இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, March 11, 2014

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பு: மதுரையில் இன்று துவக்கம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மதுரையில், இன்று துவங்குகிறது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உட்பட ஏழு மாவட்டத்தினர், இதில் பங்கேற்கின்றனர். இத்தேர்வின் தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்பட்டதன் அடிப்படையில், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், 82 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்கள் 3,580 பேர். இவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில், எம்.ஏ.வி.எம்.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், சனி மற்றும் ஞாயிறு தவிர, மார்ச் கடைசி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 வரை நடக்கிறது.

ஒவ்வொரு நாளும், 240 பேர் பங்கேற்கின்றனர். மொத்தம் 10 'போர்டுகள்' அமைக்கப்பட்டுள்ளன. டி.ஆர்.பி., இணை இயக்குனர் உமா முன்னிலையில் இப்பணிகள் நடக்கின்றன. உரிய சான்றிதழ்களுடன், தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமையில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

DEE - WORKING DAYS & TERM - III EXAMINATION DATES MODIFICATION REG PROC

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

மார்ச்/ஏப்ரல் 2014-ல் நடைபெறவுள்ள இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 11.03.2014 அன்று பிற்பகல் முதல் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Monday, March 10, 2014

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முறையே 26.02.2014, 06.03.2014 ஆகிய நாள்களில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டமைக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதற்கான சான்று பெறுதல் சார்பான தொடக்கக்கல்வி இயகுனரின் செயல்முறை

போட்டோவுடன் அடையாள அட்டை: ஆசிரியர்களுக்கு வழங்க உத்தரவு

   தமிழகத்தில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு போட்டோவுடன் அடையாள அட்டை, தமிழ், ஆங்கிலத்தில் வழங்கப்பட வேண்டும், என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 32 மாவட்டங்களில், 64 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை அரசுப்பள்ளிகள் 36 ஆயிரத்து 813, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் 8 ஆயிரத்து 395, சுயநிதிப்பள்ளிகள், 11,365 உள்ளன.

இதில் மொத்தமாக 56,573 பள்ளிகள் உள்ளன. இதில் பணியாற்றும் ஆசிரியர்கள் 56 ஆயிரம் பேர் உள்ளனர். மொத்தமாக மாணவர்கள் 1.35 கோடி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் போட்டோவுடன் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். கடந்த ஆண்டுகளில் வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே அடையாள அட்டையில் இடம் பெற்றிருந்தது. தற்போது புதியதாக வழங்கப்படும் அடையாள அட்டைகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இடம் பெற்றிருக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான அடையாள அட்டை வழங்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறையின் செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

ஏப்., 23, 24 தேர்வுகளை தேர்தலுக்கு பின் நடத்த முடிவு

மாநிலம் முழுவதும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, ஏப்., 23, 24ல் நடத்த வேண்டிய பொதுத்தேர்வை, தேர்தலுக்குப் பின் நடத்த, தொடக்கக் கல்வித் துறை, முடிவு செய்துள்ளது. தற்போது, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடந்து வருகிறது. வரும், 26ல் இருந்து, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்வு துவங்குகிறது. இதற்கிடையே, இதர வகுப்பு மாணவ, மாணவியருக்கான, பொதுத்தேர்வும் நடக்கிறது.

பள்ளிக் கல்வித் துறை கீழ் இயங்கும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 22 உடன், அனைத்து வகுப்புகளுக்கான தேர்வும் முடிந்துவிடுகிறது. எனவே, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு, ஏப்ரல் இறுதி வரை, வேலை நாள். இதனால், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, இந்த மாத இறுதியில் துவங்கி, ஏப்., இறுதி வரை, பொதுத்தேர்வு நடத்த, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏப்., 23, 24 தேதிகளிலும், தேர்வு அட்டவணை உள்ளது. பெரும்பாலான ஓட்டுச்சாவடிகள், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் தான் அமைக்கப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு, ஏப்., 23, 24ல் நடக்க உள்ள தேர்வுகளை, தேர்தலுக்குப் பின் நடத்த, தொடக்கக் கல்வித் துறை, முடிவு செய்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை, ஓரிரு நாளில், அனைத்து பள்ளிகளுக்கும், இயக்குனரகம் தெரிவிக்கும்.

6, 7, 8, 9, 11-ம் வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 3-ல் தொடக்கம்: கால அட்டவணை வெளியீடு

 
   தமிழகம் முழுவதும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6, 7, 8, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் எதிரொலி பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இயற்பியல், பொருளாதார பாட தேர்வுகள் திங்கட்கிழமை (இன்று) நடக்கின்றன. மார்ச் 25-ம் தேதி தேர்வுகள் முடிவடைந்து மறுநாள் (மார்ச் 26) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு ஏப்ரல் 9-ம் தேதி நிறைவடையும்.

  தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பள்ளிகளில் மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படுமா, அல்லது தள்ளிப்போகுமா என்ற கேள்வி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6, 7, 8, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வும் (3-வது பருவத் தேர்வு), 11-ம் வகுப்பு ஆண்டுத் தேர்வும் ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கி 16-ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக இந்த வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் இறுதிவாக்கில்தான் முடிவடையும். மக்களவைத் தேர்தலை கருத்தில்கொண்டு ஆண்டுத் தேர்வு இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படுகிறது. தொடக்கப் பள்ளிகளுக்கு எப்போது? செய்முறைத் தேர்வு மார்ச் 25-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். 11-ம் வகுப்புக்கான ஆண்டுத் தேர்வும் இதேபோல் ஏப்ரல் 3-ல் தொடங்கி 16-ம்தேதி நிறைவடையும். தொடக்க கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு ஆண்டுத் தேர்வுகள் எப்போது தொடங்கி எப்போது முடிவடையும் என்பது திங்கள்கிழமை (மார்ச் 10) அறிவிக்கப்படுகிறது.

Saturday, March 08, 2014

மக்களவைத் தேர்தல்: ஏப்ரல் 16-க்குள் பள்ளித் தேர்வுகளை முடிக்க உத்தரவு

   மக்களவைத் தேர்தலையடுத்து, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தவிர மீதமுள்ள 6,7,8,9, 11 ஆகிய வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். பிளஸ் 2 தேர்வு மார்ச் 25-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 3 முதல் 16-ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஏப்ரல் 22-ஆம் தேதிக்குப் பிறகு இந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, ஏப்ரல் கடைசியில்தான் பள்ளித் தேர்வுகள் நிறைவுபெறும். தேர்தல் வாக்குப்பதிவையடுத்து இந்த ஆண்டு சில தினங்கள் முன்கூட்டியே தேர்வுகள் முடிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேர்வுகள் தொடர்பாக திங்கள்கிழமை முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஓரிரு நாளில் கட்டணம் வழங்கப்படும்: பிளஸ் 2 விடைத்தாள்கள் இந்த ஆண்டு தேர்வு மையங்களிலிருந்து அரசு சார்பில் பணியமர்த்தப்படும் வாகனங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.

இதற்கான கட்டணம் ஓரிரு நாளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் சார்பில் பிளஸ் 2 விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பான மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய தேர்வுத்துறை அதிகாரிகள், விடைத்தாள்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கான கட்டணம் வழங்குவது தொடர்பான பரிந்துரை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் ஓரிரு நாளில் இதற்கான தொகை திருப்பி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். பள்ளிகளின் மூலம் 8.26 லட்சம் பேரும், தனித்தேர்வர்களாக 53 ஆயிரம் பேரும் பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர். இவர்களின் விடைத்தாள்களைத் திருத்துவதற்காக, மாநிலம் முழுவதும் 66 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 விடைத்தாள்களை மார்ச் 20-ஆம் தேதிக்குப் பிறகு மதிப்பீடு செய்ய ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளை பசுமைப்படுத்த மரக்கன்றுகள் நட உத்தரவு

  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வன துறை மூலம், மொத்தம், 3.76 லட்சம் மரக்கன்றுகள் நட, பள்ளிக்கல்வி துறை இயக்குனர், ராமேஷ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும், பருவமழை பொழிய தவறியதால், சென்னை தவிர, பிற மாவட்டங்கள், வறட்சி மாவட்டங்களாக, தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், தமிழக அரசு, வன துறை மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பசுமைபடுத்தும் நோக்கத்துடன், மரக்கன்றுகள் நட, பள்ளிக்கல்வி துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கும், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில், வன துறை மூலம், 3.76 லட்சம் மரக்கன்று, என்.ஜி.ஓ.,க்கள் மூலம், 13.94 லட்சம் மரக்கன்று பெற இயலும். அந்தந்த மாவட்ட வனத்துறை மற்றும், என்.ஜி.ஓ.,க்கள் மூலம் மரக்கன்று பெற்று, ஒவ்வொரு பள்ளியிலும் மரக்கன்று நட்டு, அதனை வகுப்பாசிரியர் பராமரிக்க வேண்டும். அதை பள்ளி தலைமை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளித்தலைமை ஆசிரியர் கூறியதாவது: பள்ளி வளாகங்களில், மரக்கன்று நட உத்தரவிடப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை பராமரிப்பதில் தான், பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல் உள்ளது. தமிழகம் முழுவதும், கடும் வறட்சி நிலவுவதால், தண்ணீர் பிரச்னை உள்ளது.

