இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, December 26, 2014

பொங்கல் முன்பணம்:ஆசிரியர்கள் கோரிக்கை

அதிக தொகை ஒதுக்கி, அனைவருக்கும் பொங்கல் முன்பணம் வழங்க வேண்டும், என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் வடக்கு வட்டார தலைவர் பாலசுப்ரமணியம், பொருளாளர் மணிகண்டபிரபு அறிக்கை:

திருப்பூர் வடக்கு பகுதியில், 92 பள்ளிகளில் 587 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; ஒரு பிரிவு ஆசிரியர்கள் கல்வித்துறை கட்டுப்பாட்டிலும், ஒரு தரப்பு ஆசிரியர்கள் எஸ்.எஸ்.ஏ., திட்டத்திலும் உள்ளனர். பண்டிகை காலங்களில், ஆசிரியர்களுக்கு முன்பணம் வழங்கி, மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும். கடந்தாண்டு தீபாவளிக்கு, எஸ்.எஸ்.ஏ., சார்பில் பணியாற்றும் 271 ஆசிரியர்களில் 50 பேருக்கு மட்டுமே முன்பணம் ஒதுக்கப்பட்டது.

தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால், அனைவருக்கும் வழங்கும் வகையில் எஸ்.எஸ்.ஏ., பிரிவுக்கு அதிக தொகை ஒதுக்க வேண்டும். கடந்த முறை விண்ணப்பித்து, முன்பணம் பெறாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: 20 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்

இந்த ஆண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 20 லட்சம் பேர் வரை எழுத உள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வில் 11 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வில் 9 லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்த முழுமையான விவரங்கள் சில நாள்களில் கிடைக்கும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட மாணவர்களின் விவரங்களில் பிழைகளை நீக்கும் பணிகள் இப்போது நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் முடிந்ததும் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை இறுதிசெய்யப்படும்.

அதன்பிறகு, விடைத்தாள் முகப்புச் சீட்டு அச்சிடும் பணிகள் தொடங்கப்படும் என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முகப்புச் சீட்டில் மாணவர்களின் பதிவு எண், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களும், முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்களில் ரகசிய பார்கோடு எண்ணும் அச்சிடப்படும். விடைத்தாள் முகப்புச் சீட்டில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து மாணவர்கள் கையெழுத்திட்டால் மட்டும் போதும். முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்களில் "டம்மி' எண்களுக்கு பதிலாக கம்ப்யூட்டர் மூலம் கண்டறியப்படும் ரகசிய பார்கோடு எண் முறை கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த முறையின் மூலம் முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்களை வேறு மாவட்டங்களில் மதிப்பீடு செய்வது, விடைத்தாளுக்குரிய மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது, ரகசியத்தன்மையைப் பாதுகாப்பது போன்ற பணிகள் கம்ப்யூட்டர் உதவியுடன் எளிமைப்படுத்தப்பட்டன. அதனால், தவறுகளும் வெகுவாக குறைந்தன. மொழிப்பாடங்களுக்கு பக்கங்கள் குறைப்பு: பிளஸ் 2 தேர்வில் மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள் புத்தகப் பக்கங்களின் எண்ணிக்கை 40-லிருந்து 32 ஆகவும், பத்தாம் வகுப்பு விடைத்தாள் புத்தகப் பக்கங்களின் எண்ணிக்கை 30-லிருந்து 22 ஆகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொழிப்பாடத் தேர்வுகளில் கடந்த ஆண்டு பெரும்பாலான மாணவர்கள் அதிகப் பக்கங்களைப் பயன்படுத்தவில்லை. இதனையடுத்து, பக்கங்களைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்: தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன்

பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை, மாணவர் ஒருவர் தாக்கியதாக புகார் செய்யப்பட்டு உள்ளது. பரமக்குடி அருகே பகைவென்றியை சேர்ந்த மணி, 20, நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.

நேற்று காலை 11 மணிக்கு தலைமை ஆசிரியர் முருகன், ஆங்கில பாடத்திற்கு சிறப்பு வகுப்பு நடத்தினார். அப்போது மணி, தனது நோட்டில் இருந்த காகிதத்தை கிழித்து கீழே போட்டுக்கொண்டே இருந்தார். இதை தலைமை ஆசிரியர் கண்டித்தார். இதனால் தலைமை ஆசிரியருடன் மணி வாக்குவாதம் செய்தார்.

