இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, August 06, 2014

3 முதுகலை பாடங்களுக்கு புதிய பட்டியல் வெளியீடு

ென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், முதுகலை ஆசிரியர் தேர்வில், இயற்பியல், பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கு, மாற்றி அமைக்கப்பட்ட புதிய சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டு உள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் நியமிக்கும் பணி, ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. தமிழ் பாடத்திற்கு மட்டும் பணி நியமனம் நடந்துள்ளது. உடற்கல்வி இயக்குனர், மைக்ரோ - பயாலஜி, புவியியல், விலங்கியல், பயோ - கெமிஸ்ட்ரி ஆகிய, ஐந்து பாடங்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இயற்பியல், பொருளியல் மற்றும் வணிகவியல் தேர்வு விடைகளில், சில மாற்றங்களை, டி.ஆர்.பி., செய்தது. அதனடிப்படையில், புதிய சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. இந்த மூன்று பாடங்களில், ஏற்கனவே, 259 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக, 49 பேர், பட்டியலில் இடம்பெற்று உள்ளனர். இவர்களுக்கு, வரும் 14ம் தேதி, விழுப்புரம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

இடைநிலை ஆசிரியர் தேர்வு: 31,000 பேர் மதிப்பெண் வெளியீடு


இடைநிலை ஆசிரியர் முதல்தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31 ஆயிரம் பேரின், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று மாலை, இணையதளத்தில் வெளியிட்டது. தயார் நிலையில்...: டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், ஏற்கனவே வெளியிடப்பட்டு, அது தொடர்பாக, தேர்வர்கள் தரப்பில் இருந்து, குறைகளை பெற்று, நிவர்த்தி செய்யும் பணிகளும் முடிந்து விட்டன. தற்போது, இறுதி தேர்வு பட்டியல் வெளியிட தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், முதல்தாள் (இடைநிலை ஆசிரியர்) தேர்வில் தேர்ச்சி பெற்ற, 31,079 பேரின், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் (இறுதி மதிப்பெண்) விவரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நேற்று மாலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டது. தேர்வர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில், 100 மதிப்பெண்ணுக்கு, தங்களுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதில், குறை ஏதேனும் இருந்தால், வரும், 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கும், குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்று, உரிய ஆதாரங்களை காட்டி, நிவாரணம் பெறலாம். சான்றிதழ் சரிபார்ப்பு :

இதுவரை நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்களுக்கும், இறுதியாக, ஒரு வாய்ப்பை, டி.ஆர்.பி., வழங்கி உள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாமும், வரும், 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கிறது. குறை தீர்ப்பு முகாம் நடக்கும் மையங்களின் முகவரி விவரம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம்கள் நடக்கும் மையங்களின் விவரம் ஆகியவையும், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் நடந்தபின், தேர்வு பட்டியல் வெளியிடப்படும். தேர்வு பட்டியல் ஒன்றாக வெளியாகுமா? : பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வுப் பட்டியல் தயாராகி, 5 நாள் முடிந்த நிலையிலும், பட்டியல் வெளியாகவில்லை. இந்நிலையில், இடைநிலை ஆசிரியர் பணிக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், நேற்று வெளியிடப்பட்டு உள்ளது.

இதற்கான முகாம்களும் அறிவிக்கப் பட்டுள்ளன. எனவே, இடைநிலை ஆசிரியர் தேர்வின், இறுதிக்கட்ட பணிகளும் முடிந்தபின், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல், ஒரே நேரத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு உள்ளதாக, துறை வட்டாரம் தெரிவிக்கிறது. எப்படியும், இம்மாத இறுதிக்குள், இரு தேர்வு பட்டியலும் வெளியாகிவிடும்.

Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Examination Results and Provisional CV List (Physics, Economics & Commerce)

முன் அனுமதி பெற்ற பின்னர் படிக்கும் படிப்புகளுக்கு மட்டுமே ஊக்க ஊதியம் அனுமதிக்கப்பட வேண்டும் - இயக்குனர் உத்திரவு

சுதந்திர தினத்தை அனைத்து வகையான பள்ளிகளிளும் சிறப்பபாக கொண்டாட இயக்குனர் உத்தரவு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம

் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 எழுத்துத் தேர்வு பயிற்சிக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என மனித நேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம் தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வில் பங்குபெற வுள்ளவர்களுக்கான எழுத்துத் தேர்வு பயிற்சி ஆக. 8 முதல் 21-ம் தேதி வரை நடத்தப்படும். அதற்கு www.saidais.com என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.ஏற்கெனவே குரூப்-1 முதன்மை தேர்வு எழுதி வாய்ப்பிழந்தவர்களுக்கும், நேர்முகத் தேர்வு வரை சென்று வாய்ப்பிழந்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TET paper 1 new weightage list

Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Notification

Tuesday, August 05, 2014

தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள் :


1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு
மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.
2. மதச்சார்பு விடுப்பு (Religious / RestrictedHolidays) வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.
3. தற்செயல் விடுப்பு ( Casual Leave) ஒரு காலண்டர் ஆண்டில் 12 நாட்கள் எடுக்கலாம். எல்லாவகை பணியாளர்களுக்கும் உண்டு. விடுப்பு எடுத்த பின்னரும் விண்ணப்பம் கொடுக்கலாம். முன்கூட்டி விண்ணப்பித்தால் குறிப்பாக காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை.
4. ஈட்டிய விடுப்பு (Earned Leave) ஒரு பணியாளர் பணி செய்த ஒவ்வொரு 12 நாடகளுக்கு ஒரு நாள் என்ற கணக்கில் அவருக்கு விடுப்பு கிடைக்கும். பணி செய்ததால் கிடைப்பதால் ஈட்டிய விடுப்பு எனப்படுகிறது. 6 மாதத்திற்கு ஒரு முறை 15 என்ற எண்ணிக்கையில் ஒருவரது கணக்கில் வரவு வைக்கப்படும். தகுதி காண் பருவத்தினருக்கு இதில்பாதி நாட்கள் மட்டுமே கிடைக்கும். ஈட்டிய விடுப்பை பணியாளர்கள் துய்க்கலாம், அல்லது சரண்டர் செய்து பணமாகப் பெறலாம்., அல்லது 240 நாட்கள் வரை சேமித்து வைத்து பணி ஓய்வின் போது பணமாகப் பெறலாம்.
5. மருத்துவ விடுப்பு (Medical Leave) மருத்துவ சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு என்றும் அழைப்பர். 60 நாட்கள் வரை விடுப்பு எடுக்க மருத்துவ சான்று இணைக்கவேண்டும். அதற்கு மேல் விடுப்புஎடுத்தால் அலுவலகத் தலைவர் மருத்துவ குழுவின் ஆய்வுக்கு அனுப்புவார். பணி புரிந்த ஆண்டுகளுக்கு ஏற்பவிடுப்பு எடுக்க தகுதியான நாட்கள் மாறுபடும். இரண்டாண்டு பணி முடித்தவர்90 நாட்கள் எடுக்கலாம். 20 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தால் 540நாட்கள் வரை எடுக்க தகுதி உண்டு.
6. சொந்த காரணங்கள் பேரிலான ஈட்டா விடுப்பு (Unearned Leave on Private Affairs) சொந்த காரங்களுக்காக எடுப்பது. சான்று தேவையில்லை. பணிக்காலம் 10 ஆண்டுக்குள் இருந்தால் 90 நாட்கள். பணிக்காலம் 10 ஆண்டுக்கு மேல் இருந்தால் 180 நாட்கள் தகுதியானவை ஆகும். தகுதி காண் பருவத்தினருக்கு கிடையாது.
7. மகப்பேறு விடுப்பு (Meternity Leave) திருமணமான பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் 6 மாதம் விடுப்பு கிடைக்கும். உயிருடன் உள்ள இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும். தகுதி காண் பருவத்தினருக்கும் உண்டு.
8. சிறப்பு தற்செயல் விடுப்பு (Special Casual Leave) குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதல், மாநில/ தேசிய / சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளுதல் காரணங்களுக்காக வழங்கப்படும்.
9. மாற்றுப்பணி ஈடுசெய் விடுப்பு (Turn Duty, Compensate Leave) அலுவலகங்களில் விடுமுறை நாட்களில் சுழற்சி முறையில் பணிசெய்வர். இதற்கு ஈடாக வேறு ஒரு நாளில் விடுப்பு எடுக்கலாம். 6 மாதத்துக்குள் எடுக்க வேண்டும்.

