இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, August 18, 2014

தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும்: பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல


ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) முறையை ரத்து செய்ய வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.  தகுதிகாண் மதிப்பெண் முறையை எதிர்த்து பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.  இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியது:  

ஆசிரியர் தகுதித் தேர்வில் 100-க்கும் அதிகமான மதிப்பெண் எடுத்த பலர் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம்பெறவில்லை. இதற்கு தகுதிகாண் மதிப்பெண் முறையே காரணம்.  தகுதிகாண் மதிப்பெண் முறையில் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். படிப்பில் எடுத்த மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் 40 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் எடுத்த மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் 60 மதிப்பெண்ணும்  வழங்கப்படுகிறது.  மொத்தமாக 100 மதிப்பெண்ணுக்கு ஒருவர் பெறும் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படுகிறது.  தனியார் பள்ளிகளில் பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமும், ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண்ணும் பெற்றிருந்தாலும் நாங்கள் தேர்வுப் பட்டியலில் இடம்பெறவில்லை. 

அதேநேரத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகையால் தேர்ச்சி பெற்ற பலர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிளஸ் 2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் எடுப்பது மிகவும் சிரமம். இப்போது பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண்கள் அள்ளி தரப்படுகின்றன. எனவே, தகுதிகாண் மதிப்பெண் முறையில் 5 ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களே அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  அடுத்த ஆண்டில் தகுதிகாண் மதிப்பெண்ணை அதிகரிக்க தகுதித் தேர்வை மீண்டும் எழுதினாலும், பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட். படிப்புக்கான தகுதிகாண் மதிப்பெண்ணை மாற்ற இயலாது. தகுதிகாண் மதிப்பெண் முறை இருக்கும் வரை நாங்கள் ஆசிரியராக பணி நியமனம் பெறுவது முடியாது.  எனவே, தகுதிகாண் மதிப்பெண் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.   ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக., 26ல் அடைவு ஆய்வு தேர்வு


அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும், 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான அடைவு ஆய்வு தேர்வு, வரும், 26ம் தேதி நடைபெறும் என, கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின், கல்வித்தர மேம்பாட்டினை அளவிடும் பொருட்டு, அடைவு ஆய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், ஒரு வட்டாரத்திற்கு, மூன்று பள்ளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அப்பள்ளிகளில் உள்ள, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆங்கிலம், தமிழ், கணிதம் ஆகிய பாடங்களில், அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது

. இதன் மூலம், மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வாசிப்பு, எழுதுதல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள் அளவிடப்படுகின்றன. இதுகுறித்து, கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:நடப்பு கல்வியாண்டிற்கான அடைவு ஆய்வு தேர்வு, வரும், 26ம் தேதி நடைபெறும். ஆய்வு நடத்த வேண்டிய பள்ளிகளின் பட்டியல், இறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த காரணத்திற்காகவும், ஆய்வு நடக்கும் நாள், பள்ளி, வகுப்பு ஆகியவற்றில், மாற்றம் செய்தல் கூடாது. ஆய்வு குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளுக்கு, மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள், முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். தமிழ் பாடம், காலை, 9:30 11:00 மணி; ஆங்கிலம், 11:30 1:00 மணி; கணிதம், 2:00 3:30 மணி வரையிலும், தேர்வு நடத்தப்பட வேண்டும். மாணவர் எண்ணிக்கை, 30க்குள் இருந்தால், அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்த வேண்டும

். 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பின், வருகை பதிவேட்டில் உள்ள பெயர்களை வைத்து, சுழற்சி முறையில், மாணவர்களை தேர்ந்தெடுத்து தேர்வு நடத்த வேண்டும்.அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என, ஒரு பள்ளிக்கு, இரண்டு களப் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். மாவட்டக்கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் பேராசிரியர்கள், தேர்வினை நடத்த மேற்பார்வையாளர்களாக உள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், தேர்வு நடத்தும் விதிமுறைகளை, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

திறனாய்வு தேர்வு அறிவிப்பு


'மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்க விரும்பும், 10ம் வகுப்பு மாணவர்கள், வரும், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.துறையின் அறிவிப்பு: தற்போது, அனைத்து வகை பள்ளிகளிலும், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர், திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை, www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து,

18ம் தேதி முதல் (நேற்று), வரும் 28ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணம், 50 ரூபாயை, பள்ளி தலைமைஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு, தேர்வுத்துறைஅறிவித்துள்ளது.இந்த தேர்வுக்கு பின், இரண்டாம் கட்ட தேர்வை, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி.,) நடத்தும். இதில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு, பி.எச்டி., வரை, மத்திய அரசின் கல்வி உதவிதொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கட்டுரைப் போட்டி


வரும் செப். 5 ல் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கட்டுரை போட்டிகளில் பங்கேற்க மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் ஆகியோருக்கு அறிவியல் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக அறிவியல் இயக்க மாநில கல்வி உபகுழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாகவும், ஆய்வுக்கு உட்படுத்தும் சிந்தனையை வளர்க்கும் விதமாகவும் கல்வி இருக்க வேண்டும். அதற்காக வரும் செப். 5ல் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் பங்கேற்கும் கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது.

ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் "என் இதயம் கவர்ந்த இனிய ஆசிரியர்" என்ற தலைப்பிலும், ஆசிரியர்கள் "வகுப்பறையில் வசந்தம்" என்ற தலைப்பிலும், ஆர்வலர்கள் "அரசு பள்ளிகள் நேற்று இன்று நாளை" என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்கள் "இப்படித்தான் இருக்க வேண்டும் வகுப்பறை" என்ற தலைப்பிலும் கட்டுரைகளை வரும் ஆக. 30 க்குள் அனுப்ப வேண்டும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: முத்துக்கண்ணன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கூடலூர். மேலும் விபரங்களுக்கு 9488011128, 9944094428 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, August 17, 2014

ஆங்கிலவழிக் கல்விக்கு தனி ஆசிரியர்கள் தேவை என்ற கோரிக்கை: கல்வி அதிகாரிகள் நிராகரிப்பு


ஆங்கில வழிக்கல்விக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்' என்ற கோரிக்கை, தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளி ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது. ஆனால், தனி ஆசிரியர்கள் தேவை இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாநிலத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில், கடந்தாண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளிலும் துவங்கப்பட்டது

. கோவை மாவட்டத்தில் 1,141 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.கோவையில் கடந்த இரு ஆண்டு களில், 249 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலவழி அறிமுகம் செய்யப்பட்டது; 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். நடப்பு 2014--15ம் கல்வியாண்டில் புதிதாக, 92 பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி துவங்கப்பட்டது; 5,800 மாணவர்கள் படித்து வருகின்றனர்.ஆங்கில வழிக் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துவரும் நிலையில், இதற்கென தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 'தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களே, கூடுதலாக ஆங்கில வழிக்கல்வி ஆசிரியர்களாகவும் பணியாற்ற வேண்டியுள்ளது

. ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளில், சில ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் போதிய அனுபவம் இல்லாததால், ஆங்கில வழிக்கல்வி தடுமாறுகிறது. இதனால், மாணவர்களுக்கு போதுமான கல்வியை எடுத்துச்செல்ல முடிவதில்லை. இதனை தவிர்க்க, ஆங்கிலம் படித்த தனி பட்டதாரி ஆசிரியர்களை அரசு நியமிக்கவேண்டும்' என்றார். ஆனால், அதிகாரிகள் தரப்பில், இந்த கோரிக்கை அவசியமற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்

ஞானகவுரியிடம் கேட்டபோது, ''ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கப்படும் பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; ஆட்கள் பற்றாக்குறை இல்லை. ஒவ்வொரு பள்ளியிலும் ஆங்கிலம் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், எவ்வித சிரமமும் இல்லை. ஆசிரியர்களுக்கும் ஆங்கிலம் பயிற்றுவிப்பு குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக முன்னேற்றம் காணப்படும் என்பதால், தனி ஆசிரியர்கள் நியமிக்க அவசியமில்லை,'' என்றார்.

ஓரிரு வாரங்களில் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஓரிரு வாரங்களில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  பட்டதாரி ஆசிரியர்கள் 11 ஆயிரம் பேர் அடங்கிய தேர்வுப் பட்டியல், ஆங்கிலம், வேதியியல் உள்ளிட்டப் பாடங்களில் 1,200 பேர் அடங்கிய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிட்டது. இந்தப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரின் முழுவிவரங்கள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்கான பணி மூப்பு போன்றவற்றுடன் கூடிய தேர்வுப் பட்டியல் பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்க வேண்டும்.

ஒரு வாரத்துக்குள் இந்த விவரங்களுடன் கூடிய தேர்வுப் பட்டியல் வழங்கப்பட்டுவிடும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்பிறகு, இந்தப் பட்டியலின் அடிப்படையில் பணி நியமனத்துக்கான ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும். பெரும்பாலும் ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்களுக்கான பணி நியமன ஆணைகள், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளன. இந்த விழாவுக்கான தேதி ஒரு சில நாள்களில் இறுதிசெய்யப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல், மீதமுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆகியவை இந்த விழாவுக்கு முன்னதாகவே வெளியிடப்பட உள்ளன. பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண சலுகைக்குப் பிறகு இந்தத் தேர்வில் மொத்தம் 72 ஆயிரம் பேர் தேர்ச்சியடைந்தனர்.  இதில் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரிலிருந்து தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) மூலம் சுமார் 11 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஏற்கெனவே தமிழ், விலங்கியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஆங்கிலம், கணிதம்,  வேதியியல், தாவரவியல், வரலாறு, நுண் உயிரியல் ஆகிய பாடங்களில் 1,236 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடைகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் நபர்களின் திருத்தப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடங்களுக்கான தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, August 16, 2014

