இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, May 19, 2014

சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்), சென்னை மண்டல, 10ம் வகுப்பு தேர்வு முடிவு, நேற்று மாலை வெளியானது.


மார்ச் மாதம், நாடு முழுவதும், 10ம் வகுப்பு தேர்வு நடந்தது. சி.பி.எஸ்.இ.,யை பொறுத்தவரை, பள்ளி அளவிலான தேர்வு, சி.பி.எஸ்.இ., போர்டு அளவிலான தேர்வு என, இரு வகையாக நடக்கிறது. இதில், போர்டு தேர்வில், அதிக மாணவர்கள் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கோவா, புதுச்சேரி உள்ளிட்ட, மேலும் சில மாநிலங்கள் அடங்கிய, சென்னை மண்டலத்தின், 10ம் வகுப்பு தேர்வு முடிவை, சி.பி.எஸ்.இ., நிர்வாகம், நேற்று மாலை வெளியிட்டது. தமிழகத்தில், இந்த தேர்வை, 50 ஆயிரம் பேர் எழுதி உள்ளனர். www.cbseresults.nic.in என்ற இணையதளத்தில், மாணவர்கள், தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தேர்வை முடிவை அறியலாம்.

மதிப்பெண் அடிப்படையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'கிரேடு' வழங்கப்படுகிறது. மதிப்பெண் பட்டியலில், மாணவரின், 'கிரேடு' மட்டுமே இடம்பெற்றிருக்கும். மேலும், 'ரேங்க்' போன்ற விவரங்களும், சி.பி.எஸ்.இ.,யில் கிடையாது. தேர்வு முடிவு குறித்து, சென்னை மண்டல, சி.பி.எஸ்.இ., செயலர், சுதர்சன் ராவ் கூறுகையில், ''மண்டல அளவிலான தேர்ச்சி சதவீதம் உள்ளிட்ட முழுமையான விவரம், இன்று தான் தெரியும். மாணவர்கள், இணையதளம் வழியாக, தேர்வு முடிவை அறியலாம்,'' என்றார். சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு, வரும், 26ம் தேதி வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்: பிரவீண்குமார்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறுகையில், மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அதற்கான உரிய படிவங்களை வட்டாட்சியர் அலுவலகங்கள் அல்லது மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.

இந்தப் படிவங்கள் பெறப்பட்டு, 45 நாள்களுக்குள் அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். மக்களவைத் தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களைச் சேர்த்தவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாமல் இருந்தது. அவர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும்.

மேலும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். அப்போதும் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க படிவங்களை அளிக்கலாம் என்றார்.

2015-16 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் கல்வியியல் கல்வியில் மிகப் பெரிய சீர்திருத்தம் ஏற்படும

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 6 மாத காலத்துக்குள்ளாக ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான வழிகாட்டு நெறிகளை என்.சி.டி.இ. உருவாக்கி வருகிறது.

இந்தப் பணி விரைவில் முடிக்கப்பட்டு, வருகின்ற ஜூன் மாதத்துக்குள்ளாக புதிய வழிகாட்டு நெறிகளுக்கு ஒப்புதலும் பெறப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. எனவே, ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிகள் ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வந்துவிடும்.

இந்த புதிய வழிகாட்டு நெறிகள் மூலம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்களில் தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் தொடர் ஆய்வு மற்றும் கண்காணிப்பு முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கு விண்ணப்பிப்பது, அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் எந்த நிலையில் உள்ளன என்பதை அறிவது என அனைத்து விவரங்களும் மின் ஆளுமையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. இதன் மூலம் ஊழல் நடைபெறுவது தடுக்கப்படும்.

தேசிய அங்கீகார மையம்:ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்களை ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கும் முறை இதுவரை என்.சி.டி.இ.-யிடம் இல்லை. எனவே, பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலுடன் (நாக்) புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு தேசிய ஆசிரியர் கல்வி ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்.ஈ.ஏ.ஏ.சி.) என்ற புதிய மையம் உருவாகக்ப்படும்.

