரூர் 8,29,300

திருச்சி 20,93,136

பெரம்பலூர் 5,12,185

கடலூர் 19,28,644

நாகை 12,12,209

திருவாரூர் 9,53,352

தஞ்சாவூர் 18,17,605

புதுக்கோட்டை 11,83,784

சிவகங்கை 10,49,977

மதுரை 24,57,680

தேனி 9,90,559

விருதுநகர் 14,91,892

ராமநாதபுரம் 10,74,317

தூத்துக்குடி 13,37,317

நெல்லை 24,17,624

கன்னியாகுமரி 14,95,884

அரியலூர் 4,83,926

திருப்பூர் 20,04,953

மொத்தம் 5,62,05,868.

மூன்றாம் பருவம்-1 முதல் 8 வகுப்பபுகளுக்கான வாரவாரி பாடதிட்டம்-மீள்பதிவு

Click below

https://app.box.com/s/ej5h6ls007mi4fnis148

Sunday, January 04, 2015

பி.எப் நிதியில் இ.எம்.ஐ கட்டலாம்சந்தாதாரர்களுக்கு குறைந்த விலை வீடு திட்டம்...

சந்தாதாரர்கள் வீடு வாங்க உதவுவதற்கு வருங்கால வைப்பு நிதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான திட்டம் வரையறை செய்ய நிபுணர் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இபிஎப்ஓ) 5 கோடிக்கு அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களின் ரூ.6.5 லட்சம் கோடிக்கு மேலான நிதியை பிஎப் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. பிஎப் சந்தாதாரர்களில் பெரும்பாலானோர் குறைந்த வருவாய் பிரிவினர்தான். அதாவது, மாதம் ரூ.15 ஆயிரம் அல்லது அதற்கு குறைவாக சம்பளம் வாங்குவோர் எண்ணிக்கை 70 சதவீதமாக உள்ளது. இப்படிப்பட்ட குறைந்த வருவாய் ஈட்டும் தொழிலாளர்களுக்காகவே சொந்த வீடு வாங்கும் திட்டத்தை கொண்டுவர மத்திய தொழிலாளர் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கடந்த மாதம் புதுடெல்லியில் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் இந்த திட்டம் குறித்தும் இதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும், பிஎப் நிதியை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது குறித்தும் ஆராயப்பட்டன. இதற்கான நிபுணர் குழுவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி பொதுத்துறை நிறுவனமான தேசிய கட்டிட கட்டுமான நிறுவனம் மற்றும் டிடிஏ, பியுடிஏ, எச்ஐடிஏ போன்று அந்தந்த மாநிலங்களில் உள்ள ஊரக மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் வீட்டு வசதி வாரியங்களுடன் இணைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் குறைந்த விலையிலான வீடுகள் அரசு நிர்ணயித்த விலையின்படி கட்டித்தரலாம் என்று தொழிலாளர் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து சமீபத்தில் அளிக்கப்பட்ட குறிப்பேட்டின்படி, வருங்கால வைப்பு நிதியை வைத்து இதை செயல்படுத்த வேண்டும். குறிப்பாக வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் உள்ள தொழிலாளர் நிதியில் சுமார் 15 சதவீதத்தை குறைந்த விலை வீடுகள் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 70 ஆயிரம் கோடி நிதியின் மூலம் வீடுகள் கட்டப்படும். இதில் சுமார் 3.5 லட்சம் வீடுகள் கட்டித்தர முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பிஎப் நிதியில் ஆண்டுக்கு சுமார் ரூ.70,000 கோடி நிதி சேர்ந்து வருகிறது. எனவே, இதை தொழிலாளர் வீட்டு திட்டத்துக்கு பயன்படுத்துவதன் மூலம் நிதி பற்றாக்குறை எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