சில பள்ளி, பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம், தேவையான தண்ணீர் வசதி செய்துள்ளனர். சில பள்ளிகளில், இக்கழகத்தினர் ஆர்வமின்றி, தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. பள்ளிக்கே தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், மரக்கன்றுகளை எவ்வாறு பராமரிப்பது இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோவுடன் அடையாள அட்டை : அரசு பணியாளர்களுக்கு உத்தரவு

   "அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், 64 கல்வி மாவட்டங்களாக பிரித்துள்ளனர். தமிழகத்தில், அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என மொத்தம், 36,813 பள்ளிகளும், 8,395 நிதியுதவி பள்ளிகளும், 11,365 சுயநிதி பள்ளி என மொத்தம், 56,573 பள்ளி உள்ளன. இந்த பள்ளிகளில், கல்வி பயிலும், 1.35 கோடி மாணவர்களுக்கு, 56,000 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் வரும், அனைத்து துறையினருக்கும், அரசு முதன்மை செயலர் சபிதா அவசர சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் கீழ், அனைத்து அரசு பணியாளர்களும், அலுவலகத்தில் பணியாற்றும் நேரங்களில், தவறாமல் அவர்களது போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை அணிதல் வேண்டும், என ஆணையிட்டுள்ளார். முன்பு இருந்த அடையாள அட்டையில், அரசு பணியாளர்களது பெயர் மற்றும் பதவி ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. அந்த முறையை நவீனப்படுத்தும் விதமாக, அடையாள அட்டையில், பணியாளர்களின் பெயர் மற்றும் பதவியை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றின் கீழ் ஒன்று இடம் பெறுமாறு மாற்றி அமைத்து, அடையாள அட்டை வழங்க, அனைத்து துறை தலைவர்களுக்கும், கலெக்டருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை துவக்கம

்  பொறியியல் கல்லூரிகளில், 2014 - 15ல், பகுதி நேர பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான, விண்ணப்பப் படிவங்கள், இம்மாதம், 19ம் தேதியில் இருந்து, அடுத்த மாதம், 7ம் தேதி வரை, 10 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, சேலம், திருநெல்வேலி, பர்கூரில் உள்ள, அரசு பொறியியல் கல்லூரி; காரைக்குடி அழகப்பா கல்லூரி; வேலூர் பெரியார் கல்லூரி; கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி, இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி; மதுரை தியாகராஜர் கல்லூரி; சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆகியவற்றில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும். நேரடியாக அல்லது அஞ்சல் மூலமாக பெற விரும்புவோர், 300 ரூபாய்க்கான கேட்பு வரைவோலையை, "செயலர், பகுதி நேர பி.இ., அல்லது பி.டெக்., சேர்க்கை, கோவை' என்ற பெயரில், கோவையில் காசாக்கும் வகையில் எடுத்து, விண்ணப்ப மையங்களில், விண்ணப்பங்களை பெறலாம்.

தமிழகத்தை சேர்ந்த பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள், 150 ரூபாய் செலுத்தினால் போதும். தபாலில் விண்ணப்பங்களை பெற விரும்புவோர், கேட்பு வரைவோலையுடன், சுய விலாசமிட்ட தபால் உறையில், 50 ரூபாய்க்கு, தபால் தலை ஒட்டி, "செயலர், பகுதி நேர பி.இ., மற்றும் பி.டெக், சேர்க்கை, இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை' என்ற முகவரிக்கு, கடிதம் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். மாணவர்கள், மே மாதம், கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். இதற்கான அழைப்பு, உரியவர் களுக்கு, தபால் மூலம் தெரிவிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஏப்ரல், 7ம் தேதிக்குள், அனுப்பி வைக்க வேண்டும்.

Thursday, March 06, 2014

TETOJAC Tiruppur

திருப்பூர், -

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 2,119 தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதாக மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி (பொறுப்பு) யதுநாதன் கூறினார்.

வேலை நிறுத்த போராட்டம்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டமும், ஆர்ப்பாட்டமும் தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த ஆசிரியர்கள் திருப்பூர் டவுன்ஹால் அருகே உள்ள வடக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு செல்வகுமார் தலைமை தாங்கினார். ஜோசப் முன்னிலை வகித்தார். ராஜ்குமார் வரவேற்றார். ஜெயலட்சுமி, ராமசாமி, செந்தில்வடிவு, மணிகண்ட பிரபு, ராஜசேகரன், பாலசுப்பிரமணியம், கனகராஜா, கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார் கள். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மோகன் நன்றி கூறினார்.

