இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, September 07, 2014

தமிழ் வாசிப்பில் தடுமாறும் மாணவர்கள்: கற்பித்தலில் மாற்றம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மொழிப்பாடங்களில் பின்தங்கி இருப்பதாக, கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. 'இத்தகைய குறைபாடுகளை களைய, கற்பித்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும், அரசு, அரசு உதவிபெறும் நிலையில், 28 ஆயிரத்து 591 துவக்க மற்றும் 9,259 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் கல்வித்திறன், மொழி உச்சரிப்பு, பாடங்களை உள்வாங்கிக் கொள்ளும் விதம் ஆகியவற்றை கண்காணிக்க, கல்வித்துறை இணை இயக்குனர் தலைமையில், மாவட்டந்தோறும் உள்ள கல்வி அதிகாரிகளின் சார்பில், ஆய்வுப்பணிகள் நடந்தன.

இதில், பெரும்பாலான கிராமப்புற பள்ளிகளில், மாணவர்கள் மொழி உச்சரிப்பில் தடுமாறுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, நடுநிலைப்பள்ளி மாணவர்களே தமிழ்ப்பாட உரைநடைப்பகுதியில், பத்திகளை முழுமையாக வாசிப்பதற்கு கூட சிரமப்பட்டுள்ளனர். ஆங்கிலப்பாட புத்தகத்தில் பெரும்பாலான வார்த்தைகளின் பொருள், உச்சரிக்கும் விதம் தெரிவதில்லை. 'இது தொடர்ந்தால், உயர்கல்வியில் மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறுவதற்கே பெரிதும் சிரமப்பட வேண்டியிருக்கும்' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, மலைப்பகுதி பள்ளிகளில், மாணவர்களது கல்வித்தரம் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை மேம்படுத்த, வகுப்பாசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், ''கிராமப்புற பள்ளிகளில் படித்து, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், ஆங்கிலப்பாட அறிவு குறைபாடால், உயர்கல்வியில் சராசரி மதிப்பெண்கள் பெறுவதற்கு கூட திண்டாடுவது தொடர்கதையாகி வருகிறது. ''மொழிப்பாட அறிவில்லா மாணவர்களால், உயர்கல்வியில் முத்திரை பதிக்க முடியாது. தமிழ் வழியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், உயர்கல்வி முடித்ததும், மொழி அறிவு குறைபாடால், செய்தித்தாள் வாசிப்பதில் கூட திணறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த முரண்பாடு களைய, கற்பித்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.''எழுத்துகள் அமைவிடம், உச்சரிப்பு, பொருள் குறித்து படங்கள் வாயிலாக, தெளிவுபட விளக்க வேண்டும்.

இத்தகைய செயல்பாடுகள் மூலம், மாணவர்களின் மொழிப்பாட அறிவை அதிகப்படுத்த முடியும்," என்றார்.

Saturday, September 06, 2014

power grid corporation -conduct painting comptition

பள்ளிக்கல்வித்துறை நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது


10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக வசதியின் காரணமாக கால அட்டவணையில் 12ம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் 10ம் வகுப்பு மொழி பாடம் ஆகியவற்றின் தேர்வுகள் காலாண்டு விடுமுறைக்குப்பின் கீழ்க்கண்டவாறு மாற்றம்  செய்துள்ளது.
QUARTERLY EXAM 12th TIME TABLE
17.09.14 ENGLISH I PAPER 07.10.14 ENGLISH I PAPER
18.09.14 ENGLISH II PAPER 08.10.14 ENGLISH II PAPER
QUARTERLY EXAM 10th TIME TABLE
17.09.14 1ST LANGUAGE I PAPER 07.10.14 1ST LANGUAGE I PAPER
18.09.14 1ST LANGUAGE II PAPER 08.10.14 1ST LANGUAGE II PAPER