கூடுதல் மதிப்பெண் பெற மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி

தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், அதிக மதிப்பெண் பெறுபவர்களின் பட்டியலை தயாரித்து, அவர்கள், அரசு விருது பெறும் மாணவர்களாக மாறும் அளவுக்கு சிறப்பு பயிற்சியளிக்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே, தேர்வு முடிவுகளில் தனியார் பள்ளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக, இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பின், பிளஸ் 2 மதிப்பெண்களை குறியாக வைத்தே, தனியார் பள்ளிகளில் பயிற்சியளிக்கப் படுகிறது.

அதுமட்டுமின்றி, தங்கள் பள்ளியில் படிக்கும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை விளம்பரப்படுத்தியும், தேர்ச்சி விகிதத்தை காட்டியுமே, அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தி விடுகின்றன. இப்பள்ளி மாணவர்களுடன் அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டி போட முடியாத நிலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், மாநில மற்றும் மாவட்ட அளவிலான தேர்வு முடிவுகளில், தனியார் பள்ளி மாணவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை சரிவதை தொடர்ந்து, சில ஆண்டுகளாக, பள்ளிக் கல்வித் துறை அரசு பள்ளிகளின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், படிப்பில் சராசரிக்கும் கீழ் உள்ள மாணவர்களை தேர்வு செய்து, பள்ளி பாட நேரம் முடிந்த பின்பும், சனிக்கிழமைகளிலும் சிறப்பு பயிற்சியளிக்கப்படுகிறது.

இதன் பயனாக, அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதே போல், நன்கு படிக்கும் மாணவர்களையும் கண்டறிந்து, சிறப்பு கவனம் செலுத்த நடப்பாண்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த, முதல் இடைத்தேர்வில், ??ம் வகுப்பில், 450 மதிப்பெண்ணுக்கு அதிகமாக பெற்றவர்கள் மற்றும் பிளஸ் 2 வகுப்பில், 950 மதிப்பெண்ணுக்கு மேல், அதிகமாக எடுத்தவர் பட்டியல் தயாரிக்கவும், தொடர்ந்து அவர்களுக்கு தனிக் கவனம் கொடுத்து, சிறப்பு வகுப்பு எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:

கடந்த கல்வியாண்டில், அரசுப்பள்ளி களின் தேர்ச்சிச் சதவீதம் அதிகரித்தது. ??ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவ, மாணவியர் பலர் மாநில, மாவட்ட அளவிலான ரேங்க் பட்டியலில், இடம் பெற்றனர். இதற்கு, மாணவர்களை அவர்களின் கற்றல் திறனுக்கேற்ப பிரித்து, பயிற்சியளித்ததும் முக்கிய காரணம். அதையடுத்து, ரேங்க் ஹோல்டர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடப்பாண்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த, முதல் இடைத்தேர்வில், அதிகபட்ச மதிப்பெண் பெற்ற மாணவர் பட்டியல், பள்ளி வாரியாக கேட்கப்பட்டு உள்ளது. அந்த மாணவர்களை அடையாளம் கண்டு, தேவையான வசதி செய்து கொடுத்து, அதிகபட்ச மதிப்பெண் எடுக்க வைக்க, தற்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் புதிய உத்தரவால், பொதுத்தேர்வில் அரசுப்பள்ளி மாணவரின் தேர்ச்சி சதவீதம், மேலும் அதிகரிக்கவும், அரசு பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று, மருத்துவம், தொழில்நுட்ப கல்லூரியில் சேர வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு பராமரிப்பு : பொது கணக்கு தணிக்கை அலுவலகத்திற்கு மாறுகிறது

தொடக்க கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு பதிவேடுகள், பொது கணக்கு தணிக்கை அலுவலகத்திற்கு மாற்றப்பட உள்ளன. கடந்த, 2003க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு, புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர், அரசு ஊழியர்களின், அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில், 10 சதவீதம், பங்களிப்பு ஓய்வூதியமாக, மாத சம்பளத்தில், பிடித்தம் செய்யப்படுகிறது. பள்ளி கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய கணக்குகள், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, பொது கணக்கு தணிக்கை அலுவலகத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களுக்கு, நிலுவை தொகை விவரம் குறித்த பட்டியல் தரப்படுகிறது.

