இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, February 24, 2014

"டெட்' தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு

  ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பின்னர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனத் தெரிகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும்.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த மதிப்பெண் தளர்வு 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. மதிப்பெண் தளர்வை அடுத்து 46 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றனர். முன்னதாக, 90 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கும் ஜனவரி மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டுவிட்டது

. பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற உள்ளதால், கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

DOUBLE DEGREE HIGH COURT -JUDGEMENT COPY

அதிமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியல்:


1.திருவள்ளூர் (தனி)- பி.வேணுகோபால்
2.வேலூர் - செங்குட்டுவன்
3.சேலம்- வி.பன்னீர்செல்வம்
4.தென் சென்னை- ஜெயவர்த்தன்
5.மத்திய சென்னை- விஜகுமார்
6.தூத்துக்குடி- ஜெயசிங் தேவராஜ் நட்டர்ஜி
7.தென்காசி (தனி)- வி.சாந்தி முருகேசன்
8.திருநெல்வேலி- பிரபாகரன்
9.கன்னியாகுமரி- ஜான் தங்கம்
10.விழுப்புரம் (தனி)- ராஜேந்திரன்
11.சிதம்பரம் (தனி)- சந்திரகாசி
12.மயிலாடுதுறை- பாரதி மோகன்
13.நாகப்பட்டினம் (தனி)- கோபால்
14.காஞ்சிபுரம்(தனி)- மரகதம் குமரவேல்
15.மதுரை- கோபாலகிருஷ்ணன்
16.தேனி- பார்த்திபன்
17.விருதுநகர்- ராதாகிருஷ்ணன்
18.ராமநாதபுரம்- அன்வர்ராஜா
19.அரக்கோணம்- கோ.அரி
20.கிருஷ்ணகிரி- அசோக்குமார்
21.வடசென்னை- டி.ஜி.வெங்கடேஷ்
22.ஸ்ரீபெரும்புதூர்- ராமச்சந்திரன்
23.தர்மபுரி- மோகன்
24.திருவண்ணாமலை- வனரோஜா
25.ஆரணி- ஏழுமலை
26.கள்ளக்குறிச்சி- காமராஜ்
27.நாமக்கல்- சுந்தரம்
28.ஈரோடு- செல்வகுமார் சின்னையன்
29.திருப்பூர்- சத்யபாமா
30.கோவை- நாகராஜன்
31.நீலகிரி (தனி) - கோபாலகிருஷ்ணன்
32.பொள்ளாச்சி- மகேந்திரன்
33.திண்டுக்கல்- உதயகுமார்
34.கரூர்- தம்பிதுரை
35.திருச்சி- ப.குமார்
36.பெரம்பலூர்- மருதை ராஜன்
37.கடலூர்- அருண்மொழி தேவன்
38.தஞ்சை- பரசுராமன்
39.சிவகங்கை- செந்தில்நாதன்
40.புதுச்சேரி- எம்.வி.ஓமலிங்கம்

Saturday, February 22, 2014

"ஆன்-லைன்' குளறுபடியை தவிர்க்க, தேர்வுத்துறை அமைத்த சிறப்பு மையங்கள்

தேர்வுகளுக்காக, மாணவ, மாணவியர், தனியார், "பிரவுசிங்' மையங்களில் பதிவு செய்யும் போது ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க, முதல் முறையாக, தேர்வுத்துறை, 32 மாவட்டங்களிலும், சிறப்பு மையங்களை அமைத்து எடுத்த நடவடிக்கை, மாணவர் மத்தியில், வரவேற்பை பெற்று உள்ளது. அதே நேரத்தில், "வருமானம் போய்விட்டதே' என, "பிரவுசிங்' மையங்கள் புலம்புகின்றன. தேர்வுத்துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் பங்கேற்க, "ஆன்-லைன்' முறையில், பதிவு செய்ய வேண்டி உள்ளது. இதற்காக, மாணவ, மாணவியர், "பிரவுசிங்' மையங்களில் குவிகின்றனர். பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவது, புகைப்படத்தை, "ஸ்கேன்' செய்து, பதிவேற்றம் செய்தல் போன்ற பணிகளை, இணைய தள மைய பணியாளர்கள் செய்கின்றனர்.