மேலும் அந்தந்த மாவட்டங்களில் 17, 18 செப்டம்பரில் வேறு வகுப்புகளுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் அவையும் அக்டோபர் 07,08ல் மாற்றப்படவுள்ளது

இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடக்குமா?இதுவரை அறிவிப்பு இல்லாததால் சந்தேகம்


கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு பிரச்னையே, இன்னும் தீராத நிலையில் இருப்பதால், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்துவது குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் தெரிவித்தது. இதுவரை, புதிய தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது, பட்டதாரிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட விதிமுறைகளை, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.,) கொண்டு வந்தது. 2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், தமிழகத்தில், 2010ல் அமலுக்கு வந்தது. 2011ல், தமிழக அரசு, விதிமுறைகளை வெளியிட்டது.

என்.சி.டி.இ., விதிமுறையில், 'ஆசிரியர் தகுதி தேர்வை, ஆண்டுக்கு ஒரு முறையாவது நடத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 2012, ஜூலையில், முதல் டி.இ.டி., தேர்வு நடந்தது.அதில், 2,500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால், அதே ஆண்டு அக்டோபரில், மறுதேர்வு நடத்தப்பட்டது. பின், கடந்த 2013, ஆகஸ்ட்டில், மூன்றாவது டி.இ.டி., தேர்வு நடந்தது. நடப்பு ஆண்டில், இதுவரை, புதிய டி.இ.டி., தேர்வு நடத்தவில்லை.நடப்பு ஆண்டு முடிய, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. தேர்வு குறித்த அறிவிப்பை, குறைந்தது, இரு மாதங்களுக்கு முன் வெளியிட வேண்டும். அதன்படி, அக்டோபர், நவம்பர் மாதத்தில் தேர்வு நடத்துவதாக இருந்தால், தற்போது, அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும்.

ஆனால், இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. சிக்கல்: கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, கடந்த மாதம் தான், டி.ஆர்.பி., வெளியிட்டது. தற்போது, பணி நியமனம் துவக்கப்பட்ட நிலையில், பல்வேறு வழக்குகள் காரணமாக, பணி நியமனத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இடைக்கால தடை விதித்ததால், இன்றுவரை சிக்கல் தொடர்கிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என, கூறப்படுகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரத்தில்,'ஏற்கனவே நடந்த தேர்வு பிரச்னையே, இன்னும் தீரவில்லை. இதனால், புதிய தேர்வு குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, தெரிவித்தனர்.இதனால், புதிய தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகள், ஏமாற்றம் அடைந்துள்ளனர். பட்டதாரிகள்: இதுகுறித்து, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:

ஆண்டுக்கு, ஒரு டி.இ.டி., தேர்வையாவது, கண்டிப்பாக நடத்த வேண்டும். பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், வேலையின்றி உள்ளனர். அவர்களுக்கு, அரசு பள்ளிகளில் வேலை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தனியார் பள்ளிகளில் வேலையில் சேர, டி.இ.டி., தேர்வு உதவும்.இவ்வாறு, அவர் கூறினார்.

வாசிப்பு திறன் குறைவு : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

  "மாணவ,மாணவிகளிடம் வாசிப்பு திறன் குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு,” தொடக்க கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 8 வரை படிக்கும் மாணவ, மாணவிகளிடத்தில், பாட புத்தகத்தை வாசிக்கும் திறன் குறித்து, கல்வித்துறை இணை இயக்குனர்கள் மாவட்ட வாரியாக ஆய்வு செய்தனர். இதில், தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்து பாடங்களையும், மாணவர்கள் முழுமையாக வாசிக்க கூட முடியவில்லை என்பதை கண்டறிந்தனர்.

சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் மட்டுமே தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களிடத்தில், பாட புத்தகங்களின் வாசிப்பு திறன் சிறப்பாக உள்ளது தெரியவந்துள்ளது. மற்றபடி, அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில், மாநில அளவில் முதல் 15 இடங்களை பிடித்த, மாவட்டங்களில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களிடத்தில் கூட வாசிப்பு திறன் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. எச்சரிக்கை: திறன் குறைந்த தொடக்க, நடுநிலை பள்ளிகளில், கற்பிக்கும் ஆசிரியர்கள் மிக கவனத்துடன் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

அடுத்து, பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தப்படும் போது, மாணவர்களிடத்தில் வாசிப்பு திறன் அதிகரித்து இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, தொடக்க கல்வித்துறை எச்சரித்துள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது; கல்வித்துறை இணை இயக்குனர் தகுதியில், கண்காணிப்பு அலுவலர் மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் தோறும் ஆய்வு செய்ததில், தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களிடத்தில் வாசிப்பு திறன் மிக குறைவாக உள்ளது. தமிழ் பாடத்தை வாசிப்பதில் கூட பின்தங்கி உள்ளனர். மாநிலத்தில் வாசிப்பு திறன் குறைந்த மாவட்ட பட்டியலில், சிவகங்கை 26வது இடத்தில் உள்ளது. மாவட்ட, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.

சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

மாவட்ட அளவில், சிறந்த பள்ளியை தேர்வு செய்து, விவரம் அனுப்ப, தொடக்கக்கல்வி அதிகாரிகளை, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில், பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டு தோறும் கேடயம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில், சிறந்த பள்ளியை தேர்வு செய்வது குறித்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது:

மாவட்ட வாரியாக, தொடக்கக்கல்வி அலுவலர், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் கொண்ட குழு அமைத்து, பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டும். குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை, தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்புத்திறன், கணிதத்தில் அடிப்படைத் திறன், செயல்வழிக்கற்றல் மற்றும் படைப்பாற்றல், குடிநீர் வசதி, கழிப்பறை தூய்மை, தேசிய விழாக்களில் மாணவர்களின் ஈடுபாடு, பதிவேடுகள் பராமரித்தல் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, மதிப்பெண் வழங்க வேண்டும். மாவட்ட அளவில், மூன்ற சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய வரும்,10ம் ?ததிக்குள் விவரத்தை, கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

திங்களன்று விசாரனைக்கு வரும்தகுதிதேர்வு சம்பந்தமானவழக்குகள்.


திங்களன்று விசாரனைக்கு வரும் தகுதிதேர்வு சம்பந்தமான
வழக்குகள். ஐட்டம் நெம்பர் 20. ஆக வருகிறது.

