இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, September 16, 2014

உள்ளாட்சி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவுக்காக வாக்காளர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் எவை? தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வாசிக்கப்பட்டது


உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்காக வாக்காளர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் எவை? என்பது பற்றி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பூத் சிலிப்புகள் இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 530 பதவி இடங்களுக்கு 18–ந் தேதி (நாளை) இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்களிப்பதற்கு வசதியாக வாக்காளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்தால் அதிகாரிகள் மூலம் பூத் சிலிப்கள் வழங்கப்பட்டன.

இந்த பணி 16–ந் தேதியோடு (நேற்று) நிறைவு பெற்றது. 14 ஆவணங்கள் இந்த பூத் சிலிப்பை கொண்டுவந்தால் ஓட்டுபோடுவதற்காக வேண்டிய ஆவணங்களை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துவர தேவையில்லை. பூத் சிலிப் இல்லை என்றால், அடையாளம் காணும் வகையில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 14 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வாக்குச்சாவடிக்கு கொண்டு வரவேண்டும்.

அதன்படி, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் அட்டை, மத்திய அல்லது மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் ஆகியவை வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, சாதி சான்றிதழ் இந்த ஆண்டு மார்ச் 31–ந் தேதிக்கு முன்னதாக வழங்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள், தபால் கணக்கு புத்தகம் அல்லது கிசான் கணக்கு புத்தகம் (புகைப்படத்துடன் உள்ளவை), முன்னாள் படைவீரர் ஓய்வூதிய புத்தகம், ஓய்வூதிய வழங்கல் ஆணை போன்ற புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள் மற்றும் முன்னாள் படை வீரரின் விதவைகள் அல்லது குடும்பத்தினருக்கான சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய சுதந்திர போராட்ட தியாகியின் அடையாள சான்றிதழ், இந்த ஆண்டு மார்ச் 31–ந் தேதி வரை உரிய அலுவலரால் வழங்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ், ஆதார் அட்டை புகைப்படத்துடன் கூடிய துப்பாக்கி உரிமம், மாற்றுத்திறனாளிகள் துறையால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய மாற்றுத்திறனாளிகள் சான்று, இந்த ஆண்டு மார்ச் 31–ந் தேதிக்குள் வழங்கப்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கடன் அட்டை, தொழிலாளர் நல திட்டத்துறையின் புகைப்படத்துடன் கூடிய நலவாழ்வு காப்பீட்டுத் திட்ட ஸ்மார்ட் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வரவேண்டும்.

புகைப்படம் கட்டாயம் இந்த ஆவணங்களில் வாக்காளரின் புகைப்படம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். வாக்காளர் புகைப்படம் இல்லாத எந்த ஆவணமும் அடையாள ஆவணமாக வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அலுவலரால் ஏற்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு திறன் குறைவு: எஸ்.எஸ்.ஏ., ஆய்வில் அதிர்ச்சி தகவல்


அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரில் அதிக மானோருக்கு, பாடப் புத்த கத்தில், வாசிப்புத் திறன் குறைவாக இருப்பதாக, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு, பொதுத்தேர்வுகளில், மாநில அளவில், அதிக இடங்களை பிடித்த, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில், வாசிப்புத் திறன் மிக குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.எஸ்.எஸ்.ஏ., சார்பில், பல வகையான ஆய்வுகள், பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், எட்டாம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, வாசிப்புத் திறன் குறித்து, கடந்த ஆண்டு, ஆய்வு நடத்தப்பட்டது.