வரும் 2015-16 கல்வியாண்டு முதல் இந்த புதிய மையம் மூலம் ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.

மாநில அரசுகளுடன் இணைந்து அடுத்த ஓராண்டில் தேசிய ஆசிரியர் கல்வித் தகுதி திட்ட வடிவம் ஒன்று உருவாக்கப்படும் என்பதோடு, ஆசிரியர் தணிக்கை முறையும் அறிமுகப்படுத்தப்படும்.

அங்கன்வாடிகளுக்கு வருகிறது கட்டுப்பாடு: அங்கன்வாடிகளை ஒழுங்குபடுத்தும் வகையிலும், அங்கு குழந்தைகளுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும் "குழந்தை பாதுகாப்பு மற்றும் கல்வி (இசிசிஇ)' என்ற திட்டத்தை கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும்.

இந்த நடவடிக்கைகள் மூலம் 2015-16 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் கல்வியியல் கல்வியில் மிகப் பெரிய சீர்திருத்தம் ஏற்படும் என்றார் அவர்.

பி.எட்., எம்.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்கிறது

இளநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பான பி.எட்., மற்றும் முதுநிலை படிப்பான எம்.எட். ஆகிய படிப்புகளின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார். சென்னையில் திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர் அளித்த பேட்டி: பள்ளி ஆசிரியர் ஆக வேண்டுமானால், ஓராண்டு படித்தால் போதும் என்ற நிலை உள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கவும், சிறப்பாக பயிற்றுவிக்கவும் இந்த ஓராண்டு படிப்பு நிச்சயம் போதாது

. எனவே, பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் படிப்பு காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு என்.சி.டி.இ. சார்பில் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, வருகின்ற 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டாண்டு பி.எட்., இரண்டாண்டு எம்.எட். படிப்புகளைக் தொடங்க கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்படும் அதே நேரம், இந்த புதிய மாற்றத்தை பின்பற்ற மாநில கல்வி நிறுவங்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்கப்படும் என்றார் அவர்.

இதன்படி, ஓரிரு ஆண்டுகளில் பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

Saturday, May 17, 2014

பள்ளிக்கல்வி முதன்மை செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் டி.இ.டி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சார்பாக விவாதிக்கப்பட்டதாகவும், விரைவில் புதிய வெயிட்டேஜ் கணக்கீடு வர வாய்ப்ப

இன்று பள்ளிக் கல்வி முதன்மை செயலர் தலைமையில் முக்கிய விவாதம் நடைபெற்றது, இதில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறித்தும், பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள் குறித்தும்,ஆசிரியர் நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அனைத்து சி இ ஓக்களிடம் அலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் எவ்வகையான வெயிட்டேஜ் முறையினை என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது

, இதுகுறித்து நாளையும் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் டி இ டி தொடர்பான அரசாணை ஓரிரு நாளில் வெளியிடப்பட்டு அடுத்த 10நாட்களுக்குள் இறுதிப்பட்டியல் வெளியடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த திங்கள் அன்று டி.இ.டி எழுதிய ஒரு சாரார் தலைமை செயலகத்தில் தேர்வில் 90மதிப்பெண் மேல் பெற்றவர்கள் மனு அளித்ததும் அது குறித்து 17ம் தேதி அன்று நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று உறுதி அளித்ததும் நினைவிருக்கலாம்.

பாடப்புத்தகம் கிடைக்குமா

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2 ல் மீண்டும் திறக்கப்படுகின்றன. முதல் நாளே, மாணவர்கள் அனைவருக்கும், விலையில்லா பாடப் புத்தகம் வழங்குவது, அரசின் பிற நலத்திட்ட உதவிகளையும், தாமதமின்றி செயல்படுத்துவது குறித்து, விவாதிக்க மீள் ஆய்வு கூட்டம், சென்னையில் நாளை (மே 19ல்) நடக்கிறது. இதில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் உயர் அதிகாரிகள் பங்கேற்று, நடப்பு கல்வி ஆண்டில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து, விவாதிக்க உள்ளனர்.