சிறிது நேரத்தில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து மணி கூறுகையில். ''எனது நோட்டில் காகிதத்தை கிழித்து கீழே போட்டேன். அப்போது தலைமை ஆசிரியர், 'எதற்கு கிழித்து போடுகிறாய்' என தகாத வார்த்தையில் பேசி, கம்பால் அடித்தார்,'' என்றார். தலைமை ஆசிரியர் முருகன் கூறுகையில்,

“நான் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது தொடர்ந்து காகிதத்தை கிழித்து போட்டதால் கண்டித்தேன். என்னை அவன் தாக்கியதால் நிலை குலைந்து கீழே விழுந்தேன். தொடர்ந்து என்னை தாக்கிவிட்டு ஓடினான்,” என்றார். பரமக்குடி கல்வி அலுவலர் பழனியாண்டி கூறுகையில், “தலைமை ஆசிரியர், மாணவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Thursday, December 25, 2014

கற்றல் திறன் வழிமுறை ஆசிரியர்களுக்கு அழைப்பு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை, கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 முதல், பள்ளிகளில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, முப்பருவ கல்வி முறை செயல்படுத்தப்படுகிறது. இதில், மாணவர்களை முழுமையாக ஈடுபடுத்தவும், அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், பல்வேறு வழிமுறைகளை, ஆசிரியர்கள் கையாண்டு வருகின்றனர்.

கற்றலில் பின்தங்கிய மாணவர்களை கண்டறிவது, அவர்களின் தனித்திறனை வளர்ப்பது, புதுமையான முறையில் பாடம் நடத்துவது போன்ற வழிமுறைகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் பின்பற்றுகின்றனர். தமிழ், ஆங்கில பாடங்களில் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் முயற்சியில், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஆசிரியர்கள் பின்பற்றும் வெற்றிகரமான, புதுமையான முயற்சிகளை, அனைத்து பள்ளி ஆசிரியர்களும் தெரிந்து, பயன்படுத்த விரும்பியுள்ள கல்வித்துறை, அவ்வழிமுறைகளை இணையதளத்தில் பதிவு செய்யும்படி, அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, tணண்ஞிஞுணூt.ணிணூஞ்/டிணணணிதிச்tடிணிண என்ற இணையதளத்தில், ஜன., 15க்குள் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 99767 08786 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திருஞானசம்பந்தன் தெரிவித்துள்ளார்.
tnscert.org/innovation

Wednesday, December 24, 2014

குரூப் 2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

குரூப்–2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 29–ந்தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

குரூப்–2 தேர்வுக்கான கலந்தாய்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

டி.என்.பி.எஸ்.சி. (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) குரூப்–2 பிரிவில் காலியாக உள்ள பணியிடத்திற்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு கடந்த ஜூன் மாதம் 29–ந்தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. பின்னர் எழுத்து தேர்வுக்கான தெரிவு முடிவுகள் கடந்த 12–ந்தேதியன்று வெளியிடப்பட்டது.

இந்த தெரிவு தொடர்பான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பஸ் நிலையம் மற்றும் கோட்டை ரெயில் நிலையம்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 29–ந்தேதி முதல் நடைபெறுகிறது.

இணையதளத்தில் வெளியீடு
இதனைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜனவரி மாதம் 27–ந்தேதி முதல் நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. மேற்கூறிய விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மறுவாய்ப்பு கிடையாது
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, இடஒதுக்கீடு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலி பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது.

விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும்பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்விற்கு வரத்தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாலியல் வன்முறைகளை தடுக்கஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: மாவட்டங்களில் குழு அமைப்பு

பாலியல் வன்முறைகளை தடுக்க ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்கும், ஆசிரியர்கள், மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் மருத்துவ இணை இயக்குனர், குழந்தைகள் நல அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், போலீசார் இடம் பெற்றுள்ளனர். இக்குழு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கும். ஆண் ஆசிரியர்கள் பெண் குழந்தைகளை எப்படி கண்காணிக்க வேண்டும். பெண் ஆசிரியர்கள் ஆண் குழந்தைகளை எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கும்.எல்.கே.ஜி., முதல் கல்லுாரி வரை மாணவர்களை கையாள்வது, மாணவர்களின் மன நிலை வயதிற்கு தகுந்த மாதிரி மாறும் என்பது குறித்தும் பயிற்சி வழங்கப்படும். மேலும் மாணவர்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு அவர்கள் செல்லும் வாகனங்களின் பதிவு எண், வாகன டிரைவர்கள், பெற்றோரின் மொபைல் எண்களை ஆசிரியர்கள் ஆவணமாக பராமரிக்க வேண்டும்.