கல்வித் துறை இணை இயக்குனர்கள் குழு, மாவட்ட வாரியாக சென்று, தமிழ் மற்றும் ஆங்கில பாடப் புத்தகங்களை, மாணவர்களிடம் கொடுத்து, வாசிக்கச் செய்தது. அதில், பெரு நகரங்களில் உள்ள பள்ளிகளை தவிர்த்து, மற்ற பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர், வாசிக்கத் திணறி உள்ளனர்.இந்த ஆண்டு, பொதுத்தேர்வில், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட மாணவர்கள் தான், மாநில அளவில், அதிக மதிப்பெண்களை பெற்று, 'ரேங்க்' பெற்றனர். இந்த மாவட்ட மாணவர்கள் தான், வாசிப்புத் திறனில், மிகவும் பின் தங்கியிருப்பதாக, ஆய்வில் அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.ஆய்வு முடிவின் அடிப்படையில், தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன், அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார். இதுகுறித்து, துறை வட்டாரம் கூறியதாவது:

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, ஒரு சுற்றறிக்கையை, இயக்குனர் அனுப்பி உள்ளார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், முறையாக, அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். அப்போது, மாணவர்களை, பாடப் புத்தகங்களை வாசிக்கச் செய்து, அவர்களின் திறனை அறிய வேண்டும்.பாடப் புத்தகங்களை வாசிக்க, மாணவர்கள் திணறி னால், சம்பந்தப்பட்ட பாட ஆசிரியரிடம், விளக்கம் கேட்டு பெற வேண்டும் எனவும், இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.இவ்வாறு, துறை வட்டாரம் தெரிவித்தது.

பிரச்னைக்கு அரசு தான் காரணம்! மாணவரிடையே, வாசிப்புத் திறன்குறைவாக இருப்பதற்கு, ஆசிரியர், சரியாக பாடம் நடத்தாதது தான் காரணம் என, அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் இழுத்தடிக்கும் டி.ஆர்.பி.,

ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மவுனம் காக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி நியமனங்கள் தாமதமாவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இத்துறைக்கு உட்பட்ட துவக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 30 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு 1500 ஆசிரியர்கள் மட்டும் பணியில் உள்ளனர். ஆசிரியர் பற்றாக்குறையால் ஐந்தாண்டுகளில் தேர்ச்சி விகிதம், மாணவர் எண்ணிக்கை குறைகிறது.

ஒரு பள்ளியில் உள்ள ஆசிரியர், 40 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள மற்றொரு பள்ளிக்கு மாற்றுப் பணியாக செல்கிறார். மேல்நிலை பள்ளிகளில், தாவரவியல், விலங்கியல் பாடங்களை ஒரே ஆசிரியரும், வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் பொருளியல் என மூன்று பாடங்களையும் ஒரே ஆசிரியரும் பல பள்ளிகளில் கற்பிக்கும் நிலையுள்ளது. ஆசிரியைகளை மாற்றுப்பள்ளிக்கு அனுப்புவதில் நடைமுறை சிக்கல் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநியமனங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடக்க பள்ளிகளில் 75 ஆசிரியர் (11 மாற்றுத்திறனாளி பிரிவுக்கு) பணியிடங்கள், 249 பட்டதாரி ஆசிரியர்கள் (இதில் 111 பேர் பள்ளி கல்வித் துறைக்கு மாறுதல்), முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 33 பேர் ஒதுக்கீடு செய்ய மார்ச் மாதம் இத்துறையால் சிபாரிசு செய்யப்பட்டது.

இதற்கான ஒதுக்கீடும் ஆகஸ்ட்டில் வழங்கப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லாததால், பணி நியமனத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மாவட்ட தலைவர் சின்னப்பாண்டி கூறியதாவது: இத்துறையில் 6 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனங்கள் இல்லை. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கவலையளிக்கிறது. பள்ளி கல்வியில், தரம் உயர்த்தப்படும் மேல்நிலை பள்ளிகளில் 9 ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இத்துறையில் சென்றாண்டு தரம் உயர்த்தப்பட்ட ஐந்து மேல்நிலை பள்ளிகளில் தலா 5 பணியிடங்களே ஏற்படுத்தப்பட்டன. அதிலும் ஆசிரியர்கள் நியமிக்கவில்லை. கள்ளர் சீரமைப்பு துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, டி.ஆர்.பி., மூலம் ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Monday, September 15, 2014

பி.எட் எம்.எட் படிப்பு இரண்டு ஆண்டு! விரைவில் வெளியாகிறது அரசாணை- தினமலர

*தகுதி வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க மத்திய அரசின் என்.சி.டி.இ முடிவெடுத்து பரிந்துரை செய்துள்ளது