WA.1037/2014 M/S.C.UMA CHENNAI
N.R.R.ARUN NATARAJAN
IN Permit the petitioner
MP.4/2014 - DO -
IN Permit the petitioner
MP.4/2014 - DO -
AND
WA.1038/2014
AND For Stay
MP.1/2014 - DO -
AND For Injunction
MP.2/2014 - DO -
AND For Direction
MP.3/2014 - DO -
AND
WA.707/2014 M/S.DAKSHAYANI
REDDY WA.707/2014
S.SUREKHA ----------------
R1. AND R2 SERVED ON 27/07/201
R1. THE STATE OF TAMIL NADU
REP BY THE PRINCIPAL SECRETARY
TO GOVT.SCHOOL EDUCATION DEPT.
CHENNAI - 9
R2. THE TEACHERS RECRUETMENT
BOARD REP BY CHAIRMAN
DPI COMPOUND
COLLEGE ROAD
CHENNAI
AND
WA.776/2014 M/S.DAKSHAYANI
REDDY CHENNAI
AND For Injunction
MP.1/2014 - DO -
AND TO DIRECTION
MP.2/2014 - DO -
AND
WA.857/2014 M/S.DAKSHAYANI
REDDY CHENNAI
S.SUREKHA
AND For Injunction
MP.1/2014 - DO -
AND TO DIRECTION
MP.2/2014 - DO -
AND
WA.944/2014 M/S C.UMA CHENNAI
N.R.R.ARUN NATARAJAN
For Stay
MP.1/2014 - DO -
TO For Direction
MP.3/2014 - DO -
AND
WA.972/2014 M/S DAKSHAYANI
REDDY CHENNAI
S.SUREKHA
AND
WP.22498/2014 M/S.B.BALAVIJAYAN
V.SHIVALINGAM
AND
WP.22499/2014 M/S.B.BALAVIJAYAN
V.SHIVALINGAM
AND For Direction
MP.1/2014 - DO -
AND For Direction
MP.1/2014 - DO -
AND
WP.22503/2014 M/S.B.BALAVIJAYAN
SALEM
V.SHIVALINGAM
AND
WP.22504/2014 - DO -
AND For Direction
MP.1/2014 - DO -
AND For Direction
MP.1/2014 - DO -
AND
WP.18587/2014
M/S.G.SANKARAN M/
S.P.RAJALAKSHMI GOVTADVOCATE
S.NEDUNCHEZHIYAN TAKES NOTICE
FOR RESPT
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND
WP.20040/2014 M/S.G.SANKARAN
S.NEDUNCHEZHIYAN
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND II SET NOT FILED
WP.21488/2014 M/S.DAKSHAYANI
REDDY
(SERVICE) S.SUREKHA
AND
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND II SET NOT FILED
WP.21566/2014 M/S.C.UMA
(SERVICE) N.R.R.ARUN NATARAJAN
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND
WP.22177/2014 M/S.R.PARTHIBAN
(SERVICE) STALIN ABHIMANYU
C.VIGNESWARAN
AND To Dispense With
MP.1/2014 - DO -
AND For Stay
MP.2/2014 - DO -
AND
WP.23094/2014 M/S.M.UDHAYA
KUMAR M/S.D.KRISHNAKUMAR
(SERVICE) SPL GOVT PLEADER
(EDUCATION)
TAKES NOTICE FOR RR
1.TO 4
SERVICE AWAITED REG R5
AND TO DISPENSE WITH
MP.1/2014 DO
AND FOR STAY
MP.2/2014 DO

TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 -3 PAPERS RESULTS PUBLISHED

Friday, September 05, 2014

கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்: அப்துல் கலாம் வலியுறுத்தல

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது

: நமது நாட்டில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களில் உள்ள பள்ளிகளில்தான் பணியாற்றுகின்றனர். எனவே, கிராமங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்க வேண்டும். நகர்ப்புறங்களில் உள்ள வசதிகளைப் போல சாலை இணைப்புகள், மின்னணு சாதன இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கிராமப்புறங்களில் ஏற்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகளை வழங்குவதோடு, ஒருங்கிணைந்த கற்றல் சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.

அதோடு, கிராமங்களிலேயே இருக்க விரும்பும் அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு போதிய பொருளாதார வாய்ப்புகளையும் நாம் ஏற்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட காரணங்களால் நகர்ப்புறங்களுக்குப் பணிமாறுதல் கோருவது இயல்பானதுதான். அதேபோல, அவர்கள் தங்களது அறிவையும் மேம்படுத்திக்கொள்ள நகர்ப்புறங்களில் உள்ள வசதிகளே ஏற்றதாக இருக்கும் என நம்புகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள இந்த நிலை தொடர்பாக அரசும், சமூக நிறுவனங்களும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.

