இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, June 28, 2014

ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடுத் திட்டம் அறிமுகம்

: ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடுத் திட்டத்தில் பயன் பெற, ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம். தமிழக அரசின் நிதி மற்றும் கருவூலத்துறையின் அரசாணை எண் 171, நாள்: 26.6.2014 ன் படி, ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் ஜூலை 1 முதல் 2018 ஜூன் 30 வரை அமலில் இருக்கும். இதில் பயன்பெற, ஓய்வூதியர்கள் ஜூலை 31 வரை, கருவூலத்தில் படிவம் பூர்த்தி செய்து வழங்கலாம்

. இதில் பயன்பெற விரும்பினால், '1800 233 5544' எண்ணில் தொடர்பு கொண்டு, விபரங்களை தெரிவிக்க வேண்டும். பின், பட்டியலில் உள்ள மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறலாம். இம்மாவட்டத்தில் அரவிந்த் கண் மருத்துவமனை, அப்போலோ, ஜவஹர், ஆசீர்வாதம் மருத்துவமனைகள் உட்பட 44 மருத்துவமனைகளில் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம். இதுதொடர்பாக ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரனை 73737 03197 ல் தொடர்பு கொள்ளலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் 21(ஜாபர் 73730 69010), தேனி 7 (கபீர் 73730 69012), ராமநாதபுரம் 7 (ரவிச்சந்திரன் 73737 03174), சிவகங்கை 6 (விஜயகுமார் 73730 69011), விருதுநகரில் 19 (சுரேஷ்குமார் 73730 69015) மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) / Family Pensioners - Form

Friday, June 27, 2014

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையதள வழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள்; மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தவிர இதர ஆசிரியர்கள் யாரேனும் கலந்தாய்வு மையத்தில் இருந்தால் அவ்வாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயக்குனர் உத்தரவு

பி.எட்., விண்ணப்ப வினியோகம் ஜூலை 18 வரை நீட்டிப்பு

  மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் வினியோகம், ஜூலை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்குனர் பாலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விவரம்: தேசிய கல்விக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை கல்வியியல் (பி.எட்.,) பட்டப் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 2 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவத்துடன் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களில் ஏதேனும் ஒன்றில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலை மூலம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கும். நுழைவுத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பம் பெற தேதி 18.7.2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 'பல்கலை நகர், மாணவர் சேர்க்கை மையம் மற்றும் நகர் வளாகம், அழகர்கோவில் ரோடு, மதுரை-2' ஆகிய இரண்டு இடங்களில் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை www.mkudde.org என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி., தலைவராக பாலசுப்ரமணியன் நியமனம்

டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) உறுப்பினர், பாலசுப்ரமணியனிடம், தலைவர் பதவி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வாணையத் தலைவர் பதவியில் இருந்த, நவநீதகிருஷ்ணன், அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் போட்டியிட்டதால், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதவியை, 10 நாட்களுக்கு முன், ராஜினாமா செய்தார். எனினும், தேர்வாணைய இணையதளத்தில் இருந்து, நவநீதகிருஷ்ணன் புகைப்படம் மற்றும் பெயர் அகற்றப்படாமல் இருந்தது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று செய்தி வெளியான நிலையில், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இருந்து, நவநீதகிருஷ்ணன் புகைப்படம் மற்றும் பெயர் நீக்கப்பட்டது.

மேலும், தேர்வாணைய உறுப்பினர்களில் ஒருவரான, பாலசுப்ரமணியன், தலைவர் பதவியை, கூடுதல் பொறுப்பாக வகிப்பார் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை, தலைவர் பதவியை, பாலசுப்ரமணியன் கவனிப்பார்.

ஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ் மார்க்’ அரசாணையை ரத்து செய்ய ஐகோர்ட்டில் மனுதாக்கல


புதுக்கோட்டையை சேர்ந்த பிரபாகர். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் எம்எஸ்சி, எம்எட் முடித்துள்ளேன். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளேன். கடந்தாண்டு நடந்த டிஇடி தேர்வில் 84 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். கல்வித்துறையின் சார்பில் கடந்த மே 30ம் தேதி அரசாணை எண் ‘71’ வெளியிடப்பட்டது.
அதில், டிஇடி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு 100 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2விற்கு 10, டிகிரிக்கு 10, பிஎட் 15 என தனித்தனியாக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறையால் 10 ஆண்டுக்கு முன் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். 