ஆனால், தொடக்க கல்வித்துறையில் பணி புரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் கணக்கு விவரம், சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, 'டேட்டா சென்டரில்' பராமரிக்கப்படுகிறது. உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்து, கருவூலத்தில் செலுத்துகின்றனர். உள்ளூர் தணிக்கை அலுவலர்கள் தணிக்கை செய்த பின், அதன் விவரம், டேட்டா சென்டருக்கு அனுப்பப்படும். பின், விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு, கணக்கு பட்டியல் தர வேண்டும்.ஆனால், உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில், உள்ளூர் தணிக்கை, முழுமையாக நடக்கவில்லை.

இதனால், இந்த துறை ஆசிரியர்களுக்கு, இதுவரை எவ்வளவு பணம் பிடிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியாமல், அல்லாடி வருகின்றனர். மேலும், இறந்த ஆசிரியர், ஊழியர்களுக்கு கூட, பிடித்தம் செய்த தொகை வழங்கவில்லை என்ற புகாரும் இருக்கிறது. இந்த பிரச்னையை தீர்க்கும் வகையில், டேட்டா சென்டரில் உள்ள கணக்குகள் அனைத்தையும், பொது கணக்கு தணிக்கை அலுவலகத்திற்கு மாற்ற, தமிழக அரசுக்கு, தொடக்க கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. அரசாணை வெளியானதும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர், ஊழியர்களின் கணக்குகள், மாறுதல் செய்யப்படும் என, தெரிகிறது. இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுசெயலர்,

பேட்ரிக் கூறியதாவது:கடந்த, 2003க்குப் பின், கல்வித்துறையில், ஒரு லட்சம் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களின் பணம், கோடிக்கணக்கில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம், ஆசிரியர்களுக்கே தெரியாது. பல ஆசிரியர்கள் இறந்துவிட்டனர். அவர்களுக்குரிய பணம், இதுவரை சென்று சேரவில்லை. உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில், முறையாக கணக்கு பராமரிக்கப்படுவதில்லை. உள்ளூர் தணிக்கையும் நடப்பதில்லை. பொது கணக்கு தணிக்கை அலுவலகத்திற்கு, கணக்குகளை மாற்றினால், பிரச்னை தீரும் என நம்புகிறோம். இவ்வாறு, பேட்ரிக் தெரிவித்தார்.

ஆசிரியர்பட்டியல் ஒப்படைப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம்

தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பட்டியலை, பள்ளி கல்வித் துறையிடம் ஒப்படைப்பதில், டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), காலதாமதம் செய்து வருகிறது. இதனால், ஆசிரியர் நியமனம் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த, 10ம் தேதி, 10,500 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 1,400 முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதன்பின், தேர்வு பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள் அடங்கிய ஆவணங்களை, பள்ளி கல்வித் துறையிடம், டி.ஆர்.பி., ஒப்படைக்க வேண்டும்.

இதன்பின் தான், பணி நியமன பணியை, பள்ளி கல்வித்துறை மேற்கொள்ள முடியும். ஆனால், தேர்வு பட்டியல் வெளியிட்டு ஒரு வாரம் முடிந்தும், தேர்வு பெற்றவர்களின் ஆவணங்களை, பள்ளி கல்வித்துறையிடம், டி.ஆர்.பி., ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதுவரை, டி.ஆர்.பி.,யிடம் இருந்து ஆவணங்கள் வரவில்லை; வந்தால் தான், பணி நியமனம் குறித்து நாங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும். விரைவாக, ஆவணங்களை வழங்கினால், இந்த மாதத்திற்குள்ளாகவே, அனைவரையும் பணி நியமனம் செய்து விடுவோம். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தா

Friday, August 15, 2014

மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு: விண்ணப்பங்கள் வரவேவற்பு

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து அரசு தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனரின் செயலர் ஆசிர்வாதம் செய்திக்குறிப்பு: ஊரகப் பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2013-14 கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு தேர்தவில் 50 சதவீதம் மொத்த மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்து தற்போது வரும் கல்வியாண்டில் படித்துக் கொண்டிருப்பவராக இருத்தல் வேண்டும்.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமானச் சான்று பெற்று அளித்தல் வேண்டும்.

தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள் தேர்வுக்கான கட்டணம் 5 ரூபாய் சேவைக் கட்டணம் 5 மொத்தமாக 10 விதம் ஆன் லைன் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பணமாக பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் உரிய முதன்மைக்கல்வி அலுவலரிடம் செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 22ம் தேதி ஆகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 @பருக்கு 50 ஆண்கள், 50 பெண்கள் 9ம் வகுப்பு 12ம் வகுப்பு வரை படிக்கும் காலத்திற்கு படிப்பு உதவித்தொகை ஆண்டுதோறும் 1000 ரூபாய் வீதம் வழங்கப்படும்.நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவர்களும் ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பயில்வோரும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.