இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, April 02, 2014

+2 results

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைந்தது. இதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-ம் தேதியுடன் தேர்வு முடிவடைய உள்ள நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதியை தேர்வுத்துறை இயக்கம் இன்று அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 9-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்றும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவு வெளியிடப்படும் இணையதள முகவரி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை இயக்கம் தெரிவித்துள்ளது

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல்; அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு

மத்திய அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் அறிவித்தாலும், அரசாணை கடந்த மார்ச் 27ம் தேதி தான் வெளியானது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இன்னும் ஒரிரு நாட்களில் முறையான அரசாணை வெளியாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி ஜனவரி 2014 முதல் 100% ஆக உயரவுள்ளது எனவும், ஜனவரி 2014 முதல் மார்ச் 2014 வரையிலான 3 மாத அகவிலைப்படி நிலுவை, ரொக்கமாக வழங்க உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tuesday, April 01, 2014

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஏற்கனவே முடித்திருந்தால் நடவடிக்கை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு


தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஏற்கனவே முடித்திருந்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏழை மாணவர்கள் உள்ளிட்ட நலிவடைந்த மாணவர்கள் 25 சதவீதம் பேர் சேர்க்கப்படவேண்டும் என்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கு.பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மாணவர் சேர்க்கை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளிலும் 2014–2015– ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை இந்த மாதம் மற்றும் அடுத்த மாதமான மே மாதம் நடத்த வேண்டும்.

ஆனால் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களிலேயே மாணவர் சேர்க்கையை முடித்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன. ஏப்ரல் மாதம்தான் மாணவர் சேர்க்கைக்கான பணியை தொடங்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. அதை மீறி சில பள்ளிகள் செயல்பட்டுள்ளன. அப்படிப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பள்ளிகளையும் மெட்ரிகுலேஷன் ஆய்வர்கள் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுத்து அது தொடர்பான அறிக்கையை மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகத்திற்கு அனுப்பவேண்டும். இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்காக 25 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் (சிறுபான்மை இன பள்ளிகள் நீங்கலாக) நடைமுறைப்படுத்தவேண்டும்.

விண்ணப்ப படிவம் மே மாதம் 3–ந்தேதி முதல் 9–ந்தேதிக்குள் கொடுக்கப்படவேண்டும். மே மாதம் 9–ந்தேதி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள். மே 11–ந்தேதி மாணவர்சேர்க்கை பற்றிய இறுதி முடிவை வெளியிடவேண்டும். 5 பிரிவுகள் மட்டுமே மேலும் சில பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை ஒவ்வொரு வகுப்பிலும் 10–க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. இந்த வருடம் முதல் எந்த காரணம் கொண்டும் எல்.கே.ஜி.யிலும் 11–வது வகுப்பிலும் 5 பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது. இது கட்டாயம் கடைப்பிடிக்கப்படவேண்டும். அதை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு கு.பிச்சை தெரிவித்துள்ளார்.

வி.ஏ.ஓ., தேர்வுக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பம்


    ஜூன், 14ம் தேதி நடக்க உள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வுக்கு, இணையதளம் வழியாக, இதுவரை, ஐந்து லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, அரசுப்பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) வட்டாரம் தெரிவித்தது. கடைசி தேதியான வரும், 15க்குள், மேலும் 5 லட்சத்திற்கும், அதிகமானோர் விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வாணையம் எதிர்பார்க்கிறது. தமிழக வருவாய்த்துறையில், 2,342 வி.ஏ.ஓ., காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த மாதம் 17ல், வெளியானது. அன்றிலிருந்து, வரும் 15 வரை, www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏராளமானோர் போட்டி: இந்த வேலைக்கு, 10ம் வகுப்பு கல்வி தகுதி என்பதால், வழக்கம் போல், ஏராளமானோர் போட்டி போட்டு, விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த 15 நாளில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என, தேர்வாணைய வட்டாரம் தெரிவித்தது. கடைசி நாளான, வரும் 15க்குள், மேலும், ஐந்து லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்ப்பதாகவும், அத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. எனவே, மொத்த விண்ணப்பதாரர் எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் - 4: கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் குரூப் - 4 தேர்வு நடந்தத

ு. இதன் முடிவு, சமீபத்தில் வெளியானது. இளநிலை உதவியாளர், 3,704, தட்டச்சர், 1,843, சுருக்கெழுத்து தட்டச்சர், 308 என, 5,855 காலி பணியிடங்களை நிரப்ப, கடந்த மாதம் 24 முதல், கலந்தாய்வு நடந்து வருகிறது. முதலில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. இதில், 348 பேருக்கு, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, நேற்று துவங்கியது.

