TRB Results click below
Sunday, August 10, 2014
Saturday, August 09, 2014
1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம்
தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் 150 அரசு பள்ளிகளுக்கு தேவையான 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம் உள்ளதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நடப்பு கல்வியாண்டில் (2014-15) ஒவ்வொரு மாவட்டத்திலும் தரம் உயர்த்துவதற்கு தகுதியான அரசு உயர்,மேல்நிலை பள்ளிகளின் பட்டியல்களை மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள் தயாரித்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பியது.
இந்த பட்டியலின் அடிப்படையில் 100 அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாகவும், 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலையாகவும் தரம் உயர்த்தப்படும் என, சட்ட சபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு 3 அல்லது 5 பள்ளி மேல்நிலையாகவும் 2 உயர்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர வாய்ப்பு உள்ளது. மேல்நிலைக்கு தலைமை ஆசிரியர் உட்பட 10 புதிய காலியிடமும், உயர்நிலையில் தலைமை ஆசிரியர் உட்பட 6 புதிய ஆசிரியர்களும் என, 1,300 பேர் நியமிக்கப்படுவர். கவுன்சிலிங் மூலமே தரம் உயரும் பள்ளிகளின் காலியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க திட்ட மிட்டுள்ளது
. அதே நேரத்தில் டி.ஆர்.பி., மூலம் தேர்வான ஆசிரியர்களை நியமிக்கும் திட்டமும் உள்ளது. இத்திட்டம் இல்லாத பட்சத்தில் மாறுதல் கவுன்சிலிங் ஆக., இறுதி வாரம் அல்லது அடுத்தமாதம் நடத்தப்படலாம் என கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
வாக்காளர்களுக்கு ஒப்புகைச் சீட்டு
வாக்காளர்கள் வாக்களித்தவுடன் அவர்கள் எந்தச் சின்னத்தில் வாக்களித்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில் வாக்குப் பதிவு செய்தவுடனேயே ஒப்புகைச் சீட்டு வரும் முறையை விரைவில் அனைத்துத் தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்த இருக்கிறோம். ஒப்புகைச் சீட்டு வழங்கும் திட்டத்தை சோதனைக்காக சில தொகுதிகளில் அறிமுகப்படுத்திப் பார்த்தோம். புகார் எதுவும் வரவில்லை. அதேபோல, வாக்குப்பதிவு இயந்திரத்திலும் கோளாறுகள் எதுவும் இல்லை என்றும் சம்பத் தெரிவித்தா
அனுமதியின்றி படிக்கும் படிப்பிற்கு தடை
தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாமல் படித்த உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க தொடக்க கல்வி இயக்குநர் தடை விதித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதியைக் காட்டிலும் கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந் தால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் (இன்சென்டிவ்) வழங்கப்படுகிறது.
ஓர் ஆசிரியர் தனது பணிக்காலத் தில் 2 ஊக்க ஊதியங்கள் பெற தகுதியுடைவர் ஆவார். ஓர் ஊக்க ஊதியம் என்பது இரண்டு வருடாந்திர ஊதிய உயர்வை (இன்கிரிமென்ட்) குறிக்கும். அடிப்படைச் சம்பளம் மற்றும் தர ஊதியத்தில் 3 சதவீதமும், அதற்குரிய அகவிலைப்படியையும் உள்ளடக்கியது ஓர் இன்கிரிமென்ட்.
உதாரணத்துக்கு, பட்டதாரி ஆசிரியர் ஒருவர், தனது பதவிக்கான கல்வித் தகுதியான இளங்கலை பட்டம் மற்றும் பி.எட் படிப்புடன் கூடுதலாக முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் ஓர் ஊக்க ஊதியமும், எம்.எட். முடித்திருந்தால் இன்னொரு ஊக்க ஊதியமும் ஆக 2 ஊக்க ஊதியங்கள் பெறுவார். இன்றைய நிலவரப்படி, அரசு பணியில் சேரும் ஒரு பட்டதாரி ஆசிரியர் 2 ஊக்க ஊதியங்கள் பெற தகுதியாக இருந்தால் அவருக்கு கூடுதல் சம்பளமாக ரூ.1,668 கிடைக்கும்.
பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டுமானால் தங்கள் மேல் அதிகாரியின் முன் அனுமதி பெற வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியிடமும், பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரி யர்கள் தலைமை ஆசிரியர்களிடமும் முன்அனுமதி வாங்க வேண்டும்.
முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பெற்றுவந்த ஆசிரியர்களுக் கும் உரிய விளக்கம் பெற்று அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங் கப்பட்டு வந்தது. தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் முன்அனுமதியின்றி படித்த உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்அனுமதி இல்லாமல் படித்த படிப்புக்கு ஊக்க ஊதியம் வழங்கக்கூடாது என்று மாநில தொடக்கக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். விதிகளை மீறி ஊக்க ஊதியம் வழங்கினால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிரடி உத்தரவினால், ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “முன்அனுமதி பெறாமல் ஏற்கெனவே படிப்பில் சேர்ந்துவிட்ட ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவில் இருந்து விதி விலக்கு அளிக்க வேண்டும். புதிய உத்தரவை இனிவரும் நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர்.