தவறு செய்த மாணவர்களின் வாழ்க்கை வீணாகாமல் அவர்களை இக்குழுவினர் தங்கள் கண்காணிப்பில் படிக்க வைப்பர்.பள்ளி்க் குழந்தைகள் பெற்றோர், ஆசிரியர்களின் மொபைல் எண்களை மனப்பாடம் செய்வது, தன்னை கடத்தும் வாகன எண்ணை மனப்பாடம் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி குறித்தும் விளக்கப்பட உள்ளது.மருத்துவ இணை இயக்குனர் ரவிகலா கூறுகையி்ல்,

''அனைத்து மாவட்டங்களிலும் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறைகளை தடுக்க ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பர். ஒழுக்கம் சம்பந்தமான, உடல் ரீதியான கவுன்சிலிங்கும் வழங்குவர்,'' என்றார்.

பாறத ரத்னா விருது பெற்றோர் பட்டியல்

மறைந்த சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் முறையே "பாரத ரத்னா' விருது பெறும் 44 மற்றும் 45ஆவது நபர்கள் ஆவர்.

கடந்த ஆண்டு, விஞ்ஞானி சி.என். ராவ், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் "பாரத ரத்னா' விருது பெற்றனர்.

இதுபோல், "பாரத ரத்னா' விருது பெற்ற மற்றவர்களின் பெயர், ஆண்டு விவரம் வருமாறு:

1) சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) - 1954

2) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - 1954

3) சி.வி. ராமன் - 1954

4) பகவன் தாஸ் - 1955

5) விஸ்வேஸ்வரய்யா - 1955

6) ஜவாஹர்லால் நேரு - 1955

7) கோவிந்த வல்லப பந்த் - 1957

8) தோண்டோ கேசவ் கார்வே - 1958

9) பிதான் சந்திர ராய் - 1961

10) புருஷோத்தம் தாஸ் டாண்டன் - 1961

11) ராஜேந்திர பிரசாத் - 1962

12) ஜாகிர் ஹுசேன் - 1963

13) பாண்டுரங்க் வாமன் கனே - 1963

14) லால் பகதூர் சாஸ்திரி - 1966

15) இந்திரா காந்தி - 1971

16) வி.வி. கிரி - 1975

17) கே. காமராஜ் - 1976

18) அன்னை தெரசா - 1980

19) ஆச்சார்ய வினோபா பாவே - 1983

20) கான் அப்துல் கஃபார் கான் - 1987

21) எம்.ஜி. ராமச்சந்திரன் - 1988

22) பி.ஆர். அம்பேத்கர் - 1990

23) நெல்சன் மண்டேலா - 1990

24) ராஜீவ் காந்தி - 1991

25) வல்லபபாய் படேல் - 1991

26) மொரார்ஜி தேசாய் - 1991

27) மௌலானா அபுல் கலாம் ஆஸாத் - 1992

28) ஜே.ஆர்.டி. டாடா - 1992

29) சத்யஜித் ராய் - 1992

30) குல்ஜாரிலால் நந்தா - 1997

31) அருணா ஆசப் அலி - 1997

32) ஏ.பி.ஜே. அப்துல் கலாம் - 1997

33) எம்.எஸ். சுப்புலட்சுமி - 1998

34) சிதம்பரம் சுப்ரமணியம் - 1998

35) ஜெயபிரகாஷ் நாராயண் - 1999

36) அமர்த்தியா சென் - 1999

37) கோபிநாத் போர்தோலோய் - 1999

38) பண்டிட் ரவிசங்கர் - 1999

39) லதா மங்கேஷ்கர் - 2001

40) உஸ்தாத் பிஸ்மில்லா கான் - 2001

41) பீம்சேன் ஜோஷி - 2009

42) சி.என்.ஆர். ராவ் - 2014

43) சச்சின் டெண்டுல்கர் - 2014

காஸ் மானியத்துக்கு வங்கி கணக்கு இணைப்பை அறிவது எப்படி?

Dial *99*99# from your Mobile handset

சமையல் காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், இலவச எஸ்.எம்.எஸ்., சேவையை அறிமுகம் செய்துள்ளது. இச்சேவையை, ஆதார் எண் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். காஸ் மானியம் பெற, ஆதார் எண்ணோடு, வங்கிக் கணக்கு எண் அளிக்க வேண்டும்.