செல்லாத தபால் ஓட்டுகளில் மதுரைக்கு முதலிடம

தொகுதி வாரியாக, செல்லாத ஓட்டுகள் விவரம்: வட சென்னை, 338; தென் சென்னை, 285; மத்திய சென்னை, 335; ஸ்ரீபெரும்புதூர், 358; காஞ்சிபுரம், 1,450; அரக்கோணம், 719; வேலூர், 433; கிருஷ்ணகிரி, 92; தர்மபுரி 327; திருவண்ணாமலை 537; ஆரணி 503; விழுப்புரம் 481; கள்ளக்குறிச்சி 265; சேலம் 466; நாமக்கல் 325; ஈரோடு 709; திருப்பூர் 532; நீலகிரி 417; கோவை 7; பொள்ளாச்சி 85; திண்டுக்கல் 325; கரூர் 520; திருச்சி 558; பெரம்பலூர் 840; கடலூர் 589; சிதம்பரம் 321; மயிலாடுதுறை 349; நாகப்பட்டினம் 366; தஞ்சாவூர் 408; சிவகங்கை 192; மதுரை 1,529; தேனி 831; விருதுநகர் 783; ராமநாதபுரம் 200; தூத்துக்குடி 135; தென்காசி 1,136; திருநெல்வேலி 317; கன்னியாகுமரி 436 என மொத்தம், 18,489 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகள். தபால் ஓட்டுகளில், செல்லாத ஓட்டுகள் அதிகம் இருப்பது, பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கான திருமண செலவினங்களுக்கு 2014-15ம் ஆண்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை

இரட்டைப்பட்ட வழக்கின் உண்மை நிலை - 09.5.2014 அன்று உச்ச நீதி மன்றத்தால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை

புதிய ஆசிரியர்கள் நியமனம் மற்றும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்பு


  புதிய அரசு அமைய மே 28 தேதி வரை கால அவகாசம் இருந்தது. ஆனால் தற்பொழுது நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மே 21ம் தேதி புதிய அரசு பதவியேற்க்கவுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் 22ம் தேதி முதல் தளர்த்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து புதிய ஆசிரியர்கள் நியமனம் மற்றும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

Friday, May 16, 2014

குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை பெற்றோருக்கு உண்டா?


பணியில் இருக்கும் ஒருவர் உயிரிழக்க நேரிட்டால் அந்த ஊழியரின் மனைவியோ, கணவரோ அல்லது பிள்ளைகளோ குடும்ப ஓய்வூதியம் பெற முடியும் என்பது தெரியும். ஆனால், திருமணம் ஆகாத ஊழியர் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுமா? அந்த ஊழியரின் பெற்றோருக்கு அதைப் பெறும் உரிமை உண்டா? இந்த சந்தேகம் பலருக்கும் உள்ளது. 