டி.இ.டி., 2 சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைப்பு


    ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண் அளவை, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கு, கடந்த மாதம், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தியது. இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, வரும், 7ம் தேதியில் இருந்து, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்திருந்தது.

முதல் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு, மாநிலம் முழுவதும், ஐந்து மண்டலங்களில் நடந்தது. ஆனால், இரண்டாம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பை, 32 மாவட்டங்களிலும் நடத்த, டி.ஆர்.பி., திட்டமிட்டது. இதற்காக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை, பணிக்கு அனுமதிக்குமாறு, தேர்வுத் துறையிடம், டி.ஆர்.பி., கேட்டது. ஆனால், 'வரும், 20ம் தேதி வரை, தேர்வுப் பணிகள் இருப்பதால், முதன்மை கல்வி அலுவலர்களை அனுமதிக்க முடியாது' என, தேர்வுத் துறை தெரிவித்து விட்டது. இதனால், வேறு வழியின்றி, தேர்தலுக்குப்பின், இம்மாத கடைசியில், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

Monday, March 31, 2014

ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட். படிப்பு: விண்ணப்பிக்க மே 2 கடைசி தேதி


மத்திய அரசு கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட். படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு (சி.இ.இ.-2014) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 2-ஆம் தேதி கடைசி நாளாகும். மத்திய அரசின் மண்டல கல்வி நிறுவனங்கள் (ஆர்.ஐ.இ.) சார்பில் இந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆஜ்மிர், போபால், புவனேஸ்வர், மைசூர், ஷில்லாங் ஆகிய 5 இடங்களில் மத்திய கல்வியியல் நிறுவனம் அமைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கல்விக்கான மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்.சி.இ.ஆர்.டி.) கீழ் இந்தக் கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இந்த 5 கல்வி நிறுவனங்களில் மட்டுமே ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி., பி.எட். படிப்பு வழங்கப்படுகிறது. பிசிக்கல் சயின்ஸ், பயோலஜிக்கல் சயின்ஸ் ஆகிய இரண்டு பிரிவுகளில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது.

இந்தப் படிப்பை முடிப்பவர்கள் கேந்திரிய வித்யா பவன், தில்லி பப்ளிக் பள்ளி உள்ளிட்ட மத்திய அரசுப் பள்ளிகளிலும், மாநில அரசுப் பள்ளிகளிலும் அறிவியல் ஆரிசிரியர்களாக பணியில் சேர முடியும். மேலும், எம்.எஸ்சி. மற்றும் எம்.எட். படிப்புகளையும் மேற்கொள்ள முடியும். பிளஸ்-2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுபவர்கள் இந்தப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். 2012, 2013-ஆம் ஆண்டுகளில் பிளஸ்-2 தேர்வை முடித்தவர்களும், 2014-ல் பொதுத் தேர்வு எழுதியிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். தமிழகம், புதுவை, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் லட்சத் தீவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மைசூரில் உள்ள ஆர்.ஐ.இ. கல்வி நிறுவனத்தில் மட்டுமே படிப்பில் சேர முடியும்.

இங்கு இந்த படிப்புகளில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. நுழைவுத் தேர்வு மே 31-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலமும், தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் மூலம் பதிவு செய்து விண்ணப்பத்தைப் பெற ஏப்ரல் 25 கடைசி தேதியாகும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மே 2 கடைசி தேதி. நுழைவுத் தேர்வு முடிவு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும். சேர்க்கை ஜூலை 7-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் விவரங்களை    www.rieajmer.ac.in, www.ncert.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

தேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை : அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை


""தேர்தல் பணிக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள ஊழியர்கள், பணிக்கு வராவிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தில், வரும், 24ம் தேதி, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும், ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 60,418 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரம், குடிநீர் : இனி, புதிதாக ஓட்டுச்சாவடி அமைக்கப்படாது.