ஆதார் எண் இல்லாதவர்கள், வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் கொடுக்க வேண்டும். ஜனவரி முதல், இந்த நடைமுறை அமலுக்கு வருவதால், இம்மாத இறுதிக்குள், ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை, காஸ் முகமை, வங்கியிடம் அளிக்கும் பணி, மும்முரமாக நடக்கிறது. காஸ் முகமை மற்றும் வங்கியில் இந்த விவரங்களை அளித்த பின், காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டதா என்பதை அறிய, இவலச எஸ்.எம்.எஸ்., சேவையை, பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள், *99*99# என, மொபைல் போனில் அழுத்தினால், 12 இலக்கம் கொண்ட ஆதார் எண் கேட்கும்.

ஆதார் எண்ணை பதிவு செய்தால், காஸ் மானியம் பெற வங்கிக் கணக்கு எண், இணைக்கப்பட்டு விட்டதா என்ற தகவலை அறியலாம். எஸ்.பி.ஐ., மறுப்பு: இதற்கிடையே, காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கை இணைக்க, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.,) வாடிக்கையாளர்களிடம், கட்டணம் வசூலிப்பதாக, புகார் எழுந்தது. இப்புகாரை, வங்கியின் மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் மறுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், ''வங்கியின் எந்தக் கிளையிலும், காஸ் மானியத்துக்கு, வங்கிக் கணக்கை இணைக்க, கட்டணம் வசூலிப்பதில்லை. கட்டணம் வசூலித்து இருந்தால், அத்தொகை வாடிக்கையாளர்களுக்கு, திருப்பி அளிக்கப்படும்,'' என்றார்.

Tuesday, December 23, 2014

கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் சேர்க்கை நடத்த மாட்டோம்: தனியார் பள்ளிகள்

கட்டாய கல்வி சட்டம் கீழ், மாணவர்களை சேர்த்த தனியார் பள்ளிகளுக்கு, அதற்கான கட்டணத்தை தமிழக அரசு இதுவரை கொடுக்கவில்லை. எனவே, அடுத்த ஆண்டு சேர்க்கையை நடத்தப் போவதில்லை என, தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.

25 சதவீதம்

நாட்டில், 6 - 14வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கல்வி அடிப்படை உரிமை. நலிவுற்ற மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இடம் அளிக்க வேண்டும். அதற்கான கட்டணத்தை அரசே வழங்கும் என்பது, கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படை. இந்த சட்டம், 2009ல் அமலுக்கு வந்தபோதும், தமிழகத்தில், 2011ல் அமல்படுத்தப்பட்டது. அதன்பின், இச்சட்டத்தின் படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

தனியார் பள்ளிகளில்,

கடந்த 2013 - 14ல், 49,864 மாணவர்; 2014 - 15ல், 89,954 மாணவர் என, 1,39,818 பேர், இரண்டு ஆண்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்பள்ளிகளுக்கு, வகுப்பு அடிப்படையில், 5,000 - 6,000 ரூபாயை கட்டணமாக அளிக்க, தமிழக அரசு முடிவெடுத்தது. இந்த வகையில், 2013 - 14ல், 25.13 கோடி ரூபாய்; 2014 - 15ல், 45.27 கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகளாக, இந்த கட்டணத்தை தமிழக அரசு வழங்கவில்லை. இதுகுறித்து, தமிழ்நாடு, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச் செயலர், நந்தகுமார் கூறியதாவது: தமிழக அரசு, எங்களுக்கு தர வேண்டிய, கட்டணத் தொகையை தரவில்லை. பள்ளிகளின் முதல்வர் பெயரில் வங்கி கணக்கு துவக்குமாறு கூறினர்; துவக்கிவிட்டோம். மாணவர் சேர்க்கை குறித்த அனைத்து விவரங்களையும் அளித்து விட்டோம். ஆனால், இதுவரை, கட்டணத் தொகை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டுக்கான பணத்தை, இந்த ஆண்டு செப்டம்பரில் தருவதாக கூறினர்; இதுவரை தரவில்லை. சமீபத்தில், மத்திய அரசு, அந்த பணத்தை தரமுடியாது என்று கூறியிருப்பதாக தகவல் வந்துள்ளது.