கிராமப்புறங்களை இணைக்கும் வகையில் பெரும் திட்டங்களை அவர்கள் செயல்படுத்த வேண்டும். அணுகுண்டு சோதனைக்கு உதவிய கல்லூரி வகுப்புகள்: எனது கல்லூரி நாள்களில் பேராசிரியர் சின்னதுரை அணு இயற்பியல் உள்ளிட்ட வகுப்புகளை எடுத்தார். பொக்ரானில் 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொளுத்திய ஒரு நாளில் அணு குண்டு சோதனை நடத்தி, அணு ஆயுத நாடாக இந்தியா மாறியது. அந்தச் சோதனைக்கு எனக்கு உதவிப் புரிந்தது பேராசிரியர் சின்னதுரையின் வகுப்புகள்தான். அந்த நாளில் அவருக்கு நான் நன்றி செலுத்தினேன். மாணவர்கள் பல்வேறு புதிய சிந்தனைகளுடன் இருப்பார்கள். அவர்களைக் கண்டுபிடிப்பாளர்களாக மாற்றுவதும், ஊக்கப்படுத்துவதும் ஆசிரியர்களின் கைகளில்தான் உள்ளது. உலகில் வேறு எந்த வேலையையும் விட சமூகத்துக்குப் பயன்தரும் மிக முக்கியப் பணி ஆசிரியர் பணி ஆகும். அவர்கள் மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் பணியைச் செய்கின்றனர். ஆசிரியர்கள் ஏணிகளைப் போன்றவர்கள். பலர் முன்னேறுவதற்குப் பயன்படுவர். ஆசிரியர்களிடம் இருந்து நாம் கல்வியை மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான பண்புகளையும், ஒழுக்கத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்றார் கலாம்.

Thursday, September 04, 2014

ஆசிரியர் நியமனத் தடையை எதிர்த்து மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் தகவல்


் ஆசிரியர்கள் நியமனத்துக்கு தனி நீதிபதி விதித்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் தெரிவித்தார். தமிழகத்தில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கே.கே.சசிதரன் உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டம், கத்தகுறிச்சியைச் சேர்ந்த தமிழரசன் உள்ளிட்ட 18 பேர் தாக்கல் செய்த மனு மீது அவர் இவ்வாறு உத்தரவிட்டார். தகுதிகாண் மதிப்பெண் முறையில் மதிப்பெண் வழங்கும்போது, 2000-ஆம் ஆண்டுக்கு முன்பு பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் பாதிக்கப்படுவர் என மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில், நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜரானார். அவர், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதை அவசர வழக்காகக் கருதி உடனே விசாரிக்குமாறும் வேண்டினார். ஆனால், அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்தனர். மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தால் பட்டியலிடப்பட்டு முறையாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சமுதாய சிற்பிகள் :இன்று ஆசிரியர் தினம்

   
    ஆசிரியர் என்பது பணி அல்ல, ஒரு தொண்டு. மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுகின்றனர் ஆசிரியர்கள். "எழுத்தறிவித்தவன் இறைவன்', "மாணவர்கள் கல் என்றால் ஆசிரியர்கள் சிற்பிகள்' போன்ற பொன்மொழிகள் ஆசிரியர்களுக்கு புகழ் சேர்க்கின்றன. ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப் படுகிறது என்பது நூறு சதவீதம் உண்மை. தாய் தந்தையை விட, ஆசிரியரிடம் தான் ஒரு குழந்தை அதிக நேரம் செலவழிக்கிறது. எனவே தான் ஆசிரியர்கள் இரண்டாவது தாய் என அழைக்கப்படுகின்றனர். தன்னிடம் படிக்கும் மாணவர்களை சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் மனிதனாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர் களுக்கு உண்டு.

மாணவனுக்கு சமூகத்தில் கிடைக்கும் வெற்றி தான் கற்பித்த ஆசிரியரின் வெற்றி. உலகில் ஆசிரியர் தினம் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆசிரியர் தினம் மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களின் பொறுப்பை உணர்த்தும் விதத்திலும், ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மரியாதை அளிக்க வேண்டும் என்பதையும் இத்தினம் வலியுறுத்துகிறது. சிறந்த ஆசிரியரின் பண்புகள் மாணவர்களை ஈர்ப்பது மட்டுமன்றி, அவர்களது மனதில் அப்படியே பதிகிறது. ஆசிரியரே மாணவனுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். தோன்றியது எப்படி:

சிறந்த கல்வியாளராகவும், தத்துவமேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன் 1962, மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரது பிறந்த நாளை கொண்டாட வேண்டுமென அவரது மாணவர்கள் அனுமதி கேட்டனர். அதற்கு அவர், தனது பிறந்த நாளை தனியாக கொண்டாடுவதை விட அதை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் தனக்கு பெருமை எனக் கூறினார். ஆசிரியர் தொழிலில் தனக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அவர் இவ்வாறு கூறினார். இதன் காரணமாக அவரது பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி கலாம் "சிறந்த ஆசிரியர் என்பவர் சிறப்பாக கற்பிப்பவர் மட்டுமல்ல, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும்; அவரால் தான் மாணவர்களின் மனதில் நன்னெறிகளை வளர்க்க முடியும்' என்றார்.

ஆசிரியரும் ஒரு மாணவரே:தற்போது ஆசிரியர் - மாணவர் உறவில் பல பிரச்னைகள் எழுகின்றன. ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் விரும்பத்தகாத சம்பவங்களை தடுக்கலாம். பட்டதாரி ஆசிரியரை விட, ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் பணி சிறப்பானது. ஏனெனில், குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது எளிதான விஷயமல்ல. மற்ற பணிகளைப் போல, ஆசிரியர் பணியில் சாதித்து விட முடியாது. பொறுமை, அர்ப்பணிப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் தான், தரமான கல்வியை அளிக்க முடியும். மாணவரைப் போல, ஆசிரியரும் அறிவை பெருக்கிக்கொள்ள தயங்கக் கூடாது. ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஜனாதிபதியே விருது வழங்கி கவுரவிக்கிறார். இது ஆசிரியர்களுக்கு கிடைக்கும் பெரிய கவுரவம்.

பள்ளி மாணவர்களுக்கு ரூ.3 கோடி

அரசு பள்ளி மாணவர்களுக்கு, டைரி வழங்கும் திட்டத்தை, தமிழக கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதற்காக, மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கும் டைரியில், என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும், என, பள்ளி ஆசிரியர்களிடம், கல்வித்துறை கருத்துக்கேட்டது. மாணவர்கள் புகைப்படம், சுயவிவரம், குடும்பத்தினர் பற்றிய விபரம், பள்ளி விடுமுறை நாட்கள், உறுதிமொழி எடுக்க வேண்டிய நாட்கள், பள்ளி மற்றும் வகுப்பில் பின்பற்றப்படும் மாதிரி கால அட்டவணை, முக்கிய தினங்கள், தினமும் ஆசிரியர் மற்றும் பெற்றோர் கையொப்பமிட தனியிடம், உடற்பயிற்சி, ஒழுக்கமான வாழ்வு, முன்னேற்ற கருத்துகள் ஆகியவை இடம் பெற அறிவுறுத்தப்பட்டது.

இந்த அடிப்படையில் டைரி தயாரித்து, காலாண்டுத்தேர்வு முடிவுக்குள் வழங்க, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதிய அரசாணை வெளியானால் நிறைவேற்ற தயார்: டி.ஆர்.பி.,

'ஆசிரியர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து, புதிய அரசாணை வெளிவந்தால், அதை நிறைவேற்ற தயாராக உள்ளோம்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது. புதிய ஆசிரியர் நியமன விவகாரம், இடியாப்ப சிக்கலாக மாறியுள்ளது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியரை பணி நியமனம் செய்ய, நீதிமன்றம், இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக அரசுக்கு, நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

இந்த பிரச்னையில், அடுத்ததாக என்ன நடக்கும் எனத் தெரியாமல், தேர்வு பெற்ற ஆசிரியரும், தேர்வு பெறாத ஆசிரியரும், திகிலில் உள்ளனர். ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட்டபோது 'தற்போதைய தேர்வுப் பட்டியல், தற்காலிகமானது; வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு, தேர்வுப் பட்டியல் உட்பட்டது' என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இதனால், ஏதாவது மாற்றம் வரலாம் எனவும், தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், 'கடைசியாக வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில் தான், ஆசிரியர் தேர்வுப் பட்டியலை வெளியிட்டோம். இனி, மேலும் ஒரு புதிய அரசாணை வந்தால், அதற்கேற்பவும், பட்டியலை தயாரித்து வெளியிட, தயாராக உள்ளோம்' என, தெரிவித்தது.