Friday, August 08, 2014
பி.எட். படிப்புக்காக காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை
பி.எட். படிப்புக்காக காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், அது ஆய்வில் இருப்பதாகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை குழு துணைத் தலைவர் பாலபாரதி துணைக் கேள்வி எழுப்பினார். அப்போது, பேசிய அவர், தனியார் பி.எட்., கல்லூரிகளில் நியாயமற்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றை முறைப்படுத்த வேண்டும். மேலும், பி.எட். படிப்புக்கான காலத்தை இரண்டு ஆண்டுகளாக நீட்டிப்படுவதாகக் கூறப்படுகிறது. அது குறித்தும் விளக்க வேண்டும் என்றார்.
இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:
பி.எட். படிப்புக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. இப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி, அரசு பி.எட். கல்லூரிகளில் ரூ.2,250-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும், தனியார் கல்லூரிகளில் ரூ.41,500-ம், தரச்சான்று பெற்ற தனியார் கல்லூரிகளில் ரூ.46 ஆயிரமும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பி.எட். படிப்பின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிப்பது தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார் அமைச்சர் பழனியப்பன்.
Thursday, August 07, 2014
பாஸ்போர்ட் விண்ணப்ப ஆவணங்கள்: அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியின் கையொப்பம் இனி தேவையில்லை
பாஸ்போர்ட் விண்ணப்பத்தின்போது சமர்ப்பிக்கப்படும் திருமண பதிவுச் சான்று உள்ளிட்ட ஆவணங்களில் விண்ணப்பதாரர்கள் இனி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியின் (எஹக்ஷ்ங்ற்ற்ங்க் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்ள்) கையொப்பம் பெற வேண்டியதில்லை என பாஸ்போர்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஸ்போர்ட் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தங்களின் பல்வேறு தேவைகளுக்காக அரசு துறைகளிடம் பொதுமக்கள் விண்ணப்பிக்கும்போது, அந்த விண்ணப்பங்களில் அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகளின் கையொப்பம் பெறும் நடைமுறையை நீக்க வேண்டும் என அனைத்து அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளத
ு. மத்திய அரசின் தற்போதைய இந்த அறிவிப்பை பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகம் கடந்த 2000 -ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. அதாவது, பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படும் பிறப்புச் சான்றிதழ், முகவரிச் சான்று, கல்வித் தகுதி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றில் விண்ணப்பதாரர்களின் சுய கையொப்பம் மட்டும் இருந்தால் போதுமானது. அவற்றில் அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகளின் கையொப்பம் கோரப்படுவதில்லை. இந்த ஆவணங்களின் வரிசையில் தற்போது 18 வயது நிரம்பாத பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் அவரது பெற்றோரின் பாஸ்போர்ட் நகல்கள், திருமண பதிவுச் சான்று, ஓய்வுபெற்ற அரசு அலுவலரின் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் கோரப்படும் அவரின் ஓய்வூதிய ஆணையின் நகல் ஆகியவற்றிலும் இனி விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயகையொப்பம் மட்டும் இட்டால் போதுமானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும்
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி கூறினார். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) வெளியிடப்பட்டுள்ளது
. இதில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையிலும் தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தினமணி நிருபரிடம் கூறியது
: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான பல்வேறு வழக்குகள் காரணமாக தேர்வுப் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது பெரும்பாலான வழக்குகள் நிறைவடைந்த நிலையில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் சில பாடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்கள், வழக்குகள் காரணமாக நிலுவையில் இருந்தன. நீதிமன்ற உத்தரவுப்படி, சில விடைகள் மீண்டும் மதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் நபர்களுக்கான திருத்தப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு வாரத்துக்குள்... பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல், எஞ்சியுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் ஆகியவை தொடர்பாக பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே, இந்த இரண்டு தேர்வுப் பட்டியல்களும் ஒரு வாரம் அல்லது 10 நாள்களுக்குள் வெளியிடப்படும். அடுத்ததாக, இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். ஒரு மாதத்துக்குள் இப்போது நிலுவையில் உள்ள பெரிய அளவிலான ஆசிரியர் பணி நியமனங்கள் முடிக்கப்படும் என்றார் அவர்.