*ம.அமைச்சர் ஸ்மிரிதி இரானி தலைமையில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது

*இதில் அடுத்த ஆண்டு 2015-16ல் அமுல்படித்த முடிவெடுக்கப்பட்டது

*விரைவில் அரசாணை வெளியாகும் என தெரிகிறது

ஆசிரியர்கள் போராட்டம் நடத்தலாமா தொடக்க கல்வி இயக்குனர் கருத்து


"ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த கூடாது என்பது என் கருத்து இல்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது," என தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.மதுரையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:தொடக்க கல்வித் துறையில் குழுக்கள் அமைத்து மாணவர்களின் கல்வித் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், வாசிப்பு மற்றும் எழுதும் திறன் ஆய்விற்கு எடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மேலும் சிறப்பாக ஆசிரியர்கள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது

.தொடக்க கல்வியில் மாணவர்கள் கல்வித் திறன் குறைந்து வருகிறது என்ற தகவல் தவறானது. அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட ' மாணவர் அடைவு திறன்' ஆய்வில், குறிப்பிட்ட வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நன்னெறி கல்வி போதிக்கப்படுகிறது. இதை பின்பற்றாத பள்ளிகளை உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள்.ஆசிரியர்கள், கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவை நான் பிறப்பிக்கவில்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிகளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது தான், என்றார்.மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன் உடன் இருந்தனர்.

பின்னணி என்ன? கடந்த சில வாரங்களுக்கு முன் தொடக்க கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், 'கல்வி அலுவலங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது,' என உத்தரவிடப்பட்டது.இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. செப்.,10ல் மாநில அளவில், உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. இந்நிலையில், சுற்றறிக்கை குறித்து இளங்கோவன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

Saturday, September 13, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேர்இணையதளத்திலிருந்து தங்களது சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவில்லை


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேர்இணையதளத்திலிருந்து தங்களது சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவில்லை.இவர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 22, 23 தேதிகளில் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேர்இணையதளத்திலிருந்து தங்களது சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவில்லை என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது தகுதிச் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைக்குப் பிறகு 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.மொத்தம் 72,888 பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டன.

இந்தச் சான்றிதழ்களை மூன்று வாரங்களுக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியது.ஆனால், பத்து நாள்களில் 50,276 பேர் மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது:ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் முதல் முறையாக இணையதளத்திலிருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்தச் சான்றிதழ்களை 25-ஆம் தேதி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்யமுடியும். ஒவ்வொரு தேர்வரும் இரண்டு முறை மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யலாம். சான்றிதழ்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது தொடர்பாக செயல் விளக்கங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களது பதிவெண்ணை இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, சான்றிதழில் இடம்பெறும் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.
அவற்றைச் சரிபார்த்தவுடன் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொள்ளலாம்.சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை எனக் கூறி சுமார் 400 பேர் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் புகார் செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 22, 23 தேதிகளில் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கப்படும். இதுவரை 22,612 பேர் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை.இவர்கள் அனைவரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

35 ஆயிரம் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பயிற்சி

அரசு பள்ளிகளைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர்கள் 35 ஆயிரம் பேருக்கு அறிவியல், கணிதம் குறித்த அடிப்படை பயிற்சி வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு,பெரும்பாலான பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வுக்கு தயாராகும் நோக்கில், 10ம் வகுப்பு பாட புத்தகங்களில் இருந்தே பாட வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதை தவிர்க்கும் வகையில், 9ம் வகுப்பு பாடபுத்தகங்களில் முக்கியமாக அறிவியல், கணிதம் போன்ற பாடங்களில் அடிப்படை அறிவை மாணவர்களுக்கு வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பயிற்சி:

இப்பயிற்சி வகுப்பு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் மூலம், பாட ஆசிரியர்களுக்கு எடுக்கப்படும். அந்த பாட ஆசிரியர்கள் அந்தந்த பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணித பாடத்தில் அடிப்படை வாசிப்பு திறன், முக்கிய சூத்திரங்கள், கண்டுபிடிப்புகள் சார்ந்த கல்வியை கற்றுத்தர வேண்டும். இப்பயிற்சி அக்.,முதல் வாரத்தில் துவங்க உள்ளது. முதற்கட்டமாக, மாநில அளவில் அரசு பள்ளிகளில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்களில், 35 ஆயிரம் பேருக்கு வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட அதிகாரி கூறுகையில

், “ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல், கணித பாடத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். இதை தொடர்ந்து, பிளஸ் ௧, பிளஸ் 2 முதுகலை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது,” என்றார்.

பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கையேடு

அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் இம் மாதம் 29ம் தேதிக்குள் பயிற்சி கையேடு வழங்க உத்தர விடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளை படித்து அதிக மதிப்பெண் பெறும் வகையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட பயிற்சி கையேடு வழங்கப்படும். அதில் ஒவ்வொரு பாடத்திலும் எந்த பகுதி முக்கியமானது. அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்கள் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். இந்த கையேடு அரசு பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் அனுப்பப்படும். இம் மாதம் 29ம் தேதிக்குள் மாணவர்களுக்கு வழங்கிவிட வேண்டும், என பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

சேத கட்டடங்களில் வகுப்புகளை நடத்தாதீர் பள்ளிக்கல்வித்துறை அறிவுரை

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி அரசு பள்ளிகளில் சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகளை நடத்த வேண்டாம்,”என, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளி கட்டட மேற்கூரை பெயர்ந்து, சுவர்களில் கீறல் விழுந்து பராமரிப்பின்றி, சேதமடைந்த நிலையில் உள்ளன. அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அக்கட்டடங்களில் வகுப்புகளை நடத்தவேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

துவக்க முதல் மேல்நிலை வரை அனைத்து அரசு பள்ளி கட்டடங்களின் நிலை குறித்து, பொதுப்பணித்துறை இன்ஜினியர்களின் உதவியுடன் ஆய்வு செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகள் நட௨த்த வேண்டாம். அங்கு நடத்தப்படும் வகுப்புகளை வேறு பகுதிக்கு மாற்றவும், பள்ளிகளில் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தால் அதன் திறப்பு விழாவிற்காக காத்திருக்காமல், துறை உயர்அதிகாரிகளின் முறையான அனுமதி பெற்று பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பள்ளி அருகே தாழ்வாக செல்லும் மின் வயர்கள், உயர் மின்அழுத்த கம்பிகளை உடனடியாக மாற்றி அமைக்க, வளாகத்தில் மழைநீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

Friday, September 12, 2014

அக்., 11 ல் தேசிய அறிவியல் கருத்தரங்கு : 8, 9,10 ம் வகுப்பு மாணவர்களுக்கு அழைப்பு : பெங்களூருவில் நடக்கிறது


எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய அறிவியல் கருத்தரங்கு அக்.,11 ல் பெங்களூருவில் நடக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள இளையோரிடம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் விதமாக, இளம் மாணவர்களின் எண்ணங்களை அறிவியலுக்கு பயன்படுத்தவும், விஞ்ஞானத்தில் மாறுபட்ட ஆலோசனைகளை வெளி கொணர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி மத்திய கலாசார அமைச்சகம், தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சில் ஏற்பாட்டில் தேசிய அறிவியல் கருத்தரங்கு பெங்களூரு விஸ்வேஸ்வரயா இண்டஸ்ரியல் டெக்னாலஜிக்கல் மியூசியத்தில் அக்.,11ல் நடக்கிறது.