இதற்காக, 200 ரூபாய் முதல், பலவாறாக கட்டணம் வசூலிக்கின்றனர். இந்நிலையில், பிளஸ் 2, "தட்கல்' திட்டத்திற்காக, தேர்வுத்துறை, புதிய நடவடிக்கை எடுத்தது. "தனியார் மையங்களில், பதிவு செய்யக்கூடாது. தேர்வுத்துறை அமைத்துள்ள சிறப்பு மையங்கள் மூலமாக மட்டுமே, பதிவு செய்ய வேண்டும்' என, தேர்வுத்துறை அறிவித்தது. அதன்படி, 32 மாவட்டங்களிலும், தேர்வுத்துறையே, சிறப்பு மையங்களை அமைத்து, 50 ரூபாய் கட்டணத்தில், மாணவரின் விவரங்களை பதிவு செய்ய, நடடிக்கை எடுத்தது. இதனால், தனியார் இணையதள மையங்கள் வெறிச்சோடின. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர்,

தேவராஜன் கூறியதாவது: பணத்தை வசூலிப்பது மட்டுமே, பிரவுசிங் சென்டர் களின் குறியாக உள்ளது. மாணவரின் விவரங்களை, சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும் என்பதில், அக்கறை இல்லை. பிறந்த தேதியை மாற்றி பதிவது, புகைப்படத்தை, சரியான முறையில், "ஸ்கேன்' செய்யாதது, முகவரியை பதிவு செய்வதில் தவறு என, பல குழப்பங்களை செய்கின்றனர். இதனால், மாணவர் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்கவே, நேரடியாக, நாங்களே, சிறப்பு மையங்களை அமைத்தோம். இதன்மூலம், மாணவர் விவரங்கள், சரியாக பதிவு செய்வது உறுதிப்படுத்தியது உடன், மாணவர்களுக்கான செலவு, 50 ரூபாயில் முடிந்து விடுகிறது. இவ்வாறு, இயக்குனர் தெரிவித்தார். தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ மையங்களில், பதிவு நடப்பதும், அதற்காக, குறைந்த கட்டணம் வசூலிப்பதும், மாணவர் மத்தியில், வரவேற்பை பெற்றுள்ளது. இனி, வரும் தேர்வுகளிலும், இதேபோன்று, சிறப்பு மையங்கள் அமைக்கவும், தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

டிட்டோஜாக் 6.3.14 வேலை நிறுத்ததிற்கான செயல்முறைகள்

Friday, February 21, 2014

NMMS - தேசிய திறனாய்வுத் தேர்வு 22.02.2014 அன்று நடைபெறுதம் நேரம் கீழ்கண்டவாறு மாற்றப்படுகிறது

முதல் தாள்        - 2.00 PM to 3.30 PM

இடைவேளை     -3.30 PM to 4.00 PM

இரண்டாம் தாள் - 4.00 PM to 5.30 PM

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுக்கு தயார் நிலையில் இருப்பது எப்படி? முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வு இயக்குனரகம் சுற்றறிக்கை

 எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு நடைபெற உள்ளதையொட்டி மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு விடைத்தாள்கள், உறைகள், போன்ற எழுதுபொருட்கள் அனைத்து எழுது பொருள் விநியோக மையங்களுக்கு கடந்த 17–ந்தேதி முதல் 19–ந்தேதி வரை அனுப்பப்பட்டுள்ளன. இந்த விடைத்தாள்கள் சரியாக கிடைத்துள்ளதை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும். முதன்மை கல்வி அதிகாரிகள், தேர்வுகள் சம்பந்தமாக தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை நடத்தி அவர்களுக்கு தேர்வுகள் தொடர்பாக தக்க அறிவுரை வழங்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விடைத்தாளுடன் முதல் பக்கத்தில் தைக்கக் கூடிய முதல் பக்க தாளை (டாப் ஷீட்) பெற்றுக் கொள்ள வேண்டும். விடை எழுத உள்ள தாள்கள் தலைமை ஆசிரியர்கள் உயிரியல் பாடம், கணக்கு பதிவியல் மற்றும் ஏனைய பாடத்திற்கான விடைத்தாள்கள், விடைத்தாள் இடப்பட வேண்டிய உறைகள், வரைபடங்கள், கிராப் ஷீட்கள் ஆகியவை சரியாக கிடைத்து விட்டதை உறுதி செய்ய வேண்டும். விடைத்தாளின் முகப்பு தாள்கள் அந்தந்த பாடத்திற்கு உரியதாக இருக்க வேண்டும். மாற்றி வைக்கக்கூடாது. அவ்வாறு மாற்றி தைத்தால் பிரச்சினை எழும். அது மட்டுமல்ல விடைத்தாள்களை அதற்கு உரிய உறைகளில் வைக்க வேண்டும். எனவே இந்த பணியில் தலைமை ஆசிரியர்கள் மிகுந்த கவனமாக இருந்து செயல்பட வேண்டும்.

ஆசிரியர்களின் பி.எட். கல்வித் தகுதியை பறிக்க முடிவ

    குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளை அரசு மிக முக்கியமான பிரச்னையாகப் பார்க்கிறது. இத்தகைய புகார்களுக்கு ஆளாகும் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 5 ஆசிரியர்கள் இவ்வாறு பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அரசுப் பணியிலிருந்து நீக்கப்படும் இந்த ஆசிரியர்கள் வேறு எங்கும் பணிபுரியாத வகையில் அவர்களை ஆசிரியர் பணியில் இருந்து தகுதி நீக்கம் செய்யவும், அவர்களது பி.எட். பட்டத்தைப் பறிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

குழந்தைகளிடம் விழிப்புணர்வு: பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகாமல் எவ்வாறு தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஆசிரியர்களின் மூலமாக பள்ளிக் குழந்தைகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த இலவச நோட்டுப் புத்தகங்களின் அட்டைகளிலும் வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. புதிய சாஃப்ட்வேர்: இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் 10 ஆயிரம் பேர் இந்த ஆண்டு புதிதாகப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பள்ளிகளில் இடையில் நின்றுவிடாமல் பள்ளிப் படிப்பை முடிப்பதை உறுதிசெய்யும் வகையில் புதிதாக சாஃப்ட்வேர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சாஃப்ட்வேர் மூலம் ஒவ்வொரு மாணவரையும் தொடர்ந்து கண்காணிக்க முடியும். மத்திய அரசு பதில் தரவில்லை: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மற்றும் நலிவடைந்தப் பிரிவுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கட்டணத்தை திருப்பிச் செலுத்த குறைந்தபட்சம் ரூ.25 கோடி தேவைப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். ஆனால், இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்றார் சபிதா.

இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு அறிவிப்பு

  பள்ளி கல்வி துறையில், இடைநிலை ஆசிரியர், 498 பேரை, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு செய்வதற்கான கலந்தாய்வு, "ஆன்-லைன்' முறையில், இன்று நடக்கிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், இந்த கலந்தாய்வு நடக்கிறது. மேலும், கடந்த ஆண்டு களில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, நேரடியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்த, 152 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு, இன்று, பிற்பகல், 2:30 மணிக்கு, முதன்மை கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி உச்சரிப்புக் கையேடு: முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது ஆங்கில திறனை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசுப் பள்ளிகளில் 6,917 ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. அந்தப் பிரிவுகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் திறன்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களுக்காக ஆங்கில மொழி உச்சரிப்பு வழிகாட்டிக் கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும், மாணவர்களும் இதைப் படிக்கும்போதே அதற்குரிய உச்சரிப்பு ஒலியையும், உச்சரிப்பில் அழுத்தம், இடைநிறுத்தம் போன்றவற்றை குறுந்தகட்டின் மூலம் கேட்டு ஆங்கில மொழி அறிவை வளர்த்துக்கொள்ளும் முறையில் வழிகாட்டி கையேடு உருவாக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 1,600 பள்ளிகளில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் இந்தக் கையேடு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த வழிகாட்டி கையேட்டை முதல்வர் ஜெயலலிதா வெளியிட, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பெற்றுக்கொண்டார். தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்காக ரூ.1.80 கோடி: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தந்தை, தாய் இறக்க நேரிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அந்த மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்படாமலிருக்க, அந்தக் குடும்பத்தில் உள்ள அனைத்து பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவு, பராமரிப்புச் செலவுக்காக ரூ.50 ஆயிரம் உதவித் தொகையில் நிரந்தர வைப்புத் தொகை நிதியாக வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார்.

2011-12, 2012-13 ஆம் கல்வியாண்டுகளில் 720 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் ரூ.3 கோடியே 60 லட்சம் வழங்கப்பட்டது. 2013-14 ஆம் ஆண்டில் 360 மாணவ, மாணவியருக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.50 ஆயிரம் உதவித் தொகைக்கான பத்திரத்தை வழங்கினார்.

செஸ் விளையாட்டு: மாணவ, மாணவியரின் சிந்திக்கும் திறமையையும், ஆற்றலையும் வளப்படுத்துவதற்காக 7 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களுக்கான செஸ் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 11 லட்சத்து 25 ஆயிரத்து 628 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களில் பல்வேறு பிரிவுகளில் 24 மாணவர்கள் வெற்றி பெற்றனர்.முதல் பரிசு பெற்றவர்களுக்கு தலா ரூ.1,200-ம், இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு தலா ரூ.800-ம், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.400-ம் என மொத்தம் ரூ.19 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இதன் அடையாளமாக ஒரு மாணவிக்கு ரூ.1,200 பரிசுத் தொகையை முதல்வர் வழங்கினார்.

அரசுத் தரப்பில் கால அவகாசம் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு, திட்டமிட்டப்படி போராட்டம் தொடரும் - டிட்டோஜாக் அதிரடி முடிவு


நேற்று தொடக்கக் கல்வி இயக்குனர் அளவில் நடைபெற்ற கூட்டத்திலும், இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு சபிதா அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னையில் கூடிய டிட்டோஜாக் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வருகிற மார்ச்-6ல் திட்டமிட்டபடி மிகப்பெரிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெர்றிகரமாக நடத்த டிட்டோஜாக் முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பிப்ரவரி 22சனியன்று பிற்பகல் 2 மணிக்கு பணி நியமன கலந்தாய்வு


ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பிப்ரவரி 22சனியன்று பிற்பகல் 2 மணிக்கு பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை.இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஏற்கனவே பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சான்றிதல் சரிபார்ப்பில் கலந்துகொண்ட TET 2012 தேர்வர்களில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் பிப்ரவரி 22 சனியன்று பிற்பகல் 2 மணிக்குகலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு,மற்றும் அனைத்து கல்விச்சான்றிதலுடன் எதேனும் ஒரு முதன்மைக் கல்வி அலுவலகதில் கலந்துகொள்ளலாம் நியமன ஆணை பெறுபவர்கள் முதல்வர் பிறந்த நாளான 24.02.14 ல் சேருவர்.எனவும்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பிப்ரவரி 22சனியன்று பிற்பகல் 2 மணிக்கு பணி நியமன கலந்தாய்வு


    ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பிப்ரவரி 22சனியன்று பிற்பகல் 2 மணிக்கு பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை.இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஏற்கனவே பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்நிலையில் செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சான்றிதல் சரிபார்ப்பில் கலந்துகொண்ட TET 2012 தேர்வர்களில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் பிப்ரவரி 22 சனியன்று பிற்பகல் 2 மணிக்குகலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு,மற்றும் அனைத்து கல்விச்சான்றிதலுடன் எதேனும் ஒரு முதன்மைக் கல்வி அலுவலகதில் கலந்துகொள்ளலாம் நியமன ஆணை பெறுபவர்கள் முதல்வர் பிறந்த நாளான 24.02.14 ல் சேருவர்.எனவும்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thursday, February 20, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாளை பணி நியமனம் கலந்தாய்வு நடைபெற உள்ளது tnkalvi

ஆசிரியர் தகுதித் தேர்வி தேர்ச்சி பெற்றவர்களில் 152 பேருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் மொழிப் பாடத்திற்கு 16பேரும், ஆங்கில பாடத்திற்கு 74பேரும், கணித பாடத்திற்கு 27பேரும், அறிவியல் 14பேரும், சமூக அறிவியல் 21பேரும் நியமிக்கப்பட உள்ளனர். இதுகுறித்து முறையான சுற்றறிக்கை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அனுப்ப வைக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

டிட்டோஜாக் - இன்று மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு, ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு

டிட்டோஜாக் உயர்மட்டக் குழு கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது

. * 24.02.2014 அன்று மாலை 5மணிக்கு மாவட்ட அளவில் வேலை நிறுத்த ஆயுத்தக் கூட்டம் நடைபெறும். இதில் டிட்டோஜாக் இணைப்பு சங்கங்களின் மாவட்ட/ வட்ட நிரவாகிகள் பங்கேற்பு

* 25.02.2014 அன்று முதல் 28.02.2014 அன்று முடிய பிரச்சாரம் மற்றும் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடைபெறும

். * 02.03.2014 அன்று மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.

* 03.03.2014 அன்று டிட்டோஜாக் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சென்னையில் சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது. மேலும் நாளை காலை பள்ளிக்கல்வி செயலாளருடன் சந்திப்பு நடைபெற உள்ளதெனவும் தெரிவித்தார். டிட்டோஜாக்கில் உள்ள சங்கங்கள் அனைத்தும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என்ற கருத்தில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.

அண்மையில் நடந்த மாபெரும் பேரணியால் தான் இன்று அரசு தரப்பில் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். கோரிக்கைகள் நிறைவேற்றினால் மட்டுமே வேலை நிறுத்தம் விலக்கிக்கொள்ளப்படும் என்றும் அதுவரை போராட்டங்கள் ஓயாது

இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு

  பள்ளி கல்வித்துறையில், 145, இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள், உதவியாளர்களாக, நேற்று, பதவி உயர்வு செய்யப்பட்டனர். "ஆன்லைன்' கலந்தாய்வு மூலம், பதவி உயர்வு செய்யப்பட்டு, உத்தரவுகள் வழங்கப்பட்டதாக, பள்ளிகல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். இதற்கிடையே, 2001 முதல், 2011 வரையிலான கால கட்டங்களில், பணியின்போது இறந்த கல்வித்துறை ஊழியர்களின் வாரிசுகள், 504 பேர், நேற்று முன்தினம், இளநிலை உதவியாளர்களாகவும், தட்டச்சர்களாகவும், பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், அவரவர், சொந்த மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்களில், பணி நியமனம் செய்யப்பட்டதாக, இயக்குனர் தெரிவித்தார்.

22.02.2014 CRC training module

IGNOU B.ed Term End Results - December 2013

Wednesday, February 19, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு: 2012ல் தேர்வு எழுதியோருக்கும் மதிப்பெண் சலுகைகோரி மனு

: தமிழகத்தில் 2012ம் ஆண்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில்  பங்கேற்றவர்களுக்கும்  5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கக்கோரிய மனுவுக்கு  பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி  தென்னூரை சேர்ந்த வின்சென்ட், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில்  ஆசிரியர்களுக்கு 2012 ஜூலையில் முதல் முறையாக தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில்  3  சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதே ஆண்டு அக்டோபரில் நடந்த துணைத்தேர்வில்  11 சதவீதம் பேர்  தேர்ச்சி பெற்றனர்.