10. இடமாறுதல் - பணி ஏற்பு இடைக்காலம் (Transfer - Joining Time) இடமாறுதலில் செல்லும் ஒருவருக்கு புதிய பணி இடம் 8 கி.மீ. தூரத்திற்கும் அதிகம் இருந்தால் 6 நாட்கள் தயாரிப்பு நாட்கள் + ஒவ்வொரு 160 கி.மீ. தூரம் வரை ஒரு நாள் பயண நாள் சம்பளத்துடன் துய்க்கலாம். இந்த தகுதியான நாட்களுக்குள் பணியில் சேர்ந்துவிட்டால் துய்க்காத நாட்களை அவரது ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்

Inspire Award apply details& guidelines

இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,726 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக 508 காலி இடங்கள் சேர்க்கப்படுகிறது. காலி இடங்கள் அதிகரித்து உள்ள நிலையில் கல்வி அதிகாரிகள் ஒப்புதலுடன் இந்த பட்டியலில் மேலும் 508 பேரை தேர்வு செய்கிறோம். இந்த பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும்.

Monday, August 04, 2014

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம்: அனுமதிக்காகக் காத்திருக்கிறது

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் அரசு அனுமதிக்காகக் காத்திருக்கிறது. புதிய பாடத்திட்டத்துக்கு உரிய காலத்தில் அனுமதி வழங்கவில்லையெனில் அடுத்த கல்வியாண்டில் (2015-16) பிளஸ் 1 வகுப்பில் புதிய புத்தகங்களை வழங்க முடியாது என்பதால் வல்லுநர் குழு வட்டாரங்கள் அனுமதி உடனே வழங்கப்பட வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது.  பிளஸ் 1 வகுப்பில் 2015-16-ஆம் ஆண்டிலிருந்தும், பிளஸ் 2 வகுப்பில் 2016-17-ஆம் கல்வியாண்டிலிருந்தும் புதிய பாடத்திட்டம் அமல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  

இதற்காக, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குரிய 25 பாடங்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நாகபூஷணராவ் தலைமையில் துணைக்குழு அமைக்கப்பட்டது.  இந்தத் துணைக்குழு மேல்நிலைக் கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக 25 பாடங்களுக்குரிய குழுக்களைத் தேர்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியது. இந்தப் பாடத்திட்டத்துக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் பொறுப்பை அப்போது கூடுதலாக வகித்த அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையிலான வல்லுநர் குழு கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது.  இதையடுத்து, அந்தக் குழுவின் ஆலோசனைகளின் படி, புதிய பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

ஆனாலும், புதிய பாடத்திட்டத்துக்கு இதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை என வல்லுநர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.  அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் புத்தகம் எழுதும் பணிகள் தொடங்கப்பட வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் புத்தகம் எழுத தனித்தனியே குழுக்கள் உள்ளன. இந்தக் குழுக்களில் துறை நிபுணர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மேல்நிலைக் கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.  இந்தக் குழுக்கள் பிற மாநிலங்களில் உள்ள மேல்நிலைக் கல்வி பாடப்புத்தகங்கள்,  என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்கள் ஆகியவற்றை ஒப்பீடு செய்து புதிய புத்தகங்களை எழுதுவார்கள். மேலும் ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களை ஒப்பீடு செய்தும் பாடப்புத்தகங்கள் எழுதப்படும். எழுதப்பட்ட புத்தகங்களில் பிழைகளை நீக்கும் பணிகளும் நடைபெறும்.  இந்த நடைமுறைகள் முடிந்து சி.டி. வடிவில் புத்தகங்கள் தயாராக குறைந்தபட்சம் 6 முதல் 8  மாதங்கள் வரை ஆகும்.