கற்பித்தல் என்பது பணியல்ல; தர்மம்!


  ''கற்பித்தல் பணியல்ல; அது வாழும் முறை; வாழ்வின் தர்மம்,'' என, பிரதமர், நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவரின் நினைவாகவும், ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையிலும், கல்வித் துறையில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி விருதுக்காக, நாடு முழுவதும், 350 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் இன்று நடைபெறும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 350 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். இதன் ஒரு பகுதியாக, விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து, அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, மோடி பேசியதாவது : மாறி வரும் சூழ்நிலையில், மாணவர்களின் அறிவுப் பசியைத் தீர்க்கும் வகையில், ஆசிரியர்கள் தங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் தேவையை உணர்ந்து செயல்பட வேண்டும். உலகளாவிய மாற்றங்களை கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். சமுதாய வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. கற்பித்தல் வெறும் கடமை ஆகாது.

அது ஒரு பணியல்ல; வாழும் முறை. கற்பித்தல், வாழ்வின் தர்மம். ஒவ்வொரு மாணவனின் வெற்றிக்குப் பின், ஒரு ஆசிரியர் இருக்கிறார். நான் குஜராத் முதல்வரானதும், என் பள்ளி நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்தேன். அது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளித்தது. ஒவ்வொரு மாணவனும், தன் ஆசிரியரை மதிக்க வேண்டும். ஆசிரியருக்கு ஓய்வு என்பதே கிடையாது. மற்ற எந்தப் பணியை செய்யும் நபரும், குறிப்பிட்ட வயதில், பணி ஓய்வு பெறுகிறார். ஆனால், ஒரு ஆசிரியர், எத்தனை வயதானாலும் தன் அறிவாற்றலையும், தன் அனுபவத்தையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு சமர்ப்பிக்கிறார். இவ்வாறு அவர் பேசினார். மாணவர்கள் மத்தியில் மோடி இன்று உரை : இன்று, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், பிரதமர் நரேந்திர மோடி ஆற்றும் உரை, நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. தனியார் பள்ளிகளும் மோடி உரையை மாணவர்களுக்கு காட்ட ஆர்வமாக உள்ளன. எனினும், மேற்கு வங்கம் உட்பட சில மாநிலங்களில், இதற்கான முயற்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் அவர்களின் ஆசிரியர்தின வாழ்த்துச்செய்தி

Wednesday, September 03, 2014

TNTET PAPER-1: கலந்தாய்வில் கலந்துக்கொண்டு பணிஒப்புகை ஆணை பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நாளை பணி ஆணை வழங்கப்படாது, சான்றிதழ் சரிபார்ப்பு நாளை நடைபெறும

் கடந்த 01.09.2014 & 02.09.2014 நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும் பணி ஒப்புகை ஆணை வழங்கப்பட்டது.... அவர்கள் அனைவரையும் நாளை ( 04.09.2014 ) அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்க இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தடைவிதித்தது.

இதனால் நாளை பணி நியமன ஆணை வழங்கப்படாது. ஆனால் பணி ஒப்புகை பெற்ற அனைவரும்   மாவட்டத் தொடக்கக்கல்வி  அலுவலகதிற்கு செல்லவும். அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நாளை நடைபெறும். எனவே அனைவரும் கலந்தாய்வின் போது கூறியபடி அணைத்து அசல் மற்றும் நகல்  சான்றிதழ்களுடன் செல்லவும.. இயக்குனரின் மறுஉத்தரவு வரும் வரை இந்நிலை தொடரும்.