தகுதி தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியினர்,  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மதிப்பெண் சலுகை  வழங்கவேண் டும் என அரசுக்கு கோரிக்கை வி டுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று  பொதுப்பிரி வினர் தவிர்த்து மற்ற பிரிவுகளை சேர்ந் தவர்களுக்கு 5 சதவீத மதிப்பெண்  சலுகை வழங்க தமிழக அரசு பிப்ரவரி 6ல் உத்தரவிட்டது. அந்த உத்தரவில் 2013ம் ஆண்டில் நடந்த தகுதி தேர்வில் பங்கேற்றவர்களுக்கும்  மதிப்பெண் சலுகை  வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த சலுகையை 2012ம்  ஆண்டில் ஜூலை மற்றும் அக்டோபர்  மாதம் நடந்த தகுதி தேர்வில்  பங்கேற்றவர்களுக்கும் வழங்கவேண்டும். நான் 2012ல் நடந்த தேர்வில்  83 சதவீத  மதிப்பெண் பெற்றேன்.

எனக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கினால் தேர்வில்   வெற்றிப்பெறுவேன். எனவே, 2013ம் ஆண்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில்  பங்கேற்றவர்களுக்கு  மதிப்பெண் சலுகை வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து  செய்யவேண்டும். 2012 தகுதி தேர்வில்  பங்கேற்றவர்களுக்கும் மதிப்பெண் சலுகை  வழங்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது. மனுவை நீதிபதி  எம். எம்.சுந்தரேஷ் விசாரித் தார். மனுவுக்கு 2 வாரத் தில் பள்ளி கல்வி செயலா ளர்,   ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க  நோட்டீஸ் அனுப்ப  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி விகிதம் அதிகரிக்க அதிகாரிகள் ஆலோசனை 25ம் தேதி நடக்கிறது

பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது தொடர்பாக  சென்னையில்  வருகிற 25ம¢ தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டத்திற்கு  பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு  செய்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மைக் கல்வி அலு வலர்கள், மாவட்ட  கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலு  வலர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருக்கான ஆய்வுக் கூட்டம்  வரும் 25ம்  தேதி காலை 9 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் அமைந்து உள்ள  தமிழ்நாடு மாசு கட்டு ப்பாட்டு வாரிய கூட்டரங்கில் நடக்கிறது.

இதில் பள்ளிக் கல்வித்  துறை அமைச்சர் வீரமணி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைசெயலாளர் சபிதா   ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் பிளஸ்2, எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தேர்ச்சி  விகிதம்  அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் வ¤வாதிக்கப்படுகிறது. இதற்கான  ஏற்பாடுகளை பள்ளிக் க ல்வித் துறை செய்து வருகிறது.

தத்கால்' திட்டம் நீட்டிப்பு : தேர்வு துறை அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வை எழுத, "தத்கால்' திட்டத்தில், விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு, இன்று ஒரு நாள், நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. தேர்வுத்துறை அறிவிப்பில், "தேர்வுக்கான பதிவு செய்ய, ஒவ்வொரு மாவட்டத்திலும், சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையங்களின் விவரங்களை,www.tndge.in என்ற இணையதளத்தில் பார்த்து, தெரிந்து கொள்ளலாம். பதிவு செய்வதற்கான காலக்கெடு, 20ம் மாலை, 5:00 மணி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உதவி வேளாண்மை அலுவலர் பணியிடம் : போட்டி தேர்வு நடத்தி நிரப்ப முடிவு

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், 417 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 2009 மற்றும் 2011ம் ஆண்டுகளில், உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், நேரடியாக நிரப்பப்பட்டது. தற்போது, திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், போட்டித் தேர்வு நடத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், 417 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, வேளாண்மை கமிஷனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று, 417 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப, அனுமதி அளித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.