அதன்பிறகு, புத்தகங்களை அச்சிட்டு மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்ல 2 முதல் 3 மாதங்கள் வரை அவகாசம் தேவைப்படும்.  எனவே, புதிய பாடத்திட்டத்துக்கு விரைவாக ஒப்புதல் கிடைத்தால்தான் அடுத்த கல்வியாண்டில் புதிய புத்தகங்கள் வழங்குவது சாத்தியமாகும்.   இல்லையென்றால், அடுத்த கல்வியாண்டிலும் பிளஸ் 1 வகுப்புக்கு பாடத்திட்டம் மாறுவது சந்தேகமே என வல்லுநர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.  பிளஸ் 2 வகுப்புக்குப் பிறகு பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள் திணறுகின்றனர்.   இதை மனதில் வைத்து, பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களில் பெரிய அளவுக்கு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும் வினா வங்கி புத்தகத்தை இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் (ஆண்டிபட்டி) வினா எழுப்பினார். அப்போது, அனைத்து மாவட்டங்களிலும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான வினா வங்கி புத்தகத்தை கூடுதல் மையங்களில் இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அளித்த பதில்:

வினா வங்கி புத்தக தொகுப்புகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மையத்தின் மூலமாக மிகக் குறைந்த விலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன. ஆனாலும், அவற்றை விலையில்லாமல் கூடுதல் மையங்களின் மூலம் விநியோகம் செய்வது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். அதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்யப்படும். வினா வங்கி புத்தகம் உள்பட தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் 90.7 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் 90.6 சதவீதமுமாக தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது என்று அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.

மதுரையில் சி.இ.ஓ.,க்கள் ஆலோசனை : தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க அட்வைஸ

மதுரையில் எட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இணை இயக்குனர் (மேல்நிலை பள்ளி) பாலமுருகன் தலைமை வகித்தார். மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலை வகித்தார். சி.இ.ஓ.,க்கள் வாசு (தேனி), ஜெயகண்ணு (ராமநாதபுரம்), செந்திவேல்முருகன் (சிவகங்கை), ஜெயக்குமார் (விருதுநகர்), கஸ்தூரிபாய் (நெல்லை), முனுசாமி (தூத்துக்குடி), ராதா கிருஷ்ணன் (கன்னியாகுமரி) பங்கேற்றனர்.

வரும் கல்வியாண்டு முதல் தமிழ் பாடம் கட்டாயம் என்பதால் சிறுபான்மையினர் பிரிவு உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் பாடம் கற்பிக்கப்படுகிறதா, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என சி.இ.ஓ.,க்கள் கண்காணிக்க வேண்டும். அரசு நடுநிலை பள்ளிகளில் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு மற்றும் எழுதும் திறன், அடிப்படை கணித அறிவை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்கள் சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும். அரசு திட்டங்கள் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும், என இணை இயக்குனர் அறிவுறுத்தினார

். மீண்டு(ம்)வர 'அட்வைஸ்': பிளஸ் 2 தேர்ச்சியில் 28 ஆண்டுகளாக மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முன்னணியில் இருந்தது. இந்தாண்டு மூன்றாம் இடத்திற்கு சென்றது விவாதத்தை ஏற்படுத்தியது. வரும் கல்வியாண்டில், மீண்டும் முதல் இடத்தை பெற கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் அறிவுறுத்தப்பட்டது.