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் 2012-ம் ஆண்டு ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக துறைமுக ஊழியராகப் பணியாற்றி வந்த ரவிக்குமார் என்பவருக்குத் திருமணம் ஆகவில்லை. தனது தாயார் மாரியம்மாளை அவர்தான் பராமரித்துவந்தார். இந்நிலையில், ரவிக்குமார் கடந்த 2006-ம் ஆண்டு திடீரென இறந்துவிட்டார். அவரது இறப்புக்குப் பிறகு வழங்கவேண்டிய பணப் பயன்கள் முழுவதையும் அவரது தாய் மாரியம்மாளுக்கு துறைமுக நிர்வாகம் வழங்கியது. அதே சமயம், மகனுக்குத் திருமணம் ஆகவில்லை என்பதாலும், தனக்கு வேறு ஆதரவு யாரும் இல்லை என்பதாலும் துறைமுக நிர்வாகம் தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என மாரியம்மாள் கோரிக்கை விடுத்தார். ஆனால், துறைமுக நிர்வாகமோ, ‘‘துறைமுக ஊழியர் ஒருவர் இறக்க நேரிட்டால் அவரது மனைவி, கணவர், மகன் அல்லது மகள் மட்டுமே குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை உள்ளது. விதிகளின்படி பெற்றோருக்கு அந்த உரிமை இல்லை’’ என்று கூறி கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மாரியம்மாள் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை தாய் மாரியம்மாளுக்கு உண்டு என்று தீர்ப்பளித்தது. மேலும் அந்த தீர்ப்பில், ‘‘தாய், தந்தையைப் பராமரித்து, பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு மகன், மகளின் கட்டாயக் கடமை. இந்த வழக்கில் துறைமுக ஊழியர் ரவிக்குமார் தனது வயதான தாயைப் பாதுகாத்து வந்துள்ளார். அவர் திடீரென இறந்துவிட்டார். தாயைப் பாதுகாக்கும் கடமையைச் செய்துவந்த மகன் தற்போது உயிருடன் இல்லை. தாய் ஆதரவின்றி நிற்கிறார். இந்த சூழலில் குடும்ப ஓய்வூதியம் மட்டுமே அவருக்கு ஒரே வாழ்வாதாரம். குடும்ப ஓய்வூதியப் பயன்களைப் பெறும் உரிமை பெற்றோருக்கும் உண்டு என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது. ரவிக்குமார் திருமணமாகாத ஊழியர் என்பதால், அவரது உயிரிழப்புக்குப் பிறகு குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை தாய் மாரியம்மாளுக்கு உண்டு’’ என்று உயர் நீதிமன்றம் கூறியது.

20–ந் தேதி முதல் அமல்: ரெயில் கட்டணம் 14.2 சதவீதம் உயர்வு: ரெயில்வே அமைச்சகம் ‘திடீர்’ அறிவிப்பு


ரெயில்களில் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயருகிறது. திடீர் அறிவிப்பு ரெயில்களில் அனைத்து வகுப்புகளுக்கும் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை ரெயில்வே அமைச்சகம் உயர்த்தி உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோது, இந்த கட்டண உயர்வு அறிவிப்பு
திடீரென வெளியிடப்பட்டது. இந்த கட்டண உயர்வு, வருகிற 20–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பயணிகள் கட்டணத்தைப் பொறுத்தவரை, அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியாக 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அத்துடன், எரிபொருள் விலைக்கேற்ற கட்டணமாக, கூடுதலாக 4.2 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. எனவே, மொத்த கட்டண உயர்வு 14.2 சதவீதம் ஆகும். கட்டண வசூலிப்புக்கான குறைந்தபட்ச தூரம்வரை கட்டண உயர்வு கிடையாது.இருப்பினும், முன்பதிவு கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. சூப்பர்பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் வரி, சேவை வரி ஆகியவற்றிலும் எந்த மாற்றமும் இல்லை.

சீசன் டிக்கெட்
புறநகர் மற்றும் புறநகர் அல்லாத ரெயில்களுக்கான இரண்டாம் வகுப்பு மாதாந்திர சீசன் டிக்கெட்டுக்கான கட்டணம், இனிமேல், மாதத்துக்கு 15 நடை பயணம் என்ற அடிப்படையில் இல்லாமல், 25 நடை பயணம் என்ற அடிப்படையில் வசூலிக்கப்படும். காலாண்டுக்கான சீசன் டிக்கெட், அரை ஆண்டுக்கான சீசன் டிக்கெட், முழு ஆண்டுக்கான சீசன் டிக்கெட் ஆகியவற்றுக்கும் இதே முறையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.முதல் வகுப்பு சீசன் டிக்கெட் கட்டணம், தற்போது இருப்பது போல, இரண்டாம் வகுப்பு சீசன் டிக்கெட் கட்டணத்தை விட 4 மடங்காக இருக்கும்.