தற்போது வீடு வாங்கும் தொழிலாளர்கள் ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் மூலமும், வங்கிகளின் மூலமும் வீட்டுக்கடன் வாங்குகிறார்கள். வருவாய் ஆதாரத்தை காண்பிக்க வேண்டும் என்பதால், பெரும்பாலானவர்களுக்கு வீட்டுக்கடன் வழங்க வங்கிகள் ஒப்புக்கொள்வதில்லை. தங்களது வருவாய்க்குள் வீடு வாங்கவேண்டுமானால் பெரிய தொகையை முன்பணமாக செலுத்தவேண்டிவரும். தற்போதுள்ள நடைமுறையின்படி ஐந்து ஆண்டு பணியாற்றிய பிறகு சந்தாதாரர்கள் வீட்டுக்கடன் வாங்கிக்கொள்ள முடியும். இத்தகைய வசதி இருந்தாலும், குறைந்த வருவாய் பிரிவில் உள்ள தொழிலாளர்களின் சொந்த வீடு கனவு நிறைவேறுவதில்லை. அதிலும் இஎம்ஐ தொகை பெரும் சுமையாக உள்ளது. எனவே, பிஎப் தொகையில் இருந்து இஎம்ஐ செலுத்துவதற்கு இந்த திட்டத்தில் வகை செய்யப்பட உள்ளது. இதை தொழிலாளர் அமைச்சகமும் பரிந்துரை செய்துள்ளது. தொழிலாளர் அமைச்சகம் சார்பில் இந்த திட்டத்துக்கு மானியம் அளிக்கப்படும் எனவும் தெரிகிறது. பிஎப் சந்தாதாரர்கள் குறைந்த வருவாய் பிரிவினர், நடுத்தர வருவாய் பிரிவினர், அதிக வருவாய் பிரிவினர் என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப தனித்தனியாக சலுகை அளிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது. எனவே, ஓய்வு பெற்ற பிறகு நிம்மதியான வாழ்க்கைக்கும், பாதுகாப்பு உத்தரவாதத்துக்கும் உறுதி அளிக்கும் வகையில் இந்த திட்டம் நிச்சயமாக அமையும் என்று தொழிலாளர் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை கட்ட நடவடிக்கை

தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டிற்குள், அரசு பள்ளிகளில் போதுமான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்து உள்ளது.பிரதமர் மோடியின், 'துாய்மை இந்தியா' திட்டத்தை, கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல், மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும், சுகாதாரத்தை பேணும் வகையில், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்த வரையில், அதிகளவு அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை என்பதால், மத்திய அரசின் அறிவுறுத்தல் படி, கழிப்பறை கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதன் படி, அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பில், பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு தனித்தனியான, கழிப்பறை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டில், 474 பள்ளிகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளன. மேலும், 495 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை கட்ட, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, இடைநிலை கல்வித்திட்டத்தில், தமிழகத்தில் உள்ள, 495 உயர், மேல்நிலைப் பள்ளிகளில், 4.95 கோடி ரூபாய் செலவில், கழிப்பறை கட்டும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. 'நபார்டு' உதவி:கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், 656 மேல், உயர்நிலை பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு தனித்தனியான, கழிப்பறை, 'நபார்டு' வங்கி உதவியுடன் கட்ட, அரசு ஒப்புதல் கோரப்பட்டு உள்ளது. மேலும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான, என்.எல்.சி., பாரத மிகுமின் நிறுவனமான, 'பெல்' மற்றும் ஸ்டேட் வங்கி ஆகியவை, 1,000 பள்ளிகளுக்கு கழிப்பறைகள் கட்ட இசைவு தெரிவித்து உள்ளன. இது தவிர, அனைவருக்கும் கல்வித்திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமும், கழிப்பறை கட்டும் பணிகள் துவக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் இருக்கும், என்றார்.

Saturday, January 03, 2015

தமிழகம் முழுவதும் வாக்காளர் இறுதி பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. மாநகராட்சி, தாலுகா அலுவலகங்களில் இறுதி வாக்காளர் பட்டியலை வாக்காளர்கள் பார்க்கலாம்.

வரைவு வாக்காளர் பட்டியல் 1–1–15 தேதியை வாக்காளர் தகுதிக்கான (18 வயது பூர்த்தி அடைந்த) நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான வரைவுப் பட்டியல் 1–10–14 அன்று வெளியிடப்பட்டது. 1–1–15 அன்று 18 வயது பூர்த்தி அடையக்கூடிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்காக 31–10–14 அன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், வரைவு வாக்காளர் பட்டியலைப் பார்த்துவிட்டு, அதில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், இடமாற்றம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்களை அக்டோபர் 31–ந்தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. சிறப்பு முகாம்கள் அதன் பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், திருத்தங்கள், பெயர் இடமாற்றம் போன்றவற்றுக்காக வாக்குச்சாவடிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன.

விண்ணப்பங்களை கொடுப்பதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. ஏராளமானோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். இதற்காக தனியார் கம்ப்யூட்டர் மையங்களிலும் தேர்தல் கமிஷன் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நாளை வெளியாகிறது கடந்த அக்டோபர் 31–ந்தேதியுடன் விண்ணப்பங்களை பெறும் பணி நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவற்றை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. தகுதியான விண்ணப்பங்களை ஏற்று, அந்த விண்ணப்பதாரர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

மேலும் பெயர்த் திருத்தங்கள், பெயர் நீக்கம் போன்ற பணிகள் நடந்தன. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து இறுதிப் பட்டியல் தயாரித்து முடிக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே திட்டமிட்டபடி வாக்காளர் இறுதிப் பட்டியல் நாளை காலை வெளியிடப்படுகிறது. பொதுமக்கள் பார்ப்பதற்காக இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:–