இதே போல் டிகிரி பாடத்திட்டமும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் மாறுபடுகிறது. தன்னாட்சி கல்லு£ரிகளிலும் பாடத்திட்ட முறை மாறுபடுகிறது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி ரவிசந்திரபாபு விசாரித்தார். மனு குறித்து பதில் அளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தொடக்ககல்வி இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தார்

Wednesday, June 25, 2014

ஆசிரியர்களின் திறனையும் ஆய்வு செய்து பள்ளிகளுக்கு 'கிரேடு' வழங்க திட்டம்


    படைப்பாற்றல் மற்றும் செயல்வழிக் கல்வி வகுப்புகளில், அரசு பள்ளி குழந்தைகளை மட்டுமின்றி, ஆசிரியர்களின் திறனையும் ஆய்வு செய்து, பள்ளிகளுக்கு 'கிரேடு' வழங்கும் முறையை செயல்படுத்த, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கல்விச் செயல்பாடுகள், படைப்பாற்றல் கல்வி, கல்வி இணைச் செயல்பாடுகள், எளிய செயல்வழிக் கற்றல், எளிய படைப்பாற்றல் கல்வி உள்ளிட்ட கல்வி கற்பிக்கும் முறைகளை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர் ஆய்வு செய்கின்றனர்.

இதில், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என்னும் அடிப்படையில், ஏ,பி,சி,டி, என்ற கிரேடுகளை கல்வித்துறை மூலம், அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு கல்வியாண்டில், பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் சேர்த்து, இக்கல்வி முறைகளை ஆய்வு செய்வதை காட்டிலும், வகுப்பு வாரியாகவும், பாட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அனைவரிடத்தும், படைப்பாற்றல் மற்றும் செயல்வழிக் கல்வி முறைகள் குறித்து ஆய்வு நடத்தி, கிரேடு வழங்க திருப்பூர் மாவட்ட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாணவர்களின் கற்பனைத்திறன்களை வெளிப்படுத்தவும், பாடங்கள் எளிதில் மனதில் பதிய வேண்டிய செயல்வழி மற்றும் படைப்பாற்றல் கல்வி வகுப்புகள் முறையை பின்பற்றப்படுகிறது. இம்முறை முழுமையாக பயனுள்ளதாக இருக்க, ஆசிரியர்களும் இக்கல்வி முறைகள் குறித்து அறிந்திருக்கவும், பின்பற்றவும் வேண்டும். ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகள் குறித்து பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

ஆசிரியர் பட்டய படிப்பு தேர்வு: புதிய முறையில் விடைத்தாள் தயாரிப்பு

ஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவன பட்டயப்படிப்பு மாணவர்களுக்கான தேர்வு துவங்க உள்ள நிலையில், 40 பக்கத்தில் விடைத்தாள் ஏடுகள் தைக்கும் பணி துவங்கி உள்ளது. தமிழக அரசின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு மற்றும் தனியார் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி பட்டயத்தேர்வு கடந்த 11ம் தேதி தேர்வு துவங்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 14ம்தேதி வி.ஏ.ஓ. தேர்வு நடந்ததால் இத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.அதன்படி தொடக்கக் கல்வி பட்டய படிப்பின் இரண்டாம் ஆண்டுக்கு நாளை (26ம் தேதி) துவங்கி வரும் ஜூலை 3ம் தேதி வரை நடக்கிறது. முதலாம் ஆண்டுக்கு ஜூலை 7ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுக்கான பணிகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தீவிரப்படுத்தி உள்ளது.கடந்த, 2012-13ம் கல்வியாண்டில் தேர்வு நடந்தது போல் அல்லாமல், புதியமுறையில் நடப்பாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. அதில் 40 பக்கம் கொண்ட விடைத்தாள் முறை அறிமுகப்படுத்தப்படும். விடைத்தாள் குளறுபடிகள் ஏற்படாமல் இருக்க, பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி. பொதுத் தேர்வில் பின்பற்றப்பட்ட விடைத்தாள் பராமரிக்கும் முறை, ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கும் பின்பற்றப்படும்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் படித்த 2,053 மாணவ, மாணவியருக்கு விடைத்தாள் தைக்கும் பணி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி உள்ளது. முதல் பக்கம் டாப் சீட்டில், மாணவர் பற்றிய விபரங்கள், பார் கோடு வசதியுடன் பிரின்ட் செய்யப்பட்டுள்ளது.புதிய முறையில் விடைத்தாள் தயாரிக்கப்பட்டு, தேர்வு நடத்தப்படுவதால், எவ்வித குளறுபடி மற்றும் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tuesday, June 24, 2014

பாரதியார் பல்கலை: எம்.பில், பி.எச்டி, படிப்புக்கான சேர்க்கை

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில், எம்.பில், பி.எச்டி.,(முழுநேர/பகுதிநேர) படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத் துறைகளிலும், படலகலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலும் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகமண்டலம்)மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் அனுமதிக்கப்பட்ட எம்.பில், பி.எச்டி படிப்புக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் CET நுழைவுத்தேர்வு ஜூலை 6ம் நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். www.b-u.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 31ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

RAIN water form

பள்ளிகளில் 13 வகை புதிய விளையாட்டுகள்: உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 13 வகை புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உடற்கல்வி, இயக்குனர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு படி, தடகளம், ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ் உள்பட 40 வகை விளையாட்டுகள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. இவற்றில் சில விளையாட்டுகளில் மட்டும் மாணவர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்த முடிகிறது. 20 விளையாட்டுகள் மட்டுமே, கல்லூரியில் சேரும்போது, மாணவர்களுக்கு தெரியவருகிறது.