TET 2 additional post

TET PAPER 2 aditional notification
Eng-43,
mat-82
phy102-
che-102
bot-48
zoo-47
his-67
geo-17

Total=508

TET paper 2 additional notification caste&subject wise

Sunday, August 03, 2014

Part Time-M. Phil. Admissions (2014-2015) Bharathidasan university:

பி.எட்., கவுன்சிலிங் ஆகஸ்ட் 6ம் தேதி துவக்கம்

தமிழக ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., படிப்பிற்கு சேருவதற்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 6ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் உள்ள 21 கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான கவுன்சிலிங் சென்னை, மதுரை, கோவை, சேலம் ஆகிய 4 இடங்களில் நடத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Saturday, August 02, 2014

அரசு பள்ளிகளில் 'சி.பி.ஏ.,' முறையில் கணிதம்

மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் மூலம், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புக்கான கற்பித்தல் திறனை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இதில் இடைநிலைக்கல்வியில், பெரும்பாலான மாணவர்கள் தவிப்பாய் தவிக்கும் பாடம் கணிதம். இந்த கணிதப்பாடத்தை மாணவர்களுக்கு எளிமையாக நடத்துவது குறித்து, பல்வேறு நாடுகளில், இன்றும் ஆய்வு நடந்த வண்ணமே உள்ளது

. உலக நாடுகளில், கணிதத்தில் முதன்மை இடத்தை பிடிக்கும் சிங்கப்பூரில், சி.பி.ஏ., எனும் கான்கிரீட், பிக்சோரியல், அப்ஸ்ட்ராக் என்ற மூன்று முறைகளிலும், கணிதம் கற்பிக்கப்படுகிறது. நம் அரசு பள்ளிகளில், 'அப்ஸ்ட்ராக்' எனும் சுருக்கமாக தெரிவிக்கும் முறை மட்டுமே, அமலில் உள்ளது.தற்போது இப்புதிய முறையின் மூலம், மாணவர்களுக்கு கணிதம் எளிதாக புரியும் வகையில், கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான, மூன்று நாள் பயிற்சி முகாம், சேலம் விநாயகா மிஷன்ஸ் பொறியியல் கல்லுாரியில் தொடங்கியது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து கணித ஆசிரியர்கள் பங்கேற்றனர். இப்பயிற்சி குறித்து கணித ஆசிரியர்கள் கூறியதாவது:தற்போது பார்முலா வைத்து கணக்குக்கு தீர்வு காண்பது மட்டுமே, கற்றுக்கொடுக்கப்படுகிறத

ு. அந்த பார்முலாவை வைத்து, அன்றாட வாழ்க்கையில், எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கற்றுக்கொடுக்கும் போது, கண்ணில் பார்க்கும் காட்சியில் எல்லாம் கணிதத்தை ஒப்பிட்டு பார்க்கும் திறனை வளர்க்க முடியும்.அதே போல், 'மேத்ஸ் கிட்' எனும் கணித உபகரணங்களை கொண்டும், எவ்வாறு எளிதாக கணிதம் கற்பிக்கலாம் என்பதையும் இப்பயிற்சியில் கற்றுக்கொடுக்கின்றனர். மேலும் மாவட்டத்துக்கு, 10 பள்ளிகளில் கணித ஆய்வகம் அமைக்க உபகரணங்கள் வழங்கப்பட்டுஉள்ளது. அதை கொண்டு, கணிதத்தை எளிதாக கற்றுக் கொடுக்கும் முறையும், இதில் கற்றுத்தரப்பட உள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்படும், 'கான்கிரீட், பிக்சோரியல், அப்ஸ்ட்ராக்' ஆகிய முறைகளில் கணிதம் கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.இதனால், கணிதம் என்றாலே, கசப்பு மருந்தாய் நினைக்கும், மாணவர்களின் நிலை நிச்சயம் மாற்றம் பெறும். என்.சி.இ.ஆர்.டி., வகுத்துள்ள விதிமுறைகளின் படி, கணிதப்பாடத்தை எளிதாக கற்பிக்கும் வகையில், இப்பயிற்சி அமைந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பட்டியலை வெளியிடாமல் டி.ஆர்.பி குழப்பம்

ஆயிரம் பேரை தேர்வு செய்யும் பணியை, ஒரு வாரத்திற்கு முன்பே, டி.ஆர்.பி., முடித்து விட்டது.இதுகுறித்து, இரு வாரங்களுக்கு முன், நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர், 'ஜூலை, 30ம் தேதி, புதிய ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்' என்றார். பின், ஏற்கனவே அறிவித்த தேதி அல்லது ஓரிரு நாள், தள்ளிப் போகலாம் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