இறுதி வாக்காளர் பட்டியலில் சுமார் 5 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். புதிய வாக்காளர்களும் ஏராளமான அளவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் 5–ந்தேதி (நாளை) மாநகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, தாலுகா மற்றும் தபால் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். புதிய வாக்காளர்கள் அனைவருக்கும் ஜனவரி 25–ந்தேதி முதல் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஆண்டு ஊதிய உயர்வு: தமிழக அரசு புதிய உத்தரவு

   அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு கிடைப்பதில் புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆண்டு ஊதிய உயர்வு பெறத் தகுதியான நாளுக்கு முந்தைய தினம் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு அந்த ஊதிய உயர்வை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியில் இணைந்த நாளைக் கணக்கிட்டு, ஆண்டு ஊதிய உயர்வு 3 சதவீதம் அளவுக்கு (அடிப்படை ஊதியம்- தர ஊதியம் ஆகியவற்றை கணக்கிட்டு) அளிக்கப்படுகிறது.

ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 என நான்கு காலாண்டுகளாகப் பிரிக்கப்பட்டு இந்த ஊதிய உயர்வு கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், அரசு ஊழியர்கள் அல்லது ஆசிரியர்கள் தங்களது பணியை டிசம்பர் 31, மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30 ஆகிய தேதிகளில் ஓய்வு பெற்றால் அவர்களுக்கான அந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வு அளிக்கப்படாமல் இருந்தது. அவர்கள் ஊதிய உயர்வை பெறாமலேயே ஓய்வு பெற்று வந்தனர். இந்த உத்தரவை மாற்றி ஊதிய உயர்வு பெறத் தகுதியான நாளுக்கு முந்தைய நாள் ஓய்வு பெற்றிருந்தாலும் அவர்களுக்கு அந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வை அளிக்க வேண்டுமென தலைமைச் செயலக சங்கம் போன்ற ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

சம்பள குறைதீர் பிரிவிடம் மனு: ஆண்டு ஊதிய உயர்வு விவகாரம் தொடர்பாக, தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சம்பள குறைதீர் பிரிவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த குறைதீர் பிரிவு, ஊதிய உயர்வு பெறத் தகுதியான நாளுக்கு முந்தைய தினம் ஓய்வு பெற்றாலும் அந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வை அளிக்க வேண்டும் என அரசுக்குப் பரிந்துரை செய்தது.

இந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக நிதித் துறை செயலாளர் க.சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவு வெளியான நாளில் இருந்து (டிச.31) அது நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு மூலமாக, ஆயிரக்கணக்கான ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பயன் கிடைக்கும் எனவும், அவர்கள் பெறும் ஓய்வூதியத்தில் கூடுதலான தொகையைப் பெற வாய்ப்பு இருப்பதாகவும் நிதித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மதன்மோகன் மாளவியா பெயரில் புதிய திட்டம்: ஆசிரியர்களை உருவாக்க மத்திய அரசு துவக்கியது

  பள்ளி, கல்லூரிகளுக்கு தேவைப்படும் திறன் மிகுந்த ஆசிரியர்களை உருவாக்க, மதன் மோகன் மாளவியா தேசிய ஆசிரியர்கள், கற்பித்தல் திட்டத்தை மத்திய அரசு துவக்கி உள்ளது. இத்திட்டத்திற்கு, 12வது ஐந்தாண்டு திட்டத்தில், 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

* ஆசிரியர்கள்: பள்ளி, கல்லூரி வகுப்பறையில் அவர்கள் பணியாற்றும் சூழல்; பணி மேம்பாடு ஆகியவற்றை, இத்திட்டம் கண்காணிக்கும்.

* பாடத்திட்டத்தை உருவாக்குதல்: மதிப்பிடுதல், திறனாய்வு முறைகளை, வரையறுத்தல்; ஆசிரியர் பணி குறித்த ஆய்வு உள்ளிட்டவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

* கல்லூரி, பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை கண்டறிந்து, திறன் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கி அளித்தல், பணியில் இருக்கும் ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி வழங்குதல் உள்ளிட்டவையும் இத்திட்டத்தில் அடங்கும்.