இது குறித்து தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். மாநில தலைமை குழு எடுக்கும் முடிவுக்கு ஏற்றபடி அடுத்தகட்ட போராட்டம் நடைபெறும் என்றார்.

ஒருநாள் சம்பளம் பிடித்தம்

தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி (பொறுப்பு) யதுநாதனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு ஒன்றியத்தில் 90 பேரும், வடக்கு ஒன்றியத்தில் 237 பேரும், அவினாசி ஒன்றியத்தில் 299 பேரும், பல்லடம் ஒன்றியத்தில் 238 பேரும், பொங்கலூர் ஒன்றியத்தில் 174 பேரும், உடுமலை ஒன்றியத்தில் 236 பேரும், குடிமங்கலம் ஒன்றியத்தில் 62 பேரும், மடத்துக்குளம் ஒன்றியத்தில் 103 பேரும், தாராபுரம் ஒன்றியத்தில் 100 பேரும், குண்டடம் ஒன்றியத்தில் 87 பேரும், மூலனூர் ஒன்றியத்தில் 103 பேரும், வெள்ளகோவில் ஒன்றியத்தில் 183 பேரும், காங்கயம் ஒன்றியத்தில் 125 பேரும், ஊத்துக்குளி ஒன்றியத்தில் 82 பேரும் என மொத்தம் 2 ஆயிரத்து 119 ஆசிரியர்கள் இன்று (நேற்று) வேலைக்கு வரவில்லை.

இவர்கள் அனைவருக்கும் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கான அறிக்கை பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆசிரியர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை.

இவ்வாறு தொடக்கக்கல்வி அதிகாரி (பொறுப்பு) யதுநாதன் தெரிவித்தார்.



இடைநிலை ஆசிரியர்கள் அடையாள வேலை நிறுத்தம் - Dinamani


    தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 2,110 ஆசிரியர்கள் வியாழக்கிழமை ஒருநாள் விடுப்பு எடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோஜேக்) சார்பில் வியாழக்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1,230 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விடுப்பு எடுத்து, அந்தந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  திருப்பூரில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்(வடக்கு) அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு, தமிழக ஆசிரியர் கூட்டணி செயலாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார். ஜோசப் முன்னிலை வகித்தார். ஜெயலட்சுமி, மணிகண்டபிரபு, ராஜசேகர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு பகுதியைச் சேர்ந்த தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.   இதில், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  ஆசிரியர்களின் ஒட்டுமொத்த விடுப்புக் குறித்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்(பொறுப்பு)

யதுநாதனிடம் கேட்டபோது, மாவட்டம் முழுவதும் உள்ள 1,230 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 4,350 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், 2,110 ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தனர். இருப்பினும், ஆசிரியர் பயிற்றுநர்கள், அனைவருக்கும் கல்வித் திட்ட பகுதிநேர ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர்கள் என 395 ஆசிரியர்கள் மூலமாக தொடக்கப் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்றன. விடுப்பு எடுத்த ஆசிரியர்களுக்கு அன்றைய ஒருநாள் ஊதியம் வழங்கப்படமாட்டாது என்றார்.

பி.எப். வட்டி விகிதம் 8.75 சதவீதமாக உயர்வு

மத்திய அரசு ஒப்புதல் நடப்பு நிதியாண்டில், பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கான (இ.பி.எப்.) வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாக உயர்த்த கடந்த ஜனவரி 13–ந் தேதி மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி தலைமையில் நடைபெற்ற இ.பி.எப்.ஓ. அறங்காவலர்கள் வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அம்முடிவு, மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், அதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

சி.சி.இ., முறை மதிப்பெண்களை மட்டுமே அதிகரித்துள்ளது

பள்ளிகளின் தரம் இன்னும்முன்னேற்றமடையாமலேயே உள்ளது என்று சி.பி.எஸ்.இ., மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில் தெரியவந்துள்ளது. இதன்படி, 49.8% பள்ளிகள் மட்டுமே சராசரியான தரநிலையில் உள்ளன என்றும் 9.1% பள்ளிகளின் தரம் முன்னேற்றமடைய வேண்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு CCE எனப்படும் Continuous and Comprehensive Evaluation அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக, மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.  கடந்த 2010ம் ஆண்டு முதல் தேர்ச்சி விகிதம் 9.48% என்பதாக அதிகரித்தது. அதன்மூலம் 2013ம் ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி 98.76% என்ற சாதனை அளவை எட்டியது.ஆனால், இந்த CCE முறை மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களைத்தான் அதிகரித்துள்ளதே தவிர, கற்பித்தலை மேம்படுத்தவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.