ஒரு ஓட்டுச் சாவடியில், அதிகபட்சம், 1,500 வாக்காளர்கள் இருப்பர். புதிதாக வாக்காளர் சேர்க்கப்படும் போது, அந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. "ஓட்டுச் சாவடிகளில், மின்சாரம், குடிநீர், கழிப்பறை வசதி இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்காக, படிக்கட்டு அருகே சாய்தளம் அமைக்க வேண்டும்' என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிரந்தரமாக, சாய்தளம் அமைக்க முடியாத ஓட்டுச் சாவடிகளில், தற்காலிக சாய்தள வசதி ஏற்படுத்த வேண்டும். தேர்தலுக்காக, 70 ஆயிரம் கன்ட்ரோல் யூனிட்கள், 1.25 லட்சம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. ஒரு தொகுதியில், அதிகபட்சமாக, 63 வேட்பாளர்கள் போட்டியிட்டால், நான்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முடியும்

. அதற்கு மேல், வேட்பாளர்கள் போட்டியிட்டால், ஓட்டுச்சீட்டு பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவைப்பட்டால், கேரளா, கர்நாடகம் என, அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும். தேர்தல் பணியில், 3 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு, முதல் கட்ட பயிற்சி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பயிற்சி, வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதும் நடத்தப்படும். ஒழுங்கு நடவடிக்கை : மூன்றாவது கட்ட பயிற்சி, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள் நடைபெறும். தேர்தல் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஊழியர், பணிக்கு வராமல் இருந்தால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மீது, குற்ற வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் விதிகள் உள்ளன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் குடும்பங்களின் ஒரு லட்சம் ஓட்டுகள் கட்சிகளுக்கா, நோட்டோவுக்கா?

   சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காண வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினரின், குடும்பத்தினர் ஒரு லட்சம் பேர், லோக்சபா தேர்தலில், 'நோட்டா'விற்கு ஓட்டு போட முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில், ஐந்தாவது சம்பள கமிஷன் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை சம்பளம் 6,750 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு 9,000 ரூபாயாகவும், முதுகலை ஆசிரியர்களுக்கு 10,500 ரூபாயாகவும் இருந்தது.இதன்பின் அமல்படுத்தப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனில், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை சம்பளம், 5,200 ரூபாயாகக் குறைக்கப்பட்டது.

பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் சம்பளம், உரிய விகிதத்தில் அதிகரிக்கப்பட்டது. இதற்கு, இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்ததாக, அப்போது காரணம் கூறப்பட்டது. ஆனால், தி.மு.க., ஆட்சியின் போது, மாநில அரசை எதிர்த்து, கோர்ட்டிற்கு சென்ற இடைநிலை ஆசிரியர்கள், 'மாநில மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்' என்ற கோர்ட் உத்தரவு பெற்றதற்காக, பழிவாங்கும் நோக்கில் சம்பளத்தில், 'கை' வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.இதில், 7,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், இதுவரை அவர்கள் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை. பின், அ.தி.மு.க., ஆட்சியின் போது, ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற, 9,564 இடைநிலை ஆசிரியர்கள், 2012ல் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கும், 5,200 என்று தான் அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையில், தமிழகம் முழுவதும் மொத்தம், 17 ஆயிரம் ஆசிரியர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தான் வரும் தேர்தலில், 'நோட்டோ'விற்கு (யாருக்கும் ஓட்டளிக்கவில்லை) ஓட்டளிக்க முடிவு செய்துள்ளனர்.