சரக்கு கட்டணம்
ரெயில்களில் சரக்கு கட்டணம் ஒரே மாதிரியாக 5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. அத்துடன், கூடுதலாக, எரிபொருள் விலைக்கேற்ற கட்டணமாக 1.4 சதவீதம் வசூலிக்கப்படும். 100 கி.மீ. வரையிலான தூரத்துக்கு அனுப்பப்படும் சரக்குக்கான கட்டண சலுகை வாபஸ் பெறப்படுகிறது. குறைந்த கட்டண வகுப்புகளின் எண்ணிக்கை 4–ல் இருந்து 3 ஆக குறைக்கப்படுகிறது. சில சரக்குகளுக்கான சலுகைகளும் வாபஸ் பெறப்படுகின்றன.

20–ந் தேதி அமல்
பயணிகள் கட்டண உயர்வும், சரக்கு கட்டண உயர்வும் வருகிற 20–ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக ரெயில்வே அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

20–ந் தேதியோ அல்லது அதற்கு பிறகோ பயணம் செய்வதற்காக, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும். அத்தகைய பயணிகள் கட்டண உயர்வுத் தொகையை ரெயில் பயணத்தின்போது, டிக்கெட் பரிசோதகரிடம் செலுத்த வேண்டும். அல்லது, பயணம் செய்வதற்கு முன்பு, முன்பதிவு மையங்களில் செலுத்த வேண்டும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: விண்ணப்பிக்கும் தேதி மே 31 வரை நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில் ஏழை, நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி மே 31 வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு அறிமுக வகுப்புகளில் (எல்.கே.ஜி., முதல் வகுப்பு, ஆறாம் வகுப்பு) 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த இடஒதுக்கீட்டு இடங்களுக்கு மே 18 வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநிலம் முழுவதும் இந்த ஒதுக்கீட்டு இடங்களுக்கு பெற்றோர் இடையே போதிய வரவேற்பில்லாமல் உள்ளது. சென்னை உள்ளிட்ட பெரிய மாவட்டங்களில் கூட மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

    இதையடுத்து, இந்த ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 3,550 மெட்ரிக் பள்ளிகளில் 58,619 இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு 23,428 (40 சதவீதம்) மாணவர்களே இந்த ஒதுக்கீட்டில் சேர்ந்தனர். கடந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணம் மூன்று மாதங்களில் வழங்கப்படும் என தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் ஏற்கெனவே உறுதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Wednesday, May 14, 2014

புதிதாக சேர்ந்த அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல

தமிழக அரசு ஊழியர்களுக்கு,பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், கடந்த 2003 ஏப்ரல் மாதம் முதல் அமலில் உள்ளது. இந்த ஆண்டிற்கு பிறகு, பணியில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்கள், மற்றும் பணி வரன் முறை பெறாத அரசு ஊழியர்கள், சென்னையில் உள்ள தகவல் தொகுப்பு மையத்தில், ஊழியர் பெயரில், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண், பெற்றிருக்க வேண்டும். இந்த எண் பெறவில்லை என்றால், புதிய பென்ஷன் திட்டத்திற்காக, அடிப்படை சம்பளத்தில் இருந்து, பணம் பிடித்தம் செய்ய முடியாது.

எனவே, இந்த எண் பெறாத அரசு ஊழியர்களுக்கு, ஜூன் மாதம் முதல் சம்பளம், நிறுத்தி வைக்க வேண்டும், என நிதித் துறை பென்ஷன் பிரிவில் இருந்து, அனைத்து கருவூல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் கருணை அடிப்படையில், பணிக்கு சேர்ந்தவர்கள் குறித்து, எந்த விதக் குறிப்புகளும் இல்லை. எனவே, பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண் பெறாத, அரசு ஊழியர்களுக்கு ஜூன் மாதம் முதல் சம்பளம் கிடைக்காது.-

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அரசு பள்ளிகளில் ஆய்வு : கல்வித்துறை நடவடிக்கை