தவம்:டி.ஆர்.பி.,யின், இந்த தொடர் அறிவிப்புகளால், தேர்வெழுதியவர்கள் மத்தியில், பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. 'நாம் தேர்வு பெறுவோமா?' என, ஒவ்வொருவரும், பட்டியல் வெளியாகும், www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தை பார்த்தபடி காத்திருக்கின்றனர். இந்நிலையில், 'ஆக., 1ம் தேதி, பட்டியல் வெளியாகும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் உறுதியாக தெரிவித்தது. இதனால், நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை, கம்ப்யூட்டர் முன், தேர்வர்கள் தவம் இருந்தனர்.ஆனால், கடைசிவரை பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை. டி.ஆர்.பி.,யின், இந்த சொதப்பல் காரணமாக, தேர்வர்கள் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். எதிர்பார்ப்பு:பட்டியல் வெளியாகாதது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:

பட்டியலை, தயாரித்து முடித்துவிட்டோம். கடைசி நேரத்தில், 'மேனுவலாக' தேர்வு பட்டியலை சரிபார்க்க முடிவு செய்தோம். அதன்படி, ஒவ்வொரு பாட தேர்வு பட்டியலையும், ஒவ்வொரு அதிகாரிகள் சரிபார்த்தனர். பட்டியல் வெளியாகும் தேதி தள்ளிப்போனதற்கு, இது தான் காரணம்.மேலும், முடிவை வெளியிடுவதற்கு, தமிழக அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. 4ம் தேதிக்குள் (நாளை), அரசின் அனுமதி கிடைத்துவிடும் என, எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்ததும், உடனடியாக தேர்வு பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

பகுதி நேர ஆசிரியர்களுக்குரூ.2,000 சம்பள உயர்வு

:தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2000 ரூபாய் சம்பள உயர்வு வழங்க அரசு முடிவு செய்து உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டில் ஓவியம், கைத்தறி, உடற்கல்வி, கணினி உட்பட்ட பாடங்களுக்கு பகுதிநேர பட்டதாரி ஆசிரியர்களாக 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது; வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் மட்டும் இவர்கள் பணி புரிகின்றனர். பகுதி நேரம் என்றாலும் அரசு நியமனம் என்பதால் தனியார் பள்ளிகளில் நல்ல சம்பளத்தில் பணியில் இருந்த ஆசிரியர்கள், அதை ராஜினாமா செய்து விட்டு, இப்பணியில் சேர்ந்தனர்.

சம்பளம் மிக குறைவாக இருப்பதாகவும், இதை உயர்த்தி வழங்கவும், முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்கு சம்பளம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.இவர்களுக்கு 1.4.2014 முதல் 7,000 ரூபாய் சம்பளம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 'விரைவில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்' என கல்வி அதிகாரி ஒருவர் கூறினார்.

இக்னோ பல்கலைகழகம் இளங்கலை கல்வியியல் (B.Ed )பட்டப்படிப்புக்கான (கிரேடு) தரநிலை வெளியிட்டுள்ளது

Inspire Award filling Hints


Www.inspireawards-dst.gov.in

Take students photos in computer
Students date of birth
create mail id
community
Select 3 Science topics

Students father Name
students strenth 1-8 & 6-8 
teachers strenth
H.m & science tr name with phone numbers
school Address
............................................................................................................................................................

*School authority
*One time registration
*Online mode
(Enter details save and next)
*Fw appli to distric authority
*Save acknowledgement
*Print acknowledgement
*Note appli number
*Login ID& password link come to scl mail id
*copy link in browser
*Create password
*Again login (under OTR)
*Nominate 3stu By Priority
*Save next
*Input verifier detail(hm&sci tr)
*Registered!
*Then,Fw to district authority
*Save Acknowledgement
*Print acknowledgement
*After acknowledgement created, we cant edit

* so plz avoid wrong entry

More-details-Chockkalingam-H.M
9786113160
7402599633
8144954111

TNTEU B.ed results