துணை வாக்காளர் பட்டியல் ஏப்., 7ம் தேதி வெளியீடு


தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளிலும், துணை வாக்காளர் பட்டியல், வரும் 7ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், கடந்த அக்டோபரில் வாக்காளர் பட்டியல், திருத்தப் பணி நடந்தது. ஜனவரியில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், ஏராளமானோர் பெயர் விடுபட்டிருப்பதாக, புகார் வந்ததை தொடர்ந்து, கடந்த மாதம், 9ம் தேதி, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மேலும், 25ம் தேதி வரை, தாலுகா அலுவலகங்களிலும், மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மொத்தம், 13 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்து, புதிதாக வாக்காளர் பெயர் சேர்க்கப்பட்டு, துணை வாக்காளர் பட்டியல், வரும், 7ம் தேதி வெளியிடப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார்.

பெட்ரோல் விலை ரூ.1 குறைப்பு


சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்ததையடுத்து, பெட்ரோல் விலையை, லிட்டருக்கு 75 காசுகள் குறைக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. உள்ளூர் வரிகளும் குறைக்கப்படுகிறது. இதனால், சென்னை யில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் குறைந்தது. இதனால் ஒரு லிட்டர் விலை 76.48 ரூபாயில் இருந்து 75.49ரூபாயாக குறைந்து நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. டீசல் விலையிலும், சமையல் காஸ் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை.

Saturday, March 29, 2014

முன்கூட்டியே எஸ்.எஸ்.எல்.சி., "ரிசல்ட்' ஜூன் 16ல் பிளஸ் 1 வகுப்பு துவக்கம்


எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு, துவங்கிய நிலையில், தேர்வு முடிவு, முன்கூட்டியே வெளியிடப்பட்டு, ஜூன், 16ம் தேதி, பிளஸ் 1 வகுப்புக்கும், மற்ற வகுப்புகளுக்கு, ஜூன், 2ம் தேதியும், பள்ளிகள் திறந்து வகுப்பு எடுக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு, துவங்கி நடந்து வருகிறது. வரும் ஏப்ரல், 9ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 தேர்வை போலவே, எவ்வித முறைகேடுக்கும் இடம் தராமல் நடத்த, தேர்வுத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல், விடைத்தாள் திருத்தும் பணிகளையும் துரிதப்படுத்தி, தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட ஏற்பாடு நடக்கிறது. கடந்த, 2012 -- 13ம் கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு, கடந்த, மே, 31ம் தேதி வெளியிடப்பட்டு, ஜூன், 24ம் தேதி முதல், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பு எடுக்கப்பட்டது.

ஆனால், நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பு, முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த, ஜூன் மாதம்வழக்கமாக, பிளஸ் 1 தவிர மற்ற வகுப்பு பள்ளிகள் திறக்க வேண்டி இருந்தும், கோடை வெப்பம் காரணமாக, துவக்க, உயர்நிலை, பிளஸ் 2 வகுப்புக்கு, கடந்த, ஜூன், 10ம் தேதி திறக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு பணிகளை விரைவாக முடித்து, முன்கூட்டியே தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு, பிளஸ் 1 வகுப்பும், முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகள் கூறியதாவது: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு, லோக்சபா தேர்தல் முடிவு வெளியிட்ட பின் அறிவிக்கப்படும். கடந்த, ஜூன், 24ம் தேதி, பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்தி, வகுப்பு துவங்கப்பட்டது.

நடப்பு கல்வி ஆண்டுக்கு, வரும், ஜூன், 16ம் தேதி, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்தி, வகுப்பு துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு, ஜூன், 2ம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி.,க்கு மட்டும், நடப்பு கல்வி ஆண்டில், எட்டு நாள் முன்னதாக, பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

துவக்க பள்ளியில் தட்டுத்தடுமாறும் ஆங்கிலவழி கல்வி : வரும் கல்வியாண்டிலும் முக்கியத்துவம் தர உத்தரவு-dinamalar