விவர அறிக்கை அதேநேரம், பெற்றோர் பல வகைகளில் எங்களை மிரட்டுகின்றனர். கல்வித்துறை அதிகாரிகளும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். எனவே, அடுத்த ஆண்டு, 25 சதவீத மாணவர் சேர்க்கையை நடத்தப் போவதில்லை என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். இதுகுறித்து, கல்வித்துறை தரப்பில் கேட்டபோது, "

கடந்த ஆண்டு கட்டணம் தொடர்பான விவர அறிக்கை, தயாரிக்கப்பட்டு அதற்கான கோப்பு, நிதித்துறையில் உள்ளது. இன்னும் அனுமதி வரவில்லை. வந்ததும், கொடுத்து விடுவோம். இந்த ஆண்டிற்கான கட்டணத்திற்கு, மத்திய அரசு அனுமதிபெற, கோப்பு அனுப்பப்பட்டுள்ளது" என்றனர். மத்திய அரசு மறுப்பு ஏன்? கடந்த 2013 - 14ல், மாணவர் சேர்க்கையின்போது, தமிழக அரசு, குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயித்தது. ஆனால், மாணவர்களை சேர்த்த பள்ளிகளை பொறுத்தவரை, கட்டணம் வேறுபட்டது. இதுகுறித்த அறிக்கை மத்திய அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. மத்திய அரசோ, அரசு பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே தரப்படும் என கூறியது. தமிழக அரசின் அறிக்கைபடி, கட்டணத்தை தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

6 மாதம் நீட்டிப்பு

2005ம் ஆண்டுக்கு முன் வெளியிட்ட 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற ரிசர்வங்கி முடிவு செய்தது. இதுவரை, 53 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 147 கோடி ரூபாய் மதிப்பிலான, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு உள்ளன. தற்போது இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான காலக் கெடுவை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து ரிசர்வங்கி உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் சான்று இன்று முதல் வழங்கப்படுகிறது

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து வரும் முதலாண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது. மேற்கண்ட தேர்வு எழுதியவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது.

மாணவர்கள் படித்த அந்தந்த ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை எந்த மாவட்ட ஆசிரி யர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் கொடுத்தார்களோ அங்கேயே மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து வரும் முதலாண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது.

மேற்கண்ட தேர்வு எழுதியவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது.மாணவர்கள் படித்த அந்தந்த ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில்
அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை எந்த மாவட்ட ஆசிரி யர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் கொடுத்தார்களோ அங்கேயே மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.மேற்கண்ட தேர்வுக்கு விடைத்தாள் மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள் 30ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டத்துக்குரிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்கலாம்.மறுகூட்டலுக்கான கட்டணத் தொகையை நேரிலேயே செலுத்தலாம்.

TNOU B.ed results published

Click below

http://www.tnou.ac.in/bedrslt2014.htm

TNPSC GROUP IV tentative answer key released

Click below

http://www.tnpsc.gov.in/answerkeys_21_12_2014.html

Monday, December 22, 2014

காமராஜ் பல்கலை பருவமுறை நவ., 2014 தேர்வு முடிவுகள் வெளியீடு

மதுரை காமராஜ் பல்கலை இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு பருவமுறை (சி.பி.சி.எஸ்.,) நவ., 2014 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலையின் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., எம்.காம்., (சி.ஏ.), எம்.எஸ்.ஐ.டி., எம்.எஸ்.சி., (ஐ.டி.எம்.), எம்.ஏ., (ஆங்கிலம்) ஆகிய படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இப்பாடங்களுக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மதிப்பெண் பட்டியலுக்கு காத்திருக்காமல் அதற்கான விண்ணப்பங்களை www.mkuniversity.org இணையத்தில் பெறலாம். விண்ணப்பத்துடன் கட்டணத்தை டிடி-யாக இணைத்து, ஜன.,8 க்குள் அனுப்ப வேண்டும் என தேர்வாணையர் விஜயன் தெரிவித்துள்ளார்.

அரையாண்டு தேர்வு இன்று முடிகிறது விடுமுறைக்கு பின் ஜன.2ல் பள்ளி திறப்பு

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் அமலில் உள்ளது. 2ம் பருவத்திற்கான தேர்வுகள் கடந்த 10 நாட்களாக நடந்து வருகின்றன. இன்று (செவ்வாய்) கடைசி தேர்வு நடக்கிறது. இதுபோல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு போல் பொது வினாத்தாள் தயாரித்து வழங்கப்பட்டு அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த வகுப்பினருக்கும் இன்றுடன் தேர்வுகள் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளிகளுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறைக்குப் பின்னர் அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட பல தனியார் பள்ளிகள் ஜனவரி 2ம் தேதி திறக்கப்படுகின்றன. சில தனியார் பள்ளிகள் ஜனவரி 5ம் தேதி திறக்கப்படும் என அறிவித்துள்ளன. அரையாண்டு விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில் 3ம் பருவத்திற்குரிய பாட புத்தகங்கள் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.