இதனால், அனைத்து விளையாட்டுகளும், பள்ளி மாணவர்களுக்கு கற்று தர வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதன்படி ஜிம்னாஸ்டிக்ஸ், டேக்வாண்டோ, குத்துச்சண்டை, ஜூடோ, பென்சிங், சைக்கிளிங், பீச் வாலிபால், கேரம், செஸ், டென்னி காய்ட் உள்பட 13 வகை புதிய விளையாட்டுகளை நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு கற்றுத்தர முடிவு செய்யப்பட்டது. இந்த விளையாட்டுகள் குறித்து உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்களுக்கு சென்னை, கோவை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட இடங்களில் கடந்த வாரம் முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு விளையாட்டிற்கு மாவட்டத்திற்கு 5 உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்கள் வீதம் 65 பேருக்கு 3 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் ஒரு மணி நேர தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 70 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் கிரேடு, 60 முதல் 70 மதிப்பெண் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 2 ம் கிரேடு, 50 மதிப்பெண் எடுத்தால் 3 ம் கிரேடு சான்றிதழ் வழங்கப்படுகிறது. சான்றிதழ் பெறும் ஆசிரியர்கள் மட்டுமே புதிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கவும், போட்டிகளின் போது நடுவர்களாக பணியாற்றவும் பள்ளி கல்வித்துறை மூலம் அனுமதிக்கப்பட உள்ளனர்.

Sunday, June 22, 2014

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு மனிதநேய மையம் இலவச பயிற்சி;

மாணவர்களைத் தேர்ந்தெடுக்க நுழைவுத் தேர்வு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கு மனிதநேய பயிற்சி மையம் இலவச பயிற்சி அளிக்கிறது. இதற்காக மாணவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

கட்டணமில்லா பயிற்சி
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, மனிதநேய கட்டணமில்லா பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இந்த மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு உள்பட பல்வேறு மத்திய, மாநில பணிகளுக்காக நடக்கும் தேர்வுகளில் மாணவர்கள் கலந்துகொள்ள இலவச பயிற்சி அளித்து வருகிறது.இந்த ஆண்டு வெளியிடப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில், மனிதநேய மையத்தில் படித்த 46 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல்நிலை தேர்வுதொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்வுக்காக மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை முதல்நிலை தேர்வுக்காக இலவச பயிற்சி அளிக்கிறது.
இந்த பயிற்சியில் கலந்துகொள்ள தகுதியும், ஆர்வமுள்ள மாணவர்களை தேர்வு செய்ய, சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தலைநகரங்களில் நுழைவுத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்நுழைவுத் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறும் 2 ஆயிரம் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த தேர்வுக்கான பாடத்திட்டத்தை மனிதநேய மையத்தின் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் http://saidaiduraisamysmanidhaneyam.com/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.7.2014 ஆகும். 23.7.2014 முதல் மாணவர்கள் தாங்கள் எந்த மாவட்டத்தில் தேர்வு எழுத விரும்புகிறார்களோ, அந்த மாவட்டங்களில் தேர்வு எழுத நுழைவுத்தேர்வுக்கான தங்களின் ஹால்டிக்கெட்டை மேலே குறிப்பிட்ட இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் தங்களது சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெறவேண்டும். அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெறமுடியாதவர்கள், தங்கள் புகைப்படம் உள்ள அடையாள அட்டையை ஹால்டிக்கெட்டுடன் கொண்டுவரவேண்டும். நுழைவுத்தேர்வு ஆகஸ்டு 3-ந் தேதி நடைபெறும். மேற்கண்ட தகவல்கள் மனிதநேய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Saturday, June 21, 2014

ஜூன் 26க்குள் 2,000 புதிய ஆசிரியர் பணியிடங்கள்

தமிழகம் முழுவதும், இம்மாதம் 26க்குள் புதிதாக, 2,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க, கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது. மாநிலத்தில் தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், 'கவுன்சிலிங்' துவங்கியுள்ளது. இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 'பணி நிரவல்' மாறுதல், 'கவுன்சிலிங்' இம்மாதம் 26ல் நடக்கிறது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை விகிதம் குறைந்ததால், தற்போதுள்ள மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், மாநிலம் முழுவதும், 3,000 பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக கணக்கிட்டு, 'பணிநிரவல்' அடிப்படையில் அவர்களை பணியிட மாறுதல் செய்ய, கல்வித்துறை முடிவு செய்தது.

இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பணி மாறுதல் செய்யப்பட்டால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதா என்ற தகவலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக, உபரி ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இப்புதிய பணியிடங்களை, ஆங்கில வழி வகுப்புகளுக்கு பாடவாரியாக ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களை, இம்மாதம் 26ல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் நடக்கும், பணிநிரவல், 'கவுன்சிலிங்' முன் ஒதுக்கீடு செய்யவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்

் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வில் பங்கேற்கும் தனித் தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து இயக்ககம் வெளியிட்ட செய்தி: தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் (2014 ஜூன்) இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ஜூன் 26 முதல் ஜூலை 3-ஆம் தேதி வரையும், முதலாமாண்டு தேர்வுகள் ஜூலை 7-ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் மற்ற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஜூன் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Friday, June 20, 2014

மாவட்ட மறுதல் -ஓர் விளக்கம


1. மாவட்ட மாறுதல் ஆன்-லைன் மூலம் நடத்தப்படும்
2. 32 மாவட்டங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது
3.ஒரு மண்டல்தை மட்டுமே தேர்வு செய்து மாறுதல் கோர முடியும்
4. ஒரு விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
5. முன்னுரிமை சம்பந்தமான கடிதத்தினை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

6. தாங்கள் பணியாற்றும் மாவட்டத்திலேயே மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
7. ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணபங்கள் சமர்ப்பித்தால் தங்கள் பெயர் தானாகவே நிராகரிக்கப்படும்.
8. காலிப் பணியிடங்கள் விரைவில் இணையத்தில் வெளியிடப்படும்
9. விண்ணபத்தின் விபரங்கள் அந்தந்த வட்டாரங்களிலே ஆன் லைனில் ஏற்றப்படும்
11. இடைநிலையாசிரிர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மாவட்ட மாறுதல் ஆன்லைனில் மட்டுமே நடக்கும்
11. மேலும் விபரங்களுக்கு தாங்கள் சார்ந்த அமைப்பின் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

Wednesday, June 18, 2014

எஸ்.எஸ்.எல்.சி உடனடித் தேர்வு ஜீன் 2014 - HALL TICKET

ஜூன் 26க்குள் 2 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித்துறை பரிசீலனை

தமிழகம் முழுவதும் ஜூன் 26க்குள் புதிதாக 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது. மாநிலத்தில் தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 16 முதல் துவங்கியுள்ளது. இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 26ல் நடக்கிறது.

இதில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை விகிதம் குறைந்ததால், தற்போதுள்ள மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆக கணக்கிட்டு, 'பணிநிரவல்' அடிப்படையில் அவர்களை பணியிட மாறுதல் செய்ய கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பணி மாறுதல் செய்யப்பட்டால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதா என்ற தகவலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக, 'சர்பிளஸ்' ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இப்புதிய பணியிடங்களை, ஆங்கில வழி வகுப்புகளுக்கு பாடவாரியாக ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களை ஜூன் 26 ல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் நடக்கும் பணிநிரவல் 'கவுன்சிலிங்' முன் ஒதுக்கீடு செய்யவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சர்பிளஸ்' பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கையுடன், கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்ய பரிசீலனை நடக்கிறது. மாவட்டம் தோறும் ஒதுக்கப்பட்ட புதிய பணியிடங்கள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 26 சர்பிளஸ் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களை சேர்ந்து, கூடுதலாக 220 புதிய பணியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது," என்றார்.

ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம

  தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான, மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு: தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, இம்மாதம், 16ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை நடக்கிறது. மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களின் நலன் கருதி, மாவட்ட மாறுதல் கலந்தாய்வு இணைய வழி மூலம் நடக்க உள்ளதால், மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன

. இடை நிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு, ஜூன் 28க்கு பதிலாக, ஜூன் 30, ஜூலை 1 என, இரண்டு நாட்கள் நடக்கும். பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு, ஜூன் 21க்கு பதிலாக, ஜூலை 2ம் தேதி நடக்கும். இந்த இரு கலந்தாய்வுகளும், ஆசிரியர்களின் நேரம், பயண நேரத்தை குறைக்கும் வகையில், தற்போது பணிபுரியும் மாவட்டத்தில் இருந்தே, தங்களுக்கு விருப்பமான மாவட்டத்தை தேர்வு செய்யும் வகையில், இணைய தளம் மூலம் நடக்கும். மற்ற கலந்தாய்வுகள் அட்டவணையில் குறிப்பிட்டபடி, வழக்கம்போல் நடைபெறும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Interactive Learning Sites for Education -

DEE - 2014-15 CONDUCT OF ONLINE COUNSELING FOR SG / BT DISTRICT TRANSFER REG PROCidings

DEE - 2014-15 CONDUCT OF ONLINE COUNSELING FOR SG / BT DISTRICT TRANSFER REG PROCidings