தமிழகத்தில், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 14 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியரும், 1.4 லட்சம் ஆசிரியர்களும் உள்ளனர். ஏராளமான இலவச பொருட்கள் வழங்கியும், புதிய கல்வி முறைகளை அமல்படுத்தியும், மாணவர் சரிவை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவும், மாணவர் எண்ணிக்கை அங்கு பல மடங்கு பெருகுவதும் நடந்து வருகிறது. தனியார் பள்ளி மோகம் ஆங்கிலவழிக்கல்வி என்பது மட்டுமின்றி, மாணவர்கள் மீதான அக்கறையும், அந்த பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி கேட்கக்கூடிய வாய்ப்பும் இருப்பதால், கூலித்தொழிலாளி குடும்பத்தை சேர்ந்தவர் கூட, தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர். கடந்த ஆண்டு, ஆங்கிலவழிக்கல்வி என, அரசு பள்ளியில் தனிப்பிரிவு துவக்கினால், அதில் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களை, அங்கு கொண்டு வந்து பெற்றோர் சேர்க்கலாம் என, அரசும், கல்வித்துறை அலுவலர்களும் நினைத்திருந்தனர்.

    ஆனால், அப்படியெதுவும் நடக்காததால், ஆங்கிலவழிக்கல்விக்கு மவுசு இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அரசு பள்ளியில் ஏற்கனவே, தமிழ் வழிக்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களை, ஆங்கிலவழி கல்விக்கு மாற்றியது. இதை அரசு பள்ளியில், ஒரு லட்சம் மாணவர்கள் ஆங்கிலவழிக்கல்வியில் புதிதாக சேர்ந்துள்ளனர் என, பெருமிதமாக அறிவித்தனர். ஆனால், தமிழ்வழி கல்வியில், ? லட்சம் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்த உண்மையை யாரும் கூற முன்வரவில்லை. பெயரளவில், ஆங்கிலவழி கல்வி என, அறிவித்ததுடன் சரி, அதற்கு பின், அவர்களுக்கான தனி வகுப்புகளோ, பயிற்சிகளோ, ஆசிரியர்களோ வழங்கப்படவில்லை. தவறான கொள்கை தமிழ்வழிக்கல்வி, ஆங்கிலவழிக் கல்வி மாணவர்கள் அனைவரையும் ஒரே வகுப்பறையில், அமர வைத்து, அதே ஆசிரியர் மூலம் வழக்கம் போல், பாடம் நடத்தும் பணி நடந்து வந்தது.

இதனால், அரசு பள்ளிகளின் தரம் குறித்தோ, ஆங்கிலவழிக்கல்வி குறித்தோ, பெற்றோரின் எண்ணத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், வரும் கல்வியாண்டில், ஆங்கிலவழிக்கல்வியில் மேலும் அதிக கவனம் செலுத்தி, மாணவர்களை ஆங்கிலவழிக் கல்வியில் கூடுதலாக சேர்க்க கல்வித்துறை அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டில் நடந்த அதே, புள்ளிவிவர, "மேஜிக்' மட்டும் பெருமிதமாக இருக்கலாமே தவிர, மொத்த மாணவர் எண்ணிக்கையில் சரிவு இருக்கத்தான் செய்யும் என்கின்றனர் ஆசிரியர்கள். அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:

தனியார் பள்ளிகளில் சேர்க்க வழியில்லாத பெற்றோர் மட்டுமே, அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர். மற்றபடி, தனியார் பள்ளியில் சேர்த்தபின், அரசு பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வியில் கொண்டு வந்து சேர்க்க யாரும் தயாரில்லை. ஏனெனில், பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்களின் நடத்தையால், பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டனர். குறிப்பாக ஈராசிரியர் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் பெரும்பாலும், மருத்துவ விடுப்பில் இருப்பதும், மற்றொரு ஆசிரியர் பள்ளி நிர்வாகத்துக்கு, அலுவலகத்துக்கு அலைவதும் சரியாக இருக்கிறது. பெரும்பாலான நாளில் ஆசிரியர் இல்லாத நிலை, பல பள்ளிகளில் உள்ளது. ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் ஆங்கில வழி துவக்கினால் மட்டும் எவ்வித முன்னேற்றமும் வந்துவிட போவதில்லை. மாறாக, தற்போது அரசு பள்ளிகளில் மட்டும் இருந்து வரும், தமிழ்வழிக்கல்வி, இன்னும் ஓரிரு ஆண்டுகளில் காணாமல் போய்விடவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்