இத்திட்டத்திற்காக, 30 மத்திய பல்கலைகளில், பள்ளி கல்விக்கான மையங்கள்; பாடத்திட்டம், ஆசிரியர் பணி தொடர்பான, 50 மையங்கள்; ஆசிரியர் கல்விக்கான, இரண்டு பல்கலை மையங்கள் உள்ளிட்ட பல்வேறு மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

Friday, January 02, 2015

தொடக்கக் கல்வி - வலைதள மூலம் சம்பளப் பட்டியல் (Web Pay Roll) முறையினை நடைமுறைப்படுத்துவது சார்பான அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

Click below

https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21eTZqbDdnMkRuS2M/view?usp=sharing

பள்ளிகள் மூடப்படுவதை கண்டித்து 7–ந் தேதி மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

  மாணவர்களின் வருகையை காரணம் காட்டி மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதை கண்டித்து 7–ந் தேதி மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

சென்னை மாநகராட்சி பகுதியில் இதுவரை 54 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி முழுவதும் முறையாக செலவிடப்படவில்லை. கடந்த 8 ஆண்டுகளில் கல்விக்காக வசூலிக்கப்பட்ட 2.5 சதவீதம் வரித்தொகையில் ரூ.175 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளிகளில் 168 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மாணவர்கள் வருகையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஆங்கில வழிக்கல்விக்கும் தேவையான மொழியாசிரியர்களை நியமிக்கவில்லை. 120–க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிவறைகளே இல்லை. எனவே மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதை கண்டித்தும், பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும் 7–ந் தேதி காலை 10 மணிக்கு மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருக்கிறோம். இந்த போராட்டத்திற்கு நான்(ஜி.ராமகிருஷ்ணன்) தலைமை தாங்குகிறேன்.

எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4–ந்தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது என்றும் அவ்வாறு மாணவர்களை சேர்த்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளிகள் தமிழ்நாட்டில் நர்சரி மெட்ரிகுலேசன் பள்ளிகள், மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளிகள், மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் என்று ஏராளமான பள்ளிகள் உள்ளன.

இவை அனைத்தும் சுயநிதி பள்ளிகள் ஆகும். இவற்றில் நர்சரி பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் அனைத்தும் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இயக்கத்தின் இயக்குனராக பிச்சை இருக்கிறார். மெட்ரிகுலேசன் பள்ளிகள் பல ஜனவரி மாதத்திலேயே அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கி விடுகிறது. குறிப்பாக எல்.கே.ஜி. மாணவர்சேர்க்கை இப்போதே தொடங்கி விடுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:–

ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது தமிழ்நாட்டில் உள்ள எந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் இப்போது மாணவர்சேர்க்கை நடைபெறக்கூடாது. ஏப்ரல் 4–ந்தேதிக்கு பின்னர் தான் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும். அதற்கான விண்ணப்ப படிவங்களும் அதன் பின்னர்தான் வழங்கவேண்டும். முன்கூட்டியே எந்த பள்ளியும் மாணவர் சேர்க்கைக்கான எந்த முகாந்திரமும் தொடங்கக்கூடாது. அவ்வாறு எந்த பள்ளியாவது மாணவர் சேர்க்கை நடத்தினால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி மேயர்களை ‘‘மாண்புமிகு” என்ற அடைமொழியுடன் அழைக்கவேண்டும் அரசாணை

சென்னை, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச்செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:– மாநகராட்சி மேயர்கள் மற்றும் துணை மேயர்களை அழைப்பது குறித்தும், அவர்களுக்கு பதவிக்காலத்தில் வாங்க வேண்டிய வசதிகள் குறித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டன. 14.10.96 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் மாநகராட்சி மேயரை ‘மாண்புமிகு மேயர்’ அல்லது ‘மாண்புமிகு மன்றத் தலைவர்’ அல்லது மன்றத்தலைவி என்று அழைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

20.10.96 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி, ‘மாண்புமிகு மேயர்’ என்று அழைக்கும் முறை ரத்து செய்யப்பட்டது. பழையபடி அவர்களை ‘வணக்கத்துக்குரிய மேயர்’ என்று அழைக்கவேண்டும் என்று ஆணையிடப்பட்டது. தற்போது 10.12.14 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைப்படி,, ‘வணக்கத்துக்குரிய மேயர்’ என்று அழைக்கும் நடைமுறைக்குப் பதிலாக ‘மாண்புமிகு மேயர்’ என்று அழைக்கவேண்டும் என்று அரசு கருதி அப்படியே ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேலையில்லா பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வி உதவித் தொகை

வேலையில்லா இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு (ஒபிசி) புதிய கல்வி உதவித் தொகைத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எப்போது விண்ணப்பிப்பது என்பன உள்ளிட்ட விவரங்கள் விரைவில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பு: பட்டப் படிப்பு முடித்து வேலை கிடைக்காத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், புதிய கல்வி உதவித் தொகைத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒபிசி மாணவர்கள் 300 பேருக்கு முழு நேர பட்ட மேற்படிப்பு, எம்.ஃபில். அல்லது பிஎச்.டி. படிப்புகளை மேற்கொள்ள கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.