எதிர்கால விவசாயத்தில் நிலைத்த, நீடித்த வளங்கள் மற்றும் சவால்களுக்கான புத்தாக்கங்கள் என்ற தலைப்பில் எட்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களின் படைப்புகளில் ஆங்கிலம், இந்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் சமர்ப்பிக்க வேண்டும். படைப்புகளை ஆறு நிமிடங்களில் வாசித்து முடிக்க வேண்டும். மாணவர்களின் படைப்புகளில் இருந்து நடுவர்களின் மூன்று கேள்விகளில் இரண்டிற்கு இரண்டு நிமிடத்தில் பதில் அளிக்க வேண்டும். அறிவியல் சார்ந்த படைப்புகளுக்கு 40 மதிப்பெண், சரளமான பேச்சுக்கு 25 மதிப்பெண், கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறனில் எழுத்து தேர்வுக்கு 10 மதிப்பெண், வாய் வழி தேர்வுக்கு 10 மதிப்பெண், படக்காட்சிகளுக்கு விளக்கம் அளிப்பிற்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேச அளவில் முதலிடம் பெறும் மாணவர் தேசிய அறிவியல் கருத்தரங்கிற்கு தகுதி பெறுவர்.

வெற்றி பெறுவோருக்கு ஓராண்டுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், சிறப்பு பரிசாக ஒன்பது பேருக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படும். கருத்தரங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் புத்தகங்கள், அறிவியல் உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

கணினி பயிற்றுநர் பதிவு மூப்பு பட்டியல் - SENIORITYLIST AS ON 21/12/2010

Thursday, September 11, 2014

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.-dinamalar

அரசாணைகளுக்கு புறம்பாக தலைமை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு dinakaran


5 ஆண்டுகளாக வழங்கப்பட்டது தலைமை ஆசிரியர்களுக்கு அரசாணைகளுக்கு புறம்பாக 2006ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட தனி ஊதியத்தை ஒரே தவணையில் பிடித்தம் செய்து அரசு கணக்கில் சேர்க்க பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.          அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரூ.500 மற்றும் ரூ.600 தனி ஊதியம் பெற்று வந்தனர். இவர்களில் 1.1.2006க்கு முன் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றால் அடிப்படை ஊதியத்துடன் இந்த தனி ஊதியமும் சேர்க்கப்பட்டு, உரிய தர ஊதியமும் அனுமதிக்கப்பட்டு சம்பளம் நிர்ணயம் செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது.

திருத்திய ஊதிய குழுவின்கீழ் ஊதியம் கணக்கிடப்பட்ட தேதி அல்லது 1.6.2009 தேதிக்கு பிறகு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்ற எவருக்கும் ரூ.500 அல்லது ரூ.600 தனி ஊதியம் வழங்கப்படக்கூடாது. ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் அரசாணைகளை தவறாக புரிந்துகொண்டு 1.6.2009க்கு பிறகு அல்லது திருத்திய ஊதிய குழுவின் கீழ் ஊதிய நிர்ணயம் செய்த பிறகு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றால் அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியம் அனுமதித்து ஆணையிடுகின்றனர். அதிகாரிகள் நடத்திய தணிக்கையில் இந்த விபரங்கள் தெரியவந்துள்ள நிலையில் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து அவ்வாறு வழங்கப்பட்ட தனி ஊதியத்தை பிடித்தம் செய்ய பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பான உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:           அரசாணைகளுக்கு புறம்பாக தலைமை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் அனுமதிக்கப்படுவது மாநில கணக்காயரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திருத்திய ஊதிய குழுவின்படி அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தனி ஊதியம் பெற அனுமதி இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. எனவே உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக 1.1.2006க்கு பின்னர் பதவி உயர்வு பெற்று திருத்திய ஊதியக்குழுவின் கீழ் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் தனி ஊதியம் அனுமதிக்க கூடாது.            எனவே அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் அதிகாரத்தில் உள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களின் பணி பதிவேட்டை சரிபார்க்க வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின்போது தனி ஊதியம் 1.1.2006க்கு பிறகு அல்லது திருத்திய ஊதியக்குழுவிற்கு வர விருப்பம் அளித்த தேதிக்கு பின்னர் சேர்க்கப்பட்டிருந்தால், ஊதிய மறுநிர்ணயம் செய்ய வேண்டும். கூடுதலாக பெற்ற தொகையை ஒரே தவணையில் பிடித்தம் செய்து அரசு கணக்கில் சேர்க்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.