ஆசிரியர் பயிற்றுனர்கள் வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு
ஆசிரியர் பயிற்றுனர்கள் வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் போட்ட வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம் கேட்டதால், வழக்கு அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
Ignou M.ed entrance hall ticket
Hall Ticket MED Entrance
click below
https://studentservices.ignou.ac.in/Hall_BEDMED/2014/MEDEntrance14.asp
ஆசிரியர் பட்டயப் படிப்பு: இன்று முதல் விண்ணப்பம் -
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை வியாழக்கிழமை (ஆக.7) முதல் பெற்றுக் கொள்ளலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஆகஸ்ட் 7 முதல் 14 வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே இடங்களில் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16-ஆம் தேதி இணையதளம் வாயிலாக நடத்தப்படும்.
விண்ணப்பதாரர் எந்த மாவட்டத்தில் விண்ணப்பித்தாரோ அந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கலந்தாய்வில் பங்கேற்கலாம். ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 600 இடங்களும், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,500 இடங்களும், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டில் 9 ஆயிரம் இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.
Wednesday, August 06, 2014
3 முதுகலை பாடங்களுக்கு புதிய பட்டியல் வெளியீடு
ென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், முதுகலை ஆசிரியர் தேர்வில், இயற்பியல், பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கு, மாற்றி அமைக்கப்பட்ட புதிய சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டு உள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் நியமிக்கும் பணி, ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. தமிழ் பாடத்திற்கு மட்டும் பணி நியமனம் நடந்துள்ளது. உடற்கல்வி இயக்குனர், மைக்ரோ - பயாலஜி, புவியியல், விலங்கியல், பயோ - கெமிஸ்ட்ரி ஆகிய, ஐந்து பாடங்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இயற்பியல், பொருளியல் மற்றும் வணிகவியல் தேர்வு விடைகளில், சில மாற்றங்களை, டி.ஆர்.பி., செய்தது. அதனடிப்படையில், புதிய சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. இந்த மூன்று பாடங்களில், ஏற்கனவே, 259 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக, 49 பேர், பட்டியலில் இடம்பெற்று உள்ளனர். இவர்களுக்கு, வரும் 14ம் தேதி, விழுப்புரம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
இடைநிலை ஆசிரியர் தேர்வு: 31,000 பேர் மதிப்பெண் வெளியீடு
இடைநிலை ஆசிரியர் முதல்தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31 ஆயிரம் பேரின், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று மாலை, இணையதளத்தில் வெளியிட்டது. தயார் நிலையில்...: டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், ஏற்கனவே வெளியிடப்பட்டு, அது தொடர்பாக, தேர்வர்கள் தரப்பில் இருந்து, குறைகளை பெற்று, நிவர்த்தி செய்யும் பணிகளும் முடிந்து விட்டன. தற்போது, இறுதி தேர்வு பட்டியல் வெளியிட தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்) தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31,079 பேரின், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் (இறுதி மதிப்பெண்) விவரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நேற்று மாலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டது. தேர்வர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில், 100 மதிப்பெண்ணுக்கு, தங்களுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதில், குறை ஏதேனும் இருந்தால், வரும், 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கும், குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்று, உரிய ஆதாரங்களை காட்டி, நிவாரணம் பெறலாம். சான்றிதழ் சரிபார்ப்பு :
இதுவரை நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்களுக்கும், இறுதியாக, ஒரு வாய்ப்பை, டி.ஆர்.பி., வழங்கி உள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாமும், வரும், 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கிறது. குறை தீர்ப்பு முகாம் நடக்கும் மையங்களின் முகவரி விவரம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம்கள் நடக்கும் மையங்களின் விவரம் ஆகியவையும், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் நடந்தபின், தேர்வு பட்டியல் வெளியிடப்படும். தேர்வு பட்டியல் ஒன்றாக வெளியாகுமா? : பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வுப் பட்டியல் தயாராகி, 5 நாள் முடிந்த நிலையிலும், பட்டியல் வெளியாகவில்லை. இந்நிலையில், இடைநிலை ஆசிரியர் பணிக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், நேற்று வெளியிடப்பட்டு உள்ளது.
இதற்கான முகாம்களும் அறிவிக்கப் பட்டுள்ளன. எனவே, இடைநிலை ஆசிரியர் தேர்வின், இறுதிக்கட்ட பணிகளும் முடிந்தபின், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல், ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு உள்ளதாக, துறை வட்டாரம் தெரிவிக்கிறது. எப்படியும், இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம
் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 எழுத்துத் தேர்வு பயிற்சிக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என மனித நேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம் தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வில் பங்குபெற வுள்ளவர்களுக்கான எழுத்துத் தேர்வு பயிற்சி ஆக. 8 முதல் 21-ம் தேதி வரை நடத்தப்படும். அதற்கு www.saidais.com என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.ஏற்கெனவே குரூப்-1 முதன்மை தேர்வு எழுதி வாய்ப்பிழந்தவர்களுக்கும், நேர்முகத் தேர்வு வரை சென்று வாய்ப்பிழந்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.