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறித்து, மாவட்ட வாரியாக, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பிளஸ் 2 தேர்வில், அரசு மேல்நிலைப்பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தாலும், சில பள்ளிகளின், மாணவர்கள் தேர்ச்சி விகிதம், கடந்தாண்டை விட இந்தாண்டு குறைந்துவிட்டது. போதிய ஆசிரியர்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களினால், முக்கிய பாடங்களில், மாணவர்களால் அதிக மதிப்பெண்களை பெறமுடியாமல் போனது. இந்நிலையில், மாவட்ட வாரியாக, அனைத்து அரசு பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி சதவிகிதம் குறித்து ஆய்வு செய்ய, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"அரசு பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் என்ன? கடந்தாண்டை விட குறைந்ததா, அதிகரித்ததா? குறைந்திருந்தால், அதற்கு தலைமையாசிரியர் கூறும் விளக்கம் என்ன, அதை, அடுத்தாண்டு அதிகப்படுத்துவது எப்படி போன்ற விவரங்கள் ஆராயப்பட உள்ளன. அதுகுறித்த அறிக்கையை, தலைமையாசிரியர்கள், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியிடம் அளிப்பர். அந்த அறிக்கை, பள்ளிகல்வித்துறைக்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில், சென்னையில், விரைவில், உயரதிகாரிகளின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, தேர்ச்சி விகிதத்தை மேம் படுத்த, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்,என்றார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழித்திறன் இலவச பயிற்சி அடுத்த மாதம் நடைபெறுகிறது

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் மொழித்திறன் பயிற்சி அடுத்தமாதம் அளிக்கப்பட உள்ளது.

பேச்சாற்றல் இல்லை

தாய் மொழி அவசியம் தேவை தான். ஆனால் பி.இ. மற்றும் பி.ஏ., பி.காம் உள்ளிட்ட கலை அறிவியல் படிப்புகளை படித்தவர்கள் கற்ற பாடத்தை ஆங்கில மொழியில் சொல்லத்தெரிந்தால்தான் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் இருக்கும்.

ஆனால் பாடத்தை நன்றாக தெரிந்து வைத்திருந்தும், கற்றதை ஆங்கில மொழியில் சொல்லத்தெரியாமல். (பேச்சாற்றல் இல்லாமல்) இருக்கும் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள்.

அத்தகையவர்களுக்கு ஆங்கில மொழித்திறன் பயிற்சி அளிப்பது குறித்து இந்திய ஆங்கில மொழி ஆசிரியர்கள் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கே.இளங்கோ கூறியதாவது:-

ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி

இந்திய ஆங்கிலமொழி ஆசிரியர் அமைப்பும், சென்னை வடக்கு ரோட்டரி சங்கமும் சேர்ந்து அரசு பள்ளிகளில் பணியாற்றும் 300 ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக ஆங்கிலத்தில் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். மொத்தம் 5 நாட்கள் இந்த பயிற்சி அடுத்த மாதம் (ஜூன் மாதம்) அளிக்கப்படும்.

கூடிய மட்டும் அந்த ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் தான் பயிற்சி அளிக்கப்படும். கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய தலைப்புகளில் பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. அவர்களுக்கு வகுப்பு எடுப்பவர்கள் ஏற்கனவே பெரிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்தான்.

இந்த பயிற்சி நடைமுறைக்கு ஏற்புடையதாகவும், ஆங்கில மொழித்திறனை ஊக்குவிப்பதாகவும் இருக்கும். பயிற்சி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஹோலிகிராஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெற விரும்புபவர்கள் 9444257308 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளவேண்டும்.

ஏராளமான மாணவர்கள் பெயில்

அண்ணா பல்கலைக்கழகம் பி.இ. படிக்கும் முதல் பருவத்தேர்வு முடிவை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் அதிர்ச்சி தரும் தகவலாக 56 என்ஜினீயரிங் கல்லூரிகளைச்சேர்ந்த அனைத்து மாணவர்களும் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை.

எனவே இப்போது ஆங்கில பயிற்சி உடனடித்தேவை என்பதால் முதல் முதலாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த பயிற்சி கொண்டு செல்லப்படும்.

அடுத்த கட்டமாக சென்னையில் பயிற்சி அளிப்பதை வீடியோ கான்பரன்சிங் மூலம் கிராமங்களில் உள்ள ஆசிரியர்களும் பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.